செவ்வாய், 11 நவம்பர், 2014

11 11 64 ???

அது என்ன 11 11 64 ? புரியல்லையே ? வினவினாள்  பத்னி.

நவம்பர் 11, 1964 .

அது  தெரியுது.அது என்ன  அப்படின்னு தான் கேட்கறேன்.

சொல்லாமலா  இருக்கப்போறேன்.
முதலிலே இந்த பாட்டை கேளு.

என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் ?




1964 லே  வந்தது.  ராஜேந்திரன்  படம்.
புதுசு புதுசா கல்யாணம் கட்டி கிட்டவங்க எல்லாருமே ஜோடி ஜோடியா பார்த்து ரசித்து மகிழ்ந்த  படம்.

முக்கியமா இந்த பாட்டை ரசிக்காத பாடாத புது ஜோடியே அந்த வருசத்திலே கிடையாதாக்கும்.


 என்னாமா சொர்கத்திலே சஞ்சரிக்கராக !!
 ஆமாங்க.1964 வருசமே ஒரு ரொமண்டிக் வருசமுங்க.தமிழ் மட்டும்  அல்ல, இந்தி,ஆங்கில  படங்களிலே காதல் கொடி கட்டிப் பறந்த வருஷம்.

இங்கன இந்த படத்த பாட்டை  கேளு. இதுவும் 64 வருஷம்  வந்தது.
என்ன வார்த்தைகளாலே மனசை அப்படியே அள்ளிக்கினு போறாரு முகமது ரபி .

 என் அகத்தை உன் முகத்தில் இருந்து எப்படித்தான் அகற்றுவேன் ...தெரியல்லையே..
பாடுறாரா..... இல்லை.  கனவு கான்றாரா  தெரியல்ல.

ஆப் கி பர்சாயிஆன் .என்ற இந்தி படம். 1964 ல்  வந்தது.


இதைதான் முன்னமேயே உங்க பதிவிலே  ..எழுதியிருகீக.இல்லையா !!

அது  சரி,இந்த தேதிலே என்ன விசேசம் அத ..சொல்லுங்க.



1961 லேந்து 1996 வரை இருக்கும் அப்படின்னு  நினைக்கிறேன்.
பியட்டில்ஸ் சங்கீதம் உலகத்தையே மயக்கிடுச்சு.
இதப்  பாரு.

 நடுவே 3.06 லே நன்றாக காது கொடுத்து கேளுங்கள்.  எதோ தமிழ் சினிமா பாடல்  .மாதிரி இல்லை.??

.
சரி. சரி.
விசயத்துக்கு வாங்க.

11 11 1964 என்ன ?

1 9 6 4 கூட்டிப் பாரு.

11  வருது.

அப்ப மொத்தமும் பாரு.

11 11 11 ..

அங்க தான் விசயம்  கீது.மூணு தரம் 1 1 வருது. ஒவ்வொன்னும் ஒரு முகம்.
அப்ப ஆறு ஆச்சு.
அது ஆறு முகம் .

 நம்ம முருகன்,  கந்தன், குமரன், குகன்,சண்முகன்,  சுவாமிநாதன்,
பாலசுப்பிரமணியன்,
அப்படியாக்கும் ஆறுமுகன்
ஆமாம்.
அந்த ஆறுமுகன் மேல ஒரு பாட்டு எழுதியவரு இந்த பாலசுப்பிரமணியன்.
ஜி. எம்.பி. 
  நான் கூட அந்த பாட்டுக்கு மெட்டு போட்டு  இருக்கேன். பாரு.
எங்கன அப்படின்னு நீயும் தேடு.

GMB in his bloggers" meet posting says he has uploaded it. I am trying to find it. Is it that his video has flown on the back of the peacock he is describing in his song !!!!
அவரு தான் .நம்ம பிரெண்டு.
 சாக்ஷாத் காட் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன்
GMB
+Balasubramaniam G.M
 
அவர் எழுதிய அற்புத பாடல் ஒன்று  இங்கே.

 தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           

.
அவரோட திருமண நாள் நாள் தான் 11 11 1964.
இன்றைக்கு அவருக்கு ஐம்பதாவது திருமண நாள்.

அந்த பூச்செண்டை எடுத்துண்டு  வா.
அவருக்கு தந்து வாழ்த்து  சொல்லுவோம்.
அவர்களது கால்களில் வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்

பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ்வாங்கு வாழ
நீவிர் வணங்கும் இறைவன் நுமக்கு அருளட்டும்.

வியாழன், 9 அக்டோபர், 2014

யாருக்குத் தான் கவலை இல்லை ? !!!


என்ன அப்படியே  எதோ பொஸ்தகத்திலே முழுகிப்போய் கிடக்கக்கீக ?  ஒரு பேச்சு மூச்சைக் கூட காணோமே ?

என்று கவலையுடன் என் முகத்தின் முன்னே வந்து நின்றாள் மதுரை மீனாச்சி பெயர் கொண்ட எனது மனைவி. வயது எழுபத்தி இரண்டு இருக்கும். கிழ வயது மங்கை.

நான் சத்தமா கையில் இருக்கும் மோஹ முத்கரஹ என்னும் புத்தகத்தில் இருந்து படித்தேன்.

பால்யாவஸ்தே க்ரீடா சக்தஹ
தருனாவஸ்தே தருணீ சக்தஹ
விருத்தாவஸ்தே சிந்தா சக்தஹ ...

கேட்பவளுக்கு பொறுமை போயிற்று போலும்.  என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிடுங்கி ,

இன்னா அப்படின்னு கேட்கறேன் இல்ல ? பதில் சொல்லாம, நீங்க மாட்டிலே
ஏதோ க்ரீக், லத்தீன் பாஷைலே உளறிட்டு இருக்கீக... உடம்பு சரியா இல்லையா?

உடம்புக்கு ஒன்னும் இல்ல.  மனுஷன் தான் சரி இல்லை அப்படின்னு ஆதி சங்கரர் எழுதி இருக்காரு. ...

என்ன வந்துடுச்சு மனுஷனுக்கு ?

மனுஷன் புறந்ததில் இருந்து எது பின்னாடியே சுத்திக்கினே இருக்கான்.

ஈ இனிப்பை சுத்தறா போலே ..

  இன்னா அது ? நீ சொல்லு பார்ப்போம்.

நீங்களே  சொல்லுங்க.

ஆமா.  
சின்ன வயசுலே விளையாட்டு, விளையாட்டு அப்படின்னு எப்ப பாரு,  படிப்புலே புத்தி போகாம , விளையாடிட்டே இருக்கான்.

அப்பறம் ?

ஒரு பதினாறு, பதினெட்டு வயசுலே வாலிப வயசு வந்த உடனே...?

உடனே ?

எதுனாச்சும் பொண் பின்னாடி திரிஞ்சிண்டு இருக்கான்.

நல்லாவே இல்லயே...

அதான் இருக்கட்டும்.படிப்பை முடிஞ்சுடுத்து,  வேலைக்கு போயாச்சு. கல்யாணம் கட்டிக்கிட்டு, லைப் லே செட்டில் ஆக நேரத்திலேயும்,

வேலை, வேலை, அது இது அப்படின்னு அதுலேயே இருக்கான். இல்லை அப்படின்னா, குடும்பம் பற்றி, மனைவி உடம்பு பற்றி, குழந்தைகள் உடம்பு, படிப்பு பற்றி கவலை.

மிடில் ஏஜ் தாண்டிடுச்சு அப்படின்னு வச்சுக்க...

வயசானப்பறம்,  மனுசன் ஒரேயடியாய் உட்கார்ந்து போய் இடறான். கேட்டா, அதப்பத்தி கவலை, இதப்பத்தி கவலை ..

கவலையே இல்லாத ஒரு மனுஷன் கூட பார்க்க முடியாது இல்லையா ? அது சரி, இன்னிக்கு எதுக்கு இந்த தத்துவம் எல்லாம் ?

ஒரு இரண்டு நாள் முன்னாடி, என்னோட வலை ப்ரண்ட் இளங்கோ அவங்க வலை பக்கம் போயிருந்தேனா..

யாரு ! உங்க திருச்சி பிரெண்டா ?

ஆ...ஆமாம். திருச்சிக்கு போனா அவரை கண்டிப்பா பார்த்துட்டு வரணும்.

என்ன கவலை அவருக்கு ?

கோவிலுக்கு காமிராவை எடுத்துக்கினு போனா, கருவறை யிலே , சாமியை, போட்டோ பிடிக்க பர்மிசன் தர மாட்டேன் அப்படிங்கராக...

 அது கவலை இல்லீக... ஒரு ஆதங்கம் .. அம்புட்டு தான்.

எதுவோ வச்சுக்க...  நம்ம கல்யாணம் போது ஒரு போட்டோ எடுத்தாகளா ? இல்லியே ?

நம்ம காலத்துலே இந்த மாதிரி காமிரா கிடையாதுங்களே...  போட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாயிடும் அப்படில்லே சொன்னாங்க..

ஆமா.   வயசான எதுனாச்சும் ஒரு கவல வந்துடும் அப்படிங்கறதுக்கு ஒரு உதாரணம் தான் சொன்னேன். அது ரைட்டா, தப்பா அப்படின்னு நான் சொல்ல வல்லை.

அப்பறம் என்ன ஆச்சு ?

நேத்திக்கு ஒரு வூட்டுக்கு ஒரு உபன்யாசம் அப்படின்னு கூப்பிட்டு இருந்தாக.
அங்கன ஒரு சந்நியாசி.  இஸ்கான் க்ரூப்பிலேந்து வந்திருக்காரு. பிரமாதமா ஒரு சொற்பொழிவு ஒரு மணி நேரத்துக்கு, சைதன்ய மகா பிரபு பத்தி.

Courtesy: http://www.radha.name/images-gallery/radha-and-krsna-paintings

Krishna is often referred as svayam bhagavan in Gaudiya Vaishnavism theology and Radha is a young woman, a gopi who is Krishna's supreme beloved.  With Krishna, Radha is acknowledged as the Supreme Goddess, for it is said that she controls Krishna with Her love.  It is believed that Krishna enchants the world, but Radha "enchants even Him. Therefore She is the supreme goddess of all. Radha Krishna".The common derivation of Shakti and saktiman, i.e. Female and Male principle in god implies that Shakti and saktiman are the same.  Each and every god has its partner, 'betterhalf' or Shakti and without this Shakti, is sometimes viewed being without essential power.
 It is a not uncommon feature of Vedas when worship of a pair rather than one personality constitutes worship of God, such is worship of Radha Krishna. Traditions worshiping Krishna, as svayam bhagavan, who is male, include reference and veneration to his Radha, who is worshiped as supreme. It's an accepted view that union of Radha and Krishna may indicate the union of Sakti with the Saktiman, and this view exists well outside of orthodox Vaishnavism or Krishnaism.



சைதன்யரு அப்படின்னா. கலியுகத்துலே அந்த ஹரே ராம் ஹரே கிருஷ்ணா சொன்னா போதும் . அது ஒன்னு தான் யுக தர்மம் அப்படின்னு சொன்னவரா ?



ஆமா. வைஷ்ணவர்கள் லே அவங்க ஒரு பிரிவு. வட மாநிலங்களிலே கௌட சம்பிரதாயம். பகவான் ஜெகன்நாத் பிருந்தாவனத்துலே கிருஷ்ணனா லீலைகள் பண்றது  அந்த கிருஷ்ணனை நினைக்கிறது, பூசிக்கிறது, பாடறது தான் மனுசனா புரந்தவனுக்கு காரியம், கடமை. மத்த கர்மம் எதுவுமே கிடையாது அப்படின்னு சொல்ற ஒரு கோஷ்டி.

இஸ்கான் நடத்திய ஒரு ரத யாத்திரை.
ராதே கிருஷ்ணா வைபவம்.
நியூ யார்க் நகரத்திலே 2014 ஜூன் மாதம்.
iscon rath yathra at NEW YORK in JUNE 2014
இன்னா பக்தி !! இன்னா பக்தி. !!

சரி.

ஆனா பாரு, அந்த சன்யாசிக்கும் மனசுக்குள்ளே  ஒரு கவலை.

சன்யாசிக்கு கவலையா ? என்ன அது ?

இன்னாடா .. நம்ப இம்புட்டு சொல்றோம்.  இருந்தும் இந்த சனங்க நம்பள புரிஞ்சுக்காம, அந்த பூசை, இந்த திருவிழா, அந்த சாமி, இந்த சாமி அப்படின்னு எந்தெந்த சாமி பின்னாடி எல்லாமோ  போயிட்டு இருக்காங்களே...

அப்பறம் ?


நெத்திலே போட்டு இருக்கற திருமண் பத்தி கடைசியா ஒரு புடி புடிச்சார் பாரு.
அசந்து போயிட்டேன்.  இன்னாத்துக்கு இந்த சந்நியாசி கவலை படுறார் அப்படின்னு அப்ப தான் புரிஞ்சுகினேன்.

நெத்திலே  கீழேந்து மேலே நாமம் இட்டுக்கிறது . இரண்டு வெள்ளை கோடு போவுது இல்லே ,

ஆமா.

அது ஒன்னு பிரும்மா வாம். இன்னொன்னு சிவனாம்.

இத இரண்டையும் கோபி சந்தன த்தாலே இட்டுக்கனுமாம்.  நடுவிலே சிவப்போ, மஞ்சளோ எதுவுமே இருக்க கூடாதாம்.

ஏனாம் ?

அது விஷ்ணுவுக்காக இடம். அவர் அங்கன இருக்காரு.

 அப்ப, தென்கலை, வடகலை சேர்ந்தவங்க எல்லாம் போட்டுக்கற நாமம் சிவப்பா இருக்கு, நடுவிலே அதெல்லாம் ?

அதுக்கெல்லாம் கௌட சம்பிரதாயம் அலௌ பன்னாதாம். அங்கீகரிக்காதாம் .
திருமணம் ஆன பெண்கள் மட்டும் நடுவிலே ஒரு குங்குமப் பொட்டு இட்டுக்கலாமாம்.

இவங்க எப்படி ?

அங்க கஸ்தூரி க்கான இடமாம்.

அப்படியா !!

 என்று தனது ஆச்சரியத்தை முகத்தில் தேக்கினார் மீனாச்சி பாட்டி.

இந்த சைவ பிரிவினர், அதாவது சிவனைத் தொழுபவர்கள் நெத்திலே போட்டுக்கிற வீபுதி பட்டை,

வைஷ்ணவர்கள்உடம்பு முழுக்க, கைகள் புஜங்களில், மார்பிலே போட்டுக்கிற
திருமண் அதாவது ஸ்ரீ சுர்ணம் நாமம் எல்லாமே வேஸ்ட் என்றார்.

நாமம் போட்டுக்கொள்ளும் முறை

சரிதான். அவர் கவலை அவருக்கு. நமக்கு நம்ம கவலை. 

உனக்கு இன்னா கவலை ?

இந்தாங்க. எந்திருச்சு, போயி, இன்னிக்கு கார்ப்பொரேசன் மெட்ரோ வாடர் ஏன் இன்னும் குழாய் லே இன்னும் வல்லே அப்படின்னு கேட்டுட்டு வாங்க.

அதுவும் சரிதான். உன்னோட கவலை உனக்கு.

யாருக்குத் தான் கவலை இல்லை ? !!! 

அப்ப கவலை இல்லாம ஒருவன் இருக்கவே முடியாதுங்களா?

ஏன் முடியாது.  ?  ஆரம்பத்திலே கொடுத்திருக்கிற பாடல் லே கடைசி வரி சொல்றேன் பாரு கேட்டுக்க. 
 "பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்தஹா."

இன்னா அர்த்தம்?

 சொல்றேன் கேளூ. 

யாராவது அந்த பிரும்மன் மேல மனசை வச்சுட்டு இருக்காகளா?  அப்படின்னு கேட்கறாரு ஆதி சங்கரர்.

அப்படின்னா?

யாரு ஒருவன் கடவுள் மேல, தன மனசை எல்லாம் பூரணமா வச்சுட்டு இருக்கானோ, அவனுக்கு கவலையும் உண்டா ? என பொருள். 

ஆக, கவலை இருக்கக் கூடாது என்றால், உலகத்து பொருட்கள் மேல இருக்கற அதீத ஆசையெல்லாம் விட்டுட்டு, கடவுள் சிந்தனை லே இருங்க.

கேட்கிறதுக்கு நல்லாத்தான் கீது. ஆனா முடியுமா, தெரியல்லையே..





=======================================================================

When the mind becomes empty, then any wish or desire that you have at that time instantly manifests. This is a great secret. - Sri Sri Ravi Shankar






வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஏரேழு பிறவியிலும்...!!!

நவராத்திரி தசரா என்று
நாடு முழுக்க அமக்களம்.

இங்கே எங்கு பார்த்தாலும் எந்த வலைப்பதிவு பக்கம் திரும்பினாலும் லக்ஷ்மி,
அபிராமி, சரஸ்வதி, வாணி, காளி, பூஜை , பாடல்கள்.

தோத்திரங்கள், துதிகள், பா மாலைகள்.

வண்ண வண்ண படங்கள். கொலு பொம்மைகள். நடனங்கள்.

ஆல்மோஸ்ட் தினசரி காலை, லாப் டாப் வாக்கிங் போது மீட் பண்ணும்,
ராஜேஸ்வரி, பார்வதி ராமச்சந்திரன், வாசுதேவன் திருமூர்த்தி , சசிதரன்,
 துரை செல்வராஜ் , கீதா சாம்பசிவம் ,

+Thenammai Lakshmanan 
திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களோ ஒரு படி மேலே சென்று கோவில்கள், வீடுகளில் காட்சி அளித்திடும் கொலு படங்களை இட்டு நம்மை
ஒரு தெய்வீக பரவசத்தில், ஆனந்தத்தில் முழுக அடித்துள்ளார்.

ஒரு சாம்பிளுக்கு அவங்க வலை லேந்து ஒன்னே ஒன்னு ஸ்டீல் பண்ணி போட்டு இருக்கிறேன். கோவிச்சுக்காதீக அம்மா. அதான், தாங்க்ஸ் சொல்லிட்டேன் இல்லையா !!

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பர்பெக்ட் கொலு அதி சுந்தர்.

 அத அங்கனேயே போய் பாருங்க. எங்கயா?  இங்கே சொடுக்குங்க.
நன்றி: ராஜேஸ்வரி 

எல்லோருமே தங்களுடைய வலையிலே நவராத்திரி விழா வை கோலாகலமா கொண்டாடி இருக்காங்க.



அபிராமி, லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, மா காளி
எல்லோருமே முன் வந்து நமக்கெல்லாம் அருள் புரியரப்போ,
நாமும்
அவங்களுக்கெல்லாம் மாலை போட்டு, தோரணம் கட்டி,
நெய் விளக்கு ஏத்தி,
கையிலே கிடைக்கிற நம்ம வெச்சு இருக்கிற எல்லா ஆயுதங்களை அதாவது டூல்ஸ் பார் அவர் ப்ரொபஷன் , நம்ம தினசரி வேலைக்காக இருக்கிற உபகரணங்களை எல்லாம் கொலு முன்னாடி வச்சு, சந்தன குங்குமம் இட்டு,
சூடம் ஏத்தி
பாயசம் எல்லாம் நைவேத்தியம் பண்ணிட்டு

வூட்டுக்காரி சமைச்சு வச்சு இருக்கிற லஞ்செல்லாம் சாப்பிட்டு முடிச்சபிறகு

அப்பாடி அப்படின்னு ஈசி சேர் லே சாயிரபோது  தான்,

கண் முன்னாடி வந்து நிக்கறது இந்த

கொண்டக்கடலை சுண்டல்.

உடம்புக்கு ஆகுமா ஜீரணம் ஆகுமா அப்படின்னு எல்லாம் யோசிக்காம,

அடுத்து வர்ற இரண்டு நாளும் சனி, ஞாயிரு ஆச்சே, டாக்டர் கூட இருக்கமாட்டாகளே அப்படின்னு யோசிக்காம,

வூட்டுக்காரி அந்த பக்கம் பாக்கும்போது,

ஒரு பிடி பிடிச்சோம் பாருங்க.

ஆஹா..

என்ன சுகம் என்ன சுகம். !!!

ஆத்தா.. அபிராமி,

அது வேணும், இது வேணும் அப்படின்னு எல்லாம் அபிராமி பட்டர் பாடி இருக்காரு அது உண்மை தான்.
  ***************************************************
 கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
*************************
அதெல்லாம் வேணும் தான்.
கூடவே அறுபது வயசுக்கப்பறம் பென்சனும் வேண்டும்.
அது இருந்தாலும், அபிராமி, அன்னையே !!
எது இருந்தாலும்,
எது இல்லாவிட்டாலும், 
 எத்தனை ஜனுமம் எடுத்தாலும்,

ஏரேழு பிறவியிலும்,  இந்த
நன்றி: கீதா சாம்பசிவம் மேடம்.

+Geetha Sambasivam 

இந்த பர்டிகுலர் கொத்துக்கடலை சுண்டல் வேண்டுமப்பா...
என்று மனசுக்குள்ளே சொன்னார் சுப்பு தாத்தா.

இன்னொரு பிடி, இன்னொரு பிடி, அப்படின்னு எல்லாத்தையும்,
தின்னு முடிச்சார்.



என்ன சுகம் என்ன சுகம். !!
என்ன அப்படி ஒரு மணம் !!

இந்த சுண்டலுக்காக ஆயுத பூஜையா ?
அல்லது ஆயுத பூஜைக்காக சுண்டலா ?

 அப்படின்னு வேற மனசுக்குள்ளே ஒரு சந்தேகம்.

நோ. நோ. இன்னிக்கு அப்படி எல்லாம் சிந்தனை நோ செய் மனமே.

 அந்த பரந்தாமன் அருள் இருந்தால், எல்லாமே கிடைக்கும்.
நல்லது நடக்கும். நல்லது கிடைக்கும்.

கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ. ,த்ரிவிக்ரமா, வாமன, மதுசூதனா,ஸ்ரீதரா, மாதவா, பத்மநாபா, தாமோதரா,

 என்று மறுபடியும்


எல்லா தைவத்தையும் பிரார்த்தனை பண்ணும்போதே

ஏதோ வயித்தை கலக்கறது போல் இருந்ததால்,

பாத் ரூம் செல்கிறார்,.

சுப்பு தாத்தா.

மே காட் ஸேவ் ஹிஸ் ஸ்டமக்.

+Balu Sriram
sir !!
ஹெல்ப் ஹெல்ப்  !!!

வியாழன், 2 அக்டோபர், 2014

ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே

லலிதா மிட்டல் அவர்கள் இயற்றிய பாடல்.

+Lalitha Mittal
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே !!
ஞான ஒளியாலே நீக்கு என் மனமருளே.

அழகான இந்த பாடல் பதிக்கப்பட்ட இடம். இது. 

அந்த நாமகள்
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள்
என்று பாடுவது
ஜேசுதாஸ்  அவர்கள்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

யாதுமாகி நின்றாய் எனக்கு கண்ணா

இளமதி அவர்கள் கண்ணன் கவிதை ஒன்றை மழை எனப் பொழிந்து இருக்கிரார்கள் அவர்கள் வலையிலே.
நவராத்திரி தினமான இன்று, இக்கவிதையை, நான்கு அல்லது ஐந்து மகளிர்
கொலு முன்னே நடனமாட அழகாக இருக்கும்.

அந்த காட்சியை கற்பனையில் கண்டு ரசித்தேன்.

இளமதி அவர்களின் நன்பர்கள் யாவரும் கானத்தை கண்ணனுடன் இணைந்து கேட்டிடவேண்டும். கண்ணன் புகழ் பாடிட வேண்டும். +ilayanila ilamathy

ilayanila16.blogspot.com

யாதும் ஆகி நின்றாய்.

 peacock kolam.
மயில் கோலம் ஒரு நிமிடத்தில் போடுவது மயில் ஆடுவது போல பிரமிக்கச் செய்கிறது.
திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பதிவில் 
பாரதியின் பாடல்கள்
இலக்குமி, காளி, வாணி மூன்று தேவியரின் பாடல்களும் இடப்பட்டு உள்ளன.
மயிலை சாந்தநாயகி                                                              நன்றி. 

படம் திருமதி பக்கங்கள். வலை

அந்த முதல் இரண்டு பாடல்களை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை.

என்ன செய்வது ? என யோசித்தேன். சரி, நானே பாடிவிடுகிறேன், யாரும் கேட்காவிட்டாலும்  பரவாயில்லை.

இதை விட அற்புதமான துதி எங்கே இனி பாடப்போகிறோம் என நினைத்தேன்.


யாதும் ஆகி நின்றாய். எங்கும் நீ நிறைந்தாய்
என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள்
ரேவதி ராகத்தில் பாடுகிறார்கள்.


ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞாயிறு கொலு

ஞாயிறு கொலு
இலக்குமி வழிபாடு.
எங்களுக்கு பாக்யத்தை, வளத்தை வழங்கு, தாயே
என பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த பாடல்.
பிட்ச்ச்பார்க் கோவில் பின்னணியில்
Dr.M.S.Subbulakshmi bhagyadha Lakshmi baramma.

சனி, 27 செப்டம்பர், 2014

தில்லையகத்து க்ரானிகல்ஸ் துளசிதரன் அவர்கள். அவங்களுக்கு ஜே போடுவோம்.


+Thulasidharan thillaiakathu
 
அவங்க பெரிய மனசு வச்சு, என்னையும் அதாவது 73 வயசான இந்த கிழவனையும்  ஒரு பொருட்டா மதிச்சு,

இந்த வலைப்பதிவிலே என்னைப்பத்தி ,
இல்ல,
என் பதிவுகளைப் பத்தி
எழுதியிருக்காக,

என்ன வலைப்பதிவா?

சீனா என அன்புடன் எல்லோரும் கூப்பிடும்,
சிதம்பரம் சாரு ஆசிரியர் ஆ இருக்கும்,
வலைச்சரம். 

அங்கன வாரத்துக்கு ஒரு ஆசிரியர்.

இந்த வாரத்துக்கு தில்லையகத்து க்ரானிகல்ஸ்
துளசிதரன் அவர்கள்.

அவங்களுக்கு ஜே போடுவோம்.

நீவிர் நீடூழி வாழ்க.


துளசிதளம் என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல். அதை இட்டு அதை அவங்களுக்கு டெடிகேட் செய்வோம்.

சனி, 6 செப்டம்பர், 2014

அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும்



அதுக்கெல்லாம் மச்சம் வேண்டும் டோய் !!

என்று அந்தக் காலத்திலே ஒரு பாட்டில் வந்தது.

கார்த்திக் அப்பறம் இப்ப ஜோடிலே ஜட்ஜ் ஆ வராகளே யார் ?
ஆங்..

ராதா நடிச்ச படம் அப்படின்னு நினைக்கிறேன்.

சின்ன சின்ன விஷயத்திலே கூட , லக் அப்படின்னு ஒன்னு இல்லைன்னா, லைப் அம்பேல் ஆயிடுது.

மத்தவனுக்கெல்லாம் அஞ்சு வருசத்துக்கு ஒரு தரம் ப்ரமோஷன் கிடைக்கும். வேலை என்ன செஞ்சான் என்ன செய்ய முடியாது அப்படின்னு விதண்டா வாதம் பண்ணினான் அப்படின்னு எல்லாம் நான் சொல்லப்போவதுல்லெ.

நான் ரிஷப லக்னம். அதுக்கே உண்டான மாடு மாதிரியான உழைப்பு. நேர நேரத்திற்கு சாப்பாடு கூட கிடைக்காத அளவுக்கு ஒரு ஜாப்.

பேரு என்னவோ பெத்த பேரு. ஆனா பட்ட அவஸ்தை நான் ஒத்தனுக்குத் தானே தெரியும்.

என்னாடா , கிழவன் இன்னிக்கு முத்தாய்ப்பா எதுவோ சொல்லி கினே போறான் அப்படின்னு நீங்க முனகிரீக இல்லையா...

பாருங்க.. ஒரு பொடி விஷயம் தான். ஒண்ணு இல்ல,இரண்டு சின்ன சின்ன நிகழ்வுகள். போதுமே ..நம்ம லக் எப்படி இருக்குது அப்படின்னு தெரிஞ்சுக்க.. இல்லையா.

நீங்களே சொல்லுங்க. ஜீவி சாரே.

பக்கத்துலே ஒரு நாட்டிய நிகழ்ச்சி. சின்ன சின்ன பொண்ணு  குழந்தைகள் அப் கோர்ஸ் டான்ஸ் கிருஷ்ண லீலா டான்ஸ் ப்ரோக்ராம்.

சரி, அந்தக் குழந்தைகளுக்கு, என்ன கிப்ட் தரலாம் என்று யோசித்து பார்த்தப்போ,

ஒரு பொன்னாடை மாதிரி ஒரு துப்பட்டா வாங்கி போர்த்தலாமா என்று நினைத்து கடைக்கு, அருகில் இருக்கும் ஒரு ரெடி மேட கடைக்கு சென்றேன். மிகவும் தெரிந்த கடை.

காட்டன் துப்பட்டா , சால்வை மாதிரி இருந்தா நல்லா இருக்கும்,
என்று நான் சொன்னவுடன் அவர்கள்  பெண்குழந்தைகள்  ஜடை பின்னல் மாதிரி மடித்து வைத்திருக்கும் வித விதமான கலர் புல் ரெடி மேட் கார்மெண்ட் நான்கை எடுத்துத்தர,

நானும் ,

மகிழ்ச்சியுடன் அந்த விழா நடக்கும் இடத்துக்கு  சென்று, நிகழ்ச்சி முடிந்ததும்
அந்தக் குழந்தைகளுக்கு
அந்த வாங்கி வந்த பொன்னாடையை போர்த்த ,
முதல் உருப்படியை பிரித்தேன்.

என்ன அதிர்ச்சி !!
நடுவே நடுவே பொத்தல் பொத்தலகா நூல் விட்டு போய் இருக்கிறது.

என்ன செய்வது !! இது போலவே மிச்ச மூன்றும் இருக்குமோ ??

என்ன டாமேஜ் ஆன துணியை, நம் தலை மேல் கட்டி விட்டார்களே என்று ஒரு பக்கம்  ஆத்திரம்.

வாங்கி வந்த பொன்னாடையை போர்த்த முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம்.

அந்த குழந்தைகளுக்கு ஒன்றுமே தர இயலாமல் திரும்புகிறோமே என்ற ஏக்கம் .

திரும்பவும் கடைக்குச் சென்றால், இதெல்லாம் சகஜம் தான் சார், நாங்கள் என்ன தெரிந்தா டாமேஜ் ஆனா சால்வையை தருகிறோம் என்று சொல்லி,
நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது வேறு ஏதேனும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். கடைக்காரர்.

 என்னடா இது. !!
ஒரு பொடி விஷயத்தில் கூட நம்ம லக் என்னமா நம்மை சோதிக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

நேற்று, எனது மிகவும் நெருங்கிய நண்பரின் மகள் திருமண விழா.
நண்பர் பெரும் பதவியில் இருந்துஒய்வு பெற்றவர். அவருடைய மற்ற சிறப்பு அவர் ஒரு வேத வித்து என்று சொல்லவேண்டும். ஆன்மீகத்தில், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தெளிவாக, ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும், அதையும், கோர்வையாக, கேட்பவர் ரசிக்கும்படியாக எடுத்துரைக்கும் திறன் பெற்றவர்.

என்னைவிட சற்று இளையவர். என் மீதும் அவருக்கு மதிப்பு உண்டு. பத்திரிக்கை கொடுக்கத்துவங்கிய உடனேயே எனக்குத்தான் முதல் பத்திரிக்கை கொடுத்தார் என்று கூட நினைத்தேன்.

கடந்த பத்து வருடங்களில் நான் புதிதென் ஈட்டிய நட்புகளில் விலை மதிக்க முடியாத நட்பு அது ஒன்றாகும்.

வரவேற்பு முதல் நாள் மாலை இருந்தது. எனது காலனியில் இருந்து வெகு நண்பர்கள் அந்த நிகழ்ச்சிக்குத் தான் சென்று இருப்பார்கள் போலும். நானோ, முகூர்த்த காலை அன்று சென்றால், நமது பாரம்பரிய சாஸ்த்ரீய சம்பிரதாயங்கள் இன்னொரு முறை பார்த்து ரசிக்கலாம், அதை விட முக்கியம், சாப்பாடு கன்வென்ஷனல், தஞ்சாவூர் கல்யாண சாப்பாடு ஒன்று வெட்டு வெட்டலாம் என்று நப்பாசை வேற.

ஒன்பது மணிக்குச் சென்றாலும், ப்ரேக் பாஸ்ட் வேண்டாம். முஹூர்த்தம் முடிந்தபின்,  லஞ்ச் சாப்பிடலாம் என்று மாலை மாற்றுதல், ஊஞ்சல் , சீதா கல்யாணம், கௌரி கல்யாணம் பாட்டுக்கள்,

இதை எல்லாம் பார்த்து விட்டு மண மேடைக்கு பக்கத்திலே போய் அமர்ந்தேன்.

நான் எதிர்பார்த்தபடியே வேத கோஷ மந்திரங்கள் அடுத்த ஒரு மணி நேரம்.
சம்பிரதாயமாக,

பெண்ணின் தந்தை மடியில் மணப்பெண்ணை உட்கார வைத்து, மணமகன்
தாலி கட்ட, பெண்ணின் நாத்தனார் ஒருவர் இன்னொரு முடிச்சு போட, வந்திருந்தோர் யாவரும், அட்சதை, புஷ்பங்கள்
மழை போல் பொழிந்து மண மக்களை ஆசிர்வதிக்க,

எல்லாம் சுபமாக முடிந்தது.

நண்பர்கள் , உறவினர்கள், வரிசையாக, மேடையை நோக்கி சென்று மனமக்களை ஆசிர்வதித்து தாம் கொண்டு வந்திருந்த அன்பளிப்பை கொடுத்து விட்டு நகர,

நானும் அவ்வாறே செய்து விட்டு,
அவசர அவசரமாக,
யாரும் அழைக்காமலேயே
உணவு வழங்கும் இடத்தை நோக்கி விரைந்தேன்.

சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, வீடு திரும்ப வேண்டும். கிழவி உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு நான் போய் தான் ஏதாவது சமைத்து தரவேண்டும். அவளும் உண்ட பின் தான் அவளது மருந்துகள் சாப்பிடவேண்டும்.

அங்கே போனால் ஒரு சிறிய அதிர்ச்சி. என்ன ஒருவரையுமே காணோம் !!!

அந்த பெரிய லஞ்ச் ஹால் காலியாக இருந்தது.  இன்னும் இலைகள் போட வில்லை.

ஓஹோ. நான் தான் முதல் பந்தியில் முதல் ஆள் போல் இருக்கிறது.
என நினைத்துக்கொண்டே

பந்தியின் முதல் இடத்தில் உட்கார்ந்தேன்.

சார். லஞ்ச் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். நீங்கள், ப்ரேக் பாஸ்ட் சாப்பிடுங்கள் என்று அங்கு ஒரு பெண்மணி, மிகவும் தன்மையுடன், என்னை உபசரித்தாள்.  Caterers employ professional receptionists even in conventional marriages nowadays.

என்ன இது !!
ஒரு சின்ன விஷயத்துக்கு கூட, எனக்கு  லக் இல்லயே !
கல்யாண சாப்பாட்டு சாப்பிட வந்தவனுக்கு, ஜஸ்ட்
ஒரு இட்லி, ஒரு வடையா !!

எல்லாவற்றிக்கும் லக் வேண்டும் சார் !! மனசுக்குள்ளே வெடி வெடித்தது.

இன்னும் ஒரு மணி என்ன, அரை மணி நேரம் கூட என்னால் நிற்க முடியாத சூழ் நிலை.

நான் வீட்டுக்கு சென்று என் மனைவிக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அதை சாப்பிட்ட பின்பு தான் அவள் மருந்து சாப்பிட முடியும்.

கல்யாண சாப்பாடு முக்கியம் தான். ஆனால், அதை விட எனது மனைவியின் உடல் நலம்.

அவளை நல்லபடியாக நான் கவனித்துக்கொள்வேன் என்று அவள் நினைப்பதில் எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்ற நினைப்பு மேலோங்கி நின்றது.

நான் என்ன செய்யட்டும். சாப்பாடு லேட் ஆகிவிட்டது என்று சொல்லிவிட மனம் இடம் தராது.

அழாத குறையாக வீடு திரும்பினேன்.

என்ன தான் மனுஷன் கில்லாடியா இருந்தாலும், லக் இல்லை என்றால் ஒன்றும் கிடைக்காது.

********************************************************************************************************************************************************************************************************************************************************************************

உனக்கு ஒண்ணு கிடைக்கணும் அப்படின்னா கண்டிப்பா கிடைக்கும்.
இல்லேன்னா, நீ அழுது புரண்டாலும், கிடைக்காது.

உள்ளுக்குல்லேந்து எதோ ஒன்று சத்தமா என் காதுக்கு கேட்கிறது. இந்த இரண்டு சின்ன நிகழ்வு தான் அப்படின்னாலும் ஒன்று தெரிகிறது இல்லையா?

என்ன?


நம்ம கொடுக்கறதா இருந்தாலும் சரி, கொள்வதாக இருந்தாலும் சரி, அது சின்னதோ பெரிசோ,  அவன் சித்தம் இருந்தால் தான் செயல் ஆகும்.

நீ கொடுக்கறது அப்படின்னு ஒன்னும் இல்ல.
நீ கொள்வது என்பதும் ஒன்றும் இல்ல.


இன்னொன்று...

நமக்கு எது எது கிடைச்சிருக்கோ அத வச்சுண்டு திருப்தி அடைஞ்சுண்டு போடா சூரி,

இல்லாததை நோக்கி புலம்பிண்டு இருக்கிறதை விட,
இருக்கறதை ரசித்து அனுபவி.
அதாண்டா லைப்.

***********************************************************************8*




There is a law, and there is orderliness in creation due to a power. There is some power and because of its presence there is orderliness, and that power you call God, you call brahman, you call energy. You can call it anything. - Sri Sri Ravi Shankar

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்

இந்தக் காலத்துலே புள்ளைய, ப்ளஸ் டூவுக்குப்  பின்னே, டாக்டருக்குப் படிக்க வைக்கறதை , புள்ள டாக்டர் படிப்பு படிக்கிறதை விட, லட்ச லட்சமா இல்ல கோடி கோடியா பணம் கொட்டிட்டு, அத திருப்பி எடுக்க என்ன வழி என்று தேடுவதை விட,

ஒரு லாப்  Lab ஆரம்பித்து விட்டு அதில் இரண்டு மூணு டேக்நீஷியனை வேலைக்கு போட்டு, ஒரு ரேடியாலஜிஸ்ட், ஒரு டாக்டர் , வேலைக்கு அமர்த்தி, மாசம் மாசம் மினிமம் இருபது லட்சம்  கிடைக்க வழி பண்ணலாம் என்று பல பெற்றோருக்கு ,

விஜய் டி.வி.கோபிநாத் அவர்களின் நீயா நானா ப்ரோக்ராம் பார்த்து தோன்றியிருக்கலாம் என்று சொன்னால்,

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

 என்ன ? ஒரு பத்து பதினைந்து டாக்டரோட கிருபை இருந்தா போதும். என்றும் தோன்றுகிறது.

எந்த வீதியிலும் இன்னிக்கு 2 அல்லது மூணு லாப், எக்ஸ் ரே, ஸ்கான் செண்டர் பார்க்கறோம்.

ஆடித் தள்ளுபடி இப்ப மாஸ்டர் ஹெல்த் செக் அப்புக்கும் வந்தாச்சு.

2500 ரூபா . அடுத்த 10 நாட்களுக்கு ரூபா 1499 ல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் நலனுக்காக.

 என்ற போர்டு
ஏதோ  புதுப்பட பேனர் banner  மாதிரி ஆங்காங்கே காண்கிறோம்.  

ஒவ்வொரு நாளும் எதுவாவது ஒரு இடத்தில், அவரிநேஸ் ப்ரோக்ராம் awareness program.

சக்கரை இருக்கா ? அர்த்ரிடிஸ் இருக்கா, blood pressure எத்தனை
 ?நீங்கள்   குண்டா ? கவலைபடாதீர்கள். ஒரே  நாளில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க முடியும்.


ஒல்லியாக இருந்தாலும் இவர்கள் விடுவதில்லை.
திடீர் என்று உங்களுக்கு எடை குறைந்து போய் இருக்கிறதா?
உங்கள் பி எம். ஐ. எத்தனை?

உங்களுக்கு கான்சர் இருக்கிறதா என்று செக் செய்தீர்களா?காச நோய் இருக்கிறதா ?

வயசானாலும் ப்ராஸ்டேட் செக் பண்ணிக்குங்க. பின்னாடி கஷ்டபடாதீக.

இது போல எங்க பார்த்தாலும் ஒரே விளம்பரம் கலர் கலரா.

நம்ம உடம்பு நல்லா இருக்கணுமே அப்படின்னு கவலைப் படரவங்க நிறையவே இருக்காங்க.

நம்ம போய் சேரும் வரை, கடைலே சக்கரை ஸ்டாக் இருக்கனுமே என்று ரேஷன் ஷாப் போகிறவர்களை  விட,

நம்ம உடம்புலே சக்கரை இருக்கக் கூடாதே என்று டயக்நோச்டிக் செண்டர் போகிறவர்கள் தான் இன்று  அதிகம்.

இல்லாத வியாதியைத் தேடி அலைகிறோம் என்று சொன்னாலும் சரியாகத்தான்  இருக்கும்.

 சில சமயம் வியாதிகளை நாமே வருந்தி வருந்தி அழைக்கிறோம் என்று சொன்னாலும் சரிதான். நல்ல உடம்பை வருத்திக்கொள்கிறோம் என்றாலும் உண்மைதான்.

கடந்த ஒரு இருபது வருசங்களா, என்னை மாதிரி கிழங்கள் , இன்னாடா, டாக்டர் கிட்டே போனோமா, மருந்து கொடுத்தாரா , சாப்பிட்டு இரண்டு நாள், மூணு நாள் , மாக்சிமம் அஞ்சு நாள்லே குணமானோமா இல்ல, போய் சேர்ந்தோமா என்று இல்லாம,

அந்த பிளட் டெஸ்ட் இந்த மோஷன் டெஸ்ட், சி.டி,ஸ்கான், டி.வி.டி. ஸ்கான், ஒரு பல் சொத்தையா போயிடுச்சுன்னா, வாய் முழுக்க அல்ட்ரா சோன் ஸ்கான் எல்லாம்...

போதுமடா சாமி என்று இருக்கிறது.

காஷ்யபன் மட்டும் இல்ல சுரேகா சார் மட்டும் அல்ல, , நிறைய பேருக்கு இந்த மருத்துவர்கள் படுத்தும் பாடு, பொது மக்கள் படும் வேதனை இருப்பதை அந்த ப்ரோக்ராம் லே பப்ளிக் பார்ட் லேந்து இரண்டு பேர் கோபப்பட்டு பேசியது, கோபிநாத் அவர்கள் நடு நடுவே டாக்டர்களை சாடினதுஎல்லாம் பார்த்து தெரிகிறது.

இத்தனையும் போதாது என்று அந்த ப்ரோக்ராமிலே ஒரு டாக்டர்,

"சார் !! நாங்கள் எல்லாம்  நல்லவங்க சார், நம்புங்க சார், எங்களை சம்பளத்திலே வெச்சு இருக்கிற ஆஸ்பத்திரி கட்டாயத்துலே தான் இதெல்லாம் டெஸ்ட் செய்யச்சொல்லி சொல்றோம்" சத்யம் பண்றது போல ,

ஏதோ ஒரு புதுசா உண்மையை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு சொன்னதும்

அந்த அப்சர்வர் ராஜ் குமார்.  எதோ ஒரு பெரிய ஹாஸ்பிடல்.சேர்மனாம்  ஒருவர்

 இன்னிக்கு தேதியிலே மருத்துவ இண்டஸ்ட்ரி முழுக்கவே யார் கையிலே இருக்கு அப்படின்னு புட்டு புட்டு வெச்ச பின்னே,

நல்லாவே நாம் புண்ய பூமியாம் நமது பாரத பூமியிலே என்ன என்ன நடக்குது அப்படின்னு தெரியறது. தெரிஞ்சுகிட்டோம்.

ஊரை புரிஞ்சுகிட்டேன். சாமி.  கோபிநாத்துக்கு நன்றி.

ஆனா இன்னொரு பக்கம்.
அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கப்பறம் இன்டர்ன் ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் பண்ணிட்டு வரவங்களுக்கு எல்லாருக்குமே கவர்ன்மெண்ட் வேல கொடுக்க முடியாத நேரத்துலே,

டாக்டர்களும் படிச்சு முடிச்சபரம், கை நிறைய  சம்பாதிக்க என்னதான் பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க

ப்ரைவேட் ஆஸ்பத்திரி பெரிய ஹாஸ்பிடல், அங்க இருக்கிற பாஸ் சொல்றபடிதானே நடக்கணும்.

எங்கே யும் எப்போதும்
பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்

.Boss is Always right.
மனித நேயமாவது வெங்காயமாவது !!


சுப்பு தாத்தாவுக்கும் லேடஸ்டா ஒரு அனுபவம்.

சொல்றேன் கேளுங்க.

பேரப்புள்ள இப்பதான் பத்து வயசு முடிஞ்சு இருக்கு.
அமெரிகாவிலேந்து சம்மர் வெகேசனுக்கு வந்து இருக்காப்போல.
அந்த ஊர் கிளைமேட் இந்த ஊர் கிளைமேட், பகல் அங்கேன்னா நைட் இங்கே.

இந்த புள்ள, ராத்திரி 2 மணிக்குதான் தூங்க ஆரம்பிக்குது. பகல் ஒரு மணிக்குதான் எந்திருச்சு, உடனே ஐ. பாட் பார்க்க ...

அந்த புள்ளையோட அம்மாவுக்கு ஒரே கவலை. எனக்கும் தான்.
என்ன ?

மூணு நாளைக்கு ஒரு தரம், சில சமயம்,4  நாள், சில சமயம்
அஞ்சு நாளைக்கு ஒரு தரம் ஸ்டூல்ஸ்  மலம் கழிக்க போகிறான்.

 வல்லையே நான் என்ன செய்யட்டும் அப்படின்னு சொல்றான்.

நான் அடிக்கடி சொன்னா, டோண்ட் அன்னாய் மி
அப்படின்னு இங்க்லீஷ் லே திட்டறான்.

எதிர்த்தாபோல இருக்கற குழந்தை ஸ்பெசலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனா என் பொண்ணு.

அந்த டாக்டர் எம்.டி. டி.என்.பி. டிப் .சி.ஹெச். M.D.(paediatric) , DNB, Dip.in child health,  அப்படின்னு எல்லாம் படிச்சவரு.

அவங்க மிசர்சும் டாக்டரு.

ஒரு இரண்டு  நிமிஷம் கேட்டுட்டு,

பையனைப் பார்த்து டாக்டர் கேட்டாரு.
தினம் என்ன சாப்பிடற ? எப்ப சாபிடற ?

வாட் ? என்று கேட்டான் பேரன்.
டாக்டர், அவனுக்கு லோகல் தமிழ்  புரியாது.பெட்டெர் யூ டாக் இன் இங்க்லீஷ்   என்று தூய தமிழில்  நான் சொன்னேன்.

உடனே, டாக்டர் அவனிடம், வென் டு யூ ஈட் ? என்றார்.
வென் ஐ டோன்ட் ஸ்லீப் என்றான்  பேரன்.

டாக்டர் கொஞ்சம் பொறுமை ஜாஸ்தி.
ஒ.கே. வாட் டூ யூ ஈட் ? என்றார் .
சாக்லேட், பிச்சா என்றான் .

வேர் where டூ யூ ஈட் என்று டாக்டர் கேட்க,
ஹியர் என்று தன் வாயைக் காட்டினான்.

பையனை படுக்கச்  சொல்லி,இந்த சைடு, அந்த சைடு அமுக்கி வலி இருக்கா என்றெல்லாம் கேட்டார்.

யூ ஆர் ஒன்லி பைநிங் மீ என்றான் பேரன்.

ஓகே ஓகே என்ற டாக்டர் அவனை உட்காரச்  சொல்லிவிட்டு,

இது bowel movement ப்ராப்ளம் தானா இல்ல வேர ஏதாவது குடல்லே கன்ச்ற்றிக்சன் constriction , obstruction ப்ராப்ளமா  என்று சீக்கிரம் முடிவு பண்ணியாகணும்
என்று சொல்லும்போதே,
எனக்கு வயற்றை கலக்கி கிட்டத்தட்ட அங்கேயே டூஸ்  வந்து விட்டது.

எனது பெண் லேசா கண்களை துடைத்துகொண்டாள். பொது இடத்தில் அழுவது அவளுக்கு பிடிக்காது.

.சீரியஸ் ஸா இருபது  டெசி பெல்லிலே கேட்டாள் .


எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துண்டு வாங்க. என்றார்.
அடுத்த நாள் காலை,
பக்கத்துலே ஒரு பிரபல லாப் சென்று எடுத்து வந்தோம்.
மொத்த செலவு 2500 ரூபா.  சனிக்கிழமை வந்து வாங்கிக்கொண்டு போங்க. என்றார்கள்.



சனிக்கிழமை ரிபோர்டை எடுத்துண்டு வந்தா எல்லாமே டெஸ்டுமே நார்மல் தான்.

ஆனா, ரிபோர்ட் வருவதற்கு முன்னாடியே நான் எனக்குத் தெரிஞ்ச பாமிலி பிசிஷியன் கிட்ட( அவர் ஒரு சாயீ பக்தர் ) 55 வருஷ அனுபவஸ்தர். பாமிலி டாக்டர். போயி கேட்டா,

இதுக்கு  போயி,அலட்டிக்கலாமா, என்று சிரிக்கிறார்.
சுரம் இருக்கா? இல்லை என்றேன்.
வயத்திலே வலி இருக்கா? இல்லை என்றேன்.
தண்ணி நிறையா குடிக்கிறானா? இல்லை என்றேன்.

தினசரி, வாழைபழம் கனிஞ்சதா காலை மாலை இரண்டு கொடுங்க. தினம் காலையிலேந்து இரவு வரை மொத்தம் 3 லிட்டர் வாட்டர் கொடுங்க.

போதும் இப்போதைக்கு. என்றார். தொடர்ந்து பத்து நாள் கொடுங்க. அப்பறம் வாங்க, தேவையால் இருந்தால்.என்றார்.

பீஸ் ?
அதெல்லாம் வேண்டாம்.
இந்தாங்கோ பாபா பிரசாதம் என்று ஒரு வாழை பழத்தை தந்தார்.

எனக்கா? பேரனுக்கா என்றேன்.
உங்களுக்கு. பேரனுக்கு ஒன்று போதாது. தினம் 4 முதல் 6 தாங்க.
முடிஞ்சா க்ரேப்ஸ், மாம்பழம், ஆப்பிள் தாங்க.

அத கேட்டுட்டு வருவதற்குள்ளே, ஊட்டுக்காரி, அதான் எங்க வூட்டுக்கிழவி, நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று , ஒரே ரகளை.

பூண்டு, சீரகம், அந்த முளைக்கீரை எல்லாம் பண்ணி போட்டா சரியாயிடும் அப்படின்னு பினாத்திக்கொண்டு இருந்தா. கொடுத்தாளா இல்லையா அப்படின்னு தெரியல்ல.  விளக்கெண்ணை காஸ்டர் ஆயில் கொடுத்தால் நல்லது என்று எதிர்த்த  வீட்டு பாட்டி  சொன்னாள். இப்ப  சுத்தமான விளக்கெண்ணை கிடைப்பதில்லை என்று அந்த பாட்டி வீட்டு தாத்தா சொன்னார்.

 பேரப்புள்ள மட்டும் "நோ நோ ஐ டோன்ட் வாண்ட் திஸ்" என்று கத்திக்கொண்டு இருந்தது அப்பப்ப காதில் விழுந்தது.

 இத்தனைக்கும்,நடுவிலே மாப்பிள்ளைக்கு ஆயுர்வெதத்திலே அபார நம்பிக்கை. அவரோட முழங்கால் டெண்டன்ஸ் tendons ஆக்சிடெண்ட்லே அவுட் ஆன போது எல்லா விதமான ஆர்த்தோ ட்ரீட் மென்ட் க்குப்பின்னே ஆபத் பாந்தவனா வந்தது என்னமோ பிண்ட தைலம் தான். , அந்த மகா வலி நிவாரணி நாராயணா தைலம் என்று தான் ஹெல்புக்கு வந்தது.

அவரு மாப்பிள்ளை பக்கத்துலே இருக்கற ஒரு எம்.எஸ். நாட்டு வைத்தியம் ஆயுர் வேத டாக்டர் கிட்ட போயி, கன்சல்ட் பண்ண, அவரும்

திருபலாதி சூர்ணம் நாளைக்கு இரண்டு தரம் என்று அஞ்சு நாள் கொடுங்க என்று ப்றேச்கிரிப்சன் prescription கேட்டுண்டு  வந்தாரு.

இரண்டு நாள் இருக்கும்.

பேரப்புள்ள இப்ப திடீர்னு ஒரு நாளைக்கு மூணு தரம் நாலு தரம் அஞ்சு தரம் மோஷன் மோஷன் அப்படின்னு

ஸ்லோ மோஷன் இல்ல, பாஸ்ட் மோஷன்
அதுவும் லிக்விடா போறது என்று கம்ப்ளைன்ட் பண்ண,

அந்த எதிர்த்த சில்ரன் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போயி,

காத்திருந்தா பொண்ணு.

இன்னா, ரிப்போர்ட் எல்லாம் எடுத்தாச்சா என்று கேட்டார் டாக்டர்.

ரிபோர்ட் எல்லாத்தையும் காட்டினா என் பொண்ணு.

எல்லாம் நார்மலா இருக்கு. நோ வொர்ரி என்றார் டாக்டர்.

எதுக்கும் பர்கோலாக்ஸ் இரண்டு நாளைக்கு நைட் நைட் கொடுங்க. அது போதும். என்றார்.அவர்.  பைபர் டயட் , வெஜிடபில்ஸ் இருக்கணும். அப்பத்தான் மோஷன் சரியா இருக்கும் என்றார் அவர்.

"டாக்டர் பிரச்னை அதுவல்ல இப்ப , ஆப்போசிட் ஆயிடுத்து"

. என்றாள் என் பெண்.

என்ன என்று கேட்டார் டாக்டர்.

"இப்ப ஒரு நாளைக்கு அஞ்சு தரம் போறது."

ஒன்னும் கவலைபடாதீங்க.அதையும்  சரி பண்ணிடலாம்.
எதுக்கும் இந்த  லாபுக்கு போய்,  மோஷன் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
அமீபியாசிஸ் இருக்கா அப்படின்னு கன்பர்ம் பண்ணிக்கணும். என்றார்.

அமீபியாசிஸ் இல்லை என்றால், கூடவே ஒரு அப்டமன் அல்ட்ரா சன் இமேஜ் எடுத்துட்டா நல்லது.சொன்னார்.

அப்படியா என்று கவலையா கேட்டா என் பொண்ணு.

டோன்ட் வொர்ரி.

ரிபோர்ட் வர வரைக்கும் வைட்  பண்ணுங்க.
அது வரைக்கும் இளநீர் , மோரு கொடுத்து கிட்டே இருங்க. எவரி ஹால்ப் அவர்.

யூ காச் மி என்றார் டாக்டர்.


பிபோர் காட்சிங் ஹிஸ் பீஸ் . .

சம் டைம்ஸ் டாக்டர் இஸ் ஆல்சோ வைஸ் இப் அவர் டைம் இஸ் குட்.
 sometimes, doctor is also wise, if our time is good.

சாரி சார். டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்.
நம்ம டைம் தான் அப்பப்ப சரி  இல்ல.

Sorry. Most of the doctors are wise.
They know the tricks of the trade.

A quote from artha sasthra , a famous sanskrit text devoted to principles of economics.


அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:
-அர்த்தசாஸ்த்ரம்


வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது அறியலாம். ஆனால், வெளியில் எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள், எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.

courtesy: sundarjiprakash.blogspot.in

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தருமம் தானோ !!!!!!

ஒரு பத்து நாட்கள் முன்பு தான் அறிமுகமான ஒரு  நபர்   வீட்டுக்கு சென்று அங்கு வாசலில் இருக்கும் காலிங் பெல் அடித்தால் என்ன நடக்கும் என்று ...

நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பீர்களோ ....

அது தான் நடக்கும் என்று சுப்பு தாத்தா நம்பினார்.  .

காலிங் பெல்லை அழுத்தினார் ..

ட்ரிங் ..  ட்ரிங் ...

வயதான கிழவி ஒருவர் வந்து கதவைத் திறந்து வெளியே வந்தார்கள்.

நீங்கள் அழைக்கும் நபர் உள்ளே  .இருக்கிறார். உறங்கி கொண்டு இருக்கிறார்.
இன்னமும் ஒரு தரம் பெல்லை அடியுங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.

வீடு வாசல் கதவு திறந்து இருந்தது. இருந்தாலும் சுப்பு தாத்தாவுக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரமாக நுழையும் அளவுக்கு பரிச்சயம் ஆகாத வீடு. ஆதலால், மறுமுறை பெல் அடித்தார்.

அடுத்த  கணம் ஒரு விபரீதம்.!!!

ஒரு குட்டி நாய் பாய்ந்து வந்தது.

சுப்பு தாத்தா மேல் பாய்ந்து குதறி விட்டது.

அய்யோ..அம்மா.. என்று சத்தம் போட்டார் சுப்பு தாத்தா.

 ஓடவும் விடவில்லை அந்த பாமநேரியன் நாய்க்குட்டி. சுற்றி சுற்றி இரு கால்களையும் பிராண்டியது.

அந்த குறுகிய இடை வெளியில், அவர் ஓட யத்தனித்த  போது, பக்கத்தில் இருந்த பூச்சட்டி இரண்டு சுப்பு தாத்தா கால்களில் விழுந்தது.

சுப்பு தாத்தா வலியினால் துடித்தார்.

அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர் வந்தார்.  அதே வீட்டில் இருந்த ஒரு வாலிபர் வந்தார்.

ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

நாய் ஸ்டெரிலைஸ் செய்த நாய் தான். ஊசி போட்டு இருக்கிறது. என்றார் அந்த பெரியவர்.  பெடடின் ஆயிண்ட்மெண்ட் போட்டு விடட்டுமா ? அது போதும் என்றார் அவர்.

வாலிபர் சமயோசிதமாக வீட்டுக்குள் சென்று தண்ணீர் பஞ்சு கொண்டு வந்து ரத்தத்தை துடைத்து எடுத்தார்.

அதற்குள் நான் செல்லடிக்க, எனது மகன்  பைக்கில் வந்து " வா, பக்கத்தில் இருக்கும் ஹாசிபிடல் எதுக்காவது செல்வோம் என்று  சொல்ல,நாங்கள், பைக்கில் புறப்பட இருந்த போது,

நான் அழைத்த நபர் வந்தார்.

மாமா, கவலைபடாதீர்கள். வளர்ப்பு நாய் தான். பெடடின் ஆயிண்ட்மெண்ட் இருந்தால் போடுங்கள் , போதும் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

ரத்தம் வழிவதையோ   நான் துடிப்பதையோ அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நானும் என் பையனும் பக்கத்தில் இருந்த ராயல் ஹாஸ்பிடல் சென்றோம்.

காயத்தை சுத்தம் செய்தார்கள்.
டெட்டனஸ் டாக்சைடு ஊசி போட்டார்கள்.
நாய் பிராண்டியது போலும் இருக்கிறது. கடித்தது போலும் இருக்கிறது.
 எதற்கும் தற்காப்பாக ஆண்டி ரேபீஸ் ஊசி ரேபி பூர் போடவேண்டும். 24 மணி நேரத்திற்குள். என்று அட்வைஸ் செய்தார் டாக்டர்.

எதற்கும் எனக்கு பழக்கமான டாக்டர் வீ. ஆர். கணேசன் அவர்களிடம் சென்றேன்.

அவரது கிளினிக்கில் ரிசப்ஷன் ஹாலில் பிரும்மாண்டமான சாயி பாபா படம்.
என்னை ஆசிர்வதித்தது. வொய் பியர் வென் ஐ ஆம் ஹியர் என்று சொன்னது.

டாக்டர் பார்த்தார். என்னைக் கேட்டார்.

கடித்திருக்கிறதா இல்லை பிராண்டி மட்டும் இருக்கிறதா என்று சொல்ல இயலாத நிலையில்,

அவரும் ஊசி போடவேண்டும் என்று சொல்லி எஸ் 2 ரேபி வாக்ஸ் ஊசி போட்டு விட்டு, இன்னும் இரண்டு 7 வது நாள், 30 வது நாள் போடவேண்டும் என்று
.சொல்லி,

காயம் ஆற, ஆண்டி பயாடிக் மருந்துகள், வலி வீக்கத்துக்கான மருந்துகள்,
ஆண்டி பயாடிக் மருந்து சைடு எபக்ட் வராமல் இருக்க ப்ரோ பயாடிக் மருந்துகள் தந்து, அடுத்த மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்.

நாய் எப்படி இருக்கிறது என்று கவனித்து வாருங்கள். பத்து நாட்களுக்குள் நாய் எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்லுங்கள். நாய்க்கு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு இன்னமும் இரண்டு ஊசிகள் தேவையாக இருக்கும் என்றார்.

என் தலை விதியை, அஷ்டமத்து சனியை ஐம்பது தடவை என் கோபம் தீர திட்டி வீடு திரும்பினேன்.

ஒரு நாலைந்து நாலைந்து நாட்கள் மனசு திக் திக் என்று இருந்தது. எப்போது கடுமையான ஜுரம் வரும் ? எப்போது நான் லொள் லொள் என்று குலைப்பேனோ என்று காத்து இருப்பது போலும் தோன்றியது.

கீழாத்து  மாமி, நாய் கடித்து அவர்  அப்பா இறந்த விவரம் சொன்னார்.

ஐம்பது வருஷம் முன்னாடியாம்.  

 என்னை பார்க்க வந்த சிலர் நாய்க்கடி பட்டவர்கள் என்னதான் ஊசி போட்டாலும் பிழைப்பது சிரமம் என்று பயமுறுத்தினார்கள். சிலர் ஒன்றுமே இல்லை தேவை இல்லாமல் பயப்படவேண்டாம் என்றார்கள்.  தேங்காய் எண்ணை தடவு போதும் என்றார் சிலர். 

அடுத்த வாரம் திரும்பவும் அதே  வீட்டுக்கு சென்றேன். மனசிலே ஒரு வேகம்.
நாய் எப்படி இருக்கிறதோ என்ற பயமும் ஒரு ஐம்பது பர்சென்ட்.

என்னதான் இருந்தாலும், ஒரு முதல் உதவி செய்யக்கூட அவருக்குத் தோன்ற வில்லையே என்ற வருத்தம் , கோபம் என்று சொல்லமுடியாது.

அந்த வீட்டு கதவில் ஒரு போர்டு இருக்கக் கூடாதா...!!!
நாய் ஜாக்கிரதை என்று போட்டு இருந்தால் இது நடந்து இருக்காது.

நான் அங்கு போய் இருக்கவேண்டியதே இல்லை.

அது இருக்கட்டும், நாய் கடித்து விட்டது, என்று பார்த்தும், ஒரு முதல் உதவி செய்ய அவர்களிடம் முதல் உதவி மருந்து இல்லை.

எது எப்படி இருப்பினும்,
நாய் எப்படி இருக்கிறது என்று  .பார்க்கவேண்டும்.

அந்த நாய் சொந்தக்காரர் பற்றி இப்பொழுது கொஞ்சம் சொல்லவேண்டும்.
அவர் நாய் மட்டும் அல்ல, கிளி, குயில்,என்று பலதை வளர்த்துக்கொண்டு இருப்பவர்.

சிறிய அளவில் காட்டரிங் தொழில். ஒரு நாற்பது பேருக்கு தினம் லஞ்ச், இரவு டிபன் தோசை, இட்லி, சப்பாத்தி தருகிறார்.

ஒரு இருபது வருசமாக செய்கிறார். அது தான் அவர்களுக்கு ஜீவனம்.  அந்த வருமானத்தில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து, முதல் பையன் ஸீ ஏ பைனல் செய்ய, இரண்டாவது பெண் பி.காம் முடித்து விட்டு ஏதேனும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்>

பிள்ளைகளும், தாய் தந்தை வருத்தம் தெரிந்து படிப்பது மட்டும் அல்லாமல், அம்மா அப்பா குக் செய்த உணவுகளை ஹோம் டெலிவரி செய்கிரார்கள்.

நடுத்தர குடும்ப சூழ்நிலை இருந்தாலும், பாமநேரியன் நாய் வளர்ப்பதன் காரணம் புதிராக இருந்தது.

Pomanerian dogs are highly unpredictable. Beautiful they are no doubt but bite their own masters.
என் வீட்டுக்காரி ஞாபகம் ஏனோ வந்தது.


நாயை காண்பியுங்கள், நான் பார்க்கவேண்டும் என்று என் பையன் சொல்ல அதை மறுபடியும் அவர்கள் காட்டினார்கள்.   அது நன்றாகத்தான் இருந்தது.

அப்பாடி. ஒரு பேரு மூச்சு விட்டேன். அந்த நாய் நன்றாக இருக்க ,
தன்வந்திரி பகவானிடம் ஒரு ப்ரேயர் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
என் நண்பர் சக்ரபாணியிடம் பாதுகா சஹாஸ்ரத்தில் இதுக்கென்று விஷ ஜந்துக்களிடம் இருந்து தப்புவதற்கு ஏதாவது ஸ்லோகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொண்டு அடுத்த 48 நாட்கள்  பாராயணம் பண்ணவேண்டும். .

லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து.என்பது வாக்கியம்.
லோகத்திலே மற்றவர்கள் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்று என் அம்மா சொல்வாள்.

அந்த " மற்றவர்கள் " என்ற சொல்லில் ஒரு நாயும் இருக்கும் என்று இத்தனை வருஷம் எனக்குத் தெரியவில்லையே !! மண்டுடா நீ சுப்பு தாத்தா என்று என்னையே கடிந்து கொண்டேன்.

இன்னமும் நாலு நாட்கள் ஆகின.

ஆண்டி பயாடிக் மருந்துகளால், காயம் சற்று ஆறி விட்டது எனினும் மனதில் பயம் இருந்தது.   உடல் தொய்ந்து போய் விட்டது. நடமாட தெம்பு அதிகம் இல்லை.

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த என் மகளோ தன் மச்சினனை அவங்க வீட்டு நாய் , அதுவும் பாமநேரியன், இது வரைக்கும் ஏழு தரம் கடிச்சிருக்கு. ஒன்னும் ஆகவில்லை. என்றாள்.

மாப்பிள்ளையும் ஆமா ஆமா என்று வழக்கம் போல் தலை ஆட்டினார்.

மகனும், மருமகளும் லீவ் முடிந்து திரும்பவும் வெளி நாடு செல்லும் நாள் வந்தது.

" அந்த ஆத்திலேந்து ஒன்னும் வாங்க வேண்டாம் அப்பா " என்று திடீர் என்று மருமகள் சொன்னாள்.

என்ன காரணம் என்று கேட்காமல் அவளை கூர்ந்து பார்த்தேன்.
சாப்பாடு நல்ல ருசியாத்தானே இருக்கு என்று சொல்லவும் செய்தேன்.

அதுக்கு, அவளோ, நம்ம ஆத்து பன்க்சன் நடந்த அன்றே பார்த்தேன். அந்த நாய் வீடு முழுக்க ஒடி ஒடி
சாப்பாடு செய்து வைத்து இருக்கும் எல்லா பாத்திரங்களையும்  அசிங்கபடுத்துகிறது.

எனக்கு ருசிக்கல்ல. என்றாள்

இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதோ !! என்று நான் நினைக்கத்தான் செய்தேன். சட் என்று வாய் விட்டு சொல்ல  .இயலவில்லை.

என்னதான் இருந்தாலும், அப்பா அப்பா தான், மாமனார் மாமனார் தான்.

எதுக்கும் நாமே சென்று  அந்த வீட்டு சூழ்நிலையை நேரடியாக பார்த்து விடுவோம் என்று தைரியத்தை வர வழைத்து கொண்டுசென்றேன்.  நானே பார்த்தேன்.

 பக்கத்து வீட்டுக்காரரும் அதையே தான் சொல்கிறார்.  ஆனா அவரோட  நோக்கு வேற மாதிரி இருந்தது.

நீங்க சொல்வது கரெக்ட் தான் அந்த நாய் வீடு முழுக்கா அசிங்கம் பண்றது. ஆனால், . நம்ம  மாதிரி கிழங்களுக்கு இது மாதிரி வேளா வேளைக்கு யார் சாப்பாடு வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள் இந்த காலத்துலே !!

சுத்தம் கித்தம் என்று குத்தம் சொன்னால் நாம  பட்டினி கிடக்க வேண்டியது தான் என்று நகைத்தார்.

இந்த உணவையா என்னைப்போன்ற எட்டு பத்து கிழங்கள் எங்கள் காலனியில் தினமும் வாங்கி சாப்பிடுகிறார்கள் ?

பார்த்த காட்சி என்னை திடுக்கிட வைத்தது.

எங்கள் காலனியில் இருக்கும் பெரிசுகள் மேலே எனக்கு பரிதாபம் தோன்றியது.

அதே சமயம் இந்த தொழிலையே நம்பி இருக்கும் காடரிங் நண்பர் மேலே ஒரு இரக்கமும் இருந்தது.

காலனியில் நிறையா பெரிசுகள், என்னை மாதிரி , வாடகை கொடுக்காத டெனன்ட் .

தாராள மனசு கொண்ட தமது மகன் மருமகள் பெருந்தன்மையில் குடி இருப்பவர்கள்.

ஒரு சமூக பார்வை எப்போதுமே சுப்பு தாத்தாவுக்கு உண்டு.

இந்த  பொல்யுடட் சுத்தமற்ற உணவை தடுக்க வேண்டும். என்ற நினைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.

தனக்கு இருக்கும், அல்லது இருப்பதாக நினைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி செக்யூரிடி இடம்  சொல்லி,

அந்த உணவு வழங்க வரும் நபரை இரண்டு நாள் முன்னாடி நிறுத்தி விட்டார்.
 தாம் செய்ததை, மற்ற யாரிடமும். சொல்லவில்லை.

நல்லது தானே  செய்கிறோம்.அதைக்கூட சொல்லிட்டுத் தான் செய்யனுமா என்ன !! என்ற எண்ணம் அவருக்கு.

நேற்று மாலை. வழக்கம் போல காலனி பெஞ்சில் அவர் .
அஞ்சாறு பேரு   கூட சுற்றி இருந்தனர்.

எங்கே அந்த சுப்பையாவா ராமையா வா ,  அவரைக் காணோம் என்றார் ஒருவர்.

பாவம் ராமையா . ஹை டயாபெடிக். தெரியுமோ சேதி ..என்றார் ஒருவர்.

தெரியுமே என்றார்.
தனியா இருக்கார். வீட்டுக்காரி அமெரிக்கா போய் இருக்கிறார்.
 காலையும் மாலையும்  சாப்பாடு கொண்டு வருபவரை
நம்பித்தான் இருக்கார்.

அதுனாலே என்ன ? என்று அப்பாவித்தனமாக இன்னொருவர் கேட்டார்.

நேற்று சாப்பாடு  வரவில்லை.வரும் வரும் என்று காத்திருந்து,சாப்பாடு வரவில்லை. ஹைபோ க்லீசிமியா வந்து விட்டது. மயக்கமாயிட்டார்.

நான்தான் அவரை ஹாஸ்பிடல் லே அட்மிட் பண்ணி இருக்கேன்.ஹி இஸ் ஆல்மோஸ்ட்ஓகே.  நாளைக்கு வந்து விடுவார் என்றார்.

சுப்பு தாத்தா
மனசு இருக்கே

அது ஒரு விபரீத பிராணி.

 தேவை இல்லாதபோது தான் அது பேச ஆரம்பிக்கும்.
சுப்பு தாத்தா !!! இதெல்லாம் நீ செய்யனுமா ?

உன்னை அந்த நாய் கடிச்சு இருக்கலாம். அதனாலே உனக்கு மனசு, உடம்பு பாதிச்சு இருக்கலாம். 2000 3000 நீ செலவளிச்சு இருக்கலாம்.

அந்த வீடும் சுத்தமா இல்லாம இருக்கலாம்.

ஆனா, அதனால, நல்லது அப்படின்னு நினைச்சு, நீ செஞ்சது
எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தாயா !!

மனசு இடிச்சுண்டு இருக்கிறது.

யாராவது சுப்பு தாத்தாவுக்கு நியாயம்தான் நீ செஞ்சது
இது
 செஞ்சது  தருமந்தான் அப்படின்னு

சொல்லுங்க.

சொல்லுவாங்களா ????


*****************************************************************************************************

( ஒரு எழுபது பர்சென்ட் உண்மை, பின் வரும் முப்பது பர்சென்ட் கற்பனை கலந்த நிகழ்ச்சி )

சனி, 19 ஜூலை, 2014

ப்ளீஸ் பார்டன் மீ. மன்னிச்சுடுங்க சாரே

அந்த பெரியவர் சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தார்.

பாட்டா கடை தாண்டி ஒரே சாக்கடை . அதில் நடக்க முடியாது. ஒரு நாலு வருடம் முன்பு லெப்டோ வந்து நாலு மாசம் கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

கையில் வழக்கமான பை. அதில் ஒரு சென்சிடைசர், பேஸ் மாஸ்க் . ஒரு சின்ன பாட்டிலில் வாட்டர். அதைத் தவிர ஐ. டி. கார்டு. கந்தர் சட்டி கவசம், இத்யாதி.

நெஞ்சிலோ ஏகத்துக்கு சுமை. இந்த புள்ளை இப்படி புறக்கணுமா ? அம்மா அப்பாவுக்கு இந்த தீராத மன வேதனை தரணுமா ? ஊருக்கே சோதிடம் பார்க்கும் உனக்கு இதற்கு என்ன தீர்வு என சொல்லத்தெரியல்லையே !!

இறைவா !!! இது என்ன உனது விபரீத விளையாட்டு !!

பல பல எண்ணங்கள் ,

குறுக்கும் நெடுக்குமாக, சிக்னல் இல்லாத சந்திப்பில் ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முந்துவது போல

இனி இருக்கப்போகும் கொஞ்ச நாட்களும் இந்த ரோடு போலத்தான் .

எப்பவுமே இந்த கிழவன் மனசு
ஒரு டிராபிக் ஜாம்.

சிக்கல்.

இதில் இருந்து வெளிலே வரணும்னா ஒரே வழி.

அதுதான்.. கந்தன் கண் முன்னே காட்சி தரணும். வா நீ என்னோட அப்படின்னு என்னை கூட்டிக்கினு போகணும்.

அப்படின்னு நினைக்கும்போதே  ...

அந்தப் பெரியவரின் வலது கை முட்டியில் ஒரு பைக் ஹாண்ட் பார் வேகமாக
இடி போலத் தாக்குகிறது.இடிக்கிறது.

வலியினால் அவர் துடிக்கிறார். அவர் கையில் இருக்கும் பை நழுவி கீழே விழுகிறது.

இடித்த பைக் காரர், சற்று தூரம் சென்று பைக்கை நிறுத்தி, திரும்பி வருகிறார்.

இந்த பெரியவர் வந்தவனைப் பார்த்கிறார்.
முகத்தை கூட சரியாக  கவனிக்க வில்லை. இருந்தாலும்
அவன் சட்டையை பிடித்து " உன்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா ? என்ற வகையில் சத்தம் போடுகிறார்.

பைக் காரர் " லைசன்ஸ் எல்லாம் இருக்கிறது. முதலில் உங்கள் கை எப்படி இருக்கிறது. ?  அடி ஒன்றும் இல்லையே ?" என்கிறார்.

பெரியவருக்கு இப்போது வலி அதிகம் தெரிகிறது. பைக் காரர் சட்டையை விட்டு விட்டு, அவர் கைகளை பிடித்துக்கொண்டு, என்னை டாக்டரிடம் கூட்டி செல்லுங்கள் என்கிறார். ரோடு என்றும் பாராது கதறுகிறார்.

இந்த நிகழ்வுகளை பார்க்கும் , டாஸ்மாக் கடையில் வாசலில் இருந்த ஒரு நடுத்தர குடி மகன் ஒருவர், ஏன்யா, பெரிசு, வீட்டுக்குள்ளே கிடக்காம, வீதிலே வரவங்க உசிரை எடுக்கிற.!!
சாவேன்யா!! என்று கத்துகிறார்.

பைக் ஒட்டி வந்த வாலிபர், பெரியவர் கைகளை உதறிவிட்டு, தன் பைக்கை நோக்கி சென்று, அதை ஸ்டார்ட் செய்து புறப்படுகிறார்.  பெரியதாக ஒன்றும் அடி இல்லை. என்ற நம்பிக்கை போலும்.

திரும்பிச் செல்லும் அவர் நடையில் ஒரு மிடுக்கு தெரிகிறது.ஆயினும் யதார்த்தமும் தெரிகிறது.

அடி பட்ட பெரியவர் வலியினால் சற்று நேரம் துடிக்கிறார். அந்த வலி இன்னமும் அடங்காத நிலையிலேயே அவர் மனதில் இன்னொரு வலி ஜனனம் ஆகிறது. .

என்ன தான் அடிபட்டாலும், வலி இருந்தாலும், ஒரு கணம் தான் தனது வயதிற்கு ஏற்ப  நிதானத்தை இழந்து, பைக்கில்  வந்த வாலிபனின் சட்டையைப் பிடித்தது தவறு என்று அந்தப் பெரியவருக்குத் தோன்றுகிறது.

இரண்டு சொற்கள் என்றாலும் தாம்  பேசிய சுடு சொற்கள்  தவறு என்றும் தோன்றுகிறது...

கை முட்டி வலி அடங்கும். ஆனால் எனது செய்கையால் தான் ஏற்படுத்திய வலி அடங்காதே !!

அவருடைய மனசின் இன்னொரு பக்கம் இப்போது ஸ்டார்ட் ஆகிறது.

யாகாவாராயினும் நா காக்க. காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு.

எனும் வள்ளுவன் வாக்கினை நீ மறந்ததும் சரியோ !! வயசாச்சே தவிர உனக்கு விவேகம் வல்லையே ??

பாவம். அந்த வாலிபர் மனம்,,அவர் சட்டையை பிடித்ததில் எந்த அளவுக்கு புண் பட்டு இருக்கும்.

மனசுக்கும் உடலுக்கும் ஒரு போராட்டம்.
மனசு இல்லை, மனசாட்சி ஜெயிக்கிறது.

செல். அவரிடம் சாரி சொல்லுங்கள் என்கிறது.

அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இரவு முழுவதும் இதே நினைப்பு.

சார். எக்ஸ்க்யூஸ் மீ. என்று சத்தமாக சொல்கிறார். .

நீங்கள் யாராக  இருந்தாலும், எங்கு இருந்தாலும், என்னை மன்னித்து விடுங்கள்.

என் செயல் என் வலியின் காரணமாக இருந்தாலும், நான் உங்கள் சட்டையைப் பிடித்தது தவறு தான்.

உங்களுக்குபைக்  லைசன்ஸ் இருக்கிறதா என்று கேட்டேன். தவறு.
எனக்கு அது மாதிரி கேட்பதற்கும்  லைசன்ஸ் இல்லை.

நடந்தது நடந்து விட்டது.
வேண்டுமென்றே நீங்கள் என்னை இடிக்கவில்லை.
என் உள் மனம் சொல்கிறது.

ஐ ஆம் வெரி சாரி .
ப்ளீஸ் பார்டன் மீ.

மன்னிச்சுடுங்க சாரே.






வியாழன், 12 ஜூன், 2014

குரு பகவன் கிட்டே .... . உங்களுக்கா எனக்கா இல்ல,

வருகிற வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிக்கு குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு போறார்.

நம்ம இந்த சீப்ராஸ் பார்க் லேந்து மணப்பாக்கம் வீட்டுக்கு போறோமா அதை சொல்லுங்க.

அதெல்லாம் பிசாத்து. இப்ப பாரு. லோகமே ஆஸ்தீக ஆன்மீக மக்காஸ் எல்லோருமே சகட்டு மேனிக்கு  அவங்கவங்க ராசிக்கு தோஷம் பரிஹாரம் செய்யனுமா அப்படின்னு தெரிஞ்சுக்க கூட்டம் கூட்டமா கோவிலுக்கு போராக.

வீடு கட்டினவனுக்கு ஒரே வீடு. வாடகை கொடுப்பவனுக்கு ஆயிரம் வீடு.
இந்த குரு  வருசா வருஷம் வீடு மாத்தறாரே..

வருசத்துக்கு ஒரு தரம் இல்லை. பதினாறு மாசத்துக்கு ஒரு தரம்.

சரி 16 மாசம். 
எப்ப பார்த்தாலும் அங்க இங்க அப்படின்னு கடன் வாங்கி திருப்பி தர முடியாம வீட்டை மாத்திண்டு போறாரோ !!

இங்கன பாரு.  இப்படி எல்லாம் ஏடா கூடமா பேசி, என் மூடை  அவுட் பண்ணிடாதே.  நான் பாட்டுக்கு குரு பகவான் பாட்டு எல்லாம் ராஜேஸ்வரி அம்மா போட்டுக்கிட்டு இருக்காங்க. அத படிச்சுகிண்டு இருக்கேன்.

நீங்க பாட்டுக்கு படிச்சா   தேவலாமே. மணிக்கு ரண்டு பேரு செல் அடிச்சு, இந்த குரூ பெயர்ச்சி ஆயில்யத்துக்கு எப்படி, அவிட்டத்துக்கு எப்படி ன்னு கேட்கராக.

அவுக கேட்கராக.  நான் சொல்றேன். உனக்கு என்ன ?

எனக்கு தூக்கம் அவுட் ஆகிடறது இல்லை ?? போகட்டும். இந்த சாயி நகர் மாமி ஏதோ சனியும் வக்ரிச்சு இருக்கு. அப்படின்னு சொல்லப்போவ, எனக்கும் கொஞ்சம் திக் திக் அப்படிங்க ஆரம்பிச்சுடுத்து.

பல் வலியும் கிட்னி லே கல் வலியும்  அவனவுக்கு வந்தாத்தான் தெரியும்.. இல்லையா. ??

கடகத்துலே குரு உச்சன் இல்லயோ.!!

ஆமாம்.

அப்ப  அங்கேயே இருக்கலாமே ? எதுக்கு அடுத்து அடுத்து வீட்டுக்கெல்லாம் போகணும் ?

நமக்கு எங்க சௌகர்யமோ அங்க தான் இருக்கணும் அப்படின்னு நீ சொல்றது எல்லாம் புரியறது.  ஆனால் குரு பகவான் ஆனா எல்லா க்ருஹத்துக்கும் போய் எல்லாருக்கும் கடாக்ஷம் அளிக்கனும் அப்படின்னு நினைக்கிறார்.

அதுக்காக காலம் காலமா சுத்திண்டே யா இருக்கிறது ?  நம்ம இல்லை ? ரிடையர் ஆனோமா..! ஸ்ரீரங்கத்திலே செட்டில் ஆனோமா அப்படின்னு ?

அதெல்லாம் மனுஷ்யாளுக்கு.  தேவர்களுக்கு இந்த ரூல் அப்ளை ஆகாது.

அது சரி. அதுக்காக, நமக்கு சொந்த பந்தம் அப்படின்னு இருக்கறவா வீட்டுக்கு போனா சரி.  அங்கேயே நமக்கு அப்படி ஒண்ணும் பிரமாத வரவேற்பு இல்லை.

நீ என்ன சொல்ல வரே?

தனக்கு எதிரி வீட்டுக்கெல்லாம் போவானேன் ? வாங்கிக் கட்டிப்பானேன்.
தனக்கும் சுகமில்ல.  அவர்களுக்கும் ச்ரமம் .

நீ சொல்றது சரி தான். குருவுக்கு தனக்கு அப்படின்னு இரண்டு வீடு இருக்கு.
நமக்கு தஞ்சாவூர் வீடு இருக்கு. இங்கே புள்ளே வீடு இருக்கு. அது மாதிரி.
அங்கேயே இருக்கலாமே.

அதே அதே அதைதான் நானும் சொல்றேன். அப்ப எதுக்கு எதிரி வீட்டுக்கு ?
நான் வளைச்சு பேசல்ல. சுக்ரன் எதிரி ஆச்சு . அப்ப அவாய்ட் பண்ணலாம் இல்லையா. சந்திரனும் ஒரு இரண்டும் கெட்டான் . யார் கூட இருக்கானோ அவன் பேச்சைக் கேட்கிறவன். 

 குருவுக்கு எதிரி அப்படின்னு பார்த்தா சுக்ரன் மட்டும் இல்ல, சூரியன், செவ்வாய் கூடத்தான்.  அப்ப, சிம்மம், மேஷம், விருச்சிகம் கூடத்தான் எதிரியோட ப்ளாட் .   அத அப்படி பார்க்க கூடாது.  நம்ம வர்றது அவங்களுக்கு புடிக்கரதோ இல்லையோ நம்ம அட் லீஸ்ட் வருசத்து ஒரு தரம் போயி பாத்துட்டு வரணும்.

அதான் குரு பதினெட்டு வருசத்துக்கு ஒரு தரம் நம்ம வீட்டுக்கு விசிட் பண்றார் அப்படின்னு சொல்றீங்க..

ஆமா. வீட்டுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் வாங்க வாங்க அப்படின்னு மனசு சுத்தமா கூப்பிடனும். நம்மால முடிஞ்ச அளவுக்கு உபசரிக்கணும்.

அதான் நம்ம வலைலே இன்னிக்கு குரு பகவான் ஸ்தோத்திரம் பாடி இருக்கீங்க.

ஆமாம்.

ஒரு சந்தேஹம் இருக்குங்க.

லிங்கா படம் எப்ப வரும் அப்படின்னா ? சொல்லு.

இவரு, ுகுரு வாக்கிய பஞ்சாங்கம் படி இன்னிக்கு 13.6.14 மாலை வராரு . ஆனா, காஞ்சி மடத்து பஞ்சாங்கம் படி அவரு 19ம் தேதி தானே கடக ராசிக்கு வராரு அப்படின்னு போட்டு இருக்குது.

இதிலே ஏன் வித்தியாசம் வருது அப்படின்னு விலா வாரியா பின்னே விளக்கறேன். இப்போதைக்கு சொல்றேன்:  நம்ம எப்படி ? வைகாசி மாசமே அந்த ப்ளாட்க்கு போயி பால் காச்சி சாப்பிட்டு வந்துட்டாலும் பின்னே மெதுவா தானே மூவ் பண்றோம்.

சும்மா ஜோக் அடிக்காதீக.  பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் வித்தியாசம் ஏன் வருது அப்படின்னு கேட்டா ஸ்ட்ரைட் ஆ பதில் சொல்லுங்க..

பஞ்சாங்கம் அப்படின்னு சொன்னால், திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னம், கரணம் , இதை கணக்கு இடுவதிலே வாக்கியத்துக்கும் திரி கணிதத்துக்கும் ஒன்னு இல்ல, நிறையவே  வித்தியாசம் இருக்கு.

 அது சரி தான். நம்ம அவரு வராரு வராரு ன்னு காத்து கெடப்போம். அவரு மெதுவா வந்தா . அதுவும் அந்த சமயத்துலே நம்ம இல்லாட்டி பொல்லாப்பு வந்துடும் இல்லையா. 

நம்ம,  எல்லாரும் எப்ப வர்ராகளோ அப்பவே போவோம். 

சில சமயம் ரண்டு தீபாவளி கூட வருது.   அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்ப கோவிலுக்கு கிளம்புறீங்க.?

நீ வல்லையா ?

இதோ பாருங்க.  நீங்க போயிட்டு வாங்க.  எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கணுமோ அது அது அப்ப அப்ப அவங்க  அவங்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கும்.

அப்ப இது அது எல்லாம் ஒரு மனசு ஆறுதலுக்குத் தான் அப்படின்னு சொல்றாயோ ?

புரிஞ்சுகிட்டா சரி. குரு பகவான் சைலண்டா ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்துண்டு இருக்காரு. அவர் யங் . ஆனா அவரோட சிஷ்ய புள்ளைங்க எல்லாரும் ஓல்டு.

வாய் பேசாம இருக்காரு அப்படின்னு சொல்றே....?


வாய் தான் பேசல்ல. கண் பேசுது.  ஹார்ட் பேசுது.

என்ன பேசுது அப்படின்னு சொல்றே.

எல்லார் கிட்டவும் அன்பா இரு.  மனசை ஒரு நிலைப்படுத்தி வச்ச்சுகிட்டேனா ஒனக்கு எந்த பேஜாரும்  கீது அப்படின்னு சொல்றாரு.

அதாவது, நீ சொல்றத பாத்தா,

மனத்துக்கண் மாசிலன் ஆதல்,
அனைத்து அறன் ஆகுல நீர பிற

அப்படிங்கற வ ள்ளுவன் தத்துவத்தை எடுத்து சொல்றாரு அப்படின்னு சொல்ற.

அத எப்படி செய்யறது ?

நீங்க அவருகிட்டவே கேட்டுட்டு வாங்க. எனக்கு விஜய் டி.வி.  ப்ரோக்ராம் வர நேரமாயிடுச்சு.

அப்படி என்ன ப்ரோக்ராம் ?




போங்க. போயி, உங்களுக்கா எனக்கா இல்ல, இந்த குழந்தைக்காக குரு பகவன் கிட்டே அழுங்க. பிரார்த்தனை செய்யுங்க. 

Pray for this God sent child to Guru Bhagavan and not for U and for me.


ஞாயிறு, 11 மே, 2014

உனக்கென்ன மேலே நின்றாய்


எதைச் செய்தாலும் செய்யப்போகுமுன், இதை செஞ்சு தான் ஆகணுமா என்று நாம் நினைக்கிறோமா தெரியல்ல. 

இன்னிக்கு ஒரு ஆங்கில டி.விலே தலைமை தேர்தல் அதிகாரி திருவள்ளுவர் சொன்னதிலேந்து ஒரு குறள் எடுத்து நம்ம முன்னாடி வைக்கிறார்.

எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 

அவர் எதுக்காக இந்த குறளை சொன்னார் ? அந்த பாயிண்டுக்கு நான் போக வில்லை. அது இப்ப சப்ஜெக்ட் இல்லை. 

காரியம் மட்டும் இல்லை. ஒரு வார்த்தை, ஒரு பேச்சு சொல்லுமுன்னே இது சொல்லனுமா அப்படின்னு கொஞ்சம் நிதானிச்சு பார்க்கணும் இல்லையா. 

சொல்லாத வார்த்தைக்கு நம்ம எசமான். 
சொல்லிய வார்த்தை நமக்கு எசமான் 

அப்படின்னும் வள்ளுவர் விளாசி இருக்காரு .அப்படின்னு தெரிஞ்சுமா இப்படி ???!!

+Chellappa Yagyaswamy
செல்லப்பா யக்ஞசாமி அவர்கள் கிட்டே கேட்கணும் அப்படின்னு நினைச்சுக்கொண்டு இருக்கும்போதே ....

ஒரு நிகழ்வு .

அதை எல்லோரிடமும் பங்கிட்டுக் கொள்ளவில்லை என்றால் எனக்கு  தலை வெடித்து விடும் ரிஸ்க் ..

ஒரு அஞ்சு  நாட்கள் முன்னாடி ஆழ்வார் திருநகர் மெயின் ரோடுலே மெகா மார்ட் லப்ட்லே கட் பண்ணி காந்தி ரோடுலே நுழைந்தேன்.

ரோடு ஓரக்கடை  ஒன்றில்,எலுமிச்சம்பழம் சின்னச் சின்னதா அழகா இருந்தது. கிலோ எத்தனை என்று  கேட்டேன். நூறு ரூபாய்  என்றார்.எத்தனை ஒரு கிலோவில் இருக்கும் என்று கேட்டேன். 

அது திராசையும்  எடைக்கல்லையும்,நீங்கள் நிறுவையின் போது கவனிப்பீர்களா என்பதையும் பொறுத்தது என்று அவர் சொல்வார் என்று  எதிர்பார்த்தேன்.

அவரோ போட்டு பாத்துடலாங்க என்று நிறுத்தார். ஒரு ஐம்பது கிட்டத்தட்ட இருந்தது. ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தந்தார் அந்த பிளாட்பாரம் கடை உரிமை யாளர். 

பணத்துக்கு பர்சைத்   திறந்தேன்.அடடா. மறந்தே  விட்டேன். ஏ . டி.எம்மில் பணம் எடுக்க மறந்துவிட்டேனே என ...

அவரிடம் ஒரு நிமிஷம் இருங்க ..வந்துடறேன்.என்று எதிர்த்தாற்போல் இருந்த ஆக்சிஸ் வங்கி ஏ .டி. எம்மில் அவசர அவசரமாக பணம் எடுத்து பாண்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, 

அடுத்த நிமிஷம், கடைக்கு வந்து, பையில் கையை விட்டு ஒரு நூறு ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு ..

நடக்கும்போது பல யோசனைகள் .  போன தடவை மாதிரி வாங்கிண்டு போய், பிரிட்ஜில்  வைத்துவிட்டு மறந்து  விடக்கூடாது, பத்து நாள் கழிச்சு பார்க்கும்போது எல்லா பழங்களும் மரத்துப்போய் கல் ஆகியிருந்தது நினைவுக்கு  வர,

இந்த  தடவை,போன உடனே நறுக்கி, உப்பு போட்டு ஊற  வைத்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டுக்கொண்டு,

மேலே  நடந்தபோது,சிந்தாமணி விநாயகர் கோவில் பக்கம் வந்துவிட்டேன். 

வெகு தூரத்தில் இருந்தே   பார்த்துவிட்டேன். எனக்குப் பரிச்சயமான அதே நபர் கோவில் பக்கத்தில், நடு ரோட்டில் நின்று கொண்டு, துண்டை விரித்துப் பிடித்து, வருபவர் போகிறவர் எல்லோரிடமும் , 

திருப்பதிக்கு  போகி றேன்.என்று கிளிப்பிள்ளை மாதிரி அதே  வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு  இருந்தார்.

இவரைப் பற்றி முன்னமேயே எழுதியிருக்கும் பதிவை பார்க்க இங்கே  சொடுக்குங்கள்.

அன்று சஷ்டி . சற்று கூட்டம்  அதிகம்.பக்தர் கூட்டமும் அதிகம். 
பக்தர் மடியிலே தாராளமாக பல பத்து ரூபாய் நோட்டுகள் பிரகாசித்துக்கொண்டு இருந்தன. 

எப்படி எல்லாம் மக்களின் பக்தியையும் அவர்களது கருணை உள்ளத்தையும் வெகு சுலபமாக தனக்குச் சாதகமாக இப்படிப்பட்டவர்கள் எல்லாம் மாற்றிக்கொள்கிறார்கள் என்று தோன்றியது. 

சுப்பு தாத்தா தனக்கெதுக்கு  வம்பு,யார் எப்படி சம்பாதித்தால் என்ன என்று தன வழி போய்  இருக்கலாம். 
அப்படி போய் இருந்தால் ஒரு வேளை இந்த பதிவு வந்து இருக்காதோ என்னவோ ?

பக்கத்தில்  போனேன்.அவருக்கு காதுக்கு என் குரல் எட்டும் பக்கத்தில்  சென்று, " நானும் ஒரு வருடமாக வாரா வாரம் உங்களை ஏதாவது ஒரு கோவிலில்  பார்க்கிறேன். இன்னமுமா திருப்பதிக்குப் போகவில்லை ?"
என்று  கேட்டு விட்டேன். 
கேட்டபின்பு தான் என் குரலில் பதில் தெரிந்துகொள்ளும் அவாவை விட, ஒரு ஏளனம் தான் இருந்தது என்று உடனடி ஆக உணர்ந்தேன் .

அவரோ என்னைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் கவனம் முற்றிலும் வரும் பக்தர்கள் நோக்கியே இருந்தது.  அவருக்கு என் குரல் கேட்காமல் இருந்து இருக்காது.  இருந்தாலும் என் பக்கம் திரும்பாது, அவர் தன காரியத்தில் முனைந்து இருந்தார். 

போன தடவை அவரை என் செல்லில் படம் எடுக்க முயன்ற போது அவர் அங்கிருந்து சட் என்று ஓடிப்போனது எனக்கு நினைவில் இருந்தது.  இந்த தடவை நான் படம் எடுக்க முயலவில்லை. 

அவர் என்னை இக்னோர் செய்துவிட்டார். என்னை , என் கமெண்டை அவர் பொருட்படுத்தவில்லை.  

நானும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மேலே சென்றேனே தவிர, 
என் மனம் நான் செய்த செயலை விட்டு நகர வில்லை. 

உனக்கு எதுக்கு இந்த வீண் காரியம்.?
யாரோ எதுவோ செய்துவிட்டு போகிறார்கள். அவர்கள் செய்வதில் நீ ஏன் தலை இடுகிறாய். ?

அவர் உண்மையிலேயே திருப்பதிக்கு செல்வதற்குத்தான் பணம் சேர்த்து க்கொண்டிருக்கிராரோ என்னவோ?
அவர் ஏமாற்றுகிறார் என்பது உனக்கு நிச்சயம் ?
யார் தான்  யாரைத் தான் ஏமாற்றவில்லை?

உண்மையிலே வாழ்க்கையிலே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலே எல்லோருமே ஒருவரை இன்னொருவர் சிறிதோ பெரிதோ ஏமாற்றிக்கொண்டு தானே இருக்கிறோம். ?



போன வாரம் அந்த டாக்டர் தேவை இல்லாமல் உன்னை சி.டி. ஸ்கானுக்கு அனுப்பித்து,போய், உன்னை ரூபாய் 9000 அழ வைத்தாரே, அது ஏமாற்றுவது இல்லையா ?

இரண்டு வாங்கினால் இன்னொன்று இனாம் என்று சொல்லி, எக்ஸ்பையர் ஆன டேட்ஸ் சிரப்பை உன் தலையில் கட்டின அந்த மால் உன்னை ஏமாற்ற வில்லையா ?



அந்த பரிகாரம் செய்தால் நல்லது, இந்த கல் பதிச்ச மோதிரம் போட்டுக்கங்க, இந்தக் கடைலே போய் வாங்கினா அசல் கல் கிடைக்கும் என்று நம்மை குறிப்பிட்ட கடைகளுக்கு அனுப்பி, நாமும் அந்தக் கல், இந்தக் கல் என்று வான வில்லில் இருக்கும் எல்லாக் கலர்களிலும் மோதிரங்கள், வளையங்கள், தாயத்துக்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறோமே, அவை எல்லாமே ஒரு கணம் பார்த்தால் நம்மை நாமே ஏமாற்றிகொள்வது தானே. !!

எது நடக்குமோ அது நடந்து தான் தீரும் என்று கீதாசார்யன் சொல்லி இருக்கான் என்று நன்றாகத் தெரிந்தும்,  

இது செய்யலாமா அது செய்யலாமா என்று ஜோதிடர் வீடுகளுக்கு நடை நடையாய் நடக்க வைக்கிறார்களே !! அதெல்ல்லாம் ?????

சே.. சே.. என்ன காரியம் செஞ்சு விட்டோம். 
அப்படி என்று மனம் வெகுவாக உறுத்த துவங்கி விட்டது. 

மற்றதில் கவனம் செல்லாது, வரும் வழி எல்லாமே, மனசு டேய் சூரி, தப்புடா ..என்றது. 
நான் நடந்து கொண்டு இருந்தேன். வேற எண்ணங்கள் வரவில்லை. 
ஒரு டர்னிங் வந்தது. லப்ட்லே திரும்ப, அங்கே ப்லாட்பார்ம்லே ஒரு நடுத்தர வயதினராக இருந்தார். பக்கத்தில் அவர் மனைவியாக இருக்கும். ஏதோ கடு கடு என்று இருவரும் பேசிக்கொண்டு இருப்பது முதலில் ஏதோ சன்னமாக கேட்டது.  பக்கத்தில் போன போது கொஞ்சம் தெளிவாக கேட்டது. 

அவர்களைக் கடக்கும்போது, அவர் தன அருகில் இருக்கும் மனைவியிடம் சொல்கிறார்.

" நீ சொன்னது தப்புன்னா தப்பு தான். வேற ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை."

என்ற வாசகம் என் காதுகளில் தெளிவாக கேட்டது. 

திடுக்கிட்டேன். எனக்காகவே சொன்ன அசரீரி யோ இது ?

பெருமாளே !! என்னை மன்னித்து விடு. 

ஒரு நிமிஷத்துலே மனசுலே தோன்றிய ஆணவம், ஏதோ நான் தான் தர்மத்துக்கு எல்லாம் வாச்மேன் என்ற நினைப்பு எல்லாமே.. எனது தவறு தான். 

அழவில்லை.  ஆனால் என் கண்கள் பார்க்க இயலவில்லை. என் மனம் அழுததை நிறுத்த முடியவில்லை. 

வயசு 73 ஆகிவிட்டது. இன்னமும் வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லையே..

ஒரு சாட்டை அடி யாரோ அடிக்கிறாரோ என்ற உணர்வு. 

வீட்டுக்குப்போய் கதவைத் தட்டினேன்.  நடந்ததை சொல்வோமா வேண்டாமா என்று ஒரு நிமிஷம் யோசனை. 
முதலில் கை கால் கழுவிக்கொண்டு, சாப்பிட்டு விட்டு பிறகு மற்றதை கவனிப்போம் என்று முடிவு செய்து கொண்டு.
போட்டு இருந்த 
பாண்ட் சர்டைக் கழற்றி விட்டு, பின்  பர்சை எடுத்து மேசையில் வைக்க, பாண்ட் பாக்கேட்டில் கையை விட்டேன். 

திடுக்கிட்டேன்.   என் பரபரப்பைப் பார்த்த என் அகமுடையாள் கேட்டாள் 

என்ன என்ன ????


ஆக்சிஸ் ஏ .டி.எம்.  ..  பணம்.. 

மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. 

உனக்கென்ன மேலே நின்றாய்.  ஓ நந்தலாலா 

இவங்க கிட்டே ஒரு செல் அடிச்சு பார்ப்போமா ?
+Geetha Sambasivam +Durai A 
+kg gouthaman +Balu Sriram 
+Madhu Sridharan +Adhi Venkat 
+Ranjani Narayanan 
+In Ar
என்ன சொல்வாங்க அப்படின்னு கேட்போமா ?
*************************************************************************88

Knowledge cleanses our mind and brings peace. 

Be happy, and 

don't keep finding faults in others.

 - Sri Sri Ravi Shankar

புதன், 30 ஏப்ரல், 2014

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!

செல்லப்பா சார் தன்னுடைய வலையிலே  இந்தக் காலத்து கலாச்சாரத்தைப் பற்றி எழுதி  இருந்தார்.கொஞ்சம் என்ன ரொம்பவே  வருத்தப்பட்டு தான் எழுதி இருந்தாப்போல...   
+Chellappa Yagyaswamy  அதுக்கு நிறைய பின்னூட்டங்கள். அது படித்துக்கொண்டு வரும்போது ஒரு சத்தம் கேட்டது.  செல்லைப்  பார்த்தேன்.ஒரு மெசேஜ் வந்திருக்கு.  யார் என்று பார்த்தேன். அட. செல்லப்பா  சார் தான் போன் செய்து  இருக்கிறார்.

திடீர் என்று நினைவு வந்து, வீட்டின் டி.வி. ரூம் நோக்கி கத்தினேன். அங்கே தான் என்  வீட்டுக்காரி, தினசரி மாலை 5.59 முதல் இரவு 11.01 வரை சங்கமம். 

மீனாட்சி, நம்ம ப்ரண்ட் செல்லப்பா சார் புத்தகம் முழுக்க படிச்சுட்டயா ? அவர் வர ஞாயிறு வந்தாலும்  வருவார்.

கொச்சடயான் படத்துக்கு நமக்கும் சேர்த்து பர்ஸ்ட் ஷோ ரிசர்வ் பண்ண உங்க ப்ரண்ட் ஆவிக்கு  செல் .போடுங்க..

மணப்பெண்ணின் சத்தியம் பாட்டு தியேட்டர்லே கேட்கணும். சாரங்க ராகம் அதுலே வருது சூப்பர். 

அது  இருக்கட்டும். நான் "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " படிச்சு முடிச்சாச்சா அப்படின்னு கேட்டேன்.

நேத்திக்கே வெண்டை காய் சாம்பார் பண்ணியாச்சே. என்றாள்.

என்னது சாம்பார் ஆ ? அந்தக் கால ஜெமினி கணேசன் சமாசரமாச்சே

என்று வியந்தபோது, 

ஜூனியர் கிச்சன் போட்டி லே இன்னிக்கு போண்டா ... என்றாள் இவள்.

ஏண்டா இவகிட்ட பேசுறோம் என்று இருந்தது.  ஒரு வேளை நாம் பேசுவது கேட்கவில்லை போல்  இருக்கிறது. இ. என். தி. ப்ராப்ளமா இருக்குமோ, இருக்காது.  டி.வி.லே கான்சென்ட்ரேசன் போல இருக்கு. 
இப்ப கருத்தம்மாவிலே ரொம்ப முக்கியமான சீன் .   இது முடிஞ்சு,  பின்னே,தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை, சரவணன் மீனாச்சி, சூப்பர் ஜூனியர் சிங்கர் என்று காலம் தாழ்த்தினால், எனக்கு என்ன கேட்கனும் அப்படின்னே மறந்து போயிடும் .

மீனாட்சி !! அதெல்லாம்  கேட்கல்ல. தாத்தா தோட்டத்து... என்று ஆரம்பித்தேன்.

உங்க பெங்களூர் பி.ஹெச். இ. எல். தாத்தா கதை இன்னமும் முடிக்கல்ல..

இவ ஒரு வேளை ஜி.  எம்.பி. சார் கொடுத்துட்டு போன புத்தகத்தைப் பத்தி பேசுகிறாளோ  என்று தோன்றியது.

அந்த புத்தகம் படிச்சாச்சா ஒன்னு இரண்டு கதையாச்சும் ?

வடிவேலு  காபி வித் டி. டி. சூப்பர் என்றாள்.

யாரு டி. டி. ? நம்ம திண்டுக்கல் தனபாலன் சாரா ?
+Dindigul Dhanabalan
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ....

என்ன இது ? நம்ம கேட்டதும் இவ பதில் கொடுப்பதும் ஒன்னுக்கொன்னு சரியில்லையே. ? என்ன கோபமோ தெரியல்லையே. இன்னிக்கு நான் முழிச்ச வேளையே சரியிலையே !!

என்று நினைத்துக்கொண்டு

இருந்தாலும் இவளை, கொஞ்சம் விட்டுத் தான் புடிக்கணும் .
துணிவே துணை. என்று மனதில் சபதம் இட்டுக்கொண்டு,


யார் ஜட்ஜ் மகாஜன் சாரா ?

அந்த மைலாபூர் மாமி பழைய நினைவுகள் எல்லாம் எழுதிட்டு வராங்க..நீங்க படிக்கலையா? அந்த குழ்ந்தை லாப் டாப் லே என்ன ஒரு அழகு !! என்று முறுவலித்தாள்
+revathi narasimhan
நான் விடவில்லை.

யாரு லஸ் சர்ச் ரோடிலே இருக்காங்களே அவங்களா ?

மாந்துரையான் பத்தி வை.கோ. மாமா சொன்னது தான்  சரி.
+Gopalakrishnan Vai.
என்னவோ இவளுக்கு ஆயிடுத்து.   பூச்சி கடி, தேளு கடி, பாம்பு கடிக்கெல்லாம் ஷஷ்டியை நோக்கி சரவண பவனார் சொல்லும் வானபட்டரை மாரியம்மன் ஆத்தா அர்ச்சகர் ஸ்ரீ வித்யா உபாசகர்,  கிட்ட சொல்லி,
இதுக்கெல்லாம் ஒரு சொலுஷன் இருக்கான்னு கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டபோது 
சங்கரா டி.வி. லே ஒரு அட்வர்டைஸ்மென்ட் வருது. 

ஆண்டவா, கொஞ்சம் சீக்கிரமா வா எனக்கு உசிரே போகுது என்று சகல தேவதா தேவிகளையும் பாராயணம் செய்து கொண்டு, அதே சமயம், 
மனுஷ்ய ப்ரயத்னத்தையும் விட்டு விடக்கூடாது என்ற வசனம் இருக்கிறபடியால்,

இங்கே பாரு, மீனாச்சி.. எனக்கு பொறுமை அவுட் என்று இரைந்தேன்.

என்ன அவுட் ? .. என்று பதில்  வந்தது.
அதைத் தொடர்ந்து,
அடடே .. நானும்  அவுட். out என்றாள்.

என்ன அவுட் ?  அதான் வர்டிகலா இருக்கியே. அப்பறம் என்ன அவுட் ?
என்று     
 னேன்.


அத சொல்லலே.
விஜய் டி.வி. லே. அது இது எது நடக்குதுல்லே..

 ஆமாம்.

அதுலே மாத்தி யோசி அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.

ஆமாம். என்ன  கேட்டாலும்,அதற்கு மாறாக வேற எதுனாச்சும் சொல்லணும்.
அதத்தானே  சொல்றே.

ஆமாம். நான் ஒரு நாளைக்கு போய் கலந்துக்கலாம் அப்படின்னு நினைச்சேன்.
அது தான் இப்ப ஒரு ரிகர்சல் பண்ணிப் பார்த்தேன்.
ஆனா தோற்று போய் விட்டேனே !!

அப்ப நான் ஜெயிச்சுட்டேனா..?

அடையார் ஆனந்த பவனில் அல்வா சாப்பிட்டது மாதிரி ஒரு பீலிங் 

இந்த சந்தோசம் எத்தனை தடவை கிடைக்கும் !!

எனக்குக் கிடைத்தது போல் எல்லோருக்கும் 
அட்சய திருதீயை நல்ல நாளன்று, தங்கம் வேண்டாம், வைரம் வேண்டாம். நவரத்னங்களும் வேண்டாம். 

அட் லீஸ்ட் லைப் லே ஒரு நாளாச்சும் இந்த கணவன் மார்கள் ஜெயிப்பதற்கு அருள் செய்யம்மா 
என்று கன்னத்திலே போட்டுக்கொண்டு 

தஞ்சாவூர் பிரண்டு துரை செல்வராஜ் அவர்கள் வலையிலே நான் பார்க்கும் 

+துரை செல்வராஜூ

சந்திர கலாதரி, சந்திர ஜடாக்ஷரி, மஹாலக்ஷ்மி, தேவி  எல்லார் முன்னால் மானசீகமா உட்கார்ந்து கொண்டு  பாட துவங்கினேன். 

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!