செவ்வாய், 30 செப்டம்பர், 2014

யாதுமாகி நின்றாய் எனக்கு கண்ணா

இளமதி அவர்கள் கண்ணன் கவிதை ஒன்றை மழை எனப் பொழிந்து இருக்கிரார்கள் அவர்கள் வலையிலே.
நவராத்திரி தினமான இன்று, இக்கவிதையை, நான்கு அல்லது ஐந்து மகளிர்
கொலு முன்னே நடனமாட அழகாக இருக்கும்.

அந்த காட்சியை கற்பனையில் கண்டு ரசித்தேன்.

இளமதி அவர்களின் நன்பர்கள் யாவரும் கானத்தை கண்ணனுடன் இணைந்து கேட்டிடவேண்டும். கண்ணன் புகழ் பாடிட வேண்டும். +ilayanila ilamathy

ilayanila16.blogspot.com

யாதும் ஆகி நின்றாய்.

 peacock kolam.
மயில் கோலம் ஒரு நிமிடத்தில் போடுவது மயில் ஆடுவது போல பிரமிக்கச் செய்கிறது.
திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பதிவில் 
பாரதியின் பாடல்கள்
இலக்குமி, காளி, வாணி மூன்று தேவியரின் பாடல்களும் இடப்பட்டு உள்ளன.
மயிலை சாந்தநாயகி                                                              நன்றி. 

படம் திருமதி பக்கங்கள். வலை

அந்த முதல் இரண்டு பாடல்களை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை.

என்ன செய்வது ? என யோசித்தேன். சரி, நானே பாடிவிடுகிறேன், யாரும் கேட்காவிட்டாலும்  பரவாயில்லை.

இதை விட அற்புதமான துதி எங்கே இனி பாடப்போகிறோம் என நினைத்தேன்.


யாதும் ஆகி நின்றாய். எங்கும் நீ நிறைந்தாய்
என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள்
ரேவதி ராகத்தில் பாடுகிறார்கள்.


ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞாயிறு கொலு

ஞாயிறு கொலு
இலக்குமி வழிபாடு.
எங்களுக்கு பாக்யத்தை, வளத்தை வழங்கு, தாயே
என பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த பாடல்.
பிட்ச்ச்பார்க் கோவில் பின்னணியில்
Dr.M.S.Subbulakshmi bhagyadha Lakshmi baramma.

சனி, 27 செப்டம்பர், 2014

தில்லையகத்து க்ரானிகல்ஸ் துளசிதரன் அவர்கள். அவங்களுக்கு ஜே போடுவோம்.


+Thulasidharan thillaiakathu
 
அவங்க பெரிய மனசு வச்சு, என்னையும் அதாவது 73 வயசான இந்த கிழவனையும்  ஒரு பொருட்டா மதிச்சு,

இந்த வலைப்பதிவிலே என்னைப்பத்தி ,
இல்ல,
என் பதிவுகளைப் பத்தி
எழுதியிருக்காக,

என்ன வலைப்பதிவா?

சீனா என அன்புடன் எல்லோரும் கூப்பிடும்,
சிதம்பரம் சாரு ஆசிரியர் ஆ இருக்கும்,
வலைச்சரம். 

அங்கன வாரத்துக்கு ஒரு ஆசிரியர்.

இந்த வாரத்துக்கு தில்லையகத்து க்ரானிகல்ஸ்
துளசிதரன் அவர்கள்.

அவங்களுக்கு ஜே போடுவோம்.

நீவிர் நீடூழி வாழ்க.


துளசிதளம் என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல். அதை இட்டு அதை அவங்களுக்கு டெடிகேட் செய்வோம்.

சனி, 6 செப்டம்பர், 2014

அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேண்டும்



அதுக்கெல்லாம் மச்சம் வேண்டும் டோய் !!

என்று அந்தக் காலத்திலே ஒரு பாட்டில் வந்தது.

கார்த்திக் அப்பறம் இப்ப ஜோடிலே ஜட்ஜ் ஆ வராகளே யார் ?
ஆங்..

ராதா நடிச்ச படம் அப்படின்னு நினைக்கிறேன்.

சின்ன சின்ன விஷயத்திலே கூட , லக் அப்படின்னு ஒன்னு இல்லைன்னா, லைப் அம்பேல் ஆயிடுது.

மத்தவனுக்கெல்லாம் அஞ்சு வருசத்துக்கு ஒரு தரம் ப்ரமோஷன் கிடைக்கும். வேலை என்ன செஞ்சான் என்ன செய்ய முடியாது அப்படின்னு விதண்டா வாதம் பண்ணினான் அப்படின்னு எல்லாம் நான் சொல்லப்போவதுல்லெ.

நான் ரிஷப லக்னம். அதுக்கே உண்டான மாடு மாதிரியான உழைப்பு. நேர நேரத்திற்கு சாப்பாடு கூட கிடைக்காத அளவுக்கு ஒரு ஜாப்.

பேரு என்னவோ பெத்த பேரு. ஆனா பட்ட அவஸ்தை நான் ஒத்தனுக்குத் தானே தெரியும்.

என்னாடா , கிழவன் இன்னிக்கு முத்தாய்ப்பா எதுவோ சொல்லி கினே போறான் அப்படின்னு நீங்க முனகிரீக இல்லையா...

பாருங்க.. ஒரு பொடி விஷயம் தான். ஒண்ணு இல்ல,இரண்டு சின்ன சின்ன நிகழ்வுகள். போதுமே ..நம்ம லக் எப்படி இருக்குது அப்படின்னு தெரிஞ்சுக்க.. இல்லையா.

நீங்களே சொல்லுங்க. ஜீவி சாரே.

பக்கத்துலே ஒரு நாட்டிய நிகழ்ச்சி. சின்ன சின்ன பொண்ணு  குழந்தைகள் அப் கோர்ஸ் டான்ஸ் கிருஷ்ண லீலா டான்ஸ் ப்ரோக்ராம்.

சரி, அந்தக் குழந்தைகளுக்கு, என்ன கிப்ட் தரலாம் என்று யோசித்து பார்த்தப்போ,

ஒரு பொன்னாடை மாதிரி ஒரு துப்பட்டா வாங்கி போர்த்தலாமா என்று நினைத்து கடைக்கு, அருகில் இருக்கும் ஒரு ரெடி மேட கடைக்கு சென்றேன். மிகவும் தெரிந்த கடை.

காட்டன் துப்பட்டா , சால்வை மாதிரி இருந்தா நல்லா இருக்கும்,
என்று நான் சொன்னவுடன் அவர்கள்  பெண்குழந்தைகள்  ஜடை பின்னல் மாதிரி மடித்து வைத்திருக்கும் வித விதமான கலர் புல் ரெடி மேட் கார்மெண்ட் நான்கை எடுத்துத்தர,

நானும் ,

மகிழ்ச்சியுடன் அந்த விழா நடக்கும் இடத்துக்கு  சென்று, நிகழ்ச்சி முடிந்ததும்
அந்தக் குழந்தைகளுக்கு
அந்த வாங்கி வந்த பொன்னாடையை போர்த்த ,
முதல் உருப்படியை பிரித்தேன்.

என்ன அதிர்ச்சி !!
நடுவே நடுவே பொத்தல் பொத்தலகா நூல் விட்டு போய் இருக்கிறது.

என்ன செய்வது !! இது போலவே மிச்ச மூன்றும் இருக்குமோ ??

என்ன டாமேஜ் ஆன துணியை, நம் தலை மேல் கட்டி விட்டார்களே என்று ஒரு பக்கம்  ஆத்திரம்.

வாங்கி வந்த பொன்னாடையை போர்த்த முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம்.

அந்த குழந்தைகளுக்கு ஒன்றுமே தர இயலாமல் திரும்புகிறோமே என்ற ஏக்கம் .

திரும்பவும் கடைக்குச் சென்றால், இதெல்லாம் சகஜம் தான் சார், நாங்கள் என்ன தெரிந்தா டாமேஜ் ஆனா சால்வையை தருகிறோம் என்று சொல்லி,
நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது வேறு ஏதேனும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். கடைக்காரர்.

 என்னடா இது. !!
ஒரு பொடி விஷயத்தில் கூட நம்ம லக் என்னமா நம்மை சோதிக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

நேற்று, எனது மிகவும் நெருங்கிய நண்பரின் மகள் திருமண விழா.
நண்பர் பெரும் பதவியில் இருந்துஒய்வு பெற்றவர். அவருடைய மற்ற சிறப்பு அவர் ஒரு வேத வித்து என்று சொல்லவேண்டும். ஆன்மீகத்தில், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தெளிவாக, ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும், அதையும், கோர்வையாக, கேட்பவர் ரசிக்கும்படியாக எடுத்துரைக்கும் திறன் பெற்றவர்.

என்னைவிட சற்று இளையவர். என் மீதும் அவருக்கு மதிப்பு உண்டு. பத்திரிக்கை கொடுக்கத்துவங்கிய உடனேயே எனக்குத்தான் முதல் பத்திரிக்கை கொடுத்தார் என்று கூட நினைத்தேன்.

கடந்த பத்து வருடங்களில் நான் புதிதென் ஈட்டிய நட்புகளில் விலை மதிக்க முடியாத நட்பு அது ஒன்றாகும்.

வரவேற்பு முதல் நாள் மாலை இருந்தது. எனது காலனியில் இருந்து வெகு நண்பர்கள் அந்த நிகழ்ச்சிக்குத் தான் சென்று இருப்பார்கள் போலும். நானோ, முகூர்த்த காலை அன்று சென்றால், நமது பாரம்பரிய சாஸ்த்ரீய சம்பிரதாயங்கள் இன்னொரு முறை பார்த்து ரசிக்கலாம், அதை விட முக்கியம், சாப்பாடு கன்வென்ஷனல், தஞ்சாவூர் கல்யாண சாப்பாடு ஒன்று வெட்டு வெட்டலாம் என்று நப்பாசை வேற.

ஒன்பது மணிக்குச் சென்றாலும், ப்ரேக் பாஸ்ட் வேண்டாம். முஹூர்த்தம் முடிந்தபின்,  லஞ்ச் சாப்பிடலாம் என்று மாலை மாற்றுதல், ஊஞ்சல் , சீதா கல்யாணம், கௌரி கல்யாணம் பாட்டுக்கள்,

இதை எல்லாம் பார்த்து விட்டு மண மேடைக்கு பக்கத்திலே போய் அமர்ந்தேன்.

நான் எதிர்பார்த்தபடியே வேத கோஷ மந்திரங்கள் அடுத்த ஒரு மணி நேரம்.
சம்பிரதாயமாக,

பெண்ணின் தந்தை மடியில் மணப்பெண்ணை உட்கார வைத்து, மணமகன்
தாலி கட்ட, பெண்ணின் நாத்தனார் ஒருவர் இன்னொரு முடிச்சு போட, வந்திருந்தோர் யாவரும், அட்சதை, புஷ்பங்கள்
மழை போல் பொழிந்து மண மக்களை ஆசிர்வதிக்க,

எல்லாம் சுபமாக முடிந்தது.

நண்பர்கள் , உறவினர்கள், வரிசையாக, மேடையை நோக்கி சென்று மனமக்களை ஆசிர்வதித்து தாம் கொண்டு வந்திருந்த அன்பளிப்பை கொடுத்து விட்டு நகர,

நானும் அவ்வாறே செய்து விட்டு,
அவசர அவசரமாக,
யாரும் அழைக்காமலேயே
உணவு வழங்கும் இடத்தை நோக்கி விரைந்தேன்.

சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, வீடு திரும்ப வேண்டும். கிழவி உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு நான் போய் தான் ஏதாவது சமைத்து தரவேண்டும். அவளும் உண்ட பின் தான் அவளது மருந்துகள் சாப்பிடவேண்டும்.

அங்கே போனால் ஒரு சிறிய அதிர்ச்சி. என்ன ஒருவரையுமே காணோம் !!!

அந்த பெரிய லஞ்ச் ஹால் காலியாக இருந்தது.  இன்னும் இலைகள் போட வில்லை.

ஓஹோ. நான் தான் முதல் பந்தியில் முதல் ஆள் போல் இருக்கிறது.
என நினைத்துக்கொண்டே

பந்தியின் முதல் இடத்தில் உட்கார்ந்தேன்.

சார். லஞ்ச் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். நீங்கள், ப்ரேக் பாஸ்ட் சாப்பிடுங்கள் என்று அங்கு ஒரு பெண்மணி, மிகவும் தன்மையுடன், என்னை உபசரித்தாள்.  Caterers employ professional receptionists even in conventional marriages nowadays.

என்ன இது !!
ஒரு சின்ன விஷயத்துக்கு கூட, எனக்கு  லக் இல்லயே !
கல்யாண சாப்பாட்டு சாப்பிட வந்தவனுக்கு, ஜஸ்ட்
ஒரு இட்லி, ஒரு வடையா !!

எல்லாவற்றிக்கும் லக் வேண்டும் சார் !! மனசுக்குள்ளே வெடி வெடித்தது.

இன்னும் ஒரு மணி என்ன, அரை மணி நேரம் கூட என்னால் நிற்க முடியாத சூழ் நிலை.

நான் வீட்டுக்கு சென்று என் மனைவிக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அதை சாப்பிட்ட பின்பு தான் அவள் மருந்து சாப்பிட முடியும்.

கல்யாண சாப்பாடு முக்கியம் தான். ஆனால், அதை விட எனது மனைவியின் உடல் நலம்.

அவளை நல்லபடியாக நான் கவனித்துக்கொள்வேன் என்று அவள் நினைப்பதில் எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்ற நினைப்பு மேலோங்கி நின்றது.

நான் என்ன செய்யட்டும். சாப்பாடு லேட் ஆகிவிட்டது என்று சொல்லிவிட மனம் இடம் தராது.

அழாத குறையாக வீடு திரும்பினேன்.

என்ன தான் மனுஷன் கில்லாடியா இருந்தாலும், லக் இல்லை என்றால் ஒன்றும் கிடைக்காது.

********************************************************************************************************************************************************************************************************************************************************************************

உனக்கு ஒண்ணு கிடைக்கணும் அப்படின்னா கண்டிப்பா கிடைக்கும்.
இல்லேன்னா, நீ அழுது புரண்டாலும், கிடைக்காது.

உள்ளுக்குல்லேந்து எதோ ஒன்று சத்தமா என் காதுக்கு கேட்கிறது. இந்த இரண்டு சின்ன நிகழ்வு தான் அப்படின்னாலும் ஒன்று தெரிகிறது இல்லையா?

என்ன?


நம்ம கொடுக்கறதா இருந்தாலும் சரி, கொள்வதாக இருந்தாலும் சரி, அது சின்னதோ பெரிசோ,  அவன் சித்தம் இருந்தால் தான் செயல் ஆகும்.

நீ கொடுக்கறது அப்படின்னு ஒன்னும் இல்ல.
நீ கொள்வது என்பதும் ஒன்றும் இல்ல.


இன்னொன்று...

நமக்கு எது எது கிடைச்சிருக்கோ அத வச்சுண்டு திருப்தி அடைஞ்சுண்டு போடா சூரி,

இல்லாததை நோக்கி புலம்பிண்டு இருக்கிறதை விட,
இருக்கறதை ரசித்து அனுபவி.
அதாண்டா லைப்.

***********************************************************************8*




There is a law, and there is orderliness in creation due to a power. There is some power and because of its presence there is orderliness, and that power you call God, you call brahman, you call energy. You can call it anything. - Sri Sri Ravi Shankar