வியாழன், 10 டிசம்பர், 2015

நடந்தது, நடப்பது, நடக்கப்போவது





நீரஜ தள நயனா ஹரே கிருஷ்ணா !!

என்று சத்த்தமாக கத்தினேன்.  தூக்கத்திலும் இந்த மனுஷன் நயன்தாரா பத்திலே நினைச்சுட்டு இருக்காரு என்று வூட்டுக்கிழவி முனமுனக்கும் நேரத்தில்,

தூக்கத்தில் எதற்காக கத்துகிறாய் ? அதான் பி.எஸ். என். எல். பிராட் பாண்ட் கனெக்சன் தந்து விட்டேனே !!  லாண்ட் லைனும் இன்னும் இரண்டு நாளில் வரும் பொறு.
என்றார் கிருஷ்ண பகவான்.

 பகவானே ! சிங்கார சென்னை பிச்சைக்கார சென்னையாக மாறி விட்டதே !!  நாலு மாடி கட்டட  அபார்ட்மெண்ட் லே இருந்தவங்க  எல்லாம் இன்னிக்கு  நல்ல குடி நீருக்கு தவிப்பதைப் பார்க்கவில்லையா ?



 அப்படி என்ன தலை முழுகிப்போய் விட்டது என்று கத்துகிறாய் !
இங்கு பார்.
ஆரவாரம் ஏதுமில்லாமல் பணி புரியும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி இங்கே.    ( கிளிக்கவும் )
நல்லவர்கள் நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் . அவர்கள் செய்யும் உதவியைப் பார்.  (கிளிக்கவும் )
சேவாலய அமைப்பின் கருணை உள்ளம். கிராமம் கிராமமாக சென்று உதவி. 

அது சரி. ஆனால், இப்படி என்ன குற்றம் இழைத்து விட்டோம் நாங்கள் !! சென்னையை வெள்ளக்காடாய் ஆக்கிவிட்டாய் ?

என்ன குற்றம் என்றா கேட்கிறாய் ? (சொடுக்கவும்)
அழ அழச் சொல்லுவார் தமர் என்ற குறள் உமக்குத் தெரியாதோ ?

அல்லது 

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

என்பது எனக்கு மட்டும் தான் இன்று நினைவு இருக்கிறதோ ?

கண்ணனின் குரலில் ஆத்திரம் தெரிந்தது. சமாளித்துக்கொண்டு, .

புரியவில்லை.கண்ணா. !!!
என்றேன்.
வருமுன் காவாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன்றாக் கெடும்

 என்பதாவது ....?????

சார் யுவர் ஹைனெஸ் லார்டு கிருஷ்ணா !  இதெல்லாம் அப்பறம் பதில் சொல்றேன்.
எங்களுக்கு நல்ல குடி நீர் வேண்டும். 
இன்று குடி இருக்கிறது. நீர் இல்லையே !!

பொறு.

தூங்குக  தூங்கிற்  செயற்பால 
தூங்கற்க தூங்காது செய்யும் வினை

என்பதாவது நினைவு இருக்கிறதா ?

பகவானே ! எனக்கு இதெல்லாம் நினைவு இருக்கிறது இல்லை, இதெல்லாம் இப்ப தேவை இல்லை. எங்களுக்கு குடி நீரை சுத்தப்படுத்த க்ளோரின் டாப்லெட் வேண்டும். லெப்டோ வியாதியிலிருந்து முன் எச்சரிக்கையாக இருக்க டாக்சிசைக்ளின் மாத்திரைகள் வேண்டும். அதை தராமல் இதைப் படித்தாயா, இது நினைவு இருக்கிறதா என்றெல்லாம் சொல்வது நியாயமா !!

அதெல்லாம் உனக்குக் கிடைக்கும். ஆனால் உனக்குத் தெரிந்திருக்கும்.

செய்த வினை ஒன்றிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
மீண்டு வருமோ இருநிதியும்...

இன்னாயா நானும் கேட்டுகினே இருக்கேன். நீ அது தெரியுமா இது தெரியுமா ன்னு கேட்டுகினே இருக்கே !  அதெல்லாம் தெரியும். எனக்கு இன்னிக்கு இன்னா வேணும் என்பதை இப்போதைக்கு நான் உனக்குச் சொல்லவும் வேண்டுமோ !!


நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு அதனாலே தவிக்குதே

என்ன கண்ணா பாடுகிறாய் !!

ஆமாம். உன்னிடம் இருக்கும்போதே இருப்பதை கொடு கொடு கொடு என்று பல முறை சொல்லியும் நீ கொடுக்காமல் இருந்து விட்டாய்.  இப்போது எதற்காக தவித்தாயோ அது அதிகமாக வந்துவிட்டதே என்று அவஸ்தை படுகிறாய்.   இருக்கும்போதே கொடு . அதிகமாக சேமிக்காதே.

புரியவில்லை கண்ணா.

இன்னுமா நீ இன்றைய ஹிந்து பேப்பர் படிக்கவில்லை.?
முதல் பக்கத்திலேயே இருக்கிறது. எ ராங் கால் தட் சாங்க் த சிடி என்று.

எனக்கு என்னவோ நடந்தது எல்லாம் டோடல் மிஸ் மேனேஜ்மெண்ட் ஆப் வாடர் ரிசோர்சஸ் என்று தான் தோன்றுகிறது.

கண்ணா எனக்கு அதெல்லாம் இப்ப தேவை இல்ல. எனக்கு இந்த தெருக்குப்பைஎல்லாம் திரட்டி கொண்டு போகவேண்டும். அதற்காக லாரிகளை அனுப்பு. அந்த இடமெல்லாம் ப்ளீசிங் பவுடர் போடவேண்டும். தெருக்களில் மருந்து ஹெவியா அடிக்கவேண்டும்.


நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நான் அறிவேன் . என்று சொல்லி கண்ணன் மறைந்து போனார்.



செவ்வாய், 10 நவம்பர், 2015

10,000

  10000  வால்லா வெடி வைக்கப்போறோம்.  


தமிழ் வலைப்பதிவு நண்பர் அனைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்

புஸ்வானம், வெடி எல்லாம் வெடிச்சாச்சு.
இப்ப நாதஸ்வரம், தவில் இசை.


ippa naadhaswaram thavil isai

 தீபாவளி இன்னும் பாக்கியிருக்கு. எல்லோரும் கீதா அம்மா வீட்டிலே பக்ஷணம் ரெடி ஆகி இருக்கு. சாப்பிட வாங்க.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க.

சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க.

 ஆம்.திரு தி. தமிழ் இளங்கோ அவர்களும் திருமதி கீதா , திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அழைக்கின்றனர்.  மா நாட்டில் பங்கு கொள்ள, அறுசுவை யோடு கூடி விருந்து உண்ண, செவிக்குமோர் உணவு அருந்த,
அதெல்லாம் சரிதான்.
ஆனால், 
சுப்பு தாத்தாவின் மனசுலே ஒரு ஐடியா கீது.

பதிவர் மாநாட்டில் புதியதோர் போட்டி. ஐந்து போட்டிகளுடன் சுவை மிகுந்த ஆறாவது போட்டி.வச்சா என்ன ங்கறேன்.
 என்னைபோன்ற சாப்பாட்டு இராமன்களுக்காக. விரைந்து செயல் படுக. உடன் தமது பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
சாப்பிட வாங்க அம்மா கூப்பிட றாங்க. 

புதுகை மா நாட்டுக்கு எல்லோரும் வாருங்க.  
இங்கே சுப்பு தாத்தா பதிவர்  மா நாட்டில் ரசித்து எப்படி சாப்பிடுகிறார் என ஒரு கனவு காட்சி.  ஏங்க !  அம்மா !! இத்தனை போட்டி கீது !! ஒரு போட்டி சாப்பாடு போட்டி வச்சா எம்புட்டு நல்லா இருக்கும் ? இந்த தாத்தாவுக்கும் ஒரு ப்ரைஸ் கிடைக்கும் இல்லையா ?

போட்டி விதிகள். ( அப்படியே இருக்கணும் நு அவசியம் இல்ல. அங்க இங்க சுப்பு தாத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு.)



1. குறைந்த பட்சம் 20 இட்லி சாப்பிடுபவர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு.
2. 20 முதல் 30 சாப்பிடுபவர்களுக்கு ஒரு காபி மேகர் . ப்ரெஸ்டிஜ்.
3. 30 முதல் 40 சாப்பிடுபவர்களுக்கு பிரஷர் குக்கர்.
4. 40 முதல் 50 சாப்பிடுபவர்களுக்கு மைக்ரோ ஓவன்.
5. 50 க்கு மேல், ஒரு தங்க நாணயம் .5 கிராம்.

ஒவ்வொரு பரிசினையும் எந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஸ்பான்சர் செய்யலாம்.  அவர்களது பேனரை மா நாட்டில் அமைக்கலாம்.

 50 இட்லி சாப்பிட்டு விட்டு 1/2 கிலோ சக்கரை பொங்கல் சாப்பிட்டால்
இரண்டு ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.

அதற்கு மேலும் ஐந்து மெது வடைகள் சாப்பிடுபவர்களுக்கு 3 ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.

அதையும் சாப்பிட்டபின் லஞ்ச் எங்கே பொடராங்கோ என்று கேட்பவருக்கு 6 கிராம். தங்க நாணயம்.

சாப்பாடு செலவு அத்தனை செலவும் நான்தான் ஏத்துக்குவேன் என்று
திண்டுக்கல் தனபாலன் அடம் பிடிப்பார். 
சரி என்று சொல்லிவிடுங்கள்.

பதிவர் கவனத்துக்கு:

மொத்தம் 50000 இட்லிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதால், முதலில் பதிவு செய்பவர்களே சாப்பாடு போட்டியில் பங்கு கொள்ள இயலும்.
இந்த விதி எக்காரணம் கொண்டும் தளர்த்தப்படாது.

இட்லிகளின், அதன் சட்னிகளின் சுவை பார்த்துவிட்டு, பிறகு பங்கு எடுப்பேன் என்று சொல்பவர்கள்  அவர்களுக்காகவே

வள்ளுவன் கூறியது

தூங்குக தூங்கிற் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

உடன் பதிவு செய்க.தமிழ் வலைப் பதிவர் மாநாட்டுக்கு. தகவல் மையம் இதோ.www.bloggersmeet2015.blogspot.com

வியாழன், 17 செப்டம்பர், 2015

மூஷிக வாகனன் விக்ன விநாயகன்


திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையிலே 
 மூஷிக வாகனன்  விக்ன விநாயகன்
 ஆறுமுகனின் அண்ணன் 
பிள்ளையார் என அழைத்து,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்

என்று சொல்லி,
அந்த விநாயகனின் நாமங்களை
அற்புதமாக இனிய தமிழில் மொழி பெயர்த்து
இட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு விநாயகன் எல்லா அருளையும் தருவார்.

எனது வலை நண்பர் , என்னை அத்திம்பேர் என அழைக்கும்
திருமதி துளசி கோபால் அவர்கள் வலையில்
கோபால் அவர்களே செய்த பிள்ளையாருக்கு
எல்லா கொழக்கட்டை களும் அற்புதமாக செய்து
நைவேத்யம் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

இங்கிருந்தே வாசனை தூக்குகிறது.

அவருக்கும் எங்களது நன்றி.


புதன், 9 செப்டம்பர், 2015

ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

திருவரங்கப் பெருமாளை லைப் லே இன்னும் ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும்.   ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி என்று உயிர் உடலைக் களையுமுன்னே அந்த அரங்கனைக் காண வேண்டும் என மனதிலே கனவு கண்டு கொண்டே இருந்த  சுப்பு தாத்தாவுக்கு

 ஒரு நாள் அந்த அனுபவம் கிடைத்தது இன்னமும் நம்ப முடியவில்லை.

அன்று காலையில் இருந்தே,

ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
என


 பாடலை முணு முணு த்துக்கொண்டே கணினியைத் திறந்தவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி.

அந்த பதிவு அக்கார வடிசல் ஆக இருந்தது.

தாத்தாவின் ஸ்ரீரங்கத்து நண்பர் , ஸ்ரீரங்க பிராகாரச் சிறப்புகளை ப்ரவசனம் செய்துகோண்டு இருந்தார்.

ஆண்டாள் சன்னதி பற்றி அவர் தரும் விளக்கம் அற்புதம்.

+Rishaban Srinivasan 
 அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும் சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம் சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும்.  ஆச்சர்யம் இல்லையா.. ! இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..




 அதைப் படித்த தாத்தாவோஅந்த வர்ணனையிலேயே பிரமித்துப் போய் நிற்கிறார். 

ஆஹா, நம்ம எப்ப பார்க்கிறது அந்த ஆண்டாள் பார்த்த பார்வை யை ?

என்னதான் இருந்தாலும் நம்ம மனுஷ்ய ஜன்மம் தானே. 
அதுனாலே, அந்த பார்வையை முந்திண்டு, என்னிக்கோ பார்த்த,

அந்த பார்வை ஒன்றே போதுமே... அந்த பாடல் தான் மனசுக்கு வர்றது. 
இல்லேன்னா, என்ன பார்வை ...அந்த ஊட்டி வரை உறவு பாடல்.

இப்ப எல்லாம் குழந்தைங்க நம்ம காலம் மாதிரி மரத்தை சுத்தி சுத்தி பாடரதில்லே.ரூட்டே மாறிடுத்து.

அடே !! எப்படி எல்லாம் மனசு எங்கே எங்கே போயிடுது?
நாராயண..நாராயண...

இந்த இகலோக பார்வை எல்லாம் பார்த்தது போதும். 
வேண்டியது பார்த்தாச்சு.
நம்ம பார்க்கக் கொடுத்துவைத்து இருக்கவேண்டியது 
அந்த திவ்ய தரிசனம் பார்வை ,


அது நமக்கு கிட்டவேண்டும் என்று நினைத்து,
 ஒரு த்ருட சங்கல்பம் பண்ணின பிறகு, திரும்பவும்,
அ ந்த ஆண்டாளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
அந்த ஆண்டாள் கண்ட ரங்கனை தரிசிக்க வேண்டும் வேண்டும் என மனசு 
துன்புறுத்த,
.

நான் , "தயாரா இருக்கேன். ஆனா அந்த அந்த அரங்கனே வந்து எனை
அழைத்துச் செல்வான் என
அமைதியாக காத்து இருக்கின்றேன்..  " என்று பின்னூட்டம் இட,

". வாங்க ..நான் கூட்டிக்கிட்டு போறேன்." என எனது நண்பரும் பதிலளிக்க,

சட்னு, சகதர்மிணி கிட்ட இருக்கிற திசைலே திரும்பி,
அடியே !! ......."ஒரு வார்த்தை   '"  என்று இழுத்தேன்.

"அதான் நானும் பார்த்துகிட்டு இருக்கேன். ஒரு வார்த்தை, ஒரு லக்ஷம்" என்னமா, இந்த சின்னஞ்சிறு சிறிசுகள் டக் டக் அப்படின்னு சொல்லுது ! என்றாள்.

இவள் விஜய் டி.வி லே முழுகி இருக்கும்போது எனக்கு மோட்சம் கண்டிப்பா கிடையாது. என்று நினைத்து,

ஒரு கடுதாசி லே " நான் ஸ்ரீரங்கம் அவசரமா போறேன். இரண்டு நாளைக்குள்ளே பெருமாளைப் பார்த்துட்டு வந்துடறேன்" எழுதிவச்சுட்டு,
அதையும் அவள் முன்னாடி இருக்கிற மேஜை லே வச்சுட்டு, கிளம்பி இருப்பேன்.
+Anuradha Prem
நன்றி மேடம்.

 அதையும் ஒரக்கண்ணாலே பார்த்த அவள் அதை
எடுத்தாள்,கவுத்தாள் என்ற மூடிலே,

"என்ன 2 நாள், உங்க பிரண்ட்ஸ் ஸ்ரீரங்கம் எல்லோரையும் பார்த்துட்டே 2 மாசம் கழிச்சே வாங்க..அதுக்குள்ளே சூப்பர் சிங்கர் 5 லே யார் பைனலிச்ட் ?  பரீதா தான் அப்படின்னு தெரிஞ்சுடும். " என்றாள். அவளுக்கு அவள் கவலை.

வாசலைத் தாண்டி இருக்கமாட்டேன்.
"செல் ஐ எடுத்து வச்சு இருக்கீகளா ?" சத்தமா சவுண்ட் வருது.
ம்....ம்....சொல்லிக்கொண்டே

அப்பாடி, என்று பெரு மூச்சுடன் கோயம்பேடுக்கு விரைந்தேன்.

ரதி மீனா ஆம்னி ஒன்று எனக்காகவே காத்து இருந்தது போல, நான் ஏறி உட்கார்ந்ததுமே புறப்பட்டு விட்டது.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் லேந்து ஸ்ரீரங்கம் போகும் ரூட்.

பஸ் அதன் வேகத்தில் தானே போகும்.
 மனசு மட்டும், வாயு வேகத்திலே போகிறது. இல்ல பாயறது.


அடுத்த நிமிசமே ரங்கனின் பாதம் அடைந்து சரணாகதி என்று விழுகிறது. 

அதுலேயே லயிச்சு போன நான்..........


கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தா ப்ரவர்த்ததே ..யாரு பாடறது !! எம். எஸ். அம்மா ..!!!
ஆமா..
அது பாடி முடிஞ்சவுடனேயே.. நித்யஸ்ரீ அவங்க, எது நித்யமோ  அத பாடராக.




ஸ்ரீமன் நாராயண....ஸ்ரீமன் நாராயண ...பௌலி ராகம். சுகம். சுகம்.

ஆஹா !!  கேட்டுக்கொண்டே இருக்கும்போது,  ரங்கன்  கண் முன்னே பிரசன்னம்.

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
 அடிவட்ட தாலளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாய மூடறுத் தண்டம் போல் நீண்டதே
மாகாய மாய்நின்ற மாற்கு.
ரங்கா. ரங்கா.  யார் கத்துறது அப்படின்னு பார்த்தா, அந்த கிளி அடடா!! அடா அடா !1 அந்த கிளிக்கு பாருங்க என்ன பாக்கியம் ? யாருக்குமே கிடைக்காதது.
லைப் முழுக்கவே ரங்கன் பெயரைச் சொல்ல, சொல்லிக்கொண்டே இருக்க, கொடுத்து வைத்து இருக்கவேண்டும் இல்லையா..

இதோ !!ரங்கன் கோவிலை அடைந்துவிட்டேன். ராஜ கோபுரம் கண் முன்னாடி!!. என்ன கம்பீரம் !!

உள்ளே நுழைய பார்க்கும்போது, முதுகை யாரோ தட்டுகிறார்கள்.

என்ன என்று பார்க்கிறேன். அங்கரக்ஷகன்  த்வார பாலகன்  மாதிரி இருக்கும் ஒருவர் என்னிடம் செக்யூரிடி டோர் வழியாகத்தான் உள்ளே போகணும் அப்படின்னு ஒரு குச்சிய வச்சு திசை சொல்றார்.

அப்படியே !!என்று சொல்லி , உள்ளே ஒரு நிலைக் கதவு மாதிரி ஒன்று அதன் உள்ளுக்கு போகும்போது, இடுப்பு பெல்ட் பீப், பீப் என்கிறது.  என்னை காவலர் பார்க்க, சார் அது இடுப்பு பெல்ட். என்றேன்.

நல்லது. உள்ளே போங்க, என்ன அது மூட்டை. ? சோத்து மூட்டையா ??அந்த ஹாண்ட் பாக் திறந்து காண்பிங்க..என்கிறார்.

நான் ஜிப் லே கை வைக்குமுன்னே அவரே திறக்கிறார். என்ன இது ? என்று 2 போட்லங்களை கேட்கிறார். அதையும் திறந்து பார்க்க, ஒன்றில் 4 இட்லி, எண்ணை மிளகாய் பொடி தடவி, இன்னொன்று தயிர் சாதம்.

இதெல்லாம் எதுக்கு என்று அவர் கேட்பார் என்று நினைத்தேன். கேட்கவில்லை.
அதற்குள் இன்னொரு சின்ன வாசல் .ஒரு பெரிய கேட்டுக்குள்ளே ஒரு சின்ன வாசல், ஒரு பூட்டு.
என்ன இது ? புரியல்லையே..
அந்த பூட்டு பக்கத்துலே ஒரு சின்ன கீ போர்டு. நம்ம வழக்கமா பார்க்கிற ஏ . டி. எம். மாதிரி இருக்குது.

பக்கத்தில் நிற்கும் ஒரு காவலர், உள்ளே போய் ,
பாஸ் வாங்கிக்கங்க..
என்கிறார்.
அந்த கருவியை பார்க்கிறேன். படிக்கிறேன்.
ஆங்கிலம், இந்தி, தமிழ் எல்லாத்துலேயும் வாசகங்கள்
*********************************************************************************


 ஸ்ரீ ரங்கம் கோவில்
  உங்களை அன்புடன் வருக வருக என  வரவேற்கிறது.
தமிழில் அறிய 1 ஐ அழுத்தவும்.
இந்தியில் அறிய 2 ஐ அழுத்தவும்.
ஆங்கிலம் என்றால் 3 ஐ அழுத்தவும்.

***********************************************************************************
நம்ம தான் தமிழ் பதிவர் ஆயிற்றே..! புதுகைக்கு வேற அக்டோபர் 15 போகவேண்டும். ஒன்றை அழுத்தினேன்.

அடுத்த ஸ்க்ரீன்  அதுலேயே வந்தது.

ஸ்ரீ ரங்கம் கோவில் உங்களை வரவேற்கிறது.
நீங்கள் இன்று வரும் 278987 எண் கொண்ட பக்தர் ஆகும்.
உங்கள் வரவுக்கு நன்றி.

இதற்குப்பின் வருபனவற்றை கவனமாகப் படித்து பதில் தரவும்.

நீங்கள் கோவில் ஊழியராக இருப்பின் 1 ஐ அழுத்தவும்.
மற்றவராக இருப்பின் 2 ஐ அழுத்தவும்.

நான் ரங்கனின் ஊழியன் .பிறந்த நாள் முதலே.
ஆனாலும் நான் கோவில் ஊழியன் இல்லை என்று
2 ஐ அழுத்தினேன்.

அடுத்த போர்டு வந்தது.

அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் 1 ஐ அழுத்தவும்.
தர்சனம் மட்டும் செய்ய 2 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.


அர்ச்சனை அரங்கனுக்கு  என்றால் 1 ஐ அழுத்தவும்.
தாயாருக்கு என்றால் 2 ஐ அழுத்தவும்.
மற்ற கடவுளர்க்கு என்றால் 3 ஐ அழுத்தவும்.
எல்லோருக்கும் என்றால் 4 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.

 அடுத்த ஸ்க்ரீன் வருகிறது.

துளசி மாலை, அர்ச்சனை தட்டு பெற 1 ஐ அழுத்தவும்.
மாலை அர்ச்சனையுடன் பிரசாதம் பெற 2 ஐ அழுத்தவும்.

2 ஐ அழுத்தினேன்.

நைவேத்யம் /பிரசாதம் 
சரியான எண்ணை அழுத்தவும்
அக்கார வடிசல் , வெண்பொங்கல், புளியோதரை எல்லாம் 1 ஐ அழுத்தவும்.
சக்கரை பொங்கல் மட்டும் 2 ஐ அழுத்தவும்.
புளியோதரை மட்டும் 3 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.

ராமா !! இன்னும் எத்தனை எத்தனை ஸ்க்ரீன் வரும் என்றே தெரியவில்லை.  திரும்பிப்பார்த்தேன்.எனக்குப் பின்னால் ஒரு பெரிய க்யூ ஒன்று ஆதி சேஷன் போல நீண்டு இருந்தது.


சீக்கிரம் சீக்கிரம் ..என்கிறார் பின்னால் இருந்து ஒருவர்.

டோன்ட் வேஸ்ட் டைம்.  டிலே பண்ணினால் டைம் லாப்சு ஆகிவிடும்.திரும்பவும் ஆரம்பத்திலேந்து வரணும் என்று இன்னொருவர் பயமுறுத்துகிறார்.

போர்டில் கவனத்தைச் செலுத்துகிறேன்.

நீங்கள் கட்டவேண்டிய கட்டணம் ரூபாய் 742.00

நெப்ட் மூலமாக செலுத்த 1 ஐ அழுத்தவும்.
காஷ் ஆக செலுத்த 2 ஐ அழுத்தவும்.

அய்யய்யோ...ராமா ராமா.  டெபிட் கார்டு கொண்டு வந்திருக்கேனா அப்படின்னே தெரியல்லையே..பெட்டிலே இருக்கு. அத எடுக்கணுமே
அதுக்குள்ளே ஸ்க்ரீன் லாப்ஸ் டைம் அப்படின்னு சொல்லிடுமே !!
என்ன பாஸ்வர்ட் அப்படின்னும் சரியா தெரியல்லே.

அதனாலே கேஷ் என்பதற்கான 2 ஐஅழுத்தினேன்.

நன்றி.
உங்களுக்கான பணம் கட்டும் ரசீதினை எடுத்து, தேவஸ்தான அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மேலே செல்க.. 
மாதவன் அருள் பெருகட்டும்

என்ற வாசகம்.

அடுத்த 10 வினாடிகளில் ஒரு சின்ன ஸ்லிப். அந்த மிஷின் கக்கு கி றது .

ஸ்லிப் எண்; 4787 தேதி:செப்டம்பர் 8 2015
தொகை: ரூபாய்: 742.
துளசி மாலை, அர்ச்சனை தட்டு, எல்லா பிரசாதமும்.
தங்கள் பெயர், நக்ஷத்ரம் விவரங்களை அர்ச்சகரிடம் சொல்லவும்.

என்று பிரிண்ட் அடித்து இருந்தது.

ஆஹா. முடிந்து விட்டது. எல்லா ப்ரொசீஜரும்  என்று எண்ணி, அந்த ஸ்லிப்பை எடுத்துக்கொண்டு , பணம் கட்டும் இடத்தை நோக்கி விரைந்தேன்.

அங்கேயும், எனக்கு முன்னாடி ஒரு இருபது பேர் நிற்கிறார்கள் அந்த க்யூவில்.
நம்ம டர்ன் க்காக எப்பவுமே வைட் பண்ணத்தான் வேண்டும்.

எப்ப எப்ப எது எது எப்படி எப்படி கொடுக்கறது அப்படிங்கறது
பெருமாளுக்கு நன்றா தெரியும். என்று நினைத்துக்கொண்டேன்.
\
என்னுடைய டர்ன் வந்தது.

பாண்ட் பையில் கையை விட்டு பர்சை திறந்தேன்.

திடுக்கிட்டேன்.

நோட்டுக்கள் வைக்கும் இடத்தில் ஒரு நோட்டு கூட இல்லை. அஞ்சு ஆயிரம் ரூபா நோட்டு எடுத்து வச்சேனே !! எங்கே போச்சு அத்தனையும் ???????

ராமா ...ராமா

 .


ரொம்ப பெரிசா கத்தி விட்டேன் போல இருக்கிறது.

எல்லோரும் பார்த்த பார்க்கும் பார்வையில் அது புரிகிறது.


நான் எங்கே இருக்கிறேன் ?

நன்றாக பார்க்கிறேன்.

என்ன இது !! பஸ் இப்ப தானே ஸ்ரீரங்கம் கிட்ட வந்து கொண்டு இருக்கு...அதுக்குள்ளே இத்தனை
எல்லாமே
மனசுக்குள்ளேயே நடந்து இருக்கு போல.
இந்தக் கையால் அந்தக் கையை ஒரு தரம் கிள்ளிப் பார்த்தேன்.
ஆம். நாம் பார்த்தது எல்லாம்
கனவு போல இருக்கு

இந்த லைபே ஒரு கனவு போலத்தானே

புயலுக்குப் பின்னே அமைதி  போல மனம் கொஞ்சம் அமைதியானது.

கையில் இருக்கும் பையைத் திறந்து பார்த்தேன். பர்ஸ் இருந்தது.
ஐயாயிரம் ரூபாயும் இருந்தது.
பெருமாள் தாயாருடன் ஒரு படம் பக்கத்துலே.
கண்களிலே ஒற்றிக்கொன்டேன்.



விடியும் நேரம். விடிய வில்லை.

பஸ் அரங்கன் கோவிலுக்குச் செல்லும் வீதியில் நிற்கிறது.
.
எழுந்து பார்க்கிறேன். சைட் சீட் காரர்,
சீக்கிரம் இறங்குங்க.. என்கிறார் ஒருவர்.

ரங்கா ரங்கா. எல்லாமே நீதான்
எல்லாம் அந்த பெருமாள் செய்வது. !!

மனசுக்குள் சொல்லிக்கொண்டே இறங்கினேன்.

சுற்றி முற்றி பார்த்தேன். அந்த ரிஷ ப ன் வந்து இருப்பாரோ ?
அவரை நான் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை.
பஞ்ச கச்சம், திருமண் ...அப்படி எல்லாம் இருக்காது.
ஜீன்ஸ்.பாண்ட். பனியன். நோ. நோ.

நிறைய பேர்கள் அவரவர் உறவினரை கூட்டிக்கொண்டு ஆட்டோ பிடிச்சு போய்க்கொண்டு  இருந்தனர்

இவர் எங்கே இன்னும் காணோமே... என்று மனம் ஒரு நிமிடம் தவித்தது போல் ...

ரங்கன் நம்மை கை விட மாட்டான். ஒருவரும் வரவில்லை என்றாலும் நம்ம
ப்ரண்ட் கிடாம்பி,கிருஷ்ண அய்யங்கார் ராமன் சித்திரை வீதி லே இருக்கிறார். எந்த சித்திரை வீதின்னு தான் சரியா ஞாபகம் இல்லை. விசாரிச்சுகலாம். அவர் வீட்டுக்கு போகலாம். ஆனால் அவர் அங்கே தான் இருக்கிறாரோ இல்லை, 
மனசுலே என்ன என்ன எண்ண ஓட்டங்கள். !!! எல்லாமே 100 மீட்டர் ஈவென்ட் தான்.

யாரோ ஒருவர் ஓட்டமும் நடையுமா வந்துகொண்டு இருந்தார்.
என் கிட்ட வர்றார்.
சார். நீங்க தான் சுப்பு தாத்தாவா ?

ஆஹா...ரிஷபன் வந்துட்டார்.
ஆனா கன்பர்ம் பண்ணிக்கணும் இல்லையா..
காலம் போற போக்கு. யாரையுமே நம்ப முடியலையே..
கையிலே வேற ஐயாயிரம் ரூபா இருக்கு. தொட்டு பார்த்துக்கொண்டேன். 

சார் யார் ? சன்னமா கேட்டேன்.

"நானா..??
என்னை எல்லாரும் ரங்கன் னு கூப்பிடுவா..


நீங்க எப்படி வேணா கூப்பிடலாம்."






சீனிவாசன், கோவிந்தன், கேசவன், மாதவன், மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் , ராமன், கிருஷ்ணன்,
எல்லாமே அவன் தான்.
.ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதசே 
ரகுநாதாய நாதாய சீதாய பதயே நமஹ.






.

சனி, 8 ஆகஸ்ட், 2015

கள்ளுண் ஆமை.

எச்சரிக்கை:
பின் குறிப்பைப் படித்து விட்டுத்தான் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 
 ******************************************************************************

வெய்யில் கடுமை. இருந்தாலும் அங்கு சென்று தான் ஆக வேண்டும் என்ற நிலை.
வீதி கோடியில் ஒரு வங்கி. அரசு வங்கி. அங்கு காலை 9.45 மணிக்கே சென்று அடைந்தேன். இன்னமும் வாசல் கதவு திறக்கப்படவில்லை.
படிக்கட்டுகளில் உட்கார்ந்தேன்.  பத்து நிமிடம் நேரமாயிற்று. இன்னமும் கதவு திறக்கப்படவில்லை.

எதிர் வீடு ஒன்று, என் கவனத்தை இழுத்தது.
பிரும்மாண்டமாக இருந்த அந்த வீட்டில் யாரோ இறந்திருப்பார்போலும். சாவுக்கோலம்.  மரணம் அடைந்தபின் சங்கு ஊதும் சத்தம். தப்பறை கொட்டும் சத்தம். திடீர் திடீர் எனத் துவங்கி ஒரு திகில் ஐ ஏற்படுத்திக்கொண்டும் இருந்தது.

வங்கிப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி போல் தோன்றியது  வியப்பில்லை. வங்கி இன்றைக்கு விடுமுறையாக இருக்குமோ என்ற ஐயமும் எழுந்தது.

இந்த சங்கு ஊதும் சத்தம் அவ்வப்போது பெரிதாக ஒலிக்க இன்று போய் நாளை வரலாமா என்றும் எண்ணினேன்.

அதே சமயம் ஒருவர் தனது யமஹா பைக்கில் இறங்கினார். அவர் என்னைப்போல் ஒரு வாடிக்கையாளர் என நினைத்து,

என்ன சார் ! இன்று லீவா ? என்று கேட்டுவிட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, பக்க வாட்டில் சென்று மறைந்தார். சில வினாடிகளில் அவரே,

வங்கி ஊழியர் உடுப்பில் வந்து அந்த ரோலிங் ஷட்டர்ஸ் ஐ மேல் வாட்டில் காட்ரேஜ் பூட்டுகளை திறந்தபின் தூக்கினார்.

வங்கி கதவு திறந்தது.

அதற்குள், எங்கிருந்தோ என்னைப்போல, ஏழெட்டு பேர் திமு திமு என்று உள் நுழைந்தோம்.

உள்ளே சென்றால் எனக்கு ஒரே ஆச்சரியம். இப்பொழுது தானே கதவுகள் திறந்தன. அதற்குள் உள்ளே எப்படி வங்கி மேனேஜர், மற்ற ஊழியர்கள் எல்லாருமே அவரவர் இடத்தில் இருந்தனர்.

வங்கி மேனேஜர் எனக்கு நண்பர்.
என்னைப்பார்த்து முறுவலித்தார்.
நான் அந்த அறைக்குள் சென்றேன்.
"எப்படி சார் ! நீங்கள் கதவு திறக்காமலே உள்ளே வந்து விட்டீர்கள் ! " என்றேன்.
"அது ஒன்றுமில்லை. பக்க வாட்டில் இன்னொரு கதவு இருக்கிறது. அது வழியாக நாங்கள் முன்னமே வந்து விடுவோம். "
"அப்ப, வங்கிக் கதவைத் திறப்பவர் மட்டும் 10 மணிக்குத் தான் திறப்பாரா ?"

"அது 50 பர செண்ட் தான் சரி. அவரை கொஞ்சம் 10 மணிக்குத் திறந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறோம். முன்னமே திறந்துவிட்டால், துவக்க வேலைகளை செய்ய முடிவதில்லை. அதற்குள் கஸ்டமர்ஸ் கேள்விகள் போட்டு துளைக்க துவங்கி விடுவார்கள் '"

அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. அல்லது இருக்கும்போல் தான் தோன்றியது.

"இருந்தாலும் பாருங்கள். வாசலில் அந்த மரண கொட்டு தாளங்கள், என்னால் ரொம்ப நேரம் கேட்க முடியவில்லை"

"ஓ ! அதைச் சொல்கிறீர்களா !! " எனக்கே மனசு கஷ்டம் ஆகத் தான் இருந்தது அந்த நபர் இறந்துவிட்டார் என்று தெரிந்தபின்னே "

"உங்களுக்கு என்ன மனக்கஷ்டம் ? உங்கள் நண்பரா? சொந்தமா? இல்லை, வங்கி ஏதேனும் கடன் கொடுத்து, இனிமே வருமா வராதா என்ற நிலையா ?"

"எதுவுமே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சி தான் மனதை உறுத்துகிறது. நான் செய்தது தப்போ சரியோ என்றே தெரியவில்லை."

நான் எதற்கு வங்கிக்கு வந்தேன் என்பதை அதற்குள் மறந்து விட்டேன். இங்கே ஒரு நல்ல கதை இருக்கிறதே என்று நினைத்து,
"என்ன அது ! சொல்லுங்கள் சார் ! " என்று மிக ஆர்வத்துடன் கேட்க,

"அந்த இறந்து போனவர் எனக்குத் தெரிந்தவர் தான் . ரொம்ப வயசும் ஆகிவிடவில்லை. ஒரு 60.அல்லது 62 இருக்கலாம் " என்று துவங்கினார்.

ம் ....

"நேற்று இதே நேரம். வந்தார். ஒரு வித்ட்ராயல் ஸ்லிப் எடுத்து ரூபாய் இருநூறு என்று எழுதி தாருங்கள் பணம் என்று கேஷியரிடம் கேட்டார்.

"சரி. அதில் என்ன தவறு ?"

"கேஷியர் பாஸ் புக் தரச் சொல்ல, அவர் பாஸ் புக் இல்லை , நீங்கள் பணம் தாருங்கள், என்று அடம் பிடித்தார். சாதாரணமாக, வித்ட்ராயல் ஸ்லிப் பாஸ் புக்கோடு வந்தால் தான் நாங்கள் பணம் கொடுப்பது வழக்கம். "

"போனால் போகிறது என்று நீங்கள் கொடுத்து இருக்கலாமே !! உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே !"

"அங்கே தான் வந்தது கான்ஷியன்ஸ் ப்ராப்ளம். "

வித்ட்ராயல் ஸ்லிப்பில் என்ன மனச் சாட்சி பிரச்னை ?

"வந்தவர் எனக்குத் தெரிந்தவர் தான். எதிர்த்த விட்டு சொந்தக்காரர். அவர் மட்டும் இல்லை. அவர் மனைவியும் எங்கள் வங்கி கஸ்டமர் தான். "

" பின்னே என்ன?"

"வந்தவர் ரொம்பவே குடித்து இருந்தார். தள்ளாடிக்கொண்டு வந்தார். . மேலும் அவர் தனியா வந்து பணம் கேட்டால், கொடுக்க வேண்டாம் என்று அவரோட...
......வேணாம்..டீடைல்ஸ் வேண்டாம் சார்....." என்றார்.

தொடர்ந்து, குறள் ஒன்றும் சொன்னார்

.கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.


அதன் பொருள் என்ன என்பதை நான் நினைவு படுத்திக் கொள்வதற்கு முன் அவரே ஒரு பிரபல உரைதனை மேற்கோள் காட்டினார்.

 ஒருவன்   தன்னிலை   மறந்து   மயங்கியிருப்பதற்காகப்,   போதைப்
பொருளை   விலை   கொடுத்து    வாங்குதல்   விவரிக்கவே   முடியாத
மூடத்தனமாகும்.


 இந்த உரை யார்  எழுதியது கேட்டேன். அவர் தந்த  லிங்க் இதோ.


நான் அவரை விடவில்லை. என்ன சார் சுவாரஸ்யமான கட்டத்தில்  சரவணன் மீனாச்சி சீரியல் தொடரும் என்று போடுவது போல், நீங்கள் ஒரு கமா போடுகிறீர்கள்..?  தொடர்ந்து சொல்லுங்கள் சார். ப்ளீஸ் கண்டின்யூ..என்றேன்.

"நான் அவருக்குத் தரவும் முடியவில்லை. தராமல் இருக்கவும் முடியவில்லை.
அவரிடம், நான் உங்கள் வீட்டுக்கு எங்கள் ஊழியரை அனுப்பி பாஸ் புக்கை வாங்கி வரச் சொல்கிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூட சொல்லிப்பார்த்தேன்."

அப்படியா ..
 

"அவருக்கு அதைக் கேட்டபின் இன்னும் கோபம். "  "என்ன உங்களிட்டையும்
பணம் தராதே என்று சொல்லிவிட்டாளா ? என்று இறைந்து கொண்டே சென்று விட்டார்.

அடடா !!

"நானும் அதை சற்று நேரத்தில் அதை மறந்து விட்டேன். மாலையில் தான் தெரிந்தது.  அவர் எப்படியோ இன்னமும் பணம் எங்கிருந்தோ பெற்று, டாஸ்மாக சென்று நன்றாகக் குடித்து விட்டு வரும் வழியில் நடு ரோடில், ஒரு கார் அவர் மேல் மோத, ஆன் த ஸ்பாட் இறந்து விட்டாராம். "

பாவம் ..என்றேன்.

மனிதனுக்கு இந்த மாதிரி அன் நேச்சுரல் சாவு வரக்கூடாது சார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?  மனிதன் பிறந்தவிட்டால், எப்படியும் இறக்கத்தான் வேண்டும் என்றாலும், இப்படி ஒரு மரணம் வரவேண்டுமா "
அவர் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.

அது சரி, உங்களுக்கு என்ன மனச் சாட்சி பிரச்னை?

கடைசியாக அவர் என்னிடம் கேட்டதை நான் நிறைவேற்ற முடியவில்லையே என்று நினைக்கிறேன். ஆனால் , அதே சமயம், நான் பணம் கொடுத்து இருந்தால், உடனே டாஸ்மாக் சென்று இருப்பார்.  ஆனால் , அவர் மனைவி என்னிடம் சொல்லி வைத்து இருந்ததையும்  என்னால் தட்டவும் முடியவில்லை.

சரியான தர்ம சங்கடம் தான் என நினைத்துக்கொண்டேன்.

நீங்கள் வருத்தப்படுவதில் ஒன்றும் இல்லை சார். யார் யார் எப்படி எப்படி எப்ப எப்ப போகவேண்டும் என்பதை மேலே இருப்பவன் தானே நிர்ணயிக்கிறான்.
இவருக்கு இப்படித்தான் போகவேண்டும் என்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் ..? என்று ஒரு ஆதங்கத்துடன் பேசி , எழுந்தேன்.

 என்னுடைய வங்கி வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிட்டேன்.
மேலாளரிடம் பேசியது மறந்து போய் இருந்தது என நினைத்து இருந்தேன்.

இருந்தாலும், மாலை, அதே தெருவுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம்.

சாலைக்கு வந்த உடனேயே கண்ணில் பட்டது அந்த பிரும்மாண்ட ஊர்வலம்.
ஆமாம். இறுதி ஊர்வலம்.

ஒரு லட்சத்திற்கும் மேலாக பூக்களுக்கு செலவிட்டு இருப்பார்கள் போல் தோன்றியது. போகும் வழி எல்லாம் சவந்தி, ரோஜா மலர்கள் பூச்செண்டுகள்
சிதறிக்கிடந்தன.

கொட்டிய கொட்டும் மழையில் அத்தனை பூக்களும் நசுங்கி காணப்பட்டன.

இறந்தவர் வேறு யாருமில்லை. காலையில் வங்கி மேலாளர் குறிப்பிட்டவர் ஆக இருக்கக் கூடும்  என்று ஊர்வலத்தில் வந்து கொண்டு இருந்த சிலர் பேசிக்கொண்டதில்  இருந்து புரிந்தது.

இறந்தவர் வங்கிக்கு எதிர்த்த வீட்டு சொந்தக்காரரோ ??

ஊர்வலத்தில் பல பேர் நான் பார்க்கில் பார்க்கும் நபர்கள். இறந்தவர் நடுத்தர வர்க்கம் இல்லை, அதற்கும் கொஞ்சம் மேலே இருப்பவர் என்று தோன்றியது.

குடித்தார். கீழே விழுந்தார். கார் மோதியது. இறந்தார். ..ஒருவர் சொல்கிறார்.
குடித்தார். கார் மோதியது. கீழே தள்ளப்பட்டார். இறந்தார். இன்னொருவர் சொல்கிறார்.
வெறும் கார் ஆக்சிடெண்ட் சார். அனாவசிய மா குடித்தார் என்ற பழி !! இது இன்னொருவர். 

நீத்தாரை இகழேல். நமது பண்பு. இன்னொருவர்.


எப்படியோ !!
ஊர்வலம் வந்த வீதியில் மேலும் சில நிமிடங்கள் சென்று இருப்பேன்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் சென்றபோது, கவனித்தேன்.
வயதான ஒரு பெண்மணியைச் சுற்றி பலர் நின்று கொண்டு இருந்தனர்.
இறந்தவரின் மனைவி என்பது அவரைப்பார்த்தாலே தெரிந்தது.
இன்னமும் அவர்கள் வீட்டுக்குள் செல்லவில்லை போலும்.

நான் அந்த பெண்மணியின் கண்களை பார்த்தேன்.
அந்த கண்களில் வருத்தம் இல்லை. துக்கம் இல்லை !!
ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நிம்மதி தெரிந்ததோ !!!

நான்  யோசித்துப்பார்த்தேன்.

ஒரு குடிகாரனோடு காலம் முழுவதும் வாழ்ந்த ஒரு பெண்மணி.
குடி வெறியினால் அவன் தந்த தந்து இருக்ககூடிய அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருந்த பெண்மணி.

கணவன் இறப்பும் அவருக்கு இனி வரும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி தருமோ என்னவோ !!!




***************************************************************************

பின் குறிப்பு: 

மூன்று நிகழ்வுகள்.உண்மை தான். ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை தான்.  இருந்தாலும் அவற்றினை ஒன்றாக எழுதினால் ஒரு நீதிக் கதை உதயமாகிறதே !! 







சனி, 13 ஜூன், 2015

என்ன அப்படி தேடுறீங்க..?

எச்சரிக்கை:  

லிங்க் கொடுத்து இருக்கிற இடத்திலே எல்லாம் பாட்டு கேட்கும்.
அந்த ஜோர் லே கதையை விட்டு டாதீங்க.

           ***********************************************************88     

என்ன அப்படி தேடுறீங்க..? நான் கூப்பிடுவதைக் கூட காதில் வாங்கிக்காம...

என இரைந்தாள் சமையல் கட்டில் இருந்து.

யார் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?  அவ தான்.  என்னுடைய பெட்டர் ஹாப் . இட பக்க வாசினி.

நான் தேடறதிலேயே மும்முரமா இருந்தேன். அவளுக்கு பதில் சொல்லக்கூடாது என்று இல்லை. எப்படியும் இன்னிக்குள்ள கண்டு பிடிச்சாகணும். அத உட்டுட்டு , இவகிட்ட பேச ஆரம்பிச்சா 

சரவணன் மீனாச்சி சீரியல் போல,

 வை.கோ.சார் பின்னூட்டங்கள் போல , (சார் கோவிச்சுக்க மாட்டார் அப்படின்னு நினைக்கிறேன்.)
 முடிவில்லா விக்ரமாதித்யன் வேதாளம் கதை போல...
முடிவில்லா ஒரு ஜீவாத்மாவின்  பயணம் போல ..நசிகேத சரித்திரம் !!
சுருக்கமாய் சொல்லப்போனால்,
அவள் ஒரு தொடர்கதை ஆக .... தொடரும் ...
அப்படின்னு பயம் தான்.



என்ன அப்படி ஒரு காரியம் உங்களுக்கு ? கேட்ட கேள்வி க்குக்கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு ? சொல்ல முடியாது அப்படின்னு சொல்லுங்களேன்.

நான் வாளா இருந்தேன்.
சொல்லத்தான் நினைக்கிறேன் 
ஆனா சொன்னா உனக்குப் புரியாது. அப்படின்னு சொல்லமுடியுமா என்ன ? சொன்னா விட்டு விடுவாளா என்ன ?

இப்ப எல்லாம் நான் ஒருத்தி இருக்கேன் என்றே மனசுலே இல்லாம போச்சு..

என்று லேசா விசும்பும் குரல் கேட்டு,

இது எங்க போய் முடியுமோ என்று ...

இல்ல...ஒண்ணு காணோம் ...தேடிக்கிட்டு இருக்கேன்...

அதான் எனக்குத் தெரியுதே.. என்னன்னு தானே கேட்டேன்.

அது தானே நானும் தேடறேன்.

என்னன்னே தெரியாமயா தேடறீக ....

லேசா லேசா தெரியுது..சரியா தெரியல்ல..

என்னவோ அந்த மலேசியா ஏரோப்ளேன் எங்கோ போச்சுன்னு ஒரு வருசமா தேடிக்கிட்டு இருக்காங்க.. அதை போலவா...

இல்ல....

பணம் எடுத்துக்கினு வரணும் அப்படின்னு சொன்னீங்களே.. ஏடிஎம் கார்டு எதுன்னாச்சும் காணோமா...

இல்லயே...

அடுத்த மாசம் பாஸ்போர்ட் காலாவதியாவது. அத புதுப்பிச்சுக்கணும் அப்படின்னு சொன்னீங்க.. அதக் காணோமா...

இல்ல.

எதைக் கேட்டாலும் இல்ல, இல்லன்னு சொல்லுவதே உங்க தொழிலா போயிடுத்து.  ஏங்க  ? ..அது உங்க டிகிரி சர்டிபிகேட் , மாதிரி எதுனாச்சுமா.?

அதை எதுக்கு தேடணும்..? ரிடையர் ஆகி 15 வருஷம் ஆனப்பறம் அதெல்லாம் எதுக்கு ?

இல்ல..காலைலே  வலைப்பதிவு எல்லாம் படிக்கும்போது பார்த்தேன். அதுலே ஒருஎடிட்டர்  வேலை மாதிரி ஒரு வேலை காலியா இருக்கு அப்படின்னு போட்டு இருக்காக...அதுக்காகத்தான் அப்ளை பண்ணப்போறீங்களோ அப்படின்னு நினைச்சேன்.


எனக்கு எப்படி அத கொடுப்பாக ...? நாட் பாசிபிள்

கொடுத்தாலும் கொடுப்பாங்க.. யாரு கண்டாங்க...குரு பெயர்ச்சி நடக்கப்போவுது.  உங்களுக்கும் எதுன்னாச்சும் நீங்க முன்னாடி பார்த்தாபோல இன்னொரு வாத்தி வேலை  குரு பகவான் கொடுக்கலாம் இல்லையா..

அப்படியா..!!

நீங்க வேலைக்குப் போறதை பத்தி எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை.
ஆனா  அப்ளை பண்ணுவதற்கு முன்னே ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்கங்க..

என்னது சம்பளம் எத்தனை அப்படின்னா?

அதெல்லாம் இல்ல.. போனசு லீவ் இதெல்லாம் எல்லா உத்தியோகத்துக்குமே இப்ப எல்லாம் இருக்கு.

பின்ன என்ன ?

லீவ் ட்ராவல்  அதான் எல்.டி .சி. உண்டா? அப்படின்னு கேட்டுபிடுங்க. நானும் பத்து நாளைக்காவது பாரிசுக்கு போகனும் அப்படின்னு யோசிச்சு கிட்டு இருக்கேன்.


இங்க .பாரு.பாரு. அதெல்லாம் நான் தேடல்ல..

அடடா !!!அ ப்ப நீங்க அத தேடல்லையா. பின் என்னத்த தேடறீங்க...?
எதுனாச்சும்  அடிக்கடி அஹம் பிரஹ்மாஸ்மி அஹம் பிரஹ்மாஸ்மி அப்படின்னு சொல்வீகளே 
அந்த பரம்பொருள் இறைவன் உங்கள் உள்ளே எங்கே இருக்கான் அப்படின்னா?

இங்க பாரு. இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்.

(மனசுக்குள்ளே ஆனா அந்த பயம் வந்தது. அஹம் பிரஹ்மாஸ்மி என்று சொல்லிகிண்டே இருக்கேன்.
இப்படி இருக்கிறவன் இப்படி ஆகிவிடுவேனோ ?
அப்பாதுரை சாரை மனசிலே  நினைத்துக்கொண்டேன்.
+Durai A 
அவர் பதிவு எல்லாம் கன ஸ்ரத்தையா படிக்கும்போது,




நன்றி: கூகிள்







சே..சே. இ ப் படி எல்லாம் நான் ஆக மாட்டேன். 
ஐ ஆம் வெரி ப்ராக்டிகல் அண்ட் பிரக்மாடிக்.)
சத்தமா சொன்னேன்:

நான் சீரியசா வேற தேடிட்டு இருக்கேன். இதுக்கும் அந்த தத்வத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல.

அப்படின்னா எனக்குத் தெரிஞ்சு போச்சு.

என்ன தெரிஞ்சு போச்சு/

இந்தியாவிலேந்து சிகாகோவுக்கு ஏப்ரல் மாசம் 4ந்தேதி 5ந்தெதியோ பயணம் செய்த ஒரு இந்தியப் பெண்மணிக்கு ட்யூபற்குலோசிஸ் இருக்குது, அது ரொம்ப டேஞ்சர் வரைடி, எந்த ஆண்டி பயாடிக் மாத்திரையும்  யூஸ் இல்லை.அதனாலே அந்த பெண்மணியைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை தருவது மட்டுமில்லாம, அவங்களோட யார் யார் பயணம் செய்தார்களோ அவங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறாங்களாம். 

அதுக்கு என்னா ??

அந்த ப்ளேன் லே உங்க சிகாகோ பிரண்ட் இருந்திருப்பாரோ என்று சந்தேகத்திலே அவர் டெலிபோன் நம்பரைத் தேடரீகளோ ?
  

இல்லை.


என்ன அதுவும் இல்லையா? ...ச் ...ச் ....
அப்ப
சுந்தர காண்டத்துலே அனுமான், லக்ஷ்மணனை காப்பாத்த இமயத்திலே மூலிகை ஒண்ணு தேட போயி, திக்குத் தெரியாத காட்டில் ,தேடித் தேடிக் களைச்சு போயி, மலையையே தூக்கிக் கிட்டு வந்தாரே, அது போல இருக்கீகளே !! அப்படின்னு தான் என்னவோ  தேடுரீக .....
கேட்டுகிட்டு இருக்கேன். இல்ல. ....

எப்படியாச்சும் ,  என்னை அனுமான் மாதிரி ஒரு குரங்கு ன்னு சொல்ல முடிவு பண்ணிட்ட....


அதுதானே மரத்துக்கு மரம் தாவும்.. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இல்லையா !!

நான் என்ன எங்க தாவறேன் ? எப்ப தாவினேன் ?

எந்த ஒரு விசயத்திலேயும் நிலைச்சு நிக்காம, அம்பது விஷயத்திலே மூக்கு நுழைக்கிறீங்க...  ம்யூசிக், ஜோசியம், மருந்து மாத்திரை அப்படின்னு இருந்தீங்க.. பதினைஞ்சு ப்ளாக் வெச்சுட்டு இருக்கீங்க...

இப்ப அது போதாதுன்னு, வெஸ்டர்ன் பியானோ கத்துக்கறேன் அப்படின்னு குதிக்கிறீங்க..

இங்க பாரு...கிளாசிகல் ம்யூசிக் அது. உனக்கு அது புரியாது..

உங்களைப் புரிஞ்சுக்கறதே பிரும்மப் பிரயத்னம் ஆ இருக்கு. இதுலே கிளாசிக் ம்யூசிக் வேற ...இன்னும் கொஞ்ச நேரம் போயிடுச்சுன்னா, குத்துப்பாட்டு, ஒடிசி அப்படின்னு ஆட ஆரம்பிச்சு விடுவீகளோ அப்படின்னு பயப்பட்டு கிட்டு இல்ல இருக்கேன். 

அதெல்லாம் சூப்பர் சிங்கர் லே பார்த்துப்பேன் ..என்று முணுமுணுத்துக்கொண்டே

அது சரி..நீங்க என்ன தேடுறீங்க..அத்த சொல்லுங்க.முதல்லே..
என்னதான் ரகசியமோ



இனிமே தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்தது.
இத பாரு கானடா தெரியுமா உனக்கு /

தெரியுமே..அமெரிக்காவுக்கு மேலே இருக்குது அது தானே...

ராமா ராமா
என்று கத்திவிட்டேன்.

அவரு அயோத்தி லே  லே இருக்கார். இங்கே வரமாட்டார். ..

.நீ ஒரு ஞானசூனியம் உன்னப் போய் கட்டிகிட்டேன் பாரு.

என்னங்க..அம்பது வருசமா தெரியாதது இப்ப என்ன புதுசா தெரிஞ்சு போச்சு /?

சிவ சிவா..கொஞ்சம் சும்மா இருக்கியா...

நீங்க அப்ப சொல்லுங்க...

இந்த ராகம் கானடா இருக்குல்லே...அதுக்கும் தர்பாரி கானடா ராகத்துக்கும் ஒரு ஸ்வரம் வித்யாசம். அது எது அப்படின்னு டைரிலே குறிச்சு வச்சேன்.
அந்த டைரியை காணோம்.

டைரியா ? இந்த வருசத்துதா /

இல்ல...பழசு..

அட..நேத்திக்குத்தானே அத எல்லாம் பழைய டைரி, பழைய பேப்பர் எல்லாம் அந்த பேப்பர் கடைக்கு எடைக்கு போட்டேன்.

என்ன கடைலே எடைக்கு போட்டுட்டாயா !!

அதுலே தான் வாங்கினேன் ஒண்ணு.
அது. பாருங்க எங்கனவோ தொலைஞ்சு போச்சு..

என்ன வாங்கினே..?

தோலி சீவரதுங்க... ஷார்ப்னர் ...

கருப்பா...
ஆமா.. கருப்புதான் . எனக்கு புடிச்ச கலர் லே அத வாங்கினேன். நீங்க பார்த்தீங்களா???



புதுசா அது !! துரு புடிச்சா போல இல்ல இருந்துச்சு...!!!

ஏன் கேட்கறீங்க...நீங்க பார்த்தீங்களா?

இல்ல...   காலைலே கறிகாய் நறுக்கிட்டு இருந்தேனா.. அப்ப இருந்துச்சே !!

அப்ப அத அந்த தோலி எல்லாம் எடுத்து டஸ்ட் பின் லே போட்டீங்களா !!

நான் போடணும் போட்டேனா ...  தோலியோட தோலியா அதுவும்  போயிருக்கும்..

போஇருக்குமா ? என்னங்க.. அந்த ஷார்ப்னர் புதுசுங்க அது !!

பார்த்தா தெரியல்லே

அப்ப அத நம்ம வூட்டு வேலைக்கார அம்மா எடுத்து ரோட்டிலே இருக்கிற தொட்டிலே போட்டாங்களா...

 அந்த தொட்டியும் இப்பதான் கார்ப்போரஷன் காரங்க வச்சாங்க. அதுவும் புதுசுதான்.

அதுனாலே ?..

அதுலே இருக்கும்.

போய் தேடட்டுமா..?

வாயை பொத்திக்கிட்டு ராம ராம ன்னு சொல்லிக்கினு இருங்க...போதும்.



அகத்து எஜமானி முகத்தைப் பார்த்தேன்.
சர வெடி வெடித்துக்கொண்டு  இருந்தது.
டாமேஜ் கண்ட்ரோல் எக்சர்சைஸ் ஒன்று செய்யணும் போல் தோன்றியது.

தேடினேன் வந்தது. என்று பாட ஆரம்பித்தேன்.




என்ன கிடைச்சுடுச்சா ?

ஆஹா.

இங்கன பாரு. என்று காட்டினேன்.

kanada
22 kharaharapriya janya
    Aa: S R2 G2 M1 D N2 S
    Av: S N2 P M1 G2 M1 R2
dharbari kanada
20 naTabhairavi janya
    Aa: N2 S R2 G2 R2 S M1 P D1 N2 S
    Av: S D1 N2 P M1 P G2 M1 R2 S

எனக்குப் புரியறாப்போல சொல்லுங்க.

அதுக்கு நீ இன்னொரு ஜன்மம் எடுக்கணும்.
அப்படின்னு 
சொல்லமுடியுமா !!
மனசுலே  நினைத்துக்கொண்டேன்.


புதன், 13 மே, 2015

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம்

ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே ...

என்று சத்தமாக மைக்கில் அந்த அர்ச்சகர்
வினாயகப்பெருமானுக்கு

சங்கட ஹர சதுர்த்தி அன்று



 அந்த வக்கிர துண்டனுக்கு
அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.
எனக்கோ அந்த சங்கர் மகாதேவன் பாட்டு பாடி அர்ச்சனை செய்தால் என்ன என்று தோன்றியது.  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

+Thenammai Lakshmanan
மனதின் இன்னொரு பக்கமோ திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் பதிவில் வெளி வந்த விநாயகனின் 108 தமிழ்ப் பெயர்களை உச்சரித்துக்கொண்டே இருந்தது.
ஓம் சக்திவிநாயகா போற்றி

ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி

ஓம் முழுமுதற் பொருளே போற்றி

ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி

ஓம் உமையவள் மதலாய் போற்றி

ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி

ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி

ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி

ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி

ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி


கோவிலில் சரியான பக்தர் கூட்டம்.
ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு தனது நக்ஷத்திரம், ராசி, பெயரைச் சொல்லிக்கொண்டு வர,
நானும், அந்த கூட்டத்தில், நூறோடு ஒன்றாக,

கோத்திரம், ராசி, நக்ஷத்திரம், பெயர் சொன்னேன்.

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கிழவருக்குத் தாங்க முடியாத ஆச்சரியம்..

என்ன சார் அதிசயமா இருக்கு !
 என்றார் .

இன்னிக்கு பால் கொழுக்கட்டை நைவேத்யம். அதிலே என்ன ஆச்சரியம் !! என்றேன்.

அது இல்லே
என்றார்.

பின் என்ன கொண்டக்காய் சுண்டலிலா ..?  தேங்காய் போட்டு இருக்கும். உங்களுக்கு டயாபெடிஸ் என்றால் என்னிடம் அதை கொடுத்து விட்டு...என்று இழுத்தேன்.

அதெல்லாம் இல்லை
என்றார்.

பின் என்ன ?

அது எப்படி நீங்களும் அதே கோத்திரம் . அதே ராசி, அதே நக்ஷத்திரம், அது மட்டும் இல்லாம் அதே பெயர்...!!

அதுனாலே என்ன ஆச்சரியம் !!

இல்ல, கொஞ்ச நேரம் முன்னாடி தான் நானும் கௌசிக கோத்ரம், கும்ப ராசி, அவிட்டம் நக்ஷத்ரம், நாராயணன் அப்படின்னு என் பெயருக்கு அர்ச்சனை செய்தேன்.  இப்ப நீங்களும்..... ??

அது பேரு நான் இல்ல... அது என் பேரன் பெயர்.

அது சரி.. என் பெயரோட மட்டும் இல்லை, எல்லாமே ஒண்ணா இருக்கே...!!

நான் அப்படி இருப்பது சாத்தியம் தான். என்று சொல்லி கேட்பதற்கு அவருக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

நான் 50 வருஷமா அர்ச்சனை பண்ணிண்டு இருக்கேன். என்றார். தொடர்ந்து எல்லாம் அந்த பகவத் சங்கல்பம் என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குச் சரியாக புரியவில்லை.
இருந்தாலும், அதற்குள், பிரசாதங்கள் கையில் விழுந்த படியால், அந்த
சக்கரை பொங்கல்,பால்  கொழுக்கட்டை சுவையில் மனதை செலுத்தினேன்.
சாப்பிட்டு விட்டு தான் அவர் நினைவு வந்தது.

பக்கத்தில் ஒரு பாட்டி ஸ்ரத்தையா பாடிக்கொண்டு இருப்பதை ரெகார்டு போட்டார்கள். ஏதோ கேட்ட குரல் போல இருக்கே என்று கேட்டென்.

அடடா !! இது என் அகத்துக்காரி குரல் அல்லவா !!
இதுவரை யூ ட்யூபில் 2,35,988 பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றதில் இருந்தே விநாயகன் மேல் எத்தனை பக்தி எத்தனை பக்தி மக்களுக்கு என்றும் நினைத்தேன்.



அவரைக் காணோம்.

எத்தனையோ பக்தர்கள் விநாயகருக்கு.. லட்சக்கணக்கில், ஏன் .? கோடிக்கணக்கில்.!  அதில் ஏதாவது பத்து பேருக்கு எல்லாம் ஒன்றாக இருப்பதில் என்ன ஆச்சரியம் ! என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நிகழ்வையும் சில நாட்களில் மறந்தே போய்விட்டேன். அதை மறக்க முடியாமல்,

நேற்று முன் தினம் ,

அந்த பிளாட்பாரம் விநாயகரை தரிசித்தவாறு செல்கையில்,
 சார் ! 
என்று
யாரோ கூப்பிட நிமிர்ந்தேன்.

இவரை நான்  எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவில்லையே என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு இருக்கும்போது,

சார் !! என்னை நினைவில்லையா...

நினைவு இல்லை என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சரியாக நினைவு இல்லை. முகம் பார்த்தால் போல் தான் இருக்கிறது என்று நெளிந்தேன்.

நான் தான் சார் ...  அவிட்ட நக்ஷத்திரம். கும்ப ராசி.. .
 என்றார்.

சட் என்று நினைவுக்கு வந்தது. அந்த சங்கட ஹர சதுர்த்தி நாள்.

ஆமாம். அன்று சதுர்த்தி அன்று அந்த தன்வந்திரி கணபதி கோவிலில் சந்தித்தோம் இல்லையா...

ஆமாம்.  நானும் நாராயணன். நீங்களும்.....
என்று தொடர்கையில் அவரை வெட்டி,

சார்..அந்த நாராயணன் என் பேரன். என்றேன்.

அது சரி. நீங்கள் போன சதுர்த்திக்கு கோவிலுக்கு வரவில்லையோ !!

ஆமாம். மறந்து விட்டது.

அது எப்படி. சதுர்த்தி மறந்து போகும்.  முக்கியம் இல்லயோ ..

ஆமாம். ஆனால் மறந்து போயிடுத்து.  என்றேன்  அபாலஜெடிக்கா,

பரவா இல்லை. எனக்கும் சௌகரியமா போய்விட்டது.

என்ன சௌகரியம். !!

நீங்கள் வந்திருந்தீர்கள் என்றால் இரண்டு பேரும் திரும்பவும், அதே கோத்திரம், அதே ராசி, அதே நக்ஷத்திரம், அதே பெயர் ..நல்ல வேளை நீங்கள் வரவில்லை.

நான் வந்தால் என்ன அசௌகரியம் என்று அப்பாவியா கேட்டேன்.

எனக்கில்லை...

பின் யாருக்கு ?

புள்ளையாருக்கு ஸ்வாமி..!! யார் அர்ச்சனை பண்றாங்க என்று சரியா தெரியாம போயிடுச்சுன்னா ??

ஓஹோ...

அப்ப நான் வந்திருந்தா என்ன செய்து இருப்பீர்கள் என்றேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று தான் கொண்டு போய் இருந்தேன்.

எதை ?

ஆதார் கார்டு.

ஆதார் கார்டா !! அதற்கும் அர்ச்சனைக்கும் என்ன சம்பந்தம் ??? !!!!

ஆமாம். ஆதார் கார்டு தான். 
அர்ச்சகர் தான் சொன்னார். 
என்னோட சந்தேகத்தை அவர்கிட்டே சொன்னப்ப, 

அவர், 

எதுக்கு உங்களுக்கு சம்சயம் !! கோத்ரம் ப்ரவரம் சொல்லும்போது, ஆதார் கார்டு நம்பரையும் சேர்த்து சொல்லிட்டா போச்சு...
என்றார்.
 நீங்களே சொல்லுங்க...

கோத்ரம், ராசி, நக்ஷத்ரம், பெயரோட, அந்த நம்பரையும் சேர்த்து அர்ச்சகர் படிச்சா நல்லதில்லையா..  நம்மதான் அர்ச்சனை செய்யறோம் என்பது துல்லியமா தெரிந்துவிடும் இல்லையா...

ஆஹா !!

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருக்கிறதா !!!
மன்மோகன் சிங் வாழ்க.
நிலேகாணி வாழ்க.

வெள்ளி, 8 மே, 2015

கொன்னா பாவம் தின்னா போச்சு..

 கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..


ன்ன இது..காலை லேந்து  தேஞ்சு போன ரிகார்டு மாதிரி ஒரே வரி சொல்லிகினே இருக்கீக.... 

என்றாள் என் இடப்பக்க வாசினி. 

ஆமாம். உலகத்துலே பொதுவா ஒரு எண்ணம் இருக்கு. எதை செஞ்சாலும் எந்த பாவச் செயல் செய்தாலும்  பண்ணிட்டாலும் அதற்கு ஒரு பரிகாரம் செஞ்சா பண்ணினா சரியா போயிடும் அப்படின்னு...

நானும் பார்க்கறேன். எந்தத் தொழிலிலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமோ ?

எல்லோருமே சேர்ந்து செய்யும்போது அநியாயமும் நியாயம் ஆகிவிடுகிறது. போகிற போக்கிலே அதுவே விதியும் ஆகிவிடுகிறது. அது தான் சட்டமோ என்ற பிரமையும் ஏற்படுகிறது இல்லையா...

சம்பாதிக்கிற வயதிலே, செய்யக் கூடாதது எல்லாம் செய்து, பணம் சேத்துடராங்க  .. பின்ன சேகரித்த  பணத்தினாலே அவங்களுக்கு  எந்த ஒரு நிம்மதியும் கிடைக்காத போது, சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை, அத தானம் தருமம் அப்படின்னு செலவு பண்ணி, தனது பாவத்துக்கெல்லாம் ஒரு எஸ்கேப் ரூட் தயார் பண்ற மாதிரி, நீர் மோர் பந்தல், ஸ்கூல் காலேஜ் படிக்கிற பசங்களுக்கு ஸ்காலர்ஷிப், வாரத்திலே ஒரு நாளைக்கு தரும வைத்தியம், போதாக் குறைக்கு காசி, கயா , ராமேஸ்வரம். 

ஆமாம். சிலர் பார்க்கிற பார்த்த உத்தியோகத்துக்கும் அவக சேத்து வச்சு இருக்கற சொத்துக்கும் சம்பந்தமே இல்லை. 

அவுங்களுக்குத் தெரியாதா இது மாதிரி சம்பாதிப்பது எல்லாம் பாவம் அப்படின்னு ?

அதுக்குத்தான் ஒரு எஸ்கேப் ரூட் இருக்குதுல்ல..  பரிகாரம் அப்படின்னு..

இருந்தாலும் ??


அது சரி. இன்னாதான் பாவம் அப்படின்னு எதுனாச்சும் ஒரு லிஸ்ட் இருக்குதா என்ன ?

ஏன் இல்லாம !! ஒவ்வொரு மதத்திலும் அவங்கவங்க மத கோட்பாடுகள் பத்தி சொல்லி இருக்கிற புத்தகத்திலே எது எல்லாம் கொடிய பாவம் அப்படின்னு சொல்லி இருக்காக..
ஆமா.. உதாரணமா, கிருஸ்துவ மதப்படி, 

There are six things the Lord hates, seven that are detestable to him: haughty eyes, a lying tongue, hands that shed innocent blood, a heart that devises wicked schemes, feet that are quick to rush into evil, a false witness who pours out lies and a man who stirs up dissension among brothers” (Proverbs 6:16-19).

காம, குரோத, லோப, மோக , அஹங்கார இதெல்லாம் பாவம் அப்படின்னு சீக்கிய தர்மம் சொல்லுது. இங்கன பாரு.  விளக்கமா எழுதி இருக்காக. 



புத்த மதத்திலே சொல்லுவது.


The five most serious offenses in Buddhism. Explanations vary according to the sutras and treatises. The most common is (1) killing one's father, (2) killing one's mother, (3) killing an arhat, (4) injuring a Buddha, and (5) causing disunity in the Buddhist Order. It is said that those who commit any of the five cardinal sins invariably fall into the hell of incessant suffering. 
  1. Injuring a Buddha
  2. killing an Arhat
  3. Creating schism in the society of Sanghaரு 
  4. Matricide
  5. Patricide

கருட புராணத்திலே ஒரு பெரிய லிஸ்டே போட்டு இருக்காங்க.. அதப் படிச்சா மூச்சு வாங்குது...நீயே படிச்சுக்க...

அப்படியா !!!  இதான் அந்த லிஸ்டா ?

மனித சமுதாயத்துக்கு அப்படின்னே பொது லிஸ்ட் ஒருவர் எழுதி போட்டு இருக்காரு. 

யாருங்க..


வள்ளலார் இராமலிங்க அடிகளார். 



அப்படியா..!!

அவர் எழுதி இருக்கிற பாவப் பட்டியல்  இதோ படிக்கிறேன். கேளு..

சத்தமா படிங்க...



நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 

ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!

அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!





பட்டியல்  விரிவா இருந்தாலும் விளக்கமா  இருக்குதே !! எதுனாச்சும் ஒண்ணுலே  எல்லாருமே மாட்டிடுவாங்களே !!

ஆமா..
வள்ளுவர் ஒன்று சுருக்கமா, விளக்கமா 
சொல்லியிருக்காரு. 

எது பாவம் அப்படின்னு சொல்லாது, அறவழி செல்லவேண்டும் அப்படின்னு சொன்னா, எதெல்லாம் தவிர்க்கப்படவேண்டியது என்று சொல்லி இருப்பது 
தெளிவா இருக்குதுல்லே !!

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

ஒரு விஷயம் பார்த்தீகளா ?

என்ன ?

இந்த நாலுலே முதல் மூன்றும் எண்ணங்கள் ஆக மனதிலே தோன்றும் . அப்பவே அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சுடணும். விட்டீங்க அப்படின்னா, அடுத்த நாலாவது இன்னாச் சொல் என்பது , எண்ணங்கள் என்ற நிலையில் இருந்து சொல் ஆக உருவெடுத்து,  மாறுது கவனியுங்க..

ஆமா..

இந்த சொல் என்னும் நிலையில் இருந்து எண்ணங்கள் செயல் உருவம் எடுக்கும்போது , அந்த இன்னாச் செயல் பாவம் ஆக கருதப்படுகிறது.


அப்ப, சொல்லிப்போடுங்க.. இன்னாச் செயலை செய்யக்கூடாது. அத செஞ்சுட்டு, என்ன பரிகாரம் என்ன பரிகாரம் என்று தேடி அலைவதில் அர்த்தம் இல்லை. 

வூட்டுக்காரி  எப்பவுமே கரெக்ட். 
********************************************************************************************************
********************************************************************************************************
**********************************************************************************************************


If negative thoughts, insecurities, doubts come into the mind, chant Om Namah Shivaya. This itself will put you on the right track. What was meant to happen, happened. Move on. - Sri Sri Ravi Shankar

Wisdo