எச்சரிக்கை:
லிங்க் கொடுத்து இருக்கிற இடத்திலே எல்லாம் பாட்டு கேட்கும்.
அந்த ஜோர் லே கதையை விட்டு டாதீங்க.
***********************************************************88
என்ன அப்படி தேடுறீங்க..? நான் கூப்பிடுவதைக் கூட காதில் வாங்கிக்காம...
என இரைந்தாள் சமையல் கட்டில் இருந்து.
யார் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? அவ தான். என்னுடைய பெட்டர் ஹாப் . இட பக்க வாசினி.
நான் தேடறதிலேயே மும்முரமா இருந்தேன். அவளுக்கு பதில் சொல்லக்கூடாது என்று இல்லை. எப்படியும் இன்னிக்குள்ள கண்டு பிடிச்சாகணும். அத உட்டுட்டு , இவகிட்ட பேச ஆரம்பிச்சா
சரவணன் மீனாச்சி சீரியல் போல,
வை.கோ.சார் பின்னூட்டங்கள் போல , (சார் கோவிச்சுக்க மாட்டார் அப்படின்னு நினைக்கிறேன்.)
முடிவில்லா விக்ரமாதித்யன் வேதாளம் கதை போல...
முடிவில்லா ஒரு ஜீவாத்மாவின் பயணம் போல ..நசிகேத சரித்திரம் !!
சுருக்கமாய் சொல்லப்போனால்,
அவள் ஒரு தொடர்கதை ஆக .... தொடரும் ...
அப்படின்னு பயம் தான்.
என்ன அப்படி ஒரு காரியம் உங்களுக்கு ? கேட்ட கேள்வி க்குக்கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு ? சொல்ல முடியாது அப்படின்னு சொல்லுங்களேன்.
நான் வாளா இருந்தேன்.
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஆனா சொன்னா உனக்குப் புரியாது. அப்படின்னு சொல்லமுடியுமா என்ன ? சொன்னா விட்டு விடுவாளா என்ன ?
இப்ப எல்லாம் நான் ஒருத்தி இருக்கேன் என்றே மனசுலே இல்லாம போச்சு..
என்று லேசா விசும்பும் குரல் கேட்டு,
இது எங்க போய் முடியுமோ என்று ...
இல்ல...ஒண்ணு காணோம் ...தேடிக்கிட்டு இருக்கேன்...
அதான் எனக்குத் தெரியுதே.. என்னன்னு தானே கேட்டேன்.
அது தானே நானும் தேடறேன்.
என்னன்னே தெரியாமயா தேடறீக ....
லேசா லேசா தெரியுது..சரியா தெரியல்ல..
என்னவோ அந்த மலேசியா ஏரோப்ளேன் எங்கோ போச்சுன்னு ஒரு வருசமா தேடிக்கிட்டு இருக்காங்க.. அதை போலவா...
இல்ல....
பணம் எடுத்துக்கினு வரணும் அப்படின்னு சொன்னீங்களே.. ஏடிஎம் கார்டு எதுன்னாச்சும் காணோமா...
இல்லயே...
அடுத்த மாசம் பாஸ்போர்ட் காலாவதியாவது. அத புதுப்பிச்சுக்கணும் அப்படின்னு சொன்னீங்க.. அதக் காணோமா...
இல்ல.
எதைக் கேட்டாலும் இல்ல, இல்லன்னு சொல்லுவதே உங்க தொழிலா போயிடுத்து. ஏங்க ? ..அது உங்க டிகிரி சர்டிபிகேட் , மாதிரி எதுனாச்சுமா.?
அதை எதுக்கு தேடணும்..? ரிடையர் ஆகி 15 வருஷம் ஆனப்பறம் அதெல்லாம் எதுக்கு ?
இல்ல..காலைலே வலைப்பதிவு எல்லாம் படிக்கும்போது பார்த்தேன். அதுலே ஒருஎடிட்டர் வேலை மாதிரி ஒரு வேலை காலியா இருக்கு அப்படின்னு போட்டு இருக்காக...அதுக்காகத்தான் அப்ளை பண்ணப்போறீங்களோ அப்படின்னு நினைச்சேன்.
எனக்கு எப்படி அத கொடுப்பாக ...? நாட் பாசிபிள்
கொடுத்தாலும் கொடுப்பாங்க.. யாரு கண்டாங்க...குரு பெயர்ச்சி நடக்கப்போவுது. உங்களுக்கும் எதுன்னாச்சும் நீங்க முன்னாடி பார்த்தாபோல இன்னொரு வாத்தி வேலை குரு பகவான் கொடுக்கலாம் இல்லையா..
அப்படியா..!!
நீங்க வேலைக்குப் போறதை பத்தி எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை.
ஆனா அப்ளை பண்ணுவதற்கு முன்னே ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்கங்க..
என்னது சம்பளம் எத்தனை அப்படின்னா?
அதெல்லாம் இல்ல.. போனசு லீவ் இதெல்லாம் எல்லா உத்தியோகத்துக்குமே இப்ப எல்லாம் இருக்கு.
பின்ன என்ன ?
லீவ் ட்ராவல் அதான் எல்.டி .சி. உண்டா? அப்படின்னு கேட்டுபிடுங்க. நானும் பத்து நாளைக்காவது பாரிசுக்கு போகனும் அப்படின்னு யோசிச்சு கிட்டு இருக்கேன்.
இங்க .பாரு.பாரு. அதெல்லாம் நான் தேடல்ல..
அடடா !!!அ ப்ப நீங்க அத தேடல்லையா. பின் என்னத்த தேடறீங்க...?
எதுனாச்சும் அடிக்கடி அஹம் பிரஹ்மாஸ்மி அஹம் பிரஹ்மாஸ்மி அப்படின்னு சொல்வீகளே
அந்த பரம்பொருள் இறைவன் உங்கள் உள்ளே எங்கே இருக்கான் அப்படின்னா?
இங்க பாரு. இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்.
(மனசுக்குள்ளே ஆனா அந்த பயம் வந்தது. அஹம் பிரஹ்மாஸ்மி என்று சொல்லிகிண்டே இருக்கேன்.
இப்படி இருக்கிறவன் இப்படி ஆகிவிடுவேனோ ?
அப்பாதுரை சாரை மனசிலே நினைத்துக்கொண்டேன்.
+Durai A
அவர் பதிவு எல்லாம் கன ஸ்ரத்தையா படிக்கும்போது,
சத்தமா சொன்னேன்:
நான் சீரியசா வேற தேடிட்டு இருக்கேன். இதுக்கும் அந்த தத்வத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல.
அப்படின்னா எனக்குத் தெரிஞ்சு போச்சு.
என்ன தெரிஞ்சு போச்சு/
இந்தியாவிலேந்து சிகாகோவுக்கு ஏப்ரல் மாசம் 4ந்தேதி 5ந்தெதியோ பயணம் செய்த ஒரு இந்தியப் பெண்மணிக்கு ட்யூபற்குலோசிஸ் இருக்குது, அது ரொம்ப டேஞ்சர் வரைடி, எந்த ஆண்டி பயாடிக் மாத்திரையும் யூஸ் இல்லை.அதனாலே அந்த பெண்மணியைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை தருவது மட்டுமில்லாம, அவங்களோட யார் யார் பயணம் செய்தார்களோ அவங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறாங்களாம்.
அதுக்கு என்னா ??
அந்த ப்ளேன் லே உங்க சிகாகோ பிரண்ட் இருந்திருப்பாரோ என்று சந்தேகத்திலே அவர் டெலிபோன் நம்பரைத் தேடரீகளோ ?
இல்லை.
என்ன அதுவும் இல்லையா? ...ச் ...ச் ....
அப்ப
சுந்தர காண்டத்துலே அனுமான், லக்ஷ்மணனை காப்பாத்த இமயத்திலே மூலிகை ஒண்ணு தேட போயி, திக்குத் தெரியாத காட்டில் ,தேடித் தேடிக் களைச்சு போயி, மலையையே தூக்கிக் கிட்டு வந்தாரே, அது போல இருக்கீகளே !! அப்படின்னு தான் என்னவோ தேடுரீக .....
கேட்டுகிட்டு இருக்கேன். இல்ல. ....
எப்படியாச்சும் , என்னை அனுமான் மாதிரி ஒரு குரங்கு ன்னு சொல்ல முடிவு பண்ணிட்ட....
அதுதானே மரத்துக்கு மரம் தாவும்.. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இல்லையா !!
நான் என்ன எங்க தாவறேன் ? எப்ப தாவினேன் ?
எந்த ஒரு விசயத்திலேயும் நிலைச்சு நிக்காம, அம்பது விஷயத்திலே மூக்கு நுழைக்கிறீங்க... ம்யூசிக், ஜோசியம், மருந்து மாத்திரை அப்படின்னு இருந்தீங்க.. பதினைஞ்சு ப்ளாக் வெச்சுட்டு இருக்கீங்க...
இப்ப அது போதாதுன்னு, வெஸ்டர்ன் பியானோ கத்துக்கறேன் அப்படின்னு குதிக்கிறீங்க..
இங்க பாரு...கிளாசிகல் ம்யூசிக் அது. உனக்கு அது புரியாது..
உங்களைப் புரிஞ்சுக்கறதே பிரும்மப் பிரயத்னம் ஆ இருக்கு. இதுலே கிளாசிக் ம்யூசிக் வேற ...இன்னும் கொஞ்ச நேரம் போயிடுச்சுன்னா, குத்துப்பாட்டு, ஒடிசி அப்படின்னு ஆட ஆரம்பிச்சு விடுவீகளோ அப்படின்னு பயப்பட்டு கிட்டு இல்ல இருக்கேன்.
அதெல்லாம் சூப்பர் சிங்கர் லே பார்த்துப்பேன் ..என்று முணுமுணுத்துக்கொண்டே
அது சரி..நீங்க என்ன தேடுறீங்க..அத்த சொல்லுங்க.முதல்லே..
என்னதான் ரகசியமோ
இனிமே தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்தது.
இத பாரு கானடா தெரியுமா உனக்கு /
தெரியுமே..அமெரிக்காவுக்கு மேலே இருக்குது அது தானே...
ராமா ராமா
என்று கத்திவிட்டேன்.
அவரு அயோத்தி லே லே இருக்கார். இங்கே வரமாட்டார். ..
.நீ ஒரு ஞானசூனியம் உன்னப் போய் கட்டிகிட்டேன் பாரு.
என்னங்க..அம்பது வருசமா தெரியாதது இப்ப என்ன புதுசா தெரிஞ்சு போச்சு /?
சிவ சிவா..கொஞ்சம் சும்மா இருக்கியா...
நீங்க அப்ப சொல்லுங்க...
இந்த ராகம் கானடா இருக்குல்லே...அதுக்கும் தர்பாரி கானடா ராகத்துக்கும் ஒரு ஸ்வரம் வித்யாசம். அது எது அப்படின்னு டைரிலே குறிச்சு வச்சேன்.
அந்த டைரியை காணோம்.
டைரியா ? இந்த வருசத்துதா /
இல்ல...பழசு..
அட..நேத்திக்குத்தானே அத எல்லாம் பழைய டைரி, பழைய பேப்பர் எல்லாம் அந்த பேப்பர் கடைக்கு எடைக்கு போட்டேன்.
என்ன கடைலே எடைக்கு போட்டுட்டாயா !!
அதுலே தான் வாங்கினேன் ஒண்ணு.
அது. பாருங்க எங்கனவோ தொலைஞ்சு போச்சு..
என்ன வாங்கினே..?
தோலி சீவரதுங்க... ஷார்ப்னர் ...
கருப்பா...
ஆமா.. கருப்புதான் . எனக்கு புடிச்ச கலர் லே அத வாங்கினேன். நீங்க பார்த்தீங்களா???
புதுசா அது !! துரு புடிச்சா போல இல்ல இருந்துச்சு...!!!
ஏன் கேட்கறீங்க...நீங்க பார்த்தீங்களா?
இல்ல... காலைலே கறிகாய் நறுக்கிட்டு இருந்தேனா.. அப்ப இருந்துச்சே !!
அப்ப அத அந்த தோலி எல்லாம் எடுத்து டஸ்ட் பின் லே போட்டீங்களா !!
நான் போடணும் போட்டேனா ... தோலியோட தோலியா அதுவும் போயிருக்கும்..
போஇருக்குமா ? என்னங்க.. அந்த ஷார்ப்னர் புதுசுங்க அது !!
பார்த்தா தெரியல்லே
அப்ப அத நம்ம வூட்டு வேலைக்கார அம்மா எடுத்து ரோட்டிலே இருக்கிற தொட்டிலே போட்டாங்களா...
அந்த தொட்டியும் இப்பதான் கார்ப்போரஷன் காரங்க வச்சாங்க. அதுவும் புதுசுதான்.
அதுனாலே ?..
அதுலே இருக்கும்.
போய் தேடட்டுமா..?
வாயை பொத்திக்கிட்டு ராம ராம ன்னு சொல்லிக்கினு இருங்க...போதும்.
அகத்து எஜமானி முகத்தைப் பார்த்தேன்.
சர வெடி வெடித்துக்கொண்டு இருந்தது.
டாமேஜ் கண்ட்ரோல் எக்சர்சைஸ் ஒன்று செய்யணும் போல் தோன்றியது.
தேடினேன் வந்தது. என்று பாட ஆரம்பித்தேன்.
என்ன கிடைச்சுடுச்சா ?
ஆஹா.
இங்கன பாரு. என்று காட்டினேன்.
எனக்குப் புரியறாப்போல சொல்லுங்க.
அதுக்கு நீ இன்னொரு ஜன்மம் எடுக்கணும்.
அப்படின்னு
சொல்லமுடியுமா !!
மனசுலே நினைத்துக்கொண்டேன்.

நன்றி: கூகிள் |
சே..சே. இ ப் படி எல்லாம் நான் ஆக மாட்டேன்.
ஐ ஆம் வெரி ப்ராக்டிகல் அண்ட் பிரக்மாடிக்.)சத்தமா சொன்னேன்:

kanada
22 kharaharapriya janya
Aa: S R2 G2 M1 D N2 S
Av: S N2 P M1 G2 M1 R2
dharbari kanada
20 naTabhairavi janya
Aa: N2 S R2 G2 R2 S M1 P D1 N2 S
Av: S D1 N2 P M1 P G2 M1 R2 S
எனக்குப் புரியறாப்போல சொல்லுங்க.
அதுக்கு நீ இன்னொரு ஜன்மம் எடுக்கணும்.
அப்படின்னு
சொல்லமுடியுமா !!
மனசுலே நினைத்துக்கொண்டேன்.
ஒரு ராகக் குறிப்பு தேடற சாக்குல உலக நடப்பை எல்லாம் சொல்லிட்டீங்களே. அருமை சுப்பு தாத்தா
பதிலளிநீக்குமூணுநாளைக்கு முன்னால் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு போன விமானம் கூட இன்னும் காணலையாமே
நிஜந்தான்!...
பதிலளிநீக்குஇதற்கெல்லாம் இன்னுமொரு ஜன்மம் தான் வேண்டும்!..
கானடாவைப் பற்றி - கலகலப்பான பதிவு!..
விரைவில் தங்களை ஆ'சிரி'யராக அசத்தப் போவதை காண ஆவலுடன் உள்ளேன் ஐயா...
பதிலளிநீக்குஉரையாடல் மூலம் அழகழகா விடயங்களை தெரிவித்தீர்கள். பேஷ் பேஷ்
பதிலளிநீக்குஆசிரியர் பதவி தங்களுக்கே கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
வார்த்தைச் சித்தரது கருத்தும், சகோ.இனியாவின் கருத்தோடும் எனக்கு பரிபூரண உடன்பாடு உண்டு திருசுப்பு தாத்தா !
பதிலளிநீக்குசுப்பு தாத்தா அவர்கள் கோவில் விமானம் போன்றவர்!
அன்னாந்து போற்றும் வணக்கத்திற்குரியவர்!
நட்புடன்,
புதுவை வேலு
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமேனு (கானத்தங்கமே ?) அவங்க பாடியிருக்கணும்.
பதிலளிநீக்குவணக்கம் சுப்புத் தாத்தா !
பதிலளிநீக்குகலக்கல் காமெடி போல இருக்கு செமையா போகுது தங்கள் பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஅன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.fr/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
வணக்கம் சகோதரரே,
பதிலளிநீக்குஎன் பேத்தியின் வரவை குறித்து எழுதிய பாடலை ரசித்து என் தளம் வந்து அவளுக்கு வாழ்த்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றிகள். அதை தாங்கள் இசை அமைத்து பாட விருப்பம் தெரிவித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் அனுமதி எதற்கு? தங்கள் இசையில் பாடலை கேட்பதற்கு ஆவலாய் உள்ளோம். என் பேதிக்கும் அழகிய தாலாட்டு இசையாகவும் அது அமையும். மீண்டும் தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.