வியாழன், 9 அக்டோபர், 2014

யாருக்குத் தான் கவலை இல்லை ? !!!


என்ன அப்படியே  எதோ பொஸ்தகத்திலே முழுகிப்போய் கிடக்கக்கீக ?  ஒரு பேச்சு மூச்சைக் கூட காணோமே ?

என்று கவலையுடன் என் முகத்தின் முன்னே வந்து நின்றாள் மதுரை மீனாச்சி பெயர் கொண்ட எனது மனைவி. வயது எழுபத்தி இரண்டு இருக்கும். கிழ வயது மங்கை.

நான் சத்தமா கையில் இருக்கும் மோஹ முத்கரஹ என்னும் புத்தகத்தில் இருந்து படித்தேன்.

பால்யாவஸ்தே க்ரீடா சக்தஹ
தருனாவஸ்தே தருணீ சக்தஹ
விருத்தாவஸ்தே சிந்தா சக்தஹ ...

கேட்பவளுக்கு பொறுமை போயிற்று போலும்.  என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிடுங்கி ,

இன்னா அப்படின்னு கேட்கறேன் இல்ல ? பதில் சொல்லாம, நீங்க மாட்டிலே
ஏதோ க்ரீக், லத்தீன் பாஷைலே உளறிட்டு இருக்கீக... உடம்பு சரியா இல்லையா?

உடம்புக்கு ஒன்னும் இல்ல.  மனுஷன் தான் சரி இல்லை அப்படின்னு ஆதி சங்கரர் எழுதி இருக்காரு. ...

என்ன வந்துடுச்சு மனுஷனுக்கு ?

மனுஷன் புறந்ததில் இருந்து எது பின்னாடியே சுத்திக்கினே இருக்கான்.

ஈ இனிப்பை சுத்தறா போலே ..

  இன்னா அது ? நீ சொல்லு பார்ப்போம்.

நீங்களே  சொல்லுங்க.

ஆமா.  
சின்ன வயசுலே விளையாட்டு, விளையாட்டு அப்படின்னு எப்ப பாரு,  படிப்புலே புத்தி போகாம , விளையாடிட்டே இருக்கான்.

அப்பறம் ?

ஒரு பதினாறு, பதினெட்டு வயசுலே வாலிப வயசு வந்த உடனே...?

உடனே ?

எதுனாச்சும் பொண் பின்னாடி திரிஞ்சிண்டு இருக்கான்.

நல்லாவே இல்லயே...

அதான் இருக்கட்டும்.படிப்பை முடிஞ்சுடுத்து,  வேலைக்கு போயாச்சு. கல்யாணம் கட்டிக்கிட்டு, லைப் லே செட்டில் ஆக நேரத்திலேயும்,

வேலை, வேலை, அது இது அப்படின்னு அதுலேயே இருக்கான். இல்லை அப்படின்னா, குடும்பம் பற்றி, மனைவி உடம்பு பற்றி, குழந்தைகள் உடம்பு, படிப்பு பற்றி கவலை.

மிடில் ஏஜ் தாண்டிடுச்சு அப்படின்னு வச்சுக்க...

வயசானப்பறம்,  மனுசன் ஒரேயடியாய் உட்கார்ந்து போய் இடறான். கேட்டா, அதப்பத்தி கவலை, இதப்பத்தி கவலை ..

கவலையே இல்லாத ஒரு மனுஷன் கூட பார்க்க முடியாது இல்லையா ? அது சரி, இன்னிக்கு எதுக்கு இந்த தத்துவம் எல்லாம் ?

ஒரு இரண்டு நாள் முன்னாடி, என்னோட வலை ப்ரண்ட் இளங்கோ அவங்க வலை பக்கம் போயிருந்தேனா..

யாரு ! உங்க திருச்சி பிரெண்டா ?

ஆ...ஆமாம். திருச்சிக்கு போனா அவரை கண்டிப்பா பார்த்துட்டு வரணும்.

என்ன கவலை அவருக்கு ?

கோவிலுக்கு காமிராவை எடுத்துக்கினு போனா, கருவறை யிலே , சாமியை, போட்டோ பிடிக்க பர்மிசன் தர மாட்டேன் அப்படிங்கராக...

 அது கவலை இல்லீக... ஒரு ஆதங்கம் .. அம்புட்டு தான்.

எதுவோ வச்சுக்க...  நம்ம கல்யாணம் போது ஒரு போட்டோ எடுத்தாகளா ? இல்லியே ?

நம்ம காலத்துலே இந்த மாதிரி காமிரா கிடையாதுங்களே...  போட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாயிடும் அப்படில்லே சொன்னாங்க..

ஆமா.   வயசான எதுனாச்சும் ஒரு கவல வந்துடும் அப்படிங்கறதுக்கு ஒரு உதாரணம் தான் சொன்னேன். அது ரைட்டா, தப்பா அப்படின்னு நான் சொல்ல வல்லை.

அப்பறம் என்ன ஆச்சு ?

நேத்திக்கு ஒரு வூட்டுக்கு ஒரு உபன்யாசம் அப்படின்னு கூப்பிட்டு இருந்தாக.
அங்கன ஒரு சந்நியாசி.  இஸ்கான் க்ரூப்பிலேந்து வந்திருக்காரு. பிரமாதமா ஒரு சொற்பொழிவு ஒரு மணி நேரத்துக்கு, சைதன்ய மகா பிரபு பத்தி.

Courtesy: http://www.radha.name/images-gallery/radha-and-krsna-paintings

Krishna is often referred as svayam bhagavan in Gaudiya Vaishnavism theology and Radha is a young woman, a gopi who is Krishna's supreme beloved.  With Krishna, Radha is acknowledged as the Supreme Goddess, for it is said that she controls Krishna with Her love.  It is believed that Krishna enchants the world, but Radha "enchants even Him. Therefore She is the supreme goddess of all. Radha Krishna".The common derivation of Shakti and saktiman, i.e. Female and Male principle in god implies that Shakti and saktiman are the same.  Each and every god has its partner, 'betterhalf' or Shakti and without this Shakti, is sometimes viewed being without essential power.
 It is a not uncommon feature of Vedas when worship of a pair rather than one personality constitutes worship of God, such is worship of Radha Krishna. Traditions worshiping Krishna, as svayam bhagavan, who is male, include reference and veneration to his Radha, who is worshiped as supreme. It's an accepted view that union of Radha and Krishna may indicate the union of Sakti with the Saktiman, and this view exists well outside of orthodox Vaishnavism or Krishnaism.



சைதன்யரு அப்படின்னா. கலியுகத்துலே அந்த ஹரே ராம் ஹரே கிருஷ்ணா சொன்னா போதும் . அது ஒன்னு தான் யுக தர்மம் அப்படின்னு சொன்னவரா ?



ஆமா. வைஷ்ணவர்கள் லே அவங்க ஒரு பிரிவு. வட மாநிலங்களிலே கௌட சம்பிரதாயம். பகவான் ஜெகன்நாத் பிருந்தாவனத்துலே கிருஷ்ணனா லீலைகள் பண்றது  அந்த கிருஷ்ணனை நினைக்கிறது, பூசிக்கிறது, பாடறது தான் மனுசனா புரந்தவனுக்கு காரியம், கடமை. மத்த கர்மம் எதுவுமே கிடையாது அப்படின்னு சொல்ற ஒரு கோஷ்டி.

இஸ்கான் நடத்திய ஒரு ரத யாத்திரை.
ராதே கிருஷ்ணா வைபவம்.
நியூ யார்க் நகரத்திலே 2014 ஜூன் மாதம்.
iscon rath yathra at NEW YORK in JUNE 2014
இன்னா பக்தி !! இன்னா பக்தி. !!

சரி.

ஆனா பாரு, அந்த சன்யாசிக்கும் மனசுக்குள்ளே  ஒரு கவலை.

சன்யாசிக்கு கவலையா ? என்ன அது ?

இன்னாடா .. நம்ப இம்புட்டு சொல்றோம்.  இருந்தும் இந்த சனங்க நம்பள புரிஞ்சுக்காம, அந்த பூசை, இந்த திருவிழா, அந்த சாமி, இந்த சாமி அப்படின்னு எந்தெந்த சாமி பின்னாடி எல்லாமோ  போயிட்டு இருக்காங்களே...

அப்பறம் ?


நெத்திலே போட்டு இருக்கற திருமண் பத்தி கடைசியா ஒரு புடி புடிச்சார் பாரு.
அசந்து போயிட்டேன்.  இன்னாத்துக்கு இந்த சந்நியாசி கவலை படுறார் அப்படின்னு அப்ப தான் புரிஞ்சுகினேன்.

நெத்திலே  கீழேந்து மேலே நாமம் இட்டுக்கிறது . இரண்டு வெள்ளை கோடு போவுது இல்லே ,

ஆமா.

அது ஒன்னு பிரும்மா வாம். இன்னொன்னு சிவனாம்.

இத இரண்டையும் கோபி சந்தன த்தாலே இட்டுக்கனுமாம்.  நடுவிலே சிவப்போ, மஞ்சளோ எதுவுமே இருக்க கூடாதாம்.

ஏனாம் ?

அது விஷ்ணுவுக்காக இடம். அவர் அங்கன இருக்காரு.

 அப்ப, தென்கலை, வடகலை சேர்ந்தவங்க எல்லாம் போட்டுக்கற நாமம் சிவப்பா இருக்கு, நடுவிலே அதெல்லாம் ?

அதுக்கெல்லாம் கௌட சம்பிரதாயம் அலௌ பன்னாதாம். அங்கீகரிக்காதாம் .
திருமணம் ஆன பெண்கள் மட்டும் நடுவிலே ஒரு குங்குமப் பொட்டு இட்டுக்கலாமாம்.

இவங்க எப்படி ?

அங்க கஸ்தூரி க்கான இடமாம்.

அப்படியா !!

 என்று தனது ஆச்சரியத்தை முகத்தில் தேக்கினார் மீனாச்சி பாட்டி.

இந்த சைவ பிரிவினர், அதாவது சிவனைத் தொழுபவர்கள் நெத்திலே போட்டுக்கிற வீபுதி பட்டை,

வைஷ்ணவர்கள்உடம்பு முழுக்க, கைகள் புஜங்களில், மார்பிலே போட்டுக்கிற
திருமண் அதாவது ஸ்ரீ சுர்ணம் நாமம் எல்லாமே வேஸ்ட் என்றார்.

நாமம் போட்டுக்கொள்ளும் முறை

சரிதான். அவர் கவலை அவருக்கு. நமக்கு நம்ம கவலை. 

உனக்கு இன்னா கவலை ?

இந்தாங்க. எந்திருச்சு, போயி, இன்னிக்கு கார்ப்பொரேசன் மெட்ரோ வாடர் ஏன் இன்னும் குழாய் லே இன்னும் வல்லே அப்படின்னு கேட்டுட்டு வாங்க.

அதுவும் சரிதான். உன்னோட கவலை உனக்கு.

யாருக்குத் தான் கவலை இல்லை ? !!! 

அப்ப கவலை இல்லாம ஒருவன் இருக்கவே முடியாதுங்களா?

ஏன் முடியாது.  ?  ஆரம்பத்திலே கொடுத்திருக்கிற பாடல் லே கடைசி வரி சொல்றேன் பாரு கேட்டுக்க. 
 "பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்தஹா."

இன்னா அர்த்தம்?

 சொல்றேன் கேளூ. 

யாராவது அந்த பிரும்மன் மேல மனசை வச்சுட்டு இருக்காகளா?  அப்படின்னு கேட்கறாரு ஆதி சங்கரர்.

அப்படின்னா?

யாரு ஒருவன் கடவுள் மேல, தன மனசை எல்லாம் பூரணமா வச்சுட்டு இருக்கானோ, அவனுக்கு கவலையும் உண்டா ? என பொருள். 

ஆக, கவலை இருக்கக் கூடாது என்றால், உலகத்து பொருட்கள் மேல இருக்கற அதீத ஆசையெல்லாம் விட்டுட்டு, கடவுள் சிந்தனை லே இருங்க.

கேட்கிறதுக்கு நல்லாத்தான் கீது. ஆனா முடியுமா, தெரியல்லையே..





=======================================================================

When the mind becomes empty, then any wish or desire that you have at that time instantly manifests. This is a great secret. - Sri Sri Ravi Shankar






வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஏரேழு பிறவியிலும்...!!!

நவராத்திரி தசரா என்று
நாடு முழுக்க அமக்களம்.

இங்கே எங்கு பார்த்தாலும் எந்த வலைப்பதிவு பக்கம் திரும்பினாலும் லக்ஷ்மி,
அபிராமி, சரஸ்வதி, வாணி, காளி, பூஜை , பாடல்கள்.

தோத்திரங்கள், துதிகள், பா மாலைகள்.

வண்ண வண்ண படங்கள். கொலு பொம்மைகள். நடனங்கள்.

ஆல்மோஸ்ட் தினசரி காலை, லாப் டாப் வாக்கிங் போது மீட் பண்ணும்,
ராஜேஸ்வரி, பார்வதி ராமச்சந்திரன், வாசுதேவன் திருமூர்த்தி , சசிதரன்,
 துரை செல்வராஜ் , கீதா சாம்பசிவம் ,

+Thenammai Lakshmanan 
திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களோ ஒரு படி மேலே சென்று கோவில்கள், வீடுகளில் காட்சி அளித்திடும் கொலு படங்களை இட்டு நம்மை
ஒரு தெய்வீக பரவசத்தில், ஆனந்தத்தில் முழுக அடித்துள்ளார்.

ஒரு சாம்பிளுக்கு அவங்க வலை லேந்து ஒன்னே ஒன்னு ஸ்டீல் பண்ணி போட்டு இருக்கிறேன். கோவிச்சுக்காதீக அம்மா. அதான், தாங்க்ஸ் சொல்லிட்டேன் இல்லையா !!

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பர்பெக்ட் கொலு அதி சுந்தர்.

 அத அங்கனேயே போய் பாருங்க. எங்கயா?  இங்கே சொடுக்குங்க.
நன்றி: ராஜேஸ்வரி 

எல்லோருமே தங்களுடைய வலையிலே நவராத்திரி விழா வை கோலாகலமா கொண்டாடி இருக்காங்க.



அபிராமி, லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, மா காளி
எல்லோருமே முன் வந்து நமக்கெல்லாம் அருள் புரியரப்போ,
நாமும்
அவங்களுக்கெல்லாம் மாலை போட்டு, தோரணம் கட்டி,
நெய் விளக்கு ஏத்தி,
கையிலே கிடைக்கிற நம்ம வெச்சு இருக்கிற எல்லா ஆயுதங்களை அதாவது டூல்ஸ் பார் அவர் ப்ரொபஷன் , நம்ம தினசரி வேலைக்காக இருக்கிற உபகரணங்களை எல்லாம் கொலு முன்னாடி வச்சு, சந்தன குங்குமம் இட்டு,
சூடம் ஏத்தி
பாயசம் எல்லாம் நைவேத்தியம் பண்ணிட்டு

வூட்டுக்காரி சமைச்சு வச்சு இருக்கிற லஞ்செல்லாம் சாப்பிட்டு முடிச்சபிறகு

அப்பாடி அப்படின்னு ஈசி சேர் லே சாயிரபோது  தான்,

கண் முன்னாடி வந்து நிக்கறது இந்த

கொண்டக்கடலை சுண்டல்.

உடம்புக்கு ஆகுமா ஜீரணம் ஆகுமா அப்படின்னு எல்லாம் யோசிக்காம,

அடுத்து வர்ற இரண்டு நாளும் சனி, ஞாயிரு ஆச்சே, டாக்டர் கூட இருக்கமாட்டாகளே அப்படின்னு யோசிக்காம,

வூட்டுக்காரி அந்த பக்கம் பாக்கும்போது,

ஒரு பிடி பிடிச்சோம் பாருங்க.

ஆஹா..

என்ன சுகம் என்ன சுகம். !!!

ஆத்தா.. அபிராமி,

அது வேணும், இது வேணும் அப்படின்னு எல்லாம் அபிராமி பட்டர் பாடி இருக்காரு அது உண்மை தான்.
  ***************************************************
 கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
*************************
அதெல்லாம் வேணும் தான்.
கூடவே அறுபது வயசுக்கப்பறம் பென்சனும் வேண்டும்.
அது இருந்தாலும், அபிராமி, அன்னையே !!
எது இருந்தாலும்,
எது இல்லாவிட்டாலும், 
 எத்தனை ஜனுமம் எடுத்தாலும்,

ஏரேழு பிறவியிலும்,  இந்த
நன்றி: கீதா சாம்பசிவம் மேடம்.

+Geetha Sambasivam 

இந்த பர்டிகுலர் கொத்துக்கடலை சுண்டல் வேண்டுமப்பா...
என்று மனசுக்குள்ளே சொன்னார் சுப்பு தாத்தா.

இன்னொரு பிடி, இன்னொரு பிடி, அப்படின்னு எல்லாத்தையும்,
தின்னு முடிச்சார்.



என்ன சுகம் என்ன சுகம். !!
என்ன அப்படி ஒரு மணம் !!

இந்த சுண்டலுக்காக ஆயுத பூஜையா ?
அல்லது ஆயுத பூஜைக்காக சுண்டலா ?

 அப்படின்னு வேற மனசுக்குள்ளே ஒரு சந்தேகம்.

நோ. நோ. இன்னிக்கு அப்படி எல்லாம் சிந்தனை நோ செய் மனமே.

 அந்த பரந்தாமன் அருள் இருந்தால், எல்லாமே கிடைக்கும்.
நல்லது நடக்கும். நல்லது கிடைக்கும்.

கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ. ,த்ரிவிக்ரமா, வாமன, மதுசூதனா,ஸ்ரீதரா, மாதவா, பத்மநாபா, தாமோதரா,

 என்று மறுபடியும்


எல்லா தைவத்தையும் பிரார்த்தனை பண்ணும்போதே

ஏதோ வயித்தை கலக்கறது போல் இருந்ததால்,

பாத் ரூம் செல்கிறார்,.

சுப்பு தாத்தா.

மே காட் ஸேவ் ஹிஸ் ஸ்டமக்.

+Balu Sriram
sir !!
ஹெல்ப் ஹெல்ப்  !!!

வியாழன், 2 அக்டோபர், 2014

ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே

லலிதா மிட்டல் அவர்கள் இயற்றிய பாடல்.

+Lalitha Mittal
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே !!
ஞான ஒளியாலே நீக்கு என் மனமருளே.

அழகான இந்த பாடல் பதிக்கப்பட்ட இடம். இது. 

அந்த நாமகள்
வெள்ளை தாமரை பூவில் இருப்பாள்
என்று பாடுவது
ஜேசுதாஸ்  அவர்கள்.