செவ்வாய், 20 டிசம்பர், 2022

slip of the tongue

 

slip of the tongue.

ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லை சொல்லிவிட்டு பெரும் அவஸ்தை இல்லாவிடினும் ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது இல்லையா ?
அது போல் சொன்ன சொல்லுக்கு மட்டும் அல்ல. பார்க்கும் எழுத்த்துக்களை சரியாக பார்க்கவில்லை எனினும் அதே தர்மசங்கடம் தான்.
முன்னே ஒரு தரம் நாகையில் புயல் அடித்த நேரத்தில் அலுவலகத்தில் இரண்டு மாதங்கள்ளாகியும் மின்சாரம் வழங்கப்படாத நிலையில் என் மேலதிகாரியுடன் சென்று ,
மின் வாரியத்துக்கு பதிலாக மீன் வாரியத்துக்கு போய் முறையிட்ட கதை சொன்னேன். கதை இல்லை. உண்மை நிகழ்வு.
அதே போல. இன்னும் ஒன்று.
மூன்று வருடம் முன்பாக. லஸ் கார்னரிலிருந்து விருகம்பாக்கம் வரை வரும் ஷேர் கார் கள் இருந்தன. 6 முதல் 9 பேரை ஏத்திச்சென்று ஆங்காங்கே நிறுத்தி இறங்கிவிடும். ஏற்றுக்கொள்ளும்.
இதில் ஒரு நாள் நான் லஸ் கார்னரில் இருந்து விருகம்பாக்கம் வந்தேன். of course with my better no no no..BEST half.
From there we will have to go by another auto to our house at Valasaravakkam
என் இல்லாள் மீனாட்சி பாட்டி யோடு. இந்த ஷேர் கார் அவருக்கு பிடிக்காத சமாச்சாரம். இருந்தாலும் ஓலா உபர் கிடைக்கவில்லை.
இறங்கியவுடனே, அந்த திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த புது ஹோட்டல். வாழை மரம் தோரணம் எல்லாம் கட்டி , எதோ அந்தக்கால எம்.ஜி. ஆர் பாட்டு.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ..பாடல். நானும் சேர்ந்து பாடிக்கொண்டே... இவ முறைக்கிறா...என்னது..பப்ளிக் பிளேஸ் கூட தெரியாம பாடியாரது ...ஷேம் ஷேம்
போர்டு பார்த்தேன். பிரெஷ் கிச்சன். Wah ! what a novel Name !!
என்ன புது தினுசா இருக்கிறதே.
..டயர்டா இருந்தது வேற ..மனைவியிடம், ஒரு சூடா ஒரு காபி சாப்பிட்டு விட்டு, அடுத்த ஆட்டோ விலே வீட்டுக்கு போவோம் என்றேன். அவளும் ஒரு அரை குறை மனதுடன் என்னுடன் வந்தாள் .
புதிய சேர்கள் , புதிய டேபிள்கள்...மலர் வளைவுகள். முதல் நாள் வரவேற்பு அலங்காரங்கள்.
ஆஹா என்று சொல்லிக்கொண்டே அருகில் ஒரு புது மேஜை யில் அமர்ந்தோம். அப்படி ஒன்றும் கூட்டமும் இல்லை.
என்ன சாப்பிடுவோம் என்று சொல்வதற்குள் இவள் சொன்னாள் . காபி மட்டும் போதும்.
சரி என்று வந்த சர்வரிடம் இரண்டு ஸ்ட்ராங் காபி என்றேன்.
வேற ஒன்னும் வேண்டாமா என்றார் அவர்.
ஒரு ஆவலை தூண்டினார்.
என்ன இருக்கு புதுசா என்றேன்.
மீன் வறுவல், ஆட்டுக்கால் சூப் என்றார்.
திடுக் கிட்டு எழுந்தேன். என்ன என்னென்னவோ சொல்கிறீங்க...
இல்ல சார்...சிக்கன் சூப் கூட இருக்கு என்றார்.
வயிறு பிசைய ஆரம்பித்து விட்டது. இவள் உடனே எழுந்து வெளியே போக நடையை கட்டிவிட்டாள் .
எனக்கும் என்னவென்று புரியவில்லை. இவள் பின்னாடியே போகவேண்டும் .
இது வெஜ் இல்லையா என்றேன் சர்வரிடம்.
நீங்க போர்டு பார்க்கலயா...என்றார்.
அவசர அவசரமாக வெளியே வந்து போர்டை பார்த்தேன்.
பிரெஷ் சிக்கன்.
நான் சிக்கனை கிச்சன் என்று படித்ததின் கோளாறு.
வரும் வழியெல்லாம், " ஒரு சரியான ஹோட்டலுக்கு க்கோட கூட்டிண்டு போக முடியல்ல. என்ன தான் குப்பை கொட்டிநீங்களோ இத்தனை வருஷமா காலேஜ் ல. பெரிய ப்ரொப்சர் இன்னு வேற பேரு !! "
ஆத்துக்காரியிடம் பல்ப் வாங்கிய கதை.
kosuru:
இதை படிக்கும் பல நண்பர்கள் இது என்ன? இதை விதிக்க பெரிசா நான் பல்ப் வாங்கி இருக்கேனாக்கும் என்பர். காதில் விழாமல் இல்லை.
கொசுறு.
May be an image of 2 people, glasses and text
Amaravathi S, Barath Kumar and 7 others
8 comments
Like
Comment
Send

செவ்வாய், 21 ஜூன், 2022

மனசுலே நின்ன வசனம்

 

மனசுலே நின்ன வசனம்

இந்த தலை பூ கொடுத்து எழுத சொன்னா கொஞ்சம் தர்ம சங்கடம் தான்.
ஏன்னு கேட்டா, அவரவர்களுக்கு , அவரவர் தலைக்கு எது சூட் ஆகுமோ அந்த பூ வை வெச்சுண்டு அழகு பார்க்கிறது, பார்க்க சொல்வது தான் வழக்கம்.
இருந்தாலும், ஒரு வசனம் வாழ்க்கையோட ஒட்டி இருந்தா, அது சினிமா, இலக்கியம் தான் அப்படின்னு இல்ல, வாழ்க்கையிலே நடந்து இருந்தாலும்,
எழுதுங்க....அப்படின்னு ...சொல்றார்.
1965 அல்லது 1966 ஆ இருக்கும் னு நினைக்கிறேன்.
எங்க அம்மா தன்னோட எட்டு குழந்தைகள், அதுலே மூணு பேர் தான் என்னையும் சேர்த்து வேலைக்கு போய் இருந்தாங்க, மிச்ச பேரையும் கூட்டிண்டு,
திருச்சி லே 1943 லெந்து அப்பாவோட இருந்த வீட்டையும் அப்பா வையும் கொஞ்சம் பிரிஞ்சு இருந்து தான் ஆகணும் அப்படின்னு ஒரு சூழ்நிலை. எதுனாலே, யார்னாலே அப்டிங்கறதுக்கும் இந்த டாபிக் க்கும் சம்பந்தம் இல்ல. ஸோ அத அந்தப்பக்கம் வெச்சுட்டு,
மேட்டருக்கு வாங்க ...என்று சொல்வாங்க இல்லையா ...அது போல வாரேன் .
எங்க அம்மா தன்னோட அஞ்சு குழந்தலோட அக்ஞாத வாசம். பக்கத்து பொன்மலை கிட்ட ஆலத்தூர் ன்னு ஒரு சின்ன கிராமம். எஸ். யூ ஆர் ரைட். ஆலத்தூர் சகோதரர்கள். வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடி பெயர்ந்தஆச்சு.
1966 1967 ..
மூத்த தங்கை ஸ்கூல் ஸ்டாப். பண்ணியாச்சு. இரண்டாவது தங்கை, அடுத்த தம்பி, திருச்சிக்கு ரயில் போயிட்டு, திரும்பி, சாயந்திரம் அதே டிரைன் லே வரணும்.
அடுத்த இரண்டு வாண்டுகள், அந்த கிராம பள்ளியிலே சேர்த்தாச்சு அப்படின்னு தான் நினைக்கிறேன். சரியா நினைவு இல்லை.
அம்மா தினமும் கிராமத்துலேந்து டவுனுக்கு போயி, அங்க வழக்கமா சில வீடுகள் லே இருக்கிற குழந்தைகளுக்கு , ச ரி க ம ப தா நீ ச , லெந்து , நின்னு கோரி, வனஜாக்ஷி அந்த கீதம் எல்லாம் சொல்லி கொடுத்துட்டு,
அப்படியே, அப்பாவையும் ஒரு கண் எப்படி இருக்கார் னு ஜன்னல் வழியா பாத்துட்டு வருவா. நடந்து போயிட்டு நடந்து தான் வருவா. மொத்தம் 16 கிமி.
எங்க அம்மா சென்னை லே புறந்தவா. அவ அப்பா மைசூர் லே விச்வேச்வஸ்வரய்யா வோட சேர்ந்து அணை கட்டிய எஞ்சினீர். அண்ணா மைசூர் ராஜாவோட டாக்டர். இருந்தாலும், அந்தக்காலத்துலே, புறந்தாம் போறது அப்படிங்கறது ஒரு இமயமலை உச்சிக்கு செல்வது போலத்தான். எனக்கு தெரிஞ்சு, லைஃ டயத்துலே ஒரு தரம் இல்லை இரண்டு தரம் மைசூர் சேலம் போயிருக்கா.
ஜாஸ்தி படிக்கலை இருந்தாலும் பொது அறிவு ஜாஸ்தி. தகிரியமும் ஜாஸ்தி. மனித நேயம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. நம்மை யாருக்கு பிடிச்சு இருக்கோ அவரோட மட்டும் பேசுவது என்று இருப்பார்.
அவருண்டு குழந்தைகள் உண்டு என்று இருப்பார் ..
ஒரு நாளைக்கு ,எங்க அம்மா திருச்சி லெந்து வரதுக்கு முன்னாடியே, திருச்சி லே படிக்கிற தங்கையும் தம்பியும் வந்தாச்சு.
மூத்த தங்கை அவர்கள் இரண்டு பேருக்கும் செஞ்சு வெச்சு இருக்கிற டிபினை போட்டு, அவர்கள் சாப்பிட்டுண்டு இருக்கும்போது, அவர்கள் இடையே வாய்ச்சண்டை.
திடீர்னு என்ன நினைச்சுண்டான் னு தெரியல்ல, இந்த புள்ள கோபத்துல நான் கிணத்துல குதிச்சுடுவேன் அப்படின்னு தங்கச்சிய பயமூர்த்தினானாம்.
அவளும் , தைரியம் இருந்தா , குதிடா பார்க்கலாம். அப்படின்னு சொல்ல,
இவன் திடு திடு ன்னு கொல்லைப்பக்கம் போயி, அங்க இருக்கிற கிணறு லே , பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டு வழியா கீழ் வரைக்கும் போயிட்டான்.
இவன் கிணத்துக்குள்ளே போனதை மந்த இரண்டு தங்கைகள் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழிச்சு என்னடா இவனைக்காணோம் அப்படின்னு தேடினப்போ
பின்னாடி கிணத்துலேந்து சன்னமா சவுண்ட் வருது.
அம்மா,...அம்மா...ஏற தெரியல்ல. அப்படின்னு அழ ஆரம்பிச்சுட்டானாம்.
இந்த தங்கைகளுக்கு என்ன செய்யறது ன்னு தெரியல்ல. அம்மாவும் இல்ல. பாதாள கரண்டி யா விடலாம் என்று பார்த்தா அது பக்கத்து வீட்டிலே இருக்காம்.
கிணத்துல தண்ணீர் ஒரு 25 அடி ஏ இருக்கு. இவன் அதுக்கு மேல இரண்டு அடி மேல இருக்கான்.
இந்த இரண்டு தங்கைகளும் பக்கத்து வீட்டுக்கு போயி,
மாமா...மாமா....தம்பி, கிணத்துல விழுந்துட்டான்...னு கத்த...
ஒரு நாலஞ்சு பேர் அக்ரஹாரம் இல்லையா...ஓடி வந்து......
அதுலே ஒருவர் கையிலே கயிறோட இறங்கி, அவனையும் தன்னோட கட்டிண்டு , மேலே வந்து அவனை காப்பாத்தி இருக்கார்.
மேலே வந்ததும் பெரிய தங்கை அவனை இரண்டு மொத்து மொத்தினாளாம்.
அந்த டயத்திலே தான் அம்மா வரா வீட்டுக்குள்ளே இத்தனை பேர்...என்ன என்ன ன்னு கேட்டுண்டு..
ஒருவர் விவரமா ஸ்டோரி சொல்ல,
அம்மா...என் தம்பியை கூப்பிட்டு, அனைச்சுண்டு, சொல்றாளாம்.
டேய்..பாலு...
குதி...கிணத்துல இல்ல,
சமுத்திரத்துலே வேணாலும் குதி.
ஆனா, குதிக்கிறதுக்கு முன்னாடி, எப்படி எழுந்துக்கறது ன்னு யோசனை பண்ணிட்டு குதி.
என்றாளாம்.
எங்க அம்மா சொன்ன நீதி வாக்கியம்
அதான். ரிஸ்க் எடுக்கலாம். எடுத்துக்கத்தான் வேண்டும். பல பல சிச்சுவேஷன் லே .. ஆனா எந்த அளவுக்கு போகணும். எப்படி எப்ப திரும்பி வரணும்
அப்படின்னு ஒரு ரிஸ்க் மேனேஜ்மேண்ட் , க்ரைடீரியா மனசுலே இருக்கணும்.
இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த தம்பி பிற்காலத்திலே பனாரஸ் யூனிவர்சிட்டி லே பிலாசபி ப்ரோபசர் .
லைஃ டயத்திலே வந்த சூழ்நிலையிலே சவாலே சமாளி என்று சமாளித்ததும் எங்க அம்மா கொடுத்த அறிவுரை தான் னு நினைக்கிறேன்.
அதுக்கு ஆப்போசிட் சுப்பு தாத்தா.
கான்பூர் போ ...ஜாம்சேட்புர் போ ப்ரோமோஷன் லே சொன்னப்போ,....1989 லே .... There were good reasons but.....
ஆனா...ஒன்னு சொல்லணும்.
மானசரோவர் லே கங்கை நீரிலே காலை 5 மணிக்கு இறங்கி விறைச்சு போயி, இருக்கேன்.
எதைக்கண்டு அஞ்சவேண்டுமே அதைக்கண்டு அஞ்சத்தான் வேண்டும். மற்றதை எதிர்கொள்ள வேண்டிய துணிவை ஏற்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை..அஞ்சுவது
அஞ்சல் டு அறிவார் தொழில்..
.வள்ளுவர் சொல்லி இருக்கார் இல்லையா.
பிளை டு ரியாஸ் அன்னோன் பட் ஹாவ் ஆள்வேவ்ஸ் ஏ பிளான் டு லேண்ட் சேப்
Fly to areas unknown, but have always a plan to land safe, my boss used to say when i took charge in 1992 as HR man.
As a HR Manager, I did dive into diffiult areas, but always had a plan to swiftly get out of the situation too.
எங்க அம்மா சொல் இன்னிக்கும் நினைவு இருக்கு.
The well is also well in my memory.
May be an image of outdoors
Sankaranarayanan Usha, Anandhi Vaithiyanathan and 14 others
11 Comments
Like
Comment
Send