புதன், 9 செப்டம்பர், 2015

ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

திருவரங்கப் பெருமாளை லைப் லே இன்னும் ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும்.   ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி என்று உயிர் உடலைக் களையுமுன்னே அந்த அரங்கனைக் காண வேண்டும் என மனதிலே கனவு கண்டு கொண்டே இருந்த  சுப்பு தாத்தாவுக்கு

 ஒரு நாள் அந்த அனுபவம் கிடைத்தது இன்னமும் நம்ப முடியவில்லை.

அன்று காலையில் இருந்தே,

ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
என


 பாடலை முணு முணு த்துக்கொண்டே கணினியைத் திறந்தவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி.

அந்த பதிவு அக்கார வடிசல் ஆக இருந்தது.

தாத்தாவின் ஸ்ரீரங்கத்து நண்பர் , ஸ்ரீரங்க பிராகாரச் சிறப்புகளை ப்ரவசனம் செய்துகோண்டு இருந்தார்.

ஆண்டாள் சன்னதி பற்றி அவர் தரும் விளக்கம் அற்புதம்.

+Rishaban Srinivasan 
 அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும் சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம் சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும்.  ஆச்சர்யம் இல்லையா.. ! இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..
 அதைப் படித்த தாத்தாவோஅந்த வர்ணனையிலேயே பிரமித்துப் போய் நிற்கிறார். 

ஆஹா, நம்ம எப்ப பார்க்கிறது அந்த ஆண்டாள் பார்த்த பார்வை யை ?

என்னதான் இருந்தாலும் நம்ம மனுஷ்ய ஜன்மம் தானே. 
அதுனாலே, அந்த பார்வையை முந்திண்டு, என்னிக்கோ பார்த்த,

அந்த பார்வை ஒன்றே போதுமே... அந்த பாடல் தான் மனசுக்கு வர்றது. 
இல்லேன்னா, என்ன பார்வை ...அந்த ஊட்டி வரை உறவு பாடல்.

இப்ப எல்லாம் குழந்தைங்க நம்ம காலம் மாதிரி மரத்தை சுத்தி சுத்தி பாடரதில்லே.ரூட்டே மாறிடுத்து.

அடே !! எப்படி எல்லாம் மனசு எங்கே எங்கே போயிடுது?
நாராயண..நாராயண...

இந்த இகலோக பார்வை எல்லாம் பார்த்தது போதும். 
வேண்டியது பார்த்தாச்சு.
நம்ம பார்க்கக் கொடுத்துவைத்து இருக்கவேண்டியது 
அந்த திவ்ய தரிசனம் பார்வை ,


அது நமக்கு கிட்டவேண்டும் என்று நினைத்து,
 ஒரு த்ருட சங்கல்பம் பண்ணின பிறகு, திரும்பவும்,
அ ந்த ஆண்டாளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
அந்த ஆண்டாள் கண்ட ரங்கனை தரிசிக்க வேண்டும் வேண்டும் என மனசு 
துன்புறுத்த,
.

நான் , "தயாரா இருக்கேன். ஆனா அந்த அந்த அரங்கனே வந்து எனை
அழைத்துச் செல்வான் என
அமைதியாக காத்து இருக்கின்றேன்..  " என்று பின்னூட்டம் இட,

". வாங்க ..நான் கூட்டிக்கிட்டு போறேன்." என எனது நண்பரும் பதிலளிக்க,

சட்னு, சகதர்மிணி கிட்ட இருக்கிற திசைலே திரும்பி,
அடியே !! ......."ஒரு வார்த்தை   '"  என்று இழுத்தேன்.

"அதான் நானும் பார்த்துகிட்டு இருக்கேன். ஒரு வார்த்தை, ஒரு லக்ஷம்" என்னமா, இந்த சின்னஞ்சிறு சிறிசுகள் டக் டக் அப்படின்னு சொல்லுது ! என்றாள்.

இவள் விஜய் டி.வி லே முழுகி இருக்கும்போது எனக்கு மோட்சம் கண்டிப்பா கிடையாது. என்று நினைத்து,

ஒரு கடுதாசி லே " நான் ஸ்ரீரங்கம் அவசரமா போறேன். இரண்டு நாளைக்குள்ளே பெருமாளைப் பார்த்துட்டு வந்துடறேன்" எழுதிவச்சுட்டு,
அதையும் அவள் முன்னாடி இருக்கிற மேஜை லே வச்சுட்டு, கிளம்பி இருப்பேன்.
+Anuradha Prem
நன்றி மேடம்.

 அதையும் ஒரக்கண்ணாலே பார்த்த அவள் அதை
எடுத்தாள்,கவுத்தாள் என்ற மூடிலே,

"என்ன 2 நாள், உங்க பிரண்ட்ஸ் ஸ்ரீரங்கம் எல்லோரையும் பார்த்துட்டே 2 மாசம் கழிச்சே வாங்க..அதுக்குள்ளே சூப்பர் சிங்கர் 5 லே யார் பைனலிச்ட் ?  பரீதா தான் அப்படின்னு தெரிஞ்சுடும். " என்றாள். அவளுக்கு அவள் கவலை.

வாசலைத் தாண்டி இருக்கமாட்டேன்.
"செல் ஐ எடுத்து வச்சு இருக்கீகளா ?" சத்தமா சவுண்ட் வருது.
ம்....ம்....சொல்லிக்கொண்டே

அப்பாடி, என்று பெரு மூச்சுடன் கோயம்பேடுக்கு விரைந்தேன்.

ரதி மீனா ஆம்னி ஒன்று எனக்காகவே காத்து இருந்தது போல, நான் ஏறி உட்கார்ந்ததுமே புறப்பட்டு விட்டது.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் லேந்து ஸ்ரீரங்கம் போகும் ரூட்.

பஸ் அதன் வேகத்தில் தானே போகும்.
 மனசு மட்டும், வாயு வேகத்திலே போகிறது. இல்ல பாயறது.


அடுத்த நிமிசமே ரங்கனின் பாதம் அடைந்து சரணாகதி என்று விழுகிறது. 

அதுலேயே லயிச்சு போன நான்..........


கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தா ப்ரவர்த்ததே ..யாரு பாடறது !! எம். எஸ். அம்மா ..!!!
ஆமா..
அது பாடி முடிஞ்சவுடனேயே.. நித்யஸ்ரீ அவங்க, எது நித்யமோ  அத பாடராக.
ஸ்ரீமன் நாராயண....ஸ்ரீமன் நாராயண ...பௌலி ராகம். சுகம். சுகம்.

ஆஹா !!  கேட்டுக்கொண்டே இருக்கும்போது,  ரங்கன்  கண் முன்னே பிரசன்னம்.

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
 அடிவட்ட தாலளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாய மூடறுத் தண்டம் போல் நீண்டதே
மாகாய மாய்நின்ற மாற்கு.
ரங்கா. ரங்கா.  யார் கத்துறது அப்படின்னு பார்த்தா, அந்த கிளி அடடா!! அடா அடா !1 அந்த கிளிக்கு பாருங்க என்ன பாக்கியம் ? யாருக்குமே கிடைக்காதது.
லைப் முழுக்கவே ரங்கன் பெயரைச் சொல்ல, சொல்லிக்கொண்டே இருக்க, கொடுத்து வைத்து இருக்கவேண்டும் இல்லையா..

இதோ !!ரங்கன் கோவிலை அடைந்துவிட்டேன். ராஜ கோபுரம் கண் முன்னாடி!!. என்ன கம்பீரம் !!

உள்ளே நுழைய பார்க்கும்போது, முதுகை யாரோ தட்டுகிறார்கள்.

என்ன என்று பார்க்கிறேன். அங்கரக்ஷகன்  த்வார பாலகன்  மாதிரி இருக்கும் ஒருவர் என்னிடம் செக்யூரிடி டோர் வழியாகத்தான் உள்ளே போகணும் அப்படின்னு ஒரு குச்சிய வச்சு திசை சொல்றார்.

அப்படியே !!என்று சொல்லி , உள்ளே ஒரு நிலைக் கதவு மாதிரி ஒன்று அதன் உள்ளுக்கு போகும்போது, இடுப்பு பெல்ட் பீப், பீப் என்கிறது.  என்னை காவலர் பார்க்க, சார் அது இடுப்பு பெல்ட். என்றேன்.

நல்லது. உள்ளே போங்க, என்ன அது மூட்டை. ? சோத்து மூட்டையா ??அந்த ஹாண்ட் பாக் திறந்து காண்பிங்க..என்கிறார்.

நான் ஜிப் லே கை வைக்குமுன்னே அவரே திறக்கிறார். என்ன இது ? என்று 2 போட்லங்களை கேட்கிறார். அதையும் திறந்து பார்க்க, ஒன்றில் 4 இட்லி, எண்ணை மிளகாய் பொடி தடவி, இன்னொன்று தயிர் சாதம்.

இதெல்லாம் எதுக்கு என்று அவர் கேட்பார் என்று நினைத்தேன். கேட்கவில்லை.
அதற்குள் இன்னொரு சின்ன வாசல் .ஒரு பெரிய கேட்டுக்குள்ளே ஒரு சின்ன வாசல், ஒரு பூட்டு.
என்ன இது ? புரியல்லையே..
அந்த பூட்டு பக்கத்துலே ஒரு சின்ன கீ போர்டு. நம்ம வழக்கமா பார்க்கிற ஏ . டி. எம். மாதிரி இருக்குது.

பக்கத்தில் நிற்கும் ஒரு காவலர், உள்ளே போய் ,
பாஸ் வாங்கிக்கங்க..
என்கிறார்.
அந்த கருவியை பார்க்கிறேன். படிக்கிறேன்.
ஆங்கிலம், இந்தி, தமிழ் எல்லாத்துலேயும் வாசகங்கள்
*********************************************************************************


 ஸ்ரீ ரங்கம் கோவில்
  உங்களை அன்புடன் வருக வருக என  வரவேற்கிறது.
தமிழில் அறிய 1 ஐ அழுத்தவும்.
இந்தியில் அறிய 2 ஐ அழுத்தவும்.
ஆங்கிலம் என்றால் 3 ஐ அழுத்தவும்.

***********************************************************************************
நம்ம தான் தமிழ் பதிவர் ஆயிற்றே..! புதுகைக்கு வேற அக்டோபர் 15 போகவேண்டும். ஒன்றை அழுத்தினேன்.

அடுத்த ஸ்க்ரீன்  அதுலேயே வந்தது.

ஸ்ரீ ரங்கம் கோவில் உங்களை வரவேற்கிறது.
நீங்கள் இன்று வரும் 278987 எண் கொண்ட பக்தர் ஆகும்.
உங்கள் வரவுக்கு நன்றி.

இதற்குப்பின் வருபனவற்றை கவனமாகப் படித்து பதில் தரவும்.

நீங்கள் கோவில் ஊழியராக இருப்பின் 1 ஐ அழுத்தவும்.
மற்றவராக இருப்பின் 2 ஐ அழுத்தவும்.

நான் ரங்கனின் ஊழியன் .பிறந்த நாள் முதலே.
ஆனாலும் நான் கோவில் ஊழியன் இல்லை என்று
2 ஐ அழுத்தினேன்.

அடுத்த போர்டு வந்தது.

அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் 1 ஐ அழுத்தவும்.
தர்சனம் மட்டும் செய்ய 2 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.


அர்ச்சனை அரங்கனுக்கு  என்றால் 1 ஐ அழுத்தவும்.
தாயாருக்கு என்றால் 2 ஐ அழுத்தவும்.
மற்ற கடவுளர்க்கு என்றால் 3 ஐ அழுத்தவும்.
எல்லோருக்கும் என்றால் 4 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.

 அடுத்த ஸ்க்ரீன் வருகிறது.

துளசி மாலை, அர்ச்சனை தட்டு பெற 1 ஐ அழுத்தவும்.
மாலை அர்ச்சனையுடன் பிரசாதம் பெற 2 ஐ அழுத்தவும்.

2 ஐ அழுத்தினேன்.

நைவேத்யம் /பிரசாதம் 
சரியான எண்ணை அழுத்தவும்
அக்கார வடிசல் , வெண்பொங்கல், புளியோதரை எல்லாம் 1 ஐ அழுத்தவும்.
சக்கரை பொங்கல் மட்டும் 2 ஐ அழுத்தவும்.
புளியோதரை மட்டும் 3 ஐ அழுத்தவும்.

1 ஐ அழுத்தினேன்.

ராமா !! இன்னும் எத்தனை எத்தனை ஸ்க்ரீன் வரும் என்றே தெரியவில்லை.  திரும்பிப்பார்த்தேன்.எனக்குப் பின்னால் ஒரு பெரிய க்யூ ஒன்று ஆதி சேஷன் போல நீண்டு இருந்தது.


சீக்கிரம் சீக்கிரம் ..என்கிறார் பின்னால் இருந்து ஒருவர்.

டோன்ட் வேஸ்ட் டைம்.  டிலே பண்ணினால் டைம் லாப்சு ஆகிவிடும்.திரும்பவும் ஆரம்பத்திலேந்து வரணும் என்று இன்னொருவர் பயமுறுத்துகிறார்.

போர்டில் கவனத்தைச் செலுத்துகிறேன்.

நீங்கள் கட்டவேண்டிய கட்டணம் ரூபாய் 742.00

நெப்ட் மூலமாக செலுத்த 1 ஐ அழுத்தவும்.
காஷ் ஆக செலுத்த 2 ஐ அழுத்தவும்.

அய்யய்யோ...ராமா ராமா.  டெபிட் கார்டு கொண்டு வந்திருக்கேனா அப்படின்னே தெரியல்லையே..பெட்டிலே இருக்கு. அத எடுக்கணுமே
அதுக்குள்ளே ஸ்க்ரீன் லாப்ஸ் டைம் அப்படின்னு சொல்லிடுமே !!
என்ன பாஸ்வர்ட் அப்படின்னும் சரியா தெரியல்லே.

அதனாலே கேஷ் என்பதற்கான 2 ஐஅழுத்தினேன்.

நன்றி.
உங்களுக்கான பணம் கட்டும் ரசீதினை எடுத்து, தேவஸ்தான அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மேலே செல்க.. 
மாதவன் அருள் பெருகட்டும்

என்ற வாசகம்.

அடுத்த 10 வினாடிகளில் ஒரு சின்ன ஸ்லிப். அந்த மிஷின் கக்கு கி றது .

ஸ்லிப் எண்; 4787 தேதி:செப்டம்பர் 8 2015
தொகை: ரூபாய்: 742.
துளசி மாலை, அர்ச்சனை தட்டு, எல்லா பிரசாதமும்.
தங்கள் பெயர், நக்ஷத்ரம் விவரங்களை அர்ச்சகரிடம் சொல்லவும்.

என்று பிரிண்ட் அடித்து இருந்தது.

ஆஹா. முடிந்து விட்டது. எல்லா ப்ரொசீஜரும்  என்று எண்ணி, அந்த ஸ்லிப்பை எடுத்துக்கொண்டு , பணம் கட்டும் இடத்தை நோக்கி விரைந்தேன்.

அங்கேயும், எனக்கு முன்னாடி ஒரு இருபது பேர் நிற்கிறார்கள் அந்த க்யூவில்.
நம்ம டர்ன் க்காக எப்பவுமே வைட் பண்ணத்தான் வேண்டும்.

எப்ப எப்ப எது எது எப்படி எப்படி கொடுக்கறது அப்படிங்கறது
பெருமாளுக்கு நன்றா தெரியும். என்று நினைத்துக்கொண்டேன்.
\
என்னுடைய டர்ன் வந்தது.

பாண்ட் பையில் கையை விட்டு பர்சை திறந்தேன்.

திடுக்கிட்டேன்.

நோட்டுக்கள் வைக்கும் இடத்தில் ஒரு நோட்டு கூட இல்லை. அஞ்சு ஆயிரம் ரூபா நோட்டு எடுத்து வச்சேனே !! எங்கே போச்சு அத்தனையும் ???????

ராமா ...ராமா

 .


ரொம்ப பெரிசா கத்தி விட்டேன் போல இருக்கிறது.

எல்லோரும் பார்த்த பார்க்கும் பார்வையில் அது புரிகிறது.


நான் எங்கே இருக்கிறேன் ?

நன்றாக பார்க்கிறேன்.

என்ன இது !! பஸ் இப்ப தானே ஸ்ரீரங்கம் கிட்ட வந்து கொண்டு இருக்கு...அதுக்குள்ளே இத்தனை
எல்லாமே
மனசுக்குள்ளேயே நடந்து இருக்கு போல.
இந்தக் கையால் அந்தக் கையை ஒரு தரம் கிள்ளிப் பார்த்தேன்.
ஆம். நாம் பார்த்தது எல்லாம்
கனவு போல இருக்கு

இந்த லைபே ஒரு கனவு போலத்தானே

புயலுக்குப் பின்னே அமைதி  போல மனம் கொஞ்சம் அமைதியானது.

கையில் இருக்கும் பையைத் திறந்து பார்த்தேன். பர்ஸ் இருந்தது.
ஐயாயிரம் ரூபாயும் இருந்தது.
பெருமாள் தாயாருடன் ஒரு படம் பக்கத்துலே.
கண்களிலே ஒற்றிக்கொன்டேன்.விடியும் நேரம். விடிய வில்லை.

பஸ் அரங்கன் கோவிலுக்குச் செல்லும் வீதியில் நிற்கிறது.
.
எழுந்து பார்க்கிறேன். சைட் சீட் காரர்,
சீக்கிரம் இறங்குங்க.. என்கிறார் ஒருவர்.

ரங்கா ரங்கா. எல்லாமே நீதான்
எல்லாம் அந்த பெருமாள் செய்வது. !!

மனசுக்குள் சொல்லிக்கொண்டே இறங்கினேன்.

சுற்றி முற்றி பார்த்தேன். அந்த ரிஷ ப ன் வந்து இருப்பாரோ ?
அவரை நான் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை.
பஞ்ச கச்சம், திருமண் ...அப்படி எல்லாம் இருக்காது.
ஜீன்ஸ்.பாண்ட். பனியன். நோ. நோ.

நிறைய பேர்கள் அவரவர் உறவினரை கூட்டிக்கொண்டு ஆட்டோ பிடிச்சு போய்க்கொண்டு  இருந்தனர்

இவர் எங்கே இன்னும் காணோமே... என்று மனம் ஒரு நிமிடம் தவித்தது போல் ...

ரங்கன் நம்மை கை விட மாட்டான். ஒருவரும் வரவில்லை என்றாலும் நம்ம
ப்ரண்ட் கிடாம்பி,கிருஷ்ண அய்யங்கார் ராமன் சித்திரை வீதி லே இருக்கிறார். எந்த சித்திரை வீதின்னு தான் சரியா ஞாபகம் இல்லை. விசாரிச்சுகலாம். அவர் வீட்டுக்கு போகலாம். ஆனால் அவர் அங்கே தான் இருக்கிறாரோ இல்லை, 
மனசுலே என்ன என்ன எண்ண ஓட்டங்கள். !!! எல்லாமே 100 மீட்டர் ஈவென்ட் தான்.

யாரோ ஒருவர் ஓட்டமும் நடையுமா வந்துகொண்டு இருந்தார்.
என் கிட்ட வர்றார்.
சார். நீங்க தான் சுப்பு தாத்தாவா ?

ஆஹா...ரிஷபன் வந்துட்டார்.
ஆனா கன்பர்ம் பண்ணிக்கணும் இல்லையா..
காலம் போற போக்கு. யாரையுமே நம்ப முடியலையே..
கையிலே வேற ஐயாயிரம் ரூபா இருக்கு. தொட்டு பார்த்துக்கொண்டேன். 

சார் யார் ? சன்னமா கேட்டேன்.

"நானா..??
என்னை எல்லாரும் ரங்கன் னு கூப்பிடுவா..


நீங்க எப்படி வேணா கூப்பிடலாம்."


சீனிவாசன், கோவிந்தன், கேசவன், மாதவன், மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் , ராமன், கிருஷ்ணன்,
எல்லாமே அவன் தான்.
.ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதசே 
ரகுநாதாய நாதாய சீதாய பதயே நமஹ.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக