வியாழன், 21 ஆகஸ்ட், 2014

டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்

இந்தக் காலத்துலே புள்ளைய, ப்ளஸ் டூவுக்குப்  பின்னே, டாக்டருக்குப் படிக்க வைக்கறதை , புள்ள டாக்டர் படிப்பு படிக்கிறதை விட, லட்ச லட்சமா இல்ல கோடி கோடியா பணம் கொட்டிட்டு, அத திருப்பி எடுக்க என்ன வழி என்று தேடுவதை விட,

ஒரு லாப்  Lab ஆரம்பித்து விட்டு அதில் இரண்டு மூணு டேக்நீஷியனை வேலைக்கு போட்டு, ஒரு ரேடியாலஜிஸ்ட், ஒரு டாக்டர் , வேலைக்கு அமர்த்தி, மாசம் மாசம் மினிமம் இருபது லட்சம்  கிடைக்க வழி பண்ணலாம் என்று பல பெற்றோருக்கு ,

விஜய் டி.வி.கோபிநாத் அவர்களின் நீயா நானா ப்ரோக்ராம் பார்த்து தோன்றியிருக்கலாம் என்று சொன்னால்,

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

 என்ன ? ஒரு பத்து பதினைந்து டாக்டரோட கிருபை இருந்தா போதும். என்றும் தோன்றுகிறது.

எந்த வீதியிலும் இன்னிக்கு 2 அல்லது மூணு லாப், எக்ஸ் ரே, ஸ்கான் செண்டர் பார்க்கறோம்.

ஆடித் தள்ளுபடி இப்ப மாஸ்டர் ஹெல்த் செக் அப்புக்கும் வந்தாச்சு.

2500 ரூபா . அடுத்த 10 நாட்களுக்கு ரூபா 1499 ல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் நலனுக்காக.

 என்ற போர்டு
ஏதோ  புதுப்பட பேனர் banner  மாதிரி ஆங்காங்கே காண்கிறோம்.  

ஒவ்வொரு நாளும் எதுவாவது ஒரு இடத்தில், அவரிநேஸ் ப்ரோக்ராம் awareness program.

சக்கரை இருக்கா ? அர்த்ரிடிஸ் இருக்கா, blood pressure எத்தனை
 ?நீங்கள்   குண்டா ? கவலைபடாதீர்கள். ஒரே  நாளில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க முடியும்.


ஒல்லியாக இருந்தாலும் இவர்கள் விடுவதில்லை.
திடீர் என்று உங்களுக்கு எடை குறைந்து போய் இருக்கிறதா?
உங்கள் பி எம். ஐ. எத்தனை?

உங்களுக்கு கான்சர் இருக்கிறதா என்று செக் செய்தீர்களா?காச நோய் இருக்கிறதா ?

வயசானாலும் ப்ராஸ்டேட் செக் பண்ணிக்குங்க. பின்னாடி கஷ்டபடாதீக.

இது போல எங்க பார்த்தாலும் ஒரே விளம்பரம் கலர் கலரா.

நம்ம உடம்பு நல்லா இருக்கணுமே அப்படின்னு கவலைப் படரவங்க நிறையவே இருக்காங்க.

நம்ம போய் சேரும் வரை, கடைலே சக்கரை ஸ்டாக் இருக்கனுமே என்று ரேஷன் ஷாப் போகிறவர்களை  விட,

நம்ம உடம்புலே சக்கரை இருக்கக் கூடாதே என்று டயக்நோச்டிக் செண்டர் போகிறவர்கள் தான் இன்று  அதிகம்.

இல்லாத வியாதியைத் தேடி அலைகிறோம் என்று சொன்னாலும் சரியாகத்தான்  இருக்கும்.

 சில சமயம் வியாதிகளை நாமே வருந்தி வருந்தி அழைக்கிறோம் என்று சொன்னாலும் சரிதான். நல்ல உடம்பை வருத்திக்கொள்கிறோம் என்றாலும் உண்மைதான்.

கடந்த ஒரு இருபது வருசங்களா, என்னை மாதிரி கிழங்கள் , இன்னாடா, டாக்டர் கிட்டே போனோமா, மருந்து கொடுத்தாரா , சாப்பிட்டு இரண்டு நாள், மூணு நாள் , மாக்சிமம் அஞ்சு நாள்லே குணமானோமா இல்ல, போய் சேர்ந்தோமா என்று இல்லாம,

அந்த பிளட் டெஸ்ட் இந்த மோஷன் டெஸ்ட், சி.டி,ஸ்கான், டி.வி.டி. ஸ்கான், ஒரு பல் சொத்தையா போயிடுச்சுன்னா, வாய் முழுக்க அல்ட்ரா சோன் ஸ்கான் எல்லாம்...

போதுமடா சாமி என்று இருக்கிறது.

காஷ்யபன் மட்டும் இல்ல சுரேகா சார் மட்டும் அல்ல, , நிறைய பேருக்கு இந்த மருத்துவர்கள் படுத்தும் பாடு, பொது மக்கள் படும் வேதனை இருப்பதை அந்த ப்ரோக்ராம் லே பப்ளிக் பார்ட் லேந்து இரண்டு பேர் கோபப்பட்டு பேசியது, கோபிநாத் அவர்கள் நடு நடுவே டாக்டர்களை சாடினதுஎல்லாம் பார்த்து தெரிகிறது.

இத்தனையும் போதாது என்று அந்த ப்ரோக்ராமிலே ஒரு டாக்டர்,

"சார் !! நாங்கள் எல்லாம்  நல்லவங்க சார், நம்புங்க சார், எங்களை சம்பளத்திலே வெச்சு இருக்கிற ஆஸ்பத்திரி கட்டாயத்துலே தான் இதெல்லாம் டெஸ்ட் செய்யச்சொல்லி சொல்றோம்" சத்யம் பண்றது போல ,

ஏதோ ஒரு புதுசா உண்மையை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு சொன்னதும்

அந்த அப்சர்வர் ராஜ் குமார்.  எதோ ஒரு பெரிய ஹாஸ்பிடல்.சேர்மனாம்  ஒருவர்

 இன்னிக்கு தேதியிலே மருத்துவ இண்டஸ்ட்ரி முழுக்கவே யார் கையிலே இருக்கு அப்படின்னு புட்டு புட்டு வெச்ச பின்னே,

நல்லாவே நாம் புண்ய பூமியாம் நமது பாரத பூமியிலே என்ன என்ன நடக்குது அப்படின்னு தெரியறது. தெரிஞ்சுகிட்டோம்.

ஊரை புரிஞ்சுகிட்டேன். சாமி.  கோபிநாத்துக்கு நன்றி.

ஆனா இன்னொரு பக்கம்.
அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கப்பறம் இன்டர்ன் ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் பண்ணிட்டு வரவங்களுக்கு எல்லாருக்குமே கவர்ன்மெண்ட் வேல கொடுக்க முடியாத நேரத்துலே,

டாக்டர்களும் படிச்சு முடிச்சபரம், கை நிறைய  சம்பாதிக்க என்னதான் பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க

ப்ரைவேட் ஆஸ்பத்திரி பெரிய ஹாஸ்பிடல், அங்க இருக்கிற பாஸ் சொல்றபடிதானே நடக்கணும்.

எங்கே யும் எப்போதும்
பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்

.Boss is Always right.
மனித நேயமாவது வெங்காயமாவது !!


சுப்பு தாத்தாவுக்கும் லேடஸ்டா ஒரு அனுபவம்.

சொல்றேன் கேளுங்க.

பேரப்புள்ள இப்பதான் பத்து வயசு முடிஞ்சு இருக்கு.
அமெரிகாவிலேந்து சம்மர் வெகேசனுக்கு வந்து இருக்காப்போல.
அந்த ஊர் கிளைமேட் இந்த ஊர் கிளைமேட், பகல் அங்கேன்னா நைட் இங்கே.

இந்த புள்ள, ராத்திரி 2 மணிக்குதான் தூங்க ஆரம்பிக்குது. பகல் ஒரு மணிக்குதான் எந்திருச்சு, உடனே ஐ. பாட் பார்க்க ...

அந்த புள்ளையோட அம்மாவுக்கு ஒரே கவலை. எனக்கும் தான்.
என்ன ?

மூணு நாளைக்கு ஒரு தரம், சில சமயம்,4  நாள், சில சமயம்
அஞ்சு நாளைக்கு ஒரு தரம் ஸ்டூல்ஸ்  மலம் கழிக்க போகிறான்.

 வல்லையே நான் என்ன செய்யட்டும் அப்படின்னு சொல்றான்.

நான் அடிக்கடி சொன்னா, டோண்ட் அன்னாய் மி
அப்படின்னு இங்க்லீஷ் லே திட்டறான்.

எதிர்த்தாபோல இருக்கற குழந்தை ஸ்பெசலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனா என் பொண்ணு.

அந்த டாக்டர் எம்.டி. டி.என்.பி. டிப் .சி.ஹெச். M.D.(paediatric) , DNB, Dip.in child health,  அப்படின்னு எல்லாம் படிச்சவரு.

அவங்க மிசர்சும் டாக்டரு.

ஒரு இரண்டு  நிமிஷம் கேட்டுட்டு,

பையனைப் பார்த்து டாக்டர் கேட்டாரு.
தினம் என்ன சாப்பிடற ? எப்ப சாபிடற ?

வாட் ? என்று கேட்டான் பேரன்.
டாக்டர், அவனுக்கு லோகல் தமிழ்  புரியாது.பெட்டெர் யூ டாக் இன் இங்க்லீஷ்   என்று தூய தமிழில்  நான் சொன்னேன்.

உடனே, டாக்டர் அவனிடம், வென் டு யூ ஈட் ? என்றார்.
வென் ஐ டோன்ட் ஸ்லீப் என்றான்  பேரன்.

டாக்டர் கொஞ்சம் பொறுமை ஜாஸ்தி.
ஒ.கே. வாட் டூ யூ ஈட் ? என்றார் .
சாக்லேட், பிச்சா என்றான் .

வேர் where டூ யூ ஈட் என்று டாக்டர் கேட்க,
ஹியர் என்று தன் வாயைக் காட்டினான்.

பையனை படுக்கச்  சொல்லி,இந்த சைடு, அந்த சைடு அமுக்கி வலி இருக்கா என்றெல்லாம் கேட்டார்.

யூ ஆர் ஒன்லி பைநிங் மீ என்றான் பேரன்.

ஓகே ஓகே என்ற டாக்டர் அவனை உட்காரச்  சொல்லிவிட்டு,

இது bowel movement ப்ராப்ளம் தானா இல்ல வேர ஏதாவது குடல்லே கன்ச்ற்றிக்சன் constriction , obstruction ப்ராப்ளமா  என்று சீக்கிரம் முடிவு பண்ணியாகணும்
என்று சொல்லும்போதே,
எனக்கு வயற்றை கலக்கி கிட்டத்தட்ட அங்கேயே டூஸ்  வந்து விட்டது.

எனது பெண் லேசா கண்களை துடைத்துகொண்டாள். பொது இடத்தில் அழுவது அவளுக்கு பிடிக்காது.

.சீரியஸ் ஸா இருபது  டெசி பெல்லிலே கேட்டாள் .


எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துண்டு வாங்க. என்றார்.
அடுத்த நாள் காலை,
பக்கத்துலே ஒரு பிரபல லாப் சென்று எடுத்து வந்தோம்.
மொத்த செலவு 2500 ரூபா.  சனிக்கிழமை வந்து வாங்கிக்கொண்டு போங்க. என்றார்கள்.சனிக்கிழமை ரிபோர்டை எடுத்துண்டு வந்தா எல்லாமே டெஸ்டுமே நார்மல் தான்.

ஆனா, ரிபோர்ட் வருவதற்கு முன்னாடியே நான் எனக்குத் தெரிஞ்ச பாமிலி பிசிஷியன் கிட்ட( அவர் ஒரு சாயீ பக்தர் ) 55 வருஷ அனுபவஸ்தர். பாமிலி டாக்டர். போயி கேட்டா,

இதுக்கு  போயி,அலட்டிக்கலாமா, என்று சிரிக்கிறார்.
சுரம் இருக்கா? இல்லை என்றேன்.
வயத்திலே வலி இருக்கா? இல்லை என்றேன்.
தண்ணி நிறையா குடிக்கிறானா? இல்லை என்றேன்.

தினசரி, வாழைபழம் கனிஞ்சதா காலை மாலை இரண்டு கொடுங்க. தினம் காலையிலேந்து இரவு வரை மொத்தம் 3 லிட்டர் வாட்டர் கொடுங்க.

போதும் இப்போதைக்கு. என்றார். தொடர்ந்து பத்து நாள் கொடுங்க. அப்பறம் வாங்க, தேவையால் இருந்தால்.என்றார்.

பீஸ் ?
அதெல்லாம் வேண்டாம்.
இந்தாங்கோ பாபா பிரசாதம் என்று ஒரு வாழை பழத்தை தந்தார்.

எனக்கா? பேரனுக்கா என்றேன்.
உங்களுக்கு. பேரனுக்கு ஒன்று போதாது. தினம் 4 முதல் 6 தாங்க.
முடிஞ்சா க்ரேப்ஸ், மாம்பழம், ஆப்பிள் தாங்க.

அத கேட்டுட்டு வருவதற்குள்ளே, ஊட்டுக்காரி, அதான் எங்க வூட்டுக்கிழவி, நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று , ஒரே ரகளை.

பூண்டு, சீரகம், அந்த முளைக்கீரை எல்லாம் பண்ணி போட்டா சரியாயிடும் அப்படின்னு பினாத்திக்கொண்டு இருந்தா. கொடுத்தாளா இல்லையா அப்படின்னு தெரியல்ல.  விளக்கெண்ணை காஸ்டர் ஆயில் கொடுத்தால் நல்லது என்று எதிர்த்த  வீட்டு பாட்டி  சொன்னாள். இப்ப  சுத்தமான விளக்கெண்ணை கிடைப்பதில்லை என்று அந்த பாட்டி வீட்டு தாத்தா சொன்னார்.

 பேரப்புள்ள மட்டும் "நோ நோ ஐ டோன்ட் வாண்ட் திஸ்" என்று கத்திக்கொண்டு இருந்தது அப்பப்ப காதில் விழுந்தது.

 இத்தனைக்கும்,நடுவிலே மாப்பிள்ளைக்கு ஆயுர்வெதத்திலே அபார நம்பிக்கை. அவரோட முழங்கால் டெண்டன்ஸ் tendons ஆக்சிடெண்ட்லே அவுட் ஆன போது எல்லா விதமான ஆர்த்தோ ட்ரீட் மென்ட் க்குப்பின்னே ஆபத் பாந்தவனா வந்தது என்னமோ பிண்ட தைலம் தான். , அந்த மகா வலி நிவாரணி நாராயணா தைலம் என்று தான் ஹெல்புக்கு வந்தது.

அவரு மாப்பிள்ளை பக்கத்துலே இருக்கற ஒரு எம்.எஸ். நாட்டு வைத்தியம் ஆயுர் வேத டாக்டர் கிட்ட போயி, கன்சல்ட் பண்ண, அவரும்

திருபலாதி சூர்ணம் நாளைக்கு இரண்டு தரம் என்று அஞ்சு நாள் கொடுங்க என்று ப்றேச்கிரிப்சன் prescription கேட்டுண்டு  வந்தாரு.

இரண்டு நாள் இருக்கும்.

பேரப்புள்ள இப்ப திடீர்னு ஒரு நாளைக்கு மூணு தரம் நாலு தரம் அஞ்சு தரம் மோஷன் மோஷன் அப்படின்னு

ஸ்லோ மோஷன் இல்ல, பாஸ்ட் மோஷன்
அதுவும் லிக்விடா போறது என்று கம்ப்ளைன்ட் பண்ண,

அந்த எதிர்த்த சில்ரன் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போயி,

காத்திருந்தா பொண்ணு.

இன்னா, ரிப்போர்ட் எல்லாம் எடுத்தாச்சா என்று கேட்டார் டாக்டர்.

ரிபோர்ட் எல்லாத்தையும் காட்டினா என் பொண்ணு.

எல்லாம் நார்மலா இருக்கு. நோ வொர்ரி என்றார் டாக்டர்.

எதுக்கும் பர்கோலாக்ஸ் இரண்டு நாளைக்கு நைட் நைட் கொடுங்க. அது போதும். என்றார்.அவர்.  பைபர் டயட் , வெஜிடபில்ஸ் இருக்கணும். அப்பத்தான் மோஷன் சரியா இருக்கும் என்றார் அவர்.

"டாக்டர் பிரச்னை அதுவல்ல இப்ப , ஆப்போசிட் ஆயிடுத்து"

. என்றாள் என் பெண்.

என்ன என்று கேட்டார் டாக்டர்.

"இப்ப ஒரு நாளைக்கு அஞ்சு தரம் போறது."

ஒன்னும் கவலைபடாதீங்க.அதையும்  சரி பண்ணிடலாம்.
எதுக்கும் இந்த  லாபுக்கு போய்,  மோஷன் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
அமீபியாசிஸ் இருக்கா அப்படின்னு கன்பர்ம் பண்ணிக்கணும். என்றார்.

அமீபியாசிஸ் இல்லை என்றால், கூடவே ஒரு அப்டமன் அல்ட்ரா சன் இமேஜ் எடுத்துட்டா நல்லது.சொன்னார்.

அப்படியா என்று கவலையா கேட்டா என் பொண்ணு.

டோன்ட் வொர்ரி.

ரிபோர்ட் வர வரைக்கும் வைட்  பண்ணுங்க.
அது வரைக்கும் இளநீர் , மோரு கொடுத்து கிட்டே இருங்க. எவரி ஹால்ப் அவர்.

யூ காச் மி என்றார் டாக்டர்.


பிபோர் காட்சிங் ஹிஸ் பீஸ் . .

சம் டைம்ஸ் டாக்டர் இஸ் ஆல்சோ வைஸ் இப் அவர் டைம் இஸ் குட்.
 sometimes, doctor is also wise, if our time is good.

சாரி சார். டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்.
நம்ம டைம் தான் அப்பப்ப சரி  இல்ல.

Sorry. Most of the doctors are wise.
They know the tricks of the trade.

A quote from artha sasthra , a famous sanskrit text devoted to principles of economics.


அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:
-அர்த்தசாஸ்த்ரம்


வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது அறியலாம். ஆனால், வெளியில் எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள், எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.

courtesy: sundarjiprakash.blogspot.in

4 கருத்துகள்:

 1. உண்மை தான்!..
  டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்.
  நமக்குத் தான் நேரம் சரியாக இருப்பதில்லை.

  குழந்தை நலமுடன் இருக்க அம்பாள் அருள் புரிவாளாக!..

  பதிலளிநீக்கு
 2. மருத்துவர்கள் நல்லவர்கள்தான்
  ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறார்கள்
  நாம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் நம்ம நேரம்தான்..


  http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html
  இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. குழந்தை விரைவில் நலமடையட்டும்...

  பதிலளிநீக்கு