அது என்ன 11 11 64 ? புரியல்லையே ? வினவினாள் பத்னி.
நவம்பர் 11, 1964 .
அது தெரியுது.அது என்ன அப்படின்னு தான் கேட்கறேன்.
சொல்லாமலா இருக்கப்போறேன்.
முதலிலே இந்த பாட்டை கேளு.
என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் ?
1964 லே வந்தது. ராஜேந்திரன் படம்.
புதுசு புதுசா கல்யாணம் கட்டி கிட்டவங்க எல்லாருமே ஜோடி ஜோடியா பார்த்து ரசித்து மகிழ்ந்த படம்.
முக்கியமா இந்த பாட்டை ரசிக்காத பாடாத புது ஜோடியே அந்த வருசத்திலே கிடையாதாக்கும்.
என்னாமா சொர்கத்திலே சஞ்சரிக்கராக !!
ஆமாங்க.1964 வருசமே ஒரு ரொமண்டிக் வருசமுங்க.தமிழ் மட்டும் அல்ல, இந்தி,ஆங்கில படங்களிலே காதல் கொடி கட்டிப் பறந்த வருஷம்.நவம்பர் 11, 1964 .
அது தெரியுது.அது என்ன அப்படின்னு தான் கேட்கறேன்.
சொல்லாமலா இருக்கப்போறேன்.
முதலிலே இந்த பாட்டை கேளு.
என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் ?
1964 லே வந்தது. ராஜேந்திரன் படம்.
புதுசு புதுசா கல்யாணம் கட்டி கிட்டவங்க எல்லாருமே ஜோடி ஜோடியா பார்த்து ரசித்து மகிழ்ந்த படம்.
முக்கியமா இந்த பாட்டை ரசிக்காத பாடாத புது ஜோடியே அந்த வருசத்திலே கிடையாதாக்கும்.
என்னாமா சொர்கத்திலே சஞ்சரிக்கராக !!
இங்கன இந்த படத்த பாட்டை கேளு. இதுவும் 64 வருஷம் வந்தது.
என்ன வார்த்தைகளாலே மனசை அப்படியே அள்ளிக்கினு போறாரு முகமது ரபி .
என் அகத்தை உன் முகத்தில் இருந்து எப்படித்தான் அகற்றுவேன் ...தெரியல்லையே..
பாடுறாரா..... இல்லை. கனவு கான்றாரா தெரியல்ல.
ஆப் கி பர்சாயிஆன் .என்ற இந்தி படம். 1964 ல் வந்தது.
இதைதான் முன்னமேயே உங்க பதிவிலே ..எழுதியிருகீக.இல்லையா !!
அது சரி,இந்த தேதிலே என்ன விசேசம் அத ..சொல்லுங்க.
1961 லேந்து 1996 வரை இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன்.
பியட்டில்ஸ் சங்கீதம் உலகத்தையே மயக்கிடுச்சு.
இதப் பாரு.
நடுவே 3.06 லே நன்றாக காது கொடுத்து கேளுங்கள். எதோ தமிழ் சினிமா பாடல் .மாதிரி இல்லை.??
.
சரி. சரி.
விசயத்துக்கு வாங்க.
11 11 1964 என்ன ?
1 9 6 4 கூட்டிப் பாரு.
11 வருது.
அப்ப மொத்தமும் பாரு.
11 11 11 ..
அங்க தான் விசயம் கீது.மூணு தரம் 1 1 வருது. ஒவ்வொன்னும் ஒரு முகம்.
அப்ப ஆறு ஆச்சு.
அது ஆறு முகம் .
நம்ம முருகன், கந்தன், குமரன், குகன்,சண்முகன், சுவாமிநாதன்,
பாலசுப்பிரமணியன்,
அப்படியாக்கும் ஆறுமுகன்
ஆமாம்.
அந்த ஆறுமுகன் மேல ஒரு பாட்டு எழுதியவரு இந்த பாலசுப்பிரமணியன்.அப்படியாக்கும் ஆறுமுகன்
ஆமாம்.
ஜி. எம்.பி.
நான் கூட அந்த பாட்டுக்கு மெட்டு போட்டு இருக்கேன். பாரு.எங்கன அப்படின்னு நீயும் தேடு.
GMB in his bloggers" meet posting says he has uploaded it. I am trying to find it. Is it that his video has flown on the back of the peacock he is describing in his song !!!!
அவரு தான் .நம்ம பிரெண்டு.
சாக்ஷாத் காட் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன்
GMB
+Balasubramaniam G.M
அவர் எழுதிய அற்புத பாடல் ஒன்று இங்கே.
தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !
மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும் அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .
.
அவரோட திருமண நாள் நாள் தான் 11 11 1964.
இன்றைக்கு அவருக்கு ஐம்பதாவது திருமண நாள்.
அந்த பூச்செண்டை எடுத்துண்டு வா.
அவருக்கு தந்து வாழ்த்து சொல்லுவோம்.
அவர்களது கால்களில் வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்
பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ்வாங்கு வாழ
நீவிர் வணங்கும் இறைவன் நுமக்கு அருளட்டும்.
ஐயாவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குநவம்பர் 11 ஐ வைத்து இவ்வளவு விஷயங்களா? அய்யா G.M.B அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறேன். உங்களிடமிருந்தும்தான்!
பதிலளிநீக்குஐயா வணக்கம் இதற்குத்தான் வலையைப்பார்க்கச் சொன்னீரோ. நான் நேற்றே பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தேன் என்னை பற்றிய உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு உங்கள் மனதில் இடம் உண்டு என்று தெரிவிக்கிறது.வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஐயாவிற்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஉங்க எழுத்துகளை வாசித்தாலே அதில் இருக்கும் நகைச்சுவை உணர்வு சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துமே அப்பா..
பதிலளிநீக்குபாலசுப்ரமண்யம் சாருக்கு மனம் நிறைந்த அன்பு திருமண நாள் நல்வாழ்த்துகள் !!
தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..
இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html
வணக்கம். வலைச்சரம் மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். தங்களின் பணி பாராட்டத்தக்கது. தங்களின் பதிவைக் கண்டு ரசித்தேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.com
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2014/12/blog-post_30.html
முடிந்த போது வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
ஆதி வெங்கட்.
அன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஅன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.fr/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/