வருகிற வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிக்கு குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு போறார்.
நம்ம இந்த சீப்ராஸ் பார்க் லேந்து மணப்பாக்கம் வீட்டுக்கு போறோமா அதை சொல்லுங்க.
அதெல்லாம் பிசாத்து. இப்ப பாரு. லோகமே ஆஸ்தீக ஆன்மீக மக்காஸ் எல்லோருமே சகட்டு மேனிக்கு அவங்கவங்க ராசிக்கு தோஷம் பரிஹாரம் செய்யனுமா அப்படின்னு தெரிஞ்சுக்க கூட்டம் கூட்டமா கோவிலுக்கு போராக.
வீடு கட்டினவனுக்கு ஒரே வீடு. வாடகை கொடுப்பவனுக்கு ஆயிரம் வீடு.
இந்த குரு வருசா வருஷம் வீடு மாத்தறாரே..
வருசத்துக்கு ஒரு தரம் இல்லை. பதினாறு மாசத்துக்கு ஒரு தரம்.
சரி 16 மாசம்.
எப்ப பார்த்தாலும் அங்க இங்க அப்படின்னு கடன் வாங்கி திருப்பி தர முடியாம வீட்டை மாத்திண்டு போறாரோ !!
இங்கன பாரு. இப்படி எல்லாம் ஏடா கூடமா பேசி, என் மூடை அவுட் பண்ணிடாதே. நான் பாட்டுக்கு குரு பகவான் பாட்டு எல்லாம் ராஜேஸ்வரி அம்மா போட்டுக்கிட்டு இருக்காங்க. அத படிச்சுகிண்டு இருக்கேன்.
நீங்க பாட்டுக்கு படிச்சா தேவலாமே. மணிக்கு ரண்டு பேரு செல் அடிச்சு, இந்த குரூ பெயர்ச்சி ஆயில்யத்துக்கு எப்படி, அவிட்டத்துக்கு எப்படி ன்னு கேட்கராக.
அவுக கேட்கராக. நான் சொல்றேன். உனக்கு என்ன ?
எனக்கு தூக்கம் அவுட் ஆகிடறது இல்லை ?? போகட்டும். இந்த சாயி நகர் மாமி ஏதோ சனியும் வக்ரிச்சு இருக்கு. அப்படின்னு சொல்லப்போவ, எனக்கும் கொஞ்சம் திக் திக் அப்படிங்க ஆரம்பிச்சுடுத்து.
பல் வலியும் கிட்னி லே கல் வலியும் அவனவுக்கு வந்தாத்தான் தெரியும்.. இல்லையா. ??
கடகத்துலே குரு உச்சன் இல்லயோ.!!
ஆமாம்.
அப்ப அங்கேயே இருக்கலாமே ? எதுக்கு அடுத்து அடுத்து வீட்டுக்கெல்லாம் போகணும் ?
நமக்கு எங்க சௌகர்யமோ அங்க தான் இருக்கணும் அப்படின்னு நீ சொல்றது எல்லாம் புரியறது. ஆனால் குரு பகவான் ஆனா எல்லா க்ருஹத்துக்கும் போய் எல்லாருக்கும் கடாக்ஷம் அளிக்கனும் அப்படின்னு நினைக்கிறார்.
அதுக்காக காலம் காலமா சுத்திண்டே யா இருக்கிறது ? நம்ம இல்லை ? ரிடையர் ஆனோமா..! ஸ்ரீரங்கத்திலே செட்டில் ஆனோமா அப்படின்னு ?
அதெல்லாம் மனுஷ்யாளுக்கு. தேவர்களுக்கு இந்த ரூல் அப்ளை ஆகாது.
அது சரி. அதுக்காக, நமக்கு சொந்த பந்தம் அப்படின்னு இருக்கறவா வீட்டுக்கு போனா சரி. அங்கேயே நமக்கு அப்படி ஒண்ணும் பிரமாத வரவேற்பு இல்லை.
நீ என்ன சொல்ல வரே?
தனக்கு எதிரி வீட்டுக்கெல்லாம் போவானேன் ? வாங்கிக் கட்டிப்பானேன்.
தனக்கும் சுகமில்ல. அவர்களுக்கும் ச்ரமம் .
நீ சொல்றது சரி தான். குருவுக்கு தனக்கு அப்படின்னு இரண்டு வீடு இருக்கு.
நமக்கு தஞ்சாவூர் வீடு இருக்கு. இங்கே புள்ளே வீடு இருக்கு. அது மாதிரி.
அங்கேயே இருக்கலாமே.
அதே அதே அதைதான் நானும் சொல்றேன். அப்ப எதுக்கு எதிரி வீட்டுக்கு ?
நான் வளைச்சு பேசல்ல. சுக்ரன் எதிரி ஆச்சு . அப்ப அவாய்ட் பண்ணலாம் இல்லையா. சந்திரனும் ஒரு இரண்டும் கெட்டான் . யார் கூட இருக்கானோ அவன் பேச்சைக் கேட்கிறவன்.
குருவுக்கு எதிரி அப்படின்னு பார்த்தா சுக்ரன் மட்டும் இல்ல, சூரியன், செவ்வாய் கூடத்தான். அப்ப, சிம்மம், மேஷம், விருச்சிகம் கூடத்தான் எதிரியோட ப்ளாட் . அத அப்படி பார்க்க கூடாது. நம்ம வர்றது அவங்களுக்கு புடிக்கரதோ இல்லையோ நம்ம அட் லீஸ்ட் வருசத்து ஒரு தரம் போயி பாத்துட்டு வரணும்.
அதான் குரு பதினெட்டு வருசத்துக்கு ஒரு தரம் நம்ம வீட்டுக்கு விசிட் பண்றார் அப்படின்னு சொல்றீங்க..
ஆமா. வீட்டுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் வாங்க வாங்க அப்படின்னு மனசு சுத்தமா கூப்பிடனும். நம்மால முடிஞ்ச அளவுக்கு உபசரிக்கணும்.
அதான் நம்ம வலைலே இன்னிக்கு குரு பகவான் ஸ்தோத்திரம் பாடி இருக்கீங்க.
ஆமாம்.
ஒரு சந்தேஹம் இருக்குங்க.
லிங்கா படம் எப்ப வரும் அப்படின்னா ? சொல்லு.
இவரு, ுகுரு வாக்கிய பஞ்சாங்கம் படி இன்னிக்கு 13.6.14 மாலை வராரு . ஆனா, காஞ்சி மடத்து பஞ்சாங்கம் படி அவரு 19ம் தேதி தானே கடக ராசிக்கு வராரு அப்படின்னு போட்டு இருக்குது.
இதிலே ஏன் வித்தியாசம் வருது அப்படின்னு விலா வாரியா பின்னே விளக்கறேன். இப்போதைக்கு சொல்றேன்: நம்ம எப்படி ? வைகாசி மாசமே அந்த ப்ளாட்க்கு போயி பால் காச்சி சாப்பிட்டு வந்துட்டாலும் பின்னே மெதுவா தானே மூவ் பண்றோம்.
சும்மா ஜோக் அடிக்காதீக. பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் வித்தியாசம் ஏன் வருது அப்படின்னு கேட்டா ஸ்ட்ரைட் ஆ பதில் சொல்லுங்க..
பஞ்சாங்கம் அப்படின்னு சொன்னால், திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னம், கரணம் , இதை கணக்கு இடுவதிலே வாக்கியத்துக்கும் திரி கணிதத்துக்கும் ஒன்னு இல்ல, நிறையவே வித்தியாசம் இருக்கு.
அது சரி தான். நம்ம அவரு வராரு வராரு ன்னு காத்து கெடப்போம். அவரு மெதுவா வந்தா . அதுவும் அந்த சமயத்துலே நம்ம இல்லாட்டி பொல்லாப்பு வந்துடும் இல்லையா.
நம்ம, எல்லாரும் எப்ப வர்ராகளோ அப்பவே போவோம்.
சில சமயம் ரண்டு தீபாவளி கூட வருது. அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்ப கோவிலுக்கு கிளம்புறீங்க.?
நீ வல்லையா ?
இதோ பாருங்க. நீங்க போயிட்டு வாங்க. எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கணுமோ அது அது அப்ப அப்ப அவங்க அவங்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கும்.
அப்ப இது அது எல்லாம் ஒரு மனசு ஆறுதலுக்குத் தான் அப்படின்னு சொல்றாயோ ?
புரிஞ்சுகிட்டா சரி. குரு பகவான் சைலண்டா ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்துண்டு இருக்காரு. அவர் யங் . ஆனா அவரோட சிஷ்ய புள்ளைங்க எல்லாரும் ஓல்டு.
வாய் பேசாம இருக்காரு அப்படின்னு சொல்றே....?
வாய் தான் பேசல்ல. கண் பேசுது. ஹார்ட் பேசுது.
என்ன பேசுது அப்படின்னு சொல்றே.
எல்லார் கிட்டவும் அன்பா இரு. மனசை ஒரு நிலைப்படுத்தி வச்ச்சுகிட்டேனா ஒனக்கு எந்த பேஜாரும் கீது அப்படின்னு சொல்றாரு.
அதாவது, நீ சொல்றத பாத்தா,
மனத்துக்கண் மாசிலன் ஆதல்,
அனைத்து அறன் ஆகுல நீர பிற
அப்படிங்கற வ ள்ளுவன் தத்துவத்தை எடுத்து சொல்றாரு அப்படின்னு சொல்ற.
அத எப்படி செய்யறது ?
நீங்க அவருகிட்டவே கேட்டுட்டு வாங்க. எனக்கு விஜய் டி.வி. ப்ரோக்ராம் வர நேரமாயிடுச்சு.
அப்படி என்ன ப்ரோக்ராம் ?

போங்க. போயி, உங்களுக்கா எனக்கா இல்ல, இந்த குழந்தைக்காக குரு பகவன் கிட்டே அழுங்க. பிரார்த்தனை செய்யுங்க.
Pray for this God sent child to Guru Bhagavan and not for U and for me.
தேவர்களின் குரு ஆகிய பிரகஸ்பதி - வியாழ பகவான், எல்லாருடைய பிழைகளையும் மன்னித்து அவரவர்க்கும் நன்மைகளை அருளட்டும்.
பதிலளிநீக்குஅது சரி.. ஐயா.. தேவகுரு பற்றிய பதிவில் - லோக குரு ஆகிய தக்ஷிணாமூர்த்தி - சிவபரம் பொருளின் திரு வடிவம்.
வீடு மாறி அமர்வது அவரா.. இவரா..
இனிய பதிவினுக்கு நன்றி ஐயா..
http://www.hindudevotionalblog.com/2011/12/brihaspati-guru-navagraha-planet.html
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
குரு நவ நவ க்ருஹங்களில் ஒன்றாம்.
வான சாத்திரப்படியும் சனியும் குருவும் சூரிய மண்டலத்தில் மிக பெரிய கோள்கள் . இவை சூரியனை ஈர்ப்புத் தன்மையைப் பொருத்து
சூரியனை சுற்றி சுழல்கின்றன. இந்த குருவின் கான்ச்டலேஷனில் புனர்வசு, விசாகம், பூரட்டாதி ஆகிய நக்ஷத்திரங்கள் இருக்கின்றன.
கோள்கள் சூரியனைச் சுற்றுகையில் பூமியில் இருக்கும் மனிதர்களை மட்டும் அன்றி, தாவர, விலங்கினத்தையும் பாதிப்புகளை ஏற்பர்டுத்துகின்றன என்பது நம்பிக்கை.
கோள்கள் சுழற்சியால் பூமியின் வெட்பம், அதனால் நீர் , காற்று, பாதிக்கபடுவது என்பது பூவியல் .
ஆன்மீகத்தில், குரு தக்ஷினாமூர்த்தி ஆலமரக் கடவுள். பரமேஸ்வரனின் அம்சமும் கூட. அண்டத்தில் எல்லாம் அடங்கும் நிலையில் ஈஸ்வரன் தக்ஷினாமூர்த்தி வடிவு கொண்டு அமைதி காத்து பின்னே,
உலகத்தை திரும்பவும் எழுப்பி உயிர்ப்படுத்தும் தருணம் வரும் தன கால் அசைவுகளால், நர்த்தனம் ஆடி, நடராசனாக, புவிக்கு முதற்கண் ஒலி வடிவம் தருகிறார் என்பதும் நம்பிக்கை.
சுப்பு தாத்தா.
தங்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா..
நீக்குஆனால் -
பரமேஸ்வரனின் அம்சம் ஆகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி - இடம் விட்டு இடம் மாறி உட்கார்ந்து மக்களை அல்லல் படுத்துவது போல அல்லவா - ஆடம்பரமாக விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றார்கள்!..
மேலான விளக்கம் தந்த தங்களுக்கு மீண்டும் பணிவான வணக்கமும் நன்றியும்..
தென்புலம் நோக்கி அமர் ஆலமர் கடவுளாம் தக்ஷிணாமூர்த்தி தத்துவம் வேறு.
நீக்குஅவர் நிராகார நிர்குண பிரும்மத்தின் சாகார வடிவாக, சனக சனகாதி முனிவர்கள் முன்னே அமர்ந்து,
விச்வம் தர்பண மான த்ருச்யமான நகரி ( உலகம் (அண்டம்) ஆடி முன்னே யாம் பார்க்கும் நிழல் உருவம் போன்றது,மாயை, மாறும் தன்மை உடையது எனச் சொல்லாமல் சொல்கிறார்.
அடுத்து,
குரு எனும் கோள், பிருஹஸ்பதி , தேவர்களின் ஆசார்யன்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
துரை என்றால் ஒருவரையே குறிக்கும் என்பது இல்லையே !!
ஆத்திகர் துரை செல்வராஜ் ம் நண்பர். அக்னாஸ்டிக் அப்பாதுரையும் நண்பர். துரை என்ற ஒரு சொல் தான் பொது. அது போலத்தான்.
நம்மைச் சுற்றி இருக்கும் உலகம், உலகத்தோர் பல மாயைகளில் தமை மறந்து பொருளிலா பல கருமங்களைத் தம் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்டும் நோக்குடன் செய்கின்றனர்.
இவை எல்லாமே மாயை தான்.
சுப்பு தாத்தா.
இப்போ பூமிக்கு 6 கோடி வருஷம் வயசு அதிகம் என்று சொல்கிறார்களே..... அது இந்த குருப் பெயர்ச்சி விஷயத்தில் ஒன்றும் மாறுதல் தராதா?
பதிலளிநீக்கு
நீக்குஉங்களது கேள்வி வானியல் சாத்திரப்படி பதில் தர முற்படின் அதை முழுதும் படிக்க எவருக்கும் பொறுமை இருக்காது.
ஹைட்ரஜன் ஹீலியம் எப்படி ஆகும் என்றும் எந்த தருணத்தில் சூரியன் இப்போது இருப்பதைப்போல் இன்னும் பல மடங்கு கொதிப்படைந்து, அண்மையில் இருக்கும், புதன் மற்றும் சுக்கிர கிருஹங்களை ஸ்வாஹா செய்துவிடும் என்று விலா வாரியாக விவரிக்கலாம்.
அதற்கு அடுத்த கட்டமாக, சூரியனிடமிருந்து செல்லும் பயங்கரமான ஹைட்ரஜன் காற்று லேயர் லேயாராக சென்று தூரத்தில் இருக்கும் குரு மற்றும் சனி கோள்களின் ஈர்ப்புப் பாதைகளை சின்ன பின்னா படுத்தி, அந்த கோள்களும் நிலை தடுமாறி, அண்டத்தில் முதல் சுருங்கிப் பிறகு வெடித்துச் சிதற வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றாலும்,
அது நடக்க இன்னமும் 10 பிலியன் வருஷங்கள் இருப்பதால் அதைப் பற்றி, பெரிதும் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதாலும்,
நடுவில் நாம் இருக்கும் பூமி சூரியனின் வெப்பம் பல நூறு மடங்கு அதிகரிப்பதால், நீர் வற்றி வறண்டு, இருண்டு, சுருங்கி போய் விடும் சாத்தியம் இருக்கிறது எனச் சொல்லப்படினும் அது நடக்க இன்னும் 6 பிலியன் வருஷங்கள் ஆகும் என்பதால், அதற்குள்ளே குறைந்த பட்சம் 5 பிலியன் பதிவுகள் எங்கள் ப்ளாக் ல் வரும் என்ற பயத்தைத் தவிர வேறொன்றும் பயப்பட தேவை இல்லை என்பதாலும்,
http://www.fromquarkstoquasars.com/death-from-the-skies-how-our-solar-system-will-die/
அதற்கு உபரி சாட்சியாக,
இந்திய ஆன்மீக வேதிய வல்லுனர்கள் கூற்றுப்படி பார்த்தாலும், , இந்த யுகம் அதாவது கலி யுகம் முடிய, இன்னமும் 4,. 38, 000 வருடம் மிச்சம் இருக்கிறது என்பதை யும் புரிந்து கொண்டால்,
இன்று
குரு பெயர்ச்சி வைபவத்தில் சுப்பு தாத்தா தின்ற சுண்டல் பிரும்மானந்தம் ஒன்று தான் சத்யம் மற்றதெல்லாம் அநித்தியம் என்று ஸ்ரீராமுக்கு சொல்லி,
ஓம் தத் சத் என்று பதிலை முடிப்போம்.
சுப்பு தாத்தா
குரு பெயர்ச்சிக்குக் கூட சுண்டல் உண்டா?
நீக்குநீங்கள் பணம் கொடுத்தால்,
நீக்குசுண்டல் என்ன ?
சுண்டச் சுண்டக் காய்ச்சி சக்கரை கலந்த
திரட்டுப் பாலும் தருவார்கள்.
யதா சௌகர்யம் துஷத்வம்
சுப்பு தாத்தா.
நீளமான பதிலை கொட்டாவி விடாமல் படித்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்பணும்! என்னதான் பில்லையனிலும் மில்லியனிலும் கணக்குச் சொன்னாலும் என்னுடைய மறுபிறவியில் நான் துன்பப் படுவேனே... ஒருவேளை எனக்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்து (தொலைத்து) விட்டால் என்ன செய்வது, வராவிட்டாலும் அப்போது 'எனக்கு' அப்போது வலிக்குமே என்கிற நினைவுகள் படுத்துகின்றன! கடகனாகிய எனக்கு இந்த எண்ணங்கள் வருவது கூட இந்த கு.பெ யினால்தானோ... எப்படியோ உங்கள் கவனத்தைத் திசை திருப்பி ரெண்டு சுண்டல் அள்ளிக் கொண்டேன் என்பதை நான் உங்களிடம் சொல்ல மாட்டேன். எங்கள் ப்ளாக்கில் அப்போதும் பதிவுகள் வரும் என்பது எவ்வளவு பாஸிட்டிவ் விஷயம் இல்லை? :))))))))))
நீக்குகாணொளி பகிர்வு அருமை...
பதிலளிநீக்குGot triggered to write this on seeing and singing your posting on Guru Transit.
நீக்குsubbu thatha
அற்புதமான வருணனை. உங்கள் எழுத்துத்திறனும் அயராத உழைப்பும் வியக்க வைக்கிறது.-இராய செல்லப்பா (இப்போது நியூஜெர்சியில்)
பதிலளிநீக்குமூளைக்கு ஒரு வேலை இல்லைன்னா, உடம்பின் தொந்தரவு
நீக்குஅதிகமாக போயிடும் இல்லையா ?
இப்ப போதாக்குறைக்கு, வெஸ்டர்ன் கிளாசிகல் நோட்சு, கீ போர்ட் கிளாஸ் வேற போயிண்டு இருக்கேன்.
நியூ ஜெர்சி ஆ ? ஆஹா ? எந்த இடம்.
நானும் வந்தாலும் வருவேன்.
சுப்பு தாத்தா.
காணொளி அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
ஆம். அதைக் காண்கையிலே
நீக்குநம் கண்களின் வழியே சென்ற ஒரு ஒளிக் கதிர்
இதயத்தில் ஒரு வலி யும் தருகிறது.
இனி நாம் செல்லவேண்டிய வழியையும்
காட்டுகிறது.
சுப்பு தாத்தா.
அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் ஐயா...
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் உரையாடல்
அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை.
நீக்குபொருள் இலார்க்கு இவ்வுலகும் இல்லை.
அவரவருக்கு அவரவர் வேண்டுவதை
அவரவர் வினைப்பயனுக்கு தகுந்தவாறு
அன்புடன் தருபவர்
அவரே
சுப்பு தாத்தா.
அருமையான வர்ணனை. வியக்க வைத்த தகவல்கள். நான் கேட்க நினைச்ச கேள்வியை துரை செல்வராஜு கேட்டுவிட்டார். மிக்க நன்றி. இந்தக் காணொளி ஏற்கெனவே பார்த்து மனம் கலங்கியது. :(
பதிலளிநீக்குஉங்களுக்கும் சொல்கிறேன்
நீக்குமுதலாவது ஞான மார்க்கம்.
இரண்டாவது கர்ம காண்டம்.
முதல் வழிச் செல்பவன்
பிற வலிகளைப் பொருட்படுத்துவதில்லை.
அவ்வலிகளைப் போக்குவதற்கான
வழிகளையும் நினைப்பதில்லை.
நாடுவதில்லை.
சரீரத்துக்குத்தானே இன்பம் துன்பம். ?
இல்லையா பின்னே ?
உங்களுக்கும் எனக்கும் ஞானம் வந்துடுத்துன்னு வச்சுகோங்கோ.
நிம்மதியா, அந்த தக்ஷிணாமூர்த்தி முன்னாடி இல்ல, நம்ம வீட்டிலேயே அமைதியா உட்கார்ந்து விடுவோம்.
இல்லைன்னா, இந்த குரு க்ருஹம் மாதிரி, நாமும் இந்தியா, அமேரிக்கா, சிகாகோ, பாஸ்டன், தோஹா, சீரங்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அப்பப்ப காசி ராமேஸ்வரம், நடு நடுவே , கொஞ்சம் back end protection க்காக,
சீரடி, புட்டபர்த்தி, போயிட்டு வர்ரோம்.
நமக்கு என்ன வேணும் அப்படிங்கறதை நம்ம மனஸ் சொல்றது.
பிடிவாதம் பிடிக்கிறது. நாமும் குரங்கு போல அந்த மனசு சொல்றதைஎல்லாம் கேட்டுன்னு இருக்கோம். ஒவ்வொரு வீடா போயிண்டு இருக்கோம்.
அதெல்லாம் இருக்கட்டும். வைஷ்ணவ சம்ப்ரதாயத்துலே இந்த குரு பெயர்ச்சி பத்தி நவ க்ருஹங்கள் பத்தி எல்லாம் என்ன சொல்லி இருக்கு ?
எல்லாம் அந்த பெருமாள் பார்த்துப்பார் என்று சொல்லி இருக்கு.
இருந்தாலும் நம்ம ஏன் கவலைப் படறோம் ?
நமக்கு நம்ம நாக்குக்கு சக்கரை பொங்கல் வேண்டி இருக்கு.
சுப்பு தாத்தா.
வழக்கம் போல் அழகான, நல்ல விஷயத்தையும் கூட நா ஹாஸ்ய உணர்வுடன் சொல்லும் விதம்!!! மிகவும் ரசித்தோம் தாத்தா!!! எப்படித் தாத்தா இவ்வ்ளவு அழ்காக எழுதுகின்றீர்கள்! வியக்க வைக்கின்றது!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசுப்பு தாத்தா.
வழக்கம் போல் அழகான, நல்ல விஷயத்தையும் கூட நா ஹாஸ்ய உணர்வுடன் சொல்லும் விதம்!!! மிகவும் ரசித்தோம் தாத்தா!!! எப்படித் தாத்தா இவ்வ்ளவு அழ்காக எழுதுகின்றீர்கள்! வியக்க வைக்கின்றது!
பதிலளிநீக்குஎத்தனை பொறுமையா எழுதியிருக்கீங்க!
பதிலளிநீக்குகல்வலி.. சொல்லித்தான் கேள்வி. அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.
ரிடையர் ஆனா ஸ்ரீரங்கம் தானா? ஏன்?
பொறுமையா !!
நீக்குபலானா விஷயங்களை க்கூட , நண்பர்கள் பதிவிலே,
பொறுமையாத் தான் படிக்கவேண்டி இருக்கிறது.
அப்பறம்,
நான் ஸ்ரீரங்கத்தில் செட்டில் ஆகவில்லை.
ஸ்ரீரங்கத்திலே பெருமாள் காலடியிலே செட்டில் ஆகணும்னு
போகிறவர்கள் கூட
அங்க கிடைக்கிற அக்காரவடிசல், புளியோதரை, ததியோன்னம்
ஆகியவற்றில் பைனலா செட்டில் ஆகி விடுகிறார்கள்.
சுப்பு தாத்தா.
என்ராசி இல்லிருந்து எங்கேநீ போனாலும்
பதிலளிநீக்குபொன்கொழிக்க வைப்பாய் புலம் !