புதன், 11 டிசம்பர், 2013

தாத்தா.. தாங்க்ஸ்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே  

இன்னாம்மா இப்படி மனசு குஷியா இருக்கு ?
அப்படின்னு ஊட்டுக்காரி கிழவியை உசுப்பேத்தலாம்  என்று ஒரு கணம் நினைத்தேன்.

 ஆனால், அவளுக்கு மூட் சரியா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.
சைலண்டா இருக்கிறாள். 

 .மலரே மௌனமா 

அப்படின்னு கேட்க வாய் எடுத்தேன். ஊ ஹூம் அதுவும் வேண்டாம். 
 நான் எதோ கேட்க அவள் ஏதோ புரிஞ்சுண்டு அது வேறு புதுசா வம்பில் மாட்டிக்கொள்ள சுப்பு தாத்தா இன்னிக்கு நாட் ரெடி.

    இன்னிக்கு கண்டிப்பா மெது வடை பண்ணித் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாள் 
 ஏதாவது சொல்லி மெது வடை கான்சல் ஆகிவிடுமே என்ற பயம் தொத்திக்கொண்டது. 
 இன்னிக்காவது let better wisdom prevail.
GO WITH THE WIND . 

வார்த்தை தவறிவிட்டால் என்ற பாட்டு திரும்பவும்  பாடக்கூடாதே.  என்னடி மீனாச்சி, மெது வடை என்னாச்சி  
Add caption

காலைலேந்து நாலு போன் கால். ஒவ்வொரு தடவையும் பேரப் பசங்க கிட்டேந்து தான் வந்திருக்கும் அப்படின்னு ஆவலுடன் எடுத்தா...

" சார், இன்னிக்கு நீங்க  ப்ரீயா இருந்தா நான் வரவா சார் " என்று அந்தப்பக்கத்திலேந்து குரல்.

இன்னிக்கு என்ன, என்னிக்குமே ப்ரீ தான். நானும் ப்ரீ, என்னுடைய சோதிட சர்வீசும் ப்ரீ. 

 காசுதான் கிடையாதே , கேட்டுத்தான் பார்ப்போமே என்று என் நண்பர்கள் அவர்கள் சுற்றங்கள், உற்றங்கள், முக நூல் அறிமுகங்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவது இப்போதெல்லாம் வழக்கமாக போய்விட்டது.  

அதற்காக பிரசவத்துக்கு இலவசம் என்று போர்டு போட்டுக்கொள்வதும் இல்லை. நான் ஒரு ப்ரொபஷனல் இல்லை.ஒரு ப்யூர் அண்ட் சிம்பிள் அகடமிஷியன்.

      வருபவர்களுக்கு நான் ஏதோ இலவசமாக சேவை செய்கிறோம் என்ற எண்ணம்  இல்லை. சொல்லப்போனால், அவர்கள் தான் என்னை கீப் மீ எங்கேஜ்டு THE BEST WAY TO LOSE YOURSELF IS IN THE SERVICE OF OTHERS. மன உலைச்சல்களில் அவதி உறும் நண்பர்களுடன் அளவளாவுதல், அவர்களுடைய பிரச்னைகளை அப்ஜெக்டிவ்வாக அசெஸ் செய்யமுடிகிறது. இந்த வாய்ப்பு .காசில்லாத LEARNING EXERCISE..மற்றவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ளும்போது நம் துன்பம் (அப்படி ஒன்று இருந்தாலும் ) மறைந்து போகிரது. 

 
வாசல் பெல் அடித்தது.      காலை 10 மணிக்கே வருவதாகச் சொன்னவர் 9.30 க்கு வந்துவிட்டார்.

வந்தவர் எனது பழைய நண்பரின் first son . வந்தவரை ஒரு நாற்பது  வருடம் கழித்து பார்க்கிறேன். இன்னும் ஐம்பதை  தாண்டி இருக்கமாட்டார் என்று தோன்றியது . இருந்தாலும் தலை பாதி நிரை . கையில் புதுசா  பிங்க் கலர் பை. தி.நகர். எல்.கே.எஸ்.கிப்ட்.  
           நான் நரசிம்மன். உங்களை,  ... நான் சின்ன பையனா இருந்தபோது தஞ்சாவூருலே பார்த்தது. அப்பறம் பார்த்தது இல்லே.  நாப்பது  வருஷம் இருக்கும் நாங்க தஞ்சாவூரை விட்டு இங்கு வந்தது..
         இருக்கும். முதல்லே உட்காருங்கோ..
             
அப்பா தான் சொன்னார்.   சூரி கிட்டே சொல்லு எதுனாச்சும் சொல்யுசன் கிடைக்கும்  அப்படின்னு சொன்னார்.
ஒரு அஞ்சு நிமிஷம் தான்.உங்களை ரொம்ப சிரம படுத்த மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே  அங்கிருந்த  ஈசி சேரில் உட்கார்ந்தார். புதுசா இருந்தது கைப்பை.

 அதில் இருந்து ஒரு பழைய நோட் புத்தகத்தை திறந்து  ஒரு பக்கத்தை எடுத்தார். என்னிடம் நீட்டினார். .  

பர்ஸ்ட் ,ஒரு  காபி ஸ்ட்ராங்கா சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, மீனாச்சி என்று உள்ளே கிச்சன்  பக்கம் கண்ணிட்டேன்.

பார்க்கப்போனா..வேண்டாம். அப்படின்னு சொல்லணும் தான்  சார். ஆனா உங்க வீட்டு காபி ரொம்ப நன்றாக இருக்கும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்வார்.

அதற்குள் காபி வந்து விட்டது.

எனக்கு சக்கரை அதிகம் கூடாது என்று ஒன்று மில்லை என்றார். என்னைப் பார்த்தார்.

நீங்க ? என்றார் .
என் மனைவியைப் பார்த்தார்.

அவர் இப்பத்தான் இரண்டாவது காபி சாப்பிட்டார். நீங்கள்  சாப்பிடுங்கள் என்றாள் என் இல்லக்கிழத்தி.

மாமி,
நான் சௌண்ட் எஞ்சினியர்.
உங்காத்து  மாமாவோட அத்யந்த பிரண்டு ராமனோட செகண்ட் ஸன். இது   என்னோட மூத்த பெண் வந்தனா ஜாதகம். . போன வருஷம்  ஐ.ஐ.டி லே டிஸ்டிங்கஷன் .. ரிசல்டு வரத்துக்கு முன்னாடியே காம்பஸ் செலக்சன் ஆகிடுத்து.

ஆமாம். இப்ப எல்லாம் அந்தக் காலம்  இல்லையே .படிச்சுட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படின்னு கவலைப்படரதுக்கு.!! ஐ.ஐ.டி. லே படிச்ச இரண்டு பேருக்கு ஒரு கோடி offer வந்து இருக்காமே !! 

நம்ம செலக்ட் பண்றதுக்கு அப்படின்னு இப்ப இல்ல. முன்னாடியே தானாவே செலேக்சன் ஆகிடறது.  பொண்ணு புத்திசாலியாவும் இருந்து லக்கியாவும் இருக்கறது கிரேட். என்கிறாள் என் மனைவி. 

நீயா நானா பார்க்க ஆரம்பிச்ச பின்னே  இவள் , கோபிநாத் மாதிரி ஈரெட்டா  but இண்டெலிஜெண்டா பேச கத்துண்டு இருக்காள்.. காலரை தூக்கிவிட்டுக்கொள்ள சட்டைக்குபின்னால் கையைக் கொண்டு போனேன்,. சட்டையே போட்டுக்கவில்லை என்று தெரிந்தது.  


அவ ஜாதகம் எப்படி இருக்கிறது  அப்படின்னு தெரிஞ்சுண்டு போக வந்தேன் என்று என் மனைவியைப் பார்த்து சொன்னார்.

சரிதான். ஒரு அர்த்தத்தோட இவள் என்னை பார்த்தாள்.

இந்தக்கிழத்துக்கு இன்னிக்கு வேலை கிடைச்சாச்சு.என்று மனசுக்குள் அசை போட்டுக்கொண்டு இருப்பாள். எனக்குத் தெரியும்.
ஆனா, சத்தமா, 

பகவான் அவரவர்க்கு அப்படின்னு ஒரு முடிச்சு போட்டு இருப்பான். பெத்தவாளுக்கு இப்ப எல்லாம் அதிகமா கவலை குழந்தைகள் வைக்கிறதில்லை..என்று ஆரம்பித்தாள்.

வந்தவர் கிழவி கமெண்டை ரசித்தாற்போல் இல்லை.

நீங்க பாத்து சொல்லுங்க சார். என்றார் வந்தவர் காபியை ஒரு மடக் குடித்தவாரே ..

சக்கரை போதுமா சொல்லுங்கள் என்றாள் என் மனைவி.

காபிலே சரியாத்தான் இருக்கு.  எதுலே இருக்கணுமே அதுலே இல்லையே என சன்னமாக அவர் சொன்னது விழுந்தது.

ஜாதகத்தை பார்த்த எனக்கு உடன் பெண்ணின் வயது தான் கண்ணில் பட்டது. வயது 23  அல்லது 24 தான் பெண்ணுக்கு இருக்கும். திருமணம் குறித்து தான் வந்திருகார்  . ஆனால்,  இந்தக் காலத்துலே பெண்ணைப் பெற்றவர்கள்  பெண் ஒரு வேலையிலே இரண்டு மூன்று வருஷம் ஆகி செட்டில் ஆனபிறகு தானே அடுத்ததை பற்றி யோசனை பண்ணுகிறார்கள். ..என் மனசு இன்னொரு ட்ராக்கில் ஓடியது .

சட் என்று  அவர்  கண்களை கூர்ந்தேன்.

நான் ஒண்ணுமே சொல்லல்ல.  இன் பாக்ட் , சொல்லும்படியாவும் இல்ல.  நீங்களே எல்லாம் பாத்து சொல்லுங்கோ என்கிறார்.

முதல்லே காபியை குடிங்க.. அப்பறம் இவர் எல்லாத்துக்கும் சொல்வார். கவலைப் படாதீர்கள். பெருமாள் பார்த்துப்பார் எல்லாத்தையும் என்றாள் இவள்.

பெருமாள் பார்த்துப்பார் என்று தானே  நினைச்சுண்டு இருந்தோம் நானும் அவளும். ஆனா, இவ...என்று ஏதோ துவங்கி நாக்கைக் கடித்துக்கொண்டு நிறுத்தி...

பத்து செகண்டு கழித்து

அந்த எப்.எம். ரேடியோ சத்தமா இருக்கிறது போல் இல்லை ?
என்றார் வந்தவர்.
இங்கிதம் தெரிந்த என் வீட்டுக் கிழவி சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவினாள் .

அந்த ரேடியோவில் ஏதோ சங்கீதம் ,SO BLARING.
 இந்தக்காலத்து நபர்களுக்கு அந்த காலத்து ஓல்டு இஸ் கோல்டு ப்ரோக்ராம்.

மறுபடியும் ஜாதகத்தில் கண்ணை திருப்பினேன். அஞ்சு நிமிஷம் அமைதி.
ஜாதகம் நன்றாகத்தான் இருந்தது. அதில் எந்த வித குறையும் இருப்பதாகப் படவில்லை.

ஒண்ணும் பிரச்னை இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே...என்று இழுத்தேன்.

இருக்கே... என்று அவர் இழுத்தார்.

நரசிம்மன்  ! எனக்கு தெரிஞ்ச விதத்தில்  ஜாதகம் நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கப்போனால் குரு பலன் வர நேரம். பெருமாள் அனுக்ரஹம் பண்ணினால் சீக்கிரமே எனக்கு கல்யாண சாப்பாடு கிடைக்கும். மெது வடை இரண்டு கூட போடணும். பட்டர் கிட்டே சொல்லிடுங்கோ இப்பவே..

சீக்கிரம் கல்யாணம் நடந்துடுமா.. ???
நீங்க என்ன சார்  சொல்றேள் !
வந்தனாவோட அம்மா அதான் என்னோட ஆத்துக்காரி
 இந்த பொண்ணு சொல்ற படி நடந்ததுன்னா
 உயிரை விட்டுடுவா ஸ்வாமி...

அப்ப உங்க மிசர்சுக்கு ஏதாவது பிரச்னையா..? அவள் ஜாதகம் இருக்கா ? 

சுப்பு தாத்தா வெகுளி . எல்லாரும் நம்பணும். 

சார், நீங்க ரொம்ப கிண்டல் பண்றேள். பிரச்னை பண்றதே  இந்த பொண்ணு தான்.

என்ன பிரச்னை ? என்று நான் கேட்டு முடிக்கவில்லை.

 பூக்களைத் தான் பறிக்காதீக ..  காதலைத் தான் முறிக்காதீங்க....
 என்று எப்.எம்.ரேடியோ அலறியது. என் கேள்விக்குத்தான்   காத்திருந்தது போல.  

(உங்க மனசுலே ஒரு கேள்வி எழுந்தது அப்படின்னா அதற்கான பதில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி நீங்கள் போவீர்கள் . இது நிச்சயம். ) So says my Guru, tells my good friend Mr.Venkataraman. thank u sir. 

அவரை ஒரு அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். எனக்கு புரிந்து விட்டது.

அத, அத அதைத்தான் நான் சொன்னேன்
என்று அவர் சொல்லவில்லை. அவர் பார்வையே சொல்லியது.

மாமி, கொஞ்சம் ரேடியோவை சன்னமா வையுங்களேன்
என்று ஒரு அப்பீல் பண்றார். வந்தவர்.

இதோ செஞ்சுட்டேன். சொல்றாளே தவிர செய்யல்ல. 

நரசிம்மனா.. அதானே உங்க பேரு.

ஆமாம்.

உங்க பொண்ணு, வந்தனாவா,  அவ சொல்றத நீங்க கேட்கணும் அப்படின்னு நினைக்கிறா  இல்லையா ..  ?

அந்த நீங்கன்னு நீங்க சொல்றதுலே   நான் இன்க்லூடட்  இல்ல. என் வீட்டுக்காரி.

சரி. அவளுக்கு என்ன பிரசனை.

சார் . நீங்க என் அப்பாவோட க்ளோஸ் பிரண்டு அப்படிங்கரதுனாலே சொல்றேன்.  தன்னோட வயத்துலே பிறந்த பெண் தான் சொல்றபடி தான் கேட்கணும் அப்படின்னு என் பார்யாள் நினைக்கிறாள். 

ஏன் ?

ஏனா ? அவளுக்கு அவள் பிறந்த வீட்டுலே தெரிஞ்சா  கௌரவக் குறைச்சலா போயிடும் அப்படின்னு சொல்றா.  அவ சொல்றதும் நியாயமாகத்தான் தோன்றது.   மேற்கொண்டு.....

என்ன ?

அவ சொந்தத்தில் தெரிஞ்ச இரண்டு பையன்கள் இருக்கிறாங்க. நல்ல குடும்பம். நம்மைவிட ஹை லிவிங். ஒரு பையன் ஆல்ரெடி அமெரிக்கன் சிடிசன். இன்னொரு  பையனுக்கு க்ரீன் கார்டு கிடைக்கப்போறது. அங்க தான் அலையன்ஸ் வச்சுக்கணும் அப்படின்னு பிடிவாதம். இந்த இரண்டுலே ஒண்ணு சூஸ் பண்ணட்டுமே அப்படின்னு சொல்றாள்.

பொண்ணு என்ன அதுக்கு  சொல்றா?

சார், நிஜத்தை சொல்லணும் னா , அவ அம்மா சொல்ற அலையன்சு  பத்தி தீவிரமா பேச ஆரம்பிச்ச பின்னே தான் , இது எல்லாம் ........எங்களுக்குத் தெரியறது....  ...

 ((1,2,3..........4... 10 செகண்டு வால் க்ளாக் சத்தம் இப்ப கேட்கிறது. ) 

பெருமாள் அவர் தூங்கிண்டு இல்ல. நாங்களும் தூங்கிண்டு தான் இருந்திருக்கோம். .. 

இந்த பையன் படிச்சவன் தானே..

ஆமாம்.

கூட வேலை பார்க்கிறானோ...?

ஆமாம். ஒரு வருசமா...

அப்பா அம்மா எப்படி ?  குடும்பம் எப்படி ?

நல்லவா தான் அப்படின்னு பொண்ணு சொல்றது. நான் எப்படி போய் பார்க்கமுடியும் ?

பையனைப் பார்த்தீகளா ?

முந்தா நாள் அன்னிக்கு அவ ஆபீஸ் லே காண்டீன் லே எனக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வச்சாளே ? நல்ல டீசெண்டா இருக்கான். இவ இருப்பதற்கு மேல் டையர் லே இருக்கிறான் போல் தோன்றுகிறது. பாசிபிளி ப்ராஜக்ட் மேனேஜர் காடர்.

பின்னே என்ன ?

நமக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கிறது இல்லையா..
கூட பந்துக்கள் அவர்களோட பந்துக்கள் இருக்கிறவா நம்ம மேல வச்சு இருக்கிற மதிப்பு இதெல்லாம் பார்க்கணும் இல்லையா..?  நாளைக்கு ஒரு நல்லது கெட்டது  எல்லாத்துக்கும் எல்லாரும் வரணும் இல்லையா ?

நரசிம்மரே.. உங்க பொண்ணுக்கு தன் ப்யூசர் மேல அக்கறை இருக்காதா என்ன ? இஸ் ஷி நாட் காம்பிடண்ட் டு அனலைஸ் த சிசுவேஷன் ?

அப்படி இல்லை.  ஷி  இஸ் ரியலி  ஸ்மார்ட் அண்ட் இண்டெலிஜெண்ட்.

அப்போ, த ப்ராப்ளம் இஸ் மோர் வித் அஸ் இல்லையா ?

சார் ! நான் உங்ககிட்டே ஜோசியம் பார்க்கத்தான் வந்தேன். நீங்க சைகாலஜிஸ்ட் ஆ பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள். ....

 ஐ ஆம் ஒன்லி அனலைசிங் யுவர் ப்ராசஸ் ஆப் தாட்.

அடுத்தவளுக்கு கஷ்டமா ஆயிடுமே..?  ஹூ வில் ஹாவ் அலையன்சு வித் அஸ் . 

அப்ப, மூத்தவளா பிறந்தா சாக்ரிபைஸ் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறேள்.

நான் மட்டும் இல்ல. நம்ம சமூகம் சொல்றதே..

அவரவர் வாழ்வை அவரவர் முடிவு செய்ய கூடிய ஒரு சூழ்நிலையை உண்டு பண்ண முடியாதா பெற்றோர்களாலே...?

முடியும். இல்லைன்னு சொல்லல. இன் பாக்ட் , அடுத்தவ மூத்தவ கட்சி.
என்னைப் பத்தி கவலைப்படாதீங்க அப்பா  பி போல்டு அப்படின்னு சொல்லிட்டா.. 

அப்ப என்ன பிரச்னை ?  எஸ்ஸுனு இங்கிலிஷ்லே சொல்லிடுங்க...

திரும்ப திரும்ப என்னை சொல்லாதீக.   நான் ஒத்து போகணும் அப்படின்னு தான் சொல்ரேன்.  நான் இப்பவே போன் போட்டு என் பார்யாளை வரச்சொல்றேன். நீங்க கன்வின்ஸ் பண்ணுங்க. ப்ளீஸ் ,


கார்த்தி அப்பா.. அப்படின்னு பக்கத்து ரூம்லே ந்து ஒரு சத்தம்.
கொஞ்சம் இருங்க. என்னன்னு பார்த்துட்டு வரேன் அப்படின்னு அடுத்த ரூமுக்கு சென்றேன்.

என்ன விஷயம். கூப்பிட்ட ?

இன்னிக்கு, நான் பேச நினைப்பதெல்லாம் என்னங்க.. நீங்க பேசறீங்க...

அது சரி. எதுக்காக கூப்பிட்ட ?

உங்க பிரண்டு பெங்களூரு லேந்து இரண்டு தரம் போன் பண்ணிட்டார். அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசறேன்னு சொல்லி இருக்கார். இந்தாங்க. இந்த செல்லை பிடிங்க.. என்று ஒரு செல்லை என்னிடம் திணித்தாள்.

செல்லை வாங்கிக்கொண்டு, நரசிம்மன் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றேன்.

இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார் என்று தோன்றியது.

யார் ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு முப்பது செகண்டு ஓடியிருக்கலாம்.

சார், இன்னும் ஒரு விஷயம் இருக்கு. எனக்கு இரண்டே பெண்கள் தான். பையன்கள் இல்லை.

இனிமே நோ சான்ஸ். வீட்டுக்காரிக்கும்   வயசாயிடுத்து. என்றேன்.

உங்களுக்கு எப்பவுமே கிண்டல் தான்.
நமக்கு வயசானப்பறம் எங்க போய் இருப்பது ? நமக்கு ஒரு ஆதாரம் வேண்டும் இல்லையா ?  

ஸோ , த ப்ராப்ளம் கன்சர்ன்ஸ்  யூ,        நாட் யுவர் டாட்டர்.

செல் அடித்தது.

எடுத்தேன்.

பிரண்டு வெங்கடராமன் தான் பேசினார்.

நம்ம காலனிக்கு ஆதார் கார்டு கொடுக்க,   தேதி ,போட்டோ எடுக்கிற  இடம் எல்லாம் அசோசியேஷன் நோட்டிஸ் லே போட்டிருக்கு அப்படின்னு சந்திரசேகர் சொல்றாரே...

அப்படியா...ஆதாரம் வந்துடுத்தா !! போய் பார்த்துட்டு வர்றேன். சத்தமா பதில் சொல்லிக்கொண்டே வந்தவரையும் பார்த்தேன். 

அப்படியே அந்த லிஸ்டுலே என்னோட நம்பர் என்னன்னு பார்த்துட்டு போன் செய்யுங்க.  என்றார்.

செல்லை வைத்துவிட்டு நரசிம்மனை பார்த்தேன்.

நரசிம்மன், பகவான் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் போட்டு இருப்பார் என்றேன். நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதரமா? அப்படின்னு ஒரு வசனம் இருக்கு தெரியுமோ ?

இப்ப பிலாசபி பேசறேள்.

அது சரி. அப்பா எப்படி இருக்கார் ?

அவருக்கென்ன ? தினப்படி கீதை பாராயணம் பண்ணிண்டு இருக்கிறார்.

அவர் கிட்ட கேட்கலையா ?

அவர் விஷயம் தெரிஞ்சன்னிக்கே :
நான் என்னத்தடா சொல்றது ? நீயாச்சு, உன் பொண்ணாச்சு.. அப்படிங்கறார். 

லோகத்துலே நடக்கிரதுக்கெல்லாம் நம்ம   ஒரு சாட்சி தாண்டா..எல்லாத்தையும் என் தலை மேல் போட்டுடு அப்படின்னு பெருமாள் சொல்லி இருக்காராமே..

அனன்யாஸ் சிந்தயிந்தோ மாம் யே ஜனா பர்யுபாசதே
தேஷாம் நித்யம் அபியுகதானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.
ஸ்லோகம் வேர சொல்றார். 

மேலே, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. என் பிரண்டு சூரிக்கிட்டே கேட்டுக்கோ அப்படின்னு சொல்லிட்டார். அதான் நானும் வந்தேன். 

எனக்கு மனசுக்குள்ள் சிரிப்பு வந்தது.
அவர் அந்த காலத்து லப்ட் கம்யூனிஸ்ட்.
மிலிடண்ட் ட்ரேட்  யூனியனிஸ்ட்.
இன்னிக்கு ராதே ஷ்யாம்.   ரைட் அபௌட் டர்ன். 

நரசிம்மன் !!
இட் இஸ் குட் வி கோ பை த ஸ்ட்ரீம். என்றேன்.


புரியறது. வரேன். என்றார்.  
பத்திரிகையோட வாங்கோ என்றேன்.
         
                             *****************************************


இரண்டு நாள் கழிச்சு ஒரு போன் வந்தது.

என் மனைவி போனை எடுத்தாள். எதோ இரண்டு வார்த்தை பேசிவிட்டு என்னிடம் போனை தந்தாள்.

யாருன்னே தெரியல்லே. சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.

சூரி ஹியர் என்றேன்.

தாத்தா தாங்க்ஸ் .

தாங்கஸா ? நீங்க யாரு. ?

நானா ?

ஆமாம்.

நான் உங்க தஞ்சாவூர் ப்ரண்டோட பேத்தி.     நரசிம்மன் டாட்டர்.

ஹலோ .. என்ன ஆச்சு.

அதான் சொன்னேனே. தாங்க்ஸ்.

அப்பறம்

விழுப்புரம். ...

கல கல என்று சிரிப்பு. 
வரப்போரத்து ஓடையிலே புதிய வெள்ளம்  பாய்ஞ்சு வராப்போல .....

போன் கட் ஆகிவிட்டது.
ஆனா அந்தப்பிஞ்சு மனசுக்குள்ளே இன்னிக்கு இருக்கும் ஆனந்தம்  
கண்டின்யூ ஆகும் பார் எவர் அண்ட் எவர்.

அது என்ன விழுப்புரம்?
 புரியவில்லை.
கிழவி கிட்டே கேட்டேன்.

என்ன இது கூட தெரியாம.  சரியான .ட்யூப் லைட்..
அங்க தானே  ட்ரைனுக்கு  என்ஜினை மாத்தறா?

அப்படின்னா ?
மக்கு மக்கு.  அப்பா அம்மா என்ஜினை கயட்டிட்டு மாப்பிள்ளை என்கிற டீசல் என்ஜினை மாட்டி இருக்கா...
இந்த மாதிரி சமாசாரங்கள் லே கிழவி ஆல்வேஸ்  எ லிட்டில் அஹெட்.
காதல் ஓவியம் பாடும் காவியம்.

இந்த இளசுகளுக்கு  ஆசைகள் எங்கிருந்து வருகுதோ !!
எல்லாமே அந்தந்த வயசுக்கான கெமிஸ்ட்ரி. 
அந்த ஹார்மோன் படுத்தற பாடு எல்லாம் 
 ரஹ்மான் ரசிகர்களுக்குத்தானே புரியும்.. 

கிட்டப்பா காலத்துலே இருக்கிற நமக்கு இதெல்லாம் 
எட்டாதப்பா...

யுகத்துகேற்ற சங்கீதம். சுகம். 

என் மனசுக்குள்ளே  அந்தப்படம்  ப்ளாக் அண்ட் வைட்டாத்தான்  ஓடியது.

காதில் சத்தம் ஒன்றும் வரவில்லை.
காரணம் காதை ஓரம் கட்டிவிட்டு

மூக்குக்கு வந்தது.ஒரு சூப்பர் ஸ்மெல்.  நறுமணம்.

அந்தந்த வயசிலே அந்தந்த ஆசை.
அப்படின்னு வியக்க வைத்தது.

இந்த பெரிசுக்கு இன்னும்
சின்ன சின்ன ஆசை.

மெது வடை.கொஞ்சம்  கொத்தமல்லி சட்னி
மெது வடை கொஞ்சம் தேங்காய் சட்னி.
அதுவே எனக்கு
திவ்ய நாம சங்கீர்த்தனம்.

யார் யாருக்கு எப்ப எப்ப என்ன என்ன கொடுக்கணும் அப்படின்னு
அவனுக்கு நன்றாவே தெரியும்.
வாழ்வே இனிமை.
மெதுவடை கொத்தமல்லி சட்னி பண்ணிக்கொடுத்த பட்டினியே ..

சீ சீ ... பத்தினியே என் தர்ம பத்தினியே
நீ மட்டுமல்ல.

எல்லோரும்
வாழ்க வளமுடன்.  

இரண்டு தரம் சத்தமா சொன்னா போதுமா ?
இந்த கணக்கு இந்த பார்முலா புரிஞ்சாலே போதுமே.

H =  R - E 
So simple a mathematical formula.
If u want to keep your HEAD high and keep high your esteem,
understand this simple equation.

Happiness is just Reality minus Expectations. 

 யாரு சொன்னாவா ?  இங்கே போய் பாருங்க. 
*******************************************************************************

கற்பனை ஆங்காங்கே கலந்த உண்மைக்கதை. உண்மை இருக்கும் இடங்களிலே பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பொய்மையும் வாய்மை இடத்த
பொய் தீர்ந்த நன்மை பயக்குமெனின்.வெள்ளி, 6 டிசம்பர், 2013

மாறி வரும் உலகத்துலே...


காலம் ரொம்ப மாறிப்போச்சுங்க ...

 ஏன் அப்படி சொல்ற...?

 நம்ம காலத்துலே இருந்த மாதிரியா ஊர் உலகம் சனங்க இருக்குது ?

புரியல்லையே...

 என்ன இல்ல.. படிப்பு மாறிப்போச்சு . ஸ்கூலு எல்லாமே மாறிப்போச்சு.

எல்லாம் காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா  அப்படில்ல இருக்குது..

நீங்க படிச்ச மாதிரியா இப்ப இருக்குது ?

நான் என்னத்த படிச்சேன் ..?

அப்ப நீங்க ஒண்ணுமே படிக்கலையா... உங்க அம்மா என் புள்ள கிராஜுவேட் அப்படி எல்லாம் சொன்னாகளே ?  என்னாத்த தான் படிச்சீக..?

நான் உன்னை நினைச்சேன். பாட்டு படிச்சேன். 

அது தான் காமெடியா முடிஞ்சு போச்சுல்லே..இப்ப எதுக்கு அதெல்லாம் ?

அப்ப வேற என்ன மாறிப்போச்சு ?

இப்ப படிக்கிற புள்ளைங்க என்ன கொட்டம்  அடிக்கிராக..  பாடுறாக...படிச்சுபாத்தேன்...ஏறவில்ல    பாருங்க..


ஆமா.. அப்ப பசங்க வாத்தியார்  வராருன்னா  பயப்படுவாக.
 இப்ப வாத்தியார் அம்மா  பசங்களை பாத்து பயப்படுராக.. நமக்கு இன்னா அப்படின்னு ஒதுங்கி போயிடராக ....

 நம்ம பசங்க படிச்ச படிப்பு மட்டும் இல்ல. பாத்த வேலை மாறிப்போச்சு.நேரம் மாறிப்போச்சு.  ஆணுங்க பொண்ணுங்க அப்படின்னு வித்யாசம் இல்லாம் நைட் புல்லா வேலை பாக்குராங்கலாமே ...

அது அப்படி இல்ல மீனாச்சி.  இங்கன இருக்கறவங்க போன் மூலமா கம்ப்யுடர் வழியா அமெரிக்காவிலே இருக்கறவங்க ஆபீஸ் லே ஒர்க் பண்றாக. அவங்க டைம் வேற இல்லையா.  

அதுனாச்சும் கிடக்கட்டும். அப்பைக்கெல்லாம் பையன் வெளியூரா இருந்தா பொண் குடுக்கவே பயப்படுவாக இல்லையா.

இப்ப பையனுக்கு அமெரிக்காவிலே வேலையா , லண்டனிலே வேலையா, 
ஜெர்மனிலே செந்தேன் நிலவா ஹனி மூனா , அப்படின்னு இல்ல கேட்கராக 

அது மட்டும் இல்லீங்க..பொண்ணு வீட்டுக்காரங்க... கலியாணம் முடிஞ்ச கையோட பெத்த அம்மா அப்பாவை கூட மறக்கடிச்சுட்டு அங்கனவே செட்டில் ஆகிடராகளே...இன்னாத்த சொல்ல ? கீதா அம்மா புட்டு புட்டு வைக்கிறாங்க ...சரியா படிங்க..

மீனாச்சி, நீ போற ரூட் சரியா இல்லயே...

நான் சரியாத்தாங்க சொல்றேன்.
 கட்டற உடையும் மாறிப்போச்சுங்க..  அப்ப எல்லாம் பொண்ணுங்க.. சிறுசுங்க பாவாடை தாவணி போட்டு என்ன அழகு அழகா...

ஆமாம். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அப்படின்னு கிரங்கிபோய் உருகுவாங்க,இல்ல. !!

. இப்பஎங்க பார்த்தாலும்  நீல ஜீன்ஸ், கருப்பு  பனியன் எங்க காலத்துலே இதெல்லாம் நாங்க நினைச்சுகூட பார்க்க முடியாதுங்க.. இப்ப இருக்கிற சுதந்திரம் எங்களுக்கு எல்லாம் கிடையாது இல்லையா.

.பொண்ணுங்க கர்நாடக சங்கீதம் மட்டுமில்ல, வெஸ்டர்ன்  பாட்டு சூபரா பாடுது.  இங்கே பாரு. அற்புதமா இப்படி ஒரு ராக் பாடல் ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ் நாட்டு பொண்ணு பாடும் அப்படின்னு கற்பனை கூட பண்ணி இருக்க முடியாதுல்லே... அப்படி பாடுதுங்க ..

  அதே சமயத்துலே  பாக்காதே..பாக்காதே  அந்த பாட்டும் நல்லாத்தானே இருக்கு. ..

  அது பூஜாவுங்க...அவங்க இந்த சூப்பர் சிங்கர் லே இல்லீங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க பைனல் வந்தவங்க. என்ன சூப்பர் ஆ பாடுறாக..

 அடே ஆமாம். சரிதான்.நீ சொல்றது  ... பாட்டு கூட இல்ல மாறிப்போச்சுல்ல 
அந்த படத்துலே ஒரு தமாசு கீது.  

!!! பாக்காதே பாக்காதே அப்படின்னு பாத்துகிட்டே சொல்றாக இல்ல. 

 இந்த அம்பது வருசத்துலே ஒரே பாட்டை எப்படி எல்லாம் மாத்தி பாடுறாக..

 அப்படியா..  அந்த மாதிரி ஒரு பாட்டை சாம்பிளுக்கு போடு பார்ப்போம்.

 இன்னாத்த சொல்ல
முதல்லே ஷபனா ஆஸ்மி பாடுராப்போல இங்க ஒரு பியூசன் பாட்டு
 தாயே யசோதா.  ராகம் தோடி.

 பாட்டு என்னவோ நல்லாத்தான் கீது. 
இருந்தாலும் அந்த ஒரிஜினல் யசோதா அம்மா இன்னிக்கு வந்தாக அப்படின்னு வச்சுக்க, ஓடிப்போய் விடுவாங்க.  அந்த மாதிரி ஒரு பயமாவும் கீது.


அப்ப  இதே பாட்டை சூப்பர் சிங்கர் லே அமெரிக்காவிலே வந்த பிரகதி
பாடி கேட்டு பாருங்க...

 நம்மை எல்லாம் பிரமிக்க வச்சுட்டாக அப்படின்னு தான் சொல்லணும்
 அதே தாயே யசோதா பாட்டு.   அதே தோடி ராகம்.

 இங்கன சுதா ரகுநாதன் முன்னாடி பாடி அவங்க கிட்டே என்னாம்மா அப்ளாஸ் வாங்குராக... யம்மாவ். !!!!

பாட்டு அதே தாங்க.  ராகமும் அதேதாங்க.

உண்மையை சொல்லப்போனா எங்க அம்மா 1920 லே பிறந்தவங்க.
 எனக்கு சொல்லிக்கொடுத்தது இது மாதிரி தான். நானும் தோடி ராகத்துலே மெட்டு போடனும் அப்படின்னா இப்படித்தான் போடுவேன். ..


சங்கீதம் அப்படியே தாங்க இருக்குது  அத வெளிப்படுத்தறது காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே போவுது.

இதெல்லாம் அப்படி தாங்க. மக்களோட ரசனைக்கு தகுந்தபடி மாறிக்கிட்டே தான் இருக்கும்.
ஆனா ஒரு விஷயம் மட்டும்  அடிப்படையிலே மாறவே மாறாது..

என்னங்க அந்த மனிதன் மாறவில்லை அப்படின்னு கண்ணதாசன் எழுதினாரே அதுவா ?

இல்ல..

அப்ப என்ன ?

அதை கொண்டு வா சொல்றேன்.

என்னங்க அது மாறாம இருக்கறதா ?  எத கொண்டு வர சொல்றீக...

அதான் மீனாச்சி.  இட்லி உப்புமா 
நேத்திக்கு செஞ்சு வெச்ச இட்லி .
அதுலே பத்து பதினைஞ்சு மிச்சம் அப்படின்னு சொன்னீல்ல..

ஆமாம்.

அத அப்படியே சின்ன வாணலி லே போடு. ஸ்டவ்வை லேசா பத்தவை. 
போட்டு ?

முதல்லே நல்ல எண்ணை இரண்டு ஸ்பூன் ஊத்து. பின்னே பெருங்காயம், கடுகு, ஒரு மிளகாய், கொஞ்சம் மஞ்சத்தூள் போடு...

போட்டு....

அந்த இட்லியை நல்லா உதிர்த்து அதுலே போட்டு, பொன் நிறமா வரும் வரை ப்ரை பண்ணு. அது தான் இட்லி உப்புமா 

உப்பு ?

ஆமாம். உப்பில்லா பண்டம் குப்பையிலே இல்லையா...
ஆனா இட்லியிலே உப்பு இருக்கும்.  அதுனாலே கொஞ்சமா போடு.

அப்பறம்.....????

அன்பே வா என் முன்பே வா அப்படின்னு பாடிக்கினே வா. 

அல்வாத்துண்டே வா சொல்லிகிட்டே நான் சாப்பிடறேன்.

என்னங்க சைலண்டா ஆகிட்டீக..

அந்த பாட்டிலேயே அமுங்கி போயிட்டேன்..

ரொம்ப நேரம் ஆயிடுச்சுங்க...நீயா நானா ஆரம்பிச்சுடுச்சுங்க...
இன்னிக்கு மட்டும் நீங்களே அந்த இட்லி உப்புவாவை பண்ணிடுங்களேன்.

என்னங்க..சொல்ல மறந்துட்டேன். முளை கட்டின பயிறு போட்ட
சைட் டிஷ் இன்னிக்கு ஸ்பெஷல் . ஸ்ப்ரௌட் மிசால் அப்படின்னு ஒரு டிஷ் இங்கன போய் பாருங்க... அதையும் செஞ்சுடுங்க.

இன்னிக்கு மட்டும் , இன்னிக்கு மட்டும் அப்படின்னு தினம் தினம் சொல்லிக்கிட்டு லே இருக்கே...

இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு அப்படின்னு இந்த மீனாச்சி எப்பவுமே கிடையாதுங்க..

நேக்கு தெரியும் மீனாச்சி. நீ ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னாபோல..

அட...?  கோச்சடையான் பொங்கலுக்கு வரும் அப்படின்னு போட்டிருக்காக.. இப்பவே ரிசர்வ் பண்ணிடுங்க..

முதல்லே எப்ப கோச்சடையான் ஆடியோ வருதுன்னே தெரியல்லையே..

.உங்க ப்ரெண்ட் ஆவியைக் கேளுங்க..கரெக்டா சொல்லுவாரு. . செல்லை கொண்டு வரேன். நீங்க உப்புமாவை ரெடி பண்ணுங்க.. 

மாறி வரும் உலகத்துலே...???

இட்லி ஒன்றே நிரந்தரம்.

புதன், 27 நவம்பர், 2013

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா.

என்னது ஒரு தினுசா சுகமா ஒரு வாடை வருது ?
அப்படின்னு தாத்தா மூக்கை இன்னும் நன்னா உறிஞ்சி இழுத்து  பார்த்தாற்போல.

ஆமாம். நிசமாத்தான்.
நல்ல ஏதோ ஹல்வா மாதிரி வாடை வருதே !! ஆனா
என்ன இந்த கிழவியாவது அல்வா பண்றதாவது !! இந்த ஜன்மத்துக்கில்லை.

அப்ப என்ன அந்த வாசனை அப்படின்னு பார்த்தால்,
ஆமாம். லாப் டாப் லேந்து தான் வருது.

இப்ப எல்லாம் ஈ சிகரட் அப்படின்னு சொல்றாப்போல ஒரு ஈ அல்வா வும் வர நேரம் வெகு தூரமில்ல..  ஆல்ரெடி ஸ்மோக் செய்யறவங்க இங்கன போய் படிச்சா தப்பு இல்ல.

 இந்த எலக்ரானிக் டிவைஸ் சிகரட்டை ஊதினா ஸ்மோக் பண்ற பீலிங் வருமாம்.  அதனாலே கொஞ்சம் கொஞ்சமா சிகரட் ஸ்மோக்கிங் நிறுத்தி விடலாம் என்று இதை தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.

அது போல ஈ காபி , ஈ டீ , ஈ வெங்காய மசால் ரோஸ்ட், ஈ அல்வாவுக்கும் ஒரு நாளைக்கு ஒரு டிவைஸ் வரும் என்று திடமாக நம்புகிறார்.சுப்பு தாத்தா.

எல்லா புதிய கண்டுபிடிப்பவைகளுக்கு முன்னாடி ஒரு கனவு காணனும். அப்பத்தான் அதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறதா அப்படின்னு மூளை தேடும். So dream before U discover anything.
 

   அன்னிக்கு க்ராண்ட் ஸ்வீட்ஸ்,அடையார் ஆனந்த பவன் எல்லாமே அம்பேல் ஆயிடும்.

தயிர் வடை க்கு பதிலா தயிர் வடை வாடையே மலிவா கிடைச்சா நல்லது தானே.

+Durai A அப்பாதுரை சார் வரன்னிக்கு எந்த ஈ வடை, ஈ பொங்கல், ஈ பேப்பர் ரோஸ்ட் அப்படின்னு செஞ்சு கொடுத்தே ஒரு வகையா மேனேஜ் செஞ்சுடலாம்.


என்ன இந்த ஐ.ஐ.டி லே படிச்ச பசங்க பொண்ணுங்க  ஈ பொங்கல் , ஈ இட்லி, ஈ பிஸ்ஸா , அப்படின்னு இந்த வாடைகளையே கம்ப்யூடர் மூலமா ஸ்டிமுலேட் பண்ணி நம்மை ஒரு வகையா அடிக்ட் ஆக்கிவிடுவாங்க.

ஆனா அதுவரைக்கும் சுப்பு தாத்தா.இருக்கணுமே.மேஷ ராசிக்கு அஷ்டமத்துலே  எட்டிலே வேற சனி வரப்போறாரே .

அதுவரைக்கும் என்ன செய்யறது ?

அல்வாவே ...

வாராய். நீ வாராய்.. என்று பாடிக்கொண்டே இருப்பதால்  லாபம் எதுவும் இல்லை.

லோகத்துலே செய் இல்லைன்னா செத்து மடி. do or die அப்படின்னு இங்க்லிஷிலே சொல்லி இருக்கு இல்லையா ?

 1980லே என் நண்பர் வெங்கடரமணி சுத்தமா,சத்தமா சொல்வார்.

ஆடிட் லே அவர் தான் எங்களுக்கு சீனியர். அநேக விஷயங்கள்  கீதைலே போட்டு இருக்கு அப்படின்னு அடிக்கடி சொல்வார்.

 அது எதுக்கு கீதைலே போடணும். எங்க வீட்டு சீதையே  தினமும் சொல்றது தானே அது என்று நினைப்பேன். சொல்லமாட்டேன். அவர் கிட்ட ஒரு முதல் மரியாதை எப்பவுமே எனக்கு.

ஹல்வா  திரும்பவும் நினைவுக்கு வருகிறது. ஞாபகம் வருதே.வந்தது.

உடன் ,  வீர தீரத்துடன் பாண்ட் நாடாவை இறுக்கி முடிஞ்சுண்டு, சட்டையை சரியாத்தான் போட்டு இருக்கேனா அப்படின்னு கன்பர்ம் பண்ணிண்டபிறகு

எதிர்த்த வெஜிடபிள் கடைக்கு சென்று அரை கிலோ பம்ப்கின் வாங்கி. வந்தேன்.  பம்ப்கின் அப்படின்னா மஞ்சள் கலர் பூசணிக்காய். மெட்ராஸ் லே இத சில பேரு பரங்கிக்காய் அப்படின்னும் சொல்றாக.

ஹல்வாவுக்கு வேண்டியது மற்றதெல்லாம் அதாவது நெய்,பாதாம்பருப்பு, மிந்திரி, திராட்சை,ஏலக்காய் வீட்டில் எங்கெங்கே என்ன என்ன இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஸோ , ஒரு சிறிய வாணலி பத்திரத்தில் பம்ப்கின்னை நல்ல சின்ன சின்ன துண்டமா நறுக்கி , நீர் ஊற்றி வேக வைத்து, ஸ்டவ்வை சன்னமாக எரிய வைத்து , அடி தீஞ்சு போகாம பக்கத்துலே இருந்து பாத்து பாத்து ,

பம்ப்கின் உடைய   அந்த பச்சை வாடை அடங்கிய உடனே, கொஞ்சமா அந்த ஹலுவா அழகிலே அசந்து போய், அதை அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்,  , என்று முனுமுனுத்துக்கொண்டே சக்கரை 10 ஸ்பூன் போட்டு, நல்ல கிளரி, விட்டு,

கேசரி பௌடர் , பொடி செய்த ஏலக்காய், போட்டு,

பக்கத்தில் இன்னொரு ஸ்டவ்வில், ஆவின் நெய் எடுத்து அதில் பத்து மிந்திரி, ஐந்து பாதம் , ஒன்றிரண்டு பிஸ்தா போட்டு, மிந்திரி நல்ல பொன் நிறம் வரும் வரை,

 காத்திருந்தேன் காத்திருந்தேன், என காத்து,

அந்த பம்ப்கின் சக்கரை கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் ஆகி விட்டதா என்று கவனித்து பார்த்து, அதற்குப்பின் அதற்குள்ளே அந்த நெய்யில் பொரித்த மிந்திரி,பாதம் பிஸ்தா வை கலந்து ,

ஆஹா, ஆஹா , என்னமா மணக்கிறது.

இந்த வாசத்துக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா,
மனசுக்குள்ளே மறைஞ்சு மறைஞ்சு வரும் அந்த பாடல் ட்யூன் :

இப்ப காதிலேந்து மூக்குக்கு வந்தது
 காற்றிலே வாசமே காதலின் சுவாசமே .  

  அந்த வாணலியைத் திறந்தேன்.

(Courtesy:thank U Sangeetha Nambi Madam for your excellent recipes blog )

இதுதான் பம்ப்கின் அல்வா.
மனமனக்குது. ருசி அப்படின்னு குறைச்சு சொல்லிடக்கூடாது. தேவாம்ருதம்.


அல்வா வாணலியை ஒரு கிடுக்கியினாலே பத்திரமா தூக்கி நடு ஹாலிலே இருக்கிற ஊஞ்சல் முன்னாடி இருக்கிற மேசை மேலே வைச்சேன்.

அந்த ஊஞ்சல்லே உட்கார்ந்துண்டு இந்த ஹல்வாவை ருசிச்சிண்டு, டி.வி.லே அந்த காலத்து ஆஷா போன்ஸ்லே பாட்டு ஒண்ணு கேட்கணும் அப்படின்னு மனசு ஓடறது.  இல்ல பறக்கறது.


அத கொஞ்சம் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டேன். போட்டா அப்படியே வழுக்கிட்டு வயத்துக்குள்ளே போயிடுத்து.

ஆஹா என்ன சுகம் என்ன சுகம் !!!

அடுத்த பீஸ் எடுத்து வாய்க்குள்ளே போடறதுக்குள்ளே அது ஸ்பூன் லேந்து நழுவி கீழே விழுந்து விட்டது .

அத எடுக்க குனிந்தேன் பாருங்க...
குனிஞ்சு எடுக்கவும் செஞ்சுட்டேன்.
எழுந்திருக்கும்போது அந்த டேபிள் மேலே தலை இடிச்சு,
அய்யய்யோ ..

டேபிள் மேலே இருக்கற அந்த அல்வா வாணலி அப்படியே கவிழ்ந்து
எல்லா அல்வா வும் கீழே கொட்டி.....

என்ன ஒரு அதிருஷ்டம்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.....
அல்வா வாணலி தலை கீழா கவிழ்ந்து கிடக்கிறது.


என்ன இது கால சர்ப்ப யோகம் !!! (ஜாதகத்திலே ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவிலே எல்லா கிருகங்களும் இருந்தா இந்த யோகம். இது என்ன படுத்தும் எப்படி படுத்தும் அப்படி எல்லாம் விலா வாரியா படிக்க சுப்பையா வாத்தியார் பதிவுக்கு செல்லவும். )

 சர்விஸ் டயத்தில் தான் ரொம்ப படுத்தியது. ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகிவிட்டது. என்னை இன்னுமா படுத்தும்.?


அப்படின்னு என்னையே நொந்து நூடுல்ஸ் ஆனபோது

ஊட்டுக்காரி கிழவி வரா...

எனக்கா கை கால் எல்லாமே உதர்றது. இதெல்லாம் தேவையா மத்தியான நேரத்துலே.. என்று கண்டிப்பா சத்தம் போடுவா ..அந்த சத்தம்

அய்யய்யோ?
ஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா என்று நான் கிருஷ்ண பரமாத்மாவை கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள்

என்ன சத்தம் இந்த நேரம்...
என்று அந்த புன்னகை மன்னன் ஒரிஜினல் பாட்டை பாடிட்டே ... வரா.. வரா எங்க ஊட்டுக்கிழவி

என்னமா அந்த கிருஷ்ணன்  பாடுறான் அப்படியே ஜூனியர் எஸ்.பி.பி. மாதிரி இருக்குது. என்னங்க.. அந்த விஜய் டி.வி.பாக்கலியா ..?
அப்படின்னு கேள்வி  வேற ...புன்னகை மன்னன் பாடலை எப்படி வைரமுத்து சார் இயற்றினார் என்று அவரே சொல்றார் பாருங்க.. ..

ஒரு காதலனும் காதலியும் நதியோரம் செல்கிறார்கள். எல்லா விதமான காதல் உணர்வுகளோடும் செல்லும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்கள். 

கிழவி எங்கே கீழே விழுந்து கிடக்கிற அல்வா வாணலி யைப்பார்த்து விடப்  போகிறாளோ என்ற பயத்திலே,.

அவளை திசை திருப்பும் முயற்சியிலே

இங்கே இந்த பாரு.


நான் இந்த பாட்டு  கேட்டுட்டு இருக்கேன்.

ஆகம்  மலஹர்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை.
நம் தொல்லைகளுக்கு சிறிது நேரம்
விடுதலை கொடுக்கும் இசை.

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா. இதை கொஞ்சம் கேட்போம் அய்யா.என்று இதில் லயித்து இருந்தேன்.

அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சிகப்பு டவலை எடுத்து அந்த கொட்டிய அல்வாவை பாதி மூடினேன்.நல்ல வேளை . கிருஷ்ண பரமாத்மா காப்பாத்திவிட்டார்.

 கொட்டிய அல்வா வை கவனிக்காமலே அந்த இசையை மட்டும் சிறிது நேரம் ரசித்து விட்டு,

அன்னிக்கு இளையராஜா முன்னாடி நம்ம வீரமணி ட்ரம்ஸ் இன்னும் நல்லா இருந்தது இல்லையா... என்றாள். இன் பாக்ட் அந்த கிரியேடிவிடி பிலான்க்ஸ் டு லெப்ட் ப்ரைநீஸ் ஒன்லி. என்று சொல்லி மனைவி என் கண்களை விட்டு மறைந்தாள் .

ஆப்டர் நூன் காட் நாப் பூனைத் தூக்கம் அவளோட பாக்கியம்.  அவள் பேசாமல் தூங்கிக்கொண்டு இருப்பது என்னோட  பாக்கியம்.


 நானோ,
அந்த இசையிலே தூங்கி இருப்பேன்  போல இருந்தது. அதில் ஒரு கனவு. ஓஷோ மெடிடேசன் சென்டரில் வீரமணி ட்ரம்ஸ் வாசிக்கிறார்.  2010 ல் நான் அனுபவித்த நிகழ்ச்சி. திரும்பவும் ஒரு தரம் மனத்திரையில்.

நீங்களும் கேட்கவேண்டும்.  கேட்பீர்களோ தெரியாது.

சூரி சார் !! என்று ஒரு குரல்.
யாரது ? கூவுது? என்று கணினியைத் திறந்தால் ...!!!

எனக்கென்றே ஒரு பதிவு இட்டு இருக்கிறார்கள்.  தனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ... ஒரு மூத்த பதிவர்.  

இந்தக்காலத்து மாமியார்கள் மருமகள்   பற்றிய சிறப்பாய்வு அங்கே.

 மருமகள் கொடுமையாம்.  திருமணத்திற்கு இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. அப்படின்னு ..அவங்க நோக்கிலே ...

அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.

(தொடரும்.....)

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கார்த்திகை தீபம்.


கார்த்திகை தீபம்.


பக்தி பரவசத்தில் ஒரு பக்தர் பாடுகிறார்.

புதன், 6 நவம்பர், 2013

யார் சரி யார் தப்பு ?

செவ்வாய் கிரகத்திற்கு செவ்வாய்கிழமை அன்று ஒரு செயற்கை கோளை அனுப்பியிருக்கிறார்கள் நமது அரசாங்கம்.
Add caption

ரூபாய் 450 கோடி செலவு தான் . இதனால் என்ன லாபம் என்று நேற்று எங்கள் காலனி வெட்டி அரட்டை கிழடுகள் போட்டி போட்டு வாதித்துகொண்டு இருந்ததில் காதில் விழுந்த சில கருத்துக்கள் விமர்சனங்கள்.

1.  கந்த சஷ்டி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிரார்கள்.

2.  செவ்வாயில் தண்ணீர் இருந்தால் அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரலாம்.

3.  சென்னையில் இட நெருக்கடி முற்றிப்போய் விட்டது.  புதிய பிளாட்கள் அங்கே அமைக்க முடியுமா என்று பார்க்கலாம். '

4.  மன்மோஹன் சார் இன்னும் அங்கு மட்டும் தான்  போகவில்லை.  அடுத்து வரும் எலக்ஷனுக்குள் போகலாமா என்று முடிவு செய்யலாம்.5. ஹரிஹோட்டாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள்.

6. உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு.

7.  இங்கே இருந்து செவ்வாய்பேட்டை பக்கம் தானே. அதற்கு எதற்கு 450 கோடி செலவாகிறது என்று சொல்கிறாங்க...  பகற்கொள்ளையா தெரியறது ..

8.  இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று ஆளுக்கு ஆள் மந்திரி சபைலே சொல்றாக.  நம்ம எதுனாச்சும் முடிவு எடுத்து இளவரசர் ராகுல் எதுனாச்சும் சொல்லிட்டா ஆபத்து. பேசாம கொஞ்ச நாளைக்கு அங்க போய் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்படின்னு மன்மோஹன் சார் முடிவு செஞ்சா அதுலே என்ன தப்பு சாரே ?

8. இனிமேல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எல்லாருமே நாங்க ஒரு ட்ரிப் போயிட்டு வந்துட்டோம். இனிமேல் செவ்வாய் எங்களை ஒண்ணும் செய்யாது என்றும் சொல்லலாம்.


யார் சரி யார் தப்பு ?
*******************************************************************

இது ஒருபுறம் இருக்க, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிரார்கள் என்று கண்ணீர் விடும் அரசாங்கம் ஆம் ஆத்மிக்காக அல்லும் பகலும் உழைக்கும் இந்த அரசாங்கம் இந்த செலவு செய்யலாமா என்று ஒரு கேள்விக்கு ஐ.எஸ். ஆர். ஓ. நிறுவனம் என்ன பதில் தருகிறது என்பதை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

How does a country with one of the lowest development levels in the world justify spending on a space program?”

 People who are really serious about knowing about this great feat may click HERE

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும் ?இன்னிக்கு மேடம் ராம லக்ஷ்மி  லைக்கு சென்றேன். மிகவும் அசத்தலான போடோ ஒன்று. கல்கி தீபாவளி மலர் லே வந்திருக்கு.  

எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்றது செல்லம். 
அம்மாவுக்கு புரியவில்லை. 

எனக்குப் புரிந்தது. இப்படி இருக்குமோ ?  என்று யோசித்தேன்.  ஒரு add-on செய்தேன்.   
அப்பறம் தான் பார்த்தேன். இது கர்ல் பாப்பா இல்லையா ?  தப்பு தப்பு ..என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன். 
அடுத்து ஆதி வெங்கட் வலையில் தீபாவளி பக்ஷணம் தன் செல்லத்துக்காக பண்ணி இருக்கிறாள். 
சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் முறுக்கும் தேன்குழல், காரசேவு ரொம்ப பிடிக்கும்.
அந்த செல்லமோ வேறு எதோ வேண்டும் என கேட்பது போல க்யூட் ஆக இருக்கிறது.  அதுவும் ஒரு வேளை அப்பா டில்லியிலிருந்து ரசகுல்லா  கொண்டு வருவார என்று அடம் பிடிக்கிறதோ ?
ஸ்ரவாணி வலை தளத்தில் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் பின்னூட்டத்தை அந்த குழந்த படித்து விட்டதோ ??  இன்னிக்கு பாதாம் அல்வா அப்பறம் டைமண்ட் பிஸ்கட். சூப்பர். சீக்கிரம் எல்லோரும் அங்கே போங்க..தீர்ந்து விடப்போகிறது.  

ஸோ க்யூட்.  

 வெங்கட் நாகராஜ் சார்...வரும்போது கண்டிப்பாக ரச குல்லா உங்க ராசாத்திக்காக வாங்கி வாருங்கள்.

அமெரிக்காவில் உள்ள என் பேரனிடம் உனக்கு தீபாவளிக்கு என்ன வெடி வாங்கபோறே..என்றேன். 
இதெல்லாமே வேஸ்ட். என்றான்.
ஏண்டா ?
நீயும் பாட்டியும் போடற சண்டையே பெரிய வெடியா இருக்கு. 
அப்ப உனக்கு என்னதான் வேண்டும் ..? 
Battlefield 4 அப்படின்னு ஒரு game வந்திருக்கு. 100 டாலர் தான். அது. அப்பா கிட்டே சொல்லி வாங்கி கொடு என்கிறான். 
அது என்ன என்று பார்த்தேன். 


என் வீட்டுக்காரியை பார்த்தேன். 

"இப்ப எல்லாம் குழந்தைங்க நம்ப காலம் மாதிரி இல்ல .

அவகளுக்கு என்ன புடிக்கும் அப்படின்னு சொல்லவே முடியாது. "

அதுவும் சரிதான். 

நம்ம காலத்துலே 

பிடிச்சதெல்லாம்  
இது தான். 

நம்ம ஆடக் கத்துக்கொடுப்போம். அந்த செல்லங்கள் என்னமா ஆடும் ?
ஒரு சாம்பிளுக்கு இங்கே பாருங்க.

நாட்டியத்தை கடைசி வரை முழுமையாக பார்க்கவும். கன்க்ராட்ஸ். இந்த செல்லத்தின்  அப்பா அம்மா கொடுத்து வைத்தவர்கள் இல்லையா .


DEEPAVALI GREETINGS  TO ONE AND ALL OF WEB FRIENDS.

எங்கள் நண்பர்கள், உறவினர் எல்லோருக்கும் எங்களது 
உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

சனி, 19 அக்டோபர், 2013

எல்லாமே சங்கீதம் தான்எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்போம் இல்லையா.? சிந்து பைரவி படத்துலே...

அந்த எல்லாமே என்பது எதை குறிக்கிறது ?

கர்நாடக சங்கீதமா, கிராமியப் பாடல்களா, ஐரோப்பிய இசையா, ஆப்ரிகன் ம்யூசிக்கா, ராப்பா, பாப் ஆ ? குத்து பாட்டா ?

அப்படின்னு ஒரு பக்கம் சுவையான விவாதம் இருக்கிறபோது,

இன்னொரு கோணத்திலே பார்த்தேன்.
எல்லாமே அப்படின்னா,
வாழ்க்கையிலே , நமது அன்றாட வாழ்க்கையிலே நடக்கிற ஓடுகிற, உட்கார்ந்திருக்கிற விஷயம் எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு நினைக்கிறேன்.

சங்கீதம் என்கிற சொல்லைப் பிரித்துப் பார்த்தா, சங் + கீதம் என்று பொருளாகும்.

சங் என்ற சொல்லுக்கு  சேர்ந்து என்று  பொருள்.
கீதம் என்ற சொல் பாட்டு

ஒருவரை ஒருவர் சேரும்போது வருவது  சுகம். அது
தருவதெல்லாம் இன்பமயம். மன்னவன் வந்தானடி என மனதில் எழும் மின்னல்களை தோழியிடம் சொல்லும் காட்சி

இன்பத்திலே தான் சுகம் உண்டு என்பதில்லை. நம்மை உற்றவர் சார்ந்தவர் துயர் உறும்போது அவர்தம் துயரிலே பங்கு கொண்டு அவருக்கு உறுதுணையாய் இருப்பதும் சுகம் தான். வாழ்வின் பொருள் அது தான்.

ஒரு இரண்டு நாட்கள் முன்பு, மதிய வேளையில், மயிலையில் மாட வீதியில் இருபக்கமும்  வண்ண வண்ண பொம்மைகள் நவ ராத்திரி விழா முடிந்தபின்னும் நூற்றுக்கணக்கில் ஜொலித்துக்கொண்டு இருந்தன. காந்தி, நேரு, பாபா  மட்டுமன்றி, வாமணர், நரசிம்மர்,பரசுராமர், இராமர், கிருஷ்ணர், பரசுராமர், உள்ளிட்ட  தசாவதாரமும் எந்த திசையில் எந்த வீட்டிற்கு போக வேண்டும், இனி தாம்  அவதாரம் செய்யப் போகிறோம் என்று காத்திருந்தன.
கொலஸ்ட்ரால் பற்றி கவலையே படாத பானை வயிறு பாபுலர் செட்டியார் சின்னதாக பெரிதாக பல சைசுகளில் இருந்தார்.

ஒரு கணம் ஏதாவது வாங்கலாம் என்று நினைத்த நான் சரவணா பவன் போர்டு பார்த்த உடன் உள்ளே போய் சூடா ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு பிறகு யோசிப்போம் என்று ஹோட்டல் படிகள் ஏறி உள்ளே நுழைந்தேன்.

மணி மூன்றை நெருங்கிய போதிலும் இன்னும் சாப்பாடு மேசைகளில் ஆங்காங்கே ஓரிருவர் இருந்தனர்.  இடது பக்கமாக டிபன் மேசைகள்.  மேசையின் ஒரு பக்கத்தில் இரண்டு பேர் என நாலு நபர் உட்காரும் அமைப்பு.

ஒன்றிண்டு மேசைகள் காலியாக இருந்தாலும்,  அதோ.. ஒரு வயதான தம்பதியர் ஒரு மேசையின் பக்கத்தில். என்னை வசீகரித்தனர்.  அவர்கள் எதிரே நானும் உட்கார்ந்தேன்.

எதிரே உட்கார்ந்து இருந்த  வைஷ்ணவர். அதிக பட்சம்  ஒரு அறுபது  வயது இருக்கலாம்.  திவ்யமாய் நெத்தியில் தீர்க்கமாய்  திருமண் . பக்கத்தில் அவர் பார்யாள். சாக்ஷாத் தாயாரைப் பார்ப்பது போல்  அழகு, அமைதி, அடக்கம், அருள் அத்தனையும் ஒருமித்து  அந்த அம்மா  முகம்.

ஒரு விதமாக அந்த இருக்கையில் நான் செட்டில் ஆகும் நேரம்.

அதற்குள் எனக்கு என்ன வேண்டும் என்று ஆர்டர் எடுப்பவர் கேட்க ஒரு காபி கொடுங்கள், சக்கரை பாதி போடுங்கள் என்று சொன்னேன். அவர்களிடம் அந்த ஆர்டர் எடுப்பவர் எதுவும் கேட்கவில்லை.  முன்னமேயே ஆர்டர் பண்ணி இருப்பார்கள் போலும்.

அப்பொழுது தான் கவனித்தேன்.  அந்த பெரியவரின் வலது கை நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். பார்க்கின்சன் சின்றோம்  என்று உடனே புலப்பட்டது. மாமிக்கு நான் அவரை உற்று கவனிப்பது உறுத்தியது போலும் .
சட் என்று அவர் வலது கையை பிடித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.

சுப்பு தாத்தா சும்மா இருந்திருக்கலாம். ஏதோ அவர்கள் எனக்குத் தெரியாதவர்கள். நான் காபி சாப்பிட்டேனா, கிளம்பினேனா என்று என் காரியத்தைக் கவனித்து இருக்கலாம்.

என்ன மாமி, மாமாவுக்கு பார்கின்சனா, டோபா சாப்பிடுகிறாரா என்றேன். அப்பொழுது தான் அந்த மாமி என்னை ஒரு தீர்க்கமாக பார்த்தாள்.
எனது பார்வை மூலம் அவர்கள் என்ன புரிந்துகொண்டார்களோ, தெரியவில்லை.  நல்ல வேளை. உங்களுக்கென்ன என்று பேச்சை முறிக்கவில்லை.

ம் என்று ஒரு எழுத்தில் மாமி பதில் சொல்ல,  மாமா என்னைப் பார்த்தார்.  நான் அவரைப்பார்த்தேன்.

அவர் வலது கை கொஞ்சம் அதிகமாகவே நடுங்கியது. மாமி கைப்பையை திறந்து ஒரு டாப்லேட்டை எடுத்து அவர் வாயில் போட்டார். இத சாப்பிட்டு விடுங்கோ . கொஞ்சம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வடை வந்தப்பறம் கூட சாப்பிடலாம் என்கிறார்.

திஸ் இஸ் கில்லிங் மி என்று அவர் என்னிடம் அந்த நோயின் உபாதை பற்றி சொல்ல, நானோ, ப்ளீஸ் டோண்ட் ஒர்ரி. டென்சன் வில் அக்ரவேட் என்று எனக்குத் தெரிஞ்ச மெடிகல் ஞானத்தை வெளிப்படுத்த ...

உன்மையைச் சொல்லப்போனா....

..  எனக்கும் கொஞ்சம் டெந்சன் ஆனது. எழுந்து அந்த சர்வர் வரும் திசையை பார்க்கிறேன்.

ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி, எனக்கும் இது வரும்போல சில சிம்டம்ஸ் இருந்தது.  டாக்டர் ஏ .வி. சீனிவாசனை விழ்ந்து அடிச்சுண்டு ஓடிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த பார்கின்சன் வருமோ என்பதற்கு ஒரு அஞ்சு அறிகுறிகள் . அதிலே மூன்றாவது இருந்தால் தான் பார்க்கின்சன். மத்ததெல்லாம் வெறும் ஆன்சைடி ப்ராப்ளம். என்று அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 

ம் என்றார் மாமா  மாமியிடம்.  உருமினாரோ ??
சர்வர் ஏன் டயமாக்கிரார் என்று அந்த ம் க்கு அர்த்தம்.
இப்போது வந்துடுவா. பொறுத்துக்கோங்க. என்றாள் மாமி.

சர்வர் இப்போது வந்தார். மாமி முன்னால் சப்பாத்தி , மாமா முன்னால் ஒரு சாம்பார் வடை வைத்துவிட்டு போய் விட்டார்.

மாமி சப்பாத்தியை பிட்டு சாப்பிட ஆரம்பிக்க, மாமா, தன் வலது கையில் ஸ்பூனால் வடையை பிட்டு எடுக்கப் பார்க்கிறார். சிறிய துண்டு வடை ஸ்பூனில் நில்லாது தட்டில் விழுகிறது. திரும்பவும் எடுக்க பார்க்கிறார். கை நடுக்கத்தில் வடை ஸ்பூனில் வர முடியவில்லை.

யு கட் அனதர் ஸ்பூன். இன்னொரு ஸ்பூன் அந்த கையிலே வைத்து அதை தட்டில் அழுத்திக்கொண்டு , இந்த ஸ்பூ னால் எடுங்கள். என்றேன்.

மாமி என்னைப் பார்த்து விட்டு, அங்கு வந்த சர்வரிடம் இன்னொரு ஸ்பூன் என்றார்.

வந்த சர்வர் என்னிடம் காபியை வைத்துவிட்டு, ஸ்பூன் எடுக்க போனார்.

யாரிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள் என்று நான் தொடர்ந்தேன்.

அபாலோவில்..

யார் டாக்டர்... என்ன மருந்து...?

சொன்னார்கள். சரியான மருந்து தான். அவர்கள் சொன்ன மருத்துவரும் பிரபல நரம்பியல் நிபுணர் தான்.

இன்னொரு ஸ்பூன் வந்தது.  ஒன்றை இடது கையில் வைத்து, அந்த கையால் வடையை எடுக்க முயற்சித்தார்.

இப்ப பரவா இல்லை. இருந்தாலும் அந்த துண்டு வடை வாயில் போவதற்கு அவர் பிரும்ம பிரயத்னம் செய்ய வேண்டி இருந்தது.

இந்த பக்கம் தான் இருக்கிறீர்களா...  ?  ஒரு சிநேக பாவத்துடன் வினவினேன்.

ஆமாம்.  இங்க அடுத்த வீதி தான்.

வேற யாரும் துணைக்கு இல்லையா... நீங்களே இரண்டு பேரும் வந்து சாப்பிடுகிறீர்கள்?

எல்லாம் இருக்கா.  ஆனா வேணும்கறதை நேரத்துக்கு கொடுக்கணும் இல்லையா..   

புரிந்தது. ஒரு கணம் மௌனித்தேன்.

இப்ப ஒரு வடை  துண்டு அவர் கை நழுவி கீழே விழுந்தது. நல்ல வேளை . தட்டிலேயே விழுந்தது.

நீங்க அந்த ஸ்பூனை எங்கிட்டே கொடுங்கோ,ன்று சொல்லி கணவரிடமிருந்து அந்த ஸ்பூனை வாங்கினார்.

அடுத்தடுத்து ஒரு இரண்டு மூன்று வில்லைகளாக, அந்த வடையை சாம்பாரில் நனைத்து அவர் வாயில் ஊட்டினார் மனைவி.

மாமா நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார் போல் தோன்றியது.
"மாமா. ஒண்ணும் பயப்படாதீங்க.. இது லைப் த்ரெட்டெனிங்க்  கிடையாது. தொந்தரவு தான் ஜாஸ்தி.  என்னோட மாமா ஒத்தர் , அவரே மைசூர்லே டாக்டர். அவருக்கே இது வந்து விட்டது. ஒரு இருபது வருஷம் அதோடயே தான் வாழ்ந்தார்." என்றேன். 

ஏன் இருக்கோம் அப்படின்னு தோணறது . இருந்தால் நன்னா இருக்கணும். இரண்டாம்  தடவையா  பேசினார் மாமா.

மாமா, அப்படி நீங்க பேசக்கூடாது .நான் உங்களை விட பெரியவன் . ஒன்னு சொல்ரேன் கேளுங்கோ. நீங்க உங்களோட நினைப்ப கொஞ்சம் டிபரண்டா மாத்திக்கோங்க.  இப்படி நினைச்சுப்பாருங்கோ." நான்  புண்யம் பண்ணி இருக்கேன் . அதுனாலே தான் இந்த மாதிரி பார்யாள் கிடைச்சிருக்கா. ராமனுக்கு  சீதா பிராட்டி மாதிரி . அவ இருக்கும்போது எனக்கென்ன  கவலை ?ஐ ஆம் ஒ கே என்று  ஆடோ சஜஷன் சொல்லிக்கொள்ளுங்கள். "? 

எங்க டாக்டர் மாதிரி நீங்களும் பேசறீர்..  அவஸ்தைப் படறது பொறுக்கமுடியவில்லையே..ஸ்வாமி...   

 "தட்  இஸ் ஹிஸ் கன்செர்ன் . நான் மேலே கையை உசத்தி  காமிச்சேன்."எல்லாம் பெருமாள் பார்த்துப்பார். கவலைப் படாதீர்கள். ."

உங்க ஆசிர்வாதத்திலே தான் அது நடக்கணும். ஆனா எனக்கு ஒரே கவலை தான்..  இப்ப அந்த அம்மா பேசினாள்.

நான் அந்த அம்மா முகத்தை பார்த்தேன்.

நீங்க சொல்ற பெருமாள் என்னை முன்னாடி கொண்டு போயிடக்கூடாது.
இவர் இருக்கற வரைக்குமாவது நான் இருக்கணும்.  நீங்க அந்த ஆசிர்வாதம் பண்ணுங்கோ என்றாள்.

நம்ம தர்மத்திலே அது மாதிரி ஆசிர்வாதம் பண்ண முடியுமோ..யோசனை ஆயிடுத்து.

இரண்டு பேருமே நூறு வயசு இருப்பேள். பெருமாள் அனுக்ரஹம். என்றேன்.

என்ஆசிர்வாதத்தை காதில் வாங்கிகொண்டாளா எனத் தெரியவில்லை. அந்த மாமி தொடர்ந்தாள். 

ஆத்திலே புள்ளை, மாட்டுப்பொண் எல்லாம் இருக்கா. வேலைக்கு போறா இரண்டு பேரும். 

இதே சப்பாத்தி, வடை எல்லாமே ஆத்திலேயும் பண்ண முடியும் . ஆனா  நேரத்துக்கு கிடைக்கணும் ஏதாவது சாப்பிட்ட பின் தான்  டாப்லட் . இந்த சிச்ரூஷை நான் தான் செய்யணும். இங்கே வந்தால் தான் அது முடியும்.  .  


சட சட அப்படி மாமி வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் கண்கள் பனித்தன. ஒரு க்ஷணத்தில் புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.


நாராயணா. நாராயணா.. என்றேன்.

அப்பாதுரை   சார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை இங்கே கண் முன்னாடி வந்து நின்றது.  அது டிபரண்ட் டைமன்சன்.

இன்னிக்கு கா லை லே சுந்தர்ஜி எழுதிய சுபாஷிதானிலே வால்மீகி எழுதிய இராமாயணம் அயோத்யா காண்டம் ஒரு ஸ்லோகம்.. அதைப் படிச்சேன்.

 ஒரு ஸ்திரீக்கு கணவன் தான் எல்லாமே அப்படின்னு.  அவனை உத்தேசித்துத் தான் எல்லாமே ..  

அவர் மேற்கோள் காட்டிய ஸ்லோகமும் அர்த்தமும் இங்கே.

அந்த யுக தர்மம் வேற.  இந்த யுகம் வேற தர்மம் வேற .யதார்த்தம் இன்னமும் வேற.

ஒரு மனைவிதான் தன்  கணவனை ஆஸ்ரயிச்சு எப்போதும் இருந்தாகணும் என்று தான் இல்லை. ஒரு கணவனும் தன் இல்லாளின் உதவிகளை நம்பித்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பலர்  வாழ்க்கையில் உண்டாகின்றன.

ஆனா மனித நேயம் ஒன்று தான். அது யுகங்களுக்கு அப்பாலும் சத்யம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அது தான் சங்கீதம்.
சேர்ந்து பாடும் கீதம்.
சுகமோ சோகமோ, சேர்ந்து அனுபவிப்பது.

அந்த சோகத்தின் சுகத்தை அதை உணர்ந்தவர் மட்டுமே எழுதமுடியும்.
படிக்கமுடியும். உணரமுடியும்.

சொன்னது கதை அல்ல. உண்மை சம்பவம்.

பின் வரும் இது வேறல்ல. 


லதா மங்கேஷ்கர் பாடும் இந்த பாடலில் நடுவில் வரும்  ஒரு சில வரிகள் படத்தில் வரும் இல்லாளின்  மன நிலையை இந்த மண்ணின் பண்பினை பிரதி பலிக்கிறது.


chodke thuje koyee jannath na loom
there badhlE mein dhuniyaan ki daulath na loon.

உன்னைப் பிரிந்து எனக்கு ஒரு ச்வர்க்கமும் வேண்டாம்.
உனக்கு பதிலாக உலகின் எந்த செல்வமும் வேண்டாம்.
உன்னால் கிடைத்த இந்த உலகு.
இதில் கிடைக்கும் சுகம் எனக்கு சிருங்காரம்  ஸ்வர்க்கம்.


செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏதோ எழுதுகிறேன்.
    நவராத்திரி நவ ராத்திரி மட்டுமல்ல, நவ பகல்லேயும் சுப்பு தாத்தா பிஸி.

    பிஸி அப்படின்னா கன்னட பிஸி இல்லை. கன்னடத்துலே பிஸி அப்படின்னா சூடா என்று அர்த்தம்.

    பிஸி பேளா ஹூளீ..  சூடான சாம்பார் சாதம்.

   சுப்பு தாத்தா எதுலே பிஸி அப்படின்னா,  எல்லா வலைகளிலும் பாடல்கள்.  எதைப் பாடறது, எதை விடறது
   அப்படின்னு திகைச்சுப்போய் இருந்துட்டாரு.
*****************************************************************************
    ஒரு பத்து வருசமா தமிழ் வலை உலகிலே நல்ல கவிதைகள், குறிப்பாக,  மரபுக் கவிதைகள் அதுவும் பொருள் சார்ந்த கவிதைகள் தென்படும்போது பாடாமல் இருக்க முடியாது.   இதுவரை சுமார் ஆயிரம் கவிதைகளுக்கு மேல் மெட்டு போட்டு எனது யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன் என்றால், அது எனது சாதனை இல்லை.  இந்தக் கவிதைகளை எழுதி என்னைப் பாட வைத்த கவிஞர்களையே அந்த பெருமை சாரும்.   தமிழ் வலையில் இதுவரை எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு இருபது முதல் இருபத்தி ஐந்து வலைப்பதிவாளர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.

    அதற்காக, எங்கே பார்த்தாலும் என்ன புலவர் இராமானுசம் அல்லது கவிஞர் பாரதிதாசன் போல எல்லாரும் கவிதைகள் எழுத இயலுமா என்ன ?  இல்லை. அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்கென்றே ஒரு சுரங்கம் வைத்திருக்கும் சிவ குமாரன் போல் எழுத இயலுமா என்ன ?   
இன்று காலை வலைச்சரத்தில் நான் பாடி  ஒரு வினாயகன் பாடல் அவர் வலையில் ஈர்க்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பாராத ஒரு பாராட்டு. ஈர்ப்பதற்கு காரணம் அப்பாடலின் பொருட்செறிவு.  கொஞ்சம் அந்த சிந்து பைரவி ராகம். அவ்வளவே.

    பாடல்கள், ஒரு சந்தம், எதுகை மோனை இவற்றிற்கு கட்டுப்பட்டு இருந்தால்,  மெட்டு போடுவது கொஞ்சம் சுலபம் தான்.  இருப்பினும் மரபு சாரா கவிதைகள் என்னவோ மனதை ஒரு பக்கம் இழுக்கத்தான் செய்கிறது.  இந்தக் கவிதைகளை சும்மா வார்த்தை ஜாலம் என்று ஒதுக்கித் தள்ள இயலுமா என்ன ?  சொல்ல வந்ததை ஒரு சுவையுடன் சொல் அலங்காரத்துடன் சொல்லும்
இக்கவிதைகளுக்கு பல உதாரணங்கள் சொல்ல இயலும் என்றாலும் மனதில் வருவது ரிஷபன் கவிதைகள், கிரேஸ், இளமதி, ஹேமா மற்றும் வேதா இளங்கா திலகம்,   ஒரு தடவை மகேந்திரன் என்று நினைக்கிறேன்.  அவரது கவிதைக்கு மெட்டு போட்டு விட்டு பாடிய பிறகு அதையே ஒரு வாரம் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தேன்.  தூத்துகுடியில் பிறந்து அமெரிக்காவில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் திருமதி காட்டாறு அன்பு அவர்கள் கவிதை நான் அதற்கு இட்ட மெட்டு அது தான் தனக்குப் பிடித்தது இன்று வரை என்று என் மனைவி சொல்கிறாள். 

     இத்தனை கவிஞர்களில் ஓர் இருவரைத் தவிர வேறு எவர் முகமும் நான் அறியேன். நான் அறிவதெல்லாம் அவர் தம் கவிதைகள் தான். அவர் தம் தமிழ் உணர்வு தான்.

    இவற்றையெல்லாம் விட ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக பக்தி பாடல்கள், கவிதைகள்  எழுதும் கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல் .   1961 ம் வருடம் நான் வேலையில் சேர்ந்த போது மாலை வேளைகளை அந்தக் கோவில் தடாகப் படிகளிலே உட்கார்ந்து எனக்குத் தெரிந்த அம்மன் தோத்திரங்களை பாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் இப்போதைய கூட்டம் கிடையாது.    தினமும் நான் பாடும்பொழுது என்னைச் சுற்றி ஒரு பத்து பேர் உட்கார்ந்திருப்பர்.  அதுவே எனக்கு அந்த இறைவி அருள் போல புல்லரிக்கச் செய்துவிடும்.

    கவி நயா அவர்கள்  எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.  இவரது ஒரு எழு நூறு பாடல்களுக்கு மேல் நான் மெட்டு இட்டிருப்பேன் என நினைக்கிறேன்.  ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒரு புதுமையை ஒரு ஆன்மீக கருத்தினை,  உலகமெல்லாம் விரவிக்கிடக்கும் அவ்விறைவியின் சான்னித்தியத்தை வெளிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடன் கணினியைத் திறந்த உடனே நான் பார்ப்பது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைதான்.  அதில் நான் கண்ணுறும் பல தோத்திரங்கள் நான் படித்தவை என்றாலும் அவைகள் என்னவோ என்னை உடனேயே அவற்றினைப் பாடிட என்னை உந்துகின்றன. அதுவும் அந்த இறைவன் கருணையே.இன்று கோவிந்தராஜ பெருமாள்  தரிசனம்.சீக்கிரம்  செல்லுங்கள்.


     அண்மையில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் கவிதைகளை நவராத்திரி சமயத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இரு வலைகளுமே ஆலோசனை, தொகுப்பு என்ற பெயர் கொண்டவை.   அவற்றினைப்பார்த்த உடனேயே பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது.  பாடிவிட்டேன்.

      மாரியம்மனைப் பற்றி ஒரு கிராமீய கவிதை நேற்று எழுதியிருக்கிறார்கள். 

     அதை நான் பாட நீங்கள் கேளுங்கள்.

    
   ஏதோ பாடுகிறேன்.  நான் ஒரு பாடகன் அல்ல.  எனக்கு நிறைவாக ஸ்ருதியோ, லயமோ, தாளமோ தெரியாது என ஒப்புக்கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை.  இருந்தாலும் பாடுகிறேன்.

     என் பாட்டுக்களையும் யூ ட்யூபிலே இதுவரை ஒரு லட்சத்து அம்பதாயிரம் பேர் கண்டு இருக்கிறார்கள்.  அதை பெருமையை இந்த கவிதை எழுதியவர்களுக்கே நான் சமர்ப்பிக்கிறேன். 

செவ்வாய், 1 அக்டோபர், 2013

யாருனாச்சும் கேக்கறீங்களா ?


   இனிமேலும் இந்த 17 ஈ பஸ்ஸுக்காக காத்திருக்கமுடியாது என்று கால்கள் திட்ட வட்டமாக சொன்னபின்னே    சுப்பு தாத்தா வட பழனி பஸ் ஸ்டான்ட் வாசலுக்கு வந்தார்.

    அந்த ஷேர் டாக்ஸி வட பழனிலேந்து மௌன்ட் ரோடு வரைக்கும் போறானே... அவன் ஏன் வரக்காணோம்.

    என்று ஏதாவது ஒரு ஷேர் டாக்ஸி வராதா என்ற சபலம் வேற மனசை itching .    இத்தனைக்கும் மத்தியிலே அப்பப்ப ஆடோக்கள் பக்கத்தில் வந்து என் முகத்தை பார்த்து Red signal ஒரு நிமிஷம் நின்று விட்டு    green signal  ஏதோ க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டது போல சென்றன.


    பக்கத்தில் ஒரு போலீஸ் காரர் அவரிடம் கேட்டேன்.  இந்த ஷேர் கார் அதான் டாக்ஸி அண்ணா சாலைக்கு போகுமே..    ஏன் ஒண்ணு கூட வரலை ?

    அவர் என்னைப்பார்க்கும் பார்வையிலேயே ஒரு பரிதாபம் இருந்தது.  அவுக இப்ப எல்லாம் அந்த முருகன் கோவில் பஸ் ஸ்டாப் தான் ஸ்டார்ட் பண்றாக என்றார்.

    என்ன செய்வது என்று யோசிக்கு முன்னாலே இன்னொரு ஆடோ காரர் ... சார் ஏறுங்க ...

    எங்கே என்று நான் கேட்க, அவர் எங்க வேணாலும் முருகன் போவான் ஸார். என்றார்.

    முருகன் போவார் . ரைட் தான். ஆனா இந்த கிழவன் கூட வரணும்னா எத்தன கொடுக்கணும் ? விளம்பினேன்.

    எங்க..?    அப்படின்னு ஆடோகாரர் கேட்குமுன்னே ...

 நான் சைல்டு ட்ரஸ்டு ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம் வரைக்கும்.. என்று இழுத்தேன்.

     நீங்க கொடுக்கறத கொடுங்க ...  எத்தன வழக்கமா கொடுப்பீக...

     நௌ பால் இஸ் இன் மை கோர்ட் என்று உணர்ந்து,  

ஏன்ப்பா, மீட்டர் போடல்லையா...

     போட்டிருக்கேன்.  பாருங்க... என்றார்.   

  சரிதான் என்று சொல்லி, உட்கார்ந்து ஒரு பத்து அடி தூரம் கூட செல்லவில்லை.

ஆடோ மீடர் இப்போது 26.2 என்று காட்டியது.

     என்னப்பா இது... இன்னும் பத்து மீட்டர் தாண்டல்ல..  அதுக்குள்ளே மினிமம் காலியாயிடுச்சே...

     அது கிடக்கட்டும் சார்.  நீங்க.  ஒரு நூறு ரூபா கொடுங்க...

என்ற அந்த ஆடோ ட்ரைவர் முகத்தை அப்பொழுதுதான்
ஒரு தீர்க்க பார்வையாக பார்த்தேன். அம்பது வயசு தாண்டியவர் என்று அவர் முகம் சொல்லியது.  நடு நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு . கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலை.

    ஒரு பத்து செகன்டுக்குள்ளே மனசுக்குள்ளே போட்ட கணக்கில் 25 ப்ளஸ் 5 * 12 ... 85 வர்ரது.  என்ன ஒரு பதினைஞ்சு கூட என்று சுதாரித்துக்கொண்டாலும்,

    அது சரி, இந்த மீடர் கடைசிலே நூத்தைம்பது, அப்படின்ன்னு காட்ட்டிடுச்சுன்னா...????

     சார்.. நான் தான் சொல்லிட்டேன் இல்லயா...  அது நடுவிலே நிக்கறாங்களே... அவுங்களுக்காக போடரது.... நான்
ஒரு தரம் சொன்னா சொன்னது தான்

      அப்படியா...?

      ஆமாம் சார்.  என் ஆடோ மீடர் அப்பப்பே ரிபேர் ஆகும்.. ஆனா முருகன் சொன்ன சொல்ல மாத்தினதா சரித்திரமே கிடையாது சார்....

       அது சரி.. ஆனா.. இந்த மீட்டர் போட்டப்பறம் கூட ஏன் அத ஃபாலோ பண்ணாம, ஒரு ரேட் கேட்கறீக...

       சார்... ஒரு நாளைக்கு 500 ரூபா வூட்டுக்கு இத்தன நாள் கொண்டு போய் கொடுத்தேன்....  இந்த மீட்டர் போட்ட இந்த அஞ்சு நாளா எத்தனை தான் ஓட்டினாலும் ராவு பத்து மணிக்கு கூட முன்னூறு தான் தேறுது சார்.

        ஏன் போதாதா...

       நேத்திக்கு 300 கொடுத்தப்போ என் ஊட்டுக்காரி, இந்தாபா, 500 இல்லாட்டி, வர்ராதே...இந்த அஞ்சையும் எங்கனாச்சும் அனுப்பிச்சுடு அப்படின்ன்னு சொல்றா..    நாலு பொட்ட புள்ளைங்க ஒரு பையன் அவளும் எப்படிங்க இந்த காலத்துலே சமாளிக்க முடியும் ?

        நான் பேச வில்லை.

        பொண்ணுக 10 படிக்குது மூத்தது.  இரண்டாவதும் அடுத்ததும் 7 வது படிக்குது.   பையன் நாலாவது படிக்கான். அவனுக்கு ட்யூசனுக்கே மாசம் 700 கட்ட வேண்டியிருக்கு.

        கடைசி பொண்ணா  ?

        க்ரெக்டா சொல்லிட்டீக..

என்று ரோட்டிலிருந்த பார்வையை திரும்பி என்னைப் பார்க்கவும், பக்கத்தில் வந்த இன்னொரு ஆடோ க்ரீச் என்று பக்கத்தில் உரசவும் ...

        யோவ்...பாத்து ஓட்டுய்யா... என்றார் பக்கத்தில் வந்த ஆட்டோகாரர்.

         முருகன் வண்டியை ஓரம் கட்டினார். .

என்னவோ ப்ரேக் சரியில்ல போல,... நான் ஸ்லோ பண்ணி திருப்பினேன்.  அட்ஜஸ்ட் ஆவல்ல..
மெகானிக் கிட்டே எடுத்துட்டு போனா அவன் ஆயிரம் கொடு என்பான். நானே ஏதோ அட்ஜஸ்ட் பண்ண்ணி ஓட்டிட்டு இருக்கேன்.

          இரண்டு தரம் ட்ருருரு....ட்ரூரூ...ரூ....என்று கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  அப்படிங்கற மாதிரி
        க்ள்ட்சையோ வேறு எதையோ 2. 3 தரம் இழுத்தார்.

         வண்டி திரும்பவும் ஓடத்துவங்கியது.

         எங்கே நிறுத்தினேன்.. என்றார்.

         கடைசி பொண்ணு  அங்கே தான் நிறுத்தினீங்க.. என்றேன்.

         நான் நிறுத்தலேங்க... பொண்டாட்டி, நிறுத்திட்டா..  உன்னோட வரும்படிக்கு இனி கட்டுபடியாவாது அப்படின்னு சொல்லிப்பிட்டா...

         அது தான் உத்திராட்சமா என்றேன்..

         ஹே...அது வேற கதைங்க..  நீங்க சொல்லுங்க...  இந்த முன்னூரு ருபாய்லே என்ன்னையும் சேத்து ஆறு பேரு.சாப்பிடமுடியுமா சொல்லுங்க...
வூட்டு வாடவையே 1500 தர்றோம்.

           சற்று நேரம் மௌனம்.

          அவரே தொடர்ந்தார்.

ஏங்க..  அம்மாவே எங்களுக்கெல்லாம் ஒரு வேலை போட்டு கொடுத்தா என்னாங்க.. ???

எல்லா ஆடோவையும் கவர்ன்மென்ட்  எடுத்துக்கட்டும்.  நாங்க தினம் எட்டு மணி நேரம் ஓட்டறோம். எஙகளுக்கு மாசத்துக்கு சம்பளமா  ஒரு பதினஞ்சு கொடுத்தா என்னங்க குறைஞ்சு போயிடும் ?

       நல்ல யோசனை தான்...

        யாருனாச்சும் கேக்கறீங்களா ?

சனி, 21 செப்டம்பர், 2013

சும்மா இருங்க..சும்மா இருங்க..

என்ன சும்மா இருங்க ?

சும்மா இருங்க என்று தானே சொன்னேன். அதுக்கு ஏன் இப்படி சத்தம் போடறீங்க...

நீ தான் நாலு வீடு கேட்கும்படியா சும்மா இருங்க அப்படின்னு கத்துற..

நான் சொல்றது அடுத்த ரூமுக்கு கூட கேட்காது.  நீங்க பேசுறது தான் நாலு வீடு என்ன நாலு ப்ளாக் அப்பால கூட கேட்குதாம்.

அப்படி என்ன நான் கத்தினேன் .??

இப்ப கத்தறது போதாது ?

இங்க பாரு, நீ தான் ஆரம்பிச்ச, இப்ப நீயே குத்தம் சொல்ற ...

ஐய்யய்ய ...   நான் ஒண்ணும் சொல்லலீங்க...சும்மா இருங்க அப்படின்னு தானே சொன்ன்னேன்.

அது போதாதா ?  சும்மா சிவனே அப்படின்னு விழுந்து கிடக்கேன். என்ன புடிச்சு 
சும்மா இருங்க அப்படின்னா என்ன அருத்தம் அப்படின்னேன். 

சிவ சிவா இன்னிக்கு சனிக்கிழமை.

ஏன் ? சனிக்கிழமை சிவா சிவா அப்படின்னு சொல்லக்கூடாதா 

இத பாருடா.  என்ன சாக்கு அப்படின்னு சண்டைக்கு வந்துடீங்க..

நானா சண்டைக்கு வர்றேன்.  நீ தானே சும்மா இருக்கரவன சும்மா இரு சும்மா இரு அப்படின்னு சும்மானாச்சியும் சொல்றே...

அது சும்மா சொன்ன்னேங்க...

அப்ப சும்மா இரு அப்படின்னு சும்மா சொல்றியா. என்ன ?

அது அப்படி  இல்லீங்க..

சும்மா வெறுப்பேத்தாதே.. கோவிலுக்கு போர டைம் ஆயிடுச்சு. 
என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போ. 

சொல்லட்டுமா..

சொல்லு...

திரும்பவும் சண்டை போட ஆரம்பிச்சுடாதீங்க..

என்னடா வம்பாப்போச்சு.  சரி சண்டை போடல்லே. சொல்லு. 

அதாங்க..

என்ன அதாங்க...

சும்மா  இருந்தாலே போதும் . இன்னிக்கு  உலக அமைதி தினம். இன்னிக்காவது ஒரு நாள் நம்ம இல்ல, நீங்க சும்மா இருந்தா அமைதியா இருக்கும்ல, நம்ம ஊடு,  அத சொல்லத்தான் கூப்பிட்டேன்.

என்ன உலக அமைதி.?

ராஜேஸ்வரி தளத்திற்கு போய் பாருங்க...வியாழன், 12 செப்டம்பர், 2013

நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.

ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்.... ( இன்னிக்கு தேதியிலே அறுநூற்று நாற்பது ஆகியிருக்கலாம்.)

என்று உலகத்திலே  எத்தனை தினுசு தினுசான ஆர்ட்ஸ் சைன்ஸ் விஷயங்கள் இருக்கின்றன .  நாமும் கொஞ்சம் கொஞ்சம் எல்லாத்துலேயும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ,  ஒவ்வொண்ணா பார்க்க படிக்க,துவங்கினா , தலை சுத்தறது.

அதிக விசயங்களைப் படிக்க, படிக்க, குறிப்பிட்ட விசயத்திலே இருக்கிற நமது அறிவு குறைஞ்சுண்டே போகறது என்பதையும், எந்த ஒரு விஷயத்திலும் அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழு என்று சொன்னது போல, நிறைவாகத் தெரிந்துகொள்வது தான் சிறந்தது என்று இந்த கால கட்டத்தில் என்னை மாதிரி கிழம் கட்டைகள் புரிந்துகொண்டாலும் நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.

என்னைப்போல நிறைய பேரு , நுனிப்புல்லை மேயற மனுசங்க, அன்னிலேந்து இன்னி வரை அவனிலே அதிகம்மாத்தான் இருக்கானுக.

எனக்கு அது தெரியும், இது தெரியும்  ஒரு அம்பது விஷயங்களைப் பத்தி மேலோட்டமாய்த் தெரியும்,  அரிஸ்டாட்டில் லேந்து ஆகாசத்துலேஅண்டத்துலே  ப்ளாக் ஹோல் வரை தெரியும்  , இசை வழியா ஈசனை புடிக்கறது எப்படி ன்னும்  தெரியும் அப்படின்னு சொல்றவங்க பக்கத்திலே நெருங்கிப்போய்,

எத்தனை தெரியும் அப்படின்னு ஒரு பத்து நிமிஷம் அவங்க பக்கத்திலே உட்கார்ந்து அவுக சொல்றத தொடர்ந்து கேட்டுப்பார்த்தா,

தெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை  ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும்  என்றும் தெரிகிறது.

நிறைய பேர் இன்றைக்கு புதுசு புதுசா அது தெரியும் இது தெரியும் என்று சொல்லும்போது நான் மட்டும் ஒண்ணுமே சொல்லாது இருப்பதும் சரியல்ல என்று நினைத்து பலர் இன்றைக்கு பல விதமா பேசுகிறார்கள்.

உலகத்துலே பொதுவாக நாம்  நினைத்துக்கொண்டிருந்த நாலு விதமான மனிதர்களை விட ஒரு ஐந்தாவது ரகமும் இருப்பது  போலத்தான் இருக்கிறது.

அது என்ன நாலு விதம் ?  இது என்ன ஐந்தாவது ரகம் ?

இந்த நாலு வித மனிதர்களைப் பற்றி முன்னமேயே சொல்லி இருந்தாலும் இன்னும் ஒரு தரம் சொல்லறது சரிதான்.

முதலாவது , தெரிஞ்சவங்க, அதாவது ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக படிச்சு புரிஞ்சுசுண்டு, மற்றவர்களுக்கும் முறையாக, எடுத்து சொல்லக்கூடயவர்கள்.

இரண்டாவது, தெரியாதவங்க
.எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாத் தெரியாதது  மட்டுமல்ல,தனக்குத் தெரியாது என ஒப்புக்கொள்பவர்கள்.

இந்த இரண்டு வித மனிதர்களைப் பற்றியும் ஏதும் பிரச்னை கிடையாது.

மூன்றாது விதம்.
தெரிஞ்சிருக்கு..ஆனா  தெரிஞ்சிருக்கா அப்படின்னு தனக்கே சரியா தெரியாதவங்க..

நான்காவது விதம்.
தெரியாத விஷயத்தையும் தெரிஞ்சது போலப் பேசி மற்றவர்களையும் குழப்பும் மனிதர்கள்.

இந்த நாலாவது வித மனிதர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் . இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல
முடிந்தாலும் தற்போதைக்கு நான் சொல்லப்போற ஐந்தாவது ரகம் தான் இந்த பதிவின் கதா நாயகன் .

இவர் கிட்டே என்ன புதுமை ?

அப்படின்னு கேட்பீக இல்லையா...

சொல்றேன்.

இவங்ககிட்ட இருக்கிற ஒரு self belief system அதாவது தான் ஏதோ ஒன்றை புதுசா கண்டு பிடித்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தில் தமது திறமை மேல் கொண்டுள்ள இவர்களது அசாத்திய நம்பிக்கை.

இவர்கள் உண்மையில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களா என்றால், இல்லை. மற்றவர்களை ஏமாற்றுபவர்களுக்கு, தான் சொல்வது பொய் என்று அவர்கள் உள் மனதுக்குள் தெரியும், தெரிந்தே தான் சொல்கிறார்கள், செய்கிறார்கள், மற்றவர்களை நம்பச்செய்து அவர்களை அல்லல் பட வைக்கிறார்கள்.

ஆனால், நான் சொல்லும் ரகம் கொஞ்சம் என்ன, நிறையாகவே  வித்தியாசம்.
இவர்கள்,  தான் சொல்வது உண்மை என்று மனமார நம்புகிறார்கள். அதனால் இவர்களுக்கு பிற்காலத்தில் எந்த ஒரு சமயத்திலும் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. There is no sense of guilt at any point of time in their career as well.

இப்படி யாரு என்று நீங்கள் கேட்கலாம்  ?


ஒரு வேளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டேன். என்று நம்மை எல்லாம் நம்ப வைத்தாரே ஒரு புண்ணியவான்..அவரா ?  கண்டிப்பாக இல்லை. அவர் இந்த ரகத்திலே இல்லை. அவர் பாடும் ராகமே வேறு.

ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.

என்னைப்போல கிழங்கள் சில பேர் என்னுடன் எப்பவுமே வெட்டி அரட்டை அடிக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் ஏதேனும் புதிய நபர் வருவார்.

ஒன்று என்னிடம் அவர் மாட்டி, நான்  விட்டா போதும் என்ற நிலையில் ஓடிப்போவார்.

இன்னொரு தினுசோ,  நான் அந்த புது நபரிடம் மாட்டி லோகத்துலே இன்னமும் நான் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சுப்பேன்.

சில சமயம். அஷ்டமத்துச்சனி எப்படி படுத்தும் என்றும்  அனுபவிப்பேன்.

இது என்ன ரகம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

 Go to ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.


முன் பின் பார்த்திராத ஒருவரை இன்னொரு  பெரியவர்  இவர் ஒரு பெரிய நேமாலஜிஸ்ட் . இவரிடம் கொஞ்சம் பேசுங்கள். என்று அறிமுகம் செய்துவிட்டு அவர்  காணாமல் போய்விட்டார்.

புதிதாய் வந்தவருக்கு சதாப்தி ஆகியிருக்கலாம். பையன் மனசு வச்சு இருந்தால்.   சாந்தமான தோற்றம். எப்படியும் ரிடையர் ஆகி பதினைந்து முதல்  இருபது வருடங்கள் போல் இருக்கும் எனத் தோன்றியது.  கல்கத்தா வாசியாக இருந்தாராம். காளி உபாசனையாம். முகத்தில் முக்காவாசி நெத்தியில் நடுவாந்திரத்தில் என்னைப்போல அவரும் ஒரு குங்குமப் போட்டுக்காரர் . மெலிந்த சரீரம். ஒரு ஆர்த்தடாக்ஸ் அப்பியரன்ஸ்.

கொஞ்சம் மரியாதை உணர்வுடன் தள்ளி உட்கார்ந்து கொண்டேன்.

என்ன பேசுவது ? எப்படி துவங்குவது என்று ஒரு பத்து வினாடிகள் கழிந்தன.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது வீட்டுக்குபோக.  கிழவி மண் வாசனை முடிச்சபின் தான் எனக்கு மோர் சாத வாசனை யை காண்பிப்பாள்.

ஸோ , தொண்டையை ஒரு கணைப்பு கனைத்துக்கொண்டே

 சார் ..என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள். எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள் என்று ஸ்டார்ட்டினேன் .

ஒன்லி பப்ளிக் சர்விஸ். அதுதான் மனசுக்கு நிம்மதி தருகிறது. என்றார்.

அடடா. எப்பேர்ப்பட்ட புண்ணியவானை இத்தனை நாட்கள் பார்க்காது இங்கே வெட்டியா ப்ளாகிட்டுண்டு போதாக்குறைக்கு அப்பாதுரைகிட்டே திட்டு வேற வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம் ?

 என நினைத்துக்கொண்டு ,

 என்ன பப்ளிக் சர்வீஸ் ?கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.

உங்கள் கையெழுத்து, பிறந்த தேதி மட்டும் வைத்துக்கொண்டு, உங்களது பாஸ்ட், ப்யூச்சர் என்னால் சொல்ல முடியும் , என்று அவர் தன்னை இன்ட்ரொடுய்ஸ் செய்துகொண்டார்.

கையெழுத்து என்றால் நீங்கள் சொல்வது என் ஹாண்ட் ரைடிங் ஆ? என்று விகல்பமில்லாமல் கேட்டுவிட்டேன்.எங்கேயே ஒருவனது கையெழுத்துக்கும் அவன் தலை எழுத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று படித்த ஞாபகம் .

நோ.. கையெழுத்து என்றால் உங்கள் சிக்னேசர். செக்கிலே கையெழுத்து போடுவீர்கள் அல்லவா, அதைச்சொன்னேன். என்றார்.

கையெழுத்தையும் பிறந்த தேதியையும் மட்டும் வச்சுண்டு ...  என்னது ?
அதைபார்த்தா என் இறந்தகால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள் உங்களால் சொல்ல முடியும் ?

ஆமாம்.

அப்படி என்றால், நேமாலஜிச்ட் என்று சொன்னீர்களே ? நான் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் செலக்ட் பண்ணி கொடுப்பவர் என்று நினைத்தேன்.

என்னோட லைன் வேற . நான் உங்கள் நேமுக்குத் தகுந்தபடி உங்கள் கையெழுத்தை மாற்றிக்கொண்டால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வழி சொல்கிறேன்.

இது யாரிடம் இந்த சாத்திரம் கற்றுக்கொண்டீர்கள்? ஏதேனும் புத்தகங்கள் பழைய ஓலைச்சுவடிகள் கிரந்தங்கள், ப்ருஹத் ஜாதகம், கால பிரகாசிக, மாதிரி, ப்ருகு ரிஷி வாக்யங்கள், அப்படி எதுவாச்சும் இருக்கின்றனவா ? 

இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் இது மாதிரி ஒரு சாத்திரம் இருக்கிறதா ?

புத்தகம் ஒன்றும் எனக்குத் தெரிந்து இல்லை.  நான் ஒருவன் தான் இந்த சயின்ஸை சிருஷ்டி பண்ணியிருக்கேன். இது ஒரு அப்ளைடு சயின்ஸ்.   இது வரை ஒரு ஆயிரம் பேருக்கு மேல், கல்காத்தாவிளிருந்து கன்யா குமாரி வரை சொல்லி இருக்கிறேன். பலித்து இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். ஒருவர் கையெழுத்து போடுவதை வைத்துக்கொண்டு அவரது இறந்த காலத்தை எப்படி சொல்ல முடியும் ?

முடியும்.

அது தான் எப்படி என்று கேட்கிறேன்.

நான் சொன்னால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.  எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் அடுத்த படிக்கே போகமுடியும்.

சரி. சொல்லுங்கள்.

உங்கள் பெயர்.ஒரு உதாரணத்துக்கு செல்வகுமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

செல்வகுமார் தனது கையெழுத்தை ஒரே ஸ்ட்ரோக்கில் போடுகிறாரா, விட்டு விட்டு போடுகிறாரா, எந்த இடத்தில் விடுகிறார், அடுத்த எழுத்து துவங்கும்போது அதற்கும் முந்திய எழுத்துக்கும் எத்தனை இடைவேளை இருக்கிறது.  அந்த இரண்டாவது தடவை துவங்கிய இடம், முதல் சிலபிள் முடிந்த இடத்தை விட மேல இருக்கிறதா, கீழே இருக்கிறதா எனபதெல்லாம்.
இந்த சயின்ஸில் இருக்கிறது.  டூ டெக்னிகல் இன் நேசர். ஐ ஆம் நாட் ஸ்யூர் வெதர் யூ வில் அண்டர்ஸ்டாண்ட்.

 வெரி இன்டரஸ்டிங். மேலே சொல்லுங்க. 

செ  தனியா ல் தனியா தனியா கு தனியா அப்படின்னு ஒவ்வொரு எழுத்தையும் கையெழுத்திலே போடறவர் எதுலேயும் தொடர்ந்து இருக்கமாட்டார்.

மனசுக்குள்ளே என் கையெழுத்தை ஒரு தரம் போட்டுப் பார்த்துக்கொண்டேன்.
அந்த மனிதரை இப்போது ஒரு சந்தேகத்துடன் பார்ப்பதை விட்டு ஒரு பக்தி இல்லை அப்படின்னாலும் ஒரு ஆர்வத்துடன்  பார்த்தேன்.

என்னோட கையெழுத்திலே ஒரு எழுத்து கூட சரியா இன்னதுன்னே தெரியாதே.  வெறும் கிறுக்கல் மாதிரி தானே இருக்கு. அதைப் பார்த்து என்ன சொல்ல முடியும் ? என்றேன்.

உங்கள் கையெழுத்தில் எத்தனை கிறுக்கல்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை அப்ளை செய்து, உங்கள் வாழ்க்கையில் எத்தனை சருக்கல் இருந்திருக்கிறது என்று சொல்வேன்.

சருக்கல் அப்படின்னா அன் சக்சஸ்புல் அப்படியா ?

சுவாமி .. கூட்டலும் பெருக்கலும் ஒரு வகை. கழித்தலும் வகுத்தலும் இன்னொரு வகை.

நீங்க சொல்றது ந்யூமராலஜியோ ? ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து கூட்டச் சொல்றாகளே..அது போலவா..

அது வேற .  ஜோதிஷம், ஞுமராலஜி எல்லாமே பூரணமா தெரிஞ்சவங்க யாருமே இல்ல.  எல்லாரும் பணம் பண்றாங்க...அவ்வளவு தான் சொல்ல முடியும்.  என்னோடது இண்டிபெண்டண்ட் சயின்ஸ்.

 இதை யாராவது வெரிபை பண்ணி இருக்காங்களா...நீங்க சொல்றது சரி என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. ?

இத பாருங்க.. உங்களுக்கு ஆதாரம் காட்டணும் அப்படின்னு எனக்கு ஒரு முடை கிடையாது.  தினம் எங்க வீட்டுக்கு ஒரு அஞ்சு பேர் வராங்க அப்படின்னு சொல்றேன்.  அந்த ஒரு ஆதாரம் போதாதா. ?

இருந்தாலும் சொல்ரேன். லண்டன்லேந்து நாலு பேர் வந்து ஒரு மணி நேரம் என்னை இண்டர்வ்யூ பண்ணி குறிப்பு எடுத்துண்டு போயிருக்காங்க..

என்ன சொன்னர்கள் ?

இதுவரைக்கும் ஒண்ணும் பதில் போடல்ல. பார்க்கணும்.

கையில் பையில் இருந்து ஒரு பழைய பாதி மக்கிப்போன நோட் புத்தகத்தை எடுத்தார்.  ஆங்காங்கே பல கையெழுத்துக்கள், எண்கள். இத்யாதி நூற்றுக்கணக்கில்.    அதில் இருந்து ஏதேனும் எடுத்துச் சொல்லப்போகிறார் என நினைத்த போது அதை மூடி திரும்பவும் பைக்குள்ளே வைத்துவிட்டார்.

உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இருந்தாலும், சொல்கிறேன்.  தூபாய் தெரியுமா ?

தெரியும். உலக மேப்புலே பார்த்திருக்கேன்.

அங்கே இருக்கிற ஒருவரின் சம்சாரம் என்னிடம் வந்து சொன்னார்: எனக்கு என் கணவர் மாதா மாதம் அனுப்புகிற பணம் இந்த மாதம் அனுப்ப வில்லை. நீங்கள் என்ன காரணம் என்று பார்த்து சொல்லுங்கள் என்றார்.

உடனே அவர் கையெழுத்தைப் பார்த்தேன். அவரது பிறந்த தேதியைப் பார்த்தேன். உங்க  கணவர் போட்ட லெட்டர் எதுனாச்சும் கொடுங்க. அப்படின்னேன். கொடுத்தார்.

அதிலே காரணம் இருந்ததா ? என்று வெகுளித்தனமாக நான் கேட்டேன்.

மூச். நடுவிலே பேசக்கூடாது. அந்தக் கடுதாசிலே அவர் புருஷனோட கையெழுத்து இருக்கும். அது தானே முக்கியம். அதையும் பார்த்தேன். புரிஞ்சு போச்சு.
உங்கள் கணவருக்கு இந்த மாதம்  ஷேர் மார்க்கெட் டிலே பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் அனுப்பவில்லை. என்றேன்.

 நீங்கள் நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள் வந்த பெண்மணி தன கணவன் போன் செய்து இதே காரணம் தான் சொன்னதாக சொன்னாள்.

ஒரு இண்டூயிஷன்லே சொன்னது மாதிரி தானே படுகிறது ? என்று கேட்டு விட்டேன்.

யூ ஆர் பார்ஷலி கரெக்ட் என்று ஒரு குண்டை போட்டார்.

இது டிவைன் இன்டூயிஷன்.

அப்படின்னா ?

உங்களுக்கு துர்க்கை யாரு அப்படின்னு தெரிஞ்சுருக்கும்.

ஆ...ஆமாம். சிவன் கோவில்லே சுத்தி வரும்போது துர்க்கை அம்மன் எலுமிச்ச பழ  மாலை எல்லாம் போட்டுண்டு ஏகப்பட்ட குங்குமம் பூசிண்டு, போதாதைக்கு கையில் ஒரு ஆயுதம் வேல் மாதிரி  ஒன்னு வச்சுண்டு ...
நான் கூட பார்த்தாலே கண்ணை மூடிண்டு..
சுதா சிந்தோர் மத்யே..அப்படின்னு சொல்வேன்  ...

அவளே தான்.  ஆனா நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.

நான் பிராக் மாதிரி முழித்தேன். வனம் அப்படின்னா பாரஸ்டா ?

நீங்க சரி, தப்பு இரண்டுமே. உங்களுக்குத் தெரியாது அப்படிங்கறது எனக்குத் தெரியறது.

நிஜமாவே எனக்குத் தெரியாது.


உங்களுக்குத் தெரியாதது தப்பில்லை. எனக்கு
அந்த துர்க்கை கிட்டேந்து எனக்கு இன்ஸ்பிரேஷன்  கேட்கறவங்க கையெழுத்தை பார்த்த உடனே ஒரு தரம் கண்ணை மூடிண்டு அவளை நினைச்சுப்பேன். கண் முன்னே ஆன்சர் தெரியும்.

ஒரு பயத்துடன் ஆஹா.. என க்ரீச்சிட்டேன்.  அப்ப அந்த கையெழுத்து, பிறந்த தேதி எல்லாம் துர்க்கை கிட்டே எப்படி சொல்வீர்கள் ?

தொழில் சம்பந்தப்பட்ட எதையுமே முழுசா சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. தெய்வ குற்றமாயிடும். 

எனக்கு அப்படின்னா சொல்லவே வேண்டாம். 

முன்னமே சொன்னா மாதிரி இது ஒரு பப்ளிக் சர்வீஸ். நோ சார்ஜ். இருந்தாலும், கூட்டம் ஜாஸ்தியாகி விடுகிறதே அப்படிங்கரதாலே ஒரு நூறு ரூபாய் உண்டியல்லே போடச்சொல்லுவேன்.

எந்த கோவில் உண்டியல் லே ?

எந்த கோவில் உண்டியலும் இல்லை.  நான் உட்கார்ந்து இருக்கும் பட்டுப்பாயிலே இருக்கிற உண்டியல்லே போட்டுட்டு, நான் கொடுக்கும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்தையும் பிறந்த தேதியும் போடணும்.

மழை தூறல் கொஞ்சம் அதிகமானது.  எழுந்துகொண்டேன்.

நாளைக்கு வந்து பேசறேன்.  என்றேன்.

எதற்கும் என் செல் நம்பர் தர்றேன். ஒரு அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு வாங்க. என் வீட்டுக்கு..உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க கூடாது இல்லையா. அதுக்காகத்தான் அப்பாயிண்ட்மெண்ட். இல்லன்னா பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்டு .

என்று அவர் எதோ ஒரு நம்பரை கிறுக்கினார். நாளைக்கு வாங்க. என்றார். மழை அதிகமாகும் போல் இருந்தது.

(மனசுக்குள்ளே விட்டு விட்டு ஒரு குரல் கேட்டது. இந்த மாச பென்சனில் பாக்கி ஒன்றும் இல்லை. இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இது வேறயா..ஏற்கனவே டி.வி. ரிபேர்காரன் எத்தனை கேட்கப்போகிறானோ தெரியல்ல. )எழுந்து, அந்த  பார்க்கின் வாசற்பக்கம் போகும்போது....

அவசர அவசரமாக வந்த இன்னொரு முதியவர் மேல் கிட்டத்தட்ட மோதி பின் சுதாரித்துக்கொண்டேன்.

சாரி சார். நான்தான் அவசரப்பட்டு மோதிவிட்டேன். அது சரி,
பரந்தாமன் சார் கிட்டே பேசிக்கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது..என்றார்.

அவர் பெயர் பரந்தாமனா.. எனக்கு தெரியாது என்றேன்.

பாவம். ரிடையர் ஆன பிறகு . வந்த பணத்தையெல்லாம் பசங்க கிட்டே குடுத்து விட்டார்.    பார்யாளும் போய்ச் சேர்ந்துட்டாள்.

இப்ப ?

ஏதோ ஒரு குறி மாதிரி சொல்றார் அப்படின்னு பக்கத்துலே எல்லாரும் சொல்றாங்க.  அது சரியோ தப்போ..

அப்படின்னா..  உங்களுக்கு அவர் சொல்றதில்லே நம்பிக்கை இல்லையா ?

ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...

மழை வலுத்தது. மனசு  கனத்தது.