வியாழன், 12 ஜூன், 2014

குரு பகவன் கிட்டே .... . உங்களுக்கா எனக்கா இல்ல,

வருகிற வெள்ளிக்கிழமை மாலை நாலு மணிக்கு குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு போறார்.

நம்ம இந்த சீப்ராஸ் பார்க் லேந்து மணப்பாக்கம் வீட்டுக்கு போறோமா அதை சொல்லுங்க.

அதெல்லாம் பிசாத்து. இப்ப பாரு. லோகமே ஆஸ்தீக ஆன்மீக மக்காஸ் எல்லோருமே சகட்டு மேனிக்கு  அவங்கவங்க ராசிக்கு தோஷம் பரிஹாரம் செய்யனுமா அப்படின்னு தெரிஞ்சுக்க கூட்டம் கூட்டமா கோவிலுக்கு போராக.

வீடு கட்டினவனுக்கு ஒரே வீடு. வாடகை கொடுப்பவனுக்கு ஆயிரம் வீடு.
இந்த குரு  வருசா வருஷம் வீடு மாத்தறாரே..

வருசத்துக்கு ஒரு தரம் இல்லை. பதினாறு மாசத்துக்கு ஒரு தரம்.

சரி 16 மாசம். 
எப்ப பார்த்தாலும் அங்க இங்க அப்படின்னு கடன் வாங்கி திருப்பி தர முடியாம வீட்டை மாத்திண்டு போறாரோ !!

இங்கன பாரு.  இப்படி எல்லாம் ஏடா கூடமா பேசி, என் மூடை  அவுட் பண்ணிடாதே.  நான் பாட்டுக்கு குரு பகவான் பாட்டு எல்லாம் ராஜேஸ்வரி அம்மா போட்டுக்கிட்டு இருக்காங்க. அத படிச்சுகிண்டு இருக்கேன்.

நீங்க பாட்டுக்கு படிச்சா   தேவலாமே. மணிக்கு ரண்டு பேரு செல் அடிச்சு, இந்த குரூ பெயர்ச்சி ஆயில்யத்துக்கு எப்படி, அவிட்டத்துக்கு எப்படி ன்னு கேட்கராக.

அவுக கேட்கராக.  நான் சொல்றேன். உனக்கு என்ன ?

எனக்கு தூக்கம் அவுட் ஆகிடறது இல்லை ?? போகட்டும். இந்த சாயி நகர் மாமி ஏதோ சனியும் வக்ரிச்சு இருக்கு. அப்படின்னு சொல்லப்போவ, எனக்கும் கொஞ்சம் திக் திக் அப்படிங்க ஆரம்பிச்சுடுத்து.

பல் வலியும் கிட்னி லே கல் வலியும்  அவனவுக்கு வந்தாத்தான் தெரியும்.. இல்லையா. ??

கடகத்துலே குரு உச்சன் இல்லயோ.!!

ஆமாம்.

அப்ப  அங்கேயே இருக்கலாமே ? எதுக்கு அடுத்து அடுத்து வீட்டுக்கெல்லாம் போகணும் ?

நமக்கு எங்க சௌகர்யமோ அங்க தான் இருக்கணும் அப்படின்னு நீ சொல்றது எல்லாம் புரியறது.  ஆனால் குரு பகவான் ஆனா எல்லா க்ருஹத்துக்கும் போய் எல்லாருக்கும் கடாக்ஷம் அளிக்கனும் அப்படின்னு நினைக்கிறார்.

அதுக்காக காலம் காலமா சுத்திண்டே யா இருக்கிறது ?  நம்ம இல்லை ? ரிடையர் ஆனோமா..! ஸ்ரீரங்கத்திலே செட்டில் ஆனோமா அப்படின்னு ?

அதெல்லாம் மனுஷ்யாளுக்கு.  தேவர்களுக்கு இந்த ரூல் அப்ளை ஆகாது.

அது சரி. அதுக்காக, நமக்கு சொந்த பந்தம் அப்படின்னு இருக்கறவா வீட்டுக்கு போனா சரி.  அங்கேயே நமக்கு அப்படி ஒண்ணும் பிரமாத வரவேற்பு இல்லை.

நீ என்ன சொல்ல வரே?

தனக்கு எதிரி வீட்டுக்கெல்லாம் போவானேன் ? வாங்கிக் கட்டிப்பானேன்.
தனக்கும் சுகமில்ல.  அவர்களுக்கும் ச்ரமம் .

நீ சொல்றது சரி தான். குருவுக்கு தனக்கு அப்படின்னு இரண்டு வீடு இருக்கு.
நமக்கு தஞ்சாவூர் வீடு இருக்கு. இங்கே புள்ளே வீடு இருக்கு. அது மாதிரி.
அங்கேயே இருக்கலாமே.

அதே அதே அதைதான் நானும் சொல்றேன். அப்ப எதுக்கு எதிரி வீட்டுக்கு ?
நான் வளைச்சு பேசல்ல. சுக்ரன் எதிரி ஆச்சு . அப்ப அவாய்ட் பண்ணலாம் இல்லையா. சந்திரனும் ஒரு இரண்டும் கெட்டான் . யார் கூட இருக்கானோ அவன் பேச்சைக் கேட்கிறவன். 

 குருவுக்கு எதிரி அப்படின்னு பார்த்தா சுக்ரன் மட்டும் இல்ல, சூரியன், செவ்வாய் கூடத்தான்.  அப்ப, சிம்மம், மேஷம், விருச்சிகம் கூடத்தான் எதிரியோட ப்ளாட் .   அத அப்படி பார்க்க கூடாது.  நம்ம வர்றது அவங்களுக்கு புடிக்கரதோ இல்லையோ நம்ம அட் லீஸ்ட் வருசத்து ஒரு தரம் போயி பாத்துட்டு வரணும்.

அதான் குரு பதினெட்டு வருசத்துக்கு ஒரு தரம் நம்ம வீட்டுக்கு விசிட் பண்றார் அப்படின்னு சொல்றீங்க..

ஆமா. வீட்டுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் வாங்க வாங்க அப்படின்னு மனசு சுத்தமா கூப்பிடனும். நம்மால முடிஞ்ச அளவுக்கு உபசரிக்கணும்.

அதான் நம்ம வலைலே இன்னிக்கு குரு பகவான் ஸ்தோத்திரம் பாடி இருக்கீங்க.

ஆமாம்.

ஒரு சந்தேஹம் இருக்குங்க.

லிங்கா படம் எப்ப வரும் அப்படின்னா ? சொல்லு.

இவரு, ுகுரு வாக்கிய பஞ்சாங்கம் படி இன்னிக்கு 13.6.14 மாலை வராரு . ஆனா, காஞ்சி மடத்து பஞ்சாங்கம் படி அவரு 19ம் தேதி தானே கடக ராசிக்கு வராரு அப்படின்னு போட்டு இருக்குது.

இதிலே ஏன் வித்தியாசம் வருது அப்படின்னு விலா வாரியா பின்னே விளக்கறேன். இப்போதைக்கு சொல்றேன்:  நம்ம எப்படி ? வைகாசி மாசமே அந்த ப்ளாட்க்கு போயி பால் காச்சி சாப்பிட்டு வந்துட்டாலும் பின்னே மெதுவா தானே மூவ் பண்றோம்.

சும்மா ஜோக் அடிக்காதீக.  பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் வித்தியாசம் ஏன் வருது அப்படின்னு கேட்டா ஸ்ட்ரைட் ஆ பதில் சொல்லுங்க..

பஞ்சாங்கம் அப்படின்னு சொன்னால், திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னம், கரணம் , இதை கணக்கு இடுவதிலே வாக்கியத்துக்கும் திரி கணிதத்துக்கும் ஒன்னு இல்ல, நிறையவே  வித்தியாசம் இருக்கு.

 அது சரி தான். நம்ம அவரு வராரு வராரு ன்னு காத்து கெடப்போம். அவரு மெதுவா வந்தா . அதுவும் அந்த சமயத்துலே நம்ம இல்லாட்டி பொல்லாப்பு வந்துடும் இல்லையா. 

நம்ம,  எல்லாரும் எப்ப வர்ராகளோ அப்பவே போவோம். 

சில சமயம் ரண்டு தீபாவளி கூட வருது.   அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்ப கோவிலுக்கு கிளம்புறீங்க.?

நீ வல்லையா ?

இதோ பாருங்க.  நீங்க போயிட்டு வாங்க.  எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கணுமோ அது அது அப்ப அப்ப அவங்க  அவங்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கும்.

அப்ப இது அது எல்லாம் ஒரு மனசு ஆறுதலுக்குத் தான் அப்படின்னு சொல்றாயோ ?

புரிஞ்சுகிட்டா சரி. குரு பகவான் சைலண்டா ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்துண்டு இருக்காரு. அவர் யங் . ஆனா அவரோட சிஷ்ய புள்ளைங்க எல்லாரும் ஓல்டு.

வாய் பேசாம இருக்காரு அப்படின்னு சொல்றே....?


வாய் தான் பேசல்ல. கண் பேசுது.  ஹார்ட் பேசுது.

என்ன பேசுது அப்படின்னு சொல்றே.

எல்லார் கிட்டவும் அன்பா இரு.  மனசை ஒரு நிலைப்படுத்தி வச்ச்சுகிட்டேனா ஒனக்கு எந்த பேஜாரும்  கீது அப்படின்னு சொல்றாரு.

அதாவது, நீ சொல்றத பாத்தா,

மனத்துக்கண் மாசிலன் ஆதல்,
அனைத்து அறன் ஆகுல நீர பிற

அப்படிங்கற வ ள்ளுவன் தத்துவத்தை எடுத்து சொல்றாரு அப்படின்னு சொல்ற.

அத எப்படி செய்யறது ?

நீங்க அவருகிட்டவே கேட்டுட்டு வாங்க. எனக்கு விஜய் டி.வி.  ப்ரோக்ராம் வர நேரமாயிடுச்சு.

அப்படி என்ன ப்ரோக்ராம் ?
போங்க. போயி, உங்களுக்கா எனக்கா இல்ல, இந்த குழந்தைக்காக குரு பகவன் கிட்டே அழுங்க. பிரார்த்தனை செய்யுங்க. 

Pray for this God sent child to Guru Bhagavan and not for U and for me.