செவ்வாய், 20 டிசம்பர், 2022

slip of the tongue

 

slip of the tongue.

ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லை சொல்லிவிட்டு பெரும் அவஸ்தை இல்லாவிடினும் ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது இல்லையா ?
அது போல் சொன்ன சொல்லுக்கு மட்டும் அல்ல. பார்க்கும் எழுத்த்துக்களை சரியாக பார்க்கவில்லை எனினும் அதே தர்மசங்கடம் தான்.
முன்னே ஒரு தரம் நாகையில் புயல் அடித்த நேரத்தில் அலுவலகத்தில் இரண்டு மாதங்கள்ளாகியும் மின்சாரம் வழங்கப்படாத நிலையில் என் மேலதிகாரியுடன் சென்று ,
மின் வாரியத்துக்கு பதிலாக மீன் வாரியத்துக்கு போய் முறையிட்ட கதை சொன்னேன். கதை இல்லை. உண்மை நிகழ்வு.
அதே போல. இன்னும் ஒன்று.
மூன்று வருடம் முன்பாக. லஸ் கார்னரிலிருந்து விருகம்பாக்கம் வரை வரும் ஷேர் கார் கள் இருந்தன. 6 முதல் 9 பேரை ஏத்திச்சென்று ஆங்காங்கே நிறுத்தி இறங்கிவிடும். ஏற்றுக்கொள்ளும்.
இதில் ஒரு நாள் நான் லஸ் கார்னரில் இருந்து விருகம்பாக்கம் வந்தேன். of course with my better no no no..BEST half.
From there we will have to go by another auto to our house at Valasaravakkam
என் இல்லாள் மீனாட்சி பாட்டி யோடு. இந்த ஷேர் கார் அவருக்கு பிடிக்காத சமாச்சாரம். இருந்தாலும் ஓலா உபர் கிடைக்கவில்லை.
இறங்கியவுடனே, அந்த திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த புது ஹோட்டல். வாழை மரம் தோரணம் எல்லாம் கட்டி , எதோ அந்தக்கால எம்.ஜி. ஆர் பாட்டு.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ..பாடல். நானும் சேர்ந்து பாடிக்கொண்டே... இவ முறைக்கிறா...என்னது..பப்ளிக் பிளேஸ் கூட தெரியாம பாடியாரது ...ஷேம் ஷேம்
போர்டு பார்த்தேன். பிரெஷ் கிச்சன். Wah ! what a novel Name !!
என்ன புது தினுசா இருக்கிறதே.
..டயர்டா இருந்தது வேற ..மனைவியிடம், ஒரு சூடா ஒரு காபி சாப்பிட்டு விட்டு, அடுத்த ஆட்டோ விலே வீட்டுக்கு போவோம் என்றேன். அவளும் ஒரு அரை குறை மனதுடன் என்னுடன் வந்தாள் .
புதிய சேர்கள் , புதிய டேபிள்கள்...மலர் வளைவுகள். முதல் நாள் வரவேற்பு அலங்காரங்கள்.
ஆஹா என்று சொல்லிக்கொண்டே அருகில் ஒரு புது மேஜை யில் அமர்ந்தோம். அப்படி ஒன்றும் கூட்டமும் இல்லை.
என்ன சாப்பிடுவோம் என்று சொல்வதற்குள் இவள் சொன்னாள் . காபி மட்டும் போதும்.
சரி என்று வந்த சர்வரிடம் இரண்டு ஸ்ட்ராங் காபி என்றேன்.
வேற ஒன்னும் வேண்டாமா என்றார் அவர்.
ஒரு ஆவலை தூண்டினார்.
என்ன இருக்கு புதுசா என்றேன்.
மீன் வறுவல், ஆட்டுக்கால் சூப் என்றார்.
திடுக் கிட்டு எழுந்தேன். என்ன என்னென்னவோ சொல்கிறீங்க...
இல்ல சார்...சிக்கன் சூப் கூட இருக்கு என்றார்.
வயிறு பிசைய ஆரம்பித்து விட்டது. இவள் உடனே எழுந்து வெளியே போக நடையை கட்டிவிட்டாள் .
எனக்கும் என்னவென்று புரியவில்லை. இவள் பின்னாடியே போகவேண்டும் .
இது வெஜ் இல்லையா என்றேன் சர்வரிடம்.
நீங்க போர்டு பார்க்கலயா...என்றார்.
அவசர அவசரமாக வெளியே வந்து போர்டை பார்த்தேன்.
பிரெஷ் சிக்கன்.
நான் சிக்கனை கிச்சன் என்று படித்ததின் கோளாறு.
வரும் வழியெல்லாம், " ஒரு சரியான ஹோட்டலுக்கு க்கோட கூட்டிண்டு போக முடியல்ல. என்ன தான் குப்பை கொட்டிநீங்களோ இத்தனை வருஷமா காலேஜ் ல. பெரிய ப்ரொப்சர் இன்னு வேற பேரு !! "
ஆத்துக்காரியிடம் பல்ப் வாங்கிய கதை.
kosuru:
இதை படிக்கும் பல நண்பர்கள் இது என்ன? இதை விதிக்க பெரிசா நான் பல்ப் வாங்கி இருக்கேனாக்கும் என்பர். காதில் விழாமல் இல்லை.
கொசுறு.
May be an image of 2 people, glasses and text
Amaravathi S, Barath Kumar and 7 others
8 comments
Like
Comment
Send