ஞாயிறு, 5 டிசம்பர், 2021

சுந்தர காண்ட 46 வது சர்கம் . 

அனுமனை பிடித்துக்கொண்டு வருமாறு இராவணன் கட்டளை ஏற்று ஐந்து சேனாதிபதிகள் புறப்பட்டு, 

எல்லாப்படைகளையும் திரட்டிக்கொண்டு, பல்வேறு ஆயுதங்களுடன் புறப்பட்டு அனுமனை , ர்க்கும், போரிடும், இறுதியில் மரணமடையும் கட்டம். 

விரூபாக்ஷன், பூபாக்ஷன், துர்த்தரன், பிரக்சன் , பாசகர்ணன், ஆகிய ஐவர் . 

இவர்கள் புறப்படும்போது,   ராவணன் அவர்களுக்கு சொல்லுவது எல்லாம் இன்றும் போர் நடக்கும் இடத்திலே எப்படி, எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை துல்லியமாக 

எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.  

எதிரியின் பலத்தை அறிந்து செயல்படவேண்டும் ...அவனுடைய உருவைக்கண்டு அல்ல, அவனுடைய அவ்வப்போதைய செயல்களுக்குத் தக்கவகையிலே போர் முறைகளையும் மாற்றி அமைக்கவேண்டும்,  போரில் ஜயம் , வெற்றி என்பது நிரந்தரமல்ல.   ஒரு பொது வெற்றி போல தோன்றும். அடுத்த கணம் அதுவே தோல்விக்கு வித்தாக இருக்க கூடும்.  ஆக, காலம், இடம், தெரிந்து வானரத்தின் அவ்வப்போதைய திறனுக்கு ஏற்றபடி செயல்பட்டு, அவனை பிடித்து வருக....என்று சொல்கிறார் ராவணன். 

அதை ஏற்று சென்ற ஐவரும் அனுமனை கண்டு அவனது அப்போதைய சிறிய வடிவைக்கண்டு வியக்கிடீ=றார்களாம். 

இந்த சின்ன குரங்கா இத்துணை அழிவை தருகிறது என எண்ணி, பல்வேறு பானங்களினால் அனுமனை தாக்க 

அனுமனும் காயப்பட்டு, சினம் கொண்டு மிகப்பெரிய உருவெடுத்து க்ரீச் என்ற ஒலியுடன் ஆகாயத்தை நோக்கி செல்ல, 

அங்கேயும், துறித்தரன் நூற்றுக்கணாக்கான அம்புகளால் அனுமனை அடிக்க, அனுமன் , 

மழைக்காலத்தே, எப்படி மேகங்கள் சூறைக்காற்றால் சின்னா பின்னா படுத்தப்பட்டு, சிதறப்படுமோ , அந்த அம்புகளை சிதறடித்துப்பின்னே 

தன உடலை இன்னுமே பெரிதாக்கிக்கொண்டு, ஒரு  பெரிய மலை போல தன்னை ஆக்கிக்கொண்டு, 

ஒரு கணத்தில் துர்த்தரன் தேரில் மேல் குதிக்க, 

அரக்கன் அந்த தேருடனே தானும் தவிடு பொடியானான்.  என்று வால்மீகி சொல்கிறார். 

இது போலவே மற்ற அரக்கர்களும் ஒருவர் பின் ஒருவராக போர் செய்து மடிந்து போகின்றனர். . கடைசியாக இருந்த இரு அரக்கர்களையும் ஒரு மலைதனை அப்படியே பிடுங்கி எடுத்து அதனை அவர்கள் மேலே அழுத்த அவர்கள் மடிகிறார்கள். யுத்தம் முடிகிறது. 

அந்த  பூமி செந்நிறமாக காட்சி அளிக்கிறது. உடல்களால் அடைக்கப்பட்டு இருக்கிறது. என்று வர்ணிக்கப்படுகிறது. 

அடுத்து யார் வருவாரோ...அவருக்காக, காத்திருப்போம், அதுவரை சற்று இளைப்பாறுவோம் என்று தோரண வாயிலை அடைகிறார் அனுமன்.  இளைப்பாறுவோம் என்று 
வியாழன், 23 செப்டம்பர், 2021

Mid Week topic

 மிட் வீக் டாபிக்

ஸ்ட்ராங் ஆ ஒரு டாபிக் கொடுத்துட்டு, இத வீக் டாபிக் வேற சொல்றாங்க.....
இருந்தாலும் முயற்சி பண்ணிப்பார்க்கறேன். சாரே...
பிடித்தது பத்து.
லைஃப்ல இடித்தது இருபது , அடிபட்டது அம்பது, கடிபட்டது நாப்பது இருக்கும்போது, பிடித்ததும் இல்லாமல் இல்லை.
கொஞ்சம் நீளமான கட்டுரை தான். சம்மரி சாரே....எனக்கு கொஞ்சம் பின்னே சுருக்கி கொடுத்தா நல்லது.
1. பார்த்துண்டே இருக்கலாம் அப்படின்னு சொல்வது யானை, முழு நிலவு, கடல் அலை. கரை லே உட்கார்ந்து மணிக்கணக்கா பார்த்துண்டே இருக்கலாம்.
ஆனா எனக்கு அதே லெவல் லே பிடித்தது அப்படின்னு சொன்னா என் அம்மா முகம். 1967 லே எடுத்தது. அவளுடைய அகம் காரணமாக முகம் அப்படி ஒரு தெய்வீகமா இன்னும் தெரியறதா ன்னு சொல்லத்தெரியல்ல... பின்னாடி ஒரு காலத்துலே அது பற்றி எழுதுவேன்.
2. கர்நாடக இசை என்னை முற்றிலும் கட்டிப்போட்டது என் இளவயது முதலே. இத்தனைக்கும் எனக்கு குரல் சுத்தமா கிடையாது. நீ வாயைத்துறந்தா உதைதான் அப்படின்னு என்னோட சங்கீத தங்கை அப்பப்ப சொன்னாலும், இது தான் என் உலகம் என்று தோன்றும். வாயிலே ஒரு நாளைக்கு கங்கை ஜலம் ஊற்றவேண்டாம். அதுக்கு பதிலா காதுலே இந்த பைரவி ராக ஆலாபனை கொஞ்சம் ஊத்துங்கோ ..பாடுங்கோ ...உப சார மூலனு ...மறந்திடாதே...ராஜி...
அந்த காலத்துலே ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடுவார்....தர்பாரி கானடா ராகத்துலே....கோவர்த்தன கிரிதாரி... சொக்க வைக்கும். அகிலாண்டேஸ்வரி...த்விஜாவந்தி ராகத்துலே...திருச்சூர் பிரதர்ஸ் பாடினதை கேளுங்க...நான் சொல்றது சரிதான் அப்படின்னு சொல்வீர்கள். விஸ்வரூபம் முதல் பாட்டு இதே ராகம் தான். உனைக் காணாத ....
உலகத்தையே ஆளும் ஆட்டும் இந்த ஏழு ஸ்வரங்கள் பிடிக்கும்.
3. காலேஜ் படிக்கிற காலம் முதல் இருந்தே எனக்கு முதல் காதல் ஆங்கில இலக்கியம் . விகடோரியன் ஈரா பின்னே , ரொமான்டிக் பீரியட் ..அதுலே கீட்ஸ், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் மூன்று கவிஞர்களுமே என்னைக் கவர்ந்தவர் என்றாலும், முதலாக சொல்லணும் அப்படின்னா, ஜான் கீட்ஸ் தான். அவருடைய
ODE ON A GRECIAN URN எத்தனை தரம் படிச்சேன், இன்னும் படிக்கணும் படிக்கணும் னு தோணும். ஒரு தினுசா மயக்கும்.
ஒரு காட்டு வழியே போறான் அந்த கவி. வழியே ஒரு உடைந்து போன மட்பாண்டம் கண்ணுலே படறது. அதிலே ஒரு துண்டை எடுத்து பார்க்கிறான். அதுலே ஒரு ஓவியம். ஒரு நாகம் படம் எடுத்து ஆடுகிறது. அதுக்கு முன்னாடி பாம்பாட்டி மகுடி ஊதிக்கொண்டு இருக்கிறான்.
அத பார்த்த கவிஞன் பாடறான். " நீ இன்னும் எத்தனை காலத்துக்கு மகுடி ஊதிக்கொண்டே இருப்பே ...அந்த பாம்பும் உன் முன்னாடி எத்தனை காலத்துக்கு படம் எடுத்துண்டு நின்னுண்டே இருக்கும் ?
ஆஹா...அந்த மகுடி லெந்து வர இசை தான் எப்படி எல்லாம் இருந்திருக்கும்....அதை கேட்டவர் எல்லாம் எப்படி மயங்கினாரோ...
கீட்ஸ் எழுதுகிறான்.
கேட்ட நாதம் இனிமை என்றால் , இன்னும் கேளாத நாதங்கள் இன்னும் அல்லவா இனிப்பு ?
A FEW LINES I SHALL QUOTE.
HEARD MELODIES ARE SWEET,
SWEETER ARE THE UNHEARD ONES.
இன்னும் சில வரிகள் பின்னால் தத்துவ மழை .
அழகு என்பது உண்மை. உண்மையே அழகாம்.
அது தான் நீ அறிந்தது.
அறியவேண்டியதும் அதே தான்.
BEAUTY IS TRUTH, TRUTH BEAUTY, THAT'S ALL
YE KNEW ON EARTH AND ALL YE NEED TO KNOW.
நாம் சொல்கிறோமே
சத்யம் சிவம் சுந்தரம்.
அதையே தானே கீட்சும் சொல்லி இருக்கிறார்.
Need I say I love these immortal poets. !
4. அடுத்தது ஹ்ருஷீகேசத்தில் நான் கண்ட லக்ஷ்மன் ஜூலா.... அதன் கீழே ஓடும் கங்கை நதி. அந்த ஜூலா வில் இங்கிருந்து அங்கும் , அங்கிருந்து இங்கும் ஒரு பத்து தடவை குதித்து குதித்தது ஓடி ஓடி ......களைத்து போன பின், தொபுக்கடீர் என்று கங்கையில் குதித்தது எல்லாம் எனக்கு பிடித்த சம்பவங்கள்.
மானஸரோவரில் ஒரு அதிகாலையில் கங்கை நீரில் இறங்கி கிட்டத்தட்ட விறைச்சு போய் வெளியே வந்ததும் எனக்கு பிடித்ததுவே.
5. ஆங்கிலம், இந்தி மொழிகளில் நான் படித்த அளவிற்கு நான் நமது தாய் மொழி இலக்கியம் படிக்கவில்லை என்ற குறை இருந்தாலும், நமது திருக்குறளை விஞ்சிய வேதம் இல்லை என்ற துணிபு உள்ளது. 1975 வாக்கில் எனது நண்பர் திரு அரசிறைவனுடன் ஒன்று சேர்ந்து அறம் , பொருள் இவ்விரண்டிலும் உள்ள எல்லா அதிகாரங்களில் இருந்து மையக்கருத்து ஒன்று உரைக்கும் ஒரு பா எடுத்து அதை ஆங்கில மொழி பெயர்ப்பு செய்து தித்திக்கும் முத்துக்கள் என்ற பெயரில் வெளியீட்டில் எனது பங்கு பெரிதும் இருந்தது. ஆசிரியர் பணி புரியும் காலத்தும் நான் எந்த வகுப்பு எடுத்தாலும் குறளை மேற்கோள் காட்டாது இருந்தது இல்லை.
அத்தனை குறட் பாக்களிலும் எனக்கு பிடித்த குறள் .
வகுத்தான் வகுத்த வகை அல்லார் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. லைஃப் முடியும்போது , நம்ம அப்படி என்ன தான் சம்பாரிச்சாலும் , அத கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்த்தாஅந்த ஆண்டவன் நம்மை என்ன அனுபவிக்கனும் அப்படின்னு நினைச்சானோ ,
அந்த தத்துவம் பிடிக்கும். ..
6. ஆதி சங்கரரின் அற்புதமான கிரந்தங்கள் ரொம்பவுமே பிடிக்கும். சௌந்தர்யலஹரி லே எட்டாவது ஸ்லோகம்.
ஸுதா சுந்தோர் மத்யே சுராவிடப்பி வாடி பரிவ்ருதே,
மணித்வீபே,நீபோ பவன வதி சிந்தாமணி க்ருஹே
ஷிவா காரே மஞ்சே பரம ஷிவ பர் ய ங்க நிலையாம்
பஜந்தி த்வாம் தன்யா ஹா கதி சன ஆனந்த லஹரீம்
இந்த பாடலை என் எண்பது வயதில் ஒரு எட்டாயிரம் தரமாவது சொல்லி இருப்பேன். பிறப்பு இறப்பு இவைகளில் இருந்து விடுவிக்கும் பதிகம் என்று சொல்கிறார்கள். அது எப்படியோ....ஆதி சங்கரரின் சாஹித்யங்கள் என்னை ததவ ரீதியாக மட்டும் அல்ல, அதில் உள்ள இலக்கிய நயமும் என்னைக் கவரச்செய்யத்தான் செய்கிறது.
In the middle of the sea of nectar,
In the isle of precious gems,
Which is surrounded by wish giving Kalpaga trees,
In the garden Kadamba trees ,
In the house of the gem of thought,
On the all holy seat of the lap of the great God Shiva,
Sits she who is like a tide
In the sea of happiness of ultimate truth,
And is worshipped by only by few select holy men.
7. எனக்கும் எதோ தெரியும் என்று நினைத்து, நான் நடத்திய வகுப்புகள் கூட்டங்கள் பலவற்றிலும் பல பொருள்களிலும் , நான் பிதற்றியவைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டது மட்டும் இல்லாமல், கேட்டதை எல்லாம்கூட்டங்களோ அல்லது பயிற்சி வகுப்புகளோ முடிந்து விட்டதே , இனியும் இந்த சுமை எதற்கு என்று புறம் தள்ளாது, நினைவில் நிறுத்தி, அதை ஒரு முப்பது முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பின்பும் அவற்றினை நினைவு வைத்துக்கொண்டு, , எனக்கு நன்றி கூறும் நூற்றுக்கணக்கான எனது மாணவ நண்பர்களின் அன்பு உள்ளங்கள் எனக்கு பிடிக்கும்.
8. மாதா, பிதா , குரு , தெய்வம் என சொல்வர். அன்னை உன் தந்தை இவர் எனக் காட்டுகிறார். தந்தை நம்மை குருவிடம் கூட்டிச் செல்கிறார். அந்த குருவோ ஞானத்தை ஈந்து இறைவனுக்கு வழி காண்பிக்கிறார்.
கபீர் தாஸ் அவர்களை நாம் எல்லோரும் அறிவோம். அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர். குருவும் இறைவனும் ஒன்றாக உங்கள் முன்னே வந்து நின்றால் யாரை முதலிலே வாங்குவீர்கள் என்று. கபீர் பதில் சொன்னார்.
நான் என் குருவையே வணங்குவேன் . அவர் தானே எனக்கு கோவிந்தனைப்பற்றி சொன்னார்.
குரு கோவிந்த் தொவூன் கடே , காகே லாகோன் பாயேன் . குரு ஆப் நே , கோவிந்த் தியோ பதாயே .
குரு நாம் தேர்ந்து எடுப்பதில்லை. நமக்கு கொடுப்பினை இருப்பின் அவர் நம் கண் முன் வருகிறார்.
குருவுக்கு என்னை பிடிக்கிறது. ஆகவே நான் சீடன் ஆனேன்.
என்னை பிடித்த குருவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
9ஐந்து வயது முதலிருந்தே பாடசாலை யில் துவங்கி பல்வேறு கால கட்டங்களில் பலவித கிரந்தங்கள்,சாஸ்திரங்கள், வேத புத்தகங்கள், இதிகாசங்கள் படித்திருந்தாலும், கட , கேன, சாண்டுக்ய, பிருஹத் ஆரண்ய போன்ற உபநிஷத்துக்கள் பலவற்றையும், குறிப்பாக, பணி ஓய்வுக்கு பின்னே, பல மடங்கள் ஆசார்யர்கள் , த்வைத அத்வைத உபன்யாச கர்த்தாக்கள், வாயிலாகவும், சொற்பொழிவு மூலமும், வகுப்புகள் மூலமும், கற்று இருந்தாலும், பாகவதம் மட்டும் கதை தெரிந்தாலும் ஒவ்வொரு ஸ்லோகமாக பாராயணம் செய்யவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத்தான் இருந்தது.
அதை எப்படியோ அறிந்து , என்னை அன்புடன் அழைத்து, என்னையும் ஒரு சத் சங்கத்தில் இணைத்து , , பாகவத அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் படிக்கச் செய்து , அதற்கு நான் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருள் சொல்லி, விளங்க வைத்து, எல்லாவற்றிக்கும் மேலாக, பாகவத தர்மத்தையும் தெளிவாக எடுத்துரைத்த எங்கள் டீச்சர். அவர்களை நான் சந்தித்ததே இன்னமும் . வின் வழியே. குரல் வழியே தான். அதுவும் தெய்வ சங்கல்பம்.
அந்த குரல் மூலம் உலகெங்கும் எதிரொலித்து என் மந்த காதுகளிலும் விழுந்த
மூல மந்த்ரங்கள்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நமோ நாராயணாய,
மிகவும் மிகவும் பிடிக்கும். என்னை உய்ய வைக்கும் .
10.கடைசியா , நான் எப்போ எங்கே என்ன எழுதினாலும் பேசினாலும் அதை உத்து உத்து கவனித்து எனக்கு z category செக்யூரிட்டி ஆக 53 வருஷமாக இருக்கும் என் இல்லாளை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
First photo: taken in 1967 my mom with my dad.
Second Photo: Z category Security today. ( says she will follow me for the next seven births !! )
Nimmi Suresh, Bala Sivakumar and 45 others
44 Comments
Like
Comment