என்னது ஒரு தினுசா சுகமா ஒரு வாடை வருது ?
அப்படின்னு தாத்தா மூக்கை இன்னும் நன்னா உறிஞ்சி இழுத்து பார்த்தாற்போல.
ஆமாம். நிசமாத்தான்.
நல்ல ஏதோ ஹல்வா மாதிரி வாடை வருதே !! ஆனா
என்ன இந்த கிழவியாவது அல்வா பண்றதாவது !! இந்த ஜன்மத்துக்கில்லை.
அப்ப என்ன அந்த வாசனை அப்படின்னு பார்த்தால்,
ஆமாம். லாப் டாப் லேந்து தான் வருது.
இப்ப எல்லாம் ஈ சிகரட் அப்படின்னு சொல்றாப்போல ஒரு ஈ அல்வா வும் வர நேரம் வெகு தூரமில்ல.. ஆல்ரெடி ஸ்மோக் செய்யறவங்க இங்கன போய் படிச்சா தப்பு இல்ல.
இந்த எலக்ரானிக் டிவைஸ் சிகரட்டை ஊதினா ஸ்மோக் பண்ற பீலிங் வருமாம். அதனாலே கொஞ்சம் கொஞ்சமா சிகரட் ஸ்மோக்கிங் நிறுத்தி விடலாம் என்று இதை தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.
அது போல ஈ காபி , ஈ டீ , ஈ வெங்காய மசால் ரோஸ்ட், ஈ அல்வாவுக்கும் ஒரு நாளைக்கு ஒரு டிவைஸ் வரும் என்று திடமாக நம்புகிறார்.சுப்பு தாத்தா.
எல்லா புதிய கண்டுபிடிப்பவைகளுக்கு முன்னாடி ஒரு கனவு காணனும். அப்பத்தான் அதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறதா அப்படின்னு மூளை தேடும். So dream before U discover anything.
அன்னிக்கு க்ராண்ட் ஸ்வீட்ஸ்,அடையார் ஆனந்த பவன் எல்லாமே அம்பேல் ஆயிடும்.
தயிர் வடை க்கு பதிலா தயிர் வடை வாடையே மலிவா கிடைச்சா நல்லது தானே.
+Durai A அப்பாதுரை சார் வரன்னிக்கு எந்த ஈ வடை, ஈ பொங்கல், ஈ பேப்பர் ரோஸ்ட் அப்படின்னு செஞ்சு கொடுத்தே ஒரு வகையா மேனேஜ் செஞ்சுடலாம்.
என்ன இந்த ஐ.ஐ.டி லே படிச்ச பசங்க பொண்ணுங்க ஈ பொங்கல் , ஈ இட்லி, ஈ பிஸ்ஸா , அப்படின்னு இந்த வாடைகளையே கம்ப்யூடர் மூலமா ஸ்டிமுலேட் பண்ணி நம்மை ஒரு வகையா அடிக்ட் ஆக்கிவிடுவாங்க.
ஆனா அதுவரைக்கும் சுப்பு தாத்தா.இருக்கணுமே.மேஷ ராசிக்கு அஷ்டமத்துலே எட்டிலே வேற சனி வரப்போறாரே .
அதுவரைக்கும் என்ன செய்யறது ?
அல்வாவே ...
வாராய். நீ வாராய்.. என்று பாடிக்கொண்டே இருப்பதால் லாபம் எதுவும் இல்லை.
லோகத்துலே செய் இல்லைன்னா செத்து மடி. do or die அப்படின்னு இங்க்லிஷிலே சொல்லி இருக்கு இல்லையா ?
1980லே என் நண்பர் வெங்கடரமணி சுத்தமா,சத்தமா சொல்வார்.
ஆடிட் லே அவர் தான் எங்களுக்கு சீனியர். அநேக விஷயங்கள் கீதைலே போட்டு இருக்கு அப்படின்னு அடிக்கடி சொல்வார்.
அது எதுக்கு கீதைலே போடணும். எங்க வீட்டு சீதையே தினமும் சொல்றது தானே அது என்று நினைப்பேன். சொல்லமாட்டேன். அவர் கிட்ட ஒரு முதல் மரியாதை எப்பவுமே எனக்கு.
ஹல்வா திரும்பவும் நினைவுக்கு வருகிறது. ஞாபகம் வருதே.வந்தது.
உடன் , வீர தீரத்துடன் பாண்ட் நாடாவை இறுக்கி முடிஞ்சுண்டு, சட்டையை சரியாத்தான் போட்டு இருக்கேனா அப்படின்னு கன்பர்ம் பண்ணிண்டபிறகு
எதிர்த்த வெஜிடபிள் கடைக்கு சென்று அரை கிலோ பம்ப்கின் வாங்கி. வந்தேன். பம்ப்கின் அப்படின்னா மஞ்சள் கலர் பூசணிக்காய். மெட்ராஸ் லே இத சில பேரு பரங்கிக்காய் அப்படின்னும் சொல்றாக.
ஹல்வாவுக்கு வேண்டியது மற்றதெல்லாம் அதாவது நெய்,பாதாம்பருப்பு, மிந்திரி, திராட்சை,ஏலக்காய் வீட்டில் எங்கெங்கே என்ன என்ன இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
ஸோ , ஒரு சிறிய வாணலி பத்திரத்தில் பம்ப்கின்னை நல்ல சின்ன சின்ன துண்டமா நறுக்கி , நீர் ஊற்றி வேக வைத்து, ஸ்டவ்வை சன்னமாக எரிய வைத்து , அடி தீஞ்சு போகாம பக்கத்துலே இருந்து பாத்து பாத்து ,
பம்ப்கின் உடைய அந்த பச்சை வாடை அடங்கிய உடனே, கொஞ்சமா அந்த ஹலுவா அழகிலே அசந்து போய், அதை அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன், , என்று முனுமுனுத்துக்கொண்டே சக்கரை 10 ஸ்பூன் போட்டு, நல்ல கிளரி, விட்டு,
கேசரி பௌடர் , பொடி செய்த ஏலக்காய், போட்டு,
பக்கத்தில் இன்னொரு ஸ்டவ்வில், ஆவின் நெய் எடுத்து அதில் பத்து மிந்திரி, ஐந்து பாதம் , ஒன்றிரண்டு பிஸ்தா போட்டு, மிந்திரி நல்ல பொன் நிறம் வரும் வரை,
காத்திருந்தேன் காத்திருந்தேன், என காத்து,
அந்த பம்ப்கின் சக்கரை கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் ஆகி விட்டதா என்று கவனித்து பார்த்து, அதற்குப்பின் அதற்குள்ளே அந்த நெய்யில் பொரித்த மிந்திரி,பாதம் பிஸ்தா வை கலந்து ,
ஆஹா, ஆஹா , என்னமா மணக்கிறது.
இந்த வாசத்துக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா,
மனசுக்குள்ளே மறைஞ்சு மறைஞ்சு வரும் அந்த பாடல் ட்யூன் :
இப்ப காதிலேந்து மூக்குக்கு வந்தது
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே .
அந்த வாணலியைத் திறந்தேன்.
(Courtesy:thank U Sangeetha Nambi Madam for your excellent recipes blog )
இதுதான் பம்ப்கின் அல்வா.
மனமனக்குது. ருசி அப்படின்னு குறைச்சு சொல்லிடக்கூடாது. தேவாம்ருதம்.
அல்வா வாணலியை ஒரு கிடுக்கியினாலே பத்திரமா தூக்கி நடு ஹாலிலே இருக்கிற ஊஞ்சல் முன்னாடி இருக்கிற மேசை மேலே வைச்சேன்.
அந்த ஊஞ்சல்லே உட்கார்ந்துண்டு இந்த ஹல்வாவை ருசிச்சிண்டு, டி.வி.லே அந்த காலத்து ஆஷா போன்ஸ்லே பாட்டு ஒண்ணு கேட்கணும் அப்படின்னு மனசு ஓடறது. இல்ல பறக்கறது.
அத கொஞ்சம் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டேன். போட்டா அப்படியே வழுக்கிட்டு வயத்துக்குள்ளே போயிடுத்து.
ஆஹா என்ன சுகம் என்ன சுகம் !!!
அடுத்த பீஸ் எடுத்து வாய்க்குள்ளே போடறதுக்குள்ளே அது ஸ்பூன் லேந்து நழுவி கீழே விழுந்து விட்டது .
அத எடுக்க குனிந்தேன் பாருங்க...
குனிஞ்சு எடுக்கவும் செஞ்சுட்டேன்.
எழுந்திருக்கும்போது அந்த டேபிள் மேலே தலை இடிச்சு,
அய்யய்யோ ..
டேபிள் மேலே இருக்கற அந்த அல்வா வாணலி அப்படியே கவிழ்ந்து
எல்லா அல்வா வும் கீழே கொட்டி.....
என்ன ஒரு அதிருஷ்டம்...
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.....
அல்வா வாணலி தலை கீழா கவிழ்ந்து கிடக்கிறது.
என்ன இது கால சர்ப்ப யோகம் !!! (ஜாதகத்திலே ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவிலே எல்லா கிருகங்களும் இருந்தா இந்த யோகம். இது என்ன படுத்தும் எப்படி படுத்தும் அப்படி எல்லாம் விலா வாரியா படிக்க சுப்பையா வாத்தியார் பதிவுக்கு செல்லவும். )
சர்விஸ் டயத்தில் தான் ரொம்ப படுத்தியது. ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகிவிட்டது. என்னை இன்னுமா படுத்தும்.?
அப்படின்னு என்னையே நொந்து நூடுல்ஸ் ஆனபோது
ஊட்டுக்காரி கிழவி வரா...
எனக்கா கை கால் எல்லாமே உதர்றது. இதெல்லாம் தேவையா மத்தியான நேரத்துலே.. என்று கண்டிப்பா சத்தம் போடுவா ..அந்த சத்தம்
அய்யய்யோ?
ஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா என்று நான் கிருஷ்ண பரமாத்மாவை கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள்
என்ன சத்தம் இந்த நேரம்...
என்று அந்த புன்னகை மன்னன் ஒரிஜினல் பாட்டை பாடிட்டே ... வரா.. வரா எங்க ஊட்டுக்கிழவி
என்னமா அந்த கிருஷ்ணன் பாடுறான் அப்படியே ஜூனியர் எஸ்.பி.பி. மாதிரி இருக்குது. என்னங்க.. அந்த விஜய் டி.வி.பாக்கலியா ..?
அப்படின்னு கேள்வி வேற ...
புன்னகை மன்னன் பாடலை எப்படி வைரமுத்து சார் இயற்றினார் என்று அவரே சொல்றார் பாருங்க.. ..
ஒரு காதலனும் காதலியும் நதியோரம் செல்கிறார்கள். எல்லா விதமான காதல் உணர்வுகளோடும் செல்லும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்கள்.
கிழவி எங்கே கீழே விழுந்து கிடக்கிற அல்வா வாணலி யைப்பார்த்து விடப் போகிறாளோ என்ற பயத்திலே,.
அவளை திசை திருப்பும் முயற்சியிலே
இங்கே இந்த பாரு.
நான் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.
ஆகம் மலஹர்
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை.
நம் தொல்லைகளுக்கு சிறிது நேரம்
விடுதலை கொடுக்கும் இசை.
மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா. இதை கொஞ்சம் கேட்போம் அய்யா.என்று இதில் லயித்து இருந்தேன்.
அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சிகப்பு டவலை எடுத்து அந்த கொட்டிய அல்வாவை பாதி மூடினேன்.

நல்ல வேளை . கிருஷ்ண பரமாத்மா காப்பாத்திவிட்டார்.
கொட்டிய அல்வா வை கவனிக்காமலே அந்த இசையை மட்டும் சிறிது நேரம் ரசித்து விட்டு,
அன்னிக்கு இளையராஜா முன்னாடி நம்ம வீரமணி ட்ரம்ஸ் இன்னும் நல்லா இருந்தது இல்லையா... என்றாள். இன் பாக்ட் அந்த கிரியேடிவிடி பிலான்க்ஸ் டு லெப்ட் ப்ரைநீஸ் ஒன்லி. என்று சொல்லி மனைவி என் கண்களை விட்டு மறைந்தாள் .
ஆப்டர் நூன் காட் நாப் பூனைத் தூக்கம் அவளோட பாக்கியம். அவள் பேசாமல் தூங்கிக்கொண்டு இருப்பது என்னோட பாக்கியம்.
நானோ,
அந்த இசையிலே தூங்கி இருப்பேன் போல இருந்தது. அதில் ஒரு கனவு. ஓஷோ மெடிடேசன் சென்டரில் வீரமணி ட்ரம்ஸ் வாசிக்கிறார். 2010 ல் நான் அனுபவித்த நிகழ்ச்சி. திரும்பவும் ஒரு தரம் மனத்திரையில்.
நீங்களும் கேட்கவேண்டும். கேட்பீர்களோ தெரியாது.
சூரி சார் !! என்று ஒரு குரல்.
யாரது ? கூவுது? என்று கணினியைத் திறந்தால் ...!!!
எனக்கென்றே ஒரு பதிவு இட்டு இருக்கிறார்கள். தனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ... ஒரு மூத்த பதிவர்.
இந்தக்காலத்து மாமியார்கள் மருமகள் பற்றிய சிறப்பாய்வு அங்கே.
மருமகள் கொடுமையாம். திருமணத்திற்கு இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. அப்படின்னு ..அவங்க நோக்கிலே ...
அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.
(தொடரும்.....)
அல்வா அப்புறம் என்ன ஆச்சு?
பதிலளிநீக்குசாப்பிடற பண்டம் எதுவாக இருந்தாலும் தரைலே விழுந்துடுச்சு அப்படின்னா அதை எடுத்து சாப்பிடறது இல்லை.
நீக்குஅது என்னவோ அப்படியே பழக்கமாயிடுச்சு.
சற்று நேரம் கழித்து அதை அப்படியே எடுத்து பால்கனியில் இருக்கும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டேன்.
அது விழுந்த இடம் தான் கொஞ்சம் வழ வழா என்று இருந்தது.
இன்று காலையில் சுத்தம் செய்பவர் வருமுன்னாலேயே அங்கே கொஞ்சம் ஹார்பிக் போட்டு வைத்து இருந்தேன்.
அதனால் மாப் செய்யும்போது அந்த நெய் வழுவழுப்பும் போய் விட்டது.
அடுத்த வாரம் திரும்பவும் முயற்சி தொடரும்
முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.
தங்கள் வருகைக்கு நன்றி.
பாடல்களோடு இணைந்த பதிவு அருமை!!!..எத்தனை எத்தனை செய்திகள்!.. ரொம்பவே சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குசூப்பர் சிங்கர் போட்டியாளர், க்ருஷ்ணனின் பாடலை மீண்டும் பார்க்க/கேட்கக் கிடைத்தது. இது போன்ற குரலோவியங்களுக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் சில சமயம் கொஞ்சம் சங்கடமும் உண்டாகிறது. உதாரணமாக, போட்டியாளர் சாய்விக்னேஷ் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடலை ஒரிஜினலாகப் பாடியவர் திருச்சி லோகநாதன் என்று நடுவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தவர்களில் ஒருவரே சொன்னது. இருந்தாலும் எதிர்கால இசை மன்னர்களின் சாம்ராஜ்யத்தைத் தினமும் பார்க்கிறேன்.
ரொம்பப் பிடிச்ச ஹல்வா இது(இது பேரு காசி ஹல்வான்னும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்)!!!...கீதாம்மா வெள்ளைப் பூசணிலயும் செய்யலாம்னு சொன்னாங்க...ஆனா ஹல்வா கொட்டினது ரொம்பவே வருத்தம்!!!!..
தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குஆயிரம் கடைகளில் அல்வாக்கள் கிடைத்தாலும்
அகமுடையாள் செய்ததுக்கு நிகருண்டோ ?
அதை அறியாமல் நானே செய்யணும் அப்படின்னு
நினைச்சது தான் தப்பு .
அன்னபூர்னேச்வரி அடுத்த வாரம்
அமக்களமா அல்வா பண்ணி
அகமுடையானுக்குத் தரவேண்டும்
(இந்த வீட்டு அர்ணபூர்ணேச்வரி பேரு மீனாச்சி பாட்டி )
சொல்ல மறந்துட்டேன்.
நீக்குஇந்த Agam ஒரு multi faceted personality.
ஸ்ரீ ராகம் பாடி இருக்கிறார்.
பிரும்மா டான்ஸ் அப்படின்னு ஒரு ஆல்பம் வேற.
you may listen when u hv time.
ஆகா
பதிலளிநீக்குஆகா //
நீக்குஎன்ன ஆஹா ?
அல்வாவா ?
அதான் கொட்டிபோச்சே !!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஈ சிகரெட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குசென்னையில் மட்டுமல்ல, மதுரை, தஞ்சையிலும் அதைப் பரங்கிக்காய் என்றே அறிந்திருக்கிறேன்! (நான் அங்கே எல்லாம் இருந்திருக்கிறேனாக்கும்)
பாடல்களை வித்தியாசமான முறையில் இணைத்திருக்கிறீர்கள்! :)) 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' என்று பெண்குரல் பாடும் பாடல் ஒன்றோ என்று போய்ப் பார்த்தேன்! இல்லை இது நி.இ பாடல்!
லிங்க்ஸ் மாயம்!
நீக்குலிங்க்ஸ் மாயம்!//
லிங்கே மயம் என்று சொல்வீர்களோ என்று பார்த்தேன்.
நீங்கள் சொல்வது அந்த ஆஸ்ட்ரேலியன் கதை ..
புரிஞ்சுகிட்டேன்.
எஸ்.எஸ். மாயம் தான்.
என்ன ஒரு காம்பினேஷன்!...
பதிலளிநீக்குஅப்படியே - பாக்கியம் ராமஸ்வாமி அவர்களின் அப்புசாமி - சீதாபாட்டியும் கண் முன்னே!..
இப்படியே நல்லவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் - காலமாவது!... சர்ப்பமாவது!... நூறு ஆயுசு!....
சிரித்து வாழவேணும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
நீக்குஅப்புசாமி சீதா பாட்டி உங்களுக்கும் பிடிக்குமா ?
சூப்பர் கதைகள் இல்லையா அவை.
இன்னமும் அவை அந்த வெப் சைட்டில் இருக்கின்றன.
தேவாம்ருதமாக அல்வா செய்து ஆர்வக்கோளாறில் கீழேயும் கொட்டி..
பதிலளிநீக்குபாட்டின் ருசியில் மறைத்து .... அழகான பதிவுகள்..பாராட்டுக்கள்..!
நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது
நீக்குஅல்வா கண்டிப்பாக உண்டு,நல்ல டிகிரி காபியுடன்.
வரவேண்டும்.
subbu thatha
meenakshi paatti
காசி ஹல்வான்னா வெள்ளைப் பூசணி தான் பார்வதி! :))))) இப்போ அங்கே போயிருக்கிறச்சே கூடப் பார்த்தேன். குடிசைத் தொழில் மாதிரி வீட்டுக்கு வீடு பூசணிக்கொடிகள், காய்த்துத் தள்ளி இருக்கும் பூசணிக்காய்கள். எல்லாமே வெள்ளைப் பூசணி தான்.
பதிலளிநீக்குபறங்கிக்காயில் நம்ம பக்கத்தில் செய்யறாங்க. அதோடு வட மாநிலங்களில் சுரைக்காயிலும் செய்யறாங்க. :))))
சூரி சார், கீழே விழுந்த ஹல்வாவை மறைச்சது சரி! தலையில் விழுந்ததுக்கு என்ன பண்ணினீங்களாம்? நான் வேணா மாமிக்கு ஃபோன் போட்டுச் சொல்லிடவா? :))))
சொல்லுங்களேன். என் போன் நம்பர் தான் உங்களுக்குத் தெரியுமே?
நீக்குதெரியாதா ? இந்தாங்க...
த்வைதம்.
பிரும்மா
சனி பகவன்
ஆறுபடைவீடு
பஞ்சபட்சி
நவகிருஹம்
முக்கண்ணோன்
சிவசக்தி
கண்டு பிடிச்சுக்கோங்க. அப்பறம் முன்னாடி நான் , அதாவது பூஜ்யம்,
ருக்,யஜுர்,சம, அதர்வ.
என்ன கண்டு பிடிச்சாச்சா?
சுப்பு தாத்தா.
//அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.//
பதிலளிநீக்குஹிஹிஹி, படிச்சாச்சா? படிக்கலையோனு நினைச்சுட்டேன். :)))) அவங்க அனுபவம் பதியறாங்க. என்னோட அனுபவம் நான் பதியறேன். உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க.
இன்னிக்குக் காலையில் கூட மாமியார், மருமகள் சண்டை நேர்முக வர்ணனை கேட்க நேர்ந்தது. :( மருமகளின் கையோ ஓங்கி இருந்தது என்பது தான் வருத்தம். இத்தனைக்கும் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உதவிக்கு வந்த மாமியார்! என்னோட உடம்பு சரியாப் போச்சு, இன்னும் ஏன் இங்கே இருக்கீங்கனு மருமகளோட கேள்வி! :((((( என்னத்தைச் சொல்றது!
லோகம் போகிற போக்கு என்னமோ சரியில்லை. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு புரியறது.
நீக்குஇருந்தாலும் , அவரவர்கள் அவரவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
It is always possible to counsel such people rather than advise them.
நேத்திக்கு என் வீட்டுக்கு வந்து தன் சமாச்சாரங்களை பகிர்ந்து கொண்ட கிழவர் ஆனா உங்க கட்சி.
அதெல்லாம் கிடக்கட்டும். நீங்க காசிக்கு போய்ட்டு வர பதிவுலே காபி பத்தி ஒன்னு எழுதி இருக்கேன். பார்த்தீர்களா..?
மருமகள் பக்கத்தில் இல்லாதபோது தானே அவள் அருமை புரிகிறது.
சுப்பு தாத்தா.
ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ்ஸோ, அல்லது நம்மூர் லா.ச.ராவோ எழுதினதுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த எழுத்து. இதை ஸ்ட்ரீம் ஒஃஃப் கான்ஷியஸ்னெஸ் உத்தி - நனவோடை என்று என்று சொல்லுவார்கள். எழுத்தும், இசையும், ஜோதிடமும் கலந்த சுவையான விர்ச்சுவல் அல்வா இது. க்ளாஸ் சுப்பு தாத்தா.
பதிலளிநீக்குகிளாஸ் ரைட்டர் ஆ மாஸ் ரைட்டர் ஆ எனக்கே தெரியாது.
நீக்குஎழுதியதை படிச்சு உடனே வாசகர் சிரிச்சா அவர் மாஸ் ரைட்டர்.
கொஞ்ச நேரம் கழிச்சு புரிஞ்சப்பரம் சிரிச்சா கிளாஸ் ரைடர்.
புரியவே இல்லைன்னா க்ளாசிக் ரைட்டர்.
நீங்க நம்ப மாட்டீர்கள். பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இப்போ தான் எனக்கு புரியுது.
சுப்பு தாத்தா.
ஆகா...! ருசியான ரசனையான பதிவு ஐயா...! வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி டி.டி. நண்பரே.
நீக்குநீவிர் எமது வலைத்தளத்திற்கு வந்த உடன்
சென்னையில் மழை பெய்கிறது.
சுப்பு தாத்தா.
We are more curious of those that are DELETED than those of what we are conscious.
பதிலளிநீக்குஹஹா அல்வா சூப்பர். இதையே நான் கேரட், பீட்ரூட் அல்வா ன்னு செய்த்துட்டு போய் பிரெண்ட்ஸ் கிட்ட குடுப்பேன். ஆனா இங்க அல்வா போச்சே :(
பதிலளிநீக்குreply is also down..See below
நீக்குsubbu thatha.
மயம்தான் மாயமாகி விட்டது! :)))
பதிலளிநீக்குபாட்டிக்கு தெரியாமல் செய்து சாப்பிடலாம் என்று செய்தீர்களா அல்லது சாப்பிட்டு பார்த்துவிட்டு பாட்டிக்கும் தரலாம் என்று இருந்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் செய்த அல்வா உங்களுக்கே அல்வா கொடுத்து விட்டது. நல்ல நகைச்சுவையான பதிவு. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅல்வா எங்கே போயிடப்போகிறது ?
பதிலளிநீக்குதிடீர் என்று நாளைக்கே கிழவி பண்ணி கிழவனை அசத்தலாம்.
நாளைக்கு நல்ல காலம் எனும்
நம்பிக்கையில் தானே
நாடே இருக்கிறது.
சுப்பு தாத்தா.