புதன், 6 நவம்பர், 2013

யார் சரி யார் தப்பு ?

செவ்வாய் கிரகத்திற்கு செவ்வாய்கிழமை அன்று ஒரு செயற்கை கோளை அனுப்பியிருக்கிறார்கள் நமது அரசாங்கம்.
Add caption

ரூபாய் 450 கோடி செலவு தான் . இதனால் என்ன லாபம் என்று நேற்று எங்கள் காலனி வெட்டி அரட்டை கிழடுகள் போட்டி போட்டு வாதித்துகொண்டு இருந்ததில் காதில் விழுந்த சில கருத்துக்கள் விமர்சனங்கள்.

1.  கந்த சஷ்டி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிரார்கள்.

2.  செவ்வாயில் தண்ணீர் இருந்தால் அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரலாம்.

3.  சென்னையில் இட நெருக்கடி முற்றிப்போய் விட்டது.  புதிய பிளாட்கள் அங்கே அமைக்க முடியுமா என்று பார்க்கலாம். '

4.  மன்மோஹன் சார் இன்னும் அங்கு மட்டும் தான்  போகவில்லை.  அடுத்து வரும் எலக்ஷனுக்குள் போகலாமா என்று முடிவு செய்யலாம்.



5. ஹரிஹோட்டாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள்.

6. உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு.

7.  இங்கே இருந்து செவ்வாய்பேட்டை பக்கம் தானே. அதற்கு எதற்கு 450 கோடி செலவாகிறது என்று சொல்கிறாங்க...  பகற்கொள்ளையா தெரியறது ..

8.  இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று ஆளுக்கு ஆள் மந்திரி சபைலே சொல்றாக.  நம்ம எதுனாச்சும் முடிவு எடுத்து இளவரசர் ராகுல் எதுனாச்சும் சொல்லிட்டா ஆபத்து. பேசாம கொஞ்ச நாளைக்கு அங்க போய் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்படின்னு மன்மோஹன் சார் முடிவு செஞ்சா அதுலே என்ன தப்பு சாரே ?

8. இனிமேல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எல்லாருமே நாங்க ஒரு ட்ரிப் போயிட்டு வந்துட்டோம். இனிமேல் செவ்வாய் எங்களை ஒண்ணும் செய்யாது என்றும் சொல்லலாம்.


யார் சரி யார் தப்பு ?
*******************************************************************

இது ஒருபுறம் இருக்க, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிரார்கள் என்று கண்ணீர் விடும் அரசாங்கம் ஆம் ஆத்மிக்காக அல்லும் பகலும் உழைக்கும் இந்த அரசாங்கம் இந்த செலவு செய்யலாமா என்று ஒரு கேள்விக்கு ஐ.எஸ். ஆர். ஓ. நிறுவனம் என்ன பதில் தருகிறது என்பதை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

How does a country with one of the lowest development levels in the world justify spending on a space program?”

 People who are really serious about knowing about this great feat may click HERE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக