ஞாயிறு, 14 ஜூலை, 2013

கிழவன் உளறுகிறான். நீங்கள் கேட்கவேண்டும்


Warning as you start reading:

(கிழவன் உளறுகிறான். நீங்கள் கேட்கவேண்டும்  
  என்ற தேவை இல்லை   கேட்டுவிட்டு நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை என்று தான் எழுதுகிறேன். )

இது நான் ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த படம் அல்லது கார்டூன்.

நாங்கள்  ஏதேனும் ஒரு பொருள் பழுது பட்டால் அதை நாங்கள் தூக்கி எறிவது இல்லை.

இதை கருத்தில் கொணரும்போழ்து இரண்டு உண்மைச்சம்பவங்கள் என் கண் முன்னே விரிந்தன.

அவற்றினை நான் வலை நன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலானேன்.

கடந்த முப்பது ஆண்டுகளில் நான் சந்தித்த இரு குடும்பங்களில் காட்சிகள் இவை:

முதல் நிகழ்வு.

எனது நண்பர் ஒருவர்  மூன்றாம் நிலை ஊழியராக இருந்து பின்  அவருடைய தொழில் முறை தகுதியின் அடிப்படையில் முதல் நிலை ஆபீசராக தேர்வு பெற்று என்னுடன்  கணினி பிரிவகத்தில் ப்ரோக்ராமர் ஆக இருந்தார்.

 அவருடைய சலியா உழைப்பும் பேசும் திறமையும் எல்லோரிடமும் நட்புடன் பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது    அதனாலேயே அவர் வணிக மேலாளர் ஆக திறன் கொண்டவர் என்று சிபாரிசு செய்யப்பட்டது. சிபாரிசு செய்த . அநேகம் பேர்களில் நானும் ஒருவன்.

நாளடைவில் அவர் நிர்வாக பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு பிராஞ்ச் மேனேஜர் என்னும் நிலைக்கு பொறுப்பு தரப்பட்டது.   அவர் சென்னையிலிருந்து தஞ்சை கிளைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சோதனை துவங்கியது.  இறைவனே தந்த சோதனையா ?

ஒரு வாரம் பத்து நாள் என்று தொடர்ந்து பெய்த பேய் மழை காரணமாக அவர் இருந்த மாவட்டம் முழுவதுமே வெள்ளம். ரோடுகளில் மழை நீர் தேக்கம். மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை.  மின்சார தந்தி கம்பிகள் ஆங்காங்கே தொங்கி கொண்டு இருக்கும் நிலை.

சுத்தமான தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இடையூறுகள் பல  இருந்தும் எங்கள் நிறுவனம் அன்றாட வேலையை நிறுத்த இயலாது.

அந்த சமயம் என்று பார்த்து, ஒரு நாள் மேல் அலுவலகத்தில் இருந்து ஒரு மேல் நிலை அதிகாரி அந்த கிளைக்கு ஒரு புதிய கட்டடத்தை தேர்ந்து எடுக்க அந்த ஊருக்கு சென்றார்  . அது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை.


  வந்த அந்த அதிகாரியை கூட்டி செல்லும் வழியில் ஒரு மரம் எனது நண்பர்  கார் மேல் விழுந்தது.  கார் அப்பளம் போல் நொறுங்கியது.  டிரைவர் இடத்தில் அமர்ந்திருந்த எனது நண்பர்  மேலே மரத்தின் அடிவாரம் இடியென  விழுந்தது.

இவர் பலத்த அடிபட்டு காயத்துடன் மூர்ச்சை அடைந்தார்  உயிர் இருப்பது போலத் தோன்றியதால் கிராம வாசிகள் அங்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதில் ,  அங்கு இவரை மருத்துவம் பார்க்க வசதிகள் இல்லை. உடனே திருச்சிக்கு எடுத்து ( கவனிக்கவும் ) செல்லவும் என்ற அறிவுரை.

இவருக்கு தண்டு வடத்தில் பலத்த அடி. அடுத்த சில  மணி நேரங்களில் அவர் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை திருச்சியில் ஒரு பிரபல மருத் துவகத்தில் சேர்த்து ஒன்றல்ல, இரண்டல்ல ஒரு பத்து நரம்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒரு மாத கால கட்டத்தில்.  உயிர் பிழைத்து கொண்டார்.  எனினும் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. தலைக்கு கீழே எந்த வித உணர்வும் இல்லை. 

அறுவை சிகிச்சைகள் ஒரு வாறு முடிந்து உயிர் தப்பிதாயிற்று என்ற நிலையில் அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கும் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன.

சென்னை மற்றும் வேலூர் நரம்பு மருத்துவர்கள் பலர் அவருக்கு சிகிச்சையில் உதவி செய்தனர்.  இருந்தாலும் எந்த வித மாற்றமும் இல்லை.
கை கால் செயல் பாடுகள் முற்றிலும் அற்ற நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் இருந்தார்.

விபத்து நடந்த அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் காப்பு இன்சூரன்சு தந்த உதவித் தொகையை விட அவர்கள் கையில் சேமித்து வைத்த எல்லாவற்றையும், நகைகள், வீடு என எல்லாவற்றையுமே இழந்து விட்டிருந்தனர்.

விபத்து நடக்கும்போது சென்னையில் அவரது குடும்பம். அவர்   மனைவி ஒரு வங்கியில் வேலை. இரு குழந்தைகள். இரண்டும் பள்ளியிலே படித்து கொண்டு இருந்தன.

அடுத்த வருடம்  அதாவது 2002 முதல்  சென்னையில் இருந்து திருச்சிக்கே சென்று விடலாம் என்று அவர்கள் எண்ணியிருந்த வேளையில் நடந்த இந்த விபத்து அந்த குடும்பத்தை சீர் குலைய வைத்தது.

அடுத்த 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அவரால் நடக்க இயலவில்லை.  நிற்க முடிகிறது.   சக்கர நாற்காலியில் அலுவலகத்திற்கு வருகிறார்.  நிர்வாகம் அவரை திரும்ப அலுவலக வேலைக்கே அழைத்து விட்டது அதுவும் ஒரு கருணையின் அடிப்படையில் தான்.  இதுவே தனியார் நிருவனாமாக  இருந்தால் அவர் வேலை போயிருக்கும்.

அவரது மனைவி மனம் தளரவில்லை.  தான் உழைத்து கணவனை அல்லும் பகலும் உடன் இருந்து மனம் தளராமல் பார்த்து கொள்கிறாள்.   தூங்குகிறாளா என்றே சந்தேகம்.   தான் உயிருடன் இருப்பதே தன கணவனுக்கும் குழந்தைகளுக்காகத்தான் என்று நினைக்கிறாள் அவள்.  

வேலூர் புனர் வாழ்வு மையத்திற்கும் சென்னைக்கும் அவள் தந்த டாக்சி, பஸ் செலவுகளே ஆயிரக்கணக்கில் .  அங்கு வேலூர் புனர் வாழ்வு மையத்தில் அவளுக்கு எந்த வித உறுதியோ அல்லது எத்தனை வருடம்  அவர் நட மாட இயலுமென்று யாரெல்லாம் நரம்பு தொடர்புள்ள நிபுணர்களோ அவர்கள் யாராலும் சொல்ல முடியவில்லை இன்னமும். 

இந்த பெண்மணி, இன்னமும் தன கணவனை தெய்வமாக மதிக்கிறாள். உன்னால் எனக்கு கஷ்டம் தான், என விலகிப்போக நினைக்கவில்லை.

இன்னும்  ஒன்று அல்லது  இரண்டு வருடங்களில் மூத்த பெண்ணுக்கு ஐ.டி. யில் ஏதேனும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிடும். அவளும் அமேரிக்கா செல்வாள்.  அப்பாவை விட்டு விட்டு வந்துவிடு, அவரை ஏதேனும் ஒரு இல்லத்தில் சேர்த்து விடலாம் என்று அம்மாவுக்கு அறிவுரை அளிக்கவில்லை. அளிக்கவும் மாட்டாள். 

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை.  
என்னும் குறளுக்கு ஒரு உதாரணம் என்றால் இந்தப் பெண்மணி ஆகத்தான் இருக்கவேண்டும்.


பொருள் ஈட்டும் திறன் குறைந்ததால் கணவனை மதிக்காது அவள் , நான் என்ன செய்யட்டும், என்னையும் குழந்தைகளையும் பார்த்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இரண்டாவது நிகழ்வு.

எனது மேல் அதிகாரி 1987 ல் நான் சந்தித்தவர். மிகவும் கண்டிப்பானவர்.
முதுகலை பட்டம் பெற்றபின் நேரடியாக முதல் நிலை ஆபிசராக வந்தவர் நாளடைவில் மண்டல வணிக மேலாளராக உயர்வு பெற்றவர்.

அவரது குடும்ப சூழ்நிலை அலுவலகத்தில் யாருக்குமே தெரியாது.  சிலருக்கு மட்டுமே தெரியும்.  அலுவலகத்தில் மிகவும் கண்டிப்பான அவர் வீட்டிலோ சாந்த ஸ்வரூபி

ஏன் ? 

அவர் மனைவி தன முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலே ரத்த அழுத்தம் காரணமாக ஸ்ட்ரோக் வந்ததால், நடக்கும் சக்தியை இழந்து விட்டாள். சக்கர நாற்காலியிலே ஒரு வருடம் அல்ல, இருபத்தி ஐந்து வருடங்கள் தன மனைவியை தன குழந்தை போல பாதுகாத்து வருகிறார்.

அவருக்கு அவர் ஊரில் உள்ள செல்வாக்குக்கும், படிப்புக்கும், அழகுக்கும் அந்தஸ்தததுக்கும் இன்னொரு திருமணம் புரிந்து கொண்டு இருக்கலாம்.

திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் எந்த வித இல்லற தாம்பத்திய சுகத்தையும் அனுபவித்திருக்ககூடிய வாய்ப்பு இல்லை.  ஒரு  க ணவனாக, தன புதல்விக்கு அன்புத்தந்தையாக மட்டுமே வாழ்ந்தார்.  மனைவியை அவர் நினைத்து இருந்தால், ஒரு காப்பு இல்லத்தில் சேர்த்து இருக்கலாம். 

அவர் செய்யவில்லை.  கரம் பிடித்து தன் இல்லத்துக்கு அழைத்து வந்த அவளை, அன்று திருமணமான அன்று எத்தனை அன்புடன் இருந்தாரோ, காதலித்தாரோ, அதுபோல் முப்பது வருடம் கழித்தும் அதே நிலை.  தானே காலையில் எழுந்து சமைத்து தன கையால் தன மனைவிக்கு ஊட்டுகிறார்.
வேலைக்குச் செல்லும்போது மட்டும், அவள் துணைக்காக, அவள் உதவிக்காக, ஒரு பெண்மணி நியமிக்க பட்டு இருந்தாள்.

ஒரு ஐந்து  வருடங்களுக்கு முன்பு, அவரது பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவள் தனது கணவருடன் அமேரிக்கா சென்று விட்டாள்.

இங்கு ஒரு நாள். ஒய்வு பெற்ற இவர் திடீரென மனைவிக்கு உடல் நலம் குறைய, அவளை  பக்கத்தில் உள்ள மருத்துவ மனைவிக்கு அழைத்துச் செல்ல இருக்கையில் ஆம்புலன்ஸ் வரும்பொழுது இவர்  திடீரென இறந்து போனார். மாசிவ் ஹார்ட் அட்டாக் என்றார்கள்.

தனது 62 வது வயது  தனக்காக  வாழாது தனது கை பிடித்த , மனைவிக்காக அவள் பெற்ற செல்வக்குழந்தைக்காக வாழ்ந்தவர். 

*********************************************************************

நான் சொன்னது எனது இரண்டு நண்பர்களின் உண்மைக்கதைகள்.
அவர்கள் பெயரை நான் வெளியிட வில்லை. 

இந்தக் கதைகளை நான் சொல்வதற்கு காரணம் இதுவே.

மனைவியோ கணவனோ ஒரு சரி செய்ய இயலாத நோயினால் பீடிக்கப்பட்டும் அவரை தொடர்ந்து ஆதரித்து வரும் கணவன் மார்கள், மனைவி மார்கள் பல இன்னும் உளர் நமது நாட்டிலே.  இதை போற்றவேண்டுமா அல்லது

எனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டும். என்று மனைவியோ கணவனோ நினைத்து தன வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியை ஒரு elders Home காபக்கத்தில் சேர்த்து விட்டு தான் இன்னொரு திருமணம் செய்து கொள்வது இல்லையேல் இப்பொழுதெல்லாம்  வரும் லிவிங் டுகெதர் அமைப்பாக இருப்பதை போற்றவேண்டுமா ? 

Conceding that there could be rare cases as is reported in SOLVATHELLAAM UNMAI in RAJ TV., is it fair on the part of writers to glorify such happenings which are few and far between ?

எந்த ஒரு  சூழ்நிலையிலும் தனது மனைவி அல்லது கணவன் ஒருவரை ஒருவர் எக்காலத்தும்பிரியாது இருப்போம் என்று இருப்பவர்கள் இவர்கள் எல்லாம் பைத்தியக்கார்களோ என சிலர் நினைக்கின்றார்கள்

 A few thinkers assume themselves to be progressive also.

பைத்தியக்கார்கள் என்று சிலர் முடிவெடுத்து அதற்கு ஏற்றவாறு தமது கதைகளை அமைக்கிறார்கள்.

ஒரு பேனா கிடைத்துவிடின் என்ன எழுதலாம் ?

 எது வேண்டுமானாலும் !!

உங்களுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. அல்லவா ?

நிற்க.


ஒரு நல்ல மனைவி ஒரு நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மறைகள் சொல்லுகின்றன. வேதம் சொல்கிறது. மந்திரங்கள் சொல்கின்றன
என்றெல்லாம் சொல்லப்போவதில்லை.

திருமண மந்திரங்களில் சிலவற்றிற்கு திரு என். கணேசன் அவர்கள் இங்கு தமிழில் பொருள் சொல்கிறார்கள். இங்கு கிளிக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு இல்வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவன் சொல்லியதை விட வேறு எவரும் வேறு எவ்விதமாகவும் சொல்லிட முடியாது.

இது தான் நமது பண்பாடு எனப்படுவது :

.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்று தான் வள்ளுவன் சொன்னானே தவிர

அறன் என்ற வார்த்தையிலே பொருள் என்ற பொருள் தொனிக்க அவன் விடவில்லை.  அறன் என்பதற்கு சுகம் என்னும் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அன்பு என்பதற்கு இந்த நவீன எழுத்தாளர்கள் கொள்ளும் பொருளும் என்ன என்று புரியவில்லை.

 ஒரு காப்பகத்தில் என் கணவனை சேர்த்துவிட்டேன் , இனி அவரும் நலமாக இருப்பார், நானும் குஷியாக இருப்பேன். என்பதா. ?
எனக்கு உண்மையில் புரியவில்லை.



திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நல்ல மனங்களும் சுவர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.



தான், தனது இன்பம், தனது வாழ்வு தான் முக்கியம், எனத் தன்னை தான் யாரிடம் இணைத்துகொண்டோமோ அவரிடம் இருந்து தன்னை ஒருவாறு உருவிக்கொள்வது நமது பண்பாடா ? ( Taking advantage of loopholes in the law of the land )

அவ்வாறு உருவிக்கொள்பவர்களை ஒரு  ஹீரோ போல சித்தரித்து எழுதுவது நல்ல எழுத்தா ?


உலகத்திலே எனக்குப் புரியாத அல்லது பிடிபடாத விஷயங்கள் பல இருந்தாலும் அதில் ஒன்று ...

கதை,

பன்மொழிகளில் பலர் பல படிப்புகள் (both art and science )படிக்கிறார்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும்போதும், அங்குள்ள நடப்புகளால், அங்குள்ள சமூக இயல்புகளால், அவர்தம் வாழ்வியல் முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.  நமது நாட்டில் இருந்து சென்ற சிலர் செல்லும் நாட்டு பண்பு முறைகளை , வாழ்வு இயல் முறைகளை பின் பற்றவும் செய்கிறார்கள்.

அப்பொழுது தாம் பிறந்த மண்ணின் பண்பாட்டில் இருந்து விலகி போகும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில், தாம் செய்ததை சரிதான் என சொல்ல வேண்டிய மன அழுத்தமும் உண்டாகிறதோ என
நினைக்கிறேன்

அமெரிக்க மண்ணில் வாழும் பல தமிழர்கள் உணர்வுகள் இன்று தமிழகத்தைத் தாண்டி, தமிழ் பண்பாடுகளைத் தாண்டி பல
கல் தொலைவு சென்று விட்டன.

இங்கு தமிழ் மொழியில் வெளியிடப்படும் சில வார  இதழ்கள்,இவற்றினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது  .   இவற்றில் எழுதும் ஆசிரியர்கள் பொதுவாக, நமது பண்புகளை மதிக்கும் போற்றும் வகையில் எழுதுகிறார்கள்.

 ஆயினும், சிலரது கதைகள் மானுட நெறிகளுக்கே முரணான வகையில் இருப்பதையும்  காண்கிறேன்  பேச்சு சுதந்திரம் , எழுத்து சுதந்திரம் இங்கே இருக்கிறது.

நீங்கள் எதையும் எழுதலாம்.   எதையும் பேசலாம்.

அமெரிக்காவின்  செகரடரி  Secretary of State.  அவர் ஒரு முறை ஐரோப்பாவில் சொன்னாராம். 

 First I thought he was joking. I realized only later he meant it.  Still later conceded the truth behind it.

அமெரிக்காவில் உங்களுக்கு முட்டாளாக இருப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது.
You have a right to be stupid in America , he said, if I remember right, his words  

In America,
 You Have a Right to Be Stupid,’ Kerry Says in Defense of Free Speech


உண்மை.



6 கருத்துகள்:

  1. அவரவர் கருத்து அவரவருக்கு. பொதுவாக இப்போது தான், தன் சுகம் இவை தான் பெரியதாகத் தெரிகிறது. விட்டுக் கொடுத்து வாழ்வது, அநுசரித்துப் போவது எல்லாம் தவறு என்று கற்பிக்கப் படுகிறது. இதற்கு தொலைக்காட்சிகளும் முக்கியக் காரணம். நீங்கள் குறிப்பிட்ட ராஜ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் நாங்கள் பார்ப்பதே இல்லை. ஆனால் பார்ப்பவர்கள் எங்கள் உறவு வட்டத்திலேயே இருக்கின்றனர். இப்போதெல்லாம் ஆன்டி ஹீரோ, ஆன்டி ஹீரோயின் கதைகள் தான் நன்கு விலை போகும். இந்த மாதிரி எல்லாம் சொன்னால் பிற்போக்குத் தனம். :)))))))

    பதிலளிநீக்கு
  2. இங்கு பத்திரிகைச் செய்திகளிலேயே அதிகமாகக் கொலைகள் நடப்பது கள்ளக் காதல் பிரச்னைகளிலும், ஒரு தலைக்காதல் பிரச்னைகளிலும் தான். பத்திரிகைகளும் அவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மொத்தத்தில் moral code என்பது இல்லை. :(((((

    பதிலளிநீக்கு
  3. முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். இனி தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  4. பதிவு முழுக்க நிதானமாக படித்தேன். விபத்தில் சிக்கி தலைக்கு கீழே எந்த வித உணர்வும் இல்லாத, உணர்வற்ற தனது கணவன் மற்றும் குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு பெண். இன்னொருவர், நடக்கும் சக்தியை இழந்து விட்ட தன் மனைவியை. சக்கர நாற்காலியிலே ஒரு வருடம் அல்ல, இருபத்தி ஐந்து வருடங்கள் தன மனைவியை தன குழந்தை போல பாதுகாத்தார்; மகளை நன்கு வளர்த்து கட்டி கொடுத்தார். இரு குடும்பங்களிலும் இங்கே இழையோடி நிற்பது அன்பு ஒன்றேதான். விதியின் கோர விளையாட்டு.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள சுப்பு தாத்தா அவர்களுக்கு


    ஹ ரணி வணக்கமுடன்.

    ஜிஎம்பி ஐயா அவர்களின் வலைப்பக்கத்திற்குப் பிறகு முதிர்ச்சியடைந்த ஒரு வலைப்பதிற்கு (பணியோய்வு பெற்றபிறகு வலைப்பக்கத்தில் எழுதுபவர்கள் வலைப்பக்கத்திற்கு) உங்கள் பதிவிற்கு இப்போது வருகிறேன்.

    உங்களைப்போன்றோரின் அனுபவங்கள் தருகின்ற பாடங்கள். பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் என்றைக்கும் அழியாச் சிற்பங்களாய் இளையோர் மனத்தில் வேரூன்றுபவை. அறிவியலும் நாகரிகமும் எவ்வளவுதான் உச்சத்திற்கு சென்று உயர்ந்துநின்றாலும் இன்றைக்கும் நாம் நமது பண்பாட்டையும் அதன் மணத்தையும் மண்ணின் பிடிப்பையும் விட்டுவிடவில்லை. பெரும்பாலான (99 விழுக்காடு) பெண்கள் இன்றும் எந்தச் சூழலிலும் கணவனையும் கணவன் மனைவியையும் நேசிக்கிற பண்பு மரபின் அழுத்தத்தில் கட்டப்பட்டு இயங்கிகொண்டுதானிருக்கிறார்கள்.

    சனியனே வந்து தொலை.. உனக்கு வைத்தியம் பார்த்தே நான் சம்பாதிச்ச காசெல்லாம் அழிஞ்சிடும்போலருக்கு என்று கணவனும். உனக்கு வாக்கப்பட்டு வந்த காலத்துலேர்ந்து என்ன சொகத்த கண்டேன்.. எப்ப பாரு சீக்கு சீக்குன்னு.. பேசாம செத்துட்டாகூட நிம்மதியா அறுத்துப்போட்டுடுவேன்.. என்று மனைவிமார்களும் பேசினாலும் அவை உள்ளிருந்து வருவதில்லை. காலங்காலமாக பேசிக்கொண்டே தங்கள் நிலையிலிருந்து விலகாமல் இயங்கிகொண்டிருப்பதை ஒவ்வொரு அரசாங்க மருத்துவமனைகளிலும் உள்ள பொது வார்டுகளில் போராடிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கத்தான் முடிகிறது.

    என்னுடைய நண்பர் தன்னுடைய மனநிலை சரியில்லாத மனைவியுடனும் 3 பெண் பிள்ளைகளுடனும் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார். மனைவிக்கு குளிப்பாட்டுவது உடையணிவிப்பது தானே சமைத்துப் போட்டு சாப்பிட வைப்பது என எல்லாவற்றையும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார். இப்போது அவரின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து கல்லுர்ரி படிப்பை முடிக்கும் நிலையில் உள்ளார். இருப்பினும் அலுப்பில்லாது சலிப்பில்லாது இருக்கும் அவரிடம் கேட்டால் சொல்கிறார்.. நான் அவளைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என்னை நம்பி வந்தவள். இத்தனைக்கும் காரணம் அவள் மேல் கொண்ட காதல் என்கிறார். இன்றைக்கும் காதல் என்கிற பெயரில் உடல்வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அருமையான பதிவு.

    இனி தொடர்ந்து உங்கள் பதிவிற்கு வருவேன். மனம் கசிய வைக்கிறது. உணர வைக்கிறது. அனுபவம் மெருகேறுகிறது.

    உங்கள் பேத்தியின் பாடலும் அருமை.

    மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கவேண்டுமா என்பதுபோல இன்றைய யுகததுப்பிள்ளைகள் வெகு அறிவுத்தளத்தில் உச்சத்தில் இருக்கிறார்கள். எதையும் உறிஞ்சிக்கொள்ளும் மண்ணின் தன்மைபோல வாங்கிகொள்கிறார்கள்.
    நன்றிகள் சுப்புதாத்தா.

    பதிலளிநீக்கு
  6. உருக்கமான பதிவு.. என்றும் தனக்காக வாழாமல் தன் Spouse ற்காக வாழும் ஒரு நல்ல மனைவி, நல்ல கணவன்.. புரிதல் இருந்தால் போதும் இல்வாழ்வில் சந்தோசம் நிலைத்திருக்கும்.. இல்லையேல் சிரமம்தான்..

    பதிலளிநீக்கு