Monday, July 8, 2013

A whirlwind tour of Boston by Bus and Boat (Duck Boat on River Charles)

வலை  நண்பர் செல்லப்பன் யக்ய சுவாமிக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லவேண்டும்.

அவர்தான் எனது முதல் பதிவை பார்த்துவிட்டு, சார்லஸ் நதியில் செல்லும் வாத்து படகு பஸ்ஸில் பிரயாணம் செய்து பாஸ்டன் நகரை பாருங்கள் என்று சொன்னார். (please click to know more about the Duck Boat Journey at Boston)

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்  மெய்பொருள் காண்பது அறிவு

 என்ற நியதிப்படி,
அவர் சொல்லைத் தட்டாது, எனது இரண்டாவது மாப்பிள்ளை பாஸ்டன்
நகரத்தில் இருப்பவர், நேற்று சொன்ன அடுத்த வினாடி, கிளம்பிவிட்டேன்.

இங்கிருந்து பாஸ்டன் நகரம் ஒரு நாற்பது மைல் கல் தொலைவே.  ஒரு முப்பது நிமிடங்களில் அங்கு சேர்ந்தோம்.


நீங்கள்
ம்யுசியம் பார்க்கவேண்டுமா, திமிங்கலம் குதிப்பதை விளையாடுவதை காணவேண்டுமா, அல்லது பாஸ்டன் நகரத்தை சுற்றி பார்க்க வேண்டுமா ஒரு பஸ் அதற்காகவே ஒரு படகாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும். என்றார் அவர்.

கூடு விட்டு கூடு பாயும் சித்தர் விளையாட்டோ இது ?

இங்கும் இருக்கிறது . 

பஸ் படகு ஆகிறது. படகு பஸ் ஆகிறது.

ஒரு டாக்சி டிரைவர் எந்த அளவுக்கு தன்னை முன்னேற்றிகொண்டு இருக்கிறார் என்பது நான் முதலில் கண் கூடாக பார்த்தது இங்கே.

பாஸ்டன் நகர 400 வருஷ சரித்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து நமக்கு முன் புட்டு புட்டு   வைக்கிறார்.  1600 ம் வருடம் ஆங்கிலேய மற்றும் ஐய்ரொப்பா மக்கள் இங்கே வந்து குடியேற துவங்கிய காலம், பின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கலோனியல் ஆட்சி, பின் 13 அமைப்புகள் ஒன்று கூடி ஒரு அரசியல் சட்டத்தை கொண்டு வந்து அமெரிக்க சாசனம் எல்லாம் சுத்தமாக சொல்கிறார்.  ஒரு சரித்திர ஆசிரியர் இவர்.

ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு சிறப்பு. அதை காட்டுவதின் ஆர்வம் கொண்டவர் யார் ? கட்டியவர் யார்?  இன்று அந்த கட்டிடத்தில் என்ன செயல் பாடுகள் என்று எல்லாம் இவர் விளக்க நமக்கு ஆச்சரியம்.


ஒவ்வொரு குழந்தையும் அந்த பஸ் கம் போட்டில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து ஒட்டு என்கிறார் அவர்.

என்னுடைய பேரன் உட்பட எல்லாக்குழந்தைகளும் அங்கு உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து தான் தான் ஒட்டுவதாக நினைத்து மகிழ்ந்து போகிறது.
ஆனந்திப்பது செல்வங்கள் மட்டுமல்ல.    அவர் தம் பெற்றோருமே.

ஒரு பரவச காட்சி இது.


கவரச்செய்கிறது.

நாற்சந்தி முச்சந்தி மட்டுமல்ல, மற்ற மூலைகலிலுமே, சிக்னல் சிவப்பாக இருந்தால் அடுத்த முனையிலிருந்து ஏதும் வண்டி வராவிட்டாலும் கார்கள் நிற்கின்றன.
வேங்கட நாகராஜ் தன பதிவிலே தி.நகரிலே அவர் பின்னாடி சிக்னல் ரெட் ஆக இருந்தபோது ஏன்யா இப்படி நின்னுகின்னே இருக்கே அப்படின்னு சண்டை போட்டது நினைவுக்கு வருது.

பாவம் வேங்கட நாகராஜ் .  ரூல்ஸை ஒபே பண்ணினா கூட பின்னாடி வர்றவன் சண்டை போடறான். பேசாம அமெரிக்கா வந்துடுங்க சார்.


சாலை ஓர காதல் காட்சிகள் ஏராளம் ஏராளம்.

ஏ  சர்டிபிகேட்டுக்கு மேலே இருக்கிறது.

நாங்கள் உட்கார்ந்து பெஞ்சிலேயே ஒரு வாலிபன் வாலிபியை தன மடிமேலே வைத்துக்கொண்டு ஜுஜுபி பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

சாதாரண
அடல்ட்ஸ் ஒன்லி இல்லை.  எல்லாமே கஜூராஹோ டைப்.

அப்பாதுரை சார் பார்த்தா அது பத்தியும் அழகா ஒரு கதை எழுதுவார்

அனுபவம் புதுமை. அவளிடம் கண்டேன். ...
பாட்டு பாடலாம் என்று கூட நினைத்தேன். ஆனா என்ன பாடினாலும் அந்த ஜோடி அசஞ்சு கூட கொடுக்காது போல தோன்றியது.நான் எங்கே கஜுராஹோ போனேன் !! இங்கேயாவது
கொஞ்சம் அமைதியா பார்ப்போம் .
அப்படின்னு வராஹ நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்.
என்றால் கிழவி வீடோ போடுகிறாள். சுட்டு எரிப்பது போல் ஒரு பார்வை .

அங்கே என்ன பார்வை !! என்ன பார்வை , என்ன பார்வை ?
வார்த்தையால் சுடுகிறாள்.

பஸ் நிற்கிறது. ஏன் என்று பார்க்கிறோம்.

ஒரு நாய் பெடஸ்ரியன் பாதை வழியே போகிறது.

அதற்குத்தான் முக்கிய சலுகை.

இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
நான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள்.

கசமாலம் ... வீட்டிலே சொல்லிக்கினு வந்துட்டயா ...

நான் மெட்ராஸ் அதாகப்பட்டது சென்னையில் எனக்கு வழக்கமாக கேட்கும்  சௌண்டு  இங்கே காதில் விழவில்லை.

சார்லஸ் நதி. பேக் வாட்டர்ஸ் மாதிரி தான் இருக்கிறது.

நதியிலிருந்து மாபெரும் கட்டடங்கள்எதிரிலே ஒரு போட் வந்தால் எல்லோரும் க்வாக் க்வாக் என கத்துகிறார்கள்.
ஒரே ஆரவாரம்.
ஒரே சிரிப்பு.
குழந்தைகளுக்கு கும்மாளம்.
எனது பேரன் தன கையிலிருக்கும் ஊதலை பலமாக ஊதுகிறான்.
கனோயிங் அப்படின்னு ஒரு விளையாட்டாம். என்னடா அப்படின்னு என் பேரனிடம் கேட்டேன். உங்கக்குப் புரியாது தாத்தா என்றான்.ஓடம் திரும்பவும் ரோடுக்கு வருகிறது.


பிரும்மாண்டமான பாலத்திற்கு ஊடே எங்கள் போட் பிரவேசம்.
யோவ் !!

மெதுவா பாத்து போங்க..

மதில் சுவரை இடிசுடும் போல இருக்கு அப்படின்னு கத்திட்டேன் போல தெரியுது.

அந்த ஜோகர் என்னும் டிரைவர் கம் guide என்னைத் திரும்பிப் பார்த்து 
புன்னகைக்கிறார்.ஹோப் யு ஹாவ் என்ஜாய்டு உவர் ஜர்னி என்கிறார் ஜாகப் ஜோகர் 
எஸ் அப்படின்னு இங்க்லிசிலே பதில் சொன்னேன்.
பெருமையா பெண்டாட்டியைப் பார்த்தேன்.வீடு நோக்கி பயணம்

நாளைக்கு வேல் வாட்ச்.  என்றார் மாப்பிள்ளை.

இங்கேயும் சூர சம்ஹாரம் உண்டா என்றேன் நான்.  

தாத்தா !!  வேல் அப்படின்னா முதலை மாதிரி இருக்குமே திமிங்கலம் ...நீ பாத்ததில்லையா
என்றான் பேரன் பிரணவ்..


நான் உங்க பாட்டியைத் தான் பாத்திருக்கிறேன் என்றேன் நான்.

பாட்டி உன்னை திமிங்கலம் அப்படின்னு சொல்றா தாத்தா என்கிறான் பேரன்.

கொலஸ்ட்ரால் இன்னும் ஜாஸ்தியாகவே இருக்கு அப்படின்னு சன்னமா
சொல்கிறாள் சக தர்மினி.