வியாழன், 11 ஜூலை, 2013

ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில், வெஸ்லி ஸ்ட்ரீட், ஆஷ்லண்ட் 

சுப்பு தாத்தா நேற்று பாஸ்டன் (பக்கத்தில் உள்ள ஆண்டோவர் ) என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மாலை புறப்பட்டார்.

வழி நெடுக மழை. பாஸ்டன் நெருங்க நெருங்க டிராபிக் வேறு கடுமை. சுமார் 40 நிமிடத்தில் போய்ச்சேரவேண்டிய இடம்

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகி விட்டது.

லக்ஷ்மி ஆகியவளாயிற்றே. அவள் அருள் கிடைக்கவேண்டும் என்றால், உழைப்பும் முக்கியம் தானே.


 கீழே இருப்பது ஸ்ரீ லக்ஷ்மி கோவிலின் வலைப்பதிவின் முதற்பக்கம்.
இதை க்ளிக்கி இந்த கோவிலின் விவரங்கள், தினப்படி முறைகளை அறியலாம்.


                                          மஹாலக்ஷ்மி தாயார்
 நடுவில் அமர்ந்திருக்க 
பெருமாள்  அருகில் நின்ற கோலத்தில் திருப்பதி பாலாஜி ஆக கோவிந்தனாக, நாராயணனாக, வெங்கடேச பெருமாளாக திவ்ய தரிசனம் தருவது கண் கொள்ளா காட்சி.

                           கோவிந்தா கோவிந்தா ..நாராயணா நாராயணா .

                              பெருமாளுக்கு எதிரே கருட பகவான்.
          

    மெயின் ஹாலில் இடது வரிசையில்  ஐயப்ப சன்னதி,
   அடுத்து வருவது,

                                                   நூற்றுகணக்கில் சிவலிங்கங்கள்
                                                     ஒரு பெரிய சிவலிங்கத்தின்
                     ஒவ்வொரு தட்டிலும அமர்ந்து சஹஸ்ர லிங்கமாக
                             காட்சி அளிப்பது உலகத்தில் இங்கு தான் என நினைக்கிறேன்.

                                   ஹாலின் வலது பக்கத்தில் சிவபெருமான்
சந்திர மௌலீச்வரராக அன்னையுடன் அருள் பாலிக்கிறார். அதன் கீழே இன்னொரு பீடத்தில்,
       சிவ பெருமான் உருவாக காட்சி மேலே அளிப்பவர் அருவாக காட்சி.

                                பக்கத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான்.

                                                     ஹனுமத் சன்னதி
                                      
                                   பக்கத்தில் நவ க்ருஹங்க்கள்.

                   எந்த ஒரு கோவிலிலும் அமெரிக்காவில், பிரசாதம் ஒரு ஹாலில் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்தில் பேப்பர் ப்ளேட், ஸ்பூன், டிஸ்ஸ்யு பேப்பர்.  கை அலம்பியபின் கைகளை ட்ரையர் ஒன்று கீழே வைத்து காய வைத்துக்கொள்ளனும்.

                 பட்டர் ஸ்வாமிகள் அவர்களுடன் பேச்சு கொடுத்தேன். பாண்டிச்சேரி அவரது ஊராம். இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டாராம்.  அவரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு இந்த வேலை போரடித்து போனது போல தோன்றியது.

       ஒரு தரம் ஊருக்குப் போய்விட்டு வாருங்களேன்.  அதுவரை நான் நீங்க சொல்ற எல்லா ஆசார அனுஷ்டானங்களையும் பண்ணிண்டு இருக்கேன் என்று சொல்ல வாயெடுத்தேன். நீங்கள் சொல்ற மந்த்ராதிகள் தாயார் அஷ்டோத்தரங்கள் எல்லாமும் சொல்வேன். என்று சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.

       ஆகஸ்டு 1ந்தேதி சென்னைலே இருக்கணும்னு நியாபகம் இருக்கா இல்லையா என்றாள் பக்கத்திலே வீட்டு தாயார்.

      விசா தான் 6 மாதத்திற்கு இருக்கே என்றேன். இன்சூரன்சு  2 மாசத்துக்குதானே இருக்கு.  என்று சொல்கிறாள் இவள். தர

     தாயார் நினைச்சா ச்வர்கத்துக்கே விசா தர முடியும்.  பி 1 விசா இல்லை.
சிடிசன்ஷிப்பே        தர முடியும். 

     உங்களுக்கு எலிஜிபிலிட்டி இருக்கணுமே என்று குறுக்கிட்டாள் ஐம்பது வருசத்துணைவி     

     நியாயம் தான் .

    கோவிலில் இன்னும் இரண்டு மணி நேரம் இருந்து பெருமாளை சேவிக்கணும், தாயாரை சேவிக்கணும் என்று ஆசைதான்.

     குழந்தைகளுக்கு பசி வந்துடுத்து. இப்ப கிளம்பினாத்தான் 10 மணிக்காவது
திரும்பலாம் என்கிறார் கூட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை.  சாவகாசமாக
ஒரு நாள் ஞாயிறு அன்று வரலாம் என்றார்

     எந்த சண்டே ?

   ஆகஸ்டு 11 கருட அபிஷேகம். கருட ஹோமம். 10ந் தேதி அன்னிக்கு ஆண்டாள் உத்சவம்.

    தாயார் எங்கும் இருக்கிறாள். நம்மை காக்கிறாள். காப்பாள்.

   


       
                              
     

3 கருத்துகள்:

  1. //தாயார் நினைச்சா ச்வர்கத்துக்கே விசா தர முடியும். பி 1 விசா இல்லை. சிடிசன்ஷிப்பே தர முடியும்.//

    பெர்மனென்ட் சிடிசன்ஷிப்னு சொல்லுங்கோ. அதுக்குத்தானே காத்திட்டிருக்கோம். தாயார் எப்ப கருணை புரிவாளோ?

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்கு. எல்லாக் கோயில்களிலும் அநேகமாக பாதாம், முந்திரி, திராக்ஷை தான் பிரசாதமாகத் தருகிறார்கள். எப்போதேனும் அபூர்வமாகத் தான் மற்றப் பிரசாதங்கள். :))))

    அதே போல் எல்லா இடங்களிலும் கை கழுவிவிட்டுக் கையைக் காய வைக்கும் டிரையரும் உண்டு. ஹைவேஸில் காணப்படும் ரெஸ்ட் ஏரியா உட்பட எல்லா இடங்களிலும், ஹோட்டல்களிலும் கூட இருக்கிறது.

    விசா ஆறு மாசம் என்றால் இன்ஷூரன்ஸும் ஆறு மாசத்துக்குக்கிடைக்கவில்லையா? ஐசிஐசிஐ லாம்பார்டில் ப்ளாட்டினம், கோல்ட் இன்ஷூரன்ஸில் எல்லாமே கவர் பண்ணுகின்றனர். கோல்ட் அறுபதுக்குக் கீழ். சென்ற முறை வரை அதிலே எனக்குக் கிடைத்து வந்தது. ப்ளாடினம் அறுபதுக்கு மேல். இதில் பாஸ்போர்ட், ப்ளைட் டிலேயினால் ஏற்படும் செலவுகள் உட்பட, சாமான் தொலைந்தால், சொந்த நாட்டில் நம் சொந்த வீட்டின் இன்ஷூரன்ஸ் உட்பட அடங்கும்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம். தாயார் எங்கும் இருக்கிறாள். எல்லோரையும் அவளே காக்கிறாள்.
    வெள்ளிகிழமை ஆஷ்லேன்ட் தாயாரை சேவிக்கப் பண்ணியதற்கு கோடி புண்ணியங்கள் உங்களுக்கும், சேவித்த எங்களுக்கும்.

    நன்றி!

    பதிலளிநீக்கு