செவ்வாய், 23 ஜூலை, 2013

நயாகரா நயாகரா என்றால் இவரு வயாகராவா?என்கிறாரே !!

நயாகரா நாளைக்குக் காலைல போகணும் சீக்கிரம் படுங்க.. என்றது கிழவி குரல்.

என்னது வியாகராவா ...என்ன இப்படி காலம் கெட்ட காலத்துலே வயாகர அப்படி எல்லாம் வம்பு புடிச்ச சமாச்சாரமெல்லாம் இவ பேசுறா  ?

 சந்தேகக் கண்களுடன் நான் ....

கருமாந்திரம்... கருமாந்திரம்.

சொல்றத சரியா காதுலே வாங்கிக்கோங்க..

நாளைக்கு நயாகரா நீர்விழ்ச்சிக்கு காலைலே ப்ளைட்டுலே .. லா கார்டியா ஏர் போர்ட்..

ஆஹா..

ஆமாம்.  மாப்பிள்ளை ஆல்ரெடி டிக்கெட் சௌத் வெஸ்ட் லே புக் பண்ணியாச்சு அப்படின்ன்னாரு. இல்லையா.  இரண்டு லக்ஸ். அதாவது இரண்டு பகுதிகளாக, முதல் பகுதி,   லா கார்டியா லேந்து சிகாகோ மிட்வே ஒரு லக். பின்னே சிகாகோவிலேந்து buffalo நயாகர பால்ஸ் ஏர்போர்ட் அடுத்த லக்.

ஒய் நோ டேரக்ட் பிளைட்?  என்றதற்கு...
வீக் எண்ட்ஸ்லே டேரக்ட் பிளைட் $ 700 டாலராம் ஆளுக்கு.
இந்த ரூட்லே அதுவே $ 200 டாலராம் ஆளுக்கு.  என்ன இப்படி ஒரு லாஜிக்கே இல்லயே என்றேன்.  இது அமேரிக்கா என்றார் மாப்பிள்ளை. எவரி திங் டிபெண்ட்ஸ் ஆன் டிமாண்ட் அண்ட் சப்ளை.   இதே டிக்கட் இன்னிக்கு $ 300 டாலர் .

வெள்ளிக்கிழமை வந்தது.

சரியா 4 மணிக்கு ஏர் போர்ட் போர்டிங் பாஸ் வாங்கியாச்சு.  மாப்பிள்ளைக்கு மட்டும் ஏ குரூப்பிலே முன்னாடியே போகலாம். அவரு பிரீக்வேன்ட் பிளையர்
மத்தவங்க.. சி க்ரூப். அதுவும் 55 முதல் 57 பொசிஷன்.

உள்ளே போறதுக்கு கம்ப்ளீட் பாடி ஸ்கானிங்.   பொண்ணுகளை மட்டும் ஸ்கானிங் மெஷின்லே பொண்ணுங்க தான் பாக்குராக.  அப்படிங்கறது தான் ஒரு ஆறுதல் விஷயம்.

ரகசியமா, ஒரு நாலு ஆப்பிள் சாஸ்  கப்பும், நாலு வாடர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்திருந்தேன். இதெல்லாம் லிக்விட் நாட் அலௌட்.அப்படின்னு சொல்லிட்டு, அந்த நாலு ஆப்பிள் சாஸையும் கொஞ்சம் கூட தாக்ஷண்யம் இல்லாம, தூக்கி போட்டுட்டாள் அந்த தாடகை.     வாட்டர்   பாட்டில் எல்லாத்தையும் தூக்கி போட்டுடறாங்க.. அப்படின்னு பார்த்த உடனே நான் ஒரு டிரிக் செஞ்சேன்.  இருக்கற வாட்டரை எல்லாம் நான் குடிச்சுட்டேன். இப்ப என்ன பண்ணுவே ?

ஆனா,  திடீர் அப்படின்னு ஒரு சந்தேகம்.   ப்ளாடர் புல் ஆயிடுச்சே... அதிலே இருக்கற வாட்டரை என்ன செய்யறது !!! அந்த பாட்டில் ஸ்கானர்லே தெரியுமோ தெரியாதோ தெரியல்லையே  !!!

சீடிங்கிலேயும் என்னது வேடிக்கையா கீது.  ஒரே பாமிலி அப்படின்னா ஒரே இடம் கிட்ட கிட்ட கிடையாதா ?

அதெல்லாம் இல்ல.  யார் வேணா எங்க வேனா உட்காரலாம். முதல்லே ஏ கருப்பிலே போறவங்க ஜன்னல் பக்கத்திலே, எயில் aisle சீட்லே உட்காருவாங்க.  பின்னே பி, சி, போறவங்களுக்கு நடு நடு சீட் தான் கிடைக்கிறது.  க்யுவிலே கூட முந்திட்டு முன்னாடி போக முடியாது. நம்ம க்யூ பொசிசன் என்னவோ அதுபடி தான் போகனும்.

நானு, என் வூட்டுக்காரி, பேத்தி. என் பொண்ணு , அவரு அதான் என் மாப்பிள்ளை,ஸோ, அஞ்சு  பேருமே அஞ்சு இடத்துலே உட்கார்ந்தோம்.போட்டி பாக் எல்லாம் எங்க வெச்சோம் என்றே தெரியல்ல.

ப்ளேன் கிளம்பினா மாதிரி ஒரு ரவுண்டு அடிச்சு வந்து நின்னுடுத்து.  என்னடா இது.. அரை மணி நேரமாச்சு, இன்னும் டேக் ஆப் take off ஆவல்லையே... ஒரு வேளை பைலட் ரன் வே லே வண்டிய நிறுத்திட்டு எதிர்த்த கடைலே டீ சாப்பிட போயிட்டாரோ ..  ??

அப்படின்னு நிமிர்ந்து பார்க்கும்போதே... 

அந்த சிகப்பா ஒரு நாப்பது அம்பது வயசு அம்மா ஒருத்தி ஏதோ சொல்றா. என்ன அப்படின்னே புரிய வில்லையே... இங்க்ளிஷா பேசறது..? உருப்படியா ஒரு வார்த்தை கூட புரியல்லையே !!

என்ன சொல்றாக..அப்படின்னு பக்கத்திலே ஒருவர் பில் கேட்ஸ் மாதிரி இருக்கார். அவர் கிட்ட கேட்க அவரைப் பார்த்தேன். அவர் கையிலே தடியா ஒரு புத்தகம் . அதுலே அதுக்குள்ளேயே ஆழ்ந்து போயிட்டார். என்ன புத்தகம் அப்படின்னு பார்த்தேன்.   ஜேம்ஸ் ஸ்காட் எழுதிய டிரை டையிங்  சாக முயல்
கதையை விமர்சனத்தை இங்கே படியுங்கள்.
TRY DYING. by JAMES SCOTT BELL.

என்ன அது.. அபசகுனம் மாதிரி !!!

ஜர்னி துவக்கமே சரியா இல்லையே...!
 நினைச்சுண்டு, சரி, சரி, இதெல்லாமே ஒரு கோஇன்சிடன்ஸ்.

அந்த  அனௌன்ஸ் பன்றாகளே !!
என்ன விஷயம் அப்படின்னு அவர் கிட்ட கேட்க...

ஷி டாக்ஸ் இன் பிரெஞ்ச் . வைட் பார் இங்கிலீஷ் . என்றார்.
வைட்டினேன்.  சிக்னல் கிடைத்து விட்டதாம். இன்னும் இரண்டொரு நிமிடங்களில் டேக் ஆப ஆகும் என்கிறார்.  

ஓஹோ !! இது ஒரு பை லின்குவல்  பிரதேசம். பிரெஞ்சு மொழி பெசுவர்களும் இருக்காக  இல்லையா. அப்படின்னு புரிஞ்சது...

ஒரு தினுசா ப்ளேன் பறக்க ஆரம்பித்தது.

இரண்டு மணி நேர பிரயாணத்துக்கு திங்க ஒன்னுமே இல்லையா. அப்படின்னு நினைக்கும்போது ஒரு ஹோஸ்டஸ் ( என்ன விட கொஞ்சம் 30 வயசு தான் குறைச்சலா இருக்கும். ஆனா ஸ்மார்ட்டுன்னா ஸ்மார்ட். )

ஒவ்வொருத்தரிட்டமும் வந்து என்ன வேணும் அப்படிங்க ட்ரிங்க்ஸ்  ???
வேணுமா அப்படிங்கராக...  நோ டிராலி . அதுவும் இப்ப எல்லாமே இலவசம் இல்ல. மீல்ஸ் எல்லாம் காசு தரனும். அதுவும் டாலரிலே.. நாலு மணி நேரத்திற்கும் குறைவா இருந்தா சின்ன டிரிங்க்ஸ் தான்.

பக்கத்துலே இன்னொருவர் இரண்டு பாக்கெட் சின்னதா  தர்றார். ஒன்னு பிரிச்சேன். கடலை. வறுத்தது.ஹனி நனைத்தது. இன்னொன்னு பிஸ்கட் பிச்சு பிச்சு ஒரு தினுசா அசட்டு தித்திப்பா இருக்கு.  அல்பம், அல்பம். சுத்த அலபமா இருக்காகளே !! ஒரு இரண்டு வடை சமோசா தந்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க.. அப்படின்னு மனசுக்குள்ளே அசை போட்டேன்.


அவங்கவங்க..  வைன் , பீர் அப்படின்னு எல்லாம் சொல்ல ...
நான் வாட்டர் என்று வாட்டமாக சொன்னேன். (  வைன் அதெல்லாம் டாலர் சமாசாரம்)(கையில் ஒரு காசும் இல்லை. கடன் கொடுப்பார் யாருமில்லை. )  ஒரு வேளை சிகாகோ வர்றேன் அப்படின்னு சொல்லி இருந்தால் அப்பாதுரை சார் கொடுப்பார். ஆனால் அவருக்கும் தெரியாது.

இரண்டு மணி நேரத்திற்கு பின் பிளேன்  சிகாகோ வந்தது. சிகாகோ மிட் வே என்று போட்டு இருந்தது.  என்னது ? இன்னமும் சிகாகோ வல்லையா .. நாம்ம எதுவும் நடுவுலே இறங்கிட்டோமா , ப்ளேன் கிளம்பு வதற்கு முன்னாடி திருப்பி ஏறிவிடுவோம் என்றேன் ?

இல்ல.  இது சிகாகோவிலே இன்னும்  ஒரு ஏர் போர்ட்.  பெயரு மிட் வே. சௌத் வெஸ்ட் கம்பெனி ப்ளேன்மட்டும் இல்ல .. எல்லாமே டு நயாகர இங்கே தான் வரும்.

வயறு கப கபா கபகபா ..பக்கத்துலே சீப்ராஸிலே இந்த நேரத்துலே காப்டன் சார் இருந்தா கொஞ்சம் கொறிக்க கொடுப்பார். சனிக்கிழமை எல்லாம் பஜ்ஜி, பக்கோடா கொண்டு வந்து கொடுத்தார். அந்த காலத்துலே.

இங்கே சிகாகோ ஏர்போர்ட்டிலே என்ன செய்யறது?
வீட்டிலேந்து எடுத்துண்டு வந்த தயிர் சாத டப்பாவை காலி பண்ணினேன்.  தொட்டுக்க எழுமிச்ச ஊருகாயை எடுத்து என் மகள் போடுவதற்கு முன்னாடியே சாப்பிட்டு விட்டேன்.

அப்படி என்ன அவசரம் !!  நயாகரா போயி சாப்பீட்டா என்ன ? என்றாள் இவள்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் அப்படின்னு யாருக்குமே தெரியாது.  இதையும் அடுத்த செக்கிங்க்லே தூக்கி போட்டுட்டா கஷ்டம். அதான் நான் சாப்பிட்டு விட்டேன்.  நீ சாப்பிடறது உன் இஷ்டம்.  என்றேன்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் அப்படின்னு சொன்னது... ??? அந்த கிழவிக்கு சுட் ன்னு கோபம் வந்துடுத்து போல..

குரு ரண்டுலே இருக்கான் உங்களுக்கு. ..தத்து பித்துன்னு உளராதீக.  பலிச்சுடும் என்றாள் தர்ம பத்னி.

பலித்த மாதிரி தான் கிட்டதட்ட  அடுத்த  2  மணி  .நேரத்தில் 

இரண்டாவது லெக் துவங்கியது.

மணி 8.30 இருக்கும்.  ப்ளேன் போர்டிங் ஆரம்பித்தது.

ஒரு வழியா சிகாகோ ரன் வே வை விட்டு  ப்ளேன் .மூவ் ஆகும்பொழுது   இரவு 9 மணி ஆகிவிட்டது.

இந்த தடவை பகவான் அனுக்ரஹ த்தாலே கிட்டத்தட்ட எல்லோருக்கும் பக்கத்து பக்கத்துக்கு இடம். முக்கியமா,  நான், இவ, மாப்பிள்ளை ஒரு சைட்லே.என்று. பொண்ணும் அவ பொன்னும் பின் சீட்டிலே.


விமானம் ஒரு 25000 அடி உயரத்தில் சென்ற போது சிகாகோ நகரமே  ஒரு அலங்கார தேவதை மாயா புரியோ கந்தர்வ லோக  மாதிரி தோன்றியது. நண்பர் திரு கோபால கிருஷ்ணன் அவர்கள் வீட்டு நவ ராத்திரி கொலு நினைவுக்கு வந்தது. வெல் ஆர்கனைஸ்டு .   என்ன அழகான ப்ளாண்டு சிடி  இந்த சிகாகோ என்று வியந்தேன். 

 Disciplined Planning brings about more than ninety percent of the Desired Results.

 என்று மனேஜ்மெண்ட் பார்லன்சுலே சொல்வார்கள்.  இத பார்க்கணும். புரிஞ்சுக்கணும்

. ( நம்ம ஆட்களுக்கு முனிசிபாலிடி வாடர் கூட சரியா சம்ப் வரைக்கும் கொண்டு வர தெரியல ... கஷ்டமாத்தான் இருக்கு . Reality is too hard to swallow. )

இது மாதிரி ஒரு சிடி கூட இந்தியாவில் ஏன் இல்லை ?  இதோடு ஒப்பிட்டால்  நியூ யார்க் கூட கொஞ்சம் ஜிக் ஜாக் ஆகத்தான் இருக்கிறது.

அடுத்த ஒரு மணி நேரம் ....
அதிர்ச்சியோ அதிர்ச்சி.  !!!!

ப்ளேன் நடுங்கற மாதிரி ஒரு பீலிங்.   ஒண்ணுமில்ல.. இது மேகங்களுக்குள்ளே போகும்போது இருக்கற வாபிளிங் தான். என்று எடுத்த எடுப்பில் நினைத்தேன்.

ஒரு அஞ்சு பர்செண்ட் தான் அதில் சரி.
வழியில் ஏரியல் ரூட்டில் தண்டர் ஸ்டார்ம்.
நயாகராவில் தண்டர் ஸ்டார்ம்....
 பைலட்டால் இறங்க முடியவில்லை.
ப்ளேன் சுத்தி சுத்தி பபலோ நகரை  கொல கொலயா முந்திரிக்காய், நரியே நரியே சுத்தி வா என்று வருது.  அப்ப அப்ப ஒரு பக்கமா சாயுது. திடீர் அப்படின்னு ஒரு சில செகண்டுகள் கீழே 5000 feet  டிராப் ஆனது இல்ல ஆனது போல தோன்றியது.  ஒரு அமெரிக்க பெண்மணி, என்று கத்தி விட்டாள்.

நான்...  
மனசுக்குள்ளே திகில் தான்.  ஜன்னலுக்கு வெளிலே  பளிச் பளிச் செகண்டுக்கு அஞ்சு தரம்.

சாதாரணமா,  மின்னல் இடி எல்லாமே தலைக்கு மேலே   ஆகாயத்திலே தான் தெரியும்.  இங்கேயோ நம்ம உட்கார்ந்து இருக்கிற ப்லேனுக்குக் கீழே பக்கத்திலே மின்னல் ...மின்னல்...தண்டர் மின்னல்.

பயம் என்னை ஒரு ஸ்வைன் ப்ளூ போலத் தொட்டது. கையைப்பிடித்தவளின் கையைக் கொஞ்சமாய்ப் பிடித்தேன். நல்ல வேளை !  இவள் என் பக்கத்தில் இருக்கிறாள். என்று தைரியம் வேறு. 

நான் பயப்படுகிறேன் என்று அவள் உணர்ந்திருப்பாள் என நினைத்து அவளுக்கு தைரியம் சொல்ல, நான்
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. என்று வள்ளுவர் சொல்லியிருக்கார். என்றேன்.  நாம் அஞ்சி அஞ்சி சாவதை விட அஞ்சாது உயிர் விடுவது மேல் பாரதியார் சொல்லியிருக்கார் என்றாள் தர்ம பத்னி.பாரதியார் தானா வேற யாரா என்று யோசிக்க இப்ப நேரம் இல்ல.

வெளிலே பாருங்கோ என்றார் மாப்பிள்ளை. ஜன்னல் வழியே பார்த்தேன்.பிரும்மாண்டமான ப்ளேனுக்கு  இறக்கைக்கு பக்கத்திலே தான் நான் இருக்கேன். சைடுலே கீழே பலமான இடி மின்னல்கள் . தெரிகின்றன.  பளிச் பளிச் பளிச்..

டோன்ட் வொர்ரி மாமா, . பைலட் இஸ் அவாய்டிங் த தண்டர் ஸ்டார்ம் ரூட்.  சுத்திண்டு போறான் போல  இருக்கு, ஒரு வேளை பிட்ஸ்புர்க் பக்கமா இருக்குமோ என்னவோ அப்படின்னு சொல்றார் மாப்பிள்ளை.

 பைலட் அப்படின்னு சொல்றவா கிட்டே நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் இல்லையா ..என்று ஒரு சந்தேகமா அவரைப்பார்த்தேன்.

ஜெனரலி எஸ் என்று ஒரு ஹார்ட் பீட்டை கம்மி பண்ணினார்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்த உளமே புகுந்த அதனால்,
 ஞாயிறு, திங்கள், செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி, சனி பாம்பிரண்டும் உடனே ....
மாசறு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே ...
என்று  கோளறு பதிகத்தை சொல்லி முடித்தேன்.

திங்கள் முதல் சனி முடிந்துவிடும் ஆனால் ப்ளேன் இறங்காது போல் இருந்தது.   வெளிலே பார்த்தா மின்னலான மின்னல்.ப்ளாஷிங்க்.
 ப்ளேனோ வாப்ளிங்..

எதற்கும் இருக்கட்டும் என்று. ...

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம். உருவரகம் இவபந்தனாத்
 முக்ஷ்யோ முக்தி இவ மாம்ருதாத்.

அப்படின்னு

ம்ருத்யுஞ்சய மஹா மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்தேன்.  உருவாரகம் அப்படின்னா விலாம்பழமா வெள்ளரிப்பழமா அப்படின்னு வெங்கடராமன் சாரோட டிஸ்கஸ் பண்ணினது நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு பழம். இன்னிக்கு எந்த பழமா இருந்தாலும் சரி.

உசிரு போற போது சட்டுன்னு போயிடனும். சிரமப்படக்கூடாது வெள்ளரி பழத்திலே இருந்து ஓடு பிரியராப்போலே இந்த உயிரும் உடலை விட்டுட்டு உடனே ஓடிப்போகனும்..   பகவானே அப்படின்னு த்யானம் பண்ற ஸ்லோகம். அது.

மரண பயம் இருக்கே அது தான் வெல்லப்பட வேண்டிய ஒன்று. மரணம் அல்ல.  இன்னிக்குத் தான் அந்த ஸ்லோக மகிமையே முழுக்க  புரியறது.

ப்ளேன் துடர்ந்து நடுங்கறது.
கால் டு க்ரூ
டேக் பொசிஷன்ஸ்
என்று ஒரு  சத்தம். யாரோ ஆர்டர் போடறா.. அதட்டரா மாதிரி ஒரு சத்தம்.
எங்கும் நிசப்தம்.


மாப்பிள்ளையும் லேசா சிரிக்கிறார்.  ஒன்னும் ஆகாது மாமா  கவலை படாதீக.. என்கிறார்.

லைப் போட் எங்க இருக்கு அப்படின்னு சுத்தி பார்க்கறேன். சீட்டுக்கு கீழே இருக்கிறது.  ஒரு வேளை நயாகரா மேலேயே இறக்கிட்டானனு என்ன பண்றது ?  இப்பவே எடுத்து கட்டிக்கலாமா என்று கேட்கப்போனேன் மாப்பிள்ளையை.    என்னை  இவள் அடக்கி உட்கார வைக்கிறாள்.

 ஏதாவது ஆயிடும் அப்படின்னா எல்லாருக்கும் பார சூட் தருவாளோ ? இல்ல என்ன மாதிரி கிழம்கட்டை இதுக்கு   எல்லாம்  எதுக்கு  ?? எப்படியும் போற கிராக்கிதானே அப்படின்னு அம்போன்னு விட்டு விடுவாகளோ ?
தெரியலயே என்றேன்.

 ஊட்டுக்கிழவியோ என்ன அப்படி ஒரு பயம்.   தைரியம் புருஷ லக்ஷணம் இல்லயோ ?? இரு நூறு பேரு உட்கார்ந்து இல்ல?  அவாளுக்கு என்ன நடக்குமோ அது தானே நமக்கும் ? என்று சொல்ல.. 

அவாளுக்கும் எதுவும் நடக்கக்கூடாதே என்று நான் முருகனை  பிரார்த்திக்க, அதைக் கேட்டு முருகன் பிரத்யக்ஷமாய் வந்து, டேய் ! சூரி !! 
அந்த கன்னபிரானோடு சேர்ந்து சொல்லாத நாள் இல்லை, சுடர் மிகு வடிவேலா அப்படின்னு நீயும் பாடினே இல்லையா  அத நான் மறந்துவிடுவேன் என்று நீ நினைக்கலாமா என்று அந்த முருகப்பெருமான் நினைக்கணுமே அப்படின்னு உருகி போய் நான் நிற்க.....ப்ளேன் இறங்க முடியலே அப்படின்னாலும் சிகாகோவிக்கே  திரும்பிடலாம் இல்லையா என்று இழுத்தேன். நான் வேணா காக்பிட்டுக்குள்ளே போய் பைலட்டு கிட்டே கேட்கட்டுமா ...???   சரி, அப்படின்னு அவா நினைச்சாலும், மனசு இருந்தாலும்,  சபிஷயண்டா SUFFICIENT பெட்ரோல் இருக்குமோ இருக்காதோ அப்படின்னு ஒரு சந்தேகம். சோ ஐடியாவை டிராப் செய்தேன்.

மீனாக்ஷி தாயே !! காப்பாத்தும்மா .!!  கவிநயா பாட்டுக்கு அத்தனைக்கும் நான் தான் மெட்டு போட்டு இருக்கேன். உனக்கு தெரியாதா !!  சொக்க நாதா !! நீ கொஞ்சம் அட்வைஸ் பண்ணு அப்பனே ..

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.. 
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாற்றவர்க்கும் இறைவா போற்றி.

 மெட்ராசுக்கு போன உடன் எவரி பிரதோஷத்துக்கும் இனிமே கயிலை நாதா கபாலீச்வரா!! உன்னை பார்க்க வறேன். அப்படின்னு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் அப்படின்னு பார்த்தபோது செல் லிலே கனெக்ஷன் இல்லாது போக...

நம்ம நயாகர பாக்கத்தானே வந்தோம்.
ஸ்ட்ரைட் ஆ    நாராயணன் கிட்டயே போயிடுவோம் போறோம் போல இருக்கே... என்றேன்.

அப்பன்னு பார்த்து வீல் அப்படின்னு ஒரு சத்தம்.
ஹார்ட் ஒரு செகண்டுக்கு நின்னுட்டு திரும்பவும் ஸ்டார்ட்.
என்னதுன்னு பாத்தா ஒரு சின்ன குழந்தை அழறது.   எனக்கு முன்னாடி ஒரு சீட்லே ஒரு சின்ன அமெரிக்க அம்மா (லேசா த்ரிஷா மாதிரி ஒரு ஜாடை, , என்ன இருந்தாலும் ரசிக்கிற சூழ் நிலையா !! ) அதே ஆரீராரோ பாட்டு அவங்க ராகத்துலேபாடுறாங்க... நல்ல குரல். சுப்ரானோவா மெஸ்ஸோ சுப்ரானாவோ அதுலே மனசு போகலே ...

டிங்..டிங்...
ஒரு அனவ்ன்ஸ்மெண்ட் ஒலிப்பெருக்கியில்.  அதுவும் பிரெஞ்சில் முதலில்.
ப்ளேன் இறங்கும்போது கொஞ்சம் பம்பிங் bumping இருக்கும். பயப்படாதீங்க. அப்படின்னு சொல்றாக... என்றார் இவர்.

 மை ஹார்ட் ஏற்கனவே பம்பிங் ஹார்டு. இதுல ப்ளேன் வேற BUMPING ஆஆ ?

தண்டர் ஸ்டார்ம் கடந்து போச்சாம்.  அப்பாடி.  B.P. 200/180 லேந்து திரும்பவும்
140/80 க்கு வந்தா மாதிரி ஒரு உணர்வு.பீலிங்.
அதற்குள்,  ப்ளேன் லேண்ட் ஆகத் துவங்கியது.

50 நிமிச பிரயாணம் 2 மணி 30 நிமிடத்தில் முடிந்தது.  கொட்டும் மழையிலே ப்ளேன் லேண்ட் ஆனது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காம தமிழ் சினிமா ஆண்டி க்ளைமாக்ஸ் மாதிரி அவ்வளவு ஸ்மூத் லாண்டிங்.

 ஒரு வேளை தண்ணீர்லே இறங்கிடுத்தோ ?
 நயாகரா பால்ஸுக்கு நடுவிலே இறங்கிடுத்தோ ? இல்லை. தரைல தான் இறங்கி இருக்கிறது. அப்பாடா !! பெரு மூச்சு ஒன்று விட, வேகமா டயர்லே ஓடற பீலிங் வருது..     ஹார்ட் ரேட் நார்மலுக்கு வருது.  ஹாண்ட் பாக்லே இருக்கற பிள்ளையார்பட்டி பிள்ளையாரை போட்டோ வை எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்ள தேடுகிறேன்.  ஹாண்டு பாக் எங்கேயோ காணோம்.

ப்ளேன் கம்ஸ் டு எ ஹால்ட்.

சக பிரயாணிகள் எல்லோரும் கோரஸ்  ஆ கை தட்டுகிறார்கள். சைமல்டேனியஸ்ஸா .இட் வாஸ் எ டிலைட் டு வாச்.

 பைலட்டுக்கு தாங்க்ஸ் சொல்ல்றாக.
நம்ம ஊராய் இருந்துச்சுன்னா ஆளுக்கு ஆள்... என்ன செய்வாக..?  நான் சொல்லணுமா ?

 சிலர் காட் ப்ள்ஸ் அஸ் ஆல் என்கிறார்கள்.   ஒருவர் முகத்திலாவது ஒரு சின்ன பயம் கூட இப்ப இல்லை.

Why Fear When I am Here
ஒய் பியர் வென் ஐ ஆம் ஹியர் ...
பாபா சொன்னது நினைவுக்கு வர்றது.
இப்ப மனசுக்கு வருவதெல்லாம் பத்து நிமிசத்துக்கு முன்னாடி வல்லையே !!


யாமிருக்க பயமேன். 
பாபா சொல்றார் இல்லையா. !!
அவர் கூட வந்திருந்தா சொல்வாரோ என்னவோ ? இல்லை, அவரும்
ஒரு வேளை கூட வந்திருக்கிறாரோ என்னவோ ?

எப்படியோ...
அப்பாடி....
மாந்துரையான் காப்பாத்திவிட்டான்.

பல ஸ்ருதி

சீக்கிரம் வாங்க.. ரெண்டல் கார் காரன் ராத்திரி 12 மணிக்கு மூடிடுவான். கடையை. என்று சொல்கிறார் மாப்பிள்ளை.

மூடிட்டா.. இங்கேயே ஏர் போர்டிலேயே படுத்துக்கலாமா ?
முடியாது.  இங்கே ஒரு ஹோட்டல் எடுத்து ஸ்டே பண்ணனும்.

எகைன், எம்பெருமான் துணை இருக்கார்
எம்பெருமான் எங்கே தூங்கிடப்போராரோ என்று அவர் மார்பிலே தாயாரும் இருக்கா. 

நான்தான் தினப்படி ராஜேஸ்வரி வலைக்குப் போயிண்டு அவங்க சொல்ற சாமியெல்லாம் பிரார்த்திச்சுண்டு , பாடிண்டு இருக்கேன் , எனக்கொரு ஆபத்து கண்டிப்பா வராது அப்படின்னு எனக்கே ஒரு சமாதானம் சொல்லிக்கறேன்.

ராகு பகவான் நாலுலே  இருந்தா மனக் க்லேசம் டிராவல் போதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா  எனக்கோ என் ஜாதகத்திலே ராகு பகவான் பதினிரண்டு இடத்துலேயும் இருக்கப்போலே இன்னிக்கு ஒரு பாவனை.

************************
இந்த தண்டர் ஸ்டாரமில் கீழே விழுந்த ஒரு மரத்தை அடுத்த நாள் நாங்கள்
நயாகரா நதி பக்கத்தில் பார்த்தோம்.

 
 மற்ற படங்களும் வீடியோக்களும் அடுத்த பதிவில் வரும்.
****************************************************************************

ரெண்டல் கார் எடுத்துண்டு இந்த பபலோ நகரிலேந்து ஒரு நாப்பது மைல் தொலைவிலே இருக்கும் நயாகரா பால்ஸ் நகருக்கு கிளம்பினோம்.  வழி நடுக
மழை.  சில இடங்களிலே கார்லே போட்டிருக்கிற ஜி. பி. எஸ்  கூட   ஒத்துழைக்க வில்லை. அதுக்கெல்லாம் கூட ட்யூடி அவர்ஸ் உண்டோ என்று வியந்து போகிறேன்.  இல்லை, மின்னல் இடி நேரத்திலே சிக்னல் சரியா கிடைக்காது. இப்ப கிடைச்சுடும் ..என்கிறார் மாப்பிள்ளை.
உத்தேசமா இதுதான் ரூட் அப்படின்னு மாப்பிள்ளை வண்டி ஓட்டறார்.

 மெதுவா போங்கோ அப்படின்னு மெதுவா சொல்றேன்.

வருஷம் முழுவதும் அவர் மழை, பனிலே தானே வண்டி ஓட்டறார் ...அவருக்குத் தெரியாதா. என்கிறாள் இவள்.  மிதமாகவும் சொல்லணும் அதையும் ஹிதமாகவும் சொல்லணும். இது அவளோட பாலிசி.

சஞ்சு ( என் பேத்தி ) எங்கே என்று பாத்தேன்.
இத்தன அமர்க்களம் நடக்கறது.  இந்த சின்னப்பொண்ணு மட்டும், அந்த புஸ்தகத்திலே முழுகி இருக்கு.  இந்த கையிலே ஒரு பிரெஞ்சு ப்ரை. அந்த கையிலே ஒரு பொஸ்தகம். அது தான் இன்றைய பிஞ்சுகளின் உலகம்.
என்ன புஸ்தகம் .அது ?  ஜோடி பிகால்ட் எழுதிய பத்தொன்பது நிமிடங்கள்.
கதையின் சாராம்சம் இங்கே.

வந்தாச்சு வந்தாச்சு
எது ?
ஹாம்டன் இன் .
அப்படின்னா ?
இதான் ஹோட்டல்.  த்ரீ  ஸ்டார் .

மொத்தம் ஸ்டார் பதி மூணு இல்லயோ என்றேன்.
அது அமெரிக்க தேசக் கொடிலே தாத்தா.  ...இது த்ரீ  ஸ்டார் ஹோடல் என்றாள் என் பேத்தி.

நயாகராவின் சரித்திரத்தை இங்கே படிக்கவும்.


Around Twenty Percent of ALL Fresh Water in the World flow at Niagara River and Falls.

வீராணம் லேந்து சென்னைக்கு பைப் போட்டவங்க , இங்கேந்து ஒரு பைப் போட்டு தமிழகத்துக்கு தண்ணி கொண்டு வர முடியுமா ?
தெரியலயே !!!
தொடரும்.....

மாந்தரால் உருவாக்கப்பட்டதா  பனி மலை மேகங்கள் ???!!!!


 
நயாகரா இந்த வேகம் என்றால் சுவர்க்கத்தில் இருந்து அந்த கங்கை கீழே விழும்போது என்ன வேகத்தில் இருந்திருக்கவேண்டும் ?

பகீரதனால் முடியாது என்பதினால் தான் சிவன் தன தலையைக் கொடுத்தாரோ ?

நயாகரா சிவன் கோவிலில் ஒரு சிறப்பு. என் திகைப்பு. 

அடுத்த பதிவில்.

நயாகரா என்றால் இவரு வயாகராவா?என்கிறாரே !!

19 கருத்துகள்:

 1. நான்தான் தினப்படி ராஜேஸ்வரி வலைக்குப் போயிண்டு அவங்க சொல்ற சாமியெல்லாம் பிரார்த்திச்சுண்டு , பாடிண்டு இருக்கேன் , எனக்கொரு ஆபத்து கண்டிப்பா வராது அப்படின்னு எனக்கே ஒரு சமாதானம் சொல்லிக்கறேன்.

  ரணகளத்திலும் ராஜேஸ்வரி வலைக்குப் பிரார்த்திச்சுண்டு , பாடிண்டு --- திகில் அனுபம தான் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் காலை காபி சாப்பிட்ட பின் முதல் லே பார்ப்பதே உங்கள் வலைதானே ! அப்பறம் தான் ஹிந்து பேப்பர்.

   அறம். ஆன்மிகம். இறை வணக்கம்.
   ஜகத்துக்கே மணி அடிச்சு எழுப்பறீங்களே !!
   உங்களை எத்தனை வாழ்த்தினாலும் தகும்.

   ஆசிகள்.
   சுப்பு தத்தா.

   நீக்கு
 2. என்னங்க நயாகாரவுக்கு இப்படி ஊரைச்சுற்றி போன ஆள் நீங்கள் மட்டும்தான் இருக்கனும்... ஏன் இப்படி சுத்தி போனீங்க என்று எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. நீங்கள் வசிக்கும் நீயூஜெர்ஸியில் இருந்து காரில் போனால் 8 மணி நேரம்தானே ஆகி இருக்கும்

  நீங்கள் சொல்லியபடி விமானத்தில் போய் இருந்தாலும் இவ்வளவு நேரம் ஆகி இருக்குமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. We had in fact considered all the options, including the train route that really fascinates us as we travelled from Metro Park to Boston a few days ago.
   The first reason of course was the base price of the direct flight. For us, that was too heavy .Secondly, I had wondered whether I could bear the strain of having my legs down for a pretty long time, say six to seven hours, as they of late swell, owing to AO factor. I am almost seventy three, u know.
   Thanks for your visit and kind comments.
   BTW, ur nick name is MADHURAI THAMILAN ! I started my career at Madurai only in 1961 .
   subbu thatha.
   www.subbuthatha.blogspot.com
   www.Sury-healthiswealth.blogspot.com

   நீக்கு
  2. உங்கள் வயது 73 ஆ ஆனா உங்கள் போட்டோவை பார்க்கும் போது(உங்கள் நீயூயார்க் தியோட்டர்விசிட்) நீங்கள் யங்கமேனாகத்தான் இருக்கிறீர்கள்


   வாழ்க வளமுடன்

   நீக்கு
 3. உங்கள் நயாகரா அனுபவம் வயிற்றை கலக்கும் அனுபவமாக அல்லவா உள்ளது. நயாகராவை நன்றாகப் பார்த்தீர்களா? இத்தனை ரனகளத்திலும் உங்களுக்கு பதிவுலகம் வேறு நினைவு வந்திருக்கிறதே!
  சூப்பர் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை. நாங்கள் தப்பித்தோம்.
   இதே சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் லா கார்டியா ஏர்போர்ட் லே
   நாங்கள் திரும்பி வந்ததும் அந்த போர்ட் தான்.
   நேற்று லேன்டிங் போது ஒரு வில் உடைஞ்சு போய், விமானிகள் உட்பட 10 பேர் காயம்.
   இங்கன மேற்கொண்டு விவரம்பாருங்க


   http://www.huffingtonpost.com/2013/07/23/southwest-laguardia-airport_n_3637609.html

   அடுத்த நாள் சனிக்கிழமை பபலோ நகரத்திலே சிவன் கோவில் போயிட்டு அன்னிக்கு பிரதோஷம் வேற . சிவனையும் தர்சனம் பண்ணிட்டு, ஹனுமாரையும் சேவிச்சுட்டு பின்னே தான் நயாகரா போனோம். அந்த விவரம் இன்னொரு வலைலே நாளைக்கு பதிவாகிறது. அதையும் பார்க்க வேண்டும்.
   சுப்பு தாத்தா.
   www.subbuthatha.blogspot.com

   நீக்கு
 4. Glad that you reached safely. Your narration style has no parallel.(I went by car from NJ which took only about 8 hours.We took Canadian Visa and stayed in Niagara for 3 days.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. We had a plan like that also. Owing to some constraints mostly physical we had to drop the idea and return.

   Thank U so much for your visit and comments.
   Please visit my other blog www.subbuthatha.blogspot.com
   for my visit to Niagara Shiva temple and the continuing journey to falls.

   subbu thatha.
   www.subbuthatha.blogspot.com

   நீக்கு
 5. உங்களுடன் நாங்களும் திக் திக் என்று பயணம் செய்தோம். நயாகராவையும் உங்கள் பார்வையில் படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் எங்கேயாவது ஒரு இடத்தில் விபத்து ஏற்படத்தான் செய்கிறது. நேற்று இதே ப்ளேன் ஏர்லைன் லா கார்டியா வில் விபத்து ஏற்பட்டு 10 பேர் காயம்.

   விமான விபத்துகள் சாலை விபத்துகள் மாதிரி சகஜமாகி போய் விட்டது. நம்ம அதிலே பாதிக்கப்படவில்லை என்பது தான் ஆறுதல் தரும் ஒரே விஷயம். Please see our visit to Niagara further narrations in my other blog
   www.subbuthatha.blogspot.com
   tomorrow.
   சுப்பு தாத்தா.

   நீக்கு
 6. உடன் பயணித்த பயம்
  எங்களையும் தொற்றிக் கொண்டது
  பயணம் தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. மீண்டும் ’’வாஷிங்டனில் திருமணம்’’ - படித்த மாதிரியான மகிழ்ச்சி!.. என்ன ஒரு துள்ளல் நடை!... அருமை!... ஆனந்தம் - எல்லோரும் நல்லபடியாக கரை - தரை சேர்ந்தமைக்கு!...அப்புறம் -
  நினைப்பவர் மனமே கோயிலாகக் கொள்பவன் இறைவன்.
  ///யாமிருக்க பயமேன். பாபா சொல்றார் இல்லையா. !!
  அவர் கூட வந்திருந்தா சொல்வாரோ என்னவோ ? இல்லை, அவரும்
  ஒரு வேளை கூட வந்திருக்கிறாரோ என்னவோ ?// பாபாவும் உங்கள் கூட வந்திருந்தார்.

  பதிலளிநீக்கு
 8. இது தான் அதிர்ஷ்டமா!.. தங்கள் ரசிகர் மன்ற ஜோதியில் ஐக்கியமாக வந்தால் - எனக்கு முன்னே - அன்புக்குரிய ஹரணி, அன்புக்குரிய ஜெயக்குமார் - மூவருமே - தஞ்சை. என்ன பொருத்தம் !.. இப்பொருத்தம்!.. ஆக, அன்பின் அடையாளங்களாகிய எல்லாரும் - வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக. வணக்கம்.
   தருக. தங்கள் மேலான எண்ணங்கள் என்னை
   உருக வைக்கின்றன. முப்பது வருட சிந்தனைகளை
   பருக ஒரு வாய்ப்பு மறு முறையும்.

   நன்றி.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
 9. எல்லாம் சரி ஐயா. கறுப்புப் பின்ணணியில் நீலத்திலும் - கத்தரிப் பூவிலும் எழுதுவதை விடுங்க. ஒன்றும் தெரியவில்லை. அவற்றை வாசிக்கவே இல்லை.
  நன்றாகப் பயமாய் இருந்தது. விமான ஆட்டம். தொடருங்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு