Monday, June 24, 2013

அவள் கொள்ளை அழகு.

ஹட்சன் நதி கிழே குடைந்து வடிவக்கப்பட்ட ஒரு பாலத்தின் வழியே நியூ யார்க் நகரத்தை ஒரு காரில் பயணித்த காணொளி.
 இன்று ஒரு தியேட்டருக்குப் போய் ஒரு நாடகம் பார்க்கப்போகிறோம் என்றார். என் மாப்பிள்ளை.  நியூ யார்க்கில் பிராட் வே என்னும் தியட்டரில் அதில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் WICKED என்னும் நாடகம்.
OZ என்பவர் எழுதிய நாடகங்களில் இருந்து ஒன்று.  witches of oz என்னும் நாடகங்களில் ஒன்று இது. இந்த கதையை படிக்க இங்கே செல்லவும். 
 பச்சை மா மலை போல் மேனி என்று பச்சை வர்ணத்தை புகழ்ந்து மன மகிழ்ந்து பாடும் நாம், அதே பச்சை நிறத்தில் நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் எந்த ஒரு மன நிலைக்குச் செல்வோம்?


19ம் நூற்றாண்டு சூழ்நிலையில் ஒரு நாடகம். ஒரு வணிகனை மணந்த ஒரு பெண் , கருவுற்ற நிலையில், கணவன் தந்த ஒரு பச்சையான   வர்ண பானத்தை குடிக்கிறாளாம்.

அதன் பிறகு அவளுக்கு பச்சை நிறத்தோலுடைய ஒரு பெண் மகவு பிறக்கிறதாம். .  அதைக் கண்ட துணுக்குற்ற கணவன் தன மனைவியைப் பிரிந்து செல்கின்றான். 

ஊராரோ அந்தக்குழந்தை,  பெண் பிசாசு, துர் தேவதை, witch  எனக்கூறி அவளை ஒதுக்குகின்றனர்.அப்பா, அந்த கணவனைக் குற்றம் சொல்லாதே என்று எச்சரிக்கிறார் என் மகள். உண்மை கொஞ்சம் கொஞ்சம் என்ன ரொம்பவே வேற...

அந்த பிறந்த மகவுக்கு அப்பா உண்மையிலே அந்த ஊர் வணிக கவர்னரே இல்லையாம். உண்மையான தகப்பன் ஒரு விசார்டு. wizard.  அம்மாவே கடைசி வரை தன்  பெண்ணிடம் அப்பா யார் எனச் சொல்லவில்லை. கடைசியில் அந்த பெண் அந்த விசார்ட் உடன் தன்னை காதலித்தவனுடன் சென்று விடுகிறாள்.
அந்த காலத்திலேயே ஆங்கில படங்களை பார்த்து விட்டு ஆளுக்கு ஆள் ஒரு கதை சொல்லுவோம்.

பத்து வருடங்களுக்கு மேலாக இந்த நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. லட்சகணக்கான மக்கள் இதை கண்டு ரசித்து இருக்கின்றனர். இன்னமும் இந்த நாடகம் நடக்கும் அரங்கினிலே கூட்டம் அலை பாய்கிறது. முக்கிய வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர். 

 ஒவ்வொருவர் திறனும் ஒவ்வொரு விதம்.  இதுவரை பிலியன் கணக்கில் இந்த நாடகக் கம்பெனி லாபம் ஈட்டி விட்டதாகச் சொல்கின்றனர்.

இந்த கதை அவ்வளவு சுவாரசியம் என்று சொல்ல இயலாவிடினும், இதில் எல்பாபா ஆக கிளிண்டா ஆக நடிக்கும் புகழ் பெற்ற நடிகையர் காதி சாந்தென் மற்றும் காட்டி ரோசி கிளார்க் ஆகியவரின் நடிப்பு, வியக்க வைக்கிறது.

 ஆர்செஸ்ட்றா அமைப்பாளர் பிரியான் பெர்ரி, இசை வல்லுநர் மைக்கேல் கெல்லர் அவர்களின் திறமை , ஒலி ஒளியின் அமைப்பு எல்லாமே பிரம்மாண்டம். நம்மை பிரமிக்க வைக்கிறது. இரண்டாவது பகுதி முதல் பகுதியை விட அதிக ம்யூசிகல். கிட்டத்தட்ட ஒரு நூறு வாத்தியக் குழவினர் திரை அரங்கின் கீழே அமர்ந்து தமது திறமைகளை நமக்கு கண்கூடு ஆக காண்பிக்கின்றனர்.பெண் குரல்கள் எல்லாமே மெஸ்ஸொ சுப்ரானோ வில் அமைந்திருந்தது. கிட்டதட்ட எல்லாமே கிளாசிகல். ஒரு பாட்டின் மெலடி பொழுது மட்டும் எனக்கு இந்துஸ்தானி கிளாசிகல் நினைவு வந்தது.
ஆண் குரல் ஒன்று சோகத்தில் ஒலித்த பொழுது எனக்கு சைகாலும் கண்ட சாலாவும் நினைவுக்கு வந்தனர்.

காதற்சுவையிலே    சிருங்காரம் சுவர்க்கம் . எனின்,
 சோகத்தில் பிழிந்து எடுத்த சங்கீதம் உண்மையிலே சுகம்.

( காதல் + சுவை ) = காதற்சுவை. 
அப்பா + துரை = அப்பாதுரை .  அப்பாத்துரை இல்லை.


இந்த நாடகம் வசனம் எனக்குத் தொடச்சியாக புரியவில்லை என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் காது தான் பிரச்சினை என்கிறாள் பெண். இல்லை, தாத்தாவுக்கு இந்த உச்சரிப்பு புரியவில்லை என்கிறாள் பேத்தி.

 பேசப்படுவது எளிய ஆங்கிலம் தான் எனினும் நாம் முக்கியமாக இந்தியர் பேசும் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடைவெளி அதிகரித்து விட்டது.   நாடகம் முடிந்தபின் வெளி வந்தபோது எனது பேத்தி வரிக்கு வரி என்ன வசனம் என்று சொல்கிறாள் .  காரணம் இந்த உச்சரிப்பு .  வசனத்தை அல்லது கதையை நமக்கு முன்னமேயே தந்து இருந்தால் நல்லதோ !

கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் எனது ஆங்கில ப்ரொபசர் பாதர் சிக்வீரா என்னை தொடர்ந்து ஒரு லெக்சரராக பணி புரிய தன விருப்பத்தை சொல்லி இருந்தது நினைவுக்கு வர,  எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டேன் என்று சொல்லிகொண்டேன்.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே ஒரு சில துளி வினாடிகள் கூட இல்லை. எப்படி இவ்வளவு அலர்ட் ஆக நடிகர்கள் ,மற்றும் சப்போர்ட் ஊழியர் அனைவருமே ஒரு டீம் ஆக செயல் படுகிறார்கள் என்பது அதிசயமாக இருக்கிறது.  நம்ம நாட்டு பப்ளிக் செக்டார் லீடர்ஸ் எல்லாருக்கும் ஒரு டீம் என்றால் எப்படி செயல் படவேண்டும் என்று சொல்வதற்கு ஒரு செயல் முறை விளக்க பாடம் இதுவே. A perfect Lesson for Team Management Indeed !

முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் ஒரு ஸ்டாண்ட் பை வைத்து இருக்கிறார்கள்.  இன்று நடித்த க்ளிண்டா பாத்திரத்தில் நடித்த நடிகை ஒரு இரண்டு ஆண்டுகட்கு பிறகு இன்று தான் நடிக்கிறாராம்.  அவர் நடிப்பைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.  கிளிண்டா கண்களிலே அவர் பாத்திரமே பிரதி பலிக்கிறது. அவர் குரலிலே அந்த பாத்திரத்தின் இதயம் தெரிகிறது.

.

இந்த நாடகத்தின் கட்டணம் ஒரு நபருக்கு 110 டாலர்  நாங்கள் முதல் பால்கனியின் பக்க விளாகத்தில் அமர்ந்தோம். அங்கு தான் சேர்ந்து ஐந்து பேருக்கு அமரும் இடம் கிடைத்தது. இத்தனைக்கும் முதல் நாளே என் மகள் ரிசர்வ் செய்து இருந்தாள். . திரை அரங்கில் சுமார் 1500 பேருக்கு மேல் அமர்ந்திருக்க இயலும். திரைக்கு நேர் வரிசையில் அமர்ந்திருக்க 200 டாலர். மேடை அருகே அமர 300 டாலர் வரை கட்டணம். எல்லோருக்கும் எந்த எந்த இடம் என்று முன்னமேயே கணினி மூலம் பதிவு செய்து விடுகிறோம்.

தியேட்டரின் உள்ளே செல்லும் வழியில் நமது பையில் உள்ள எல்லாவற்றையும் பரிசோதித்த பின்பு தான் நம்மை அனுமதிக்கிறார்கள்.
எங்களை மட்டும் ( பாவம் டா !! வயசானவங்க..எஸ்கலேடர் கூட முடியாது. இந்தா பா.. இவுகளை மட்டும் அந்த லிப்ட் லே கூட்டியண்டு போய் அந்த இடத்திலே உட்கார வச்சுடு என்று ஒரு பொறுப்புள்ள பெண் அலுவலர் எங்களை அழைத்துச் சென்று விட்டார்.)

என்ன ஒரு காட்சி  அரங்கத்திலே !! இது நமது நாட்டிலே காண இயலாத ஒன்று.   இதை பற்றி சில வார்த்தைகள் கூறினால் நல்லது என நினைக்கிறேன்.

காட்சிகள் நடக்கும்பொழுது எந்த வித சத்தமோ,சீழ்க்கையோ, விசில் சத்தமோ இல்லை. நாடகத்தின் ஒரு காட்சி முடியும்போது தான் கரங்கள் ஒலிக்கின்றன
காட்சி நடக்கையிலே நடுவில் எழுந்து போதல், முன்னே பின்னே உட்காருபவருடன் சண்டை, சீண்டல் இது போன்று எதுவுமே இல்லை. .

வந்திருந்தவர்கள் பல்வேறுஇனத்தவர்  நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றே நினைக்கின்றேன.  அங்கேயும் பற்பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றனவாம்.  நடிகர்களுக்கும் யூனியன்கள் இருக்கின்றன.சில குறிப்பிட்ட நடிகர், நடிகையர் நடிக்கும்போது டிக்கட் கிடைப்பது கடினம் என்று சொல்கிறார்கள்.

அனைவரிலும் காணப்படுவது ஒரு ஆர்டர்லினஸ்.( தமிழில் என்ன சொல்வது ? அப்பாதுரை சார். ஹெல்ப் ஹெல்ப்..) இது நமது திரை அரங்குகளிலோ அல்லது நாடக அரங்குகளிலோ காண இயலாத ஒன்று.


காமிராக்கள், செல், புகைப்பட கருவிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்குமே உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. எந்த ஒரு விதத்திலும் காட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ காமிராவில் படம் எடுக்க முடியாது.ஒரு அழகான பாடல்  அந்த நாடகத்திலிருந்து. இதோ யூ ட்யூபுக்கு நன்றி. : இதில் நடித்த க்ளிண்டா பாத்திர நடிகை வேறு. நான் பார்த்தவள் வேற. அவள் கொள்ளை அழகு. ( நல்ல வேளை .கிழவி பக்கத்திலே இல்ல நான் எழுதும்போது.)

பாப்புலர் ஆவது எப்படி?  ஒன்றுக்கு மேற்பட்ட ரகசியங்கள்.
அவசியம் இந்த
விடியோவை பாருங்கள்.
அந்த காலத்து ராஜ மாணிக்கம் நாடகம் பார்த்து இருக்கிறேன். மனோகர் நாடகமும் பார்த்து இருக்கிறேன். அதிலே இருக்கும் டெடிகேஷன் என்னை வியக்க செய்து இருக்கிறது.

நாடகம்  நடக்கும் கால கட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் என்றால் மிகையில்லை.