Sunday, June 23, 2013

சுப்பு தாத்தாவின் புதிய வலை இது. படம் ஒன்று. தியேட்டர் இரண்டு.

  சுப்பு தாத்தாவின் புதிய வலை இது.

   எனது மனதுக்கிசைந்த நண்பர்கள் திரு இளங்கோ அவர்கள், திரு திண்டுக்கல் தனபாலன்    அவர்கள் , வலையை கூகிளில் இணைப்பதால் வரும் இடர்கள் பற்றி எழுதியிருந்தார்கள்.

   திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்த இடர்கள் எல்லாமே சரி.   திரு  இளங்கோ அவர்கள் கூகிள் ப்ளஸ் இணைப்பு இல்லாதவர்கள் பின்னூட்டம் இட இயலவில்லை என்று    குறிப்பிட்டதும் சரியே.  என்னாலும் சிலர் வலைக்குச் சென்று பின்னூட்டம் இட இயலவில்லை.
 
    கூகிள் லே ஒரு கணம் இணைத்து விட்டு மறு கணம் அந்த இணைப்பை துண்டித்து பழைய     நிலைக்கு வருவதும் இயலாத காரியம் போல இருக்கிறது.

   அதனால் என்ன செய்வது என்று ஒரு கணம் திகைத்து நின்றாலும், அடுத்த கணம் சுதாரித்து,    என்ன செய்யவேண்டும், என யோசித்ததில்,

   பிரச்னைக்கு தீர்வு ( த் உண்டா இல்லையா ! புணர்ச்சி விதி என்ன ? ) உண்டு.பிரச்னைக்குத்தீர்வு காணும் வழியில்,


சந்தடி சாக்கிலே பவனந்தி முனிவர் புணர்ச்சி விகுதி பற்றி நன்னூலிலே என்ன எழுதியிருக்கிறார்   என்று பார்ப்போம்.


பவணந்தி முனிவர்.
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ 240
பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ 242
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ 242
பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம்
புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை
வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும் 243
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ 244
எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும் 245
எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை
தள்ளி நிரல் ஏ தம் நும் சார
புல்லும் உருபின் பின்னர் உம் ஏ 246
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல 247
ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ 248
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ 249
வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ 250
சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ 251
அத்தின் அகரம் அகர முனை இல்லை 252
இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ 253
விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ 254
இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ 255
புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும் 256
இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ 257

  மேலும், புணர்ச்சி என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம்
தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ 151
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி
தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ 152
விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ 153
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும் 154
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி 155
ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ 156
ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும் 157 
 அதை புரிந்து கொள்வது சுலபம். வழி நடப்பது அவ்வளவு சுலபமல்ல.
  தமிழை அதாவது மரபுத்தமிழை விடுத்து,  இலக்கண மரபுகளைத் துறந்து,
  மக்கள் பேசும் மொழியிலே பேசுவதையே எழுதவும் துவங்கி விட்ட இக்காலத்திலே இலக்கணத்தமிழை   போற்றுவதன் ஒரே வழி அதன் படி எழுதுவது தான் என்று என் போன்றவர்கள் சொல்வதைவிட‌ உயர்திரு புலவர் இராமானுசம் அவர்கள் மரபுக்கவிதைகளை உன்னிப்பாக, உற்சாகமாக, உவகை பெருகிடவே   படிப்பவர் எல்லோருமே உணருவர்.

  என்னைப்பொறுத்த அளவில்,

  இல்லறத்தே புகுந்த ஒரு ஆடவனும் பெண்ணும் இணைந்து நிற்பரோ அது போன்ற இரு சொற்களை இணைப்பது   எழுதுவதே புணர்ச்சி விகுதியின் அடிப்படை என்று சொல்லலாமா என்று திருமதி சசிகலா அவர்கள் தான் சொல்லவேண்டும்.

    அன்பும் அறனும் உடைத்த இல்லறம் எவ்வாறு ஒளி பெறுகின்றதோ அது போலவே இரு தமிழ்ச் சொற்கள் ஒன்றோறொன்று இணைவின் அது தமிழின் அழகைக் கூட்ட வல்லதாம்.

********************************************************************************
   கூகிள் சார் !  நீங்க பாயிலே உள்ளே நுழைஞ்சா நான் கோலத்துக்குள்ளே புகுவேன் என்னும்    பழமொழி சொல்லிய வாறு,

   இன்று ஒரு புது வலை.  ஆனால் அதே பதிவு.  அதாவது சுப்பு தாத்தா ப்ளாக்ஸ்பாட்டில் காணும் அதே    பதிவு இங்கேயும். ஆனால் கூகிள் லே இணைக்கப்படாதது.   கூகிள் ப்ளஸ்ஸில் இணையாதவருக்கு
   உபயோகமாக.  எப்படி எனின்,

    புதிய   வலைக்குள்  வாருங்கள்.