வெள்ளி, 8 மே, 2015

கொன்னா பாவம் தின்னா போச்சு..

 கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..


ன்ன இது..காலை லேந்து  தேஞ்சு போன ரிகார்டு மாதிரி ஒரே வரி சொல்லிகினே இருக்கீக.... 

என்றாள் என் இடப்பக்க வாசினி. 

ஆமாம். உலகத்துலே பொதுவா ஒரு எண்ணம் இருக்கு. எதை செஞ்சாலும் எந்த பாவச் செயல் செய்தாலும்  பண்ணிட்டாலும் அதற்கு ஒரு பரிகாரம் செஞ்சா பண்ணினா சரியா போயிடும் அப்படின்னு...

நானும் பார்க்கறேன். எந்தத் தொழிலிலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமோ ?

எல்லோருமே சேர்ந்து செய்யும்போது அநியாயமும் நியாயம் ஆகிவிடுகிறது. போகிற போக்கிலே அதுவே விதியும் ஆகிவிடுகிறது. அது தான் சட்டமோ என்ற பிரமையும் ஏற்படுகிறது இல்லையா...

சம்பாதிக்கிற வயதிலே, செய்யக் கூடாதது எல்லாம் செய்து, பணம் சேத்துடராங்க  .. பின்ன சேகரித்த  பணத்தினாலே அவங்களுக்கு  எந்த ஒரு நிம்மதியும் கிடைக்காத போது, சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை, அத தானம் தருமம் அப்படின்னு செலவு பண்ணி, தனது பாவத்துக்கெல்லாம் ஒரு எஸ்கேப் ரூட் தயார் பண்ற மாதிரி, நீர் மோர் பந்தல், ஸ்கூல் காலேஜ் படிக்கிற பசங்களுக்கு ஸ்காலர்ஷிப், வாரத்திலே ஒரு நாளைக்கு தரும வைத்தியம், போதாக் குறைக்கு காசி, கயா , ராமேஸ்வரம். 

ஆமாம். சிலர் பார்க்கிற பார்த்த உத்தியோகத்துக்கும் அவக சேத்து வச்சு இருக்கற சொத்துக்கும் சம்பந்தமே இல்லை. 

அவுங்களுக்குத் தெரியாதா இது மாதிரி சம்பாதிப்பது எல்லாம் பாவம் அப்படின்னு ?

அதுக்குத்தான் ஒரு எஸ்கேப் ரூட் இருக்குதுல்ல..  பரிகாரம் அப்படின்னு..

இருந்தாலும் ??


அது சரி. இன்னாதான் பாவம் அப்படின்னு எதுனாச்சும் ஒரு லிஸ்ட் இருக்குதா என்ன ?

ஏன் இல்லாம !! ஒவ்வொரு மதத்திலும் அவங்கவங்க மத கோட்பாடுகள் பத்தி சொல்லி இருக்கிற புத்தகத்திலே எது எல்லாம் கொடிய பாவம் அப்படின்னு சொல்லி இருக்காக..
ஆமா.. உதாரணமா, கிருஸ்துவ மதப்படி, 

There are six things the Lord hates, seven that are detestable to him: haughty eyes, a lying tongue, hands that shed innocent blood, a heart that devises wicked schemes, feet that are quick to rush into evil, a false witness who pours out lies and a man who stirs up dissension among brothers” (Proverbs 6:16-19).

காம, குரோத, லோப, மோக , அஹங்கார இதெல்லாம் பாவம் அப்படின்னு சீக்கிய தர்மம் சொல்லுது. இங்கன பாரு.  விளக்கமா எழுதி இருக்காக. 



புத்த மதத்திலே சொல்லுவது.


The five most serious offenses in Buddhism. Explanations vary according to the sutras and treatises. The most common is (1) killing one's father, (2) killing one's mother, (3) killing an arhat, (4) injuring a Buddha, and (5) causing disunity in the Buddhist Order. It is said that those who commit any of the five cardinal sins invariably fall into the hell of incessant suffering. 
  1. Injuring a Buddha
  2. killing an Arhat
  3. Creating schism in the society of Sanghaரு 
  4. Matricide
  5. Patricide

கருட புராணத்திலே ஒரு பெரிய லிஸ்டே போட்டு இருக்காங்க.. அதப் படிச்சா மூச்சு வாங்குது...நீயே படிச்சுக்க...

அப்படியா !!!  இதான் அந்த லிஸ்டா ?

மனித சமுதாயத்துக்கு அப்படின்னே பொது லிஸ்ட் ஒருவர் எழுதி போட்டு இருக்காரு. 

யாருங்க..


வள்ளலார் இராமலிங்க அடிகளார். 



அப்படியா..!!

அவர் எழுதி இருக்கிற பாவப் பட்டியல்  இதோ படிக்கிறேன். கேளு..

சத்தமா படிங்க...



நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 

ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!

அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!





பட்டியல்  விரிவா இருந்தாலும் விளக்கமா  இருக்குதே !! எதுனாச்சும் ஒண்ணுலே  எல்லாருமே மாட்டிடுவாங்களே !!

ஆமா..
வள்ளுவர் ஒன்று சுருக்கமா, விளக்கமா 
சொல்லியிருக்காரு. 

எது பாவம் அப்படின்னு சொல்லாது, அறவழி செல்லவேண்டும் அப்படின்னு சொன்னா, எதெல்லாம் தவிர்க்கப்படவேண்டியது என்று சொல்லி இருப்பது 
தெளிவா இருக்குதுல்லே !!

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

ஒரு விஷயம் பார்த்தீகளா ?

என்ன ?

இந்த நாலுலே முதல் மூன்றும் எண்ணங்கள் ஆக மனதிலே தோன்றும் . அப்பவே அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சுடணும். விட்டீங்க அப்படின்னா, அடுத்த நாலாவது இன்னாச் சொல் என்பது , எண்ணங்கள் என்ற நிலையில் இருந்து சொல் ஆக உருவெடுத்து,  மாறுது கவனியுங்க..

ஆமா..

இந்த சொல் என்னும் நிலையில் இருந்து எண்ணங்கள் செயல் உருவம் எடுக்கும்போது , அந்த இன்னாச் செயல் பாவம் ஆக கருதப்படுகிறது.


அப்ப, சொல்லிப்போடுங்க.. இன்னாச் செயலை செய்யக்கூடாது. அத செஞ்சுட்டு, என்ன பரிகாரம் என்ன பரிகாரம் என்று தேடி அலைவதில் அர்த்தம் இல்லை. 

வூட்டுக்காரி  எப்பவுமே கரெக்ட். 
********************************************************************************************************
********************************************************************************************************
**********************************************************************************************************


If negative thoughts, insecurities, doubts come into the mind, chant Om Namah Shivaya. This itself will put you on the right track. What was meant to happen, happened. Move on. - Sri Sri Ravi Shankar

Wisdo

5 கருத்துகள்:

  1. ஜெயின் துறவிகள் எல்லாம் மயில் பீலியால் சாலையை சுத்தம் செய்தபடியே நடப்பார்களாம். எறும்பு, புழு போன்ற சிறு உயிரினங்கள் கூட தங்களால் பாதிக்கப் படக் கூடாது என்று! அவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பாவம் வந்து சேர்ந்து விடுகிறது.

    ஆனால் பரிகாரம் என்று சொன்னாலாவது முடியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏதோ ஒரு நல்ல செயல் நடந்தால் சரிதான்! அவர்களுக்கு உதவி கிடைத்தால் சரிதான்!

    :)))

    பதிலளிநீக்கு
  2. பாருங்க தாத்தா... அவங்க சொல்றது எப்பவுமே கரெக்ட்த்தான் நடக்குது...! எப்படி...?

    பதிலளிநீக்கு
  3. திரு சுந்தர்ஜி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  4. சரிதான் ஐயா!.. வள்ளலாரின் வாக்கியங்கள் - தன் மகனை இழந்த மனுநீதிச் சோழனின் புலம்பலாக வரும்.. படிக்கும் போதே - மனம் நடுங்கும்..

    பழிபாவங்களைச் செய்து விட்டு பரிகாரங்களுக்காகக் கோயிலைத் தேடி வருவோரைக் கண்டு - பகவானும் தன்னை ஒளித்துக் கொள்வதாகக் கேள்வி!..

    பதிலளிநீக்கு
  5. தெரிஞ்சோ தெரியாமலேயோ இதில் ஏதாவது ஒன்றை செய்யவேண்டி வரும். அதற்கு கூடிய சீக்கிரம் ஒரு வழி பண்ணலாம் என்றிருக்கிறேன். அப்புறம் எந்த பாவமும் செய்யமுடியாது.

    பதிலளிநீக்கு