வெள்ளி, 24 ஜனவரி, 2014

மிச்ச நாலு பூதம் யாருன்னு தெரியல்லையே...

பஞ்ச பூதங்கள்  தெரியுமாங்க ?

சௌண்டு எங்கேந்து வருது ?  திரும்பினேன்.

அடடா.. கேட்டது  மீனாட்சி பாட்டி, alias  நம்ம  வூட்டுக்கிழவி.

இன்னிக்கு  என் வாயை புடுங்க நினைக்கிறா ..

என்னன்னு தெரியல்லே..
எதுக்கும் பஞ்சாங்கத்தை பார்த்தேன். இப்ப  ராகு காலமோ ?

எனக்கு உன்னை மட்டும் தான் இந்த அம்பது வருசமா தெரியும்...
மிச்ச நாலு பூதம் யாருன்னு தெரியல்லையே...

என்றேன் வெகுளியாக..சுப்பு தாத்தாவுக்கு வெளுத்ததெல்லாம் பாலு.

மிச்ச நாலும் உங்களோட தானே புறந்திருக்கு என்று முணுமுணுத்தவள்
தொடர்ந்து,

நான் கேட்டது  பஞ்ச பூதம் அப்படின்னா பைவ் எலிமென்ட்ஸ் என்ன என்ன ?

அப்பு, தேயு, வாயு, ப்ருத்வி, ஆகாசம். பளிச் ன்னு பதில் சொன்னேன்.



அப்பு அப்படின்னா வாட்டர். தேயு  வாயு என்று எதை சொல்றாக ?

எனக்கு  பத்து செகண்டு லேசா கன்பியூசன் .

நீர், நெருப்பு  காற்று நிலம் ஆகாயம் என்று   எல்லாம்

இவளுக்குக்கூட வயசான காலத்துலே பகவத் த்யானம் அப்படின்னு
மனசுக்குள்ளே  தாகம் வந்துச்சா  ?

 நானும் சுதாரிச்சு, .

நீருக்கு திருவானைக்கோவில், நிலத்துக்கு திருவாரூர் ( காஞ்சிபுரம் ) நெருப்புக்கு திருவண்ணாமலை, காத்துக்கு காலஹஸ்தி, ஆகாயத்துக்கு சிதம்பரம் அப்படின்னு பஞ்ச பூத ்தலங்களைப் பற்றி பேசவா சொல்றே..! 

என்ன திடீர்னு ஒனக்கு ஈஸ்வர பக்தி கண்ணுலே கொப்பளிக்கிறது !!  ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா, தர்மா மீட்டர் எடுத்துட்டு வரட்டுமா என்று பல விதமா சகதர்மிணியை உபசரித்தேன். 


அதெல்லாம் நீங்க போயிட்டு வாங்க. உங்களுக்கு வர புண்ணியத்திலே  தான் எனக்கு பாதி உண்டே.. நான் எதுக்கு தனியா சிரமப் படவேணும் ?

அதானே பார்த்தேன். 

எனக்கு பக்தி முக்தி அப்படின்னு  சொல்லிட்டு உங்க மாதிரி பாட்டு பாடி, பரவசமாயி , பட்டினி கிடக்கிற சக்தி கிடையாது.

பின்னே ?

பஞ்ச பூதத்திலெ காற்று இருக்குதுல்லெ !

ஆமாம். 

அந்த   ஒரு வார்த்தைலே  எத்தனை பாட்டு இருக்கு ? அத்தனையும் கேட்கணும் போல தோணிச்சு.

அதிலே எது நல்லா கீது ?.
அதான் கொஞ்சம் உங்களை.   ...   என்று துவங்க,

அரை குறையா அத காதிலே வாங்கிட்ட நான்,

என்னாலே இந்த வயசுலே அதுவும் ஒன்னை கொஞ்சரதா !! இம்பாசிபிள்.

அய்யய்யோ !! என்னை கொல்லாதீங்க ...  கொஞ்ச நேரம்  காற்று  பத்தி  பேசலாம் னு சொன்னேன்.
நானே ஆரம்பிக்கிறேன்.

காவிரி ஆத்துப் பாலத்துலே ஒரு நாளைக்கு நடந்து போன  பொழுது,
நினைவிருக்கா, அப்ப இந்த பாட்டு வந்துச்சு   கண்ணதாசன் எழுதினாரு இல்லையா: காற்று வாங்க போனேன்.

நல்லா. காற்று வாங்க  போனேன். கழுதை வாங்கி வந்தேன். அந்த பாட்டை தானே சொல்றே ?

அய்யய்யோ !! அது கழுதை இல்லீங்க. கவிதை.

நான், நான் வாங்கி வந்ததை சொன்னேன்.

என்ன முணுமுணுப்பு ?

இல்லே ஒரு பக்கம் கவிதை வரி அழகு, . இன்னொரு பக்கம் இசை வடிவும்  இருக்கு ஒ.கேயா ?

அது சரிங்க. காற்று எப்படி  எங்கேந்து வந்தது ? சொல்லுங்க பார்ப்போம். ?

சுத்தி முத்தி பார்த்தேன். அப்பாதுரை சாரும் இல்ல. திவா சாரும் இல்ல. ஸோ , மையமா, நானே ரீல் விட்டேன்.

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா ?

பூமிக்கு அடியிலே இருந்து தான் காற்று வந்ததாக சயின்ஸ் சொல்லுது. ஒரு 2.5 பிலியன் வருஷத்துக்கு முன்னாடி, பூமி வெடிச்சு, உடஞ்சுபோயி , காத்து புஸ அப்படின்னு வந்துச்சாமே..!!  பாட்டு ஒன்னு கூட இருக்குது பாரு. 

வாயு லிங்கமே சதாசிவா !! 

சும்மா உடான்சு..விடறாக !!

 புரியலேன்னா உடான்சா !!

சரி.  காற்றிலே பல வகை இருக்குலே.. தென்றல் காற்றே கொஞ்சம் வீசு. 

இது எப்படி ?

பூங்காற்றே பூங்காற்றே  

அது நல்லாத்தான்  இருக்கு. ஆனா பாஸ்ட் பீட்.
கொஞ்சம் ஸ்லோ பீட் எடுத்து பாடினா நல்லா இருக்கும்லே.

அப்ப இத கேளு...




என்னதான் ஆயிரம் சொல்லுங்க.. சோனியா மாதிரி பாட முடியாது..

திறமை மட்டும் போதாதுங்க. லக்  வேணும் . அஞ்சாவது இடம் கிடைச்சும் சிங்கப்பூர் போகல்லையே  ?

அது நேத்தி கதை.

நேற்றோடு சொன்ன வார்த்தை எல்லாம் காத்தோட போயாச்சு 

அது இருக்கட்டும்.
இங்கன பாரு. இவங்க ஒரு பஸ் லே பாடிக்கிட்டே என்ன ஜாலியா...!!

பஸ் லே கூட பக்கத்துலே வரவங்க என்ன நினைப்பாங்க ?

அவுக என்ன நினச்சா இவங்களுக்கு என்ன? 
 காதல் வருது, காத்தடிக்குது. கவிதை வருது. 

 அதுக்காக பஸ்  டாப்பிலெ ஏறியா உட்காருவாக ?

 அது மட்டுமா ? ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே பாடலாம்.

   


சூப்பர்.  ஸோ என்சான்டிங்  இத கேளு. 
காற்று வரும் நேரமே   என் கண்களை அறிவாயோ..

அது நேரம் இல்லைங்க.. காற்று வரும் மேகமே...

என்னங்க. அந்த பாட்டு வல்லையே. ஒரு வேலை காற்று அடிச்சுக்கிட்டு பொயிட்டுச்சு போல. இத போட்டு பாருங்க.
https://www.youtube.com/watch? v=LYcwhJ55TZs

 

கண்களை அறிவாயோ என்ன அழகா கவிதை எழுதியிருக்காரு ..
இந்த பாட்டிலே  காற்றிலே ஈரம் என்று சொல்றாரு. 

என்னங்க ஒரு பொண்ணு பீடி குடிக்குது...!!

அது ஒரு தமாசுக்கு..

நல்லாவே இல்ல.

எல்லாமே தமாசா தாங்க ஆரம்பிகுது. பின்னாடி தான் பணால் ஆயிடுது.

அது சரி, ஒரு மெலடி  போடுங்க.

நீ பாடு.
நம்ம இரண்டு பெரும் சேர்ந்தே பாடுவோம்.

காலனி காரங்க பாத்து சிரிப்பாக 

சிரிக்கட்டும்.

நீ கவலைப்படாதே.  .நீ சிரித்தா உலகம் உன்னோட கூட சிரிக்கும். நீ அழுதா யார் இருப்பாக ? திசைக்கு ஒத்தரா பறந்து போயிடுவாக இல்ல ?

காற்றுக்கு ஒரு மொழி உண்டாங்க ??



இந்த காலத்துலே யும் கருத்து பாடல் இருக்குதா என்ன ?
அந்த காலத்து பாடல் என்றாலே கருத்தாழம் அதிகம்.  

இத கேட்டு பாரு. 

என்னங்க ஸ்தம்பிச்சு போயிட்டீக. என்றாள் இவள்.

நீ காற்று. நான் மரம் என்றேன்.  கானடா ராகத்திலே குழையராரு. 

கனடா விலே நயாகரா நீர்வீழ்ச்சி கீழே நிக்கிற பீலிங் வருது.

நீ காற்று நான் மரம்

.இப்ப இந்த பாட்டை கேளு.

காற்றுக்கு என்ன வேலி ?

என்ன ஒரு கேள்வி ?

எதுக்கு வேணாலும் ஒரு வேலி போடலாம்.
காத்துக்கும் காதலுக்கும் வேலி  ஏதுங்க ?

.      


மரத்துக்கு வேலி  உண்டு.  காற்றுக்கென்ன வேலி

காற்றினிலே வரும் கீதம். உங்க அம்மா பாடுவாங்களே !!

உங்களுக்குத் தெரியுமோ !!  ஒரு  சாங் டெலிட் ஆனப்பறம் ஹிட் ஆயிடுச்சாமே.

படத்துலே டெலிட்  ஆன சாங் ஆன  ஹிட் சாங் ஆகுமா ?

அது இது தான். .  நிசமாவே டெலிட் ஆயிடுச்சா என்று ஆவி தான் சொல்லணும்.

ஆம். வாழ்க்கைலே எத்தனையோ வருது போல இருக்குது. 
ஆனா வந்து அனுபவிக்கரதுக்கு முன்னாடியே டெலிட் ஆயிடுது. 
இதுவும் அதுலே ஒன்னு  போல.



இன்னிக்கு இது போதும்.
ரொம்ப சில் காத்து வீசுது. ஜல்ப் புடிச்சுக்கும்.

நாளைக்கு பீச்சுக்கு  போயி, கடலை பார்க்கணும். நீர் பற்றி பார்ப்போம்.

மெரினா பீச்சுக்கா !! ஒ.கே. போயி அங்கே ரொம்ப நாளாச்சு,
நான்  கடலை போடனும். 

என்னது ?

சாரி. கொறிக்கணும் .

அடுத்த பதிவு நீர் பற்றி. கடல் பற்றி.

*********************************************************************************************************************************************************************************************************************************************
The only purpose for this body to exist is to make you aware of how beautiful you are and to make you aware that it is possible to live all the values you cherish and create a world of divinity around you. +Sri Sri Ravi Shankar 

10 கருத்துகள்:

  1. என்ன சீரியல் பத்திச் சொல்லறீங்கனு புரியலை! :))) அது சரி சோனியா (காந்தி) இதிலே எங்கே வந்தாங்க? அதுவும் புரியலை! :)

    பதிலளிநீக்கு

  2. //உங்களுக்குத் தெரியுமோ !! ஒரு சாங் டெலிட் ஆனப்பறம் ஹிட் ஆயிடுச்சாமே.

    படத்துலே டெலிட் ஆன சாங் ஆன ஹிட் சாங் ஆகுமா ?

    அது இது தான். . நிசமாவே டெலிட் ஆயிடுச்சா என்று ஆவி தான் சொல்லணும்.//

    சுத்தமாப் புரியலை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹா..மேடம், அது தாத்தா என்னிடம் கேட்ட கேள்வி..

      நீக்கு
  3. இயல்பான நகைச்சுவையுடன் சிந்தனைக்கு இனிய பதிவு!..
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  4. மொழி படப் பாடல் என்றும் இனிக்கும்...

    பாடல்களை விட உங்களின் நகைச்சுவை உரையாடல் தான் செம...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. ஆமா தாத்தா, அந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தாத்தா பாட்டி!
    நீங்க நல்லா இருக்கணும் என்றும் ! நீங்களும் சந்தோஷமாக தமாஷ் பண்ணி எங்களையும் சந்தோஷப் படுத்துவது அருமை தாத்தா பாட்டி. எல்லோரும் அருமையாக பாடுகிறார்கள் யார் வருகிறார்களோ என்று ஆவலோடு இருக்கிறோம் பார்க்கலாம்.
    கனடா வந்தீர்களா தாத்தா இனி மேல் வந்தால் எனக்கு சொல்லுங்கள் தாத்தா. நான் வந்து பார்பேன் அல்லவா.
    மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!

    உங்களுக்காக என் வலைப்பக்கம் பாடல் காத்திக்ருகிறதே பார்க்கலையா தாத்தா?

    பதிலளிநீக்கு
  7. எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தென்றல் காற்றாய் தவழும் பாடல்களும்
    உரையாடல்களும் ரசிக்கவைத்தன..!

    பதிலளிநீக்கு