ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

ஒடுங்க

ஒரு கிழவனின் /டைரி. 
                                                                                                                                            / ஒரு நாள்



விழித்துப் பார்த்தேன். நன்றாக விடிந்திருந்தது

ஆஹா !! அந்த நாட்களில் தூங்கி எழுந்த உடனேயே என்னவள் முன் வர  வர" பார்த்தேன் ! சிரித்தேன் ! பக்கம் வர துடித்தேன் !!" என்று  பாடிய நாட்கள் ஒரு கணம் மனக்கண் முன்னே வந்து மறைந்தன.

என்ன ஒரு கண்ண தாசன் கவிதை !!

அது 1969
இது 2014

வருடங்கள் என்னமா ஓடுகின்றன !!

எழுந்து பல் துலக்க  போன பொழுது , எதிரில் என் இவள் வருகிறாள். 

" என்னங்க !! இன்னிக்கு  அங்கன 9 மணி டயம் கொடுத்துட்டு , 8 மணி வரைக்கும் இங்கன தூங்கறீங்க.. "

மணியைப் பார்த்தேன். 8 அடிக்க இன்னும் 15 நிமிஷங்கள்.

பொறி அடித்தார் போல் நினைவுக்கு  வந்தது.   கரெக்டா 9 மணிக்கு பாஸ் போர்ட் ஆபீசில் இருக்கவேண்டுமே !  அதை தவற விடக்கூடாதே !!

காலை சங்கதி எல்லாம் முடித்துவிட்டு கிளம்புபோது 8.45.
வர்றேன் என்றேன் . செருப்பை மாட்டிக்கொண்டேன்.

எடுத்துக்க வேண்டியது எல்லாம் இருக்கா அப்படின்னு பார்த்துட்டு

ஒடுங்க..
நேரம் ஆயிடுச்சுல்ல...என்றாள்  இனியாள் என் இல்லாள்.

***
எய்ப்பு என்னை வந்து நலியும் போது  அந்த நேரத்துலே எதை எடுத்துக்க முடியும் ? வேண்டியது அப்படின்னு ஒன்னு இருக்கா தெரியுமா? என்று எதிர்க்கேள்வி போடலாம்.  இவள்  வாயைக் கிண்டலாம். ஆனால் இவள் சும்மாவா இருப்பாள் ஊரைக்கூட்டி விடுவாள். இப்ப வம்பு வேண்டாம்.வந்து பார்த்துப்போம். 

ஓடினேன். காலனி வாசலில் இருக்கும் ஆடோ ஸ்டாண்டுக்கு

ஒடுங்கால் ஓடி உள்ளம் பாடுங்காள் உனைப் பாட வந்தேன் பரம்பொருளே என்று பாடிய சுந்தராம்பாள் இன்று இருந்தால் என்ன பாடியிருப்பாள் ?ஆதார் கார்டு க்யூவிலே நம்ம முன்னாடி நின்று இருப்பாள். பாவம்.

வழக்கமா ஆட்டோ நிற்கிற இடத்துக்கு வந்தா ஒரு ஆட்டோ கூட காணோம். என்ன ஆச்சு. ஏதேனும் ஸ்ட்ரைக்  இன்னிக்கா ?

ஆடோ ஸ்டாண்டில் இருந்த பெரியவர் :

" மெனகடாதீக ... இன்னிக்கு பெட்ரோல் விலை உசந்து பொயிடுச்சுல்ல.. அதுக்கு போராட்டம். எல்லாம் போயிருப்பாக. "


அப்ப பஸ் புடிச்சு  போகணும் ,ஓட்டமும் நடையுமாய் மெகா மார்ட் பக்கத்து பஸ் ஸ்டாண்ட் கிட்டத்தட்ட அடைந்தேன்.

என்ன ஒரு கொடுமை. !!
 ஐயகோ !!  கண்ணுக்கு முன் காட்சி அளித்த   17 ஈ  அதன் காலடி சேருமுன்னே வெகு வேகமாய்   கிளம்பிவிட்டது. .. அவள் பறந்து போனாளே !! எனை மறந்து போனாளே 

லைப்லே பெரிய விஷயம் அப்படின்னு இல்லாமே சின்ன சின்னதுக்குக் கூட லக் வேணும்டா.

இந்த  வயசுலே நம்மால  ஓடிப்போய் இனி அந்த பஸ் பிடிக்க முடியாது. 

ஒரு சில செகண்டுகளில், என்ன இது !!
ஆச்சரியம் !!
 சற்றே தொலைவில் அதே !! அதே  பஸ் நின்று விட்டு  இருந்தது.
இதைத்தான் இதைத்தான் நான் எதிர்பார்த்து இருந்தேன் என்று ..

இதாண்டா  லக்  என்று  நான் ஓட  துவங்க,
பக்கத்திலே நின்ற இளசு ஒண்ணு தெனாவெட்டா
ஒடுங்க என்றது.

இறைக்க இறைக்க மூச்சு நிற்கு முன்னே,  பஸ் உள்ளே நுழைந்தேன்.  கூட்டம் அப்படின்னு இல்லை. லக் தான்  இடம் கூட இத்தனை இருக்குதே...

லைப்லே எதுவும் ஓடினால் தான் கிடைக்கும் போலே..

பஸ் மூவ் ஆகல்ல. கண்டக்டர் ரைட் விசில் தரவில்லை  பஸ் அங்கேயே.

முன்னால் இருந்து இரண்டே சீட் தள்ளி, ஒரு சீட் காலி
ஓடி உட்கார்ந்த பின்   அப்பாடி ஒரு நிம்மதி.

கண்டக்டர் எங்கே என்று பார்த்தேன் . காசு இருக்கா பையிலே என்றும் பார்த்தேன்.

அவரோ முன்னே இருக்கும் ஒரு இளம் ஜோடியிடம் சத்தமா இரைந்து பேசுறார். சண்டை இல்லை நல்ல வேளை

"என்னங்க...பர்ஸ் காணோமா..? சர்தான் . டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சார். .கீழே இறங்குங்க."

 என்று அவர்கள் இறங்கும் முன்னாடியே விசிலடிச்சார்.

விசில் அடிப்பதே ஒரு தனி ஆர்ட்.ஒவ்வொரு கண்டக்டரும் ஒவ்வொரு சௌண்ட் .

பஸ் ஓட்டுனர் அந்த இளம் தம்பதியரை pity கலந்த ஒரு பார்வை பார்த்தார்.
வராக நதிக்கரை ஓரம் பாட்டுலே வர ஜோடி மாதிரி இவுகளுக்கு ஒரு கஷ்டம் அப்படின்னா யார் மனசுதான் உருகாது !
MADE FOR EACH OTHER !!  O GOD  R TOO KIND TO A FEW COUPLES PERHAPS !!!

 மெதுவா இறங்குங்க.. என்று சொல்லி அவர்கள் இறங்கும் வரை நிதானித்து, பின் வண்டியை எடுத்தார்.  வாழ்க.



"நான் அப்பவே சொன்னேன். நீங்க கேட்கல்ல. நான் இங்கயே நிக்கறேன். நீங்க வூட்டுக்கு ஓடி போயி, அங்கனாச்சும்,  பர்ஸ் இருக்கதான்னு பாருங்க "

அவள்..அவனைத் தொடர்ந்து  செல்லமாக திட்டிக்கொண்டே பஸ்ஸை விட்டு இறங்கினாள்  இல்லை  குதித்தாள்

சீக்கிரம் வீட்டுக்கு
ஒடுங்க.  வரும்போது கதவை பூட்டிட்டு வாங்க.
அவள் சத்தம் நன்றாகவே  கேட்டது. .

பஸ் ஓடியது.
என் எண்ணங்கள்  இன்னொரு கோணத்தில் ஓடின.
+Dindigul Dhanabalan
லைப் லே ஒருவன் எத்தனை தரம் எதற்கெல்லாம் ஓடணும் ? ஓடுகிறான் ?.திண்டுக்கல் தனபாலன் கிட்டே கேட்கணும். நம்ம மாதிரி ஆட்கள் எல்லாம் நினைவு தெரிஞ்ச நாள் லேந்தே எதுனாச்சுக்கும் ஒடிட்டுதானெ இருக்கோம்.

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. சென்னை சிடி பஸ்சும் அதுபோலத்தான்.
ஒரு பத்து லட்சம் பேரு தினசரி,இந்த பத்தாயிரம் பஸ்சுக்குள்ளே உள்ளே போய் வெளி வர்றாங்க...  பஸ்  ஓடிக்கினே இருக்குதுல்லெ..

பத்து நிமிஷம்  கூட   ஆகியிருக்குமா !தெரியல்ல.
பாஸ் போர்ட் ஆபீஸ்... கண்டக்டர் குரல்.
ஒன ஆர் டூ கண்டக்டர் இன்னமும் ஸ்டாப் பேரை சொல்றாக.
 பெரிய விஷயம்..

தொப் என்று குதித்தேன். ரோடைக் க்ராஸ் செய்ய நினைத்தபோது, அங்கே ஏகத்துக்கு ஆர்ப்பாட்டம். ஒரு அம்பது பேர் இருக்கும் சிவப்பு கொடி வச்சுண்டு, ரோடு பாதிலே நின்று கொண்டு ஆர்ப்பாட்டம்.  .

போராடுவோம் வெற்றி பெறுவோம்.
பெட்ரோல் விலை குறைக்கும் வரை போராடுவோம்.

ஒருவர் குரல் கொடுக்க, மிச்ச அத்தன் பெரும் ரிபீட் பண்ண,
இது ஒரு sort of மார்கழி பஜனை.
இப்ப எல்லாம் இரண்டு மாசத்துக்கு ஒரு தரம்.

ஒன்று இரண்டு போராட்ட வீரர்கள் ரோடிலே குறுக்கிடுவதும் அவர்களை போலீஸ் விரட்டுவதும், ...

ஒரு ஜீப் வந்தது. கலைஞ்சு போங்க. யாரும் நிற்கக்கூடாது. போயிக்கிட்டே  இருங்க. யோவ். யாருய்யா சொல்ல சொல்ல கேட்காம ,
ஒடுங்க. என்று ஒரு உரத்த குரல் அதிகாரம் பண்ணுது. 

நான் ரோடு ஓரமாக மெதுவாக பாஸ் போர்ட் ஆபீஸ் இருக்கும் சந்தில் நடந்தேன்.

பாஸ் போர்ட் ஆபீஸ் வந்தது.  உள்ளே நுழைந்தேன். கண்ணில் பட்டது
சீனியர் சிடிசன் தனி கௌண்டர் . .ஆஹா.
மாடிக்கு போங்க என்றார் ஒரு அலுவலர் என்னைப் பார்த்ததுமே.
அடே!  நமக்கு நம்ம மொட்டை தலைக்கு தனியா ஒரு மதிப்பு இருக்கு.

என் டோக்கன் நம்பர் என்ன ன்னு பார்த்தேன்.
21 . 14 தான் முடிஞ்சு இருக்கு.

வரிசையா நாற்காலிகள். சுகமான இருக்கைகள். ஏ ஸீ கூலிங்  இதமோ இதம். ஒரு பத்து கிழங்கள் என்னைப் போலவே இருக்க, மனசு சமாதானம்.
நான் கடைசியில் உட்கார்ந்தேன்.
Always I respect the law of the land except when the land is inside my house.

பக்கத்திலே ஒரு சீனியர் .பாட்டி
 வயசு 80க்கு மேலே ஒன்னு இரண்டு தான் இருக்கும்.   கையிலே ஏதோ பேப்பர்  பக்கத்திலே அவரது பேரனோ  ?

சும்மாவே எத்தனை நேரம் தான் இருப்பது !!
ஸோ , நான் தான் ஆரம்பித்தேன்.

 பாட்டிக்கு  என்ன ரினுவலா ?

அந்த பாட்டி அம்மா என்னைப் பார்த்தாள் . ஒரு சந்தேகப் பார்வை என்று சுத்தமாக சொல்ல முடியாது.  ஒரு தரம் என்னை பார்த்து விட்டு திரும்பவும் தன் கையில் இருந்த அச்சடித்த பேப்பரை பார்த்தாள் . கையில் அது ஒரு...!!

அது என்னவா இருக்கும் ? என்னவா இருந்தால் எனக்கு என்ன ?
இருந்தாலும்,  நான் ஓரக்கண்ணால் அந்தப் பேப்பரை பார்க்க கூடாதுதான்.  பார்த்தேன்.

 அந்தக் காலத்துலே ஹெச். ஆர். லே இருந்தபோது பாஸ் சொல்வார்: கீப் யுவர் ஆண்டென்னா வைட் ஓபன்.  ? 

நான் எட்டி பார்த்ததை பாட்டி  பார்த்திருப்பாளோ ?

என்னைப்பார்த்து, 
என் காதுகளில் விழும்படியாக ஆனால் சன்னமாக,

 " இத்தனை வருஷம் கழிச்சு ஒரு மாரேஜ் சர்டிபிகேட் கொடு அப்படின்னா எங்கே சார் ஓடறது ?  " என்றாள் .

எதுக்கு சர்டிபிகேட் ? யார்  மாரியேஜ் ? நான் கேட்டேன்.

'எனக்கு'.

உங்களுக்கா.. இந்த வயசிலா ?

நீங்க ஒன்னு தான் கிண்டல் பண்றதுலே குறைச்சல்.

கோவித்துக்கொள்ளாதீர்கள். என்ன விஷயம் ?

எழுபது  வருசத்துக்கு முன்னாடி நடந்தது என்னோட கல்யாணம் பதிமூணு வயசு அப்ப எனக்கு.

அப்ப உங்களுக்கு இப்ப  83  ஆ ?

83 வயசுக்கு அவர் உடல் ஸ்ட்ராங் ஆக தெரிந்தது.. உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன ? கேட்கவில்லை. 

கூட ஒன்னு இரண்டு  கூடவும் இருக்கலாம். உப்பு சத்யாக்ரஹம் திருச்சிலே ராஜாஜி ஆரம்பிச்ச அன்னிக்கு நான் புறந்தேனாம் .

அப்பறம் ..?

கல்யாணம் 42 , 43 லே நடந்திருக்கு. வருசத்தை சொன்னேன். அஞ்சு நாள் கல்யாணம்.

"இப்ப எல்லாம் அரை நாள் தான் ". இது நான்.

அது அஞ்சு நாளோ அரை நாளோ , இப்ப ஒரு சர்டிபிகேட் கொடு அப்படின்னா எங்கே போறது ? 

யாரு  கேட்கறது ?

அமெரிக்கா 

யூ மீன் ஒபாமா ? எதுக்கு அது அமெரிககாவுக்கு ?

என் பெண் மாப்பிள்ளை அமெரிக்காவிலே எப்பவோ செட்டில் ஆயிட்டா. நான் இங்க இத்தனை நாள் எதோ எப்படியோ பிடிவாதமா இருந்துட்டேன். இப்ப  இவரும் மேலே போயாச்சு. நான் மட்டும் வயசான காலத்துலே....

+SUNDARJI
சுந்தர்ஜி ஞாபகம் வந்தது. அவர் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் மேற்கோள் காட்டி இருந்தார். 
பெண்ணா பிறந்தவ பால்யத்துலெ அப்பா அம்மா, பருவம் வந்ததும் திருமணம் ஆனவுடன் கணவன், பிற்காலம் பிள்ளைகள் தயவிலே தான் இருக்கவேண்டிய நிலை.

பாட்டி புடவை தலைப்பு தானாகவே கண்கள் பக்கம் சென்றனவோ !!.

" எல்லாமே ரொம்ப கஷ்டம். பணம் இருந்தா போதுமா சொல்லுங்கோ.. ? பாத்துக்க ஆள் வேண்டாமா ?"


உண்மையான வார்த்தை.

என்னோட வந்துடு நாங்க பாத்துக்கறோம் அப்படின்னா.பொண்ணு.  நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா விசா கச முசா  ஆயிடுத்து.

அப்படின்னா ?

இப்ப அவ பாஸ்போர்ட் லே இருக்கிற அவ அம்மா பெயரும், அதான் நான் , என்னோட பாஸ் போர்ட் இருக்கற என் பெயரிலும்  வித்யாசம் இருக்காம்.ஸ்பான்சர் பண்ணும்போது தான் தெரியறது. 

அத சரி பண்ணனுமாம். அப்பத்தான் எனக்கு விசா தருவாங்களாம். அதுனாலே முதல்லே பாஸ் போர்ட்லே பேரை சரி பண்ண சொல்றா...

என்ன செய்தீர்கள் ?

பர்த் சர்டிபிகேட்  இல்லாட்டி, மாரியேஜ்  சர்டிபிகேட் வேணுமாம்.
1930 லே புறந்த தெல்லாம் யாரு  ரிஜிஸ்தர் செய்தாங்க?

கல்யாண  பத்திரிக்கை கொண்டா அப்படின்னா எங்கே போறது ?   எங்க அப்பா ஒரு மஞ்சள் பத்திரிக்கை அடிச்சார் ன்னு  தான் நினைப்பு இருக்கு. .

அப்ப மாரியெஜ் ரிஜிஸ்தர் உண்டா என்ன ? மாரியெஜ் வந்தவா சாட்சி கையெழுத்து கொண்டா அப்படின்னா.. யாரு இருக்காக ?

 உங்க கல்யாணத்துக்கு சாப்பிட வந்தவா கிட்டத் தட்ட அத்தனை பெரும் ச்வர்கத்துலெ இருப்பா என்றேன். 

ஒரு ஸ்மைல் அவர் முகத்தில் தெரிந்தது. அதில் விரக்தி தெரிந்தது.இருந்தாலும் தெளிவாகப்  பேசினார்.

அப்பறம்...

அங்க ஓடி, இங்க ஓடி, என்னோட வெல் விஷர்ஸ் ஒரு லாயர் நோட்டரி கிட்டேந்து ஒரு சர்டிபிகேட் வாங்கி கொண்டு வந்து தந்து இருக்காங்க.. அத எடுத்துண்டு, என் பெயரை பொண்ணோட பாஸ் போர்ட்லே இருக்கிற மாதிரி மாத்திக்க நான் இங்கே ஓடி வந்திருக்கேன்.

என்ன கொடுமைடா... !!  

இந்த வயசுலே அமேரிக்கா போய்த்தான் ஆகணுமா ?  இங்கேயும் இருக்க முடியாது. அந்த பாட்டிக்காக என் இதயத்தின் கீழ் அறையில் ஒரு சொட்டு ரத்தம் கூட  வழிந்தது போல் உணர்ந்தேன்.

ஒரு நிமிஷம் மௌனம்.
நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
இவர் சற்று அபோவ் மிடில் கிளாஸ் கண்டிப்பா இல்லை. உண்மையிலே ரிச் பீபிள் தான். தெளிவா  குரல் கூட நடுக்கம் இல்லாம பேசுகிறாள். ஆனா, கவனிச்சுக்க தான் ஆள் இல்ல. 
.no credible moral support at site.

யாரோ யூனிபார்ம்  போட்ட வர் வந்தார்.
இங்கே யாரு சாவித்திரி...?   சத்தம் சன்னமா போட்டார்
அந்த ஆபிஸ் பாட்ஜ் குத்தியிருந்தார். .

நான் தான் பா..

பாட்டி. உங்களை 15 நிமிஷமா கூப்பிட்டுண்டு இருக்காக.
 ஒடுங்க..

பாட்டி ஓட்டமும் நடையுமாய் மறைந்து போனாள் .

**********************************************************
போர்டை பார்த்தேன். டொகென் 20 வந்துவிட்டது.
அடுத்தது நம் கேஸ் தான்.
என் முறை வந்தது. 4 வது கௌண்டர் .
 ஒரு அஞ்சு நிமிஷத்தில் நான் 17 வது கௌண்டர் .
லாப்டாப் கம்ப்யூடர் வெப் காமிரா  முன்னே நான்.
ஒரு போட்டோ.
"கண்ணை அகலமா விரிச்சு மூடாம இருங்க."
ஒ.கே.  20 நம்பர் கௌண்டருக்கு போங்க.

20 நம்பர் கௌண்டர்

அங்கு ஒரு அலுவலர் நான் வருவதற்குள் அவர் மானிட்டரில் என்னை கவனித்து விட்டார் போலும்.
என் பெயரை சொன்னார்.
எஸ் .
வீட்டுக்கு போகலாம். பாஸ் போர்ட் வந்து விடும் என்றார்
******************************************************************
*************************************************************
அப்பத்தான் பார்த்து,
செல் அடித்தது.  நம்பர் யாரது என்று தெரியவில்லை.
அதை எடுத்து காதில் வைக்கும்போது,  செக்யூரிடி எதிரில் வந்து நோ செல் ஹியர்.
கோ அவுட் என்று கட் அவுட் என்று சொல்லாமல் சொன்னார்.

நான் வாசல் கதவு நோக்கி ஓடினேன்.
******************************************************************************************************
வாசலுக்கு வந்து செல்லை காதில் வைத்து,
ஹலோ என்றேன்.
நாங்கள் சுபத்ரா பில்டர்ஸ்.
சுபத்ரா வா ? எனக்கு சுபத்ரா அப்படின்னு யாரையும் தெரியாதே !! ராங் நம்பர் .
சார் நாங்க பில்டர்ஸ்.
ரியல் எஸ்டேட்டா?
ஆமாம். வண்டலூர் பக்கத்துலே D.T.P.. அப்ப்ரூவ்ட் பிளாட்
போட்டு இருக்கோம். இன்னிக்கு மட்டும் ச.அடி. ரூபாய் 1000 குறைத்து தர்றோம்.
நான் கெட்கல்லையெ.
 நாங்க தரோம். 
அப்படியா.. எந்த வடலூர் ?
வடலூர் இல்ல.. வண்டலூர் ..
வீட்டுக்கு போய் யோசிக்கிறேன்.
யோ சி ப்பதுக்கு முன்னாடி சைட் வந்து பாருங்க. 
என் செல் நம்பர் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?
அதெல்லாம் போகும்போது சொல்றேன். 
பிளாட் வேணும் அப்படின்னா, சைட் பார்க்க கார்லே கூட்டிட்டு போறோம்.
வட பழனி பஸ் ஸ்டாண்ட்க்கு 12 மணிக்கு 
ஓடி வாங்க. 

72 வயசுலே புது பிளாட். புது ப்ளாட் இதெல்லாம் நடக்கிற கதையா !!
இவங்களுக்கெல்லாம் எங்கே இருந்து தான் நம்ம செல் நம்பர் கிடைக்குதோ?
ஒரு நிமிஷம் வட பழனி போயி, அங்கே இருந்து ஓசி சவாரி வண்டலூர் வரைக்கும் ஜாலியா போயிட்டு வந்தா என்ன? அவங்களே டிபனும் கொடுக்கலாம். வீட்டுக்கு போயி, என்ன பண்ணப்போறோம் ? என்று நினைத்தேன்.
ஆனா, அடுத்த செகண்ட், இல்லாளின் இனிய முகம் எதிர் வந்து கடுப்படிக்க,
வீடு நோக்கி போக முடிவெடுத்து,
பஸ்  ஸ்டாபுக்கு  வந்து நின்றேன்.

*************************************************

பயணிகள் உட்கார ஒரு நாலு ஸ்டீல் ஸ்டூல் . ஒண்ணு தான் உட்கார முடியும். மத்ததெல்லாம் வெறும் குச்சி தான் இருக்கு.
அந்த ஸ்டூல் பக்கத்துலே ,
ஒரு ஒரு சின்ன பெண். யூனிபார்ம் லே.  14, 15 இல்ல,மிஞ்சி,மிஞ்சி போனா, 16 வயது இருக்கும். முதுகிலே ஸ்கூல் பாக்.
பக்கத்துலே நம்ம தனுஷ் மாதிரி ஒல்லி பையன். ஆனா அசப்புலே அந்த ஆபீஸ் விஷ்ணு மாதிரி கெட் அப் கிருதா .சிரிச்ச முகம். களையா இருக்கான்.
சைக்கிள் மேல சாஞ்சுண்டு ...
ஏதோ ஷூட்டிங் நடக்குதோ அப்படிங்கற ஐயத்துலெ சுத்தி பார்த்தேன்.
 .  .
இது மாதிரி இல்ல.


நோ. இது ரியல் காதல் காவியம்

என்னை பக்கத்தில் பார்த்ததும்  ஒரு நிமிஷம் பேசுவதை நிறுத்தி உத்து பார்த்தார்கள்.
இல்ல. ..
யோவ் பெரிசு !! நீ போய்க்கினே இரேன் யா.
ஏன்யா எங்க நடுவிலே கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யறே என்று  மனசுக்குள் திட்டினார்களா ? தெரியவில்லை.

சைலண்டா,  ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டே என்னதான் பாடுவாங்க !
டேய் பார்ரா !! அவன் உருகுரதை !!
 நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்றா ?
. . 
 என்னதான் மனசுக்குள்ளே  பேசுவாகளோ !! இல்ல, பாடுறாகளோ !! நெஞ்சுக்குள்ளே  வா இருக்குமோ !!

மனசு சொல்லிச்சு. நீ  அந்தக்காலத்துலே பாடாத பாட்டா ? போடாத கடலையா!!!

இருந்தாலும் நடு  ரோட்டிலே
இந்த ஜெனரேஷன் தகிரியம் ஜாஸ்தி தான்.

15, 20 , 25 நிமிஷம் ஆகிவிட்டது. பஸ் வரவில்லை. நான் அந்தப்பக்கம் பஸ் வரும் வழியையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

கால் கடுக்க ஆரம்பித்தது. ஸ்டாண்டில் இருந்த ஒரே ஸ்டூல் போன்ற நாற்காலியில் இந்த பொண்ணு  உட்கார்ந்தும் உட்காராமல்...
நானாவது  கொஞ்சம் உட்காரட்டுமா என்று கேட்கலாம் என்று நினைக்காமல் இல்லை. ஆனால், அவர்கள் இருக்கும் சுவர்க்கம் புரிந்தது.

அந்த ச்வர்கத்துக்குள்ளே ல் கரடி போல நுழைவது  பாவமாக தோன்றியது.

 என்னதான் ரகசியமோ இதயத்திலே... ...

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. நான் அப்பாடி என்று மூச்சு விட்டேன்.
அடுத்த இரண்டு செகண்டு குள்ளே...
அன்பு  அன்பு !! .  ஒடுங்க..ஒடுங்க..
 என்று இந்த பெண் இரைவது  நன்றாவே கேட்டது.

இன்னா  சக்தி ...இன்னா ஆச்சு...சக்தி ??

அந்த ஒல்லிப்ப்பையன் ஒரு நடுக்கத்துடன் குரல் எழுப்ப,

அன்பு ,!! சாரி டா.!! அண்ணன் சைக்கிள் லே அந்த பஸ் பக்கத்துலே லே வருதுடா ! .  ஓடுடா, இல்ல,நீயும் நானும் பீஸ் பீஸ் புரிஞ்சுக்கோடா..ப்ளீஸ் ...

 என்று இவள் கெஞ்ச , சொல்லி முடிப்பதற்குள் ..
பஸ் வந்து நிற்க,
அதற்குள் அந்த அன்பு  அம்பேல்.

என்னை அறியாமல், இந்த தெய்வீக காதலை முறிக்க வந்த  அந்த அண்ணனாம் வில்லனை எனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் மனசார திட்டினேன்.

அவள் எங்கே  ?
என 
நான் பார்ப்பதற்குள் பஸ் வந்து விட்டது.  சட் என்று  பஸ் உள்ளே போனேன்.

மனசு வேறு ரூட்டில் ஓடியது.  பல நூறு மைல் வேகத்தில்.

நம்ம புண்ணிய பூமியிலே காதலுக்கு ஒரு மரியாதை இல்லையா !!

காதல் போயின் காதல் போயின் என்று நானும் ஒரு பாட்டு , நம்ம எழுதலேனாலும் ஹேமா இல்லேன்னா கிரேஸ் இல்லேன்னா இளையநிலா இல்லேன்னா இனியா அவங்களும் நோ சொல்லிட்டா
என்ன செய்யறது ? அம்பாள் அடியாள் கிட்ட சொல்லி ஒரு கவிதை எழுதச் சொல்லி அதுக்கு மெட்டு போடணும் .
+ilayanila ilamathy
+அம்பாளடியாள் வலைத்தளம்

பஸ்சுக்குள்....... உட்கார போனவனை,

சார் !! என்ன சார் இங்க.. இப்படி ?  பழக்கமான ஒரு  குரல்.
குரல் பக்கம் திரும்பினேன். 
அடே ! எனது அந்தக்காலத்து நண்பர் கோபிநாத்.
அவர் கல்லூரியில் வகுப்பில் வந்து நின்றாலே களை கட்டும். அவரது பேச்சிலும் மூச்சிலும் எப்பொழுதுமே உற்சாகம்.

ஹௌ ஆர் யூ என்றேன் .
பைன் என்றார்.

கோயிங் குட். ?
எஸ் சார்.
வீ கான்ட் அபோர்ட் டு பி அதர்வைஸ். We cant afford to be otherwise.

என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?

அவர் வேலையை ரிசைன் செய்து விட்டு தனியாக ஒரு நிறுவனம் சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஓடிட்டு இருக்கேன்  என்றார்.

ஒடுங்க. என்றேன்.

ஓடாமல் வாழ்க்கை இல்லை.
ஓடாமல் நான் இருந்தால் என் உடம்பில் மூச்சு இல்லை.என்றார்.

உண்மை.

அடுத்த ஐந்து பத்து நிமிடங்கள் அவர் செய்வதெல்லாம் அவர் சொல்ல நான் அதிசயத்துடன் கேட்டு கொண்டு இருந்தேன்.

வாழ்க்கையிலே ஜெயிப்பவனுக்கும் தோற்ப்பவனுக்கும் அளவு கோல் ஒன்று தான்.  எந்த வேகத்தில் , ஸ்பீடில் ஒருவனால் ஓட முடியுமோ அதை விட இன்னொரு மடங்கு ஓடுபவன் ஜெயிக்கிறான்.

இதற்கு மேல் என்னால் முடியாது என்று  நினைப்பவன் சொல்பவன் தோற்கிறான்.

எனது ஸ்டாப் வந்தது.
நண்பரிடம் விடை பெற்றுக்கொண்டு  நான் இருக்கும் காலனிக்கு ஓடி வந்தேன்.

லிப்ட் அத்ருஷ்டவசமாக வந்தது.
என் ப்ளாட்க்கு சென்று காலிங் பெல் அடித்தேன்.

கதவை திறந்தாள்  வீட்டுக்கிழத்தி.
அவசர அவசரமாக பேன்ட் சர்ட் களைந்தேன் .
என்ன அவசரம்.
எங்க ஓடுறீங்க.. என்று கேட்டாள்

டாய்லெட்...

ஒடுங்க...

******************************************************************************************************

***
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே

ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

******************************************************************************

ஒரு கிழவனின் டைரி.

உங்களாலே ஒரு பத்து நிமிசம் பொறுமையா படிக்க முடியும்னா
வாங்க. இல்லைன்னா ...

10 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுகளில் இழையோடும் நகைச்சுவையை நான் ரொம்பவுமே ரசிப்பேன். இதற்காகவே சில பதிவுகளை இரண்டு மூன்று தடவை படிப்பதுண்டு. இந்த பதிவிலும் சும்மா ஜமாய்த்து விட்டீர்கள். மீண்டும் ஒரு தடவை படிப்பேன். அப்போதுதான் பாடல்களை பொறுமையாகக் கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

    வாழ்க்கையில் பிறந்தது முதல் சர்டிபிகேட்டுகளுக்காக அலைந்து கொண்டுதான் இருக்க வேண்டி உள்ளது. இதனைப் பற்றி உங்கள் நடையில் நகைச்சுவையோடு ஒரு பதிவை போடவும்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து இணைப்புகளையும் பார்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. ஓடாமல் வாழ்க்கை இல்லை.!.. நியாயம் தான்..
    அதே சமயம் ஓடிக் கொண்டே இருப்பதும் வாழ்க்கை இல்லை!.. -
    என்பது எளியேனின் தாழ்மையான கருத்து.

    தனித்துவமான தங்களின் கைவண்ணத்தில் -
    மனம் கவலைகளை மறக்கின்றது.

    பதிலளிநீக்கு
  4. நகைச்சுவை கலந்த ஓட்டம்... அருமை...

    பதிலளிநீக்கு
  5. ஓடினேன் ,ஓடினேன் வாழ்க்கையின் எல்லைக்கே ஒடினேன்னு பதிவு முழுக்க ஓடிருகிங்களே ! மாமிக்கிட்ட சொல்லி ஒரு வாய் தாளித்த மோர் வாங்கி குடிங்க!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ஒரு நாள் ஓட்டம் மிக நன்றாக இருந்தது. அந்த கால இனிமையான பாடல்களுடன் தற்போதைய நிரஞ்சனா பாடலும் இடையே நல்லதொரு மிக்ஸ். அருமை சார்.

    பதிலளிநீக்கு
  7. உங்களாலே ஒரு பத்து நிமிசம் பொறுமையா படிக்க முடியும்னா
    வாங்க. இல்லைன்னா ...ஓடுங்கள்... என்று ஒரே ஓட்டம் ஓட்டமாக பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. அப்பா உங்களின் ஓட்டத்தோடவே நானும் ஓடி ஓடி வந்து ஸ்ஸ்ஸ்ஸப்பா இருங்க எனக்கு மூச்சிரைக்குது...

    அம்மா மட்டும் இன்னைக்கு உங்களை எழுப்பலன்னா பாஸ்போர்ட் ஆபிசு தான் போயிருப்பீங்களா? இல்ல சாவித்திரி கிட்ட வாண்ட்டடா போய் பேச்சுக்கொடுத்து அவங்க இந்த 83 வயசுல மேரேஜ் சர்டிபிகேட்காக அலைந்தால் அவங்க எப்டி இந்த வயசுலயும் ஆரோக்கியமா இருக்கிறாங்கன்னு உங்க கண் ஸ்கான் பண்ணித்து பாருங்கோ... அட்டகாசம் அப்பா... வாசிச்சு ரசிச்சு சிரிச்சேன்.. நீங்க ஒரு அடி எடுத்து வைக்கும்போது நடக்கும் அத்தனை நிகழ்வையும் ஒன்னு கூட விடாம இத்தனை ஜாலியா “ எனக்கு ஒரு டௌட்.. இந்த வயசுல இப்படி கலாட்டா பண்றீங்களே.... 25 வயசுல எவ்ளோ கலாட்டா பண்ணி இருந்திருப்பீங்க?? :) “ செம்ம ஜாலியான பகிர்வு அப்பா... ஜாலியா இருந்தது இன்றைய ஓட்டம்.... அம்மாவுக்கும் உங்களுக்கும் அன்பு நமஸ்காரங்கள் அப்பா...

    பதிலளிநீக்கு