வியாழன், 5 செப்டம்பர், 2013

நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.

சார் !!!

 என்று யாரோ பின் பக்கத்திலிருந்து கூப்பிடுவது போல் இருந்தது.

ன் னே பி ம் ரு தி

(திரும்பினேன்.)

ஒரு அறுபத்தி எட்டு  முதல் எழுபத்தி இரண்டு  வரை மதிக்கும்படியான உருவ அமைப்பில் ஒருவர் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.வந்தார்.

என்னைத்தான் கூப்பிட்டு இருக்கிறார் .

  ஆனால், இவர் யாரென்று தெரியவில்லையே ...ஒரு வேளை பதிவர் மாநாட்டில் என்னை பார்த்து இருப்பவரோ ?    சந்தேகக் கண்களால் அவரை சுரண்டினேன்.

நீங்க ...  செல்வராஜ் தானே...என்றார்...

இல்லயே. 

அப்ப ஆனந்த ராஜ்..

இல்ல.

என்ன ஞாபக மறதி எனக்கு பாருங்க... நீங்க..பாக்ய ராஜ். ஆம் ஐ ரைட்..?

நோ.நோ..நோ..நான் எந்த ராஜும் இல்ல.

அப்ப நீங்க அந்த ராஜா இல்லையா...?

எந்த ராஜா? எனக் கேட்கலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்த நிமிஷம் 

இந்த ஆளை விட்டு கழண்டால் போதும் என்ற நினைப்பில்,

 ராஜா, ராணி, மந்திரி, யானை, குதிரை, பிஷப், சிப்பாய் யாருமே நான் இல்லை

.என ஹாஸ்யினேன்.

கரெக்ட்.  நான் அப்பவே நினைச்சேன்.  நான் நினைச்சது சரிதான்.

என்ன சரி. ?

நீங்க செஸ் விஸ்வநாதன்...

அப்படின்னு  அவர்  இழுத்தார். அதற்குள் , இடை மறித்து,

ஐயா ... நீங்க யாருன்னே எனக்குத் தெரியல்ல... நான் விஸ்வநாதனும் இல்ல.

சார், கோவிச்சுக்கக்கூடாது... நீங்க விஸ்வநாதன் அப்படின்னு நான் சொல்லலையே..
உங்களுக்கு விஸ்வனாதன் சாரைத் தெரியும் இல்லையா..?

என் மூளையின் ஏதோ ஒரு இருட்டு  மூலையில் மின்னல் வேகத்தில் முப்பத்தி இரண்டு விஸ்வனாதன் கள் பிரவேசித்தார்கள்.

இவர் எந்த விச்வனாதனைச் சொல்கிறார் , தெரியல்லையே...விசாரிப்போம். நமக்கும் தான் பொழுது போகணும். வீட்டுக்குப்போனா இருக்கவே இருக்கு கிழவியுடன் வாதம். அதுக்கு இது பெட்டர்.  

சார். எனக்கு காசி விஸ்வநாதரை மட்டும் தான் தெரியும்.  அவர் கூப்பிட்டுண்டு இருக்கார். எனக்கு தான் டைம் கிடைக்க மாட்டேன் அப்படிங்கறது.  என்று கிண்டலாக வாய்சினேன்.


இப்ப கிடைச்சுடுத்தே ...   அதுக்காகத்தானே நான் வந்திருக்கேன் என்றார்.

என்னடா இது. வம்பிலே மாட்டிட்டோம் போல இருக்கே

{என்று என் அவசர புத்திக்கு ஒரு சென்ஷர் மெமோ இஸ்யூ   பண்ணிக்கொண்டே,}

சார், ஒரு தமாஷுக்காக சொன்னேன் .. சார், எனக்கு எந்த விஸ்வனாதரையுமே தெரியாது.

நீங்க இப்ப சொல்றது தான் தமாஷ்.  உங்களுக்கு அந்த விஸ்வநாதரை நன்னாவே தெரியும்...  இது அந்த விடாக்கண்டன். 

எப்படி..?

உங்க கையில் வச்சிருக்கிற பையிலே தான் விஸ்வநாதன் & கோமளவல்லி தாங்க் யூ பார் யுவர் பிரசன்ஸ். அப்படின்னு போட்டிருக்கே...

அப்ப தான் கையில் இருக்கும் பையை கவனித்தேன்.  யாரோ ஒருவரின் திருமணத்திற்கு, எப்போதோ நானோ அல்லது என் தர்ம பத்னி சென்றபோதோ என் கைகளில் திணிக்கப்பட்ட தாம்பூலப்பை.

அதைப் பார்த்துவிட்டுத் தான் இவர் சொல்கிறார் போலும்.

சார். எனக்கும் இந்த விஸ்வநாதன் பாமிலிக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. இன் பாக்ட் , இந்த பை எப்படி என் கையிலே வந்ததுன்னே எனக்கு ஞாபகம் இல்ல.

எக்சாக்ட்லி  ரைட்.  உங்களுக்கு எப்படி விஸ்வநாதன் யாருன்னு மறந்து போச்சோ அப்படி எனக்கும் உங்க பேரு மறந்து போகல்ல.. ஆனா, கரெக்டா நினைவுக்கு வரல...

அதுனாலே என்ன ?

என்னவா ?  உங்களைப் பார்த்தா காலம் காலமா கூட என்னோட  ஒர்க் பண்ணினவர் போல இருக்கு. 

 எனக்கு ஒரு கஷ்டம் அப்படின்னா உங்க கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்றது ?

{பாவமாக இருந்தது எனக்கு. உண்மையிலே இவர் யாரென்றே தெரியவில்லை. ஆனா இவருக்கு ஏதோ கஷ்டம். அப்படின்னு மட்டும் தெரியறது. நம்மால் முடிந்தால் கஷ்டத்தை தீர்த்து வைக்க முடியுமா அப்படின்னு பார்ப்போம். இல்லைன்னாலும் என்னன்னு கேட்கறதுல்லே தப்பு ஒண்ணும் இல்லையே..}

அப்படி என்ன சார் உங்களுக்கு கஷ்டம் ?

பென்சன் வல்லையா.. பேத்திக்கு பத்மா சேஷாத்ரிலே அட்மிஷன் கிடைக்கலையா ? இல்ல, உங்க சகலை பொண்ணுக்கு வரன் கிடைக்கலையா.?
மாட்டுப்பொண் கொடுமையா ?  ஒரு வேளை  ஆதார் கார்டு வல்லையா ?

 {சமகாலத்திய சீனியர் சிடிசன்ஸ் பிரச்னைகளை லிஸ்டினேன். }

அதெல்லாமே இல்லை.

அப்படின்னா, காலைலே பக்கத்து வீட்டுக்காரன் ஹிந்து பேப்பர் ஓசி தரலையா
? ( கொஞ்சம் எரிச்சல் வந்தது வாஸ்தவம் தான் )

இல்லை.

பெட்டர் ஹாப் திட்டினாளா ?

இல்ல.


நீங்க அவளை திட்டிட்டு திட்டிட்டோமோ வருத்தப்படறேளா ?

அதுவும் இல்ல. அவ என்ன திட்ட விட்டாதானே அந்த பிரச்னை.


{ஓஹோ !! வீட்டுக்கு வீடு வாசற்படி.  எனக்கு மூச்சு வாங்கியது. }

அப்ப என்னதான் சார் கஷ்டம்.?

கஷ்டம் இல்ல சார். கொடுமை ஸார் .. தூக்கமே வல்ல.


அப்படியா.?

ஒரு நாள் இரண்டு நாள் இல்ல சார்.  இரண்டு மாசம் ஆயிடுத்து.


அல்ப்ராக்ஸ் சாப்பிடவேண்டியது தானே...  எந்த டாக்டர் கிட்ட போனாலும் தூக்கம் வல்லே அப்படின்னு சொன்னாலே அது தானே தர்றாங்க..

(எனக்கு இந்த ட்ரக்ஸ் பத்தி இருக்கற நாலட்ஜ் , அத நானே அப்பப்ப பெருமையா சொல்லிக்கரதுலே ஒரு இன்பம். )

அதெல்லாம் எனக்கு தெரியாது. சாப்பிடலாம். சாப்பிட்டுண்டும் இருக்கலாம். என் .. பிரச்னை அது இல்லை. விஸ்வநாதன் சார்...

நான் விச்ஸ்வனாதன் இல்லை சார் ...  அழுத்திச்சொன்னேன். 

சரி.. ஏதோ நாதன்..      .....            ராம நாதனா இருக்குமோ...?

என்னோட பேர் இருக்கட்டும். உங்க கஷ்டத்தை சொல்லுங்கோ.

  (ஒரு பதிவுக்கு நல்ல விஷயம் கிடைச்சுடுத்து போல  இருக்கிறது.)

நீங்க நல்லா இருப்பீர்கள். பிறத்தியார் கஷ்டத்தை பார்த்து, இப்படி ஒரு நிமிஷம் சொல்லுங்கோ அப்படின்னு யார் கேட்கறா இப்ப எல்லாம்... லோகம் ரொம்ப மாறிப்போயிடுத்து.  இல்லையா.

ஆமாம்.
அது கிடக்கட்டும்.  சார் முதல்லே  உங்க கஷ்டம். என்னன்னு?

( எனக்கு அவர் தன கஷ்டத்தை சொல்லாமல், போய்விட்டால், எனக்கு இன்றைக்கு தூக்கம் போய்விடுமே என்ற கவலை வந்துவிட்டது.)

அந்த வெங்கடராமன் தெரியுமோன்னோ உங்களுக்கு ?

அந்த பழைய ஜனாதிபதியா ?  அவர் செத்துப்போய் ரொம்ப நாளாயிடுத்தே...

இல்ல.

பின்ன யாரு ?

என் பிரண்டு சார்.

அவரை எனக்கு எப்படி தெரியும் ? உங்களையே எனக்குத் தெரியல்லையே..

இது மாதிரி ஜோக் அடிக்க கூடாது. என் பிரண்டை எப்படி சார் தெரியாமா போகும் ?  சகல வேதத்தையும் கரைச்சு குடிச்சவர் ஆச்சே.


எனக்குத் தெரியாதே...

நீங்க அந்த நோச்சூர் வெங்கடராமன் பாகவதம்  கேட்டு இருப்பீர்கள் இல்லையா ? .

அவரா உங்களுக்கு கஷ்டம் கொடுத்தது ?

{எனக்கு வியப்பு.  அந்த தர்மாத்மா இவருக்கு எப்படி ?}

நான் அவரை சொல்ல இல்லை. இந்த வெங்கடராமன் அந்த வெங்கடராமன் விசிறி. அதாவது பான். இங்க்லீஷ் Fan .

சரி. அதனாலே.

(பதிவர் மாநாட்டு அரங்கின் உஷ்ணத்துக்கு மேல் என் பொறுமை கடந்து விட்டது. )


அன்னிக்கு போன்லே பேசினார். பேசினா மணிக்கணக்கா பேசுவார் . நானும் கேட்டுகிண்டே சில சமயம் தூங்கிக்கூட போயிடுவேன்.

சரி. இப்ப நான் தூங்கினாலும் தூங்கிடுவேன்.

 ( என் காதுக்கு காசுவல் லீவ் கொடுக்கவேண்டிய டயம் வந்து விட்டது  போல தோன்றியது.)

எகைன் ஜோக்கா,வேண்டாம் சார். 
சரி,

ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி, ஒரு கேள்வியைக் கேட்டுட்டு, அதுக்கு பதில் எங்கே கண்டு பிடிங்க... அப்படின்னு சொல்லிட்டார்னா பாருங்க..

சூர்யா ஒரு கோடி லே கேட்கறாமாதிரியா ?

சூர்யாவா ?  யாரு அது ?

சூர்யா யாருன்னா கேட்கறேள்  ? சிவகுமார் பையன். மாற்றான் நடிச்சாரே !!அகரம் பவுன்டேஷன். அப்படின்னு எல்லாமே உங்களுக்கு தெரியாதா  ?

அகரமா? எனக்கு ஆத்துக்காரி தர்ற ஆகாரம் ஒன்னு தான் தெரியும்..

சரி. நீங்க அந்த கேள்வி என்னன்னு சொல்லுங்க...

கேள்வியா ? என்ன கேள்வி ?


என்ன சார் நீங்க தானே வெங்கடராமன் ஒரு கேள்வி கேட்டார் அப்படின்னு சொன்னீர்களே.

வேங்கடராமனா ?  யாரு அது ?

என் மர மண்டையிலே அப்பத்தான் திடீர்னு உரைக்கிறது.

 திஸ் மேன் இஸ் ரியல்லி இன் ட்ரபிள் .  


நான் திரும்பவும் பேச  ஆரம்பிப்பதற்குள், ஒரு அறுபது அறுபத்தி அஞ்சு  வயசு   ஒரு அம்மா,  பாட்டி ன்னு கூட சொன்னா தப்பா இருக்காது.  ஓட்டமும் நடையுமா என்னை நோக்கி வந்தார்.  

உங்களை எங்கே எல்லாம் தேடறது ?  எனக்கு மானம் போறது.  மூணு மணி நேரமா, பக்கத்து, எதித்த, வூட்டுக்காரங்க அத்தனை பேரும் எல்லாரும் தேடு தேடு அப்படின்னு தேடிட்டு இருக்கோம். பேப்பர்லயும் போலீசுலேயும் தான் சொல்லவேண்டியது பாக்கி.           நீங்க இங்க எப்படி இத்தனை தூரம் வந்து விட்டீங்க..கொட்டம் அடிச்சுண்டு இருக்கீக.. ..

 மூச்சு விடாம அந்த அம்மா கத்தாம சத்தறாள்.  

மாமி, அவருக்கு ஏதோ  கஷ்டம் அப்படின்னு சொன்னாரே...

ஒரு கஷ்டமும் இல்ல.இவரோட ஜன்ம ஜன்மாந்திர பாபம்   படர கஷ்டம் எல்லாம் நான்தான். பெருமாள் என்னிக்கு வழி காட்டாப்போறாரோ தெரியல்ல. 

உங்களை எங்கேயோ பார்த்தாமாதிரி இருக்கு, நீங்க எதுக்கு என் கையை பிடிச்சுண்டு இழுக்கறேள் ? 

 என்று கையைப் பிடித்த அந்த பெண்மணியை இவர் பணிவாகவே வினவ,

சன்னமான குரலில்  என் காது பக்கம் வந்து ,

 நீங்க ப்ளீஸ்  ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.  அவருக்கு அல்ஜிமீர்  நாட் fully blown however. 

அவரை தர தர என்று இழுத்துக்கொண்டு போன அந்த மாமி  சீக்கிரமே என் கண்களை விட்டு மறைந்து போனாள்.

அல்சமீர் ??  




30 கருத்துகள்:

  1. எதோ ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்குக் கூட (ரீகன்?) வந்திருக்கும் வியாதி இல்லை? பாவம்.

    பதிலளிநீக்கு
  2. பதிவுகள் எழுதுவதும்
    அல்சைமர் நோய் வராதிருக்க துணை செய்யுமாம் ..!!

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம் ரொம்பவே வருத்தமா இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  4. அதுக்காகத்தானே பதிவு எழுதறேன்.

    பதிலளிநீக்கு
  5. (பதிவர் மாநாட்டு அரங்கின் உஷ்ணத்துக்கு மேல் என் பொறுமை கடந்து விட்டது. )

    இதை ஏன் சின்ன எழுத்தில போட்டிருக்கேள்? கொட்டை எழுத்தில போடவேணாமோ?

    பதிலளிநீக்கு
  6. இந்த நினைவாற்றல் இழப்பு நோயை அடிப்படையாய்க்கொண்ட சில அயல்மொழித் திரைப்படங்களைப் பார்த்துதான் நோயின் தீவிரத்தை அறிந்துகொண்டேன். அதன் பாதிப்பில் நான் முன்பு எழுதிய மறதி என்னும் கவிதையை இன்று பதிய முனைந்தபோது, தங்கள் வலையில் அல்ஜைமர் நோய் பற்றிய பதிவைக் கண்டதும் வியந்தேன். முதியவர்களுக்கு முதுமையில் ஆனந்தம் தருபவை இளமைக்கால நினைவுகளும் பழங்கதைகள் பற்றிய பேச்சும்தான். அவற்றை நினைக்கவும் இயலாமல் தன்னை மறந்து, தன்னவர்களை மறந்து அவர்கள் படும்பாடு ஒருபுறம், அவர்களுடைய உறவுகள் படும்பாடு மறுபுறம். மிகவும் வேதனை தரும் விஷயம் இது. அப்படிப்பட்டவர்களை மிகுந்த அனுசரணையோடு அணுகவேண்டும். தங்கள் பதிவில் நகைச்சுவை இழையோடினாலும் அதையும் மீறி மனத்தில் பாரம் கூடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
      அஸ்மீர் மன நோய்க்கு ஆளானவர்கள் படும் துன்பங்களை நான்
      கவனித்த பல நிகழ்வுகள் என் கடந்த காலத்தில் இருக்கின்றன.

      முதலில் இந்நோயைப் பற்றிய அதிகத் தகவலகளை சிறப்பாக, இதன்
      அறிகுறிகளைப் பற்றி எனது உடல், மன நலம் குறித்த இன்னொரு வழியான

      ல் தான் எழுத நினைத்தேன்.

      இருப்பினும், இந்த காலத்தில் சீரியஸ் ஆக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளை படிப்பவர் மிகவும் குறைவு.

      அதனால், சொல்வதை, ஒரு சுவையுடன் கூட்டி எழுதத் துவங்கினேன்.

      இந்த நோயைக் கட்டுபடுத்த சில புதிய முறைகள் procedures though risky
      தற்பொழுது அமெரிக்காவில் வந்திருப்பதை அங்கு சென்றபோது தெரிந்து கொண்டேன்.

      இந்தியாவில் இந்த நோயைப்பற்றிய சரியான தகவல்களும் இல்லை. முறையான மருத்துவ செயல்பாடுகளும், பாலோ அப் என்று சொல்லப்படும் முறைகளும் இல்லை என வருத்தத்துடன் சொல்லிக்கொள்ள முடிகிறது.

      இந்த தொடர்பினை க்ளிக் செய்ய இந்நோயின் பத்து துவக்க நிலை தெரிந்து கொள்ளளலாம்.
      http://www.alz.org/national/documents/checklist_10signs.pdf
      அதைப் பார்த்து விட்டு, எல்லோருமே அப்பொழுது எனக்கு அஸ்மீர் நோய் இருக்கிறது என பயப்படுவதற்கும் பிரமேயம் உள்ளது.

      அஞ்சுவது அஞ்சாமை பேதமை. அல்லவா...

      சிலவற்றை நாம் மாற்ற முடியும்.
      மற்றும் சிலவற்றை நாம் எதிர்கொள்ளும்போது அதற்கான மன உறுதியைத்
      தான் நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

      நமக்கு , நம்முடன் இருப்பவருக்கு, ஏன் இந்த நிலை என எண்ணி எண்ணி இருக்கும் நாட்களையும் இன்னலுடன் கழிப்பதை விட, learn to live with it with an emboldened heart .
      Let it be.

      உங்கள் கவிதைகள் எனக்கு எப்பொதுமே பிடிக்கும்.
      மறதி கவிதை தனையும் மறக்காமல் படித்தேன்.

      சுப்பு தாத்தா.

      குறிப்பு: நீங்கள் பதிவு விழாவுக்கு வந்திருந்தீர்களா ?










      நீக்கு
    2. அல்ஜைமர் பற்றிய விளக்கமான தெளிவுரைக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா. தங்கள் நகைச்சுவையில் நான் குற்றம் சொல்லவில்லை. இப்படி எழுத வாய்ப்பதும் ஒரு வரமல்லவா? உண்மையில் இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன். அத்துடன் தாங்கள் குறிப்பிட்டது போல, அந்நோயாளிகளின் மனநிலையைப் பற்றிய புரிதல் நம் நாட்டில் அவ்வளவாக இல்லையே என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது. அதைத்தான் முடிவில் அவ்வாறு குறிப்பிட்டேன்.

      பதிவர் திருவிழாவில் கலந்துகொள்ள ஆசைதான். ஆனால் என்ன செய்ய? ஆஸ்திரேலியவாசியாகி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டனவே. இனிவரும் திருவிழாக்களிலாவது கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.

      நீக்கு
  7. அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இறைவன் நல்வழி அருள்வானாக!..

    பதிலளிநீக்கு
  8. காஸ்மீர் இந்தியாவுக்கு தலை வலின்னா,அஸ்மீர் பக்கத்தில் உள்ளவங்களுக்கு தலை வலி ...கஷ்டம்தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. It is true that the patient becomes a perennial liability to the kith and kin around.

      For those, who depend on him, it is irreparable loss.

      subbu thatha.

      நீக்கு

  9. அன்பு சுப்புத் தாத்தா, எல்லோராலும் இப்படியே நீங்கள் அறியப் படுவதால், இவ்வாறே அழைக்கிறேன். வணக்கம். இந்த நோயைப் பற்றி நான் நினைவலைகள் தடைபட்டால் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.பார்க்க
    gmbat1649.blogspot.in/2011/08/blog-post_04.html .இதற்கு ஒரு காப்பகம் நிறுவியுள்ள ஒருவர் அதன் காரணமாக விவாகரத்து பெற்றதும் கூடுதல் செய்திகள். நீங்கள் சொல்வது சரிதான். நோயைப் பற்றிய பயம் அதிகம் தெரியாமல் இருக்க நீங்கள் எழுதிய விதமும் நன்றாக இருக்கிறது. , பதிவர் விழா பற்றி எழுதுவீர்கள் என்று நினைத்திருந்தேன்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவை இப்பொழுது படித்தேன்.

      நீங்கள் சொல்பவருக்கு amnesia, dementia, selective amnesia போன்றவை இருக்கலாம்.
      ஒரு full blown Alzheimer நோயாளிக்கு தன்னை யாரெனத் தெரியாத நிலை.
      நீங்கள் சொல்பவருக்கு , அவருடைய செருப்பு என்று ஒன்று இருக்கிறது, அது தொலைந்து போய்விட்டது என்ற உணர்வு இருக்கிறது. மேலும் அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்தோம் என்று அவர் நினைக்கிறார் அல்லவா ?

      இது அல்ஜிமீர் அல்ல. இது செலெக்டிவ் டெமென்சியா வகையை சாரும்.

      நிற்க. ஒரு fully blown அல்ஜிமீர் நோயாளி மலம் கழித்தபின்னே அதை கழுவிக்கொள்ள வேண்டும் என உணர்வதில்லை.

      அவர் முன்னே அவர் விரும்பி உண்ணும் உணவை வைத்தாலும் அது உணவு , அது தனக்கு என தெரிவதில்லை.

      The state is pure vegetative existence. It is terrific to see such patients. There are a few support groups for these patients.

      Again, this disease is different from senility, which is often what happens to elderly.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. //பதிவர் விழா பற்றி எழுதுவீர்கள் என்று நினைத்திருந்தேன்....!//

      I thought of writing, albeit I abandoned the idea later. A good many have spelt out their responses .

      BTW, you dont need to worry over things over which you dont have control.

      subbu thatha.

      நீக்கு
  10. சார் என்று அவர் கூப்பிட்டதும் நீங்கள் திரும்பியிருக்க வேண்டும்; அதற்குப் பதிலாக நீங்கள் ’துனபிம்ருதி’ தான் தப்பாகப் போச்சு!

    பதிலளிநீக்கு
  11. //அப்படின்னா, காலைலே பக்கத்து வீட்டுக்காரன் ஹிந்து பேப்பர் ஓசி தரலையா//

    தாத்தா, விழுந்து விழுந்து சிரிச்சேன் போங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதானே ஒரு ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது when u were travelling in a bike என்று எழுதினீர்கள்.
      திரும்பவும் விழுந்து விட்டீர்களா ?
      எதற்கும் ஒரு ஏ .டி. எஸ். போட்டுக்கொள்ளுங்கள்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  12. சுவையாய் சென்ற பதிவு கடைசியில் கொஞ்சம் மனம் கனத்தது. தாத்தா மலையாள படம் எல்லாம் பார்ப்பீங்களான்னு தெரியாது, மோகன்லால் நடிச்சு வந்த "தன்மாத்ரா"ங்கிற படத்துல இந்த அல்ஜீமர் வந்தா என்னாகுமுன்னு டீட்டையிலா சொல்லியிருப்பா.. அத பார்த்ததுல இருந்தே அல்ஜீமர் கொடுமை யாருக்குமே வரக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞான் மலையாளம் அறியும்.
      எங்கன பதிவு பார்த்தோ. அவட மலையாள சங்கீதங்கள் கேட்டோ?

      இப்ப நோக்கான்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  13. சுப்பு ஐயா,
    உங்கள் பதிவு நகைச்சுவையாக சென்றாலும் மனம் கணக்க படித்து முடித்தேன். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. இப்பொழுது தான் இதைப் பற்றியெல்லாம் கேள்விபடுகிறோம். அது தான் ஏன என்று புரியவில்லை.
    நல்ல விழிப்புணர்வு பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. As we age, we are to immerse ourselves in diversified activities, which is one way to avoid the problem. In any case, a little amnesia is unavoidable.



      subbu thatha.

      நீக்கு
  14. இப்படி ஒரு நோய் நிச்சயமாக இருக்கா ? அல்லது நகைச்சுவைக்காக எழுதியதா ?
    ரக ரகமா நோய் வரும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி என்பது பொதுவாக என்னை மாதிரி கிழம் கட்டிகளுக்கு
      வர்றதுதானே என்று
      முதியவர்களை வீட்டுத் திண்ணையிலே ஓரம் கட்டிவிடுவதை
      நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

      இந்த நோய், சாதாரணமாக, வரும் அம்னீசியா, டிமென்சியா போன்று அல்ல என்பதை மேலும் அறிய,

      நான் கொடுத்துள்ள தொடர்புகளுக்குச் சென்று படிக்கும்.

      நீங்கள் வெளியீட்ட புத்தகம் எங்கே கிடைக்கிறது ? நான் பதிவர் விழாவன்று மாலை வரை இல்லை.அதனால் பார்க்க இயலவில்லை.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  15. சார்! சிலசமயம் உங்கள் பதிவுகளில் அல்ப்ராக்ஸ், அஸ்மீர் என்ற பெயர்கள் வந்து போகின்றன. இவைகளைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதவும்.

    பதிலளிநீக்கு
  16. Alzheimer என்று சொல்லப்படும் கொடிய மறதி நோயினால் பாதிக்கப்பட்டவரின் துவக்க கால நிலை பற்றி தான் இந்த பதிவே சொல்கிறது.

    இந்த நோயினைப் பற்றி மேலும் தகவல் அறிய இரண்டு தொடர்பு லிங்க் கள் தந்திருக்கிறேன். பதிவிலேயே இருக்கின்றன. அவற்றைப் படிக்கவும்.

    அதிகம் அறியப்படும் அம்னீசியா, டிமன்சிய இவற்றின் ஒரு ருத்ர தாண்டவம் தான் இந்த அல்ஜிமீர் . ஏழை, பணக்காரன், என்று பாகுபாடு இல்லாது யாருக்கு வேண்டுமானாலும், வரக்கூடியது. தான் யார் என்பது தனக்கே மறந்து போகும் நிலை. சுற்றி இருப்பவர் யார் எனத் தெரியாது தவிக்கும் நிலை. தனது அன்றாட செயல்களையே தானே செய்யமுடியாத நிலை. இது முற்றிய நிலையில் நோயாளி தனக்கே தான் ஒரு liability ஆக இருக்கிறார். இதற்கு இன்னமும் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கப்படவில்லை. இதன் கோரத்தை பொறுத்துக்கொள்ள சில மருத்துவ ரீதிகள் சொல்லப்படுகின்றன. அவ்வளவு தான். உடன் இருப்போர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பாரோ அது வரை இவர் ..........

    அல்ப்ராக்ஸ் என்பது ஒரு anxiety reliever. இதை மன உளைச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றுமன்றி, ரத்த அழுத்தம் மன அமைதியின்மையினால், அல்லது ஒரு சில மன நோய் இருப்பவர்களுக்கும், தூக்கமே இல்லாது தவிப்பவருக்கும், தரப்படுகிறது. இதை மருத்துவர்கள் பிரஸ்கிரைப் செய்து பின் சாப்பிடுவதே நல்லது. மற்ற தூக்க மாத்திரைகள் போல் அல்லாது இதற்கு ஒரு அடிக்ஷன் தொந்தரவு உண்டு. ஆக, சிறிது சிறிதாக இதை தொடர்ந்து சாப்பிடாது கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது நல்லது.
    அல்ப்ரசோலம் எனப்படும் இது ஒரு psychotic drug. மருத்துவர் மேற்பார்வையிலே தான் இதை உட்கொள்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  17. ஐயா.. வணக்கம்! நான் இளமதி. இந்த வலைப்பூ எப்போ ஆரம்பித்தீர்கள். இன்று உங்களைத்தேடி வந்தபோது தற்செயலாக உள்நுளைந்தேன்...
    நாந்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லைப் போலும்...:(

    என் கணினிக் கோளாறால் அதிகம் எல்லோரிடமும் போக இயலாமல் இன்னும் தவிக்கின்றேன்.
    இன்னும் ஓரிரு வாரங்களில் சீராக வாய்ப்புண்டு.

    இங்கும் உங்களின் இப்பதிவை ஆறுதலாக அமைதியாக இருந்து படிக்கவேண்டும் என்பதால் இப்போ இங்கு என் வரவை மட்டும் இட்டுச்செல்கிறேன்..

    மீண்டும் வருவேன் ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இளமதி அவர்களே .
      அண்மையில் நடந்த பதிவர் மா நாட்டில் தங்கள் கவிதைகள் எத்துனை உயிருள்ளவைகளாக திகழ்கின்றன என அங்கு வந்த என் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன்.
      நீங்கள் தற்பொழுது எழுதியிருக்கும் பாடலையும் மூன்று ராகங்களில் பாடி பதிவு இட்டிருக்கிறேன்.

      இதையும் சேர்த்து நான் ஒரு பதினைந்து வலைகள் வழியே எழுதுகிறேன்.

      பொழுதுபோக்கு அம்சங்கள் பயண அனுபவங்கள் இந்த இரண்டு வலைகளில்:
      www.subbuthatha.blogspot.com
      www.subbuthatha72.blogspot.com
      உடல் மன நலம் பற்றிய கருத்துக்கள், விவரங்கள்.
      www.Sury-healthiswealth.blogspot.com

      கர்நாடக சங்கீத இசை பற்றிய பதிவுகள்.
      www.movieraghas.blogspot.com
      கந்தன் பாடல்கள்.
      www.kandhanaithuthi.blogspot.com
      எனது குடும்ப வலை.
      www.menakasury.blogspot.com

      இதையெல்லாம் தவிர ஒரு ஆன்மீக வலைப்பதிவு.
      www.pureaanmeekam.blogspot.com

      இது போதாது என என் அம்மாவுக்கு பிடித்த பாடிய பாடல்கள் என ஒரு வலைப்பதிவு.

      www.mymomsings.blogspot.com
      எனக்கும் பொழுது போகவேண்டுமல்லவா


      நேரமில்லை என்று நினைக்காது, அவசியம் இந்த பதிவை முழுமையாக பொறுமையாக படித்து பதில் போடவும்.

      நலம். நலம் அறிய அவா. அங்கு மழை பெய்ததா ? இங்கு காவிரியில் இந்த வருடம் தண்ணீர் வந்தது.

      சுப்பு தாத்தா.
      www.vazhvuneri.blogspot.com

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா! தங்களின் பதில் கண்டு உள்ளம் சிலிர்த்தேன்.
      நான் ஒன்றும் பிறவிக் கவிஞர் இல்லை ஐயா! என் கணவர், தாத்தா, தந்தை இவர்களின் ஞானத்தால் எனகுள்ளும் சுயமாக உள்ள ஆர்வத்தினாலும் ஏதோ எழுதுகிறேன்.
      ரசித்துப் பாராட்டுவதோடல்லாமல் மாநாட்டிலும் எனது எழுத்துக்களைப்பற்றி சிலாகித்துள்ளீர்களா... நன்றி மிக்க நன்றி ஐயா!

      எனது இறுதிப் பதிவைப் பாடி எங்கு நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள்?
      தேடினேன் காணவில்லை... இங்கேயே பதிலில் தாருங்கள். வந்து பெற்றுக் கொள்கின்றேன்.

      இங்கு ஜேர்மனியில் இப்போ தான் மழைக் கால ஆரம்பம்.. இன்னும் பலமாக இல்லை... ஆனால் தொடரவிருக்கும் குளிர், பனியை - ஸ்நோ- வை நினைத்து உடல் இப்பவே நடுங்குகிறது..

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு