சும்மா இருங்க..
என்ன சும்மா இருங்க ?
சும்மா இருங்க என்று தானே சொன்னேன். அதுக்கு ஏன் இப்படி சத்தம் போடறீங்க...
நீ தான் நாலு வீடு கேட்கும்படியா சும்மா இருங்க அப்படின்னு கத்துற..
நான் சொல்றது அடுத்த ரூமுக்கு கூட கேட்காது. நீங்க பேசுறது தான் நாலு வீடு என்ன நாலு ப்ளாக் அப்பால கூட கேட்குதாம்.
அப்படி என்ன நான் கத்தினேன் .??
இப்ப கத்தறது போதாது ?
இங்க பாரு, நீ தான் ஆரம்பிச்ச, இப்ப நீயே குத்தம் சொல்ற ...
ஐய்யய்ய ... நான் ஒண்ணும் சொல்லலீங்க...சும்மா இருங்க அப்படின்னு தானே சொன்ன்னேன்.
அது போதாதா ? சும்மா சிவனே அப்படின்னு விழுந்து கிடக்கேன். என்ன புடிச்சு
சும்மா இருங்க அப்படின்னா என்ன அருத்தம் அப்படின்னேன்.
சிவ சிவா இன்னிக்கு சனிக்கிழமை.
ஏன் ? சனிக்கிழமை சிவா சிவா அப்படின்னு சொல்லக்கூடாதா
இத பாருடா. என்ன சாக்கு அப்படின்னு சண்டைக்கு வந்துடீங்க..
நானா சண்டைக்கு வர்றேன். நீ தானே சும்மா இருக்கரவன சும்மா இரு சும்மா இரு அப்படின்னு சும்மானாச்சியும் சொல்றே...
அது சும்மா சொன்ன்னேங்க...
அப்ப சும்மா இரு அப்படின்னு சும்மா சொல்றியா. என்ன ?
அது அப்படி இல்லீங்க..
சும்மா வெறுப்பேத்தாதே.. கோவிலுக்கு போர டைம் ஆயிடுச்சு.
என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போ.
சொல்லட்டுமா..
சொல்லு...
திரும்பவும் சண்டை போட ஆரம்பிச்சுடாதீங்க..
என்னடா வம்பாப்போச்சு. சரி சண்டை போடல்லே. சொல்லு.
அதாங்க..
என்ன அதாங்க...
சும்மா இருந்தாலே போதும் . இன்னிக்கு உலக அமைதி தினம். இன்னிக்காவது ஒரு நாள் நம்ம இல்ல, நீங்க சும்மா இருந்தா அமைதியா இருக்கும்ல, நம்ம ஊடு, அத சொல்லத்தான் கூப்பிட்டேன்.
என்ன உலக அமைதி.?
ராஜேஸ்வரி தளத்திற்கு போய் பாருங்க...
இனிய வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு