ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பங்காரு காமாக்ஷி அம்மனை பாட எனக்கு வாய்ப்பு அளித்த திரு துரை செல்வராஜ்

இன்று காலை விடிந்ததுமே கணினியைத் திறந்தேன்.










.

வழக்கம்போல திருமதி ராஜேஸ்வரி அவர்களின் கருட பஞ்சமி பற்றிய தகவல்கள் பல உள்ளன. பெருமாளுக்கு மேலே கொடியிலும் வாகனமாகவும் வீற்றிருக்கும் கருடாழ்வாரின் பதிகம் படித்து மனமகிழ்ந்தேன்.

அடுத்து கண்ணில் பட்டது தஞ்சையம்பதியாக தஞ்சை மா நகரில் இருந்து பதிவுகள் எழுதி வரும் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சை மேல வீதியில் அருள் பாலிக்கும் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவிலின் வரலாற்றினை மிக சிறப்பாக வர்ணித்தது மட்டுமன்றி சியாமா சாஸ்த்ரிகள் பாடிய பதிகம் ஒன்றையும் அவர்கள் இட்டு இருந்தார்கள்.

தஞ்சை காமாக்ஷி அம்மன் கோவில் சரித்திரமும் சியாமா சாஸ்த்ரி அவர்கள் கிருதியையும் படிக்க அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.

இன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு இணையே இல்லை.  தஞ்சையில் பங்காரு காமாக்ஷி அம்மனை தரிசிக்க, அவள் புகழ் பாடும் சியாமா சாஸ்த்ரிகள் அவர்களின் கிருதியைப் பாடவும் எனக்கு பணிக்கப்பட்டு இருந்தது போலும்.

எனக்கே உரித்த வகையில் பாடி விட்டேன்.


நான் பாடகன் அல்ல. இருப்பினும் மனதிலே ஒரு வேகம். ஒரு உத்சாகம்.
ஆதலால், ஸ்ருதியில் தாளத்தில் சுத்தம் இருக்கிறது என்று நான் சொல்ல முடியாது.

காவிரி ஆற்றில் வெள்ளம் அலை மோதுகிறது.  கிராமங்களுக்கு எல்லாம் நீர் வந்து வயல்கள் செழிப்பாக ஆகும் நிலை இன்று.

தஞ்சையைச் சார்ந்த என் மனதிலும் பக்தி வெள்ளம்.
பங்காரு காமாக்ஷி அம்மனை பாட  எனக்கு வாய்ப்பு அளித்த
திரு துரை செல்வராஜ் அவர்கட்கு மனமார்ந்த நன்றி.

4 கருத்துகள்:

  1. தஞ்சை மேல வீதியில் அருள் பாலிக்கும் பங்காரு காமாக்ஷி அம்மனுக்கு எங்கள் கோவை நாராயணீயம் , மூகபஞ்சதி வாசிக்கும் குழுவினர் ஆளுக்கு கொஞ்சம் பணம் சேகரித்து தங்க வீணை செய்து சமர்ப்பித்தோம் .. இனிய மலரும் வீணை நாதங்களை மீட்டிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப் பெருமைகளும் அன்னை பங்காரு காமாக்ஷிக்கே!.. அடியேனையும் எழுதப் பணித்தாள்..வழித்துணை அவளே!.. அனைவருக்கும் நல்லருள் பாலிப்பாளாக!..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நன்றாக இருக்கிறது.
    பங்காரு காமாட்சி அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு