சுப்பு தாத்தா தெரு ஓரமாக போய்க்கொண்டு இருந்தார்.
அங்கே ஒரு வீட்டு வாசலில் ஒரு கிழட்டு நாய் ரோடில் ஏதோ விபத்தில் அடிபட்டு கிடந்தது. பார்த்தால் நல்ல ஜாதி நாய் போலும் .
துடி துடிக்கிறதா என்று அருகில் சென்று பார்க்க முடியவில்லை. கண்கள் திறந்து தான் .இருந்தன
அப்பப்ப நாய் சத்தம் போட்டது. என்ன வென்று நின்று பார்த்தேன்.
ஒரு தூரத்தில் இருந்து இருவர் அதை கல்லால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
நான் சும்மா எனது வழியை பார்த்துக்கொண்டு போயிருக்கலாம். பல சமயங்களில் சும்மா இரு என்ற உபதேசம் ஞாபகத்துக்கு வருவதில்லை.
முதலில் கண்ணில் பட்ட ஒருவனிடம் சென்று கேட்டேன்
" அந்த நாய் தான் அடிபட்டு கிடக்கிறதே ஏன் அதை அடித்துக் கொல்கிறாய் ?"
அவன் என்னைப் பார்த்தான். நாயைப் பார்த்தான்.
நாயைப் பார்த்தீகள்லே ? என்றான்.
பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். என்றேன்.
துடிக்கிறது தெரியவில்லையா என்றான்.
ஆமாம். ஆமாம். அதற்காகத் தான் கேட்டேன். நீங்களும் அதை ஏன் அடிக்கிறீர்கள் என்று."
"ஒரு ஜீவ காருண்ய அடிப்படையில் தான். இதற்கு மெர்சி கில்லிங் அப்படின்னு பெயரு. . உனக்கு புரியாது. போயிடு சீக்கிரம் என்றான்
அவனை விட்டு நகர்ந்தாலும்,இன்னொருவனும் பக்கத்தில் இருந்து கொண்டு அதை அடிக்கிறானே . அவனை கேட்போம் என்று அவன் பக்கம் போனேன். இது எனக்கு வேண்டாத வேலை தானே எனக்கு தோன்றவில்லை.
சார் ... நாயை ஏன் அடிக்கிறீர்கள். ? அதுவே செத்துப்போய்கொண்டு தானே இருக்கிறது ? துணிந்து நிதானமாகத்தான் கேட்டேன்.
யோவ் பெரிசு .. உனக்குத் தெரியாது.. "
"ஆமாம். எனக்குத் தெரியாததால் தானே கேட்கிறேன்."
ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை கடித்து விட்டது.எனக்கு ஊசி,ஆபரேஷன் என்று ஏகப்பட்ட செலவு, டென்சன் வேற .செமத்தியா. ஒரு வருஷம் மன உளைச்சல் .."
அப்ப, அப்பவே அடித்து கொன்று இருக்கலாமே என்று அப்பாவியாய் கேட்டேன்.
அப்ப அந்த நாய் ஓனர் இருந்தார். இதுக்கு ஊசி எல்லாம் போட்டு இருக்கேன். அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது. உனக்கு பயம் ஆ இருந்தா நீ ஊசி போட்டுக்கோ என்று என்னை உதறித் தள்ளிவிட்டார்.
இப்ப அவர் இல்லையா ?
(மேலே தன் கையை உசத்திக் காட்டிக்கொண்டே )
அவர்கிட்டே தான் இந்த நாயை நான் அனுப்பிச்சிட்டு இருக்கேன்.
இந்த தாத்தாவுக்கு அவன் ( சாரி, அவர் ) சொன்னது புரியவில்லை. புரியும் என்ற நம்பிக்கையும் இல்லை.
மேற்கொண்டு நடந்து போனபோது அவரே மனசுக்குள்ளே அசை போட்டார்.
இந்த சுப்பு தாத்தா ஒரு அச மஞ்சம்.
யாருக்காவது புரிந்தால், தாத்தாவுக்கு புரிய வையுங்களேன்.
அங்கே ஒரு வீட்டு வாசலில் ஒரு கிழட்டு நாய் ரோடில் ஏதோ விபத்தில் அடிபட்டு கிடந்தது. பார்த்தால் நல்ல ஜாதி நாய் போலும் .
துடி துடிக்கிறதா என்று அருகில் சென்று பார்க்க முடியவில்லை. கண்கள் திறந்து தான் .இருந்தன
அப்பப்ப நாய் சத்தம் போட்டது. என்ன வென்று நின்று பார்த்தேன்.
ஒரு தூரத்தில் இருந்து இருவர் அதை கல்லால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
Courtesy: google. |
முதலில் கண்ணில் பட்ட ஒருவனிடம் சென்று கேட்டேன்
" அந்த நாய் தான் அடிபட்டு கிடக்கிறதே ஏன் அதை அடித்துக் கொல்கிறாய் ?"
அவன் என்னைப் பார்த்தான். நாயைப் பார்த்தான்.
நாயைப் பார்த்தீகள்லே ? என்றான்.
பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். என்றேன்.
துடிக்கிறது தெரியவில்லையா என்றான்.
ஆமாம். ஆமாம். அதற்காகத் தான் கேட்டேன். நீங்களும் அதை ஏன் அடிக்கிறீர்கள் என்று."
"ஒரு ஜீவ காருண்ய அடிப்படையில் தான். இதற்கு மெர்சி கில்லிங் அப்படின்னு பெயரு. . உனக்கு புரியாது. போயிடு சீக்கிரம் என்றான்
அவனை விட்டு நகர்ந்தாலும்,இன்னொருவனும் பக்கத்தில் இருந்து கொண்டு அதை அடிக்கிறானே . அவனை கேட்போம் என்று அவன் பக்கம் போனேன். இது எனக்கு வேண்டாத வேலை தானே எனக்கு தோன்றவில்லை.
சார் ... நாயை ஏன் அடிக்கிறீர்கள். ? அதுவே செத்துப்போய்கொண்டு தானே இருக்கிறது ? துணிந்து நிதானமாகத்தான் கேட்டேன்.
யோவ் பெரிசு .. உனக்குத் தெரியாது.. "
"ஆமாம். எனக்குத் தெரியாததால் தானே கேட்கிறேன்."
ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை கடித்து விட்டது.எனக்கு ஊசி,ஆபரேஷன் என்று ஏகப்பட்ட செலவு, டென்சன் வேற .செமத்தியா. ஒரு வருஷம் மன உளைச்சல் .."
அப்ப, அப்பவே அடித்து கொன்று இருக்கலாமே என்று அப்பாவியாய் கேட்டேன்.
அப்ப அந்த நாய் ஓனர் இருந்தார். இதுக்கு ஊசி எல்லாம் போட்டு இருக்கேன். அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது. உனக்கு பயம் ஆ இருந்தா நீ ஊசி போட்டுக்கோ என்று என்னை உதறித் தள்ளிவிட்டார்.
இப்ப அவர் இல்லையா ?
(மேலே தன் கையை உசத்திக் காட்டிக்கொண்டே )
அவர்கிட்டே தான் இந்த நாயை நான் அனுப்பிச்சிட்டு இருக்கேன்.
இந்த தாத்தாவுக்கு அவன் ( சாரி, அவர் ) சொன்னது புரியவில்லை. புரியும் என்ற நம்பிக்கையும் இல்லை.
மேற்கொண்டு நடந்து போனபோது அவரே மனசுக்குள்ளே அசை போட்டார்.
இந்த சுப்பு தாத்தா ஒரு அச மஞ்சம்.
யாருக்காவது புரிந்தால், தாத்தாவுக்கு புரிய வையுங்களேன்.
அவர்கிட்டே தான் இந்த நாயை நான் அனுப்பிச்சிட்டு இருக்கேன்.
பதிலளிநீக்குமெர்சி கில்லிங் அப்படின்னு பெயரு. .!1
ஓனரை முதலில் அனுப்பிவிட்டு
செல்லத்தை பிறகு அனுப்புகிறார்களோ!!
mercy killing
நீக்குபந்தயக் குதிரைகளுக்கு முதுகு எலும்பு உடைந்துபோகும் நேரத்தில், அவைகளை சரிப்படுத்தவும் இயலாத நிலையில், இனி, அந்தக் குதிரைகளால் ஏதும் பயன் இல்லாத நிலையில், அந்த குதிரைகள் படும் அவஸ்தையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த குதிரைகளை ஒரே ஒரு குண்டின் மூலம் அந்த லோகத்துக்கு அனுப்பி விடுவார்கள்.
எனக்குத் தெரிந்து, ராக் ஹெவன் பெண் குதிரை ( பெயர் அது தான் என நினைக்கிறேன் . ரெட் ஹெவென் பெடிக்ரீ ) பத்து பதினைந்து பந்தயங்கள் தொடர்ச்சியாக செயித்து கோடிக்கணணக்கில் சொந்தக்காரருக்கு சம்பாதித்து கொடுத்த குதிரையின் முடிவு இப்படி சோகமாகத் தான் முடிந்தது.
கான்சரில் போராடும் நோயாளிகள், இனி உயிருடன் இருப்பது சாத்தியமல்ல என்று நினைக்கப்படும் கோமா ஸ்டேஜ் சென்ற வியதியஸ்தர்களுக்கும் யூதேனிசியா தருவது பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் நடக்கத்தான் செய்கிறது. நமது நாட்டில் இது அனுமதிக்கப்படவில்லை.
எப்படி இருந்தாலும், கொடுமையாக சாகடிக்கப்படுவது சகிக்க முடியாத ஒன்று.
கற்றுணைப் பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்னும் பாடல் ஒன்றே கடைசி காலத்தில் பயன் தரும் என நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் /
சுப்பு தாத்தா.
வருத்தமா இருக்கு! :(
பதிலளிநீக்குஉங்க பதிவிலே வயசான அம்மா அப்பாவைப் பத்தி நீங்க எழுதியதை
நீக்குநேற்று இரவு படிச்சு ஒரு நீண்ட கமெண்டும் போட்டு இருக்கேன்.
இந்த பதிவுலே " நாய் " அப்படிங்கரத்துக்கு பதிலா அம்மா அப்பா அப்படின்னு போட்டு இருந்தாலும் தப்பு ஒன்றும் பெரிசா இருக்காது என்றும் எனக்குத் தோன்றியது.
என்ன ? அம்மா அப்பாவை கல்லால் அடிப்பது இல்லை. சொல்லால் அடிக்கிறார்கள்.( in many houses where I have occasion to visit )
சுப்பு தாத்தா.
இப்படியுமா... மூடர்கள் இருப்பார்கள்!.. வாயில்லா ஜீவன் மீது கருணை வேண்டாமா?...
பதிலளிநீக்குகருணை என்றதெல்லாம் இந்த நாட்களில் யதார்த்தம் இல்லை.
நீக்குநடப்பதை ஜீரணிக்கும் சக்தியும் இந்த வயதில் இல்லை.
சுப்பு தாத்தா.
இப்படியுமா மூடர்கள் இருப்பார்கள்.. வாயில்லா ஜீவன் மீது கருணை வேண்டாமா?..
பதிலளிநீக்குபல விஷயங்கள் புரியாமலிருப்பதே மேல்.
பதிலளிநீக்குஎங்கும் நிறைப் பரம்பொருளும் தன்னை முழுவதும் புரியாத
நீக்குநிலையில் தான் வைத்துள்ளான்.
ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
நீங்கள் சொல்வது சரியே.
சுப்பு தாத்தா.
இந்த நிகழ்வு நிச்சயம் இந்தியாவில்தான் நடந்து இருக்கும் சரியா?
பதிலளிநீக்குஒரு பகுதி இந்தியாவில் நடக்கவில்லை.
நீக்குசுப்பு தாத்தா.
அதை அடிக்காது விட்டிருந்தால் முடிவு அதற்கு தானாகவே ஏற்பட்டிருக்குமே.... என்ன மனிதர்களோ..... சக மனிதர்களையே துன்புறுத்தும் நாள் இது.....
பதிலளிநீக்குExactly.
நீக்குsubbu thatha.
நாய்க்கு உதவ போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொல்லாமல் இருந்தீர்களே!!
பதிலளிநீக்குபிறர்க்கு உதவி செய்கிறோம் என்ற நினைப்பில் ,தேவை இல்லாத
நீக்குபல அவஸ்தைகள் மன உளைச்சல்கள் ஏற்கனவே பல அனுபவிச்சாச்சு.
இது வேறேயா ...
சுப்பு தாத்தா இப்ப எல்லாம் கொஞ்சம் புத்திசாலி.
சுப்பு தாத்தா.
தாத்தாவுக்கே புரியலேன்னா எங்களுக்கு மட்டும் புரியுமாக்கும்..
பதிலளிநீக்குஇவிங்க எல்லாம் எப்பவுமே இப்படித்தான் தாத்தா..!