பதிமூணும் பதிமூணும் எத்தனை?
இருபத்தி ஆறா ??
சரியாத்தான் இருக்கணும்.
1987ம் வருஷம் அப்படின்னு நினைவு.
அப்ப எனக்கு ஊர் சுத்தற வேலை. அப்படி சுத்திகினே இருக்கும்போ எதுனாச்சும் ஒரு ஆபீஸுக்குள்ளே போயி இன்னாடா பண்ணிகிட்டு இருக்கீக அப்படின்னு கேட்கணும், பார்கணும், பார்த்ததை ரிபோர்டா எழுதி மேலிடத்திற்கு அனுப்பணும்.
தகவல் ஏதும் தராம, திடீர் அப்படின்னு விசிட் செஞ்சு, என்ன தப்பு நடக்குது, ( உண்மையிலே சரியா ஏதும் நடக்குதா ) அப்படின்னு கண்டுபிடிக்கறது எங்க வேலைல ஒண்ணு. இதுக்கு சர்ப்ரைஸ் விசிட் அப்படின்னு பேரு.
இதுலே சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தகவல் கொடுத்துட்டு போகும்போது எங்க தங்குவது, எங்க சாப்பிடுவது அப்படி எல்லா விவரங்களும் முன்னமேயே முடிவா இருக்கும். நாங்க போற டீம்லே யாரு வெஜ், யாரு நான் வெஜ் அப்படின்னு சொல்லிடுவோம் , அதற்கு தகுந்தாற்போல, எது நல்ல ஹோட்டல் அப்படின்னு பார்த்து வச்சுருப்பாங்க, எங்களுக்கு, கஷ்டம் ஒண்ணும் இருக்காது.
ஆனா,நாங்க போனது கேரளா மாநிலத்திற்கு. திரூர் அப்படின்னு ஒரு ஊர்.அந்த ஊர் அலுவலகத்திற்குத்தான் சர்ப்ரைசா போகணும் அப்படின்னு முடிவெடுத்தாக எங்க மத்திய அலுவலகத்திலே...
என்னதான் திரூர் திருச்சூர் பக்கத்துலே இருந்தாலும், இது திருச்சூர் மாதிரி இல்லைங்க.
திருச்சூர்லே நல்ல ஹோட்டல் எல்லாம் கீது.
ஆமாங்க, அந்த பூர திருவிழா அன்னிக்கு எல்லா யானையும் ஒரு இருபது சேர்ந்து நின்னு பஞ்ச வாத்தியம் ஒரு நாலு மணி நேரத்திற்கு ஊரே திருவிழா வா இருக்குமே...அதே திருச்சூர் தான்.
ஆனா, பக்கத்திலே இருக்கிற திரூர் லே சுத்தம். பேருக்குக் கூட அந்த நாட்களிலே சுத்த சைவம் அப்படின்னு ஒரு ஹோட்டல் கூட கிடையாது.
நாங்க போன நேரமும் ரம்ஜான் மாதம். ஹோட்டல் எல்லாமே பகல்லே கிடையாது. இப்ப எப்படியோ தெரியல்ல.
நாங்க மங்களூர் எக்ச்ப்ரஸ்ஸிலே திரூர் ஒரு வழியா ஸ்டேசனில் இறங்கி, ரிக்க்ஷா பிடிச்சு, அலுவலகம் எங்கே இருக்கு அப்படின்னு கண்டுபிடிச்சு, ஒரு வழியா 11 மணிக்கு போய் சேர்ந்தோம். சாதாரண ஆடிட் விசிட்டுக்கு எல்லாம் ஸ்டேசனுக்கே கூட்டிட்டு போக அந்த ஊர் மானேஜர் வந்திருப்பார். இது சர்ப்ரைஸ் இல்லையா ? ஓருவரும் இல்லை. மழை வேற.
அலுவலகத்துக்கு போய், நாங்க யார் அப்படின்னு சொல்லி, ஐ.டி. எல்லாம் காண்பிச்சு, எங்க வேலையைத் துவங்கினோம். ஒரு இரண்டு அல்லது மூணு நாள் ஆகும் சாதாரணமா, எங்க வேலைய முடிக்க.
ஒரு இரண்டு மணி இருக்கும். பசி வயிற்றை கிள்ளியது. லஞ்ச் க்கு போக வேண்டும் என்று சொன்ன போது, அந்த அலுவலக மானேஜர் பக்கத்தில் வந்து, ரம்ஜான் மாதம், பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. ஆக, கொஞ்சம் 20 அல்லது 20 மைல் போய் தான் சாப்பிடனும். வாங்க, சீக்கிரம் போகலாம் என்றார்.
சரி அப்படின்னு கிளம்பினோம். கார் போயிட்டே இருக்குது. ஆனா ஹோட்டல் வந்த பாடில்லே....
கூட வந்த மானேஜர் கொஞ்சம் அப்செட்டா போயிட்டார். எதிர்பார்த்து வந்த ஹோட்டல் கூட மூடி இருக்குதே.. இனி மாலை தான் திறக்கும்போல...
என்றார்.
எங்களுக்கு என்ன செய்வது ? என தெரியவில்லை. பட்டினி கிடக்க முடியாது. சரி, சுமாராச்சும் எதுவாச்சும், ஹோட்டலுக்கு போங்க.. அப்படின்னு சொன்ன உடனே பக்கத்துலே ஒரு கீத்து கொட்டகை போட்ட ஒரு விடுதி முன்னால் காரை நிறுத்தினார்.
அதை பார்த்த உடனேயே கூட வந்த சங்கரன் சார் பயந்து போய்விட்டார். சூரி சார் , இது பார்த்தா வெஜ் ஹோட்டல் மாதிரி தோணல்லை. என்றார்.
விசாரிப்போம். என்று கல்லாவில் உட்கார்ந்து இருப்பவரிடம் கேட்டோம்.
veg OR non-veg ? என்றோம்.
அவர் எங்களை நன்றாக ஒரு தரம் பார்த்து விட்டு,
வெஜ் தான் என்றார்.
சரி, என்று, அந்த நீளமான பெஞ்சில் நானும், சங்கரனும், இன்னொருவர் அவர் பெயர் நினைவில் இல்லை. உட்கார்ந்தோம். பக்கத்திலே , பிராஞ்ச் மானேஜர். அவர் கண்களில் இருந்த சந்தேகம் ஏனோ நாங்கள் கவனிக்க வில்லை.
பெரிய வாழை இலை. அதை பார்த்தபோதே வயிறு பாதி நிறைந்துவிட்டது.
முதலில், அங்கு வழக்கப்படி பருப்பு, போரியல், கூட்டு, வைத்துவிட்டு, சாதம் ஒரு வண்டி நிறைய போட்டார்கள். இத்தனை எதுக்கு என்று கேட்டபோது, இது சாம்பார் சாதத்துக்கு மட்டும். ரசத்துக்கு, இன்னொரு தரம் போடுவோம் என்று மலையாளத்தில் பயமுறுத்தினார். பிறகு சாம்பார் வாளி வந்தது.
அவர் வாளியில் இருந்து தாராளமாக மூன்று கரண்டி ஊற்றினார். என்ன காயே காணில்லா என்று கேட்டு தனக்கும் மலையாளம் சொற்பம் அறியாம் என்று சிரித்துக்கொண்டே கேட்டார் சங்கரன்.
ஒரு வேளை தீர்ந்து போய் இருக்கும், நம்ம லேட்டாய் வந்து இருக்கிறோம் இல்லையா.. என்றேன்.
ஒரு ஐந்து நிமிட நேரம் கழிந்திருக்கும். ரசம் முடித்து, மோர் சாதம் சாப்பிடும் நேரம்.
எதிர்த்த பெஞ்சில் மூன்று பேர் உட்கார்ந்தார்கள். அவர்களுக்கும் பரிமாறப்பட்டது. அவர்களைப் பார்த்தே என் நண்பர் சங்கரன் என் சஞ்சலப்பட்டார் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கும் சாம்பார் வாளி வந்தது. எங்களுக்கு கரண்டியால் ஊற்றிய சர்வர் அவர்களுக்கோ சொம்பால் மொண்டு ஊற்றியது போல் இருந்தது. விரும்பி சாப்பிட்ட அவர்கள், இன்னும் இரண்டு பீஸ் போடுங்க...என்று கத்தி
சொல்லும்போது தான் என் நண்பர் அவர்கள் இலையை கவனித்தார்.
அய்யய்யோ ? நான் வெஜ் ஐடம் அல்லவா ?
என்ன சார், வெஜ் ஹோடல் என்று சொன்னீர்களே ? என்று அந்த சர்வரைக்
கேட்டார்.
உங்களுக்கு வெஜ் தான் சாரே... மேலே இருந்து சாம்பாரைப் போட்டால் வெஜ். கலக்கி போட்டால் தான் சார் நான் வெஜ் ஐடம் வரும். எங்க முதலாளி முன்னாடியே சொல்லிட்டார் இல்லையா, நீங்க வெஜ் தான் அப்படின்னு, மாத்தி உங்களுக்கு போட மாட்டோம் சாரே... என்றார் சர்வர்.
குபீர் என்று வாந்தி எடுத்தார் சங்கரன்.
தான் நான் வெஜ் இருக்கும் வாளியில் இருந்து சாப்பிட்டோம் என்ற நினைப்பே அவருக்கு வாந்தி வரச் செய்து விட்டது.
பாவம், அதற்கு அடுத்த இரண்டு நாட்களும், வெறும் நேந்திரம் பழம், பிஸ்கட் , டீ லேயே கழித்தார் எனது நண்பர்.
ஆமாம்.
இது ஏன் எனக்கு இருபத்தி ஆறு வருஷங்களுக்குப் பின் நினைவுக்கு வந்து இருக்கிறது ?
ஒன்றுமில்லை....
செப்டம்பர் ஒண்ணாம் தேதி நடக்க இருக்கும்
பதிவர் விழாவில் வெஜ் , நான் வெஜ் இரண்டுமே என்று போட்டு இருக்கிறதே.
சுத்த சைவம் எல்லாம் என்ன செய்வார்கள் பாவம் ... அப்படின்னு சில பேரு மனசுக்குள்ளே கவலைப்படுவாங்க அப்படின்னு மா நாட்டு உணவு குழுவிலே பங்கு வகிக்கும் திரு பட்டிக்காட்டான், மதுமதி, பால கணேஷ் அவங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன ?
இருந்தாலும், கவலைபடாதீங்க.. அதற்காகத்தான் திருமதி ராஜி அவங்க எலுமிச்சை சாதம் கட்டு சோரு கட்டிகிட்டு வாரேன் அப்படின்னு எழுதி இருக்காங்க...
நானும் முடிஞ்சா தயிர் சோறு கட்டிக்கிட்டு வாரேன். ஆவக்காய் ஊறுகாய் .தொட்டுக்க.

உங்கள் கவலை உங்களுக்கு. (நானும் சைவம்தான். என்னால் சூழ்நிலை காரணமாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் திருவிழா வர இயலவில்லை. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!)
பதிலளிநீக்கு// இருந்தாலும், கவலைபடாதீங்க.. அதற்காகத்தான் திருமதி ராஜி அவங்க எலுமிச்சை சாதம் கட்டு சோரு கட்டிகிட்டு வாரேன் அப்படின்னு எழுதி இருக்காங்க... //
ஆரூர் மூனா செந்தில் அவர்களின் “தோத்தவண்டா” பதிவில் சகோதரி ராஜி அவர்களின் கருத்துரை இது (நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவும்)
ராஜிAugust 28, 2013 at 6:41 PM
எனக்கு பிடிச்ச அயிட்டம் சிலது வெஜ் சாப்பாட்டுல இருக்குறதால ரெண்டு இடத்துலயும் சாப்பிட அனுமதி உண்டா?!
Reply
Replies
ஆரூர் மூனா செந்தில்August 28, 2013 at 6:51 PM
முடிஞ்ச வரைக்கும் எல்லா வகையையும் ஒரு கை பாருங்க.
ஆஹா.... நீங்க வரலையா பதிவர் மாநாட்டுக்கு?
நீக்குநீங்க இந்த பதிவர் திருவிழாவிற்கு போவிர்கள் என்று எனக்கு தெரிந்து இருந்தால் அருமையாக எலுமிச்சை ஊறுகாய் போட்டு தந்து இருப்பேன்ல....மீஸ் பண்ணிட்டிங்க தாத்தா
பதிலளிநீக்குஎங்கப்பா இருக்கீங்க? எங்கயோ ஊருக்கு போறதா போட்டிருந்தீங்களே பதிவில்?
நீக்குஆமாம் நான் இப்போது வெகேஷனுக்கு எனது மைச்சினிவீட்டிற்கு போயீருக்கிறேன் கேன்ஸாஸ் என்ற மாநிலத்திற்கு. எங்கள் உடன் பயணம் செய்தது 3 லேப்டாப் 1 iPad. தங்கும் ஹோட்டல்களில் எல்லாம் free wifiஉண்டு அதனால்தான் பதிவுலகத்திலும் தலையை காண்பித்து கொண்டிருக்கிறேன். இது ரிலாக்ஸ் வெகேஷன் அதனால்தான் இப்படி
நீக்குஇப்படித்தான் நானும் என் மனைவியும் ஒரு கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று கலந்து கொண்டோம் என் மனைவி வெஜ்டேரியன் ...ஆனால் அங்கேnonvejசாப்பாடு .ரசம் மட்டும் கொண்டு வாங்க என்றதும் வந்ததைக் கண்டு அரண்டு போனாள் என் மனைவி ...ரசத்தின் மேல் பாகம் முழுவதும் பளபளவென்று ஆட்டுக் கொழுப்பு !சரி ,மோராவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்றார்கள் .அவசரமாக தயிர் பாக்கெட்கொண்டு வந்தார்கள் !
பதிலளிநீக்குவாழ்க்கையில் மறக்க முடியாத விருந்து !
தயிர் மட்டும் இல்லன்னா என்ன ஆகும்? நினைத்துப்பார்க்கவே பயமா இருக்கு...
நீக்குநானும் இப்படித்தான் சாம்பார் வைப்பேன். மேலாக ஊற்றினால் ரசம், கலக்கி ஊற்றினால் சாம்பார். அப்படி ஒரு கைப்பக்குவம்.
பதிலளிநீக்குமேலாக போட்டால் வெஜ், கலக்கிப் போட்டால் நான் வெஜ் ,அருமை
பதிலளிநீக்குஆடிட் பார்ட்டியா? ஆடிட் பார்ட்டி ஆட்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி!!
பதிலளிநீக்குவெஜ் நான் வெஜ் சமாச்சாரம் என்னவென்று எனக்குத் தெரிந்து விட்டது. சர்ப்ரைஸ் விசிட்டால் கடுப்பான அந்த மானேஜரின் ஏற்பாடாக இருக்கும்!!!
எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் சாம்பார், ரசம் என்று இரண்டு செய்து கஷ்டப்பட மாட்டார் என் மனைவி! காய் வந்தால் குழம்பு, வெறுமனே லிக்விட் மட்டும் போட்டால் ரசம்! அது நினைவுக்கு வந்தது.
தயிர் சாதம் எவ்வளவு கொண்டு வருவீர்கள்? 50? லட்டு ஐடியா டிராப்ட்டா? :)))
ஸ்ரீராம் சார் வீட்டில் இந்தப் பின்னூட்டத்தை படிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் எழுதி விட்டீர்கள். யாராவது போட்டுக் கொடுத்து விடப் போகிறார்கள்.
நீக்குஇன்னைக்கு ஸ்ரீராம் சார் வீட்டுக்கு நான் போன் பண்ணி மாமி கிட்ட கேட்காம விடப்போறதில்ல :) என்ன மாமி நீங்க சாம்பார் ரசம் டூ இன் ஒன்னா சமைப்பீங்களான்னு கேட்டுடறேன் :) மாட்னீங்க இருங்க :)
நீக்குஇதுவரை ஒருவர் மட்டும் ஐந்து கேள்விகளுக்கு கரெக்ட் பதில் சொல்லி இருக்கிறார்.
நீக்குபத்து கேள்விக்கும் பதில் சொல்ல இன்னும் 60 மணி நேரம் இருக்கிறது.
ஆனால் முதல் முயற்சிலே வெற்றி பெறவேண்டும்.
லட்டு என்ன பிரமாதம். நீங்க வரதா இருந்தா சொல்லுங்க...
சுப்பு தாத்தா.
BTW, manju pottu koduthu vittangala ? weather report enna ?
உங்கள் கஷ்டம் புரிந்து கொள்ள முடிகிறது. அதான் ராஜி மேடம் கொண்டு வுருகிறேன் என்று சொல்லி விட்டார்களே! போய் பதிவர் திருவிழாவைப் பற்றிய பதிவும் போட்டு விடுங்கள்.
பதிலளிநீக்குஹாஹா.. அப்பா அப்பா... சாம்பார் ல காய் இல்லன்னு சொன்னதும் புரிஞ்சிருக்க வேண்டாமோ? :) எதிர்ல இருக்கிறவருக்கு காய்ன்னு சொல்லி போட்ட வஸ்துவை பார்த்து சங்கரன் வாந்தி எடுத்துட்டார்னு படிச்சதும் ஐயோ பாவம்னு தோணித்து.. சரி எதுக்கு இத்தனை அக்கப்போருன்னு பார்த்தா பதிவர் மாநாட்டில் வெஜ் நான் வெஜ் அட ராமா அதானா இத்தனை பெரிய பகிர்வு? ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ராஜிப்பிள்ளை எலுமிச்சை சாதம் கொண்டு வரேன்னு சொன்னது ஆறுதல்... நான் சென்னைல இருந்திருந்தா பிசிபேளாபாத், பகாளாபாத் அப்பளம் ஊறுகா கொண்டு வந்திருப்பேனே.. ஹப்பா எப்டியோ பதிவர் மாநாட்டுக்கு வாங்க அது போதும் :)
பதிலளிநீக்குஅடுத்த மாதம் உங்க ஊர் பக்கம் வந்தா வாரேன்.
நீக்குஎனக்கு தயாரா தயிர் சாதம் வச்சிருங்க...
தாத்தா. .
அன்பான வலைப் பதிவர்களைச் சந்தித்து அளவளாவும் போதே வயிறு நிறைந்துவிடுமே!...
பதிலளிநீக்குவாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதும்
நீக்குஎங்கள் உலக வாய்பாடு.
அப்படின்னு நீங்க கேள்விப்பட்டு இருப்பீகளே ?
பசி வந்திட பத்தும் பறந்து போகும் ணே .
சுப்பு தாத்தா
பக்கத்துலே நல்ல வெஜிடேரியன் ஹோட்டல் எதும் இருந்தா இப்பவே பார்த்து வைச்சுடுங்க! எல்லாருக்கும் வசதியா இருக்கும்! :)
பதிலளிநீக்குமா நாடு நடக்கும் இடத்துக்கு பக்கத்து கடையே க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் . எப்பவுமே அங்கே எல்லாவிதமான சாதங்களும், அதாவது எலுமிச்சை சாதம், புளியோதரை, சாதம், அதை தவிர்த்து பரோட்டா, ஸ்பெஷல் நெய் ரோஸ்ட், சூடான பகோடா, ஆனியன் பஜ்ஜி, ரவா தோசை, எல்லாமே கிடைக்கும்.
நீக்குலெப்ட் லே வடபழனி பஸ் ஸ்டான்ட் பக்கத்திலே வசந்த் பவன். ஆச்சி சமையல், குழி பணியாரம் போன்றவையும் கூழ் , இதெல்லாம் அங்கே சிறப்பு. இதைத் தவிர ரெகுலர் சாப்பாடு உண்டு.
ரைட்டுலே திரும்பினா முருகன் கோவில். பக்கத்துலே சரவண பவன்.
கொஞ்சம் என்ன நிறையாவே காஸ்ட்லி. ஏ சி அப்படின்னு உள்ள போயிட்டீங்க அப்படின்னா ஒரு ஸ்பெஷல் தோசை ரூபா 90. ஆனா
அங்க கிடைக்கிற டிபன் மாதிரி சாப்பாடு மாதிரி நளன் வந்தாலும் பண்ண முடியாது. சரவண பவன் சென்னைலே பல இடத்திலே இருந்தாலும், மயிலை, வட பழனி இடங்களில் டேஸ்ட் சூப்பர்.
சிக்னல் பக்கத்திலே ஆப்பக்கடை சிம்ரன் இருக்குது. ஒரு பேச்சுக்கு சொல்லி வச்சேன்.
மாநாடு நடத்தறவங்க காடரிங் யாரிட்ட கொடுத்துருக்காக அப்படின்னு தெரியல்ல.
துளசி கோபால் அரேஞ் செஞ்சாங்கள்ள உட்லேண்ட்ஸ் லே. அது போல இருக்குமா. ? பால கணேஷ் சாருக்குத்தான் தெரியும்.
சுப்பு தாத்தா.