ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பூக்களைத் தான் பறிக்காதீக



சுப்பு தாத்தாவுக்கு மறதி மிகவும் அதிகமாக போய்விட்டது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சி.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் ஒன்றுமே இரண்டு வாரங்களுக்கு பிடி படவில்லை.  ஜெட் லாக் என்பது ரொம்பவே லாகிங்.

விடிந்தபிறகு செய்ய வேண்டிய சமாசாரங்கள் எல்லாம் இரவு ஏழு மணிக்கு பிறகு தான் ஆரம்பிக்கின்றன.  காலை 12 மணிக்கு கண்ணை சுழற்றிக்கொண்டு தூக்கம் வருகிறது.  ஜெட் லாக் இருந்த பத்து பதினைந்து நாட்களுமே நான் அம்போ ....

வந்த அடுத்த நாளே சனிக்கிழமை.  ஒவ்வொரு சனிக்கிழமை வழக்கம் போல  ஹனுமார் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவேண்டும்.

அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை தட்டை வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தேன்.  கோவிலுக்குள்  செல்லுமுன்பு அங்கே செருப்புகளை அதற்கான இடம் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் பரவலாக கிடக்கும். நானும் அதில் என் செருப்புகளை விட்டு உள்ளே சென்றேன்.

அனுமாரை உளாமாற துதித்தேன்.

அசாத்திய சாதக ஸ்வாமின் அசாத்திய தவ கிம் வத.

அனுமனை பற்றி துதிக்ராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றால் என்ன
ஸ்லோகம் சொல்லவேண்டுமோ அத்தனையுமே அள்ளி அள்ளி கிடைக்கும்.
அது ஒரு திருப்பதி பெருமாள் கோவில் பிரசாதம் போல.  கை நிறைய மனம் நிறைய கிடைக்கும்.

அர்ச்சனை முடிந்து தீபாராதனை முடிந்தபின், கோவிலை வலம் வந்துவிட்டு வீடு திரும்பினேன்.
கோவிலில் ரொம்பவே கூட்டம்.  நானும் ஏதோ பாதி தூக்கத்தில் இருந்தேன். உடம்பு அசதியாக இருந்ததால் ஒரு ஆடோ பிடித்துகொண்டு வீடு திரும்பினேன்.

காலனியில் எங்கள் பிளாட்  லிப்டில் ஏறும்போது தான் கவனித்தேன்.  கையில் அர்ச்சனை தட்டு கோவில் வாசற்கடையில் திருப்பி தர வேண்டியது கையிலேயே இருந்தது.

அடடா   .....கடைக்காரர் என்ன சொல்வாரோ தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு அடுத்த வாரம் செல்லும்போது திருப்பி தந்து விடலாம் என்று எனக்கு நானே ஒரு சமாதானம் செய்துகொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையும்போது இன்னொன்றும் கவனித்தேன்.

கால்களில் செருப்பு ஏதோ தொந்தரவு செய்தாற்போல் இருந்தது.

அடியே  .... என்னவென்று பாரு ...என்று சக தர்மினியை அழைத்தேன்.

என்னது...ஒரு செருப்பு உங்களோடது.  இன்னொன்று வேறு யாரோடதோ ?

ஆமாம். இரண்டும் ஒரே பாட்டர்ன் ஆக இருந்தாலும் ஒன்று பிங்க், இன்னொன்று கருப்பு.  இரவு நேரத்தில் அது கூட கவனிக்க வில்லையே...

என்ன செய்வது..  இதற்காக இன்னொரு தரம் போக முடியுமா...போனாலும், என்னுடைய இன்னொரு செருப்பு அங்கு இருக்கும் என்பது என்ன நிச்சயம்
போய்ட்டு வர ஒரு ஐம்பதும் ஐம்பதும் நூறு ரூபாய் ஆடோ செலவு ஆகும்.
உடம்பும் ஏகத்துக்கு அசதி . உடனே இன்னொரு தரம் செல்ல உடம்பு இடம் கொடுக்காது.

என்ன செய்யலாம் ?

அடுத்த சனிக்கிழமை இதையும் போய் திருப்பி வைத்து விடலாம் என்று யோசித்தேன். சாதாரணமாக, நான் சொல்வதற்கெல்லாம் எதிர் வாதம் புரிந்து வரும் இல்லை, என் கால்களை வாறும்  வாழ்க்கைத் துணைவியும் உடம்பு ரொம்ப சோர்ந்து இருக்கீக. அடுத்த வாரம் போகும்போது இந்த இரண்டு செருப்புகளையுமே வைத்துவிட்டு வந்து விடுங்கள். என்றாள்.

 ஆனால் பாவம், அந்த இன்னொரு செருப்புக்கு சொந்தக்காரர்
அவர் என்னைத் திட்டுவதை மானசீகமாக உணர்ந்து பார்த்தேன்.

அவருக்கும் அனேகமாக என் வயசு இருக்குமோ ? இல்லாவிடினும், கஷ்டம். அவர் என்ன செய்வார், என்னிடம் பணம் இருக்கிறது, உடனடியாக புது செருப்பு வாங்க.அவரிடம் தேவையான பணம் இருக்குமோ , இல்லை என்றால் என்ன செய்வார் ?என்று நினைத்துக்கொண்டே தூங்கிபோனேன்.

அடுத்த ஏழு நாட்கள் சென்று முடிந்தன.

சென்ற சனிக்கிழமை அன்று திரும்பவும் கோவிலுக்குள் நுழையுமுன், அந்த கடைக்கு சென்று தட்டை கொடுத்தேன். கடைக்காரருக்கு ஒரே ஆச்சரியம்.

ரொம்ப சாரி சார், என்று வருத்தப்பட்டு கொடுத்தேனா, அவரோ, நீங்க திருப்பி கொடுத்ததே போதும் சார் என்றார். ஒரு தட்டு இருபத்தி ஐந்து ரூபாய் சார் என்றார்.  எனினும் நான் திருப்பி தந்தது அவருக்கு திருப்தி.

கோவிலில் செருப்புகள் வைக்கும் இடத்தில் நான் போட்டு வந்திருந்த இரண்டு செருப்புகள், ஒன்று என்னுடையது, இன்னொன்று இன்னொருவருடையது.
இரண்டையும் போடப்போனால்...

அங்கே......

அதே போல், .....

என்னுடைய அந்த இடது கால் செருப்பும், (நான் போடாமல் விட்டு விட்டு வந்தது ) இன்னொரு வலது கால் செருப்பும் இருந்தன.

நன்றாக உற்று பார்த்தேன்.  சந்தேகமே இல்லை.  கூட துணைக்கு வந்த மனைவி என் காதுக்கு பக்கத்தில் வந்து இரைந்தாள்.  சீக்கிரம் அந்த இரண்டையும் போட்டுட்டு வாங்க... எங்கனாச்சும் அந்த செருப்புக்கு சொந்தக்காரர் காத்துட்டு இருந்து , உங்களை பாத்துட்டு, வந்து இரண்டு
தர்ம அடி போடப்போறார் என்றார்.

அனிச்சையாக, அக்கம் பக்கம் எல்லா திசைகளிலும் பார்த்தேன். எனக்குள் ஒரு திகில் கலந்த எதிர்பார்ப்பு.  சொன்னால் சிரிக்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் நிஜம்.

ஏதாவது ஒரு திசையிலிருந்து விவேக் மாதிரி ஒரு ஆஜானுபாக ஒரு ஆள் முதுகுப்பக்கத்திலேந்து ஒரு வீச்சு அருவாள் எடுத்து ...டேய்.. அப்படின்னு என்னை நோக்கி பாய்வது போல ஒரு கற்பனை.....

மனசுக்குள்ளே எனக்கும் உள்ளூர பயம் தான்.    இருந்தாலும் பரவா இல்லை என்று அந்த இரண்டு ஜோடிகளையும் சரியாக சேர்த்து வைத்தேன்.

இதெல்லாம் தேவையா என்று ஒரு பார்வை பார்த்தாள் பார்யாள்.

செருப்புகளை போட்டு விட்டு உள்ளே கோவிலுக்கு சென்று அனுமார் சன்னதிக்கு சென்று அர்ச்சனை முடித்து விட்டு கோவிலை சுற்றி விட்டு திரும்பினேன்.

திரும்பி, செருப்புகள்  இருக்கும் இடத்துக்கு செல்ல என் மனைவி அனுமதிக்கவில்லை.

அவை என்னவேணா ஆகிவிட்டு போகிறது.  நீங்க பேசாம வீட்டுக்கு வாங்க..
என்றாள்.  நீங்க தான் புதுசு வாங்கியாச்சு இல்லையா... 

நானும் பேசாது வந்து விட்டேன்.

இன்று திரும்பவும் அந்த கோவிலுக்கு பிரதோஷம் நிகழ்ச்சிக்காக சென்றேன்.
ஒரு இன்டூயிஷன் ...அந்த செருப்பு என்ன ஆகி இருக்கும் என்று மனசிலே ?
சொந்தக்காரர் வந்து எடுத்து சென்று இருப்பாரா ...  இல்லை, இரண்டு ஜோடிகளுமே அங்கு இருக்குமா என்று பார்த்தேன்.

இரண்டு ஜோடிகளுமே அங்கு இல்லை.   இறக்கை முளைத்து போய் விட்டனவா ?

அந்த செருப்புக்கு சொந்தக்காரர் எனக்கு பனிஷ்மெண்டாக  என்னுடைய இரண்டு செருப்புகளையும் எடுத்து சென்று விட்டாரோ ?

எனக்கு அந்த என்னுடைய செருப்புகள் தேவை இல்லை தான் . இருந்தாலும்,

டேய் சூரி, லைப்லே உனக்கு ஓட்டுவது தாண்டா ஓட்டும்.  எப்பவோ அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

   பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகாதம

உபரி தகவல்.  பழைய நினைவு.  அப்பாதுரை சாருக்கு கணினியைப் பற்றி எழுதும்போது  வந்தது போல.

பல ஆண்டுகளுக்கு முன்பாக , 1991 லே என நினைக்கிறேன். பர்சானல் மேனேஜர் ஆக இருந்தபோது எனது டிவிஷனில்

எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் திருமணமான பின் தனது கணவர்கள் வேலை பார்க்கும் இடத்துக்கு டிரான்ஸ்பர் கேட்பது வழக்கம். எங்களது நிறுவனத்தில் இதை பொதுவாக அனுமதிப்பதும் வழக்கம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டு முடிவு நேரம்.
இந்த மாதிரி டிரான்ஸ்பர் கோரிக்கைகள்  ஒன்றல்ல,இரண்டல்ல, பத்துக்கு மேலே வெவ்வேறு கிளைகளில்  வந்து விட்டன.

உடனடியாக அவர்களை டிரான்ஸ்பர் செய்தால், அவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் உடனடியாக வருவதற்கும் வாய்ப்பும் இல்லை.  மேலும் அந்த அந்த பிரிவுகளின் மானேஜர்கள் அவர்களை சப்ஸ்டிட்யூட்  இல்லாமல் விடுவிக்கவும் தயாராக இல்லை.

 யூனியன் பிரஷர் அதிகம்.        மேலே இருந்தும் இந்த பெண்களுக்கு   ஏகத்துக்கு  சிபாரிசு வருகிறது.

அந்த பதினாறு ஜஸ்ட் திருமணமான பெண்களிலே ஒருத்தி என்னிடம் வந்து நேரடியாக கேட்கிறாள்.  

  சார் யூ ப்ளீஸ் அண்டர் ஸ்டாண்ட் த சிசுவேஷன். 
ஒரு மாசம் டிலே ஆச்சுன்னா அடுத்தது வேற ஆடி மாசம் சார்.....

இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையில் எனது தலைமை அதிகாரியான எனது
பாஸ் அவர்களை அணுகி, என்ன செய்யட்டும் சார் என்றேன்.

பூக்களைத் தான் பறிக்காதீக ... காதலைத் தான் முறிக்காதீக ..
...   என்று பாட ஆரம்பித்தார்.



என்ன சொல்றீக சார் என்றேன்.

மெண்டலி தே ஆர் ஆல்ரெடி அவுட்.  அவங்க ஆபீஸ்லே  என்ன வேலை செய்யமுடியும், செய்வாங்க அப்படின்னு எதிர் பார்க்கிறீங்க ?

பட்சிகளை பிரிக்காதீக..  மஹா பாபம் என்றார்.

கண்களை மூடிக்கொண்டு அத்தனை பெண்களுக்கும் (பாவம் இளம் பெண்கள் JUST MARRIED) உடனடி டிரான்ஸ்பார் மற்றும் ரெலீவ் செய்ய சொல்லி ஆர்டர் போட்டேன்.

ஜோடிகளை பிரிப்பது பாவம் என்றார் என் பாஸ் அன்றே.

******************************

அது எத்தனை பாவம் என்பது இன்னொருவரின் செருப்பு ஜோடிகளை  பிரிக்கும்போதும் உணர முடிந்தது.

அந்த செருப்பின் சொந்தக்காரர், அவர் எங்கே இருந்தாலும்.....

சார்... எக்ஸ்யூஸ் மீ.
ஐ நெவர் மெண்ட் டு டூ  இட்.

செருப்புகளை பிரித்தாலும்  பாவம் தான்.

பாவம். சென்ற பத்து நாட்கள் எத்தனை கஷ்டப்பட்டீர்களோ ??

சாரி சார்...

இட் இஸ் ஷியர் நெக்லிஜென்ஸ் .

Negligence is 
to do something which is not to be done, and also
not to do something which is to be done. 

வள்ளுவர் சொல்லி இருக்காரு இல்லையா.


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.




செய்தக்க அல்ல செயக்கெடும். செயதக்க 
செய்யாமை யானும் கெடும்.








15 கருத்துகள்:

  1. ஒரு பொருள் திரும்பக் கிடைப்பது என்பது மிக மிக சந்தோஷமான விஷயம்!... அது பொருள்களானாலும் சரி!.. பூக்களானாலும் சரி!..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. ரஸித்துப்படித்தேன் - ஒருமுறைக்கு இருமுறையாக, நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்க்ஸ் பார் யுவர் விசிட்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  3. அருமையான குறள். இதே மாதிரி இன்னொரு குறள்.

    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த குறளையும் அடிக்கடி நான் எனது வகுப்புகளில் சொல்வதுண்டு.

      எந்த செயல்களை தாமதித்து செய்யவேண்டுமோ அவற்றினை தூங்கி, செய்ய வேண்டும். இவற்றினை உடன், துரிதாக செய்யவேண்டுமோ அவற்றினை உடன் செய்யஏண்டும்.

      தாமதித்து என்று பொருள் கொண்டாலும், நன்றாக புரிந்து , நுணுக்கங்களை அறிந்து, துல்லியமாக உணர்ந்து செயல்படு . எண்ணித் துணிக என்று சொல்லும்பொழுது அதற்கான நேரமும் தேவை இல்லையா ?

      அடுத்து தூங்காமல் செய்யவேண்டிய காரியங்கள் வாழ்வில் தினம் தினம் ஏராளமாக உள்ளன. அதைச் செய்யாது தூங்கி போய் விட முடியுமோ ?

      ஒரு சின்ன மழை பெய்தால் கூட, சென்னை ரோடுகளில் சாக்கடை கலக்கிறது. அதை உடனுக்குடன் செய்தல் தூங்காது செய்தல்.

      பெண்ணுக்கு தகுந்த வரன் பார்த்தல்.அது பெற்றோர் பொறுப்பு என உணரப்படும் நிலையில், நன்றாக பொறுத்து வரப்போகும் மருமகன் மகளுக்குத் தகுந்தவர் தான் என்று புரிந்து செயல்படுவது.

      சரிதானே ஐயா ?

      நீக்கு
  4. செறுப்புகளைப் பிரித்ததற்கே
    இவ்வளவு வருத்தப்படும்
    நல் உள்ளத்திற்குச்
    சொந்தக்காரராய்
    இருப்பது
    எத்தகு பெருமை மிகுந்தது.
    மகிழ்சின்றேன்
    தங்களைக் கண்டு
    வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      தங்கள் வருகைக்கு நன்றி.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  5. ஒரு குறும்படம் பார்த்து ரசித்தது போல் இருந்தது. அதுவும் இரண்டு கதைகளையும் இணைத்த விதம் அருமை.

    பதினாறு பேருக்கும் டிரான்ஸ்பர் கொடுத்துட்டு கஷ்டப்பட்டீங்களா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அந்த பதினாறு பேரோட பதினாறு பேர் இன்னிக்கு
      என்ன கஷ்டப்படறாங்க அப்படின்னு ஒரு தகவலும்
      இல்லயே...

      நீக்கு
  6. ஜெட் லேகிங் உங்களை செருப்பை மாற்றிப் போட வைத்து விட்டதா.?
    நல்ல நகைச்சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. haahaahaahaahaaபாதுகா மஹாத்மியம் கடைசியில் காதல் புராணமாக மாறிவிட்டது. அதுவும் ஜெட்லாகினாலேயா? :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாதுகா மஹாத்மியம் கடைசியில் காதல் புராணமாக மாறிவிட்டது. //
      அய்யய்யோ ...
      நாராயண நாராயணா
      இது காதல் புராணம் இல்லே மேடம்.
      காதல் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம் ஒன்னு பண்ணி இருக்கேன். ஒரு ஆனிவெர்சரி நிகழ்ச்சியின் பொழுது.
      நவ ரசமா.

      ஆனா இது சத்தியமா அது இல்ல.
      இது ஒரு செருப்பு புராணம்.
      அதன் சிறப்புகளை எடுத்து சொல்லும் புராணம்.

      நீக்கு
  8. நல்ல செருப்புக் கதை ஐயா.
    ரசனையாக இருந்தது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு