அதிகாலை இன்று 5 மணிக்கே எழுந்துவிட்டேன்.
பால்காரர் இன்னமும் வரவில்லை. அதுவரை என்ன செய்வது ? என்பதை சிந்திக்க வேண்டிய தேவையே எனக்கு இருந்தது கிடையாது.
கையில் கணினி இருக்க, மனப்
பையில் எண்ணங்கள் பல இருக்க,
வையத்தில் இருப்போர் அனைவருக்கும் இன்று ஓர்
வாழ்த்துச் சொல்லிவிட
விழைந்தேன்.
என்ன ஆச்சரியம் !!
எனக்கு முன்னாலே எழுந்து தத்தம் பதிவுகளில் புது வருட வாழ்த்துக்கள்
சொல்லியிருக்கும் எனது வலை நண்பர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தனர்.
புலவர் இராமனுசம்,
வேங்கட நாகராஜ், இளமதி, ராமலக்ஷ்மி, கில்லர்ஜி , வானவில்லார் , தில்லை அகத்து பதிவு ஆசிரியர்கள், துளசி, கோவைக்கவி,
லக்ஷ்மி, ராஜலக்ஷ்மி ,கோமதி,
ரேவதி நரசிம்மன், ஷைலஜா,
துளசி கோபால், கோபால்
தினம் ஒரு திருப்பாவை பாசுரம் பதிவு செய்யும் யாதவன் நம்பி புதுவை வேலு,
பிரான்ஸ் நாட்டுப் புலவர் பாரதி தாசன்,
சீராளன் (ஆஹா, இவரது கவிதை என்ன ஒரு சிறப்பு !!)
தேனம்மை லக்ஷ்மணன்,
ரிஷபன், ஆரண்யவாசன், ஆவி, சி.எஸ். குமார்,
ஆன்மீக பதிவாளர் ராஜேஸ்வரி,
மைதிலி கஸ்துரி ரங்கன்,
தமிழ் இளங்கோ அவர்கள். விசுஆசம்.
சுப்பையா வாத்தியார்.
சிவகுமாரன் துரை செல்வராஜ்,
கரந்தை ஜெயக்குமார்.
ஜெயந்தி குமரன்,
ரஞ்சனி ,
யாதவன் நம்பி,
பரிவை குமார்
பகவான்ஜி,
மனோ சுவாமிநாதன்.
மிடில் கிளாஸ் மாதவி,
ஜெயஸ்ரீ,
பட்டாபி ராமன்,
தருமி,
திண்டுக்கல் தனபாலன்,
ஏஞ்சலின்,
என்.கணேசன்.
அப்பாதுரை சார்.
கீதா சாம்பசிவம்,
வாசுதேவன்.
சென்னை பித்தன்,
அனுராதா பிரேம்.
அனன்யா மகாதேவன்.
சேதுராமன் ஆனந்தக்ருஷ்ணன்,
ஆர்.கோபி.
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், கௌதமன்
ரூபன்,
ஆவிஸ் விஸ்வநாதன்,
மதுரை ரமணி,
காஷ்யபன்,
ஜி.என். பி.
பால கணேஷ்,
சங்கர்,
டிஸ்கவரி பாலஸ் தோழர்கள்,
செல்லப்பா யக்யசாமி,
வேலன்,
பட்டாபிராமன்,
கவிநயா
ரமேஷ்
மின்னல் வரிகள் ஆசிரியர்,
சுரேகா அவர்கள்.
இளங்கோ அவர்கள்,
ஜம்புலிங்கம் அவர்கள்,
பழனிசாமி அவர்கள்,
வை.கோ அவர்கள்.
பரோடா மோகன் ,
அப்பாடா, இத்தனை பேர் தளத்திற்கும் சென்று வாழ்த்து சொல்லி ஆகிவிட்டது.
கையை வலிப்பதற்குள்,
கரண்ட் போவதற்குள்,
மிச்ச நண்பர் குழாம் அனைத்துக்கும்
ப்ளாக் மட்டும் இல்லாது பேஸ் புக் முக நூல் , டம்ளர், இன்ச்டாக்ராம், கோரா, ஆகியவற்றில், இருக்கும் நண்பர்களுக்கும்
எனது நண்பர்கள் / எனக்கு இல்லாத வியாதிகளுக்கு மருந்து தரும் மருத்துவர்கள்,
புதுப் பற்கள் அளித்த பல் டாக்டர்கள்,
பக்கத்துப் பார்க்கிலே நான் பேசுவதை
எல்லாம் பொறுமையுடன் கேட்கும் என் வயதை ஒத்த நண்பர்கள் ,
எனக்காக பொறுமையா கீ போர்டு கற்றுக்கொடுக்கும் மேற்க்கத்திய இசை ஆசிரியர் ஜைகீ அவர்கள்,
அங்கே என்னுடன் கற்றுக்கொள்ளும் சின்னஞ்சிறு வாண்டுகள்,
எனது லாலாஜி ஆஸ்ரம சக அப்யாசிகள்
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கும்,கோஷத்துடன் மட்டும் இல்லாது,
சூடாக, சுவையாக,
சாப்பாடும் பிரசாதம் என்று போடும்
இஸ்கான் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் .
சேவாலயா இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள்,
என்னைப் பார்த்த உடனேயே காபி கொண்டு வந்து தரும்
எனது நண்பர்களின் இட பாகினிகள்,
என்னை மறவாத நண்பர்கள் , மறந்து போன நண்பர்கள் ,
நான் பாடுவதை எல்லாமே ரசிக்கும் பொறுமை சாலிகள்.
உற்றம், சுற்றம் எல்லோருக்கும்,
எனது வாழ்த்துக்களைச்
சொல்லவேண்டும்.
என்னது !
மொத்தமா சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறீர்களா !
அதுவும் சரிதான்.
எல்லோருக்கும் சுப்பு தாத்தாவின்
2016 ஆம் ஆண்டுக்கான
புத்தம் புது வருட
வாழ்த்துக்கள்.
இன்று போல் ஒவ்வொரு நாளும் புத்தாண்டாக மலர்க .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக