ஆம்.திரு தி. தமிழ் இளங்கோ அவர்களும் திருமதி கீதா , திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அழைக்கின்றனர். மா நாட்டில் பங்கு கொள்ள, அறுசுவை யோடு கூடி விருந்து உண்ண, செவிக்குமோர் உணவு அருந்த,
அதெல்லாம் சரிதான். ஆனால், சுப்பு தாத்தாவின் மனசுலே ஒரு ஐடியா கீது.
பதிவர் மாநாட்டில் புதியதோர் போட்டி. ஐந்து போட்டிகளுடன் சுவை மிகுந்த ஆறாவது போட்டி.வச்சா என்ன ங்கறேன். என்னைபோன்ற சாப்பாட்டு இராமன்களுக்காக. விரைந்து செயல் படுக. உடன் தமது பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
சாப்பிட வாங்க அம்மா கூப்பிட றாங்க.
புதுகை மா நாட்டுக்கு எல்லோரும் வாருங்க. இங்கே சுப்பு தாத்தா பதிவர் மா நாட்டில் ரசித்து எப்படி சாப்பிடுகிறார் என ஒரு கனவு காட்சி.
ஏங்க ! அம்மா !! இத்தனை போட்டி கீது !! ஒரு போட்டி சாப்பாடு போட்டி வச்சா எம்புட்டு நல்லா இருக்கும் ? இந்த தாத்தாவுக்கும் ஒரு ப்ரைஸ் கிடைக்கும் இல்லையா ?
போட்டி விதிகள். ( அப்படியே இருக்கணும் நு அவசியம் இல்ல. அங்க இங்க சுப்பு தாத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு.)
1. குறைந்த பட்சம் 20 இட்லி சாப்பிடுபவர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு.
2. 20 முதல் 30 சாப்பிடுபவர்களுக்கு ஒரு காபி மேகர் . ப்ரெஸ்டிஜ்.
3. 30 முதல் 40 சாப்பிடுபவர்களுக்கு பிரஷர் குக்கர்.
4. 40 முதல் 50 சாப்பிடுபவர்களுக்கு மைக்ரோ ஓவன்.
5. 50 க்கு மேல், ஒரு தங்க நாணயம் .5 கிராம்.
ஒவ்வொரு பரிசினையும் எந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஸ்பான்சர் செய்யலாம். அவர்களது பேனரை மா நாட்டில் அமைக்கலாம்.
50 இட்லி சாப்பிட்டு விட்டு 1/2 கிலோ சக்கரை பொங்கல் சாப்பிட்டால்
இரண்டு ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.
அதற்கு மேலும் ஐந்து மெது வடைகள் சாப்பிடுபவர்களுக்கு 3 ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.
அதையும் சாப்பிட்டபின் லஞ்ச் எங்கே பொடராங்கோ என்று கேட்பவருக்கு 6 கிராம். தங்க நாணயம்.
மொத்தம் 50000 இட்லிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதால், முதலில் பதிவு செய்பவர்களே சாப்பாடு போட்டியில் பங்கு கொள்ள இயலும்.
இந்த விதி எக்காரணம் கொண்டும் தளர்த்தப்படாது.
இட்லிகளின், அதன் சட்னிகளின் சுவை பார்த்துவிட்டு, பிறகு பங்கு எடுப்பேன் என்று சொல்பவர்கள் அவர்களுக்காகவே
வள்ளுவன் கூறியது
தூங்குக தூங்கிற் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
என்று சொல்லி,
அந்த விநாயகனின் நாமங்களை
அற்புதமாக இனிய தமிழில் மொழி பெயர்த்து
இட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு விநாயகன் எல்லா அருளையும் தருவார்.
எனது வலை நண்பர் , என்னை அத்திம்பேர் என அழைக்கும் திருமதி துளசி கோபால் அவர்கள் வலையில்
கோபால் அவர்களே செய்த பிள்ளையாருக்கு
எல்லா கொழக்கட்டை களும் அற்புதமாக செய்து
நைவேத்யம் செய்து மகிழ்ந்திருக்கிறார்.
திருவரங்கப் பெருமாளை லைப் லே இன்னும் ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும். ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி என்று உயிர் உடலைக் களையுமுன்னே அந்த அரங்கனைக் காண வேண்டும் என மனதிலே கனவு கண்டு கொண்டே இருந்த சுப்பு தாத்தாவுக்கு
ஒரு நாள் அந்த அனுபவம் கிடைத்தது இன்னமும் நம்ப முடியவில்லை.
பாடலை முணு முணு த்துக்கொண்டே கணினியைத் திறந்தவருக்கு ஒரு இனிய அதிர்ச்சி.
அந்த பதிவு அக்கார வடிசல் ஆக இருந்தது.
தாத்தாவின் ஸ்ரீரங்கத்து நண்பர் , ஸ்ரீரங்க பிராகாரச் சிறப்புகளை ப்ரவசனம் செய்துகோண்டு இருந்தார்.
ஆண்டாள் சன்னதி பற்றி அவர் தரும் விளக்கம் அற்புதம்.
+Rishaban Srinivasan அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும்
சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம்
சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும்
அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும். ஆச்சர்யம் இல்லையா.. !
இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..
அதைப் படித்த தாத்தாவோஅந்த வர்ணனையிலேயே பிரமித்துப் போய் நிற்கிறார்.
ஆஹா, நம்ம எப்ப பார்க்கிறது அந்த ஆண்டாள் பார்த்த பார்வை யை ?
ஆஹா !! கேட்டுக்கொண்டே இருக்கும்போது, ரங்கன் கண் முன்னே பிரசன்னம்.
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்ட தாலளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாய மூடறுத் தண்டம் போல் நீண்டதே
மாகாய மாய்நின்ற மாற்கு.
ரங்கா. ரங்கா. யார் கத்துறது அப்படின்னு பார்த்தா, அந்த கிளி அடடா!! அடா அடா !1 அந்த கிளிக்கு பாருங்க என்ன பாக்கியம் ? யாருக்குமே கிடைக்காதது.
லைப் முழுக்கவே ரங்கன் பெயரைச் சொல்ல, சொல்லிக்கொண்டே இருக்க, கொடுத்து வைத்து இருக்கவேண்டும் இல்லையா..
இதோ !!ரங்கன் கோவிலை அடைந்துவிட்டேன். ராஜ கோபுரம் கண் முன்னாடி!!. என்ன கம்பீரம் !!
உள்ளே நுழைய பார்க்கும்போது, முதுகை யாரோ தட்டுகிறார்கள்.
என்ன என்று பார்க்கிறேன். அங்கரக்ஷகன் த்வார பாலகன் மாதிரி இருக்கும் ஒருவர் என்னிடம் செக்யூரிடி டோர் வழியாகத்தான் உள்ளே போகணும் அப்படின்னு ஒரு குச்சிய வச்சு திசை சொல்றார்.
அப்படியே !!என்று சொல்லி , உள்ளே ஒரு நிலைக் கதவு மாதிரி ஒன்று அதன் உள்ளுக்கு போகும்போது, இடுப்பு பெல்ட் பீப், பீப் என்கிறது. என்னை காவலர் பார்க்க, சார் அது இடுப்பு பெல்ட். என்றேன்.
நல்லது. உள்ளே போங்க, என்ன அது மூட்டை. ? சோத்து மூட்டையா ??அந்த ஹாண்ட் பாக் திறந்து காண்பிங்க..என்கிறார்.
நான் ஜிப் லே கை வைக்குமுன்னே அவரே திறக்கிறார். என்ன இது ? என்று 2 போட்லங்களை கேட்கிறார். அதையும் திறந்து பார்க்க, ஒன்றில் 4 இட்லி, எண்ணை மிளகாய் பொடி தடவி, இன்னொன்று தயிர் சாதம்.
இதெல்லாம் எதுக்கு என்று அவர் கேட்பார் என்று நினைத்தேன். கேட்கவில்லை.
அதற்குள் இன்னொரு சின்ன வாசல் .ஒரு பெரிய கேட்டுக்குள்ளே ஒரு சின்ன வாசல், ஒரு பூட்டு.
என்ன இது ? புரியல்லையே..
அந்த பூட்டு பக்கத்துலே ஒரு சின்ன கீ போர்டு. நம்ம வழக்கமா பார்க்கிற ஏ . டி. எம். மாதிரி இருக்குது.
பக்கத்தில் நிற்கும் ஒரு காவலர், உள்ளே போய் ,
பாஸ் வாங்கிக்கங்க..
என்கிறார்.
அந்த கருவியை பார்க்கிறேன். படிக்கிறேன்.
ஆங்கிலம், இந்தி, தமிழ் எல்லாத்துலேயும் வாசகங்கள்
*********************************************************************************
ஸ்ரீ ரங்கம் கோவில்
உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.
தமிழில் அறிய 1 ஐ அழுத்தவும்.
இந்தியில் அறிய 2 ஐ அழுத்தவும்.
ஆங்கிலம் என்றால் 3 ஐ அழுத்தவும்.
***********************************************************************************
நம்ம தான் தமிழ் பதிவர் ஆயிற்றே..! புதுகைக்கு வேற அக்டோபர் 15 போகவேண்டும். ஒன்றை அழுத்தினேன்.
அடுத்த ஸ்க்ரீன் அதுலேயே வந்தது.
ஸ்ரீ ரங்கம் கோவில் உங்களை வரவேற்கிறது.
நீங்கள் இன்று வரும் 278987 எண் கொண்ட பக்தர் ஆகும்.
உங்கள் வரவுக்கு நன்றி.
இதற்குப்பின் வருபனவற்றை கவனமாகப் படித்து பதில் தரவும்.
நீங்கள் கோவில் ஊழியராக இருப்பின் 1 ஐ அழுத்தவும். மற்றவராக இருப்பின் 2 ஐ அழுத்தவும்.
நான் ரங்கனின் ஊழியன் .பிறந்த நாள் முதலே.
ஆனாலும் நான் கோவில் ஊழியன் இல்லை என்று
2 ஐ அழுத்தினேன்.
அடுத்த போர்டு வந்தது.
அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் 1 ஐ அழுத்தவும். தர்சனம் மட்டும் செய்ய 2 ஐ அழுத்தவும்.
1 ஐ அழுத்தினேன்.
அர்ச்சனை அரங்கனுக்கு என்றால் 1 ஐ அழுத்தவும். தாயாருக்கு என்றால் 2 ஐ அழுத்தவும். மற்ற கடவுளர்க்கு என்றால் 3 ஐ அழுத்தவும். எல்லோருக்கும் என்றால் 4 ஐ அழுத்தவும்.
1 ஐ அழுத்தினேன்.
அடுத்த ஸ்க்ரீன் வருகிறது.
துளசி மாலை, அர்ச்சனை தட்டு பெற 1 ஐ அழுத்தவும். மாலை அர்ச்சனையுடன் பிரசாதம் பெற 2 ஐ அழுத்தவும்.
2 ஐ அழுத்தினேன்.
நைவேத்யம் /பிரசாதம்
சரியான எண்ணை அழுத்தவும்
அக்கார வடிசல் , வெண்பொங்கல், புளியோதரை எல்லாம் 1 ஐ அழுத்தவும். சக்கரை பொங்கல் மட்டும் 2 ஐ அழுத்தவும். புளியோதரை மட்டும் 3 ஐ அழுத்தவும்.
1 ஐ அழுத்தினேன்.
ராமா !! இன்னும் எத்தனை எத்தனை ஸ்க்ரீன் வரும் என்றே தெரியவில்லை. திரும்பிப்பார்த்தேன்.எனக்குப் பின்னால் ஒரு பெரிய க்யூ ஒன்று ஆதி சேஷன் போல நீண்டு இருந்தது.
சீக்கிரம் சீக்கிரம் ..என்கிறார் பின்னால் இருந்து ஒருவர்.
டோன்ட் வேஸ்ட் டைம். டிலே பண்ணினால் டைம் லாப்சு ஆகிவிடும்.திரும்பவும் ஆரம்பத்திலேந்து வரணும் என்று இன்னொருவர் பயமுறுத்துகிறார்.
போர்டில் கவனத்தைச் செலுத்துகிறேன்.
நீங்கள் கட்டவேண்டிய கட்டணம் ரூபாய் 742.00 நெப்ட் மூலமாக செலுத்த 1 ஐ அழுத்தவும். காஷ் ஆக செலுத்த 2 ஐ அழுத்தவும்.
அய்யய்யோ...ராமா ராமா. டெபிட் கார்டு கொண்டு வந்திருக்கேனா அப்படின்னே தெரியல்லையே..பெட்டிலே இருக்கு. அத எடுக்கணுமே
அதுக்குள்ளே ஸ்க்ரீன் லாப்ஸ் டைம் அப்படின்னு சொல்லிடுமே !!
என்ன பாஸ்வர்ட் அப்படின்னும் சரியா தெரியல்லே.
அதனாலே கேஷ் என்பதற்கான 2 ஐஅழுத்தினேன்.
நன்றி. உங்களுக்கான பணம் கட்டும் ரசீதினை எடுத்து, தேவஸ்தான அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மேலே செல்க.. மாதவன் அருள் பெருகட்டும்
என்ற வாசகம்.
அடுத்த 10 வினாடிகளில் ஒரு சின்ன ஸ்லிப். அந்த மிஷின் கக்கு கி றது .
ஸ்லிப் எண்; 4787 தேதி:செப்டம்பர் 8 2015 தொகை: ரூபாய்: 742. துளசி மாலை, அர்ச்சனை தட்டு, எல்லா பிரசாதமும். தங்கள் பெயர், நக்ஷத்ரம் விவரங்களை அர்ச்சகரிடம் சொல்லவும்.
என்று பிரிண்ட் அடித்து இருந்தது.
ஆஹா. முடிந்து விட்டது. எல்லா ப்ரொசீஜரும் என்று எண்ணி, அந்த ஸ்லிப்பை எடுத்துக்கொண்டு , பணம் கட்டும் இடத்தை நோக்கி விரைந்தேன்.
அங்கேயும், எனக்கு முன்னாடி ஒரு இருபது பேர் நிற்கிறார்கள் அந்த க்யூவில்.
நம்ம டர்ன் க்காக எப்பவுமே வைட் பண்ணத்தான் வேண்டும்.
எப்ப எப்ப எது எது எப்படி எப்படி கொடுக்கறது அப்படிங்கறது பெருமாளுக்கு நன்றா தெரியும். என்று நினைத்துக்கொண்டேன். \
என்னுடைய டர்ன் வந்தது.
பாண்ட் பையில் கையை விட்டு பர்சை திறந்தேன்.
திடுக்கிட்டேன்.
நோட்டுக்கள் வைக்கும் இடத்தில் ஒரு நோட்டு கூட இல்லை. அஞ்சு ஆயிரம் ரூபா நோட்டு எடுத்து வச்சேனே !! எங்கே போச்சு அத்தனையும் ???????
ராமா ...ராமா
.
ரொம்ப பெரிசா கத்தி விட்டேன் போல இருக்கிறது.
எல்லோரும் பார்த்த பார்க்கும் பார்வையில் அது புரிகிறது.
நான் எங்கே இருக்கிறேன் ?
நன்றாக பார்க்கிறேன்.
என்ன இது !! பஸ் இப்ப தானே ஸ்ரீரங்கம் கிட்ட வந்து கொண்டு இருக்கு...அதுக்குள்ளே இத்தனை
எல்லாமே
மனசுக்குள்ளேயே நடந்து இருக்கு போல.
இந்தக் கையால் அந்தக் கையை ஒரு தரம் கிள்ளிப் பார்த்தேன்.
ஆம். நாம் பார்த்தது எல்லாம்
கனவு போல இருக்கு
இந்த லைபே ஒரு கனவு போலத்தானே
புயலுக்குப் பின்னே அமைதி போல மனம் கொஞ்சம் அமைதியானது.
கையில் இருக்கும் பையைத் திறந்து பார்த்தேன். பர்ஸ் இருந்தது.
ஐயாயிரம் ரூபாயும் இருந்தது.
பெருமாள் தாயாருடன் ஒரு படம் பக்கத்துலே.
கண்களிலே ஒற்றிக்கொன்டேன்.
விடியும் நேரம். விடிய வில்லை.
பஸ் அரங்கன் கோவிலுக்குச் செல்லும் வீதியில் நிற்கிறது.
.
எழுந்து பார்க்கிறேன். சைட் சீட் காரர்,
சீக்கிரம் இறங்குங்க.. என்கிறார் ஒருவர்.
ரங்கா ரங்கா. எல்லாமே நீதான்
எல்லாம் அந்த பெருமாள் செய்வது. !!
மனசுக்குள் சொல்லிக்கொண்டே இறங்கினேன்.
சுற்றி முற்றி பார்த்தேன். அந்த ரிஷ ப ன் வந்து இருப்பாரோ ?
அவரை நான் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை.
பஞ்ச கச்சம், திருமண் ...அப்படி எல்லாம் இருக்காது.
ஜீன்ஸ்.பாண்ட். பனியன். நோ. நோ.
நிறைய பேர்கள் அவரவர் உறவினரை கூட்டிக்கொண்டு ஆட்டோ பிடிச்சு போய்க்கொண்டு இருந்தனர்
இவர் எங்கே இன்னும் காணோமே... என்று மனம் ஒரு நிமிடம் தவித்தது போல் ...
ரங்கன் நம்மை கை விட மாட்டான். ஒருவரும் வரவில்லை என்றாலும் நம்ம ப்ரண்ட் கிடாம்பி,கிருஷ்ண அய்யங்கார் ராமன் சித்திரை வீதி லே இருக்கிறார். எந்த சித்திரை வீதின்னு தான் சரியா ஞாபகம் இல்லை. விசாரிச்சுகலாம். அவர் வீட்டுக்கு போகலாம். ஆனால் அவர் அங்கே தான் இருக்கிறாரோ இல்லை, மனசுலே என்ன என்ன எண்ண ஓட்டங்கள். !!! எல்லாமே 100 மீட்டர் ஈவென்ட் தான்.
யாரோ ஒருவர் ஓட்டமும் நடையுமா வந்துகொண்டு இருந்தார்.
என் கிட்ட வர்றார்.
சார். நீங்க தான் சுப்பு தாத்தாவா ?
ஆஹா...ரிஷபன் வந்துட்டார். ஆனா கன்பர்ம் பண்ணிக்கணும் இல்லையா.. காலம் போற போக்கு. யாரையுமே நம்ப முடியலையே.. கையிலே வேற ஐயாயிரம் ரூபா இருக்கு. தொட்டு பார்த்துக்கொண்டேன்.
எச்சரிக்கை: பின் குறிப்பைப் படித்து விட்டுத்தான் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ******************************************************************************
வெய்யில் கடுமை. இருந்தாலும் அங்கு சென்று தான் ஆக வேண்டும் என்ற நிலை.
வீதி கோடியில் ஒரு வங்கி. அரசு வங்கி. அங்கு காலை 9.45 மணிக்கே சென்று அடைந்தேன். இன்னமும் வாசல் கதவு திறக்கப்படவில்லை.
படிக்கட்டுகளில் உட்கார்ந்தேன். பத்து நிமிடம் நேரமாயிற்று. இன்னமும் கதவு திறக்கப்படவில்லை.
எதிர் வீடு ஒன்று, என் கவனத்தை இழுத்தது.
பிரும்மாண்டமாக இருந்த அந்த வீட்டில் யாரோ இறந்திருப்பார்போலும். சாவுக்கோலம். மரணம் அடைந்தபின் சங்கு ஊதும் சத்தம். தப்பறை கொட்டும் சத்தம். திடீர் திடீர் எனத் துவங்கி ஒரு திகில் ஐ ஏற்படுத்திக்கொண்டும் இருந்தது.
வங்கிப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி போல் தோன்றியது வியப்பில்லை. வங்கி இன்றைக்கு விடுமுறையாக இருக்குமோ என்ற ஐயமும் எழுந்தது.
இந்த சங்கு ஊதும் சத்தம் அவ்வப்போது பெரிதாக ஒலிக்க இன்று போய் நாளை வரலாமா என்றும் எண்ணினேன்.
அதே சமயம் ஒருவர் தனது யமஹா பைக்கில் இறங்கினார். அவர் என்னைப்போல் ஒரு வாடிக்கையாளர் என நினைத்து,
என்ன சார் ! இன்று லீவா ? என்று கேட்டுவிட்டேன்.
என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, பக்க வாட்டில் சென்று மறைந்தார். சில வினாடிகளில் அவரே,
வங்கி ஊழியர் உடுப்பில் வந்து அந்த ரோலிங் ஷட்டர்ஸ் ஐ மேல் வாட்டில் காட்ரேஜ் பூட்டுகளை திறந்தபின் தூக்கினார்.
வங்கி கதவு திறந்தது.
அதற்குள், எங்கிருந்தோ என்னைப்போல, ஏழெட்டு பேர் திமு திமு என்று உள் நுழைந்தோம்.
உள்ளே சென்றால் எனக்கு ஒரே ஆச்சரியம். இப்பொழுது தானே கதவுகள் திறந்தன. அதற்குள் உள்ளே எப்படி வங்கி மேனேஜர், மற்ற ஊழியர்கள் எல்லாருமே அவரவர் இடத்தில் இருந்தனர்.
வங்கி மேனேஜர் எனக்கு நண்பர்.
என்னைப்பார்த்து முறுவலித்தார்.
நான் அந்த அறைக்குள் சென்றேன்.
"எப்படி சார் ! நீங்கள் கதவு திறக்காமலே உள்ளே வந்து விட்டீர்கள் ! " என்றேன். "அது ஒன்றுமில்லை. பக்க வாட்டில் இன்னொரு கதவு இருக்கிறது. அது வழியாக நாங்கள் முன்னமே வந்து விடுவோம். "
"அப்ப, வங்கிக் கதவைத் திறப்பவர் மட்டும் 10 மணிக்குத் தான் திறப்பாரா ?"
"அது 50 பர செண்ட் தான் சரி. அவரை கொஞ்சம் 10 மணிக்குத் திறந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறோம். முன்னமே திறந்துவிட்டால், துவக்க வேலைகளை செய்ய முடிவதில்லை. அதற்குள் கஸ்டமர்ஸ் கேள்விகள் போட்டு துளைக்க துவங்கி விடுவார்கள் '"
அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. அல்லது இருக்கும்போல் தான் தோன்றியது.
"இருந்தாலும் பாருங்கள். வாசலில் அந்த மரண கொட்டு தாளங்கள், என்னால் ரொம்ப நேரம் கேட்க முடியவில்லை"
"ஓ ! அதைச் சொல்கிறீர்களா !! " எனக்கே மனசு கஷ்டம் ஆகத் தான் இருந்தது அந்த நபர் இறந்துவிட்டார் என்று தெரிந்தபின்னே "
"உங்களுக்கு என்ன மனக்கஷ்டம் ? உங்கள் நண்பரா? சொந்தமா? இல்லை, வங்கி ஏதேனும் கடன் கொடுத்து, இனிமே வருமா வராதா என்ற நிலையா ?"
"எதுவுமே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சி தான் மனதை உறுத்துகிறது. நான் செய்தது தப்போ சரியோ என்றே தெரியவில்லை."
நான் எதற்கு வங்கிக்கு வந்தேன் என்பதை அதற்குள் மறந்து விட்டேன். இங்கே ஒரு நல்ல கதை இருக்கிறதே என்று நினைத்து,
"என்ன அது ! சொல்லுங்கள் சார் ! " என்று மிக ஆர்வத்துடன் கேட்க,
"அந்த இறந்து போனவர் எனக்குத் தெரிந்தவர் தான் . ரொம்ப வயசும் ஆகிவிடவில்லை. ஒரு 60.அல்லது 62 இருக்கலாம் " என்று துவங்கினார்.
ம் .... "நேற்று இதே நேரம். வந்தார். ஒரு வித்ட்ராயல் ஸ்லிப் எடுத்து ரூபாய் இருநூறு என்று எழுதி தாருங்கள் பணம் என்று கேஷியரிடம் கேட்டார்.
"சரி. அதில் என்ன தவறு ?" "கேஷியர் பாஸ் புக் தரச் சொல்ல, அவர் பாஸ் புக் இல்லை , நீங்கள் பணம் தாருங்கள், என்று அடம் பிடித்தார். சாதாரணமாக, வித்ட்ராயல் ஸ்லிப் பாஸ் புக்கோடு வந்தால் தான் நாங்கள் பணம் கொடுப்பது வழக்கம். "
"போனால் போகிறது என்று நீங்கள் கொடுத்து இருக்கலாமே !! உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே !" "அங்கே தான் வந்தது கான்ஷியன்ஸ் ப்ராப்ளம். "
வித்ட்ராயல் ஸ்லிப்பில் என்ன மனச் சாட்சி பிரச்னை ?
"வந்தவர் எனக்குத் தெரிந்தவர் தான். எதிர்த்த விட்டு சொந்தக்காரர். அவர் மட்டும் இல்லை. அவர் மனைவியும் எங்கள் வங்கி கஸ்டமர் தான். "
" பின்னே என்ன?"
"வந்தவர் ரொம்பவே குடித்து இருந்தார். தள்ளாடிக்கொண்டு வந்தார். . மேலும் அவர் தனியா வந்து பணம் கேட்டால், கொடுக்க வேண்டாம் என்று அவரோட... ......வேணாம்..டீடைல்ஸ் வேண்டாம் சார்....." என்றார்.
அதன் பொருள் என்ன என்பதை நான் நினைவு படுத்திக் கொள்வதற்கு முன் அவரே ஒரு பிரபல உரைதனை மேற்கோள் காட்டினார். ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
நான் அவரை விடவில்லை. என்ன சார் சுவாரஸ்யமான கட்டத்தில் சரவணன் மீனாச்சி சீரியல் தொடரும் என்று போடுவது போல், நீங்கள் ஒரு கமா போடுகிறீர்கள்..? தொடர்ந்து சொல்லுங்கள் சார். ப்ளீஸ் கண்டின்யூ..என்றேன்.
"நான் அவருக்குத் தரவும் முடியவில்லை. தராமல் இருக்கவும் முடியவில்லை. அவரிடம், நான் உங்கள் வீட்டுக்கு எங்கள் ஊழியரை அனுப்பி பாஸ் புக்கை வாங்கி வரச் சொல்கிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூட சொல்லிப்பார்த்தேன்." அப்படியா ..
"அவருக்கு அதைக் கேட்டபின் இன்னும் கோபம். " "என்ன உங்களிட்டையும் பணம் தராதே என்று சொல்லிவிட்டாளா ? என்று இறைந்து கொண்டே சென்று விட்டார்.
அடடா !!
"நானும் அதை சற்று நேரத்தில் அதை மறந்து விட்டேன். மாலையில் தான் தெரிந்தது. அவர் எப்படியோ இன்னமும் பணம் எங்கிருந்தோ பெற்று, டாஸ்மாக சென்று நன்றாகக் குடித்து விட்டு வரும் வழியில் நடு ரோடில், ஒரு கார் அவர் மேல் மோத, ஆன் த ஸ்பாட் இறந்து விட்டாராம். "
பாவம் ..என்றேன்.
மனிதனுக்கு இந்த மாதிரி அன் நேச்சுரல் சாவு வரக்கூடாது சார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? மனிதன் பிறந்தவிட்டால், எப்படியும் இறக்கத்தான் வேண்டும் என்றாலும், இப்படி ஒரு மரணம் வரவேண்டுமா "
அவர் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.
அது சரி, உங்களுக்கு என்ன மனச் சாட்சி பிரச்னை?
கடைசியாக அவர் என்னிடம் கேட்டதை நான் நிறைவேற்ற முடியவில்லையே என்று நினைக்கிறேன். ஆனால் , அதே சமயம், நான் பணம் கொடுத்து இருந்தால், உடனே டாஸ்மாக் சென்று இருப்பார். ஆனால் , அவர் மனைவி என்னிடம் சொல்லி வைத்து இருந்ததையும் என்னால் தட்டவும் முடியவில்லை.
சரியான தர்ம சங்கடம் தான் என நினைத்துக்கொண்டேன்.
நீங்கள் வருத்தப்படுவதில் ஒன்றும் இல்லை சார். யார் யார் எப்படி எப்படி எப்ப எப்ப போகவேண்டும் என்பதை மேலே இருப்பவன் தானே நிர்ணயிக்கிறான்.
இவருக்கு இப்படித்தான் போகவேண்டும் என்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் ..? என்று ஒரு ஆதங்கத்துடன் பேசி , எழுந்தேன்.
என்னுடைய வங்கி வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிட்டேன்.
மேலாளரிடம் பேசியது மறந்து போய் இருந்தது என நினைத்து இருந்தேன்.
இருந்தாலும், மாலை, அதே தெருவுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம்.
சாலைக்கு வந்த உடனேயே கண்ணில் பட்டது அந்த பிரும்மாண்ட ஊர்வலம்.
ஆமாம். இறுதி ஊர்வலம்.
ஒரு லட்சத்திற்கும் மேலாக பூக்களுக்கு செலவிட்டு இருப்பார்கள் போல் தோன்றியது. போகும் வழி எல்லாம் சவந்தி, ரோஜா மலர்கள் பூச்செண்டுகள்
சிதறிக்கிடந்தன.
கொட்டிய கொட்டும் மழையில் அத்தனை பூக்களும் நசுங்கி காணப்பட்டன.
இறந்தவர் வேறு யாருமில்லை. காலையில் வங்கி மேலாளர் குறிப்பிட்டவர் ஆக இருக்கக் கூடும் என்று ஊர்வலத்தில் வந்து கொண்டு இருந்த சிலர் பேசிக்கொண்டதில் இருந்து புரிந்தது.
இறந்தவர் வங்கிக்கு எதிர்த்த வீட்டு சொந்தக்காரரோ ??
ஊர்வலத்தில் பல பேர் நான் பார்க்கில் பார்க்கும் நபர்கள். இறந்தவர் நடுத்தர வர்க்கம் இல்லை, அதற்கும் கொஞ்சம் மேலே இருப்பவர் என்று தோன்றியது.
குடித்தார். கீழே விழுந்தார். கார் மோதியது. இறந்தார். ..ஒருவர் சொல்கிறார். குடித்தார். கார் மோதியது. கீழே தள்ளப்பட்டார். இறந்தார். இன்னொருவர் சொல்கிறார். வெறும் கார் ஆக்சிடெண்ட் சார். அனாவசிய மா குடித்தார் என்ற பழி !! இது இன்னொருவர்.
நீத்தாரை இகழேல். நமது பண்பு. இன்னொருவர்.
எப்படியோ !!
ஊர்வலம் வந்த வீதியில் மேலும் சில நிமிடங்கள் சென்று இருப்பேன்.
அந்த வீட்டுக்கு பக்கத்தில் சென்றபோது, கவனித்தேன்.
வயதான ஒரு பெண்மணியைச் சுற்றி பலர் நின்று கொண்டு இருந்தனர்.
இறந்தவரின் மனைவி என்பது அவரைப்பார்த்தாலே தெரிந்தது.
இன்னமும் அவர்கள் வீட்டுக்குள் செல்லவில்லை போலும்.
நான் அந்த பெண்மணியின் கண்களை பார்த்தேன்.
அந்த கண்களில் வருத்தம் இல்லை. துக்கம் இல்லை !!
ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நிம்மதி தெரிந்ததோ !!!
நான் யோசித்துப்பார்த்தேன்.
ஒரு குடிகாரனோடு காலம் முழுவதும் வாழ்ந்த ஒரு பெண்மணி.
குடி வெறியினால் அவன் தந்த தந்து இருக்ககூடிய அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருந்த பெண்மணி.
கணவன் இறப்பும் அவருக்கு இனி வரும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி தருமோ என்னவோ !!!
என்ன அப்படி தேடுறீங்க..? நான் கூப்பிடுவதைக் கூட காதில் வாங்கிக்காம...
என இரைந்தாள் சமையல் கட்டில் இருந்து.
யார் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? அவ தான். என்னுடைய பெட்டர் ஹாப் . இட பக்க வாசினி.
நான் தேடறதிலேயே மும்முரமா இருந்தேன். அவளுக்கு பதில் சொல்லக்கூடாது என்று இல்லை. எப்படியும் இன்னிக்குள்ள கண்டு பிடிச்சாகணும். அத உட்டுட்டு , இவகிட்ட பேச ஆரம்பிச்சா
வை.கோ.சார் பின்னூட்டங்கள் போல , (சார் கோவிச்சுக்க மாட்டார் அப்படின்னு நினைக்கிறேன்.) முடிவில்லா விக்ரமாதித்யன் வேதாளம் கதை போல... முடிவில்லா ஒரு ஜீவாத்மாவின் பயணம் போல ..நசிகேத சரித்திரம் !!
சுருக்கமாய் சொல்லப்போனால், அவள் ஒரு தொடர்கதை ஆக .... தொடரும் ...
அப்படின்னு பயம் தான்.
என்ன அப்படி ஒரு காரியம் உங்களுக்கு ? கேட்ட கேள்வி க்குக்கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு ? சொல்ல முடியாது அப்படின்னு சொல்லுங்களேன்.
நான் வாளா இருந்தேன். சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனா சொன்னா உனக்குப் புரியாது. அப்படின்னு சொல்லமுடியுமா என்ன ? சொன்னா விட்டு விடுவாளா என்ன ?
இப்ப எல்லாம் நான் ஒருத்தி இருக்கேன் என்றே மனசுலே இல்லாம போச்சு..
இல்ல..காலைலே வலைப்பதிவு எல்லாம் படிக்கும்போது பார்த்தேன். அதுலே ஒருஎடிட்டர் வேலை மாதிரி ஒரு வேலை காலியா இருக்கு அப்படின்னு போட்டு இருக்காக...அதுக்காகத்தான் அப்ளை பண்ணப்போறீங்களோ அப்படின்னு நினைச்சேன்.
எனக்கு எப்படி அத கொடுப்பாக ...? நாட் பாசிபிள்
கொடுத்தாலும் கொடுப்பாங்க.. யாரு கண்டாங்க...குரு பெயர்ச்சி நடக்கப்போவுது. உங்களுக்கும் எதுன்னாச்சும் நீங்க முன்னாடி பார்த்தாபோல இன்னொரு வாத்தி வேலை குரு பகவான் கொடுக்கலாம் இல்லையா..
அப்படியா..!!
நீங்க வேலைக்குப் போறதை பத்தி எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை. ஆனா அப்ளை பண்ணுவதற்கு முன்னே ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்கங்க..
என்னது சம்பளம் எத்தனை அப்படின்னா?
அதெல்லாம் இல்ல.. போனசு லீவ் இதெல்லாம் எல்லா உத்தியோகத்துக்குமே இப்ப எல்லாம் இருக்கு.
அடடா !!!அ ப்ப நீங்க அத தேடல்லையா. பின் என்னத்த தேடறீங்க...? எதுனாச்சும் அடிக்கடி அஹம் பிரஹ்மாஸ்மி அஹம் பிரஹ்மாஸ்மி அப்படின்னு சொல்வீகளே அந்த பரம்பொருள் இறைவன் உங்கள் உள்ளே எங்கே இருக்கான் அப்படின்னா?
இங்க பாரு. இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்.
(மனசுக்குள்ளே ஆனா அந்த பயம் வந்தது. அஹம் பிரஹ்மாஸ்மி என்று சொல்லிகிண்டே இருக்கேன். இப்படி இருக்கிறவன் இப்படி ஆகிவிடுவேனோ ? அப்பாதுரை சாரை மனசிலே நினைத்துக்கொண்டேன். +Durai A அவர் பதிவு எல்லாம் கன ஸ்ரத்தையா படிக்கும்போது,
நன்றி: கூகிள்
சே..சே. இ ப் படி எல்லாம் நான் ஆக மாட்டேன்.
ஐ ஆம் வெரி ப்ராக்டிகல் அண்ட் பிரக்மாடிக்.) சத்தமா சொன்னேன்:
நான் சீரியசா வேற தேடிட்டு இருக்கேன். இதுக்கும் அந்த தத்வத்துக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல.
அப்படின்னா எனக்குத் தெரிஞ்சு போச்சு.
என்ன தெரிஞ்சு போச்சு/
இந்தியாவிலேந்து சிகாகோவுக்கு ஏப்ரல் மாசம் 4ந்தேதி 5ந்தெதியோ பயணம் செய்த ஒரு இந்தியப் பெண்மணிக்கு ட்யூபற்குலோசிஸ் இருக்குது, அது ரொம்ப டேஞ்சர் வரைடி, எந்த ஆண்டி பயாடிக் மாத்திரையும் யூஸ் இல்லை.அதனாலே அந்த பெண்மணியைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை தருவது மட்டுமில்லாம, அவங்களோட யார் யார் பயணம் செய்தார்களோ அவங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறாங்களாம்.
அதுக்கு என்னா ??
அந்த ப்ளேன் லே உங்க சிகாகோ பிரண்ட் இருந்திருப்பாரோ என்று சந்தேகத்திலே அவர் டெலிபோன் நம்பரைத் தேடரீகளோ ?
இல்லை.
என்ன அதுவும் இல்லையா? ...ச் ...ச் .... அப்ப சுந்தர காண்டத்துலே அனுமான், லக்ஷ்மணனை காப்பாத்த இமயத்திலே மூலிகை ஒண்ணு தேட போயி, திக்குத் தெரியாத காட்டில் ,தேடித் தேடிக் களைச்சு போயி, மலையையே தூக்கிக் கிட்டு வந்தாரே, அது போல இருக்கீகளே !! அப்படின்னு தான் என்னவோ தேடுரீக ..... கேட்டுகிட்டு இருக்கேன். இல்ல. ....
எப்படியாச்சும் , என்னை அனுமான் மாதிரி ஒரு குரங்கு ன்னு சொல்ல முடிவு பண்ணிட்ட....
அதெல்லாம் சூப்பர் சிங்கர் லே பார்த்துப்பேன் ..என்று முணுமுணுத்துக்கொண்டே
அது சரி..நீங்க என்ன தேடுறீங்க..அத்த சொல்லுங்க.முதல்லே.. என்னதான் ரகசியமோ
இனிமே தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்தது.
இத பாரு கானடா தெரியுமா உனக்கு /
தெரியுமே..அமெரிக்காவுக்கு மேலே இருக்குது அது தானே...
ராமா ராமா
என்று கத்திவிட்டேன்.
அவரு அயோத்தி லே லே இருக்கார். இங்கே வரமாட்டார். ..
.நீ ஒரு ஞானசூனியம் உன்னப் போய் கட்டிகிட்டேன் பாரு.
என்னங்க..அம்பது வருசமா தெரியாதது இப்ப என்ன புதுசா தெரிஞ்சு போச்சு /?
சிவ சிவா..கொஞ்சம் சும்மா இருக்கியா...
நீங்க அப்ப சொல்லுங்க...
இந்த ராகம் கானடா இருக்குல்லே...அதுக்கும்தர்பாரி கானடாராகத்துக்கும் ஒரு ஸ்வரம் வித்யாசம். அது எது அப்படின்னு டைரிலே குறிச்சு வச்சேன்.
அந்த டைரியை காணோம்.
டைரியா ? இந்த வருசத்துதா /
இல்ல...பழசு..
அட..நேத்திக்குத்தானே அத எல்லாம் பழைய டைரி, பழைய பேப்பர் எல்லாம் அந்த பேப்பர் கடைக்கு எடைக்கு போட்டேன்.
என்ன கடைலே எடைக்கு போட்டுட்டாயா !!
அதுலே தான் வாங்கினேன் ஒண்ணு. அது. பாருங்க எங்கனவோ தொலைஞ்சு போச்சு..