திங்கள், 13 ஏப்ரல், 2015

அட்சய திரிதியை

சென்ற ஞாயிற்றுக்கிழமை.
பக்கத்து கல்யாணி கல்யாண மண்டபத்துலே
**ராதா கல்யாண மகோற்சவம்.


திவ்ய நாம சங்கீர்த்தனம்
காலை 9 மணி முதலே துவங்கி விட்டது.
கோவிந்தா கோபாலா, ராதே கோவிந்தா..
ஹரே கிருஷ்ணா
ஜெயதேவா அஷ்டபதி
நீரஜ தல நயன ...சுகம். **


பிரமாதம்.
சம்பிரதாயமா,
ப்ரவரம் சொல்லி மாங்கல்ய தாரணம்.**




அப்ப தான் தெரிஞ்சது.
நம்ம யது குல வம்சி பன்சீதாரி கிருஷ்ணர்  ஆத்ரேய கோத்ரம்.
ராதாவுக்கும் என்ன கோத்ரம். சொன்னர்கள். காதுலே சரியா விழல்லே.

யதுகுல வம்ச சம்பிரதாயங்கள் இங்கே பார்க்கலாம்.

பிறகு நலங்கு, சோபானம். எல்லாம்

ஒரு எண்பது வயதுக்கும் மேல் இருக்கும் அந்த பாகவதருக்கு.
 எல்லா பாடல்களுக்கும், முக்கியமா அஷ்டபதிக்கு அவர் நடனமாடியது கண்களை விட்டு விலகுமா என்ன !!  ஐம்பது வருஷங்களா இந்த மாதிரி உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகளிலே அவர் பாவத்துடன் அபிநயம் செய்யறாராம். அவருக்கு ஏகப்பட்ட மரியாதைகள். சம்பாவனைகள்.

எனக்கும் மனசுலே கொஞ்சம் பொறாமையாத்தான் இருந்தது.
நான் பார்த்தது எல்லாம்என்ன இந்த பெரிய வேலை  !! , என்னத்த கண்டோம். !! இந்த மாதிரி ஒரு ஜாப் லே இருந்திருந்தா இன்னும் பப்ளிக் அடோரேஷன் அமக்களமா இருந்திருக்குமே..

ஆனா அந்தப் பெரியவர் முதியவர் அவர்பாட்டுக்கு கிருஷ்ணனைச் சுற்றி மயங்கும் கோபிகைகள் மாதிரி நர்த்தனம் ஆடுகிறார்.
ராதே ஷ்யாம். ராதே ஷ்யாம். அதுலே அவர் லயித்து போய் இருக்கிறார். அவருக்கு அந்த உலகம் தான் த்ருச்யம். நிஜம்.


எந்த ஒரு தொழிலும் ச்ரத்தையுடன் செய்யும்போது அதில் இருந்து நமக்கு கிடக்கும் ஆத்ம திருப்தி , அதுவே போதும். மற்றவர் சன்மானம், புகழ்வது எல்லாமே இரண்டாம் பட்சம்.

இந்த ஆத்ம திருப்தியைத்தான் துளசி தாசர்    ராம் சரித மானஸ் எழுதியபோது அது எதுக்காக எழுதினார் என்று கேட்கப்பட்ட பொழுது "ச்வாந்தஸ் ஸுகாய " என்று சொன்னார்.

 பணம் வேண்டும், புகழ் வேண்டும் உண்மை தான். ஆனால் அதுக்கும் மேலே மனிதனுக்கு மனசு திருப்தி வேண்டும். அதனாலே மனசு அமைதி  .பெற வேண்டும். இல்லையா !!

 நாலு மணி நேரம் நேரம் பொழுது போனதே தெரியல்ல.பக்கத்துலே ஒரு வைதீகமா உடுத்தி இருந்த ஒரு மாமி, பாகவதர் பாடும் ஒவ்வொரு ஸ்லோகம், பாட்டும் என்ன ராகம் அப்படின்னு சொல்றது மட்டும் இல்லாம, இந்த ராகத்துலே என்ன சினிமா பாட்டு லேடஸ்டா வந்து இருக்கு அப்படின்னு சன்னமா சொல்றா.

சம்பிரதாயமா, வண்ண மய கோலங்கள், மாலைகள், ராதே ஷ்யாம் கோஷங்கள்.

மங்களம் அப்ப தான் பாடி முடித்தார்கள். வழக்கமா, மத்யமாவதி லே தான் நீ நாம ரூப முலகு பாடுவார்கள்.
இப்ப, வேற ராகம். அப்படியே மனசை இழுத்துக்கொண்டு போறது. பக்கத்து மாமி காதோரமா "பொய் சொல்லக்கூடாது என் காதலி " அப்படின்னு சொல்றப்போ,

 " மாமி, இது ராதா கல்யாணம் இல்லயோ ! இங்கே போய், காதலி அப்படின்னு எல்லாம் என்று இழுத்தேன்."

"இல்ல மாமா, இது த்விஜாவந்தி ராகம்.
அந்த பொய் சொல்லக்கூடாது பாட்டு என்ன ராகமோ அதில் தான் பாகவதரும் மங்களம் பாடுகிறார் " என்றாள் கூடவே,
இன்னும், விஸ்வரூபம் படம் பார்க்கலையோ !!
உனைக் காணாது ....பாட்டு. கமல் என்னமா டான்ஸ் ஆடறார் !! நீங்க பார்க்கலையா !!  என்றார்.


பலே என்றேன்
இந்த பூலோகத்தை வெகேட் பண்ணுவதற்கு முன்னாடி எப்படியும் அந்த விஸ்வரூபம் படம் பாத்துவிடணும் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன். .

இன்னிக்கு லோகத்துலே சாஸ்திரம்  சம்பிரதாயம் சங்கீதம் இந்த அறிவை விட, சினிமா அறிவு அதைவிட ரொம்ப முக்கியம்.

ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்...


அட்சதை, பூ வாங்கிண்ட கையோட, கூட்டம் மொத்தமா அப்படியே லிப்ட் பக்கத்துலே மாடிப்படிலே பிரசாதத்துக்காக, சாப்பாடுக்காக ....நூத்துக்கணக்கிலே ....வரிசையா...


சுப்பு தாத்தாவுக்கும் கல்யாண சாப்பாடு சாப்பிட ஆசை தான்.
ஆனா இந்த கூட்டத்துலே ...
நமக்கு சரிப்பட்டு வருமோ !!

நமக்கு வேண்டியது போட மாட்டார்கள்.
அவர்கள் போடுவது நம்ம வயிறு ஜீரணிக்காது.\
எதையாவது வாய்க்கு ருசியா சாப்பிட்டு விட்டு, ஏதாவது கோளாறு ஆகிவிட்டது என்றால், .....உடம்பு ஒரு பக்கம் இருக்கட்டும். கிழவிக்கு பதில் சொல்ல முடியாது.

வயசாயிடுத்து அப்படின்னா, தாடை இரண்டுக்கும் நடுவிலே இருப்பதை கட்டுப்படுத்தணும் அப்படின்னு வசனம்.

சின்ன வயசிலே எதை ?
அப்படின்னு +Durai A அப்பாதுரை சார் கேட்பது காதில் விழறது.
அதுக்கு அப்பறம் பதில் சொல்லலாம்.

சாப்பாடு வேண்டாம். நேரமும் ஆகிவிட்டது.
இந்தப் பழம் புளிக்கும் அப்படிங்கற கதையா, வீட்டுக்குத் திரும்பினேன்.

  வீட்டுக்காரி கிட்டே எங்கே போகிறோம் அப்படின்னு கூட காலைலே சொல்லாம வந்துட்டோமே அப்படின்னு அப்பத்தான் ஞாபகம் வந்தது. ஹார்ட் ஒரு லப் டப் கூட அடிச்சுக்கறது.
இன்னிக்கு லப்ட் அண்ட் ரைட் வாங்கப்போறா .. என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு போயி, சிசுவேஷன் என்னவா இருந்தாலும் மேனேஜ் பண்ணத்தானே வேண்டும். லட் அஸ் க்ராஸ் த ப்ரிட்ஜ் வென் இட் கம்ஸ். அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிண்டேன். என்னவா இருந்தாலும் தைரியம் புருஷ லக்ஷணம் .

நடுவில் பெரியார் பூங்கா வந்தது. 4 மணிக்குத்தான் கதவு திறப்பார்கள். அது எப்ப திறக்கும் என்று என்னைப்போல் கிழம் கட்டைகள், பல இளம் ஜோடிகள் 3 மணிலேந்து காத்துக்கிடப்பார்.
 காரணம் இல்லாம இல்ல.

நல்ல இடமா பாத்து யாரும் டிஸ்டர்ப் பண்ணாதபடி உட்கார்ந்தாத்தான் காலட்சேபம் பண்ண முடியும்.

தப்புன்னு சொல்ல முடியாது.  அந்தக் காலத்து லே நம்ப செய்யாததையா இந்தக் கால இளசுகள் செய்யறாங்க ? இல்லயே....என்ன நம்ம ஜாடை மாடையா செஞ்சதை பப்ளிக்கா செய்யாரங்க...

அவங்க தைரியத்துக்கு ஓ போடவேண்டாமா!!

நினைச்சுண்டே பூங்காவைத் தாண்டும்போது, கீழே உட்கார்ந்தும் படுத்துக்கொண்டும் இருந்த ஒரு பெரியவர் னு சொல்லக்கூடிய வயசை இன்னும் பத்தே வருஷத்திலே எட்டக்கூடிய ஒரு நண்பரைப் பார்த்தேன். அடிக்கடி பார்க்கில் பார்த்து பேசுவேன். இருந்தாலும் அவர் பெயர் அவர் யாரென்று முழுக்கவும் தெரியாது.

என்ன இங்கே இந்த நேரத்துலே அதுவும் பிளாட்பாரத்துலே...என்று கேட்கும்போதே .... அந்த நெடி, வாசனை ....(  938 ஞாபகம் வர்றது. )

என்ன ஸ்வாமி !! பகல் நேரத்துலே கூடவா இத கெட்டியா புடிச்சுட்டு இருக்கீக..
என்றேன்.  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற தோரணையில் இருந்த அவர் கஷ்டப்பட்டு, கண்ணைத் திறந்து என்னை ஒரு ஜாடையாக பார்த்தார்.




 சொல்லுங்க என்றேன்.

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ"

ஆமாம். கீதைலே வரது .பகவான் சொன்னது.
 என்றேன்.வில்லங்கம் ஏதோ ஆரப்போரது என்ற உணர்வோடு.

"அர்த்தம் என்ன சொல்லுங்கோ...எல்லா தர்மத்தையும் விட்டுட்டு என்னைச் சரணம் அடை " அப்படின்னு... கீதைலே பகவான் சொல்லி இருக்கார் இல்லையா..



அதுக்காக...என்றேன்...அப்பாவியாக.

நான் இதுக்கு சரணம் அடைந்துவிட்டேன்
என்று பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலைக் காட்டினார்.

சிவா சிவா..நாராயணா...நாராயணா...என்று சொல்லிக்கொண்டு மேலே நடந்தேன்.
.............................
......................................................
................................................................................
அபார்ட்மெண்ட்  வந்துவிட்டது. லிப்ட் ஒர்க் பண்ண வில்லை. அதுக்கும் ரெஸ்ட் வேணும் இல்லையா. படி ஏறி
                            ------------
            ---------------------
-------------
              
ப்ளாட் முன் வந்து,
பெல் அடித்தேன். கதவு திறந்தது. வீட்டுக் கிழவி ராக்ஷசி பிரசன்னமானாள்.


பை த வே,  நான் ராக்ஷசி அப்படின்னு சொல்றேன் என்பதற்காக,

ஹவுஸ் வைப்ஸ் ஹோம் மேக்கர்ஸ் யாரும் கோவிச்சுக்க கூடாது.
அமைதி, அமைதி,

இங்க்லீஷ் லே rakshasi அப்படின்னு எழுதினா ராக்ஷசி , ரக்ஷசி இரண்டும் படிக்கலாம்.

ராக்ஷசி அர்த்தம் புரியறது.
ரக்ஷசி அப்படின்னா காப்பவள். .

இரட்டைக் கிளவி..இந்த சொல்லோ. ? ஒரே சொல்லுக்கு ஒரே ஸ்பெல்லிங் இரண்டு பொருள்.
+mohan gurumurthy விலா வாரியா நிகண்டுவிலேந்து சொல்வார்.

இந்த வீட்டுக்காரி என்று சொல்பவள், எங்க வூடு மட்டுமல்ல, எல்லோர் வூட்டிலேயும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட இதே கதை தான்.கொஞ்சம் அஞ்சு பத்து பர சென்ட் மேலே கீழே ...அம்புட்டுதான்.

அவள்,

அடக்கு அடக்கு என அகமுடையானை அடக்குவாள் . 
மடக்கு மடக்கு என்று மடக்கியும் பேசுவாள்.
கிடுக்கி போட்டு கணவனைத்தோண்டி எடுப்பாள். இருப்பினும்
தடுக்கி விழும்போதெல்லாம் அவனைப்  பொறுமையுடன்
தாங்கிப் பிடிப்பாள்.

ஒரே நேரத்துலே லா அண்ட் ஆர்டர், ஹோம், பைனான்ஸ் மினிஸ்டர் அவள் தான்.

மெதுவா,

ராதா கல்யாணம் போய் இருந்தேன். அதான் நாழி யாயிடுத்து.....என்றேன்.

அத நான் கேட்கல்ல..

அப்ப எதை கேட்கறே...

நான் எதை கேட்பேன்னு கூடவா உங்களுக்குத் தெரியல்ல ?
என்று ஒரு அஸ்த்ரத்தை வீசினாள்.

தெரியல்லையே...

இத்தனை வருஷமா, உங்களுக்கு என்ன தெரியும் என்ன தெரியாது அப்படின்னே எனக்குத் தெரிஞ்சுக்க முடியல்ல... உங்களைச் சொல்லி என்ன குத்தம் ?

அது சரி, நீ என்ன கேட்கிறே அப்படின்னு சொல்லேன்..
என்று சமாதானக் குரலில்
கெஞ்சினேன் என்று சொன்னால் கொஞ்சம் யீகோ க்ளாஷ் ஆகிவிடும்.
கேட்டேன்.

இன்னும் இரண்டு நாள்லே என்ன வர்றது தெரியுமோ ?

என்ன ? இன்னிக்கு ஞாயிரு..இரண்டு நாள்லே செவ்வாய் கிழமை வரும்.

அதுக்கு அடுத்த செவ்வாய்?
என்று என்னைப் பார்த்தாள்.

அடுத்த செவ்வாயா ? தெரியல்லையே...

இதப் பாருங்க..தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சதெல்லாம் போதும்.

நான் எங்கே நடிக்கறேன் !! உண்மையாகச் சொல்றேன்.

சரி. நான் சொல்றேன். அட்சய திருதியை வர்றது.


அன்னிக்கு என்ன உங்காத்துலே யாருக்காவது திதியா ? என்றேன் அப்பாவியாக...

மட் என்று நெத்தியை இரண்டு விரலாலே தட்டிக்கொண்டாள்.

"எனக்குன்னு வாய்ச்சு இருக்கீங்களே ..என்னோட அப்பா அம்மா எனக்கேன்னு ஒன்னு பார்த்து வச்சாங்களே ..அவங்களைக்  கேட்கணும் அந்த என்னுடைய அத்ருஷ்டத்தை சொல்லணும்" என்றாள்.

அதுக்கு இன்னும் கொஞ்சம் டயமாகும் போல..என்று முனகினேன்.
ஏன் நல்லாத்தானே இருக்கு.அப்படின்னு சத்தமாக சொன்னேன்.

அட்சய திரிதியை க்கு, உலகமே தி.நகர் லே இருக்கு. 
 உங்க உலகமோ, யாரு பாட்டு பாடுவாங்க..யாரு பாட்டை எந்த ராகத்துலே பாடுவோம் அந்த திசைலே இருக்கு.


ஓஹோ...கோல்டு வாங்கணும்  எதுனாச்சும் அப்படிங்கறையா...

ஒ.கே. கொஞ்சமா, விரலுக்குத் தகுந்த வீக்கமா, கைக்குத் தகுந்த எள்ளுரண்டையா சொல்லு என்றேன்.

ஒன்னும் பெரிசா வேண்டாம்.

அப்ப சின்னது எது ? பெரிசு எது?

இந்தாங்க.. வீண் வம்பு எல்லாம் வேண்டாம்.
நான் ஒரு லிஸ்ட் தர்றேன். போய் இன்னிக்கே ஆர்டர் பண்ணிட்டு வந்தாத்தான்
அட்சய திரிதியை அன்னிக்கு கிடைக்கும்.

என்ன லிஸ்ட் என்றேன்.

ஒரு ஏ 4 சைஸ் பேப்பர் லே
கலர் கலரா சிவப்பும், பச்சை, நீலமா எது எதுவோ...எழுதி இருக்கிறது.
என்னிடம் தர....

என்ன இதெல்ல்லாம்...எனக்கென்ன ஒன்னும் புரியல்ல... என்றேன்.

காந்த நாண் புள்ளிகை  2 லே
கலாவம்-3 லே
காறை -2 லே
கச்சோலம்.. 3 லே


இதெல்லாம் என்ன?  கத்திரிக்காய், கடாரங்காய் அப்படின்னு சொன்னா புரிஞ்சுக்கலாம்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இதெல்லாம் ஆண்டிக் ஜ்வல்லெரி . அதுக்கின்னே சில கடைகள் இருக்கு. உஸ்மான் ரோடு பக்கத்துலே அந்த காலத்துலே பெண்கள் அணிந்த நகை.எல்லாமே வச்சு இருக்காங்களாம். 

மாங்காய் மாலை, காசு மாலை இப்படியா...

இதெல்லாம் அத விட ஆண்டிக்விடி ஜாஸ்தி. !!

அப்ப ரொம்ப விலையா இருக்குமே !!

அட்சய திருதியைக்காக அஞ்சு பர்சென்ட் கம்மி. டிஸ்கவுன்ட் தாராங்க..

இதெல்லாம் என்ன சொல்லு முதல்லே..

நீங்க உங்க ப்ரண்ட் மோகன்ஜி வலைக்குப்போய் பாருங்க...அவங்க வீட்டு மாமி தான் சொன்னாங்க..அவங்க போன வருஷமே ஒன்னு இரண்டு வாங்கிட்டாகளாம்.

நான் வாங்கிட்டேன்..அப்ப நீங்க. ...அப்படின்னு செல்லிலே கேட்கறாங்க..

நீ என்ன சொன்னே?

இந்த கஞ்சன் சாரி, கஞ்சர் கிட்ட சொல்றேன். வாங்கித்தந்தாரா இல்லையா ன்னு அட்சய திருதியைக்கு அப்பறம் சொல்றேன். என்றேன்.

சரி, இதெல்லாம் என்னன்னு பிரண்டு அதான் மோகன்ஜி வலைக்கு போய் பார்த்தேன்.





காந்த நாண் புள்ளிகை - கழுத்தில் அணியப்படும் வடம். வளையமொத்தது.

கலாவம் - இடுப்பில் தொங்கவிடப்படும் சரங்களின் வரிசை.

காறை - கழுத்தில் அணியும் சங்கிலி வகை

கச்சோலம் -. ஒட்டியாணம்

இதெல்லாம் ரசிக்க முடியும். வாங்க முடியுமோ ???!!!!நமக்கு வர்ற பென்ஷன் லே வருஷத்துக்கு ஒரு பவுன் வாங்க முடியுமோ அப்படின்னு சந்தேஹம்.

+Geetha Sambasivam அவங்க தான் தீர்ப்பு சொல்லணும்.

இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு வாடகைக்கு தர்ற கடைகள் எங்கனாச்சும் இருக்கா ?

பத்து நாளைக்கப்பறம் வூட்டுக்காரிக்கு அதுலே லயிப்பு மவுசு குறைஞ்சுடும்.  நான் லாக்கர் லே வச்சுட்டேன் அப்படின்னு சொல்லிட்டு திருப்பி தந்துடலாம்.

எதுவுமே
கிடைக்காத வரைக்கும் தான் அதுமேலே லயிப்பு.
கிடைத்தபின்னோ சலிப்பு.

நாளாச்சுன்னா புளிப்பு...

மனுஷ்யன் மனசுக்கு
என்று கிடைக்குமோ இனிப்பு ???


ராதையாகப் பட்டவள் கிருஷ்ணனை அடைய மனம் கொண்டாள்.
ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பும் லக்ஷ்யம். இது ஆதர்சமேலான பேரின்பம்  என்று ஆன்மிகம் சொல்வது.

அந்த பேரின்பத்தை  ஒரு க்வார்ட்டர்  போட்டாலே போதும் என்று நினைப்பவர் பூங்கா வாசலில் பார்த்த நண்பர்.


நமக்கு கிடைப்பது எது சாத்தியமோ அது தான் இன்பம் என்பது மூன்றாவது.

எது ரைட் சார் ???









6 கருத்துகள்:

  1. நமக்கு கிடைப்பது எது சாத்தியமோ அது தான் இன்பம்

    பதிலளிநீக்கு
  2. அந்தக்காலம் என்ன...? இந்தக்காலமும் நீங்கள் கில்லாடி ஐயா... ஹா... ஹா...

    திருப்தியே ரைட்டு...!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் இசை உள்ளம்
    திருசுப்பு தாத்தா அவர்களே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. ச்ரத்தையா செய்யணும்னு சொன்னது பிடிச்சிருந்தது. :)

    வைஃபை ரக்ஷசி ந்னு சொல்லி சமாளிச்சிட்டேள்.

    சரி சார் அட்சய திரிதியைக்கு என்னதான் வாங்கிக்கொடுத்தீங்கன்னு சொல்லுங்க. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... சபாஷ்.. எழுத்தில் நகைச்சுவை இப்படித்தான் இருக்கணும். ராதா கல்யாணம்னு சீரியஸா ஆரம்பிச்சு, அப்பாதுரை,மோகன்ஜி என்று வம்புக்கிழுத்து மாமியார் கலாய்த்து...
    ஆரோக்கியமான ரசனையுடன் நீண்டு செல்கிறது பதிவு. கைகொடுங்க...

    வானவில் மனிதனில் 'அங்கிங்கெனாதபடி' என்று ஒரு கதை போட்டிருக்கிறேன்.வாரும்.

    பதிலளிநீக்கு
  6. உழைப்பவர் உயர்வார் மேதினமே-ஈன

    பிழைப்பு அது வேண்டாம் சொல்மனமே!

    தழைக்கும் பயிர்போல் தரணியில்-நம்

    'உழைப்பாளர்தினம்' உயர்க "வென்று !


    உழைப்பவர் ஊதியம் உயர வேண்டும்

    பிழையில்லா நிதியும் வளர வேண்டும்

    அக்கிரமம் அநீதி அழிய வேண்டும்

    உக்கிரமாய் உறுதி ஓங்க வேண்டும்


    போராட்ட போர்அது போதும் தோழா!

    தேரோட்ட மகிழ்வுஅது மலர்க தோழா!

    கலகம் செய்யாது புதியதோர் உலகம்
    காண்போம் வா! தோழா!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு