ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நினைச்சது கிடைக்கல அப்படின்னா

கையில் பையை எடுத்துக்கொண்டு கழுத்தில் செல் தொங்குகிறதா என்று கவனமாக பார்த்துக்கொண்டு ,

செருப்புகளை சரியாகத்தான் போட்டுக்கொள்கிறேனா என்று கவனித்துக்கொண்டு,

வாசல் கதவை திறக்கும்போது,
இவள் குரல் கொடுக்கிறாள்.

என்னங்க ?

என்ன சொல்லப்போகிறாய் என்று கேட்கலாம் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அது தான் டி.வி. லே பாடிக்கொண்டு இருக்கிறதே !!



 எங்கே போறீங்க அப்படின்னு கேட்க கூடாது அப்படின்னு தெரியுமில்ல..

தெரியுமே..

அப்ப ஏன் நான் எங்க போறீங்க அப்படின்னு கேட்கணும் னு எதிர் பார்க்கிறீக ?

நானா !! இல்லையே எதிர்பார்க்கவில்லையே..

அப்ப எங்க போறீக அப்படின்னு சொல்ல மாட்டீக ... நானும் கேட்க கூடாது.

இல்லயே நீ கேட்கலாமே...?

நான் கேட்டுத்தான் சொல்வீகளா ?  எல்லா விஷயத்தையும் அப்படித்தான் இந்த ஊட்டுலே இருக்குதா என்ன ?

சர்தான்.  இன்னிக்கு ஆரம்பிச்சுட்டாய்யா...

எங்க போறேன்னு சொல்லணும் அப்படித்தானே..

பொய் சொல்லகூடாது பாப்பா... என்றது டி.வி.


என்ன பாக்கறீங்க ?

ஒன்னுமில்லையே...

என்ன ஒன்னுமில்லையே.. நீங்க பாத்தது பார்க்கப்போறது எல்லாம் நான் என்னான்னு பார்த்துட்டேன்.

ஐயையோ...   ? நான் அந்த வூட்டு அம்மா அனுப்பியிருந்த ஜாதகத்தை தான் பார்க்கலாம் அப்படின்னு போயிட்டு இருக்கேன்.

அதத்தான் நானும் சொல்றேன்.

பார்க்காதே ..பார்க்காதே... பார்க்காதே...




எதுக்கு அப்படி நல்ல காரியத்துக்கு போகும்போது அபசகுனமா சொல்றே ?
என்றேன் .

சொல்லிட்டேன். இந்த ஜாதகம் எல்லாம் சரிப்பட்டு வராது. 

என்னது ?

அதான்.  அப்படித்தான். 

எப்படி ?

நான் சொல்றேன் இல்ல.  அந்த அம்மா வந்து கேட்டா ஜாதகம் பொருத்தம் இல்ல. அப்படின்னு சொல்லிப்போடுக. 

அப்ப அடுத்த வாரத்துலே இன்னொரு சாதகம் கொண்டு வருவாங்க இல்லையா ?

அதுக்கும் அப்படியே சொல்லுங்க...

எத்தனை நாளைக்கு சொல்றது ?

நீங்க என்ன காசு வாங்கிண்டு சொல்றீகளா ? இல்லை இல்லையா.  பொய் சொன்னா பரவா இல்லை. 

ஏன் பொய் சொன்னா பாவம் இல்லையா ?

ஆயிரம் பொய் சொல்லியும் கல்யாணம் பண்ணலாம். தப்பில்லை.  

நீ அதுக்காக ஜாதகம் பொருத்தம் இல்ல அப்படின்னு பொய் சொல்லிட்டு இருந்தா ..  எத்தனை நாளைக்கு ஓடும் ?

ஒடரவரைக்கும் ஓடட்டும். 

எதுக்காக இப்படி சொல்ற.?

நான் சொல்றபடி செய்யுங்க.   பொண் பாவம் பொல்லாது. 

ஏதோ புரிந்தால் போல் இருந்தது.

காந்தர்வம், கர்ப்ப நிச்சிதம், இதுக்கெல்லாம் ஜாதகம் கிடையாது அப்படின்னு நீங்க தானே சொல்லி இருக்கீக.. 


புரியுது. என்றேன்.
இவ  போன வாரம் பார்க்கிலே அந்த பொண்ணோட மணிக் கணக்கா பேசிக்கொண்டு இருந்தது வெள்ளை கருப்பா மனசுலே வந்து வந்து போனது.

என்ன புரியுது.?..

ஒரு மாதம் கழிந்தது.
பெண்ணின் தகப்பனார் வந்தார்.
எனக்கு சட்டுன்னு யார் என்று புரியவில்லை.

"நான் தான் அந்த பொண்ணோட அப்பா. என் மனைவி உங்ககிட்டே வந்து
என் பொண்ணோட ஜாதக பொருத்தம் கேட்பாளே.. ஞாபகம் இருக்கா..'/

நினைவு வந்தது.  அந்த பொண்ணோட அப்பாவா ?  இந்த தடவை இவர் ஒருவேளை ஜாதகம் எடுத்துண்டு வந்திருப்பார் என்று நினைத்தேன்.

ஒரு ஜாதகம் தான் தந்தார். அது அவர் பெண் ஜாதகம்.

பையன் ஜாதகம் ?

"அது அப்படி ஒன்னும் இல்ல.  ஒரு சந்தேகம். அதுனாலே தான் வந்தேன்.

'என்றார்.

என்ன ?

இவளுக்கு விவாஹம் இப்படித்தான் நடக்குமோ ?
வந்தவர் கேட்டார்.

இவர் என் கிட்டே முதல் லேயே அத சொல்லிட்டார்.  சுபஸ்ய சீக்ரம். 
சீக்கிரம் நீங்களே முன்னே நின்னு முடிச்சு வையுங்கோ.

என்றாள் என் தர்ம பத்னி.

இது கடவுள் அமைத்து வைத்த மேடை சார். என்றேன்.

புரியல்ல என்றார்.


இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தாரே தேவன் அன்று    

வாசலில் மணி அடித்தது. 

எழுந்து போய் திறந்தேன். 

பூ அம்மா .  ரோஸ் , மல்லிகை , முல்லை எல்லாமே இருக்கு என்றாள் பூ விற்கும் பெண்.

ஜாதி இல்லையா ? என்றாள் மனைவி. 

அதுக்கு இப்ப சீசன் இல்லைம்மா. என்றாள் வந்த பெண். 

நினைச்சது கிடைக்கல அப்படின்னா, கிடைச்சத நினைச்சுக்க கத்துக்கணும் என்றேன். எதோ ஒரு தத்துவம் சொன்ன பெருமிதத்துடன் வந்தவரை பார்த்தேன்
வாடின மாதிரி இருக்கே என்றாள் என் மனைவி. 

வெய்யில் இல்ல ? வாடறதுக்கு முன்னாடி வச்சுக்க அம்மா 
என்றாள் பூக்காரி. 

புரிஞ்சுண்டேன் என்று எழுந்தார் பெண்ணைப் பெற்றவர். 

**************************************************************************


"There may be flaws in any action, any situation or any person. Treat a flaw as you would treat a flower. Just as a flower has to wither away after sometime, so does a flaw. "

+Sri Sri Ravi Shankar

8 கருத்துகள்:

  1. ஒரு பொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ....! :))

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம் காலத்துக்கு ஏற்ற கதை! இதே போல் முன்னொரு பதிவும் வந்ததுனு நினைக்கிறேன். பெண்ணே வந்து சொன்ன மாதிரி..........

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமை
    சொல்லிச் சென்றவிதமும்
    மிகக் குறிப்பாக முடித்த விதமும்..

    பதிலளிநீக்கு
  4. முடிவில் தத்துவம் சூப்பர் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. அழகான - கதை!..(..கதை தானே இது?..)
    சுப மங்களம்!..

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்ல கதையில் பாயசத்தில் பாதாம் கிடைப்பது போல் எனக்கு விருப்பமான பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : தேடலும் பாடலும்!

    பதிலளிநீக்கு