செவ்வாய், 1 அக்டோபர், 2013

யாருனாச்சும் கேக்கறீங்களா ?


   இனிமேலும் இந்த 17 ஈ பஸ்ஸுக்காக காத்திருக்கமுடியாது என்று கால்கள் திட்ட வட்டமாக சொன்னபின்னே    சுப்பு தாத்தா வட பழனி பஸ் ஸ்டான்ட் வாசலுக்கு வந்தார்.

    அந்த ஷேர் டாக்ஸி வட பழனிலேந்து மௌன்ட் ரோடு வரைக்கும் போறானே... அவன் ஏன் வரக்காணோம்.

    என்று ஏதாவது ஒரு ஷேர் டாக்ஸி வராதா என்ற சபலம் வேற மனசை itching .    இத்தனைக்கும் மத்தியிலே அப்பப்ப ஆடோக்கள் பக்கத்தில் வந்து என் முகத்தை பார்த்து Red signal ஒரு நிமிஷம் நின்று விட்டு    green signal  ஏதோ க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டது போல சென்றன.


    பக்கத்தில் ஒரு போலீஸ் காரர் அவரிடம் கேட்டேன்.  இந்த ஷேர் கார் அதான் டாக்ஸி அண்ணா சாலைக்கு போகுமே..    ஏன் ஒண்ணு கூட வரலை ?

    அவர் என்னைப்பார்க்கும் பார்வையிலேயே ஒரு பரிதாபம் இருந்தது.  அவுக இப்ப எல்லாம் அந்த முருகன் கோவில் பஸ் ஸ்டாப் தான் ஸ்டார்ட் பண்றாக என்றார்.

    என்ன செய்வது என்று யோசிக்கு முன்னாலே இன்னொரு ஆடோ காரர் ... சார் ஏறுங்க ...

    எங்கே என்று நான் கேட்க, அவர் எங்க வேணாலும் முருகன் போவான் ஸார். என்றார்.

    முருகன் போவார் . ரைட் தான். ஆனா இந்த கிழவன் கூட வரணும்னா எத்தன கொடுக்கணும் ? விளம்பினேன்.

    எங்க..?    அப்படின்னு ஆடோகாரர் கேட்குமுன்னே ...

 நான் சைல்டு ட்ரஸ்டு ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம் வரைக்கும்.. என்று இழுத்தேன்.

     நீங்க கொடுக்கறத கொடுங்க ...  எத்தன வழக்கமா கொடுப்பீக...

     நௌ பால் இஸ் இன் மை கோர்ட் என்று உணர்ந்து,  

ஏன்ப்பா, மீட்டர் போடல்லையா...

     போட்டிருக்கேன்.  பாருங்க... என்றார்.   

  சரிதான் என்று சொல்லி, உட்கார்ந்து ஒரு பத்து அடி தூரம் கூட செல்லவில்லை.

ஆடோ மீடர் இப்போது 26.2 என்று காட்டியது.

     என்னப்பா இது... இன்னும் பத்து மீட்டர் தாண்டல்ல..  அதுக்குள்ளே மினிமம் காலியாயிடுச்சே...

     அது கிடக்கட்டும் சார்.  நீங்க.  ஒரு நூறு ரூபா கொடுங்க...

என்ற அந்த ஆடோ ட்ரைவர் முகத்தை அப்பொழுதுதான்
ஒரு தீர்க்க பார்வையாக பார்த்தேன். அம்பது வயசு தாண்டியவர் என்று அவர் முகம் சொல்லியது.  நடு நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு . கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலை.

    ஒரு பத்து செகன்டுக்குள்ளே மனசுக்குள்ளே போட்ட கணக்கில் 25 ப்ளஸ் 5 * 12 ... 85 வர்ரது.  என்ன ஒரு பதினைஞ்சு கூட என்று சுதாரித்துக்கொண்டாலும்,

    அது சரி, இந்த மீடர் கடைசிலே நூத்தைம்பது, அப்படின்ன்னு காட்ட்டிடுச்சுன்னா...????

     சார்.. நான் தான் சொல்லிட்டேன் இல்லயா...  அது நடுவிலே நிக்கறாங்களே... அவுங்களுக்காக போடரது.... நான்
ஒரு தரம் சொன்னா சொன்னது தான்

      அப்படியா...?

      ஆமாம் சார்.  என் ஆடோ மீடர் அப்பப்பே ரிபேர் ஆகும்.. ஆனா முருகன் சொன்ன சொல்ல மாத்தினதா சரித்திரமே கிடையாது சார்....

       அது சரி.. ஆனா.. இந்த மீட்டர் போட்டப்பறம் கூட ஏன் அத ஃபாலோ பண்ணாம, ஒரு ரேட் கேட்கறீக...

       சார்... ஒரு நாளைக்கு 500 ரூபா வூட்டுக்கு இத்தன நாள் கொண்டு போய் கொடுத்தேன்....  இந்த மீட்டர் போட்ட இந்த அஞ்சு நாளா எத்தனை தான் ஓட்டினாலும் ராவு பத்து மணிக்கு கூட முன்னூறு தான் தேறுது சார்.

        ஏன் போதாதா...

       நேத்திக்கு 300 கொடுத்தப்போ என் ஊட்டுக்காரி, இந்தாபா, 500 இல்லாட்டி, வர்ராதே...இந்த அஞ்சையும் எங்கனாச்சும் அனுப்பிச்சுடு அப்படின்ன்னு சொல்றா..    நாலு பொட்ட புள்ளைங்க ஒரு பையன் அவளும் எப்படிங்க இந்த காலத்துலே சமாளிக்க முடியும் ?

        நான் பேச வில்லை.

        பொண்ணுக 10 படிக்குது மூத்தது.  இரண்டாவதும் அடுத்ததும் 7 வது படிக்குது.   பையன் நாலாவது படிக்கான். அவனுக்கு ட்யூசனுக்கே மாசம் 700 கட்ட வேண்டியிருக்கு.

        கடைசி பொண்ணா  ?

        க்ரெக்டா சொல்லிட்டீக..

என்று ரோட்டிலிருந்த பார்வையை திரும்பி என்னைப் பார்க்கவும், பக்கத்தில் வந்த இன்னொரு ஆடோ க்ரீச் என்று பக்கத்தில் உரசவும் ...

        யோவ்...பாத்து ஓட்டுய்யா... என்றார் பக்கத்தில் வந்த ஆட்டோகாரர்.

         முருகன் வண்டியை ஓரம் கட்டினார். .

என்னவோ ப்ரேக் சரியில்ல போல,... நான் ஸ்லோ பண்ணி திருப்பினேன்.  அட்ஜஸ்ட் ஆவல்ல..
மெகானிக் கிட்டே எடுத்துட்டு போனா அவன் ஆயிரம் கொடு என்பான். நானே ஏதோ அட்ஜஸ்ட் பண்ண்ணி ஓட்டிட்டு இருக்கேன்.

          இரண்டு தரம் ட்ருருரு....ட்ரூரூ...ரூ....என்று கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  அப்படிங்கற மாதிரி
        க்ள்ட்சையோ வேறு எதையோ 2. 3 தரம் இழுத்தார்.

         வண்டி திரும்பவும் ஓடத்துவங்கியது.

         எங்கே நிறுத்தினேன்.. என்றார்.

         கடைசி பொண்ணு  அங்கே தான் நிறுத்தினீங்க.. என்றேன்.

         நான் நிறுத்தலேங்க... பொண்டாட்டி, நிறுத்திட்டா..  உன்னோட வரும்படிக்கு இனி கட்டுபடியாவாது அப்படின்னு சொல்லிப்பிட்டா...

         அது தான் உத்திராட்சமா என்றேன்..

         ஹே...அது வேற கதைங்க..  நீங்க சொல்லுங்க...  இந்த முன்னூரு ருபாய்லே என்ன்னையும் சேத்து ஆறு பேரு.சாப்பிடமுடியுமா சொல்லுங்க...
வூட்டு வாடவையே 1500 தர்றோம்.

           சற்று நேரம் மௌனம்.

          அவரே தொடர்ந்தார்.

ஏங்க..  அம்மாவே எங்களுக்கெல்லாம் ஒரு வேலை போட்டு கொடுத்தா என்னாங்க.. ???

எல்லா ஆடோவையும் கவர்ன்மென்ட்  எடுத்துக்கட்டும்.  நாங்க தினம் எட்டு மணி நேரம் ஓட்டறோம். எஙகளுக்கு மாசத்துக்கு சம்பளமா  ஒரு பதினஞ்சு கொடுத்தா என்னங்க குறைஞ்சு போயிடும் ?

       நல்ல யோசனை தான்...

        யாருனாச்சும் கேக்கறீங்களா ?

7 கருத்துகள்:

 1. //இரண்டு தரம் ட்ருருரு....ட்ரூரூ...ரூ....என்று கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்படிங்கற மாதிரி
  க்ள்ட்சையோ வேறு எதையோ 2. 3 தரம் இழுத்தார்.//

  ஹாஹாஹா, என்னை நினைவில் வைச்சிருப்பதற்கு நன்னி ஹை!

  பதிலளிநீக்கு
 2. சென்னையிலே ஆட்டோ டிரைவர் எல்லாம் நல்லவங்களா ஆயிட்டதாக் கேள்விப் பட்டேன். நீங்க என்னன்னா இப்படிச் சொல்லறீங்க! :)))))

  பதிலளிநீக்கு
 3. கரெக்டா மூக்கிலே வேர்த்து இந்தப் பதிவுக்கு வந்துட்டேன் பாருங்க! :)

  பதிலளிநீக்கு
 4. கடைசில அவர் சோகத்தையெல்லாம் உங்ககிட்ட சொல்லி இன்னும் அதிகமா வேணும்னு கேட்பார்னு நினைச்சேன்.

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன். ஒரு சந்தேகம். இந்த வயசில வீட்டை விட்டு யாராச்சும் வெளியில போவாளோ?

  பதிலளிநீக்கு
 6. ஏன் எதற்கெடுத்தாலும் 'அம்மாவை' எதிர்பார்க்க வேண்டும்? எல்லாமே இலவசம் என்பதால் தான் இந்த பிரச்னை. உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய் விட்டது.

  பதிலளிநீக்கு